ஓதி மலை முருகன் கோவில்

சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது . ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து முகங்களும் , எட்டு கரங்களும் கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800 செங்குத்தான படிகளை கொண்டது, . புஞ்சைப்புளியம்பட்டி யிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை…

அக்ரா

கினி வளைகுடா பகுதியில் அமைந்துள்ள கானா நாட்டின் தலைநகர் மற்றும் (ம.தொத.,2001 மதிப்பீடு 15,51,200) 1482-ல் போர்த்துகீசியர்கள் இப்பகுதியில் முதன்முதலில் குடியேறிய போது, இந்தப் பகுதி ‘கா’ மக்களின் குடியிருப்பாக இருந்தது. 1650-80களில் பாதுகாப்பு மிக்க மூன்று வணிக மையங்கள் முறையே டேனியர்கள், டச்சுகாரர்கள் மற்றும் பிரிட்டிஷாரால் கட்டப்பட்டன. டேனியர்களும் டச்சுகாரர்களும் முறையே 1850 மற்றும் 1872ல் இப்பகுதியை விட்டு வெளியேறினர். 1877ல் அக்ரா பிரிட்டிஷ் கோல்ட் கோஸ்ட் காலனியின் தலைநகரமானது. 1957ல் கானா சுதந்திரம் அடைந்த…

ஸோஹம்

ஸோ – என்ற நாதத்துடன் காற்றை உள்ளே இழுத்து  ஒசை எழுப்பி ‘ ஹம் ‘ என் ற ஒசையுடன் அதை வெளியே விட்டு, ஒலி எழுப்பும்போது, பிரசித்தி பெற்ற ஒங்கார நாதமாகிய ‘ ஸோஹம்’ இணைகிறது. இதுவே சூட்சும பஞ்சாட்சரம்.

காரை (Canthium parviflorum)

காரை சிறுகாரை என்று சொல்லப்படும் இதன் இலைகள் மற்றும் பழங்கள் உண்ணப்படுகின்றன. குறிப்பிட்ட இடைவெளிகளில் இதை குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும். சமைத்த உணவுகளை பதப்படுத்தவும் காரை இலைகள் பயன்படுகின்றன. குரங்குகளும், சிலவகைப் பறவை இனங்களும் காரை பழங்களை விரும்பி உண்கின்றன. இவற்றின் மூலமாக காரை விதைகள் இனப்பெருக்கம் அடைகின்றன.

S.PB. நினைவுகள்.

1970,80,90 -ம் காலங்களில் வாழ்ந்தவர்களின், வாலிபர்கள், பெரியவர்கள், சிறியவர்கள் வரை அனைவரையும் தன் குரலால் வசீகரித்து உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திய மாபெரும் கான கந்தவர்வன் பாடலிலேயே சிரிக்கவும், சிணுங்கவும், உள்ள கலையை முழுமையாக கைவர பெற்ற உன்னத பாடகர். ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் நிலவே வா இந்த பாடலில் விழுந்தவன் இன்னும் ஏனோ என்னால் எழ முடியவில்லை சிந்து பைரவி படத்தில் வரும் தண்ணிதொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி என்ற பாடலை நான் ஏன்  டைரக்டர்…

அ எழுத்தின் சிறப்பு

தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்து, இதுவே முதல் உயிரெழுத்தாகும், அகரம் என்று வழங்கப்படுகிறது. உயிரும், மெய்யுமாக அமைந்த எழுத்துக்களின் வரிசை நெடுங்கணக்கு எனப்படும். ஆங்கிலம் போன்ற மொழிகளில் உயிர் எழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் கலந்ததாக நெடுங்கணக்கு உள்ளது. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில், உயிரெழுத்துக்கள் முதலிலும், மெய்யெழுத்துக்கள் பின்னரும் அமைகின்றன. தமிழின் மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் அகரமே, எழுத்துக்களுக்கு முதலானது என்று குறிப்பிடுகிறது. வள்ளுவரின் திருக்குறளும் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது. குழந்தைகள் முதன் முதலில் ஒலியெழுப்பத்…

ஸ்தூல சூக்குமம்

சூட்சும எல்லையில் மனிதனின் எண்ணத்தைச் செலுத்தினால், சூட்சும சரீரமும் அதைத் தொடர்ந்து வர வேண்டும். எண்ணத்தை சூக்குமத்தில் நிறுத்தும் போது, சூக்கும சரீரம் ஸ்தூல சரீரத்துக்குள் இருக்கக்கூடாது. 

மனோதத்துவச்-சட்டம்.

