பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சியே அனைத்திற்கும் தீர்வு என்று சிலர் பேசுகிறார்கள் இது உண்மையா என்று ஆழமாக சிந்தித்தோம் என்றால் நிச்சயம் இல்லை என்பதே விடையாக இருக்கும் ஒரு தேசம் என்னதான் பொருளாதாரத்தில் வளர்ந்தாலும் அதன் மக்களிடையே சகிப்பு தன்மையும் பரஸ்பர அன்பும் தேச பற்றும் இல்லாது போனால் அந்த பொருளாதார பலம் அழிவுக்கே வழி வகுக்கும் மேலும் இந்த பொருளாதார வளர்ச்சியே சாத்தியம் இல்லைதான் (பொருளாதார வளர்ச்சி சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட…

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 5 ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..1

ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..1 ஒருவரின் பிறந்த கிழமைக்குரியவர், நட்சத்திரத்திற்குரியவர், ராசிக்குரியவர், லக்கினத்திற்கு உரியவர், லக்கினம் நின்ற நட்சத்திரத்திற்குஉரியவர்களாக எந்த கிரகங்கள் வருகிறதோ அந்த கிரகத்தின் நட்சத்திரத்திலோ, ராசியிலோ, அந்த கிரகத்தின் நட்சத்திரங்கள் உள்ள ராசியிலோ, அந்த கிரகம் உள்ள ராசியிலோ அல்லது அக்கிரகம் பார்த்த ராசிகளிலோ எந்த பாவாதிபதி உள்ளாரோ அப்பாவாதிபதிகளின் இயக்கமே ஜாதகருக்கு மேலோங்கி இருக்கும்.. உதாரணமாக ஒருவர் பிறந்த கிழமை, திங்கள், நட்சத்திரம், ரோகிணி, ராசி, ரிசபம், லக்கினம் துலாம் நின்ற நட்சத்திரம் விசாகம்…

நிலத்தின் உயிர் எது? 1

இயற்கையில் சில விதிகள் உண்டு. வயலுக்கு என்ன போட வேண்டும் என்று கேட்டால் 40 விழுக்காடு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போட வேண்டும் என்று சொல்கின்றனர். அந்த ரசாயனத்தை போடப்போட பூமியில் இருக்கும் உயிரெல்லாம் இறக்கின்றன. இந்த மண்ணில் இருக்கும் உயிர்களுக்கு எல்லாம் ரசாயனத்தை போடக்கூடாது. விஷத்தை போடக்கூடாது. போட்டால் அது செத்துப்போய்விடும். அதுக்கும் பதிலா அது கேட்டபது, கழிவுகளைத்தான். ஆட்டு புழுக்கையை போடும் போதும், மாட்டு சாணத்தை போடும்போதும், கோழிக் கழிவை போடும் போதும், இலை…

சிரிக்க

முல்லா தனது மனைவியிடம் சொன்னார். நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பித்திருக்கிறேன். மூலதனம் மட்டும் ஒரு கோடி ரூபாய்  என்று  மனைவி கேட்டார். அப்படி ஆனால் நீங்கள் பாதிப் பணம் போட வேண்டியிருக்குமே, அவ்வளவு பணத்திற்கு எங்கே போவீர்கள். அதற்கு முல்லாசொன்னார்.. நண்பன் மூலதனம் முழுவதையும் போடுவான். என் அனுபவம் தொழில் நடத்த உதவும். என் அனுபவம் தான் என் பங்கு மூலதனம், முல்லாவின் மனைவிக்கு மிகவும் சந்தோஷம். . லாபத்தில் இருவருக்கும் சம பங்கா?…

எதையும் சாதிக்கலாம்..

ஒருவர் எதையாவது சாதிக்க வேண்டுமென்றால் ஒன்று அவர்களுக்கு பிறவியிலிருந்து திறமை இருக்க வேண்டும், இல்லையென்றால் யாராவது சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும்.. பயிற்சியானால் செயல்களை கற்றுத் தெரிந்து கொள்ளலாம். . இதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன், ஒரு தாய் தன் இருபிள்கைளிடம் இறைவனிடம் ஒரு வேண்டுதல் வைத்துள்ளேன் அது நிறைவேறினால் பத்தாயிரம் அரிசி காணிக்கை தருவதாக வேண்டியுள்ளேன் என்றாள். அதற்கு மகன்கள் பத்தாயிரம் அரிசியா எப்படியம்மா எண்ணி கொடுக்கமுடியும் என்றனர். சிறிது நேரம் கழித்து பெரியவன் சொன்னான் சீக்கிரம்…

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 4

5 – ஆம் பாவாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையானநட்சத்திரத்தில் 9 – ஆம் பாவாதிபதி நின்றால் தந்தையால் குழந்தைகளுக்கு எதிரிடையான செயல்கள் இதேபோல் பலன்கள் மாறி மாறி செயல்படும் என்பதை ஜோதிட கலைஞர்கள் வாசகநேயர்கள் யுக்தியோடு தெரிந்து செயல்படுவது நல்லது. இதன் மூலம் மிக நுட்பமான சூட்சுமமான பலன்களை எளிதில் அறியலாம்.. எந்த ஒரு கிரகம் நின்ற நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரத்தில் சந்திரன் அல்லது லக்கினம் அல்லது லக்கினாதிபதி நின்றால் அந்த கிரகத்தின் காரகத்திற்கு எதிர்ப்பாக ஜாதக…

