சந்தோஷம் என்பது  18

மனிதர்கள் பலத்திற்காகவும் உன்னைவிட நான் உயர்ந்தவன்  என்று காண்பிப்பதற்காகவும் பிறரை அதிகாரம் செய்வதற்காகவும் ஆசைப்படுகின்றனர் அதனாலேயே பணம் மனித சமுதாயத்தில் மிக முக்கிய ஒரு இடத்தில் அமைந்துவிட்டது அதனாலேயே கற்றுக் கொள்வதும், கற்றுக் கொடுப்பதும் பணத்திற்க்கு வேண்டி என்று ஆகிவிட்டது மனிதனால் உருவாக்கப்பட்ட அந்த பணம் எனும் பூதம் முதலில் மனிதனக்கு அடியைாய் இருந்தது ஆனால் இப்போது மனிதன் அதற்கு அடிமையாகி விட்டான் இதில் வியப்பிற்குரிய  விஷயம் என்ன வென்றால் தான் அடிமையானதை மனிதன் உணராமல் தானே…

சந்தோஷம் என்பது 17

இந்த பணம் மனிதனுக்கு எதிர்கால பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை தருகிறது. அது அவனுக்கு பலத்தை தருகிறது.  மேலும் பணம் அதிகாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. அதிகார தாகம் மனிதனை எப்போதும் விடுவதில்லை.  அதனால் மனிதனும் பணம் மேலும்  பணம், மேலும், மேலும் பணம் என்று சேகரிக்கும் எண்ணத்தையும் ஆசையையும் விடுவதில்லை.

சந்தோஷம் என்பது 16

அவன் மனம் எதிர்காலத்தை சிந்திக்கும் போது அதனுடன் இணைந்து பணமும் வந்து விடுகிறது.  மனிதன் இறந்த காலத்திலேயோ அல்லது எதிர்காலத்திலேயோ வாழ்ந்து நிகழ்காலத்தை தொலைத்து விடுகிறான். மனிதனைப் பொருத்தவரை பணம் ஒரு பாதுகாப்பு தன்னுடைய எதிர்காலத்திற்க்கு பணம் மட்டுமே பாதுகாப்பு எனும் எண்ணத்தில் இருக்கிறான். அதனால், மனிதனின் எண்ணம் எதைச் சுற்றி சென்றாலும் பணத்தின் ஊடேயே அவனது எண்ணம் பயனிக்கிறது. 

நமது விதியை நாமே நிர்ணயிக்கிறாம்

மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளை எல்லாம்; தங்களுடன்வாழ்பவர்கள் மீதோ, அல்லது தெய்வத்தின் மீதோ சுமத்துகிறhர்கள். அல்லது புதிதாகஅவர்கள் ஏதோ பேய், பிசாசு என்று கற்பித்துக் கொண்டு, அதைத் தலைவிதி என்றுசொல்கிறார்கள். விதி என்றால் என்ன ? அது எங்கே இருக்கிறது ? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக் கொள்கிறோம். எனவே, அதன் பொருட்டு துாற்றுவதற்கும் ஒன்றுமில்லை, பாராட்டுவதற்கும் ஒன்றுமில்லை

நமது நிலைக்கு நாமே காரணம்

நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி எல்லாம்இருக்க வேண்டும் என்று விரும்புகிறேhமோ, அப்படி நம்மை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடையமுன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நாம் நம்முடைய தற்போதைய செயல்களால்உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை. ஏனவே எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆற்றலை வீணாக்காதே

சிந்தனையின் தொண்ணுாறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால்வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துகொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோஒரு போதும் தவறு செய்வதில்லை. நல்ல எண்ணங்களை கருவிகளாகக் கைக்கொள் * நல்ல எண்ணங்கள், தீய எண்ணங்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் தனித்தனியே வலிமைமிக்க ஆற்றலைப் பெற்றிருக்கிறது. இந்த பிரபஞ்சம் முழுவதிலும் அவை நிறைந்திருக்கின்றன. அவற்றின் அதிர்வுகள் தொடர்ந்து இருந்து வருவதானால், அந்தஎண்ணங்கள், செயலுக்கு வரும் வரையில் அவை கருத்து வடிவில் இருக்கின்றன. உதாரணமாக,…

