ஸ்ரீ சங்கரரின் ஞானம் 9

இருளில் ஏற்பட்ட திக்பிரமையானது ஒளியில் நீங்குவது போல் அஞ்ஞான நிலையில் ஏற்பட்ட அகங்காரம், மமகாரம் முதலியவையெல்லாம் தத்துவஸ்வரூப அனுபவத்தில் ஏற்படும் ஞானத்தால் உடனே அழிந்துபோம். தெளிந்த ஞானத்தையடைந்த யோகியானவன், ஞானக் கண்ணால் தன்னிடத்திலேயே உலகனைத்தும் இருப்பதாயும் ஆத்மாவே அனைத்துமாயிருப்பதாயும் காண்கிறான்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 35

நாலு முதல் ஏழு வருஷ சலனம் ….. நாலு வருஷம் முதல் ஏழு வருஷம் வரையிலும் ( 90 ) தகுதி மணி நேரத்தில் நாடி அடிக்கும். ஏழு வருடம் முதல் எண்பது வருடம் வரையிலும் நாடி சலனம் ….. ஏழு வருடம் முதல் பதினான்கு வருடம் வரையிலும் ( 85 ) தகுதியும், பதினாறு வருடம் முதல் முப்பது வருடம் வரையிலும் எண்பது தகுதியும், முப்பது முதல் ஐம்பது வருடம் வரையிலும் ( 75 )…

கோள்களின் கோலாட்டம் 2 ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 21

1,2, 11 – க்குரியவர்கள் அவர்களுக்கு திரிகோண கேந்திரத்தில் நிற்க தன் சுய முயற்சியால் பல தொழில் நுட்பங்களை அறிந்து செல்வமும், செல்வாக்கும் பெற்று வளமோடு இருப்பான். 9 – க்குடையவர் 10 – ல், 2 – க்குரியவர் லக்கினத்தில், லக்கினாதிபதி கேந்திரத்தில், 4 – க்குடையவர் 12 – ல் கெடாத வாழ்வும், துயரமில்லாத நிலையும், மங்காத செல்வமும் உடையவர்.

கோள்களின் கோலாட்டம் 2 ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 20

 2 – க்குரியவர் 6, 8, 12 – ல் மறைந்து, வக்கிரம், அஸ்தமனம் யுத்தத்தில் இருந்து, 2 – ஆமிடத்தில் சந்திரனுடன் ராகு, சனி சேர்ந்து இருந்தால் பேய், பிசாசுகளின் தொல்லையால் உடல், ஆரோக்கிய குறைவும், நிம்மதி அற்ற வாழ்க்கையும் ஏற்படும். இந்த கிரக அமைப்பை, அல்லது இக்கிரகங்கள் அமர்ந்திருக்கும் ராசிநாதனை குரு பார்த்திருந்தால் தெய்வ பலத்தினால் உடன் நிவாரணமும், தெய்வபலமும் ஏற்படும்.  2, 8, 9 – க்குரியவர் கூடி கேந்திரம் பெற்று லக்கினாதிபதியால்,…

கோள்களின் கோலாட்டம் 2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 19

 மேசம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம் லக்கினத்திற்கு 2 – மிடமாகவும், நவாம்சத்திற்கும் மேற்படியே 2 – ஆமிடமாக அமைந்து, சந்திரன், செவ்வாய், சுக்கிரன் இருந்தாலும், இவர்களில் யாராவது ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் துரிதமாக தெளிவாக வார்த்தைகளை பேசுவார். வார்த்தை சித்தன்.வாக்குஸ்தானாதிபதி யோக காரகனாய், கேந்திரங்களில் உச்சம் பெற்றிருக்க, வாக்குஸ்தானத்தில் கேது இருக்க, புத்திரஸ்தானாதிபதி, நோக்கினாலும், இருவரும் பலமாக இருந்தாலும் இந்நிலை கிரக அமைப்பில் பிறந்தவர்கள் சமயோசிதமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வார்.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 18

சனி வாக்குஸ்தானாதிபதியாகி வக்கிரமடைந்து எங்கே இருந்தாலும், வக்கிரமடைந்த கிரகம் வாக்குஸ்தானமான 2 – மிடத்திலிருந்தாலும், அல்லது வாக்குஸ்தானாதிபதியை நோக்கினாலும் இந்த அமைப்பில் பிறந்த ஜாதர்கள் மந்த கதியில் வெகு தாமதமாகவே வார்த்தையை உச்சரிப்பான். குடும்பத்தில் குழப்பம், நாணய குறைவு, பணத்தட்டுப்பாடு ஏற்படும். 29 வயதிற்குள் திருமணம் நடந்தால் ஏகப்பட்ட குழப்பம், பிரிவினை போன்றவை ஏற்படும். சுபக்கிரக பார்வை இருந்தால் பாதிப்பு ஏற்பட்டு விலகும்.

கோள்களின் கோலாட்டம் 2ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 16

 2 – ல் சனி இருந்து இவருடன் 8, 12 – க்குடையவர் இருந்து செவ்வாய், ராகு, கேதுவின் தொடர்பை பெற்றால் பணம் தங்காத நிலை, பணத்திற்காக, பல தவறுகளை செய்ய வேண்டிய சூழ்நிலை, குடும்பத்திற்கு அடங்காமை, காவல்துறை, அரசு வகையால் தண்டனைகள் அடைதல், தூக்குத் தண்டனையும் கிடைக்க வழி உண்டு.  2 – ல், 6 – க்குரியவர் பலம் பெற்று இருந்து 6 – மிடத்தை சனி, ராகு, கேது, சூரியன் பார்த்திருந்தால் சகவாச…

கோள்களின் கோலாட்டம் 2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 15

2 அல்லது 10, 11 – ஆம் வீடு சுபர் வீடாகி இதற்கு சுபர் பார்வை சேர்க்கை இருப்பினும் 5, 9, 11 – ஆமிடங்களை குரு பார்த்திருப்பினும், 2, 9 – க்குரியவருடன் குரு சேர்ந்து இருப்பினும் இவர்கள் திசாபுத்தி காலத்தில் அக்கிரகங்களின் கிழமைகளில் பணம் வரும்.  2, 5 – க்குரியவர் சேர்க்கை, 6, 8, 12 – லிருப்பின் நோய்த் தொல்லையால் கல்வி தடைபடும். கீழ்த்தரமான வார்ததைகளை உபயோகிப்பர். அகால போஜனம். நீச்ச…

சுந்தர யோக சிகிச்சை முறை 29

ஆரோக்கிய வாழ்வுக்கும் நோய் தடுத்தலுக்கும் அவசியமான திட்டங்களை சுந்தரக் குறள்கள் மூலமாக கொடுத்துள்ளேன். 1. உணவால் உடலுறுதி நீளுமாயுள், நாக்கால் உணவழியின் நொந்தபின் சாவு. 2. நாக்கிற் கடிமை நசிவானே நொந்து, நல் வாழ்க்கைக் கியற்கையே தூக்கு. 3. மென்றே உணவை விழுங்குக, இல்லையேல் தின்றாலும் ஏதே பயன்? 4. திணித்துத் திணித்து நீ தின்பது தீது துணிப்பையா? அல்ல வயிறு. 5. தவிடே உயிரிவ் வரிசியிலே, குத்தின் தவிடு தனம் சுகம் தாழ்வு.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 4

குழந்தாய், கவலையுறாதே, இவ்வுலகப் பந்தங்களெல்லாம் நிலையில்லாதனவே. இன்று அவையே சாரமும் பயனும் எனத் தோன்றும். ஆனால், நாளை அவை மறைந்துவிடும். இறைவனுடன் உள்ள தொடர்பே உண்மையானது.

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 8

ஸம்ஸாரம் கனவு போன்றது, விருப்பு வெறுப்புக்கள் நிறைந்தது, அதனடைய காலத்தில் அது உண்மை போல் பிரகாசிக்கிறது. ஆனால் ஞான விழிப்பு ஏற்பட்டதும் மறைந்து போகிறது. அரணிக் கட்டையைக் கடைவது போன்ற ஆத்ம தியானம் எப்பொழுதும் செய்யப்பட்டால் அதினின்று எழும் தீயானது அஞ்ஞனமாகிற விறகை முழுவதும் எரித்துவிடும்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 34  

உத்பவதின நாடி சலனம் ….. மனிதன் பிறந்த உடன் அவனது நாடி ஒரு மணி நேரத்தில் நூற்றிநாற்பது தகுதி சலிக்கும் அல்லது அடிக்கும். பிரதம வருஷ சலனம் ….. பிறந்த நாள் முதல் ஒரு வருஷம் வரையிலும் ஒருமணி நேரத்தில் நாடியானது நூற்றி முப்பது தகுதி அடிக்கும். துவிதிய வருஷ சலனம் ….. பிறந்த காலம் முதல் இரண்டு வருஷம் வரையிலும் 110 – தகுதி அடிக்கும். திருதீய வருஷ சலனம் ….. இரண்டு வருஷம் முதல்…

சுந்தர யோக சிகிச்சை முறை 28

இத் தேவை வயது வந்த மனிதனுக்கு, வயது, வளர்ச்சித் தேவை தொழிலுக்குத் தக்கபடி புஷ்டிப் பொருள்கள், தானியங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். பசிக்கும், பழக்கத்துக்கும், தகுந்தவாறு தான்யாதிகளைக் குறைக்கவும் செய்யலாம். தினம் அளக்கவோ, எடை போடவோ தேவையல்லை, மனதில் நிதானத்தை அறிந்து கொண்டு, ஒரு குடும்பத்தின் ஜன எண்ணிகைக்குகந்தாறு மாற்றிக் கொள்ளவும். நோய் தடுத்தல், உணவுப் பொருள்களை வயிற்றுள் கொட்டுவதால் மட்டும் சித்திக்காது. அவைகளை உண்ணும் விதம், கால திட்டத்தாலும் ஏற்பட வேண்டும். உடலை எரிக்கும். பசி,…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 3

எந்த மனிதனும் எப்போதும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கமுடியாது. எவனும், ஆயுள் முழுவதும் துயரத்திற்கு ஆளாக மாட்டான். ஒவ்வொரு செயலும் முறையே அதனதன் பயனைத் தருகின்றது. அதற்கேற்பச் சந்தர்ப்பங்களையும் ஒருவருக்கு கொணர்கிறது. என் குழந்தை சேற்றையும், புழுதியையும் பூசிக்கொண்டிருந்தால், அதைக் கழுவி என் மடிமீது அமர்த்திக்கொள்வது என் கடமையல்லவா?

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 7

மற்ற சாதனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஞானம் தான் மோக்ஷத்திற்கு நேரான சாதனம் என்பது தெளிவாகின்றது. நெருப்பில்லாமல் எப்படிச் சமையல் இயலாதோ அப்படி ஞானமில்லாமல் மோக்ஷம் இயலாது. தேத்தாங்கொட்டைப் பொடியானது தண்ணீரைச் சுத்தமாக்கிவிட்டுக் கீழே படிந்து விடுவது போல் ஞானமானது அஞ்ஞானத்தால் அழுக்கடைந்த ஜீவனை அப்பியாசத்தால் அழுக்கற்றவனாக்கி விட்டுத் தன்னையும் மறைத்துக் கொள்ளுகிறது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 34

கம்ப ரோக குன்மரோக நாடி லக்ஷணம்  குன்ம ரோகம், கம்பரோகம் இவைகளில் நாடியானது புறாவைப் போல் நடக்கும். விரண பகந்தரரோக நாடி லக்ஷணம் விரணம், பசுந்தரம், இந்த ரோகங்களில் நாடியானது பித்தநாடியைப் போல் நடக்கும். வமன ரோக அபிகாதரோக நாடி லக்ஷணம் வாந்தி செய்தவன், காயத்தை அடைந்தவன் வேகமாய் சஞ்சரிக்கிறவன் இவர்களின் நாடி மத்தித்தயானை, அன்னம், இவைகளின் நடையை ஒத்திருக்கும். சிலேஷ்மத்தில் அதிகமாய் பிரகோபித்திருக்கும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 27

அரிசி,கோதுமை,ராகி தானியங்கள் — சுமார் 10 அவுன்ஸ் வேறு தானியங்கள் — சுமார் 5 அவுன்ஸ் பால் — சுமார் 8 அவுன்ஸ் பருப்புகள் — சுமார் 3 அவுன்ஸ் காய்கள் — சுமார் 6 அவுன்ஸ் கீரைகள் — சுமார் 4 அவுன்ஸ் எண்ணெய்கள் — சுமார் 2 அவுன்ஸ் பழங்கள் — சுமார் 2 அவுன்ஸ் இந்த உணவுச் சேர்மானம் சுமார் 2600 உஷ்ணப் பிரமாணம் கொடுக்கும்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 2

அவதார புருஷர்களும், முனிவர்களும், யோகிகளுங்கூட, துன்பம் அனுபவித்தே தீர வேண்டும். ஏனெனில், சாதாரண மனிதர்கட்கு, தகாததைச் செய்தாலும், தக்கதைச் செய்யாமையாலும் ஏற்படும் பாவங்களை அம்மகான்கள் தாங்களே ஏற்றுக்கொண்டு, உலக நன்மைக்காகத் தம்மையே பலியாக்குகின்றனர்.