புறமனத்தில் எழும் எண்ணங்களும், திட்டங்களும் நிறை வேறலாம், நிறைவேறாமலும் போகலாம். ஏனென்றால் புறமனதின் எல்லைக்கோட்டில் இருக்கும் நினைவிற்கு பந்தபாசம் உண்டு. ஆனால் புறமனதிலிருந்து அகமனதிற்குக் கொண்டு செல்லும் எண்ணங்களும், திட்டங்களும் பந்தபாசங்களுக்கு அப்பாற்பட்டவை, தோல்வி அறியாதவை. எனவே அவை நிறைவேறியே தீரும். இது மனேதத்துவச் சட்டம்.

பாதஹஸ்தாசனம் — PADHAHASTHASANAM

பாதஹஸ்தாசனம் — பாதங்கள் சேர்த்து நிமிர்ந்து நிற்கவும். மூச்சை வெளியே விட்டபடி உடலைத் தளர்த்திக் குனிந்து கைகளால் கால்களின் பெருவிரலைப் பிடித்துக் கொள்ளவும். முழங்கால் கொஞ்சமும் வளையக் கூடாது. கால்களை விறைப்பாக வைத்துக் கொள்ளவும். முகத்தை முழங்காலை நோக்கி அணுகச் செய்யவும். ஆரம்பத்தில் கால் விரலைப் பிடிக்க வராது. கைகளை இரு கால்களில் மூங்காலுக்குப் பின்னால் கட்டி, கிட்டிப்போட்டு முகத்தை காலுக்குள் தொட முயற்சிக்க வேண்டும். ஒரிரு வாரங்களில் படத்தில காட்டியபடி முழுநிலை அடையலாம். ஒரு முறைக்கு…

உடலின் உள் நடப்பது

மூன்று பிரிவுகளைக் கொண்ட தொண்ணுற்றாரு மனத் தத்துவங்களில், இரண்டாம் தத்துவம் மொத்தம் முப்பத்தைத் தன்னுள் அடக்கியது இந்த முப்பதில் தச வாயுக்கள் பத்து – அதில் பிராணனும் ஒன்று. இந்தப் பிராணன், லலாட மத்தியில் உருவாகி, சித்ரஹாச நாடியில் பரவி, மூலாதாரத்திற்கு வந்து, மணி பூரக நாபியைச் சந்தித்து, இடகலை, பிங்கலைகளில் ஒடி, ஏழு சூட்சும நாடிகளையும் சந்தித்து, கபாலத்தைச் சுற்றி, நாசியில் பன்னிரண்டங்குலம் எழுந்து, நாலங்குலம் விடுவித்து, எட்டங் குலம், நீண்டு, தான் நின்ற இடத்தில்…

பிறையாசனம் — PIRAIYASANAM

பிறையாசனம் — இவ்வாசனத்தை அர்த்த ( பாதி ) சக்ராசனம் எனகூறுவர். நின்ற நிலையில் காலைச் சற்று அகலமாக வைத்துக் கொண்டு கைகளினால் முதுகைப் பிடித்துக் கொண்டு முடிந்த அளவு பின்னால் வளையவேண்டும். கொஞ்ச நாளில் படத்தில் காட்டியபடி இரண்டு கால்களையும் கைகளினால் பிடித்தபடி பின்னால் வளையும் தன்மை கிடைக்கும். சாதாரண மூச்சு ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம். – பலன்கள் — முதுகுத் தண்டு பலம் பெறும். இளமை…

நின்ற பாத ஆசனம் — STANDING FOOT ASANAM

நின்ற பாத ஆசனம் — இவ்வாசனம் சிரசாசனம், அர்த்த சிரசாசனம் இவற்றிற்கு மாற்று ஆசனம். ஒற்றைக் காலில் நிற்பது. வலது காலில் நின்று கொண்டு இடது காலைமடக்கி குதிகாலை வலது தொடை மேல் வளைத்து ஆசனவாயில் படும்படி நிறுத்த வேண்டும். இரு கைகளையும் உயரே முடிந்த அளவு உயர்த்திக் கும்பிட வேண்டும். கையை விறைப்பாக வைக்கக்கூடாது. பின் இடது காலில் நிற்க வேண்டும். முறைக்கு 1 நிமிடமாக 2 முதல் 4 முறை செய்யலாம். நின்று கொண்டு…

ஒரு கதை

ஒரு வியாபாரி நாய் ஒன்றை அன்புடன் வளர்த்தார். ஒரு சமயம் நாயின் உடல்நிலை சரியில்லாமல் போனது அதை சோதித்த கால்நடை மருத்துவர் அதற்கு மீன் எண்ணெய் கொடுக்கச் சொன்னார். உடனே பெரிய புட்டி நிறைய மீன் எண்ணெய் வாங்கி கொண்டுவருமாறு வேலையாட்களை பணித்தார் வியாபாரி. நாயை மடியில் வைத்து எண்ணெயை கெண்டி வழியாக ஊற்ற நினைத்தார். பலவந்தமாக எதோ செய்யப் போகிறார்கள் என்று நினைத்த நாய் திமிறிக் கொண்டு தப்பியோடியது. ஓடும் பொழுது எண்ணெய் புட்டி கீழே…