ஒற்றுமை பற்றி சாதுவின் கண்ணோட்டம்

இரு அரசர்களுக்கிடையில் எப்போதும் சண்டை வந்து கொண்டேயிருந்தது. சாது ஒருவர் இவர்களின் ஒற்றுமைக்காக  பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டார் இதைப் பார்த்த அவர்கள  அவரைத் திட்டினார்கள். இவர்கள் திட்டுவதைப் பார்த்த சாது மௌனமாக சிரித்துக்கொண்டார். நாங்கள்  உங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் சிரிக்கிறீர்கள் என்றார்கள். அதற்கு அந்த சாது என்னைத் திட்டுவதிலேயாவது உங்களுக்கு ஒற்றுமை இருக்கிறதல்லவா அது போதும் என்றார்..

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 3

 லக்கினாதிபதியாக சுக்கிரன் நின்ற நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரத்தின் முதல் பாதம் எனில் இதன் எதிரிடையான நட்சத்திரம் அஸ்தம் முதல் பாதமாக வரும் இந்த நட்சத்திரத்தில் இருக்கும் கிரகம் எதுவோ அது இந்த ஜாதகருக்கு எதிரிடையாக செயல்பட்டு பாதிப்பான பலன்களைத் தரும்.. இதே போல் லக்கினாதிபதியான சுக்கிரன் நின்ற நட்சத்திரமான அனுசம் முதல் பாதத்திற்கு சாதகமான நட்சத்திரம் சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதமாகும். இந்த சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நிற்கும் கிரகத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் சாதகமாக…

உலகம் பிரம்மாண்டமானது

இந்த உலகம் பிரம்மாண்டமானது என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நாம் பிரம்மாண்டமானவர் என்றால் சந்தேகமும், அவநம்பிக்கையும் கூடவே எப்படி என்ற கேள்வியும் வருகிறதே, யோசித்துப் பார்த்தால் நாம் பிறந்து, இறக்கும் வரை உள்ள அனுபவத் தொகுதிகள், அறிவு விஷயங்கள் அனைத்தும் பிரம்மாண்டமில்லையா?, எந்த சிந்தனையும், எதுவுமே தெரியாத நிலையில் பிறந்து, அவரவர் நிலைக்கு இந்த அளவு வந்திருக்கிறோமே என்பது பிரம்மாண்டமல்லவா. சரியாக சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையின் தொடர்ச்சி என்பது எத்தனை பிரம்மாண்டம்.…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு – 9

வானத்தில் நீல நிறமும், கானலில் நீரும், கட்டையில் ஒரு புருஷனும் தோன்றுவது போல் ஆத்மாவில் உலகம் தோன்றுகிறது. வானத்தில் மேகங்கள் நகர்ந்து செல்லும் பொழுது சந்திரன் நகர்வதாய் பிரமை உண்டாகிறது, அவ்வாறே அஞ்ஞானத்தால் ஒருவனுக்கு ஆத்மா உடல் என்ற பிரமை உண்டாகிறது. இங்ஙனம் அஞ்ஞானத்தால் ஆத்மாவிடம் உடலெனும் பிரமை தோன்றுகிறது. ஆத்மானுபவத்தால் அது மீண்டும் பரமாத்மாவிடம் மறைந்து போகிறது. மதிமயக்கத்தால் ஒருவன் பழுதையைக் காணாமல் பாம்பைக் காணுவது போல் அஞ்ஞானியானவன் உண்மையைக் காணாமல் வியவஹார உலகைக் காண்கிறான்.…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 23

ஆத்மிகக் காட்சி நிறைவுறும் போது, ஒருவன் தன் இதயத்தில் குடிகொண்டுள்ள ஆண்டவனே அமுக்கப்பட்டவர், துன்புறுத்தப்பட்டவர், தீண்டாதோர், சண்டாளர் ஆகிய மற்றெல்லாரிடத்தும் இருப்பதை உணர்வான்,  இவ்வுணர்வு உண்மையான பணிவுடைமையைத் தரும். ஆண்டவன் எல்லோருக்கும் உரியவன் தீவிரமாகச் சாதனை செய்தால் சீக்கிரமாக அவனை அடையலாம். ஆண்டவனது நாமத்தை விரல்களைக்கொண்டு ஜபித்து அதன் மூலம் அவை புனிதம் அடைதற்காகவே அவன் நமக்கு விரல்களை அளித்துள்ளான். மேகத்தைக் காற்று கலைப்பதைப் போல ஆண்டவன் நாமம் உலகப்பற்றாகிய மேகத்தைக் கலைத்துவிடும்.