ஸ்ரீசங்கரரின் ஞானம். 6

அந்தக்கரணம் உள்ளவரை வெளி விஷயங்கள் புலனாகின்றன. அந்தக்கரணமில்லையேல் வெளி விஷயங்கள் இல்லை. அறிபவன் அறிபவனாக எப்பொழுதும் ( விஷயங்கள் இல்லாத பொழுதும் ) இருக்கவே இருக்கிறான். துவைதத்திற்கு இருப்பில்லை. நான் பரிசுத்தமான ஆத்மா என்று ஒருவன் உணரும் பொழுது தான் உடல் என்ற நினைவு அழிந்து போகிறது. ஒருவன் விரும்பாவிடினும் அந்த ஞானம் அவன் மனிதன் என்ற எண்ணத்திலிருந்து அவனை விடுவித்து விடுகிறது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 33

பிரமேஹ ஆமதோஷ நாடி லக்ஷணம் பிரமேகத்தில் நாடி மிசிரமாயும், கிரந்திரூபமாயும், ஆமதோஷத்தில் விழித்தவன் போலும் நாடி நடக்கும். விஷ தோஷ குன்மரோகவாயு சமாப்தி கால நாடி லக்ஷணம் விஷ தோஷத்தில் நாடியானது ஊர்த்துவ கதியாயும், குன்மரோகத்தில் அதோ முகமாயும், வாயு சமாப்திகாலத்தில் ஊர்த்துவபாகத்தில் எழுந்து குதித்தாப் போலும் நாடி நடக்கும்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள்.1

அஞ்சற்க, மனிதப் பிறவி துன்பங்கள் நிறைந்தது. இறைவன் பெயரை ஒதிக்கொண்டே அவற்றை எல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும். இறைவனே மனித உருக்கொண்டு வந்தாலும் அவனால் மனம், உடல் இவற்றின் காரணமாக உண்டாகும் இன்னல்களினின்றும் தப்பிக்க இயலாது.

சுந்தர யோக சிகிச்சை முறை 26

சர்க்கரை சத்து — அரிசி, கோதுமை தானியங்களில் தேவைக்கு மீறி இருக்கின்றது. கொழுப்பு — எள்ளு கடலை, தேங்காய், எண்ணெய்கள், வெண்ணெய், நெய், பால். விட்டமின் வகையாறா — தானியங்கள், இதன் தவிடுகள், சிறிதளவாய் பருப்புகளில் காய், கீரைகள், பால், முளை கொண்ட கடலைகள். அயம், கால்சியம், உலோகம் — கீரைகள், ரசமுள்ள பழங்கள், பால், சில பருப்புகள், தினம், நாம் தானியங்கள், பருப்புகள், எண்ணெய், நெய், பால், காய் கீரைகள், பழங்கள் சேர்ப்பதால் மேற்கூறிய சத்துக்கள்…

ஸ்ரீசங்கரரின் ஞானம். 5

நான் மாறுபடாதவன், எனக்கு உருவம் இல்லை, குற்றமும் குறைவும் என்னிடமில்லை, நான் அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவதுதான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது. எனக்கு குணமும் இல்லை செயலுமில்லை, நான் என்றுமுள்ளவன், சுதந்திரமானவன், அழியாதவன், நான் அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவதுதான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 32

மலமூத்திர பந்தன விஷ சிகாரோக நாடி லக்ஷணம் ….. மல மூத்திரத்தை அடக்குகிறவனது நாடி அதிவேகமாய் நடக்கும் விஷ சிகாரோகத்தில் தவக்களை நடையைப் போல் நடக்கும். காமிலா மூத்திரகிருச்சிரரோக நாடி லக்ஷணம் ….. காமிலா ரோகம், மூத்திரகிருச்சிரம் இவைகளில் நாடி கரிஷ்டமாய் நடக்கும். வாத ரோக சூலரோக நாடி லக்ஷணம் ….. வாத ரோகம், சூலரோகம், இவைகளில் நாடி வக்கிரமாய் நடக்கும். பித்த ரோக ஆமசூல நாடி லக்ஷணம் ….. பைத்திய ரோகத்தில் நாடி அதிக சுவாலையாயும்,…

சுந்தர யோக சிகிச்சை முறை 25

இவ்வைந்து தன்மைகள் தேவையானால் உணவில் கீழ்க் குறிக்கப்பட்டுள்ள பகுதிகள் சேர வேண்டும். 1. புஷ்டிச் சத்து 2. சர்க்கரைச் சத்து 3. கொழுப்புச் சத்து 4. விட்டமின் சத்து 5. அயன், கால்ஷியம், உலோக சத்துக்கள். இந்த சத்துக்களை கீழ்கண்ட உணவுப் பொருள்களால் பெறலாம். புஷ்டி — அரிசி, கோதுமை, ராகி போன்ற பிரதான தானியங்கள் துவரை, உளுந்து, முதலிய பருப்புகள், நிலக்கடலை, பாதாமி, பால் , முட்டை ( மிருக உணவுகளை இங்கு கூறவில்லை. ஆனால்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 52 

செல்வம் எப்போதும் மனத்தைக் கறைப்படுத்துகிறது. நீங்கள் செல்வத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவரென்றும், செல்வத்தின் மீது உங்களுக்கு எவ்விதப் பற்றும் ஏற்படாதென்றும் நினைக்கலாம். அதை நீங்கள் விரும்பியபோது விட்டு விடலாம். இவ்வாறு எண்ணற்க, ஒரு சிறிய துளை வழியாக அப்பற்று உங்கள் மனத்தினுட் புகுந்து உங்களையறியாமலே கொஞ்சம், கொஞ்சமாகக், கொன்று விடும். ஸ்ரீராமகிருஷ்ணர் பொருளைத் தொடவும் பொறார். எப்பொழுதும் அவருடைய உபதேச மொழிகளை நினைவிருத்திக் கொள்ளுங்கள். உலகத்தில் நீங்கள் காணும் இன்னல்களுக்கு மூல காரணமாவது இப்பொருள்தான். அது உங்கள் மனத்தை வேறிச்சைகளிடத்தும்…

ஸ்ரீசங்கரரின் ஞானம் 4

நான் மாசற்றவன், அசைவற்றவன், அளவில்லாதவன், புனிதமானவன், அழிவற்றவன், சாவில்லாதவன், அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவது தான் ஞானம் என்று புத்திமானகளால் கூறப்படுகிறது. நான் நோயற்றவன், எதிலும் பிடிபடாதவன், துவந்துவங்களுக்கப்பாற்பட்டவன், எங்கும் நிறைந்தவன், அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவது தான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 31

கிரஹனி அக்கினிமாந்த தோஷ நாடி லக்ஷணம் ….. மந்தாக்கினி உடையவனது நாடி க்ஷீணித்து அன்னத்தைப் போல் நடக்கும். அக்கினி மாந்தியம், கிரஹனி ரோகம் இவைகளில் நாடியானது பாதத்தில் அன்னத்தைப் போலும், அஸ்தத்தில் மண்டூகத்தைப் போலவும் நடக்கும். விளம்பிகா ஆமாதிசார மலபேத கிரஹணி தோஷ நாடி லக்ஷணம் ….. நாடியானது மலபேதத்தில் சாந்தமாயும் கிரஹணிரோகம், அதிசாரம் இவைகளில் தேஜோவிஹீனமாயும், விளம்பிகை என்கிற ரோகத்தில் படகைப்போலவும், அமாதிசாரத்தில் தொங்குகிறதுப்போலும் நாடி நடக்கும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 24

பிணியை தடுக்க விரும்பினாலும் சுகமாக வாழ விரும்பினால் உட்கொள்ளும் உணவானது 1. தேவையான உழைப்பு, ஜீவித நடைக்குத் தேவையான உஷ்ணப் பிரமாணத்தைக் கொடுக்க வேண்டும். 2. செத்த அணுக்களை புதுப்பிக்கும் சக்தி கொண்டாதாக வேண்டும். 3. வளரும் வயதானால், வளர்ச்சி பெற பொருள் கொண்டதாக வேண்டும். 4. உட்கருவிகள், கோளங்கள் தம், தம் தொழிலுக்குத் தேவையான பொருள்களைப் பெற உதவுவதாக இருக்க வேண்டும். 5. ஜீவிதத்தில் ஏற்படும் பிழைகளைத் திருத்தி வாழ, சத்துக் கொண்டதாக இருக்க வேண்டும்.…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 51

பணியைப் பெறும் அம்மனிதரைப் பொம்மை போல அடக்கியாள அவன் விரும்புகிறான். பின் உணவருந்தல், உட்காருதல், எழுதுதல் முதலான ஒவ்வொன்றிலும் அவரை ஏவ விரும்புகிறான். பணி செய்யும் விருப்பத்தை அவன் இழக்கிறான். அநேக மகான்கள் தம்மைச் சுற்றிலும் செல்வத்தையும், சிறப்பையும் உண்டாக்கிக் கொள்கிறார்கள். அதனால் பல மனிதர் அவருக்கு வேலையாளாக வரப் பிரியப்படுகின்றனர். அவர்கள் தங்கள் பதவியின் சுகங்களில் மதி மயங்கித் தங்கள் அழிவுக்குத் தாங்களே வழிதேடிக் கொள்கிறார். தக்க மனநிலையுடன் பணி செய்ய விரும்புபவர் எத்தனை பேர்…

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 3

சிறந்ததும் ரகசியமானதுமான ஞானத்தைத் தன்னடக்கமில்லாதவனுக்கு அளிக்கக்கூடாது, வைராக்கியமுடையவனும் குருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனுமான சீடனுக்குத்தான் அளிக்க வேண்டும். ஸமமானதும், சாந்தமானதும், ஸச்சிதானந்த வடிவினதுமான பிரம்மமே நான், அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவதுதான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது.

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 3

சிறந்ததும் ரகசியமானதுமான ஞானத்தைத் தன்னடக்கமில்லாதவனுக்கு அளிக்கக்கூடாது, வைராக்கியமுடையவனும் குருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனுமான சீடனுக்குத்தான் அளிக்க வேண்டும். ஸமமானதும், சாந்தமானதும், ஸச்சிதானந்த வடிவினதுமான பிரம்மமே நான், அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவது தான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது.

கோள்களின் கோலாட்டம் 2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 14

 2 – இல் ராகு, மாந்தி 2 – க்குரியவர் புதன் சாரம் பெற்று சூரியனுடன் சேர்ந்து, சனியின் தொடர்பை பெற்றால், ஒரு கண் பழுதாகும். இல்லற வாழ்க்கை சரிப்படாது. வெறுக்கக்கூடிய வஸ்துக்களை சாப்பிடுவான். 2 – க்கு அதிபதி புதனாகி,9, 3 – க்குரியவர், கேது தொடர்பால் பெற்றால் லட்சக்கணக்கான ரூபாய்களில் புழக்கம் ஏற்படும். நவரத்தினங்கள், தங்கம், வெள்ளி போன்றவைகளில் புழக்கம் காணும். ஜாதகர் அதனால் சுகம் அடைய முடியாது.  2 – க்குரியவர், 4,…

மூதுரை

 அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 30

அன்ன பக்கவ ரத்த விருத்தி ஆமாசீரணகால நாடி லக்ஷணம் ….. அன்னபக்கவா சீரணகாலத்தில் நாடியானது புஷ்டி ரஹிதமாயும் மந்தமாயும் நடக்கும் சரீரத்தில் ரத்தமானது அதிகமாய் இருக்கும் போது நாடியானது கொஞ்சம் உஷ்ணமாய் நடக்கும். ஆமாசீரண யுக்தமான நாடி குருத்துவமுள்ளதாய் நடக்கும். சுக க்ஷ த்து மந்த பலஹீன நாடி லக்ஷணம் ….. சுகமாய் இருப்பவனுடைய நாடி ஸ்திரமாயும், பசியுடன் கூடி இருப்பவனது நாடி சபலமாயும், மந்தாக்கினி உடையவன் பலம் இல்லாதவன் இவர்களின் நாடி அதிமந்மாயும் நடக்கும்.

கோள்களின் கோலாட்டம் 2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 13

 2 – ல் சனி இருந்தாலும், பார்ததாலும், 7 – க்குடையவருடன் கூடினாலும், 2 – க்குரியவர் பலம் பெற்று இவருடன் தொடர்பு பெற்றாலும் இரண்டு குடும்பம் அமையும். பெண்கள் ஆனால் 2 – ஆம் தாரமாக வாழ்க்கைப்படுவர். இவ்வமைப்பு பெற்றவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளால் தீராத மன வருத்தம் காணும்.  2 – ல், 8 – க்குரியவர், இவரை சனியும் 1, 2 – க்குரியவரும் பார்த்தால் துர்வார்த்தை பேசுவோன். குடும்பத்தில் அக்கரை இல்லாதவன், கல்வி…

கோள்களின் கோலாட்டம் 2ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 12

 2 – க்குரியவர், ராகு, 6 – க்குடையவர் தொடர்பு பெற்றாலும் 2, 6, 12 – க்குடையவரின் தொடர்பு பெற்றாலும், 2 – க்கு 8 – ஆமிடத்தில் உள்ள கிரக தசாபுத்திகள் வந்தாலும், கடன்தொல்லை, குடும்பத்தில் அபகீர்த்தி உடன்பிறப்பு வகை விரோதம், குடும்பத்தில் தனக்கஷ்டம், முகம், பல் வகையில் நோய் ஏற்பட்டு அதன் அழகு கெடும். 2 – மிடத்தை பாவர்கள் பார்க்க, 2 – ல் சனி அல்லது ராகு இருக்க, நாயால்…

சுந்தர யோக சிகிச்சை முறை 23

மோட்டார் கார் உழைப்பால் கேடடைந்து கொண்டே போகும். தனக்குத் தானே பொருளை உண்டு, சரி செய்து கொள்ளச் சக்தியற்றது. தன்னை வளர்த்துக் கொள்ளவும் சூழ்ச்சி கொண்டதல்ல, மானிட இயந்திரமான உடலோ கிடைக்கும். பொருளால் வளரவும், தன்னைச் சரி செய்து கொள்ளவும் சக்தி பெற்றது. எண்ணற்ற வித்தியாசங்களில் இது ஒன்றே ஒன்று. எனவே அளிக்கப்படும் உணவுப் பொருளானது, உஷ்ணம், சக்தி கொடுப்பதுமின்றி உடலை வயதுக்கு தகுந்தவாறு வளரச் செய்யவும், வாழ்வில் செத்த அணுக்களுக்குப் பதில் புது அணுக்களை உண்டாக்கவும்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 50

ஒரு சாதுவைக் கண்டால் நீங்கள் அவருக்கு எல்லா மரியாதைகளையும் செய்ய வேண்டும். கோபத்துடன் பதிலுரைப்பதாலோ, அன்றி மதிப்பற்ற மொழிகளாலோ அவருக்கு நீங்கள் அவமரியாதை செய்யக் கூடாது. ஒரு பெரிய மகானுக்குப் பணிவிடை செய்யுங்கால், பின்வரும் முறைகளில் ஒருவன் தவறு செய்யலாம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய பணி செய்யும் உரிமையை ஒருவன் அனுபவிக்கும்போது, அவனுக்கு அகங்காரம் மேலிடுகிறது.