ஆதி.6        

உபநிடதம் உடல் உயிர் ஆன்மா பிரபஞ்சம் போன்ற பல்வேறு பொருள்களை ஆராய்கிறது அதன் தன்மைகளை இயக்கங்களை முழுவதும் நாம் உணர போதிக்கிறது. பிரம்மத்தைப் பற்றி அது முடிவாய் கூறுவது என்னவென்றால் அனைத்திற்க்கும் மூலமும், ஆதியும் அதுதான் அதை அறிவைக் கொண்டு விளக்க முடியாது உணரத்தான் முடியும் மேலும் அது கூறுவது அறிவால் எதை சிந்திக்க முடியாதோ ஆனால் எது அறிவை சிந்திக்க வைக்கிறதோ அதுவே பிரம்மம்.  இதோடு, உபநிடதத்துவத்தை  நிறுத்திவிட்டு மற்றொரு தத்துவமான லோகதாய தத்துவத்திற்க்குள் போய்…

ஆதி.5        

உபநிடதம் என்பது உண்மையை கண்டறிய  செய்யப்படும் பயணம் காரணம், காரியம், இவைகளுக்கு உண்டான தொடர்பு அல்லது தொடர்பு இல்லாது போன்றவற்றை கண்டறிய ஆவல் கொண்டு செய்யப்படும் பயணம்.  இதில் அண்ட சாராசரம் முதல் அணு வரை அறிய முற்படுவதே இலக்கு ஆனாலும் பொதுவாய் சொல்வதென்றால் ஆத்மானுபவம் அறிவதே, பெறுவதே நோக்கம், இலக்கு என்றும் கூறலாம். அது மட்டுமல்ல இயற்கை, மனிதன், இவைகள் உண்டாவதற்க்கு காரணமான மூல சக்தி, இந்த மூன்றுக்கும் உள்ள தொடர்பை, தொடர்பின் விகிதங்களை, அறிய …

ஆதி.4        

என்னதான் வேதங்கள் அநாதியாய் இருந்தாலும் மனிதனால் தான் வெளியுலகத்திற்க்கு வந்தது.  இதில் மனிதனின் எண்ணங்களும் போக்கும் மாற, மாற மனிதனால் வெளியுலகிற்க்கு அறிமுகப் படுத்தப்பட்ட வேதங்களிலும் மாறுதல்கள் உருவானது ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் நமக்கு அதை புலப்படுத்தும் முதலாவது தோன்றிய ரிக் வேதத்தில் இல்லாத யாகாதி கர்மாக்கள் அதர்வண வேதத்தில் இருப்பதை நாம் பார்க்கலாம். துதியும், பக்தியும் இருந்த காலம் போய் யாகமும், பூஜையும், பூஜை முறையும் வேதத்தைவிட முக்கியத்துவம் பெற்ற காலமும் வந்தது…

ஆதி.3

உபநிடந்தங்கள் பல இருந்தாலும் அவற்றுள் 108 மிக முக்கியமானது இந்த உபநிடந்தங்கள் வேதத்தின் கருப்பொருளை தன் உள்ளே கொண்டவை ஒரு விதத்தில் சொல்வதாய் இருந்தால் உபநிடதங்களில் உள்ள கருபொருளின் விளக்கவுரையே வேதம் என்று சொல்லலாம்.  இது முரண்பாடான கருத்தாக தோன்றும் காரணம் முதலில் தோன்றியது வேதம் என்று இருக்கும் போது பின் வந்த உபநிடதங்களுக்கு விளக்கவுரை வேதம் எப்படி ஆகும் என்று விஷயம் என்னவென்றால் வேதத்தின் சாரம், சூட்சமம் எதுவோ அது மட்டுமே கொண்டது உபநிடதம், உபநிடத்தில்…

ஒவ்வொரு கெட்ட குணங்களும்

ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும் பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும் கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும் துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும் பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும் எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும் அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும். ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள். பசிக்கும் போது உணவருந்துங்கள்.