பொய் முகம்

உள்ளே ஒன்று வைத்து புழுங்கி வெளியே வேறு முகம் காட்டுகிறவர்களுக்கு ஒரு நாள் தன் உண்மை முகம் தனக்கே தெரியாமல் போகலாம், தெரிய ஆசை வந்து தேடுகையில் உண்மை முகம் உள்ளே இருந்து தெரியாது, அழிந்து போயிருக்கலாம், பொய் முகம் அணிந்து, அணிந்து பொய்யே உண்மையாகவும் காட்சி தரலாம்.  ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நம் முகத்தை நாம் மறைத்து வேறு முகத்தை காண்பித்திருப்போம், அப்படி நாம் மறைத்து வேறு முகத்தை காட்ட வேண்டிய நிர்பந்தத்தில்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் – 3

வாயு சஞ்சார நாடிகள் ….. மேற்கூறிய நாடிகளில் எழுப்பத்தீராயிரம் ( 70, 000 ) நாடிகள் வாயு சஞ்சரிக்கிற- அதற்கு யோக்கியமானவைகள் இந்த நாடிகளின் மார்க்கமாய் வாயுவானது போகவும், வரவும், குறுக்காக பாயவும் சக்தியுள்ளதாக இருக்கின்றது. நதிகள் எவ்விதம் தமது பிரவாஹங்களினால் சமூத்திரத்தின் சலத்தை அதிகரிக்கச் செய்கிறதோ அதுப் போல் மேற்கூறிய நாடிகள் தேகியால் புசிக்கப்படும். அன்னபானாதிகளின் ரசங்களை தேகமுழுவது வியாபிக்கச் செய்து தேகத்தை போஷித்துக் கொண்டு வருகின்றன. ஸ்தூல நாடிகள் ….. இந்த எழுபத்தீராயிரம் நாடிகளில் ஆயிரத்து…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 2

நாடி பரீக்ஷ விவரணம் ….. இவைகளில் நாடீபரீக்ஷயை மாத்திரம் இந்த ஜம்புவத்தீவிலுள்ள தேவர் முதல் மானிடர் வரையிலும் உள்ள வைத்திய சிகாமணிகள் முக்கியமாய் விஸ்தரித்து எழுதி இருக்கிறார்கள் அவைகள் வடமொழியில் செய்யுட்களாக இருப்பதினால் திராவிட தேசத்தாருக்கு அதனை தெரியும்படி இலேசான சொற்களால் யாவரும் எளிதில் அறிந்து சிகிச்சை செய்யும்படிக்கு எழுதியிருக்கிறேன். வாத பித்த கபங்களாகிய திரிதோஷங்களின் விரோதத்தினால் உண்டாகும் சகல வியாதிகளும் அவைகளின் சாத்தியம், கஷ்டசாத்தியம், அசாத்தியம், அந்தந்த வியாதிகளின் பேதங்கள் முதலியவை அறிந்து சிகிச்சை செய்ய…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு   8

ஆத்மா அறிவு மயமானது, பரிசுத்தமானது, உடல் மாம்ஸமயமானது. அழுக்கடைந்தது, அப்படியிருந்தும் மனிதர்கள் இரண்டையும் ஒன்றாகக் காண்கின்றனர். இதைக் காட்டிலும் வேறு எதை அஞ்ஞானம் எனக்கூறலாம்? ஸத்ரூபமாகிய ஆத்மா அழிவற்றது, அஸத்ரூபமாகிய உடல் தோன்றி மறைவது, அப்படியிருந்தும் மனிதர்கள் இரண்டையும் ஒன்றாகக் காண்கின்றனர். இதைக் காட்டிலும் வேறு எதை அஞ்ஞானம் எனக் கூறலாம்? மண்ணாலான குடம் முழுதும் எப்படி மண்ணாகவே இருக்கிறதோ அப்படி பிரம்மத்தாலான உடல் பிரம்மமே. ஆகையால் ஆத்மா என்றும் அனாத்மா என்றும் அஞ்ஞானிகள் பிரித்துக் கூறுவது…

இறைவனை வழிபடுவதற்கான வழிமுறைகள் யாவை?

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்குமே இறைவனை வழிபடுவதற்கான நெறிகள் ஆகும். இவற்றுள் சரியை என்பது, உடலால் வழிபடுவது. அதாவது திருக்கோயிலை வலம் வருவது, திருக்கோயிலுக்குப் பூ மாலைகொடுப்பது, திருக்கோயிலில் துப்புரவுப் பணி செய்வது முதலியன உடலால் வழிபடுவது ஆகும். கிரியை என்பது வாயினால் வழிபடுவது. அதாவது  மந்திரங்களை ஓதுவது, திருமுறைகளை நாள்தவறாமல் பாராயணம் செய்வது, சாத்திர தோத்திரக் கருத்துக்களைப் பிறர்க்கு எடுத்துரைப்பது முதலியன வாயினால் செய்யும் வழிபாடு ஆகும். யோகம் என்பது மனத்தினால் வழிபடுவது.…