கோள்களின் கோலாட்டம் 2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 11 

 2 – க்குரியவர் கேந்திரம் பெற்று, 4, 5 – க்குரியவர் பலம் பெற்று இவர்களை சுபர் பார்த்தால், கல்வியில் நல்ல தேர்ச்சி உண்டு. மனோ திடம் மிக்கவன். தெய்வீக ஞானம் பெற்றவன். ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவான். இவருக்கு பிறக்கும் குழந்தைகளும் கல்வி அறிவு மிக்கவரே.  2 – ல், 7, 8 – க்குரியவர் இருந்து, 3, 11 – க்குடையவரின் தொடர்பு பெற்று, மேற்படி கிரக தசாபுத்திகள் நடக்கும்போது மிகவும் கஷ்டத்தை தரும். தனசேதம்,…

கோள்களின் கோலாட்டம் 2ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 10

 2 – க்குரியவர் பலம் பெற்று சந்திரன், குரு சுபத்தன்மை பெற்று 4 – க்குரியவர் தொடர்பு பெற்றால், சுக போஜனம் விதவிதமான ஆகாரங்கள் சாப்பிடுவான்.  2 – ல் சுக்கிரன், 5 – ல், 3 – க்குரியவர் மாந்தி சேர்ந்து, 2 – க்குடையவர் தொடர்பு பெற்றால் கல்வியில் தேர்ச்சி பெற்றவன். சாஸ்திரங்களை திறம்பட பேசுவான். வாக்கில் மென்மையும் வசீகர சக்தியும் இருக்கும். வம்ச விருத்தியில் பாதிப்பு காணும். ரத்த பந்த வகையில் பிரேத…

ஸ்ரீசங்கரரின் ஞானம். 2

தன்னாலோ, பிறராலோ ஆத்மாவைக் கொள்ளவும் முடியாது. தள்ளவும் முடியாது. அதுவும் எதையும் கொள்ளுவதுமில்லை, தள்ளுவதுமில்லை. இதுதான் உண்மையான ஞானம். வேதங்களிலும் தேவதைகளிடமும் உறையும் உன்னதமான ரகசியம் ஞானமே. அதுதான் பரிசுத்தமளிப்பவற்றுள் தலை சிறந்தது.

கொஞ்சம் சிரிக்க

ஆசிரியர்:   உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம்! அம்மா:   அவனுக்கு “பொய் ” சொல்லவே தெரியாது சார்.  தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை. மகன்: நீங்க தானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க. எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க? என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார் இந்நேரம் விழுந்திருக்குமே சார்? இன்னும் விழுந்திருக்காது, சார் அது அஞ்சு நிமிஷம்…

கோள்களின் கோலாட்டம் 2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 9

 2 – க்குடையவர் ஆட்சி பெற்று 9, 4 – க்குரியவர் தொடர்பு பெற்ற புதன் பலம் பெற்றால் கல்வியில் விருத்தி உண்டு. வாக்கு, நாணயம் தவறாதவன். தன விருத்தி உண்டு. வெளிநாடு செல்லும் யோகம் பல மொழிகளை அறிவான். 2 – ல் 2, 4, 5 – க்குரியவர் இருந்து சுபத்தன்மை பெற்ற கிரகங்களால் பார்க்கப்பட்டு இருப்பின், மேற்படி கிரகதிசாபுத்தி காலங்களில் தன விருத்தி, வீடு, வாகன சேர்க்கை சுபச்செலவுகள் நல்ல வாய்ப்புகள் கிட்டும்.

கோள்களின் கோலாட்டம் 2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8

 2 – ல் 8 – க்குரியவர் சுபர் பார்வை பெற்றால் உயில், மரண சாசன மூலம் சொத்து சேர்க்கை வரும் மனைவியால் சொத்து சேர்க்கை ஏற்படும். கிருத்திகை, மூலம் இவற்றில் கேது இருந்து, ரேவதி, பரணி, ஆயில்யம், பூசம், சித்திரை, சுவாதியில் சனி இருந்து, புனர்பூசம், திருவாதிரையில் சுக்கிரன் இருந்து, இவர்கள், 2, 6, 8 – ல் இருந்தால், கண் பங்கமடையும். குடும்பத்தொல்லைகள் கணக்கில் அடங்கா.

நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது

கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

குற்றமில்லாத மனசுதான் 4

இப்ப புதுசா வந்துருக்கற விதி என்னன்னா யார் உரத்து பேசறாங்களோ அவங்க சத்தியம் பேசறாங்க அப்படிங்கறது தான் சத்தியத்துக்கே இது தான் கதின்னா உண்மைக்கு என்னன்னு சொல்லறது அடுத்தது குற்றம் குற்றம் அப்படின்னாலே ரெண்டு பேரோ அதுக்கு அதிகமாகவோ நபர்கள் சம்பந்தப்பட்டு இருக்கணும் சம்பந்தப்பட்டவங்க ஒன்னும் பிரச்னை இல்லை அப்படின்னு சொல்லிட்டா குற்றம் எங்கிருந்து வரும் உதாரணம் லஞ்சம்

கோள்களின் கோலாட்டம் 2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7

4, 8 – ல் சனி இருந்து சுப ஆதிபத்தியம் பெற்று குருவை பார்த்தால் வம்பு, வழக்கு, பூர்வீக சொத்துக்களால் மரணத்தின் மூலம் அதிர்ஷ்டம் ஏற்படும். 1, 4, 7, 10 – ல் சனி சந்திரனிருந்தால் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.  2, 5, 9 – க்குரியவர் 10, 12, 11 – லிருந்தால் வாலிபத்தில் சொற்ப தனயோகம் 7, 8, 9 – லிருந்தால் 25 முதல் 40 வயதுக்குள் யோகம். 1, 2, 3…

குற்றமில்லாத மனசுதான் 3

அடிப்படையே மாறின பின்னாலே சரியாய் இருக்கோம் அப்படின்னு எப்படி சொல்லறது அதனால நாமலே ஒரு முடிவுக்கு வந்து இது தான் சத்தியம் அப்படின்னு முடிவு பண்ணிட்டோம் அந்த முடிவு என்னான்னா அவனவன் மனசுக்கு எது சரின்னு தோணுதோ அது தான் சத்தியம் அப்படிங்கறது தான் இதுல பாத்தா வேதம் சொன்னபடி இருக்கணும் அப்படிங்கற அவசியம் இல்ல நீ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் இதுனால என்னாச்சுன்னா இந்த காலத்துல எல்லாரும் சத்தியம் தான் பேசறாங்க எல்லாருமே உரத்துதான் பேசறாங்க…

கோள்களின் கோலாட்டம் -2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6

 சிம்மத்தில் சூரியன் இருந்து, அல்லது சூரியனோடு சுக்கிரன் செவ்வாய், சனி தொடர்பு பெற்றால் வலது கண் பழுதடையும், சிம்மத்தில் சந்திரன் இருந்து அல்லது சூரியன், சுக்கிரன், செவ்வாய், சனி தொடர்பு பெற்றால், இடது கண் பழுதடையும். கண் ஆபரேசன் செய்ய, புதன், வியாழன், வெள்ளிக்கிழமை நலம். இக்கிழமை காலங்களில் நேத்திரம், ஜீவன் இருக்க வேண்டும். 2 – க்குரியவர்க்கு, குருவிற்கு, 3,10, 11 – ல் சூரியன் ஆட்சி, உச்சம் பெற்றால், தனத்திற்குப் பஞ்சமே ஏற்படாது. அதிர்ஷ்ட…

குற்றமில்லாத மனசுதான் 2

சத்தியம் அப்படிங்கறது முன்னோர்கள் சொன்ன படி பாத்தா கடவுளால் அருளப்பட்ட அல்லது ரிஷிகளால் கிரகிக்கப்பட்ட விஷயங்கள் அதாவது வேதங்கள் சத்தியம் அப்படின்னு சொல்லறாங்க அப்ப வேதத்தின் படி வாழ்தலே சத்தியம் அப்படின்னு ஆகுது நாம இப்ப வேதப்படி வாழறோமா அப்படின்னு அவங்க அவங்கலே மனச தொட்டு கேட்டு பாத்துக்க வேண்டியது அப்படி கேட்டு பாத்தா இல்லை அப்படின்னு தான் பதில் வரும் நம்மனால அதை ஒத்துக்க முடியாது ஏன்னா நாம சத்தியம் தான் பேசறோம் அப்படிங்கற மனோநிலையில்…

கோள்களின் கோலாட்டம் -2 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5

2, 6, 8, 12 – ல் சூரியன், சந்திரன் சேர்க்கை பெற்று, சனி, செவ்வாயின் தொடர்பை பெற்றாலும், 2- க்குரியவர் நீச்ச அஸ்தமனம் பெற்று 2 லிருந்து செவ்வாய் லக்கினத்திற்கோ சுக்கிரனுக்கோ 5 – ல் ராகுவுடன் சேர்ந்து, சூரியன், சனி தொடர்பை பெற்றாலும், 2 – க்குரியவர் செவ்வாய், கேது, சூரியன் சேர்க்கை பெற்று சனியின் தொடர்பை பெற்றாலும் கண் பார்வை கெடலாம். இவர்கள் திசாபுத்தி காலத்தில் யாருடைய ஆதரவுமின்றி, குடும்பத்தை விட்டு ஒதுங்க…

குற்றமில்லாத மனசுதான் 1

குற்றமில்லாத மனசு தான் சத்தியத்தை சத்தமாக பேசும். உண்மையை உரத்துப் பேசும். இந்த வார்த்தைகள் என்ன சொல்ல வருது இதை பத்தி நாம ஒரு முடிவுக்கு வரணும் அப்படின்னா நமக்கு சத்தியம் அப்படின்னா என்ன உண்மை அப்படின்னா என்ன குற்றம் அப்படின்னா என்னங்கிறது நமக்கு தெளிவா தெரிஞ்சிருக்கணும். நாம வச்சிருக்கிற அகராதியில இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் நாம வச்சிருக்கோம் அப்படின்னு நமக்கு தெளிவா தெரிஞ்சாதான் நமக்குள்ள ஒரு முடிவுக்கு வரமுடியும் சரி இப்ப யோசிப்போம்

கோள்களின் கோலாட்டம் -2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4

 2 – க்குரியவர், பலகீனம் அடைந்து சுக்கிரனோடு சேர்ந்து 6, 8, 12 – லிருப்பினும், 2 – க்குரியவரோடு சூரியன், சுக்கிரன் சேர்ந்து சனி, செவ்வாயின் தொடர்பை பெற்று 6, 8, 12 – லிருப்பினும் பிறவியிலேயே கண் ஊனமாகும். அல்லது மத்திம வயதில் வரலாம். இவர் தசா புத்தி காலத்தில் தன, குடும்ப நிலை கெட்டுவிடும்.  2- க்குரியவர், சனி, சுக்கிரன் சேர்க்கை பெற்று 2, 6, 8, 12 – ல் இருப்பின்,…

கோள்களின் கோலாட்டம் -2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 3

2 – ல் குரு சுபர் சேர்க்கை பெற்று இருப்பினும், புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று, பாவர் பார்வை இல்லாமலிருப்பினும், 2 – ல் சுக்கிரன் வர்க்காதிபதியாகி வலுத்தாலும், 2 – க்குரியவர் கேந்திர திரிகோணங்களிலிருந்தாலும், மேடை பேச்சில் வல்லவர், எழுத்து துறையில் புகழ் பெற்றவர். நாவன்மை மிக்கவர். தன் பேச்சால், எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் பெற்றவர். 2 – க்குரியவர், சனியின் தொடர்பு பெற்றிருப்பினும், 2 – ல் சூரியன், சனி இருந்து, செவ்வாயின்…

ஸ்ரீசங்கரரின் ஞானம். 1

எப்படி ஒளியின் உதவியில்லாமல் ஒரு பொருள் ஒரு பொழுதும் பார்க்கப்படுவதில்லையோ, அப்படி மனதில் ஆராய்ச்சியில்லாமல் எதனாலும் ஞானம் அடையப்படுவதில்லை. அஞ்ஞானத்தால் தோன்றிய அனைத்தும் ஞானம் உதித்தவுடன் மறைந்து போகின்றது. கண்ணாடி போன்ற மனதானது பரிசுத்தமானால் அதில் ஞானம் தானே விளங்கும். ஆகையால் மனதைப் பரிசுத்தமாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 49

கீழ் கூறப்பட்டுள்ள மூன்று விஷயங்களில் நீங்கள் மிக்க எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். முதலாவது, ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ள வீடு. எந்நேரத்திலும் ஆறு பெருக்கெடுத்து,      உங்கள் வீட்டை அரித்துச்சென்று விடலாம். இரண்டாவது பாம்பு, ஒரு பாம்பைக் காணும்போது நீங்கள் மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஏனெனில், அது எப்பொழுது உங்களை அணுகித் தீண்டும் என்பதை உங்களால் அறிய முடியாது. மூன்றாமவர் சாது, அவரது ஒரு எண்ணமோ அல்லது வார்த்தையோ ஒரு இல்லறத்தானை எப்படிப் பாதிக்கும் என்பதை…

கோள்களின் கோலாட்டம் -2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்.