சூரியன் 8

சூரியன், புதன் சேர்க்கை ஜல ராசியான கடகம், விருச்சிகம், மீனமாகில் ( 4, 8, 12ல் ) இருப்பின் கெமிகல், எலக்ட்ரிகல், இன்ஜினீயரிங் துறையில் கல்வி பயின்றால் நல்லது. சூரியன், புதன் அக்னி ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு வீடுகளில் 1, 5, 9 இருந்தால் மெகானிகல், இன்டஸ்டிரியல் இன்ஜினீயரிங்கில் சிறந்து விளங்குவர். சூரியன், புதன் சேர்க்கை பூமி ராசியான ரிஷபம், கன்னி, மகரம் வீடுகளில் 2, 6, 10ல் இருந்தால் சிவில் இன்ஜினீயரிங்கில் சிறந்து விளங்குவர்,…

சூரியன் 7

சூரியன் மிதுனராசியில் இருப்பின் ஜோதிடத்தில் நாட்டம் ஏற்படும். சந்திரன் சிம்மத்தில் இருந்து புதன் பார்த்தால் அவர் ஜோதிடத்தில் புலமை பெற்றிருப்பர், புதன் கன்னிராசியில் இருப்பின் கவிஞராகவோ, ஜோதிடராகவோ திகழ்வார். சூரியன் 1,4, 7, 10 கேந்திரத்தில் அல்லது 10ம் வீட்டதிபதி கேந்திரத்தில் அல்லது குரு லக்னத்தில் அல்லது 4ம் இடத்தில் இருந்தால் சிறந்த மந்திரியாகவும், அரசியல்வாதியாகவும் இருப்பர். சூரியனுக்கு 12ல் சனி இருப்பின் நாஸ்திக வாதம்புரிவர். சூரியன் ஆட்சி, உச்சம் அடைந்தோர் அல்லது 10மிடத்தில் இருப்போர் பலர்…

வியான முத்திரை:-

வியான முத்திரை:- ஆள்காட்டி விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். . மற்ற இரண்டு விரலும் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:_ தூக்கமின்மை, தலைபாரம் ஆகியவற்றைப் போக்கும். தொண்டைக் கட்டடைப் போக்கும், குரல் இனிமை அடையும். தைராய்டு சுரப்பி நன்றாக செயல்பட்டு தைராய்டு குறைபாட்டைப் போக்கும். இரத்த அழுத்தம், படபடப்பு ஆகியவற்றைப் போக்கும். தலைவலி தலைசுற்றல் ஆகியவற்றைப் போக்கும். இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும் இரத்த சோகையை போக்கும். கண் எரிச்சல் உள்ளங்கை…

வருண முத்திரை

வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தெடுக்கப்படும். சிறுநீரக கோளாறுகள் அகலும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் உடல் வெப்பநிலையை சமப்படுத்தும் ரத்த ஓட்டம் சீராகும் தாகம் குறையும் சதைப்பிடிப்பு நீங்கும் குடல் அழற்சி நீங்கும் தோல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும். கோடையில் ஏற்ப்படும் கொப்பளங்கள் நீங்கும். அம்மை நோய்…

பிருத்திவி முத்திரை

பிருத்திவி முத்திரை:- மோதிர விரல் நுனியும் கட்டை விரல் நுனியும் ஒன்றை ஒன்று தொடவேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- உயிர்ஆற்றல் அதிகரித்து உடல் வலிமை அடையும். முடிஉதிர்வைப் போக்கும். உடல் சோர்வும் மனச்சோர்வும் நீங்க்கும். உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தோல் சம்மந்தமான நோய்கள் குணமடையும். சிந்தனைத் தெளிவடையும். ஆஸ்துமா, சைனஸ் நோய் கட்டுப்படும். ஜீரண சக்தி அதிகரிக்கும். வாயுத் தொல்லை நீங்கும். உடல் வெப்பநிலை சமனடையும்.…