உறவு சிக்கல் ஏற்படும் போது 2

நிலை 1: அதிர்ச்சி நாம் கொண்டிருக்கும் அன்பு திடீர் என சம்பந்தப்பட்டவர்களால் புறக்கணிக்கப்படும் போது முதலில் நமக்கு ஏற்படும் உணர்வு அதிர்ச்சி ஆகும். அதனுடன் தொடர்ந்து ஆச்சர்யமும் சில சமயங்களில் பயம் கூட ஏற்படும். இதனால் என்ன ஆகுமோ ஏது ஆகுமோ எனும் உணர்வு தான் பயமாக வெளிப்படும். இந்த சூழ்நிலை ஏற்படும் போது மன பயிற்சிக்காக தியானம் செய்யுங்கள். உடல் உழைப்பை அதிகப்படுத்துங்கள். பாதிக்கப்பட்ட உணர்வில் இருந்து விடுபட வேறு பல விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 2

லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் லக்கினமோ – சந்திரனோ அமைந்தால் லக்கினாதிபதியால் கிடைக்கக்கூடிய பலன்கள் சிறப்புகள் உயர்வுகள் ஜாதகருக்கு உறுதியாக கிடைக்கும்.. 2 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில்  லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமர்ந்தால் 2 – க்குரியவரால் கிடைக்கும் அனைத்து பலன்களும் ஜாதகருக்கு கிடைக்கும் அனுபவிக்கும் நிலையும் ஏற்படும்.. 3 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமர்ந்தால் 3 – க்குரியவரால் கிடைக்கும் அனைத்து…

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 1

லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தில் லக்கினம் அமைந்தால் முன்னிற்கு முரணாக செயல்படும் ஜாதகமாகும். லக்கினாதிபதியால்கிடைக்கும் பலன்கள் ஜாதகனுக்கு கிடைக்காது சரிவர செயல்படாது.. 2 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ அமர்ந்தால் 2 – க்குரியவரால் கிடைக்கும் பலன்கள் ஜாதகருக்கு கிடைக்காது.சந்திரன் அமர்ந்தால் அனுபவிக்க இயலாது.. 3 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமைந்தால் 3 – க்குரியவரால் 3 – ஆம் பாவத்தில் கிடைக்கக்கூடிய பலன்கள்…

உறவு சிக்கல் ஏற்படும் போது 1

அன்பு உடைந்துகொள்வது மிக மோசமான விஷயமாகும் அது உங்களுக்கு பயனற்றது என்பதை உணர்வீர்கள் . நீங்கள் நம்பிக்கையை இழந்து துயரப்படுவீர்கள். ஆனால், பல முறை, ஒரு உறவு இருக்கும்போது நீங்கள் சந்தித்த எல்லா பிரச்சினைகளுக்கும் இது ஒரு தீர்வாகும். ஒருவரை தைரியமாக முகம் கொடுப்பதன் மூலம் பிரேக்-அப்களை இன்னும் சமாளிக்க முடியும். நினைவில், வலி தவிர்க்க முடியாதது ஆனால் துன்பத்தை விருப்பமாக்குங்கள் நீங்கள் வெற்றியாளராக வெளிப்படுவீர்கள். இதில் நீங்கள் ஏழு விதமான உணர்வுகளை அடைவீர்கள் அவைகளை பின்வருமாறு…

திதிகள் – ஆட்சி -கிரகங்கள்

பிரதமை—சூரியன் துவிதியை—சந்திரன் திரிதியை—செவ்வாய் சதுர்த்தி—புதன் பஞ்சமி—குரு சஷ்டி—சுக்கிரன் சப்தமி—சனி அஷ்டமி—ராகு நவமி—சூரியன் தசமி—சந்திரன் ஏகாதசி—செவ்வாய் துவாதசி—புதன் திரியோதசி—குரு சதுர்த்தசி—சுக்கிரன் பௌர்ணமி—சனி அமாவாசை—ராகு

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 22

வானத்து நிலா மேகத்தால் மூடப்பட்டிருக்கிறது. காற்று கொஞ்சங் கொஞ்சமாக அம்மேகத்தை விலக்க வேண்டியதாகிறது, அப்போதுதான் நிலவைக் காணமுடியும். அது திடீரெனப் போய் விடுகிறதா? ஆத்மிகப் பூரணத்துவமும் அது போலத்தான். பழைய செயல்களின் பலன் கொஞ்சங் கொஞ்சமாகவே தீரும். ஆண்டவனை உணர்ந்தால் அவ்வாறு உணர்ந்தோர்க்கு ஆண்டவன் ஞானத்தையும் உள்ளொளியையும் அளிப்பான், அதனை அவரே உணர்வர்.