2 – ல், 9, 11 – க்குரியவர் பலம் பெற்றிருப்பினும், 1- க்குரியவர் 2- ஆமிடத்தை, பார்த்து, 1 – க்குரிய வரை குரு, 5, 9 – ஆம் பார்வையால் பார்த்து இருக்க 2 – க்குரியவர், 2, 11 – ல் பாக்கியாதிபதியோடு கூட குறை இல்லாத தனம் உள்ளவன். அடுத்தவர்களுடைய தனம் இவர்களிடம் விளையாடும், இறப்பு வரையில் தரித்திரம் என்பதை பார்க்காதவன். மேற்படி கிரக தசாபுத்தி காலங்களில், எதிர்பாராத தனம் வந்து…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள். 1

 2 – க்குடையோர், நீச்ச, சத்துருஸ்தானங்களிலிருந்து நீச்ச, சத்துரு அம்சத்தை அடைந்தால், அல்லது நீச்ச கிரகத்தால் பார்க்கப்பட்டால் தனக்கு இல்லாமையால், அடுத்தவரிடம் வாங்கி உண்பான். அடுத்தவர்களை நீச்ச வழியில் உடன்டச் செய்து, அவ்வகை வருமானங்களை வைத்து ஜீவிப்பான்.  2 – க்குடையவர் 3, 6, 8, 12 – ல் இருந்து ராகுவின் தொடர்ரபை பெற்றாலும், 2- க்குரியவர் சனியாகி நீச்சம் பெற்று, செவ்வாய் சேர்க்கை இருப்பினும் மேற்கண்ட பலனே உண்டாகும்

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 29

பூதசுர ஆஹிகசுர விஷசுர நாடி லக்ஷணம் …. . பூதாசுரத்தில் நாடி அதிவேகமாய் நடக்கும். மேலும், முறைகாச்சல், விஷசுரம், இவைகளில் நாடி கொஞ்ச நேரம் வேகமாயும் நின்றும் நடக்கும். துவாஹிக திரியாஹி கசாதுர்தாஹிக சுர நாடி …… இரண்டு நாள் மூன்று நாள், நாலு நாளுக்கொரு முறை வரும் சுரங்களுக்கு நாடியானது அதி உஷ்ணமாய் கொளவி நடை நடக்கும். குரோத காம சுர நாடி லக்ஷணம் ….. குரோத சுரத்தில் நாடி விருத்தமாயும், காமசுரத்தில் நாடியானது ஒன்றுக்…

சுந்தர யோக சிகிச்சை முறை 22

ஆண்டவன் படைத்த இயந்திரமான உடலும், சீர்கெட்ட உணவை, குறைவுபட்ட உணவைப் பெற்றால், சரியாக வேலை செய்யாமல் சக்தி குன்றி, நோய் வந்து, வேலை நிறுத்தம் செய்யும். இந்த உதாரணம் உணவின் அவசியத்தையும் அது சீரோங்கி இருக்க வேண்டியதையும் விளக்குகிறது. மோட்டார் கார், மனிதன் உண்டாக்கிய இயந்திரம், மானிட உடலோ, ஆண்டவன், ஜீவனுக்கு சுகித்து வாழ்ந்து அகண்ட நித்திய சுகமான தன்னுடன் முடிவில் கலக்க, கொடுக்கப்பட்ட ஒப்பற்ற இயந்திரமாகும். இவ்விரண்டுக்கும், சக்தி சூழ்ச்சி உழைப்புகளில், சொல்ல முடியாத வித்தியாசங்கள்…

சுந்தர யோக சிகிச்சை முறை 21

ஆண்டவன் படைத்த இயந்திரமே மானிடஉடல். இந்த இயந்திரம் சுழல, வேலை செய்ய இதற்குப் பெட்ரோல் எண்ணெய் வேண்டும். இந்த பெட்ரோல் எண்ணெய் தான் நாம் தேடி உட்கொள்ளும் உணவென்பது. உழைப்பின் குணம், தீவிரங்களுக்குத் தக்கபடி உணவின் விதம். பிரமாணம் மாறுபாட்டைகிறது. எப்படி மோட்டார் காரில், பெட்ரோல் எண்ணெய் ஆவியாக மாறி தீப்பொறியால் வெடித்து, சூட்டு சக்தியைக் கிளப்பி உழைக்கிறதோ, அதே மாதிரி மானிட இயந்திரமான உடலில் உட்கொள்ளும் உணவு சூட்டுச் சக்தியாக மாறி, உயிரோங்க உழைக்கச் செய்கிறது.…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 48

எத்தகைய சிற்றறிவை மனிதன் பெற்றிருக்கிறான்? அவனுக்கு வேண்டுவது ஒன்றாயிருக்க, அவன் கேட்பது வேரொன்றாயிருகிறது பல சந்தர்ப்பங்களில் அவன் பிள்ளையார் பிடிக்கத் தொடங்குகிறான். அது குரங்காய் முடிகிறது. ஆகவே நம் விருப்பங்கள் எல்லாவற்றையும் இறைவனது பாதங்களில் ஒப்படைத்தலே சாலச் சிறந்தது. நமக்கு எவை மிக நல்லவையோ அவற்றையே இறைவன் நமக்கு அருள்வான். ஆனால், ஒருவன் பக்தி பெருகுவதற்கும் பற்று அற்றுப் போவதற்கும் பிரார்த்திக்கலாம். அவை மேற் கூறிய இச்சைகளின் பாற்படா.

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 13

நான் மாறுபடாதவன், உருவில்லாதவன், நான் எல்லா இந்திரியங்களிலும் எல்லா இடத்திலும் வியாபித்திருப்பதால் எனக்குப் பற்றின்மை என்ப‍தில்லை, முக்கியுமில்லை, பந்தமுமில்லை, அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான். சங்கரரின் பஜ கோவிந்தம் இத்துடன் நிறைவு அடைகிறது 

மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்தை மட்டுமே வழிபடு தெய்வமாகக் கொள்ள வேண்டும் என்பதற்கு என்ன காரணம்?

இறைவன் பிறப்பு இறப்பு இல்லாதவன்; உயிர்கள் அனைத்தும் பிறப்புக்கு உட்படுவன. பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு வழிபடுகின்ற நாம், பிறப்பு இறப்புக்கு உட்படாத இறைவனின் வடிவங்களையே வழிபடவேண்டும். அவ்வடிவங்களில் மட்டுமே இறைவன் முனைந்து நின்று நமக்கு அருள் பாலிக்கிறான். இவற்றைத்தவிர, பிற தெய்வ வடிவங்கள் வழிபாட்டுக்கு உரியனவல்ல. இதற்குக் காரணம், அவ்வடிவங்களை உடைய தெய்வங்கள் உயிர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள், ஒவ்வொரு பிறப்பிலும் துன்பப்படுகிறார்கள்; அடுத்துப் பிறப்பதற்குரிய வினைகளைச் செய்கிறார்கள். எனவே அத்தெய்வங்களால் நமக்கு அருளை…

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 12

புண்ணியமும், பாவமுமில்லை, இன்பமும், துன்பமும் இல்லை, மந்திரங்களும், தீர்த்தங்களும், வேதங்களும், யாகங்களுமில்லை, நான் புசிப்பவனன்று, புசிக்கப்படுவதுமன்று, புசிக்கும் செயலுமன்று, அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான் சிவமே நான். எனக்குச் சாவில்லை, பயமில்லை, ஜாதிபேதமில்லை, எனக்குத் தாயில்லை, தந்தையில்லை, பிறப்புமில்லை, எனக்குச் சுற்றமுமில்லை, நட்புமில்லை, எனக்கு குருவுமில்லை, சீடனுமில்லை, அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான்.

வாழ்க்கையில் நிர்பந்தம்

யாரோடும், எதனோடும் ஒட்டாத தன்மையோடு இருப்பவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் நாம உணவுக்கும், உடைக்கும், வம்ச விருத்திக்கும், அடுத்தவங்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் இருக்கும் போது தனிப்பட்ட அப்படிங்கற விஷயமே இல்லாதா போயிருது நம்முடைய அந்தரங்கத்துடன் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒரு ஒரு சூழ்நிலையில் நாம் அடுத்தவரை சார்ந்து இருத்தல் என்பது நிர்பந்தம் இதை புரிந்து கொண்டால் வீண் வார்த்தைகளால் அடுத்தவரை காயப்படுத்தும் பழக்கம் நம்மை விட்டு சென்றுவிடும் அது சென்று விட்டாலே சுற்றம்…

கேள்விகேட்க ஆரம்பிச்சா

கேள்விகேட்க ஆரம்பிச்சா யார் கூடையும் ஒத்துப்போகமுடியாது. ஏன்னா கேள்வி கேக்குறது யாருக்கும் பிடிக்காது  அதனால மனசுக்குள்ள ஒரு கோபம் துளிர் விட்டு வளர முயற்சி பண்ணிட்டே இருக்கும் அதனாலேயே யார் கூடயும் ஒத்து போக முடியாது தூக்கம் வராது, புத்தி லோ, லோன்னு அலையும், சகலமும் தப்புன்னு படும். அனுபவம் நிறைய சொல்லித்தரும். உன் அனுபவம் உனக்குத் தெளிவைத் தரும். அப்ப உன் கோபம் என்னாச்சு அப்படின்னு பாரு உனக்கே சிரிப்பா வரும் இதுக்கா நாம கோபப்பட்டோம்…

வாழ்க்கையை நிர்ணயிப்பது

வாழ்க்கையை நிர்ணயிப்பது நமது திறமையோ, நமது அறிவோ, நமது கடமையோ அல்ல. அதை நிர்ணயிப்பது நமக்கு மீறிய சக்தி. அந்த சக்தி விரும்பும் பாதையில் வாழ்வதே நமது கடமை. விதியின் புயலில் மனிதர்கள் பலபடி எடுத்து வீசப்படுகிறார்கள். யார், யார் எங்கெங்கு மோதிக்கொள்கிறார்களோ, யார் கண்டது? இயற்கையின் விசித்திரத்தை நாம் அறிய முடியுமா? யாரே அறிவர்.

மன போராட்டம் தவிர்க்க

மனிதன் என்றுமே பணத்திற்க்கு அடிமையாக கூடாது. அப்படி அடிமையாகி விட்டால் மனபோராட்டத்தை தவிர்க்க முடியாது. மன போராட்டம் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் பணத்திற்க்கு மட்டுமல்ல இன்னும் பல விஷயங்களுக்கு அதாவது பெரியவர்கள் சொன்ன புலன் விஷயங்களுக்கு அடிமையாகக் கூடாது

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 47

சாவு எப்போது நம்மை அணுகும் என்பது நிச்சயமில்லை யாதலால், ஒருவன் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் தூய எண்ணங்களைச் செயலாக்கிவிட வேண்டும். அதற்காக, ஒரு குறிப்பிட்ட காலத்தை எதிர்பார்த்திருக்கக்கூடாது. சாவுக்கு காலப் பாகுபாடு கிடையாது. பலவற்றின் கலப்பான இத்தத்துவ ஆராய்ச்சியை, இந்த வறட்டு வாதத்தை விட்டு விடுங்கள். வாதத்தின் மூலம் இறைவனை அறியும் திறமை பெற்றவர் யார்?

அணு ஆயுதங்கள் 2

இந்த இடத்தில் வளர்ச்சி என்பது எதை அடிப்படையாய் கொண்டிருக்கிறது என்று சிந்தித்தால் வரும் பதில் அழிவு என்பதை தவிர வேறு என்ன பதில் வர முடியும். இப்போது, சிந்தித்து பார்த்தால் தோன்றுவது அணுவை பிளந்தது சாதனையா இல்லை, வேதனையா அவர் அவர் மனசாட்சிபடி முடிவு செய்து கொள்ளுங்கள். திருப்தியான நிலையை விட்டு வெற்றியை நோக்கி நகர்ந்த மனிதன் தனக்குத்தானே மிக பெரிய, ஈடு செய்ய முடியாத தோல்வியில் அல்லவா தடம் பதித்து விட்டான். இந்த இடத்தில் மூட…

அணு ஆயுதங்கள் 1

ஸ்வீடன் நாட்டின் ஆராய்ச்சி நிறுவனம் S.I.PRT – அதன் ஆண்டு புத்தகத்தில் 2021 எனும் தலைப்பில் உலகில் அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகளை பட்டியல் இட்டுள்ளது இந்த புத்தகத்தின் படி 9 நாடுகள் மட்டுமே உலகில் அணு ஆயுதங்களை வைத்துள்ளது. அந்த நாடுகள் அமெரிக்கா – 5,800, ரஷ்யா – 6375, பிரான்ஸ் – 290, இங்கிலாந்து 225, இஸ்ரேல் – 90 வட கொரியா 40 லிருந்து 50. இந்த புத்தக ஆய்வின் படி உலகெங்கும்…

சுந்தர யோக சிகிச்சை முறை 20

உணவு ஒழுக்கம் உழைப்பு. ஒரு இயந்திரம் வேலை செய்ய அது நன்றாக அமைக்கப்பட்டிருந்தால் மட்டும் போதாது. மோட்டார் காரை எடுத்துக் கொள்ளவும், இயந்திர சாலையிலிருந்து எல்லாம் உண்டாக்கப்பட்டு தொழில் புரியத்தயராகச் சேர்க்கப்பட்டு, அமைக்கப்பட்டு வெளிவருகின்றது. உடனே தானாக, ஏறி உட்கார்ந்ததும் ஓட அரம்பித்து விடாது. இந்த மோட்டார் வேலை செய்ய, அதற்கு உயிரளிக்கும் இஞ்சின் ( சூட்டு இயந்திரம் ) சுழல பெட்ரோல், எண்ணெய் வேண்டும். இந்த பெட்ரோல் எண்ணெய் தான் இதற்கு உணவு. இந்த உணவிலிருந்து…

கற்றுக்கொள்.