சுந்தர யோக சிகிச்சை முறை 65

பிணி (நோய்) தடுக்கும் கவசம் எவ்வளவு சீர்திருத்தம் செய்து கொண்டாலும், தற்கால நாகரீக வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகிக் கொள்ளுதல் இயலாததாகின்றது.  இப்படி நாகரீகத்தை விலக்கி வாழ விரும்புகிறவனுக்கு இடம், பொருள், ஏவல் செளகரியங்கள் குறைவாகவே இருக்கின்றன. இயற்கைக்கு விரோதமாகத் திரும்பிய சமூகம், இயற்கைக்கு விரோதமான திட்டங்களையே வாழ்வில் பிரதானமாகக் கொண்டு விட்டது. இத் திட்டங்கள் விரும்புகிறவனை, யஇற்கைக்கு ஒத்து வாழ முடியாதபடி வதைக்கின்றது. மேலும் பெரும்பாலோர் வறுமையில் உயிர்ப்பொருள், துணைப்பொருள், தேவைக்குத் தக்கபடி பிரதானப் பொருள் பெறாததால்,…

சுந்தர யோக சிகிச்சை முறை 64

                யம் லப்தவா சாபரம் லாபம் மன்யதே நாதிகம் தத!                 யஸ்மினஸ்திதோ ந துக்கேன குருணாபி விசால்யதே !! எது கிட்டியபின், அதற்கும் மேலான பலன் இல்லையென்று நினைக்கின்றாரோ எதில் நிலைத்த பிறகு எப்படிப்பட்ட கடுமையான துக்கம் வந்தாலும் அசையாமல் சலிக்காமல் இருக்கின்றாரோ.                 தம் வித்யாத்துக்கஸம்யோகவியோகம் யோகஸம்ஞிதம்!                 ஸநிஸ்சயேனயோக்தவ்யோயோகோ ஸ நிர்விண்ணசேதஸா!! அது துக்கத்தின் சேர்க்கையிலிருந்து விடுபட்டதான யோகம் என்று பெயருள்ளதென அறியப்படட்டும்.  இந்த யோகம் திடமான தீர்மானத்துடன் பழக்கப்படவேண்டும்.  எப்பிணியும் துக்கமே,…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 10

காரணமாகிற மண்ணைப்பற்றி அறிந்தால் காரியமாகிற மண்குடம், மண்பானை முதலியவை அறியப்படுவது போல் பிரம்மத்தையறிந்தால்  உலகம் அறியப்பட்டதாகிறது. அனைத்தையும், பிரம்மமென்று அறிந்து கொண்ட ஞானிகளுக்கு தியானிப்பதற்கோ தியானிக்காமலிருப்பதற்கோ, பேசுவதற்கோ, செய்வதற்கோ, செய்யமலிருப்பதற்கோ என்ன இருக்கிறது?

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 9

ஆகையால் நீ பிரம்மம்.  நான் பிரம்மம் அல்லன் என்பது மாயை.  மாயையினின்று உதிப்பது வேற்றுமை.  எல்லாத் துன்பங்களுக்கும் அதுவே வேர்.  பிரம்மம் ( மனதால் ) அறிய முடியாததென்றாலும், ஸ்வயம் பிரகாசமாயிருப்பதால் அனுபவிக்க முடியாததன்று. ( ஸத்யம் ஞானம் ஆனந்தம் ) பிரம்மும், ஸத்தியமும், ஞானமும் எல்லையற்றதாகும் என்ற வேதாந்த வாக்கியம் அதை விளக்குகிறது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 8

 ஒரு பானைக்கும் மண்ணிற்கும் காரிய காரண சம்பந்தம் எப்பொழுதும் எப்படி இருக்கிறதோ அப்படியே வியவஹார உலகிற்கும், பிரம்மத்திற்கும் அதே சம்பந்தம் இருக்கிறது, இது சுருதியாலும், யுக்தியாலும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. பானை முதலிய மண்ணாலான பாண்டங்கள் எப்படி மக்கள் அறியாமற் போனாலும் மண்ணேயாகுமோ அப்படியே மக்கள் அறியாமற்போனாலும் அவர்கள் செய்யும் செயலெல்லாம் பிரம்மத்தினிடமே பிரம்மத்தின் மூலமே நிகழ்கின்றது.