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு  7

பாம்பு என்ற மதிமயக்கம் பழுதை என்ற அறிவால் எங்ஙனம் நீங்குமோ அவ்வாறு பரிசுத்தமான இரண்டற்ற பிரம்ம ஞானத்தால் மாயையானது அழிவுறும். பிரசித்தமான தத்தம் செயல்களால் ரஜஸ், தமஸ், ஸத்துவம் என்று நன்குணரப்பட்ட குணங்கள் அந்த மாயையைச் சார்ந்தவை. அவித்தை என்பது மனதிற்குப் புறம்பானதன்று. பிறவித் தளைக்கும் பிறவிச் சுழலுக்கும் காரணமான அவித்தை மனதேயாகும். அது (மனது) அழிந்தால் அவித்தை அனைத்தும் அழியும். ஆத்மா உடலை ஆள்வதாய் அதனுள் உறைவது, உடல் ஆளப்படுவதாய் வெளியே இருப்பது, அப்படியிருந்தும் மனிதர்கள்…

பத்மாசனம் — PADMASANAM

விரிப்பின் மேல் அமர்ந்து இருகால்களையும் நேராக நீட்டி சுவாசத்தை வெளிவிட்டு வலது முழங்காலை மடித்து மடிக்கப்பட்ட வலது காலின் குதிக்கால் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைக்கவும். பின்னர் இடதுகாலை மடக்கி மடித்து வலது காலின் தொடையின் அருகில் அடிவயிற்றை தொட்டுக் கொண்டிருக்கும் படி வைக்கவும். இவ்வாறு மாற்றி வைக்கப்பட்ட இரண்டு குதிகால்களும் மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதவாது, மார்பு, முகம் ஆகியவற்றை நேராக நிமிர்த்தி முதுகை வளைக்காமல் சுவாசத்தை வெளியிட்டுக் கொண்டு நிமிர்ந்து இருந்து இரண்டு கைகளையும்…

தாவரங்களின் உணர்வுகள்.

தாவரங்கள் பேசுவதை மனிதர்களால் கேட்க முடியுமா? ஆமாம் அது சாத்தியம்தான். சொற்களை பயன்படுத்தி பேசுவது என்ற மனித வழக்கத்தின்படி, அவை பேசுவதில்லை. தாவரங்களால் கட்டமைக்கப்பட்ட சுற்றுச் சூழலுக்கு இயற்கையிலேயே ஒத்திசைவு கொண்ட உயிரினங்கள் நாம். எனவே, ஏதாவது ஒரு வழியில் அவற்றுடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் எப்படி ஒருவரோடு மற்றொருவர் இணைந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியும். இன்றைய சூழ்நிலையில் சீர்கேடுகளுக்கு முக்கிய காரணம், அவற்றுடன் கொண்டிருந்த உறவை நாம் மறுத்து…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்தமுரசு.6

மாயை என்பது அவ்யக்தம் எனப்பெயருடையது. அது ஆதியற்றது, அஞ்ஞான வடிவானது. முக்குணமயமானது, பரமேசவரனுடைய உன்னத சக்தியாயிருப்பது. சிறந்த புத்திமானால்தான் அதனுடைய செயல்களினின்று அது ஊகித்தறியப்படும். அந்த மாயையால் இந்த உலகம் முழுவதும் பிறப்பிக்கப்படுகிறது. மாயை இருப்புடையதன்று, இருப்பில்லாதது மன்று, இரு வகைப் பட்டதுமன்று, பகுக்கப்பட்டதாகவோ, பகுக்கப்படாததாகவோ இருவகைப்பட்டதாகவோ அது இல்லை, அங்கங்களை உடையதாகவோ, அங்கங்களில்லாததாகவோ, இருவகைப்பட்டதாகவோ அது இல்லை, அது மிகவும் ஆச்சரியமானது. இப்படிப்பட்டதென்று கூற முடியாத ரூபமுடையது.

வீட்டுக்கடனும் வரிச்சலுகையும்.

வீட்டுக்கடன் வாங்கும் போது வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் பெரும்பாலானவர்கள் வீட்டுக்கடன்தான் வாங்குகிறார்கள். ஆனாலும், அந்த கடன் வாங்குவதற்கு நம்மிடம் ஒரு அடிப்படைத் தொகை இருக்க வேண்டும். உதாரணத்துக்கு வீட்டின் மதிப்பில் சுமார் 20 சதவீத தொகை நம்மிடம் இருக்க வேண்டும். இதை ‘ டவுன் பேமென்ட் ‘ என்ற சொல்லுவார்கள். உதாரணத்துக்கு ரூ.50 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்குகிறீர்கள் என்றால், சுமார் 10 லட்ச ரூபாயாவது நீங்கள் செலுத்தும் முன்பணமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வங்கிகள்…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு 5

காலையில் தோன்றி மாலையில் அழியும் அநித்தியப் பொருள்களைப் போல் அஞ்ஞானத்தால் தோன்றும் பயன் அனைத்தும் அழிவுடையது.‍ அஞ்ஞானனியானவன் பயனில் ஆசை வைத்து கர்த்ருத்வ போக்த்ருத்வ புத்தியுடன் கருமம் செய்கிறான். அவன் மதிமயங்கியவன். ‘ நான் செய்கிறேன் ‘ ‘ நான் அனுபவிக்கிறேன் ‘ என்றெல்லாம் எண்ணுகிறான். அஞ்ஞானிகள் தத்தம் முன்வினைக்குத் தக்கபடி உலக விஷயமாகிற கடையைப் பரப்பி வைத்துக் கொண்டும், தங்கள் விதியை நொந்து கொண்டும் வாழ்க்கையில் ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.