கிடைத்ததை அனுபவிக்க கற்றுக்கொள்.. கிடைக்காததை ரசிக்க கற்றுக்கொள்.. வாழ்க்கை துன்பம் இல்லாமல் நகரும்!!  அதாவது எட்டாத பழத்துக்கு கொட்டாவி விட்டு ஏங்காதே அப்படின்னு அர்த்தம் 

சுந்தர யோக சிகிச்சை முறை 19

உணவைப்பற்றி ” ஆரோக்கிய உணவு ” நூல் வெகு விரிவாக விஞ்ஞான முறையில் எழுதப்பட்டிருக்கின்றது. ஒழுக்கத்தைப் பற்றி ‘ சாந்தி யோகம் ‘ என்ற நூல் சிறிது தனிப்பட்ட முறையில் விளக்குகின்றது. உழைப்பு எத்தகையது என்று ” ஆனந்த ரகசியம் ” வலிவும், வனப்பும் ” என்ற நூல்களில் அறிவைத் தீட்டும் முறையில் காணவும். ஆனால் நோய் தடுத்தல் என்ற தொகுதிக்கு விஞ்ஞான அவசிய விளக்கமாக, உணவு ஒழுக்கம், உழைப்பு என்பவைகளைப் பற்றி இங்க திரட்டி சுருக்கமாக…

வாழ்க்கையில் நிஜத்தைச் சந்திக்க

வாழ்க்கையில் நிஜத்தைச் சந்திக்க எப்போதும் தயாராக இருக்கவேண்டும். நிஜங்கள் தவிர்க்க முடியாதவை, வாழ்க்கையை விட்டு விலக்க முடியாதவை, விலக்க முடியாதவைகளோடு கை குலுக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

எதிர்பார்ப்புகள்

எதிர்பார்ப்புகள் எப்போதும் நம்மை ஏமாற்றாது.. நாம் எவரிடம் எதிர்பார்க்க வேண்டும் என்பதில் தான் ஏமாந்து விடுகிறோம்! தாய் தந்தையிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பதும் குழந்தைகளிடம் பெற்றோர் எதிர்பார்ப்பதும் கணவன் மனைவியிடம் எதிர்பார்ப்பதும் மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பதும் மக்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பதும் பக்தன் கடவுளிடம் எதிர்பார்ப்பதும் கூட பல சமயங்களில் ஏமாற்றத்தை தந்துவிடுகிறதே இப்படி இருக்கும் போது யாரிடம் தான் எதிர்பார்ப்பது

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 28

வாத பித்த, வாத சிலேஷ்ம நாடி லக்ஷணம் வாத பித்த தோஷத்தில் நாடியானது சாஞ்சலியமாயும், பிரகாசமாயும், ஸ்தூலமாயும் கடினமாயும் நடக்கும். சிலேஷ்ம வாத ரோகத்தில் நாடியானது உஷ்ணமாயும் மந்தமாயும் நடக்கும். சிலேஷ்ம தோஷ வாத தோஷ உஷ்ணவாத தோஷ நாடி லக்ஷணம் ….. சிலேஷ்ம தோஷத்திலும் பிரபலமான வாத தோஷத்தில் நாடியானது தீக்ஷணமாயும், உஷ்ணமாயும் நடக்கும். உஷ்ணவாதத்தில் நாடி பிண்டத்தைப் போல் பௌத்தாகாரமாய் நடக்கும். வாத நாடி ….. வாதத்தில் நாடி சூக்ஷ்மமாயும், ஸ்திரமாயும், மந்தமாயும் நடக்கும்.…

சுந்தர யோக சிகிச்சை முறை 18

பிராணாவை உடலைமைப்புகளே, தமக்குத் தாமே சரி செய்து கொண்டு வாழ்க்கையை நடத்துவதற்கு அவசியமாக என்ன வேண்டும்? உணவு, ஒழுக்கம், உழைப்பு இம்மூன்றும் இயற்கைக்கு இணங்கி ஏற்பட்டு நடந்தால், பிராணா சமாதானத்தில் நின்று சரிசெய்யப்பட்டு, பிணி தடுக்கப்படுகின்றது. நோய் வந்தபின் சிகிச்சையைத் தேடுவதைக் காட்டிலும், தேடியும் சிகிச்சை கிட்டாமல், இறப்பதைக் காட்டிலும், நோய் வராமல் தடுத்துக் கொள்ளுதலே மேலானது. பகுத்தறிவு கொண்ட மனிதனுக்கு ஏற்றதானது, சுலபமானது, சுகத்தைப்பற்றிச் சுகிக்தது வாழ இயல்பானது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 46

நீ ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லும் போது உன்னைச் சுற்றிலுமுள்ள பொருள்களை உற்று நோக்கி அறிந்து கொள். நீ வாழும் இடத்தில் என்ன கிடைக்கின்றது எனபதைப் பற்றியும் நீ அறிந்து கொள். ஆனால், உன் வாயை மட்டும் திறவாதே. உங்களது அன்னைக்குப் பணி செய்வதாகச் சாக்குக்கூறி உலகப் பற்றிற்கு உங்களை ஆளாக்கிக் கொள்ளாதீர்கள்.

மனித முன்னேற்றத்திற்கு தேவை

மனித முன்னேற்றத்திற்கு தேவை அதிர்ஷ்டம் தான். ஆனால், அது ஏன் வருகிறது? எவரால் வருகிறது? எப்படி வருகிறது? எப்படி மாறுகிறது? என்பது மட்டும் மனித அறிவுக்கும் புலன்களுக்கும், அப்பாற்பட்டதாய் இருக்கிறது. உதாரணமாக பார்த்தால் அன்றய லிங்கன் முதல் இன்றய நரேந்திர மோடி வரை

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 11

நான் பிராணன் எனப்பட்டவனன்று, நான் ஐந்து வாயுக்களன்று, ஏழு தாதுக்களுமன்று, ஐந்து கோசங்களுமன்று, வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் எனப்படுவையுமன்று, அறிவும், ஆனந்தமும் உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான். எனக்கு விருப்பும், வெறுப்புமில்லை, பேராசையும் மதிமயக்கமும் இல்லை, பேராசையும் மதிமயக்கமுமில்லை, கொழுப்பும் மாச்சரிய பாவனையுமில்லை, அறமும், பொருளும், இன்பமும், வீடும் இல்லை. அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான்

வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள்

வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் ஏன் வருகின்றன? எப்படி வருகின்றன? எதற்க்காக வருகின்றன? எப்போது வருகின்றன? யாருடன் நம்மை சேர்க்கின்றன? யாரிடமிருந்து நம்மை பிரிக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள முடிவதில்லை. ஏன்,

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 27

இயற்கை நாடி லக்ஷணம் ….. நாடியானது அதிகாலையில் கோமளமாயும், பகலில் உஷ்ணமாயும் சாயங்காலம் வேகமாயும் இரவில் மந்தமாயும் நடக்கும். அதிக தாப சுர நாடி லக்ஷணம் …. அதிக தாபமுடன் கலந்த சுர ரோகிக்கு மிகவும் வியர்வையும் நாடியானது சந்நிபாத நாடியைப்போலும் நடக்கும். சுர நாடி ….. சுரத்தில் நாடியானது உஷ்ணமாயும், வேகமாயும் நடக்கும்.சுரம், வாத ரோகம், சையோக நாடி லக்ஷணம் ….. சுரம், வாத ரோகம் இவைகளில் நாடி குறுக்கியும் நடக்கும். மேலும் ஸ்திரி சம்போகம்…

பயம் வேறு, பக்தி வேறு

பயம் வேறு, பக்தி வேறு தான். பயம் மனதின் உளைச்சலில் இருந்து முளைக்கிறது. பக்தி அன்பின் ஆழத்திலிருந்து முளைக்கிறது. இரண்டும் இணைவது கஷ்டம் என்றாலும், அப்படி ஏற்படவே செய்கிறது இவ்வுலகத்தில்.

சுந்தர யோக சிகிச்சை முறை 17

சாதாரண வைத்தியம் சுற்று வழியில் பிராணாவை சமாதானம் செய்ய முயலுகின்றது. நேர் வழியில் பிராணாவைச் சரி செய்வதே யோக சிகிச்சை. இந்த விளக்கங்களிலிருந்து பிராணாவை சமாதான நிலையில் வைத்திருப்பதே பிணி தடுத்தலுக்கு வழி என்ற முடிவுக்கு நாம் வரலாம். பிராணா சூக்ஷமமாயிற்‍றே! நாம் அதை எவ்வாறு பார்த்து அறிந்து சரி செய்து கொள்ள முடியும்? குழம்பு கூட்டானால் குறைந்து சேர்த்து சரி செய்து கொள்ளலாம். கைகளுக்கு எட்டாத, புலன்களுக்கு விளங்காததாயிற்றே எனலாம். இதைப்பற்றி நாம் கவலை கொள்ளத்…

பெண்களுக்கு

பெண்களுக்கு இயற்கை அளிக்கும் பாதுகாப்புகளில், அச்சமும் ஒன்று. இந்த இயற்கை தந்த பாதுகாப்பை செயற்கை தனமான நாகரிகத்தை முன்னிட்டு பெண்கள் உடைத்துக்கொண்டால் எத்தனை,எத்தனையோ விபரீதங்கள் ஏற்படும்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 45

ஒருவன் வார்த்தையாலும் பிறரைத் துன்புறுத்தக்கூடாது. அனாவசியமாக ஒருவன் பிறருக்குப் பிரியமாயிராத மெய்யை உரைத்தலாகாது. கடுமொழிகள் பேசுவதால், ஒருவனது சுபாவமே கொடுமையாக மாறுகிறது. நாவை அடக்கும் சக்தி ஒருவனுக்கு இல்லாது போயின், அவன் தனது மனநுண்மையை இழக்கிறான். ஒரு நொண்டியைப் பார்த்து, அவன் எப்படி முடமானான் என்று வினவக் கூடாது என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவது வழக்கம்.

இக்கட்டான நி‍லையை சமாளிக்க

அபாயத்தால் மனிதன் மனம் துணிவு பெற வேண்டும். துணிவினால் தான் இக்கட்டான நி‍லையை சமாளிக்கமுடியும். அழையா வீட்டில் நுழைவதுதான் நட்பின் உயர்ந்த லட்சணம்

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 10

உன்னுடைய குருவின் திருவடித்தாமரைகளைப் போற்றி உலகத்திற் கடிமையாயிருப்பதினின்று உன்னை விடுவித்துக்கொள். இந்திரியங்களையும், மனதையும் அடக்கி பகவானை உன் இதயத்தில் பார். நான் மனதும், புத்தியும், சித்தமும், அஹங்காரமும் அன்று, காதும், கண்ணும் , நாக்கும், மூக்குமன்று, ஆகாயமும், பூமியும், தீயும், காற்றுமன்று, அறிவும், ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான்.

எதற்குமே ஏற்ற தாழ்வு உண்டு.

வாழ்க்கையில் பணத்துக்கும் சரி, பதவிக்கும் சரி, உணர்ச்சிக்கும் சரி எதற்குமே ஏற்ற தாழ்வு உண்டு. அந்த ஏற்றதாழ்வுகளால் அடியோடு பாதிக்கப்படாதவன் யோகி ஆகிறான். அடியோடு பாதிக்கப்படுபவன் போகி ஆகிறான். அல்லது ரோகி ஆகிறான். சற்று பாதிக்கப் பட்டாலும், சமய சந்தர்ப்பங்களை உத்தேசித்து அவற்றினின்று சட்டென்று விலகிக் கொள்பவன் விவேகி ஆகிறான்.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 19

 சந்திரனுக்கு 3 – க்குடையவர் உச்சமடைய, அந்த உச்ச ராசியில் நின்ற ராசியாதிபதி 5 – ல் நிற்க, புண்ணிய குணம் உடையவர்.  செவ்வாயும், 9 – க்குடையவரும் கூட 5 – ல் நிற்க ஆதாரம் உள்ளவர்.  3 – க்குடையவரை 2 – க்குடையவர் பார்க்க, லக்கினாதிபதி 2 – ல் நிற்க புதன் பார்க்க நாராயண பக்தி உடையவர்.  குரு லக்கினத்தில் நிற்க, அவரை 5, 2,9 – க்குடையவர்களால் 7 –…

துக்கம் ஏது?

எதையும் வெறும் கனவு, வெறும் மாயை, என்று நினைக்கும் அப்பியாசம் மட்டும் மனதிற்கு இருந்துவிட்டால் எப்படி கவலைகள் வரும்.  அத்தகைய அறிவாளிக்கு துக்கம் ஏது?

உச்ச கட்ட ரகசியம்

ஒன்றை அழித்து, ஒன்றை காப்பதுதான் ஆத்மிக ரகசியம். உலக பரிபாலனத்தின் உச்ச கட்ட ரகசியமும் அதுதான். இந்த ரகசியத்தை அறிந்து செயல்படுத்துபவர்கள் தான் அரசியல் ஆட்சியாளர்கள். துரதிஷ்ட்டவசமாக மக்கள் அழிவதும், ஆட்சியாளர்கள் அவர்கள் சம்பந்தபட்டவர்களை மட்டும் காப்பதுமாக ஆட்சி பரிபாலனம் நடைபெறுகிறது.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 18

 3 – க்குடையவர், லக்கினாதிபதி மாறி நிற்க, புதன் பார்க்க வீர, தீரம் உடையவர்.  4, 2 – க்குடையவர்கள் கூடி லக்கினத்தில நிற்க, புதன் பார்க்க வீர தீரம் உடையவர்  2, 3, 11 – க்குடையவர்கள் மூலவரும் கூடி 9 – ல் நிற்க, அவர்களை 5 – க்குடையவர் பார்க்க, சுகம், தனம், வாகன யோகம் உடையவர். 7, 2 – க்குடையவர் கூடி 4 – ல் நிற்க, 4 –…

காதலும், வேதாந்தமும் ஒன்றா?