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 5

3 – க்குரியவர் பலம் பெற்று 3 – இல், ராகு 8, 11 – க்குரியவரின் தொடர்பை பெற்று சுபரால் பார்க்கக்பபட்டால், இவர்களின் தசாபுத்தி அந்திர காலங்களில் எடுத்த காரியம் வெற்றி திடீர் தனப்பிராப்தி, ரேஸ் பந்தயம், சூதாட்டங்களில் லாட்டரி போன்றவகைளில் ஆதாயம் கிட்டும். 3 – இல் கேது அமர்ந்து லக்கினாதிபதி, குரு 9 – ஆம்பாவாதிபதி தொடர்பு கிடைத்தால், அன்னிய சகாயத்தால் முன்னேற்றமடைவர். உடன் பிறப்புக்களால் நன்மை இல்லை. மாமனார் வகை ஆதாயம்…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 4

3 –  ஆம் பாவதிபதி எந்த கிரகமோ, அந்த கிரகத்திற்கு பலம் பெற்ற கிரகம் நவாம்சப்படி மூத்தவர் எண்ணிக்கை ஆண் கிரகம் ஆனால் ஆண், பெண் கிரகங்களால் பெண், இதில் அலிக்கிரகங்களை தள்ளிவிட வேண்டும் எண்ணிக்கையில் மட்டும்.  3 – க்குரியவர் உச்சம் பெற்று, லக்கினாதிபதி, ராகு, குருவின் தொடர்பை பெற்று, 3 –  ஆமிடத்தை பாவர்கள் தீண்டினால் பல மாதர்களின் தொடர்பு கிடைத்துக்கொண்டே இருக்கும். இளம் வயது உள்ள பெண்களின் தொடர்பு அடிக்கடி கிடைக்கப்பெற்று இன்பமாக…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 3

பலம் பெற்ற 3 – ஆம் பாவாதிபதியோ, செவ்வாயோ, பலம் பெற்று மேசம், கடகம், துலாம், மகரம் போன்ற ராசிகளிலிருந்தால் அந்த ராசியை முதலாக கொண்டு, நவாம்சத்தில் அவர் உள்ள வீடுவரை எண்ணி வரும் எண்ணிக்கையை சொல்ல வேண்டும். மேற்படி கிரகம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற ராசியிலிருந்தால், அதற்கு 7 – ஆம் ராசியை முதலாக வைத்து, நவாம்சத்தில் எந்த ராசியில் உள்ளாரோ அது வரை எண்ணி உடன் பிறப்புக்களின் எண்ணிக்கையை சொல்ல வேண்டும்.…

மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலை வளர் 

ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால், இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன், மனதை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால், மேலும் சிறப்பாகச் செருப்புகளுக்கு மெருகு பூசுவான். மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒருவேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும்…

உன் கனவை நிறைவேற்று 

ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவுகாண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள்,நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்து விடு. வெற்றிக்கு இதுதான் வழி. நாம் உண்மையிலேயே பாக்கியவான்களாக விரும்பினால் மற்றவர்களையும் பாக்கியவான்களாக்க விரும்பினால் நம்முள் நாம் மேலும் ஆழ்ந்துசென்றாக வேண்டும்

எல்லா ஆற்றல்களுக்கும் நீயே சொந்தக்காரன்

மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே. நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும். இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று  மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை அதுதான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க…