சிவராத்ரி ஒரு விளக்கம்: ஜோதிட கலாநிதி டாக்டர் எஸ்.சுயம்பிரகாஷ்

சிவராத்ரி ஒரு விளக்கம்: மாசி மாதத்தில் கிருஷ்ணபக்ஷத்தில் மகாசிவராத்ரி விரதம் அனுஷ்டித்தல் வேண்டும். த்ரயோதசி எனப்படும் பதின்மூன்றாம் சக்தியும், சதுர்த்தசி எனும் பதிநான்காம் நாள் சிவமும் ஆகும். நடுநிசியில் சதுர்தசியும், அதற்கு முன்னம் த்ரயோதசியும் இருப்பது உத்தமம். குறைந்த நேரம் த்ரயோதசியும், அதிக நேரம் சதுர்தசி அல்லது அதிக கால அளவு த்ரயோதசியும், குறைந்த கால அளவு சதுர்தசியும் அல்லது சூரிய உதயத்தில் த்ரயோதசி இருந்து பின்னர் நாள் முழுவதும் சதுர்தசி இருந்தாலும் அது சிவராத்ரியாகும். அமாவாசை…

சிவராத்திரியின் பலன்கள்

சிவபெருமானை வழிபடும் முக்கியமான வழிபாடுகளில் ஒன்று சிவராத்திரி ஆகும்.  மாதம் தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை  சதுர்த்தசியில்  சிவராத்திரி வரும். மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் வரும் சிவராத்திரியே  மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. ‘நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ஷ சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி’ என சிவராத்திரி ஐந்து வகையாக வருகின்றன. நித்ய சிவராத்திரி — ஒரு வருடத்தில் தேய்பிறை சதுர்த்தசியில் 12,  மற்றும் வளர்பிறை சதுர்த்தசியில் 12 என 24 சிவராத்திரிகள் தான்…

புறாக்களின் வகைகள்

அரசர் காலத்தில் புறாக்கள் தூது போயின. எனவே காலம் காலமாக மனிதனோடு புறாக்கள் பின்னிப்பிணைந்து இருக்கின்றன. புறாக்களில் மிகவும் விலை உயர்ந்தது பந்தயப் புறாதான். இதனை ஐதாராபாதில் கொண்டு போய் விட்டாலும் சரி, காஷ்மீரை தாண்டி விட்டாலும் சரி, ஒரு சின்ன ரவுண்டு அடித்துவிட்டு புறப்பட்ட இடத்திற்கு வந்துவிடும். இந்த வகைதான் பந்தய புறாக்கள் என்கிறார்கள். இவை பெல்ஜியம், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை. நீண்ட தூரம் பறக்க கூடிய அந்த நாட்டு புறாக்களின்…

குதபாத ஆசனம்

.குதபாத ஆசனம் ( குருவாய் ) படத்திலுள்ளபடி இரண்டு பாதங்களையும் ஒன்றோடொன்று சேர்த்து ஆசனவாயின் பக்கத்தில் சேர்த்து இரண்டு கைகளையும் இடுப்புக்கு நேராகக் கீழே ஊன்றிச் சைக்கிள் சீட்டின் மேல் அமருவதுபோல் இரண்டு பாதங்கள் மேல் உட்கார வேண்டும். பிருஷ்ட பாகம் பூமியில் படக்கூடாது. இரு கைகளையும் இரண்டு முழங்காலின் மேல் சின் முத்திரையுடன் வைத்து 3 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை செய்ய வேண்டும். சாதாரணமாக மூச்சை இழுத்துவிட வேண்டும். குறிப்பு — புத்திர…

அமெரிக்க டாலரை பற்றி சில வரிகள்

1929 – ம் ஆண்டு முதல் 1933 வரையில் நீடித்த உலகப் பொருளாதார வீழ்ச்சி, உலகப் பொருளாதாரத்தின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 30 சதவீதம் அளவுக்குச் சரிவு ஏற்பட்டது. சுமார் 1 கோடியே 30 லட்சம் பேர் வேலையிழந்தனர். 1929 – ல் வீழ்ச்சியின் தொடக்கத்தில் 3 சதவீதம் ஆக இருந்த வேலையில்லா திண்டாட்டடம் 1933 – ல் 25 சதவீதம் ஆக உயர்ந்து விட்டது. 85, 000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. லட்சக் கணக்கானோர்…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்தமுர சு. 4