காதலும், வேதாந்தமும் ஒன்றா? ஆம் என்றால் வேதாந்தம் என்பது சிருஷ்டியின் தத்துவம். காதலும் சிருஷ்டியுடன் சம்பந்தப்பட்டது. இல்லையென்றால் வேதாந்தத்தில் உணர்வுகள் இருக்கும் தாமரை நீர் போல. காதலில் உணர்ச்சிகள் இருக்கும். புயலும், சூறாவளியும், பூகம்பங்களும் போல.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 17

லக்கினாதிபதி 11 – ல்நிற்க, 4 – க்குடையவர் 9 – ல் நிற்க, 5 – க்குடையவரை குரு பார்க்க, பிரபுவாக இருப்பான்.  லக்கினாதிபதி 9 – ல் நிற்க, 2 – க்குடையவர் 11 – ல் நிற்க, 2 – ல் குரு நிற்க, அன்னிய தேசம் போய் வாழ்வார்.  5 – க்குடையவர் லக்கினத்திற்கு 12 – ல் நிற்க, குரு திரிகோணத்தில் நிற்க, 4 – க்குடையவர் 9 –…

தர்க்க ரீதியில்

மனிதன் எந்த அநியாயத்தையும் தர்க்க ரீதியில் நியாயம் போல் காட்ட வல்லவன். அப்போது அவன் வேதாந்தம் பேசுவான், சாஸ்திரங்கள், புராணங்களை தனக்கு ஏற்றபடி உபயோகப் படுத்துவான். காரணம், மனிதன் உணர்ச்சிகளின் அடிமை. அவனின் உள் உள்ள சுயநலம் அப்படி அவனை ஆக்குகிறது

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 16

 லக்கினாதிபதி 10 – ல் நிற்க, 2 – க்குடையவர் 9 – ல் நிற்க, 4 – க்குடையவர் 4 – ல் நிற்க சிவபக்தி உடையவர். லக்கினாதிபதி கேந்திரமடைய, அக்கேந்திராதிபதி திரிகோணம் அடைய, சந்திரன் ஆட்சி அடைய. லக்கினாதிபதியும், 2- க்குடையவரும் கூடி கேந்திரமடைய, 4 – க்குடையவர் 9 – ல் நிற்க, 10 – க்குடையவர் திரிகோணமடைய இவர்களை குரு பார்க்க, தர்மம், கல்வி, தெய்வ பக்தி உடையவர். லக்கினாதிபதியும் 2…

நவீன நாகரீகம்

ஒருத்தரை ஒருத்தர் அழித்துக் கொள்ளும் காட்டு மிரண்டிதனமே நவீன நாகரீகமாகிவிட்டது. இப்படி ஏன் தோன்றுகிறது எதனால் இப்படி தோன்றியது என்று சிந்தித்தால் சுற்றுப்புற சூழ்நிலையில் இருக்கும் நிலைகளே காரணம் என்று தோன்றுகிறது பணத்திற்க்குவேண்டி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் மனோபாவம் பதவிக்கு வேண்டி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் மனோ போக்கு பெரியவர்களை இலக்கியங்களை உதாசீனப்படுத்தும் பேச்சுக்கள் செயல்கள் உறவுக்கும்,உணர்வுக்கும் மதிப்பே இல்லாத சூழ்நிலைகள் தான் இப்படி தோன்ற வைத்திருக்கிறது எனக்கு ஏனோ அப்படிதான் தோன்றுகிறது

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 15

 லக்கினாதிபதியும், 2 – க்குடையவரும் ஆட்சி அடைய, 9 – க்குடையவர் 4 – ல் நிற்க, 10 – க்குடையவர் லக்கினத்தில் நிற்க, கல்விச் செல்வம், நிறை பெற்ற வாழ்வு பெற்றவராவார். 9, 11 – க்குடையவர் கூடி 3 – ல் நிற்க, சத்தியம், தர்மம், பூமி, கல்வி உடையவர். லக்கினத்தில் சூரியன் நிற்க, 2 – ல் புதன் நிற்க, 9 – க்குடையவர் 11 – ல் நிற்க, பொருள் உடையவர்.…

அடுத்தவரின் பாதிப்பு

ஒரு நபரின் வாழ்க்கையில் இன்னொரு நபரின் பாதிப்பு எந்த விதத்திலாவது இருந்தே தீரும். இதை நாம் நமக்குள் இறங்கி பார்க்கும்போதுதான் அந்த நபர் யார் என்பதே தெரியும். சமூகத்தில் அந்த பாதிப்பு ஏற்படுத்தும் மனிதர் ஆண் என்றால் மனைவியாகவோ, பெண் என்றால் கணவராகவோ இருக்க வேண்டும் என்ற ஆசையில் உண்டான நியதியே திருமணம். ஆனால் எல்லா தம்பதியருக்கும் அப்படி அமைகிறதா என்பது வினாவிற்குரிய விஷயம் தான் என்பதே உண்மை. அரசியல் தலைவர்கள், மத குருமார்கள், ஆன்மீக பேச்சாளர்கள்,…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 26,

இறைச்சி, பால், மதுபாண்டங்கள் தின்பவனது நாடி லக்ஷணம் ….. இறைச்சிகளை அருந்தினவனது நாடி ஸ்திரமாயும், பாலைகுடித்தவனது நாடி மிகவும் சீதளமாயும், மதுரியமான பண்டங்கள் புசித்தவனது நாடி ஸ்திரமாயும், மந்தமந்தமாயும் நடக்கும். மதுர பதார்த்ததங்கள், உஷ்ண பதார்த்ததங்கள், உலர்ந்த பதார்த்தங்கள் தின்பவனது நாடி லக்ஷணம் ——- வெல்லம், வாழப்பழம், மாமிசம், உஷ்ணபதார்த்தங்கள், உலர்ந்த பதார்த்ததங்கள், முதலியவைகளை புசித்தவனுடைய நாடி வாத பித்த ரோகநாடி கதியைப் போல் நடக்கும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 16

பிணியை அறிந்தபின் பிணியைப் போக்க பிராண சக்தி அளிக்கப் படுகின்றது. வைத்தியர் மருந்து மூலமாக இதை அளிக்க முயலுகிறார். அந்தப் பிணியைப் போக்க, தேவையான பிராணாவை எந்தப் பொருளிடமிருந்து கேடுண்ட கருவி, பாகம் எடுத்துக் கொள்ளும் என்று தேர்ந்தெடுத்தலே, தகுதியான மருந்தைக் கண்டுபிடித்தல், பிராணாவைச் சரிசெய்ய, மருந்துடன் சிலபுத்தியுள்ள வைத்தியங்கள் உணவு ஒழுக்கத்தையும் கையாளுகிறார்கள். ரண சிகிச்சை ஏற்பட்டிருக்கிறது. காக்கத் தெரியாமல், சரி செய்யத் தெரியாமல் போய் விட்டால், கேடுண்ட பாகத்தை அறுத்தெறிந்துவிடுகிறார்கள். ரண சிகிச்சை எல்லாம்…

வியாபார லக்ஷ்ணங்ள்

இந்த சமுதாயத்தில் சட்ட விரோதமாக பணம் சம்பாதிப்பது என்ற பேச்சுக்கே இடமேயில்லை சட்ட விரோதம் என்பது வியாபார லக்ஷ்ணங்களில் ஒன்று. இதை புரியாதவர்கள் வியாபாரத்தில்  நியாயம், தர்மம், வியாபாரத்தில் வெளிப்படை சட்டத்திற்க்குட்பட்ட வியாபாரம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்படி பேசிக் கொண்டிருப்பவர்கள் உண்மையாகவே   பாவம்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 44

ஒருவன் போகப் பொருள்களினிடையே வாழ்வானாயின், இயற்கையாகவே அவன் அவற்றால் வெல்லப்படுகிறான். மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெண் உருவத்தையும் கண்ணெடுத்துப் பாராதே, அதன் அருகிலும் செல்லாதே சீடர் – அன்னையே, தீய எண்ணங்கள் என் மனத்துள் புகுவதில்லை உடனே, அன்னையார் அவரைப் பேசவிடாமல் தடுத்து,  அவ்வாறு உரைக்காதே, இவ்வாறு ஒருவர் பேசுவது தவறு” என்றார்.

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 9

பிரணயாமம், மனதை உள்முகமாய்த் திருப்புதல், அழியும் பொருளையும் அழியாப் பொருளையும் ஆராய்ந்தறிதல், ஜபமும், ஸமாதியும் கூடுதல் ஆகிய மகத்தான ஸாதனைகளில் உன்னுடைய முழுமனதையும் செலுத்து. தாமரையிலை மேலுள்ள தண்ணீர் மிகவும் சஞ்சலமானது. அதே மாதிரிதான் ( உடலில் ) உயிரும் அதிசயிக்கும்படி சஞ்சலமானது. உலகனைத்தும் நோயாலும் அகங்காரத்தாலும் பீடிக்கப்பட்டடுத் துன்பத்தால் கொல்லப்படுகிறதென்பதை அறிவாயாக.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 14

 கேந்திரத்தில் குரு இருந்து, சனி பார்க்க, 8 – க்குரியவர், திரிகோணம் பெற, 3 – ல் 2 – க்குடையவர். சந்திரனும் கூடி இருக்க பிறந்த ஜாதகர்கள் தீர்க்காயுளைப் பெற்றவராவார்.  லக்கினாதிபதி கேந்திரமடைய லக்கினத்தில் குரு 2 – க்குடையவர் நிற்க கல்வி, தனம் உடையவர். லக்கினாதிபதி 12 – ல் நிற்க, 12 – க்குடையவர் லக்கினத்தில நிற்க திரிகோணத்தில் ராகு நிற்க, சந்திரன் கேந்திரமடைய கல்விச் செல்வம் உடையவர்.  லக்கினாதிபதி சந்திரனுக்கு திரிகோணமடைய,…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 13

லக்கினாதிபதியும் 9 – க்குரியவரும் கூடி 3 – ல், 6 – க்குரியவர் கேந்திரத்தில், சந்திரன் நீச்சம் அடைந்து, சனி, ராகு சேர்க்கை பெற்றால் ஒரு காசும் இல்லாத தரித்திரன், துர்க்குணம் உடையவன், கையில் ஓடு எடுத்து திரிவான். பாவர்கள் லக்கினத்தை பார்க்க, 9 – க்குரியவர், 12 – ல், 12 – க்குரியவர் 4 – ல், 3 – க்குரியவர் பலம் குறைந்து இருக்க, தாய், தந்தையின் பாவத்தை உருக்கொண்டு வந்தவன்.…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 12

 3, 12 – க்குடையவர்கள் கூடி திரிகோணம் பெற்று 2 – க்குரியவர், புதனுக்கு கேந்திரம் பெற்றால், புலமை தன்மை, பல நூல்களை எழுதும் ஆற்றல், கதை, கவிதை, கட்டுரை, காவியங்களில் சிறப்பு, கணிதம், ஜோதிடத்தில் வல்லவன்.  லக்கினாதிபதி கேந்திரம் அடைய அக் கேந்திராதிபதி திரிகோணமடைய, சந்திரன் ஆட்சி பெற, 12 – க்குரியவர் சந்திரன், குருவிற்கு கேந்திரத்தில் நிற்க, 5 – க்குரியோர் கேந்திரம் பெற வேத ஆகமம், வாகடவித்தை,கணிதம்,ஜோதிடம்,சித்தாந்தம் போன்றவைகளை கற்று சிறப்புடன் வாழ்வான்.…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 11

லக்கினாதிபதியும், 3 – க்குரியவரும் கூடி கேந்திரம் பெற்று 9 – க்குரியவரின் தொடர்பு பெற்றால் அழகு மிக்கவன் தர்ம குணம் உடையவன். வசதி வாய்ப்புக்களை பெறுவான்.  லக்கினாதிபதி பலம் பெற்று அந்த ராசியாதிபதி திரிகோணம் அடைய, 5 – க்குரியவர் பார்க்க, பாக்கியம் மிக்கவன். தனம் உள்ளவன் பூமி யோகம் உண்டு. 2, 3 – க்குரியவர் திரிகோணமடைந்து, சந்திரன் பார்க்க, தொடர்பு பெற, ஜோதிடம் சிற்பம், நன்னூல், கணிதம் இவைகள் அறிந்தவன்.  2 –…

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 8

பொருள்,சுற்றம், யெளவனம் முதலியவற்றைப் பற்றி கர்வம் கொள்ளாதே, காலம் ஒரு நிமிஷத்தில் எல்லாவற்றையும் கொண்டு போய்விடும். மாயாமயமான இவ்வனைத்தையும் விட்டு பிரம்மபதத்தை அறிந்து கொண்டு அதனுட் புகுவாயாக. காமத்தையும், கோபத்தையும், பேராசையையும், மதிமயக்கத்தையும் ஒழித்து அஞ்ஞானத்தினின்று விடுபட்ட உனது உண்மை ஸ்வரூபத்தைப் பார். ஆத்மஞானமில்லாத மூடர்கள் நரகத்தில் வீழ்ந்த துன்பத்திற்காளாகிறார்கள். சத்துருவென்றும், மித்திரனென்றும், புத்திரனென்றும் உறவினனென்றும், வேற்றுமையைப் பாராதே. விஷ்ணுபதத்தை நீ விரும்பினால் யாரிடத்தும் பகைமையும், நட்பும் பாராட்டாமல் எல்லோரையும், எல்லாவற்றையும் சமமாகப்பார். 

சுந்தர யோக சிகிச்சை முறை 15

எக்கருவி எப்பாகம், உடலின் எத்தொழில் கெட்டிருக்கிறதென்று ஆராய்ச்சியாலறிவதே, வைத்தியத்தின் முதல் முக்கிய தொழில், இதை அறிந்து பிற்பாடு சிகிச்சை ஆரம்பிக்கப்படுகிறது. வைத்தியம் மேல் நாட்டு முறையிலும் எவ்வளவோ வளர்ச்சி பெற்றிருந்தும், எவ்வளவோ ஆராய்ச்சி முறைகள், ஆராய்ச்சிக் கருவிகள் ஏற்பட்டும், நோயின் காரணத்தை கண்டுபிடித்தல், இன்னும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது. நோய்களின் உற்பத்தி ஆராய்ச்சி வலுக்க, வலுக்க சீர் கெட்ட இயற்கை விரோத நாகரிக வாழ்க்கையால், காரணம் கண்டுபிடிக்க முடியாத நூதன பிணிகள், ராக்ஷசத் தன்மையுடன் வளர்ந்து கொண்டே…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 25 

திரவ பதார்த்தம் புசித்தவனது நாடி ….. பசபசப்புள்ள பதார்த்தங்கள் புசித்தவனது நாடி கடினமாயும் கடின பதார்த்தங்களை புசித்தவனது நாடி கோமளமாயும் இரண்டும் கலந்தவனது நாடி இரண்டும் சார்ந்துமாய் நடக்கும். வேறு விதம் ….. புளிப்பாகிலும் அல்லது புளிப்பு மதுரம் இவை இரண்டும் கலந்த பதார்த்தங்களை புசித்தவனது நாடி மிகவும் சீதளமாயும், அவல், வறுத்த பதார்த்தங்கள் புசித்தவன் நாடி ஸ்திரமாயும், மந்தமாயும் நடக்கும். காய்கறிகள், கிழங்குகள் திண்பவனுக்கு நாடி லக்ஷணம் ….. பூசணிக்காய், முள்ளங்கி முதலிய கிழங்குகள் இவைகளை…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 43

ஒரு சாது எப்போதும் விழிப்பாய் இருக்க வேண்டும். அவனது மார்க்கம் வழுக்கலுடையதாதலின் மிகவும் எச்சரிக்கையாக அவன் அடியெடுத்து வைத்து அதில் நடக்க வேண்டும். சன்னியாசி ஆவது ஒரு விளையாட்டான காரியமா? அவர் எந்தப் பெண்ணையும் நிமிர்ந்து பார்க்கலாகாது, தெருவில் செல்லும்போது அவரது பார்வை அவரது கால் கட்டை விரலின் மீதே பதிந்திருக்க வேண்டும். கழுத்தில் பட்டயம் அணிந்திருக்கும் நாய் எவ்வாறு ஏனைய தெரு நாய்களைப் போல் கொல்லப்படுவதினின்றும் காக்கப்படுகின்றதோ, அது போல் சன்னியாசியின் காவி நிற ஆடை,…

சுந்தர யோக சிகிச்சை முறை 14

யோக பாஷையில் பிணி என்பதானது பிராணா, பிராண சக்தி ஒழுங்கான ஒருவித சமாதான முறையில் சரீரம், சரீர தர்மங்கள் முழுவதிலும் பரவி நிற்காமல், ஏற்ற தாழ்வுறுவதே, பிராணாவின் சமாதானமற்ற நிலையே ( STATE OF INEQUILIBRIUM ) பிணி. இந்தப் பிராணாவை சமாதான நிலைக்குச் சரி செய்வதே சிகிச்சை எந்த பாகத்தில் எந்த கருவியில் பிராண குறைந்திருக்கிறதோ அதற்கு அதிகமாக இருக்குமிடத்திலிருந்தோ அகண்டக் களஞ்சியத்திலிருந்தோ பிராணாவை அளித்து அக்குறையை நீக்குதல் சிகிச்சை, அதே போல அதிகப் பிராண…

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 7

மதிகெட்டவனே! பொருள் சேர்ப்பதில் ஆசையை விட்டொழி, வீணாண ஆசைகளினின்று விலகிய நல்ல எண்ணங்களை மனதில் சிந்தனை செய். உன்னுடைய நிலைக்கேற்ற கருமங்க‍ளைச் செய்வதால் கிடைக்கக்கூடிய பொருளைக் கொண்டு மனதைச் சந்தோஷப்படுத்திக்கொள். பொருள் எப்பொழுதுமே துன்பம் விளைவிப்பதென்பதை மனதில் வைத்துக்கொள். அதனால் சிறிதளவு சுகம் கூட இல்லை என்பது உண்மை. பெற்ற பிள்ளையிடமிருந்துங்கூட, பொருள் படைத்தவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. இப்படித்தான் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 42

நான் உனக்கு ஒன்று கூறுவேன். உனக்கு மன அமைதி வேண்டுமானால், பிறரிடத்துக் குற்றம் காணாதே. அதற்குப் பதிலாக, உன் குற்றங்களையே எண்ணிப்பார். இவ்வுலகம் முழுவதையும் உன்னுடையதாக்கிக் கொள்ளப் பழகு. குழந்தாய், இவ்வுலகில் யாரும் உனக்கு அன்னியரல்ல. இவ்வுலகம் முழுதும் உனதே. ஒருவன் பிறரிடத்துக்குக் குற்றம் காணப் புகுவானேயாகில், அவன் மனமே முதலில் மாசடைகின்றது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 24

வாத பித்த சிலேஷ்மங்களில் எந்த தோஷத்தை நாடியானது நாடியிருக்குமோ அதன் செய்கையை தான் மற்றவைகளுக்கும்  உண்டாகும். நாடியானது வாத பித்த சிலேஷ்மத்தில் ஏதாவது ஒன்றில் சார்ந்திருக்கும் வாத பிரகோபத்தில் தீவிரம் ஆகும்போது தீவிரமாயும் சாந்தமாகும் போது சாந்தமாயும் நாடி நடக்கும். எண்ணெய், வெல்லம், உளுந்து, பால், தேன் இவைகளை தின்றவனுடைய நாடி ….. எண்ணை குடித்தவனுடைய நாடி வலிவாயும், வெல்லம், உளுந்து இவைகளை தின்றவனுடைய நாடி பெரிய தடியைப் போல் நீளமாயும், பால் குடித்தவனுடைய நாடி ஸ்திமிதமாயும்…

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 6

எதுவரை மூச்சுக் காற்று உடலில் ஓடிக்கொண்டிருக்கிறதோ அதுவரை வீட்டில் உன்னுடைய நலத்தைப் பற்றிக் கேட்பார்கள். மூச்சுக்காற்றுப் போய் உடலுக்கு அபாயம் ஏற்பட்டால் மனைவி கூட அவ்வுடலைக் கண்டு அஞ்சுவாள். காமசுகத்திற்கு எவன் வசப்படுகிறானோ அவன் நோய் வாய்ப் படுகிறான். மரணம் ஒன்றே முடிவு என்று கண்டும் ஒருவனும் பாவத்தினின்று விலகுவதில்லை.

இப்பிறவி எடுத்தது

இப்பிறவி எடுத்ததே பூரணத்தை அறிய வேண்டிதான் யோகமெல்லாம் பார்த்தவுடன் வருவதல்ல!! கோடிக்கணக்கான ஜென்மத்தின் பயனால் வருவதாகும்!!! மனதை கொண்டு போய் மூலத்தில் சேர் என்றவுடன் சேருமா, சேராது மாயை எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் சேரும். வணக்கமும், யோகமும் எதற்கு பயன்படும் என்று உதாசீனம் செய்தால் ஒரு தொழிலும் பலியாது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 41

ஒரு குழந்தையை ஸ்வீகாரம் செய்து கொள்ள எண்ணிய ஒரு பெண்மணியிடம் தூய அன்னையார் கூறியதாவது, – அவ்வாறு செய்யாதே. பிறருக்கு நீ ஆற்ற வேண்டிய கடமைகளை எப்போதும் செய்துவா, ஆனால் உன்னுடைய அன்பைக் கடவுளிடத்து மட்டுமே நீ செலுத்தவேண்டும். உலகத்தாரிடம் வைக்கும் அன்பு தன் பின்னே சொல்லொணாத் துயரங்களை எப்போதும் இழுத்துக்கொண்டு வரும். எந்த மானுடப் பிறவியை நீ நேசித்தாலும், அதற்காக வருந்தத் தான் நேரிடும். எவள் இறைவன் ஒருவனிடம் மட்டுமே அன்பு செலுத்துகிறார்களோ, அவளே உண்மையில்…

ஒரே இடத்தில் நில்

மற்றவர்களுடன் கூடி பேசுவதால் குடியா மூழ்கி போய்விடும் என்று நீ கேட்கலாம் இப்போது சொல்வதை கவனமாக கேள். 5 விதமான பொறிகள் ஒரு நிலையில் நிற்காமல் அங்கும் இங்கும் ஒடும். பேச்சால் பொறிகள் கர்வம் அடைந்து கனத்து விடும் அதனால் ஒரு நிலையில் நிற்க முடியாது. அப்படி பட்டவர்களுக்கு புத்தி கூறினாலும் அது அவர்கள் புத்திக்கு எட்டாது அதனால் யோகம் கைகூடாது. பல திக்கும் பார்க்காமல் பலதையும் பேசாமல் எச்சரிக்கையாய் ஒரே இடத்தில் நில் அப்போது யோகம்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 23

பூதாபிஷங்க சுர நாடி ….. பூத பிரதேங்களினால் பயப்பட்டவனுடைய நாடியானது திரிதோஷ நாடியைப் போல் வாதபித்த சிலேஷ்ம நாடிகள் ஒன்றாய் சேர்ந்து ஏற்றத்தாழ்வு அன்றி சமானமாய் நடக்கும். ரோகாஹி தாப மிருத்யு நாடி லக்ஷணம் ….. வியாதி ஒன்றும் அல்லாமல் அகாலமரணம் சம்பவிக்கும்படி ஆனவனுக்கு சந்நிபாத நாடி நடக்கும். வேறு விதம் ….. வியாகூலத்தை அடைந்தவனுக்கும் பனியில் திரிகிறவனுக்கும் நாடியானது தன் இடத்தை விட்டு மேல் நோக்கி இருக்கும். அப்படி இருந்தாலும் அவனுக்கு தோஷம் ஒன்றும் சம்பவிக்காது.…

உச்ச கட்ட ரகசியம்

ஒன்றை அழித்து, ஒன்றை காப்பதுதான் ஆத்மிக ரகசியம். உலக பரிபாலனத்தின் உச்ச கட்ட ரகசியமும் அதுதான். இந்த ரகசியத்தை அறிந்துசெயல்படுத்துபவர்கள் தான்அரசியல்ஆட்சியாளர்கள். துரதிஷ்ட்டவசமாக மக்கள் அழிவதும், ஆட்சியாளர்கள் அவர்கள் சம்பந்தபட்டவர்களை மட்டும் காப்பதுமாக பரிபாலனம் நடைபெறுகிறது

சுந்தர யோக சிகிச்சை முறை 13

பிறக்கும் பொழுதே நொண்டி, கண், செவி, வாய் போன்ற கருவிகள் வேலை செய்யாமல் பிறக்கும் ஜென்மங்கள், பிணியாளர் வர்க்கத்தவர் அல்லர், அங்கம் இல்லாவிட்டால், கண்கள் இல்லாவிட்டால், செவி கருவியற்றிருந்தால், பேசும் நாவே உயிரிழந்திருந்தால் உடல் சிகிச்சை செய்யக்கூடியது அதிகமில்லை. ஆனால், சுந்தர யோக சிகிச்சையின் ஒரு அங்கமான துதி சிகிச்சையால் இதையும் இவர்கள் சரிப்படுத்திக் கொள்ள முடியும். நமது சரித்திரங்கள் இதிகாச புராணங்கள், பக்தி மார்க்கம் ஆகியவை இக்கூற்றுக்கு ஆதாரம். ஆனால் பிறவியிலேயே நாக்கு, மூக்கு, வாய்,…

சகல உயிர்களுக்கும் 1

சகல உயிர்களுக்கும் உணர்வு ஒன்றே . பசி, வலி, காமம், மரணம் இப்படியிருக்க மனிதர்களுக்குள் ஏன் இத்தனை முரண்பாடு. நான் பிறரையும், பிறர் என்னையும் புரிந்து கொள்ளாத வேதனை ஏன்? தன் உணர்வை தானே புரிந்து கொள்ளாத பரிதாபம். தன்னை மதிக்காத போது ஏற்படும் சிக்கல். மனிதன் ஏன் தன்னை மதிக்காமல் போனான். மாறுதல் ஏற்படுவதை மறுதலிக்க முற்பட்ட போது மாறுதல் வேண்டவே வேண்டாம் என்று ஆசைப்பட்ட போது ஆசையே துன்பத்திற்கு காரணமாயிற்று.

வாழ்க்கையை புரிந்து கொள்ளாதவர்களுக்கு

புரிந்து கொள்ளாதவனுக்கு வலி நிச்சயம். வாழ்க்கையை அதன் இயல்பை புரிந்து கொள்ளாதவன் அதை ஜெயிப்பது எப்படி சாத்தியம். முரண்பாடுகள் விளங்காமல் முன்னேறுவது எப்படி? ஜெயிப்பது முன்னேறுவது எல்லாம் இரண்டாம் பட்சம். இந்த புரிதல் இல்லாது போனால் இருப்பே இம்சையாகிவிடும்.