இடைவிடாத தியானத்தால் ‘ நான் பிரம்மம் ‘ எனும் உண்மை மனதில் பதியும் போது அது அஞ்ஞானத்தையும் அதன் திரிசல்களையும் ஒரு ரஸாயனம் ( மருந்து ) நோயைப் போக்குவது போல் போக்கிவிடுகிறது. ஒருவன் படகில் செல்லும் போது கரையிலுள்ள மரங்கள் படகு செல்லும் திக்கிற்கு எதிராக நகர்வது போல் அவனுக்கு பிரமை ஏற்படுகிறது. பிறவிச் சுழலில் ஆத்மா உழல்வதாய்த் தோன்றுவதும் அப்படிப்பட்ட பிரமையே. ஆத்மாவினிடம் அனாத்மக் கற்பனையே அஞ்ஞானம் எனப்படுவது. அஞ்ஞானத்தின் ஒழிவே மோக்ஷம். இருள்,…

கூர்மாசனம்

படத்திலுள்ளபடி குய்யபாத ஆசன நிலையிலுள்ளபடியே இரண்டு கைகளை மட்டும் சிரசிற்குமேல் கும்பிடுவது போல அமைத்து மூச்சை உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல் சாதாரணமாக இழுத்தும் விட்டும் ஒரு நிமிடம் முதல் 3 நிமிடம் வரை அப்படியே இருத்தல் வேண்டும் இம்மாதிரி 3 முதல் 5 முறை வரை செய்யவேண்டும். குறிப்பு – கூர்மம், ஆமை, தன் ஐந்து உறுப்புக்களையும் ( தலை, நான்கு கால் ) தன் விருப்பப்படி வெளியில் நீட்டவும், அடக்கவும் செய்யும். அதுபோல இந்த ஆசனத்தைச் செய்பவர்களும்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 21

உன் வேலைகளைச் செய்வதோடு தியானமும் பழகாதிருப்பின், செய்வது விரும்பத் தக்கதா, தகாததா என்பதைப் பிரித்தறிவது எப்படி? காலை, மாலைச் சந்தியா காலமே கடவுள் வணக்கத்திற்கு ஏற்றது. அப்போது மனம் தூய்மையாக இருக்கும். எவ்வளவோ தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டிருப்பினும் கடவுளை நினைத்து வணங்கவாவது வேண்டும். கொஞ்சங், கொஞ்சமாகத் தியானமும் பிரார்த்தனையும் செய்யும் நேரத்தை அதிமாக்க வேண்டும். மந்திரம் உடலைச் சுத்தமாக்குகின்றது. கடவுள் நாமத்தை உச்சரிப்பதால் மனிதன் பரிசுத்தனாகிறான். ஆகையால் அவன் நாமத்தை எப்பொழுதும் ஜபித்துக் கொண்டிரு. நீ செய்யும்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 20

மன ஒருமைப் பாட்டுடன் இரண்டு நிமிட நேரம் கடவுளைப் பிரார்த்திப்பதும், தியானிப்பதும், அதில்லாமல் பல மணி நேரம் அவற்றைச் செய்வதைக் காட்டிலும் சிறந்தது. எல்லோருமே கடமை என்று கருதுவதால் ஏதாவது ஒருவகைப் பயிற்சியை மேற்கொள்ளுகின்றனர். ஆனால் எத்தனை பேர் ஆண்டவனை நாடுகின்றனர்? கடமையைச் செய்யத்தான் வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அது மனத்தை நன்னிலையில் வைக்கிறது. ஆனால் ஜபம் செய்தல் தியானித்தல், பிரார்தனை செய்தல், ஆகியவை மிக அவசியம். இவைகளைக் காலையிலும் மாலையிலுமாவது கைக்கொள்ளவேண்டும். அச் சாதனம் படகிற்குள்ள…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 19

குழந்தாய், தவமோ, பூஜையோ இப்போது முதலே தொடங்கு, பின்னால் இவைகளைப் பற்றல் முடியுமா? எதை அடைய வேண்டுமோ அதனை இப்போதே அடை, இதுவே சரியான சமயம். கடவுளின் காட்சி பெறவில்லை என்பதால் சாதனையைத் தளர்த்தி விடாதே. தூண்டில் போடுபவன் தூண்டிலோடு வந்து அமர்ந்த ஒவ்வொரு நாளும் பெரிய மீனையா பிடித்துவிடுகிறான்? அவன் காத்துக் காத்து உட்கார்ந்திருக்க வேண்டும். பலமுறை அவன் ஏமாற்றமும் அடைகிறான்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 18

ஜபம் செய்யுங்காலத்தில் ஆண்டவனின் நாமத்தை உன்னால் இயன்ற அளவு மிக்க அன்போடும், நேர்மையோடும், ஆத்ம சமர்ப்பணத்தோடும் ஜெபித்து வா. நாள்தோறும் தியானம் செய்வதற்கு, முன் இவ்வுலகில் உனது திக்கற்ற நிலை‍யை எண்ணிப் பார், இதன் பின் உன் குருநாதர் கூறிய முறையில் சாதனை செய்யச் தொடங்கு. ஞானப் பயிற்சி முறைகளால் பூர்வ கர்மத் தளைகள் அறுக்கப்படுகின்றன. ஆனால் பிரேமபக்தியின்றிக் கடவுள் தரிசனம் பெறுதல் என்பது முடியாத காரியம். ஜபம் ஞான சாதனை இவற்றின் உண்மை நோக்கம் என்னவென்று…