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 5

வயது கடந்தால் காமக்கிளர்ச்சி என்ன ஆகிறது? நீர் வற்றினால் குளம் என்ன ஆகிறது? பொருள் அழிந்தால் சுற்றம் என்ன ஆகிறது? உண்மை உணரப்பட்டால் ஸம்ஸாரம் என்ன ஆகிறது? ஸ்திரீகளின் நகில்களையும் நாபிப்பிரதேசத்தையும் பார்த்து மதிமயங்காதே, இவை மாம்ஸம், கொழுப்பு இவைகளின் விகாரமென்று அடிக்கடி எண்ணி மனதில் பொருட்படுத்தாமலிரு. நீ யார்? நான் யார்? எங்கிருந்து வந்தோம்? என் தாய் யார்? தந்தை யார்? இப்படித் தன்னுடைய பிறவித்தளைகளை நன்றாய் விசாரித்துப் பார்த்து இவையெல்லாம் கனவுக்கொப்பானவை எனக் கண்டு…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 40

புத்தகம் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிற்குக்கூறிய புத்திமதியாவது, ”எவருடனும் மிகவும் நெருங்கிப் பழகாதே. குடும்பத்திலே பலர் கூடி நடத்தும் கொண்டாட்டங்கள் எதிலும் அதிக அளவு பங்கெடுத்துக் கொள்ளாதே எப்போதும் மனத்தை நோக்கி ‘ மனமே, அடக்கமாக இரு ‘ என்று சொல், பிறரைப்பற்றி அறிய ஆவல் கொள்ளாதே. தியானம், பிரார்த்தனையும் செய்யும் நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக்கொண்டு வா”. தூய அன்னையார் தம்முடைய மற்றொரு சீடப் பெண்ணிற்கு கூறிய எச்சரிக்கையாவது, ” எந்த ஆணுடனும், உன்னுடைய தந்தையாயினும் சகோதரனாயினும்…

சுந்தர யோக சிகிச்சை முறை 12

இயற்கைக்கு விரோதமான நடத்தையால்தான் நூற்றில் தொண்ணூற் றென்பது விழுக்காடு. மானிட வர்க்கத்தில் பிழை ஏற்படுகிறது. மிகுதியான ஒரு விழுக்காடு, பல காரணங்கள், பகுதிகள் கூடியது, இதுவும் பெரும்பாலும் யோக சிகிச்சைக்குக் கட்டுப்படும். ஓரு ஜீவனின் இச்சை சக்தி, நடத்தைக்கு மீறி நோய் வருவதுண்டு, ஆனால் இந்தப் பகுதியும் மிக்க சொல்பமே ( மிக குறைவு ) ” வறுமை, விலக்க முடியாத அல்லது எதிர்பாராத சந்தர்ப்பம், தொத்து நோய் ” என்று கூறி வாதிக்கலாம். உண்ணச் சிறிதும்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 22

நாடிகளை மிகவும் நுட்பமான புத்தியுடன் அவைகளின் போக்கை அறிந்து வியாதிகளின் குணபேதங்களை தெரிந்து சிகிச்சை செய்ய வேண்டும். இந்த நாடி ஞானத்தை செவ்வையாய் தேவர்களுக்கும் தெரிந்துக் கொள்வது கஷ்டமென்றால் மானிடர்கள் தெரிந்து சிகிச்சை செய்ய எவ்வளவு கஷ்டமாயிருக்கும்.   ஆகையால் நாடிகளையும் அதன் சப்தங்களையும் மிகவும் சூஷ்மபுத்தியுடன் தெரிந்துக்கெண்டு வியாதியின் குணத்தை அறிந்து சிகிச்சை செய்ய வேண்டியது. மருத்துவரின் கடமை ஆகும்.   அபிகாதாதி ரோகங்களின் நாடி லக்ஷணம் பளுவை எடுக்குதல், பிரவாகத்தில் அடித்துக்கொண்டு போகுதல் மூர்ச்சை சம்பவித்தல், பயமுண்டாகுதல்,…

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 4

இறந்தால் மறுபடி பிறப்பு, பிறந்தால் மறுபடி இறப்பு, மறுபடியும் ஒரு தாய் வயிற்றில் முடங்குதல், கரைகாணாததும் கடத்தற்கரியதுமான இவ்வாழ்க்கைக் கடலினின்று என்னைக் காத்தருளும் பகவானே! பகலுக்குப்பின் பகலும், இரவுக்குப்பின் இரவும், பக்ஷங்களும், மாதங்களும், கோடைகாலமும், குளிர்காலமும், வருஷத்திற்குப் பின் வருஷமும் மாறாமல் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. வீண் ஆசைகளும் ஸங்கல்பங்களும் எவனையும் விட்டுப் போவதாயில்லை.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 39

ஒரு நாள், ஒரு தாய் துறவிக்கோலம் பூண்ட தன் மகனை மீண்டும் உலக வாழ்விற் புகச்சொல்லுமாறு அன்னையை வேண்ட, அவர் கூறியதாவது, ” ஒரு துறவிக்குத் தாயாக இருக்கும் பேறு கிடைப்பது எளிதல்ல. ஒரு பித்தளைப் பாத்திரத்தின் மீதுள்ள பற்றைத் துறப்பதே மக்களுக்கு முடியாது போகிறது. இவ்வுலகத்தையே துறப்பது எளிதானதா? உனக்கேன் இந்தக் கவலை?”. புதிதாக உபதேசம் செய்யப்பட்ட ஒரு சீடப்பெண்ணை நோக்கித் தூய அன்னையார் கூறியதாவது, ”அப்பொழுது தான் விதவையான எந்தப் பெண்ணுக்கும் நான் உபதேசம்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 10

46) லக்கினாதிபதி 5 – க்குரியவருடனோ, அல்லது சந்திரனோடு சேர்ந்து, நீச்ச அஸ்தமனம் வக்கிரம் பெற்றிருந்தால் தெளிவில்லாத மன நிலை, தேவை இல்லாத அச்சம், மனபயம் கோழைத்தனம், பலஹீனமான மனதுடையவர் 47) 9 – ஆமிடத்தில் 2, 3 – க்குரியோர் இருந்து, 2 – ல் இருந்து 5 – க்குரியவர் இருக்க லக்கினத்தில் சுபக்கிரகமிருந்தால், கல்வி, புகழ் , செல்வம்,உடையவர். 48) லக்கினாதிபதி சுபர் இருக்க, 5 – க்குரியவர் பலம் பெற்று, 2…

புரிந்துகொண்டால்

எது பார்க்கப்பட்டதோ அது காட்சி! எது கேட்கப்பட்டதோ அது கேள்வி! எது உணரப்பட்டதோ அது உணர்வு! எது அறியப்பட்டதோ அது அறிவு! இதில் ‘ நீ ‘ என்பதும் எங்கு ,எதில், எப்போது , கடைசியில் வரும் விடை நீ என்பது இல்லை என்பதே இதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது அவசியமில்லை உண்மை இதுதான் இதை புரிந்துகொண்டால் நிம்மதி புரியாவிட்டால் சங்கடம், வருத்தம், துக்கம், துயரம், அத்தனைதான்

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 9

41) லக்கின கேந்திரத்தில் சனி, குரு, கேது தொடர்பு ஏற்பட்டாலும் லக்கினத்தைப் பார்த்தாலும், ஞானநிலை கிட்டும். 42) லக்கினத்திற்கு 3 – க்குரியவனும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும் சேர்ந்து, ராகு, கேதுவின் தொடர்பை பெற்று இரட்டை ராசியிலிருந்தால் இரட்டைக் குழந்தை பிறக்கும். 43) 1 – க்குரியவர், 1, 4, 7, 10 – லிருந்து, 5 – க்குரியவர் தொடர்பை பெற்றால் கீர்த்தி, செல்வாக்கு, பலரால் பாரட்டப்படுவது, அரசியலில் முன்னேற்றம், உயர்பதவி பெற வாய்ப்பு…

இயற்கை மருத்துவம் — 5

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்  —  அன்னாசி பழம் 22) முடி நரைக்காமல் இருக்க —  கல்யாண முருங்கை (முள் முருங்கை) 23) கேரட்,மல்லிகீரை, தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது. 24) மார்புசளி, இருமலை குணமாக்கும் —  தூதுவளை 25) முகம் அழகுபெற —  திராட்சை பழம் 26) அஜீரணத்தை போக்கும் — புதினா 27) மஞ்சள் காமாலை விரட்டும் —  கீழாநெல்லி 28) சிறுநீரக கற்களை தூள் தூளாக ஆக்கும் —  வாழைத்தண்டு

இயற்கை மருத்துவம் — 4

16) மார்பு சளி நீங்கும் — சுண்டைக்காய் 17) சளி, ஆஸ்துமாவுக்கு —  ஆடாதொடை 18) ஞாபக சக்தியை கொடுக்கும் —  வல்லாரை கீரை 19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் —  பசலைக்கீரை 20) ரத்த சோகையை நீக்கும் —  பீட்ரூட்

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 8

36) 1 – ல் ராகு, 3, 6 – க்குரியவர் சாரம் பெற்று, செவ்வாய், சனியின் தொடர்பை பெற்றால், அக்கிரக திசாபுத்தி காலங்கள் தொழிலை பங்கப்படுத்தும். சொல்ல முடியாத இடையூறுகளைத் தரும். 37) 1 – ல் லக்கினாதிபதி 3, 6 – க்குரியவர் சாரம் பெற்று, 8 – க்குரியவரின் தொடர்பை பெற்ற சூரியன் சேர்ந்திருப்பின், ஜாதகர் பிறக்கும்போதே நோயுடன் பிறக்கிறார். வினோதமான நோய்களை வெளிக்காட்டி பெரும் மருத்துவர்களையே திக்குமுக்காட வைக்கும். 38) லக்கினத்தில…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 7

31) 1 – க்குரியவர், 9 – க்குரியவர் சாரம் பெற்று 1, 4, 7, 10 – லிருந்து குருவால் பார்க்கப்பட்டால், இவர் தசாபுத்தி நல்ல யோகத்தை தரும். 32) லக்கினாதிபதி, 9 – க்குரியவர் நின்ற வீட்டிற்கு 5, 9, 11 – லிருப்பின் என்றும் பாக்கியம் உள்ளவன். ஏதோ ஒரு வகையில் பணம் வந்து கொண்டே இருக்கும் தரித்திரம் இல்லாதவன். தெய்வ அருள் பெற்றவன். பலருக்கு ஏதோ ஒரு வழியில் உதவியாக இருப்பான்.…

இயற்கை மருத்துவம் — 3

11) மூளை வலிமைக்கு ஓர்   —  பப்பாளி பழம் 12) நீரிழிவு நோயை குணமாக்கும் — முள்ளங்கி 13) வாயு தொல்லையிலிருந்து விடுபட —  வெந்தயக் கீரை 14) நீரிழிவு நோயை குணமாக்க  —  வில்வம் 15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் —  துளசி

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 6

26) 1 – க்குரியவர் 12 – க்குரியவர் சாரம் பெற்று, 6 – க்குரியவர் தொடர்பு பெற்றால், 1 – க்குரியவர், 7 – க்குரியவர் சனி, புதன் தொடர்பு பெற்றால் நோய்த் தொல்லைகளுக்கு அடிமையாவான் மத்திம வயதில் வாதம் ஏற்பட்டு நரம்புத் தொல்லையால் உடல் உனமாகும். 27) லக்கினாதிபதி பாவர் சாரம் பெற்று, உடலாதிபதி நீச்ச பரிவர்த்தனை பெற்று ரோகாதிபதி, புதனுடன் தொடர்பு பெற்றால் உஷ்ள நீர் சம்பந்தப்பட்ட வியாதிகளால் உடம்பு தளரும். நரம்பு…

இயற்கை மருத்துவம் — 2

6) வாய்ப்புண், குடல் புண்களை குணமாக்கும் — மணத்தக்காளி கீரை 7) உடலை பொன்னிறமாக மாற்றும் — பொன்னாங்கண்ணி கீரை 8) மாரடைப்பு நீங்கும் — மாதுளம் பழம் 9) ரத்தத்தை சுத்தமாக்கும் — அருகம்புல் 10) கேன்சர் நோயை குணமாக்கும்  — சீதா பழம்

இயற்கை மருத்துவம் — 1

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர்  —  நெல்லிக்கனி 2) இதயத்தை வலுப்படுத்த  — செம்பருத்திப் பூ 3) மூட்டு வலியை போக்கும் — முடக்கத்தான் கீரை 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் — கற்பூரவல்லி (ஓமவல்லி) 5) நீரழிவு நோய் குணமாக்கும் — அரைக்கீரை

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 5

21) உடல், உயிராதிபதிகள் வாங்கிய சாராதிபதி எந்த பாவத்தில் உள்ளதோ, அந்த பாவத்தின் குணங்களே அந்த ஜாதகருக்கு எற்படும். 22) 1 – க்குரியவர் சந்திரன் சாரம் பெற்று, சந்திரன் பெற்ற சாரநாதன் 1- ல் இருப்பின் சதா வெளியில் பிரயாணம் செய்பவன் பெரிய செலவாளி, ஊர் சுற்றும் ஆர்வம் உள்ளவன். 23) 1 – ல் 2, 4, 9 – க்குரியவர் சேர்க்கை இருந்து 12 – க்குடையவரின் தொடர்பு பெற்றால் தனமெல்லாம் கடன்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 4

16) 1 – க்குரியவர் பாதகம் பெற்று, பாவருடன் சேர அவரை பாவர் பார்க்க பிறந்தவன். துர்குணம், கெட்ட நடத்தை, தாய், தந்தை பேச்சை கேட்காமை, ஊதாரியான செலவுகளை செய்பவன். 17) 1 – ல் 2 – க்குரியவர் கேது சேர்க்கை பெற்று குருவால் பார்க்கப்பட்டால் மனக்கட்டுப்பாடு அதிகம் உண்டு. நல்ல வாக்குள்ளவன் ஆன்மீக வாழ்க்கையில் விருப்பம் உள்ளவன். 18) 1 – ல் 4, 5 – க்குரியவர் இருந்து, 9 – க்குரியவர்…