குய்யபாத ஆசனம் ( கருவாய் )

குய்யபாத ஆசனம் இரண்டு பாதங்களையும் ஒன்றோடொன்று சேர்த்து, இரண்டு குதிகால்களும் ஆசன வயிற்படும்படி பொருத்தி வைத்துக் கொண்டு இரண்டு கணுக்கால்களையும் பிடித்துக் கொண்டு மூச்சை வெளியில் விட்டுக் கொண்டே குனிந்து இரண்டு கால் பெருவிரல்களும் நெற்றியில் படும்படி செய்து, பின் மூச்சை உள்ளுக்கிழுத்துக் கொண்டே நிமிரவும் இம்மாதிரி 3 முதல் 5 முறை செய்ய வேண்டும். குறிப்பு — கர்ப்பத்தடைக்குச் சிறந்த ஆசனம். பெண்கள்விடாமல் காலை, மாலை, மூன்று மாதங்கள் செய்து வந்தால் நிச்சயமாய் கர்ப்பமுண்டாகாது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 17

எப்போதும் ஆண்டவனுக்குரிய பணிகளையே செய்யவும். அதே சமயம் ஜபமும் தியானமும் செய்யவும் முயல்க. அவ்வாறு செய்தால் உன் மனம் தீய நினைவுகளால் பாதிக்கப்படாது. செயல் புரியாது தனியே அமர்ந்திருந்தால் எல்லா வகையான எண்ணங்களும் தோன்றி மன அமைதியைக் கெடுத்துவிடும். இந்த மனிதப்பிறவி பெற்றதால் நீ பாக்கியவான். உன்னால் முடியுமளவுக்கு ஆண்டவனைத் துதி செய். நீ கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். உழைக்காமல் எதையும் அடைவது முடியாது. உலகச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் தினந்தோறும் பிரார்த்தனைக்கும் ஞான சாதனை கட்கும் ஒரு…

படித்தல் என்றால் என்ன சு- ப- வீ பார்வையில்

படித்தல் என்பது புத்தகத்தை படித்தல் எதிரிலும் சுற்றிலும் உள்ள மனிதர்களை படித்தல் வாழ படித்தல் வாழ்க்கையை படித்தல் பிறருக்கு உதவ படித்தல் இதை தவிர ஏதாவது விட்டுருந்தால் அதையும் முயன்று படித்தல் வாழ்க்கை என்பதே கற்றுகொண்டே கற்றுக்கொடுப்பது தான்

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு துலா லக்கினம்4

பூரண பாவியான சனி, துலாம் லக்கினத்திற்கு பூரண சுபராகி விடுவதால் யோகத் தன்மை பெற்று நல்ல பலன்களைத் தரவல்லவராகி விடுவதாக நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது. அனால், இவர் தசா புத்திகள் நடக்கும்போது ஏற்படும் பலன்களை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும். பலவிதமான சோதனைகளுக்கு உட்பட்டு வருபவர்களுக்கு தெரியும். பலாபலன்களில் பாதிப்பை எழுத இடம் தராத சனி இங்கு பாபியாக செயல்படும் காரணம் ? கிருத்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், சித்திரை, மிருகசீரிடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, நட்சத்திரம்…

உரையாடலின் ஒரு பகுதி 6

ஒரு சந்தேகம், விஸ்தாரமாக நாடெங்கும் பொது நன்மைக்காக விரைவில் ஒரு சீர்திருத்தத்தையோ,காரியத்தையோ, வலுவுடன் செய்ய ஏகாதிபத்திய சர்வாதிகார சக்தி வேண்டுமல்லவா சர்வாதிகார சக்தி என்பது இரண்டு புறமும் கூர்மையான கத்தி அது ஏதாவது சந்தர்ப்பத்தில் தன்னையோ, பிறரையோ காயப்படுத்திவிடும். ஏகாதிபத்திய ஆட்சியிலும் ஆட்சியை நடத்தும் சர்வாதிகாரிக்கு முன்போ பின்போ சுயநல இச்சைகள் ஏற்படும் போது மக்களின் சுதந்திரம் பறி போவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். எந்த சமயமும் கொடுங்கோண்மையாக மாறக்கூடிய சர்வாதிகார அரசியலைவிட சக்தியற்ற மந்தமான அரசியல்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 16

எதனையேனும் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எழுமேயானால், தனியான இடத்தில் தங்கிக் கண்ணீர் மல்க ஆண்டவனையே வேண்டுக. அவன் உன் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான். பின்பு உனக்கு எல்லா வற்றையும், விளங்கும்படி செய்வான். நித்திய அநித்தியப் பொருள்களைப் பற்றி எப்போதும் விசாரணை செய். உன் மனதைக் கவருகின்ற புறப்பொருள்கள் எல்லாம் அழியும் தன்மையுடையன என்பதை அறிய முயல்க, உன் கவனத்தை ஆண்டவனிடம் திருப்புக.