திரு அப்துல் கலாம் அவர்கள்

கலாம் வாழ்க்கையை நேசித்தவர், வாழ்ந்து காட்டியவர், மனிதனுக்கு இருக்க வேண்டிய சிறப்பான குணங்கள் அன்பு, பண்பு, பொறுமை, நிதானம், வைராக்கியம், தனக்கும் தன் நாட்டிற்கும் செய்ய வேண்டிய கடமை போன்றவை வேண்டுமென்று பெரியவர்கள் சொன்னதை செயல்வடிவத்தில் செய்து காட்டியவர். அது கலாமின் கடைசிபயணத்தில் நடந்த சம்பவத்தில் கூட நாம் காண முடியும். அந்த நேரத்திலும் அவர் ஆசானக இருந்து நமக்கு போதித்திருக்கிறார். புண்ணியம் செய்திருப்பவர்கள் அந்த போதனையை ஏற்று தன் வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள். அதனால் அவர்கள் சந்தோஷத்தையும்,…

வாழ்க்கைங்கிறது

கோமு -ஒரு சந்தேகம் காமு -என்ன கோமு- வாழ்க்கைங்கிறது என்ன தொடர்ந்து நடந்துகிட்டு இருக்குற மரணமா இல்ல தொடர்ந்து நடந்துகிட்டு இருக்கிற ஜனனமா? காமு- ரெண்டும்தான் கோமு – இப்படி சொன்னா எப்படி கொஞ்சம் விளக்கமா இல்லாட்டி புரியறமாதிரி சொல்லு காமு-  இங்க பாரு சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கிறவனுக்கு மரணத்தோட ஞாபகமே வராது துக்கத்தில வாழ்ந்துகிட்டு இருக்கிறவனுக்கு மரணத்தோட சிந்தனை வந்துகிட்டே இருக்கும் இதுல தமாஷ் என்னன்னா ரெண்டுபேரும் மரணம் அடைவாங்க  கோமு -நான் கேட்டது மரணம்…

நினைவில் வைத்துக்கொள்ள

காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோபத்தை விட கொடிய நெருப்பு இல்லை, எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது. பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை…

அன்னை சாரதா தேவியின் அன்பு முரசு

உடன் சாதனப் பயிற்சியிலும், சொல்லிலும், செயலிலும் உண்மையாக இரு, அப்போது எவ்வளவு இன்பமாக உள்ளோம் என்பதை உணர்வாய். உலகிலுள்ள எல்லாப்பிராணிகளின் மீதும் ஆண்டவனது கருணை மழை பெய்கின்றது. அது வேண்டும் எனக்கேட்பது அவசியம் இல்லை. நீ உண்மையாகத்தியானம் பழகு. அப்போது ஆண்டவனின் அளவற்ற கருணையின் இருப்பை உணர்ந்து கொள்வாய். ஆண்டவன் நேர்மையையும் சத்தியத்தையும், அன்பையுமே விரும்புவான். வெளிப்பகட்டானவாய் வார்த்தைகள் அவனைத் தீண்டுவதுமில்லை.

கோள்களின் கோலாட்டம் -1.3 கிழமைகள்

 கிழமைகள் ஞாயிறு: அனுசம், கேட்டை, விசாகம், மகம், பரணி மிருகசீரிஷம் திங்கள்: பூராடம், அனுசம், மகம், பூரட்டாதி, கார்த்திகை, விசாகம் செவ்வாய்: அவிட்டம், திருவோணம், சதயம், கேட்டை, திருவாதிரை புதன்: அசுவனி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம். வியாழன் : மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி வெள்ளி: ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், அஸ்தம், விசாகம், அனுசம், அவிட்டம். சனி : புனர்பூசம், பூசம், உத்திராடம், அஸ்தம், ரேவதி மேலே சொன்ன கிழமைகளில் வரும் நட்சத்திரங்களில்…

உண்மையான விஷயம்

மரணம் என்பது உண்மையான விஷயம் அது உண்மை தானென்று ஏற்று அதை இயல்பாய் அல்லது துணிவாய் எதிர் நோக்கி வரவேற்க்கும் பக்குவம் யாருக்குதான் இருக்கிறது. பணம், பதவி, படிப்பு, அந்தஸ்து வெற்றி (முதன்மை அடைய வேண்டும். ) போன்றவற்றில் நிலை பெற்ற மனிதர்களிடம் இதை எதிர்பார்ப்பது தவறல்லவா.

அன்னை சாரதா தேவி அன்பு முரசு

உன் இதயத்தின் உள்ளிடத்திருந்து எப்போதும் ஆண்டவன் நாமத்தைக் கூறிக்கொண்டேயிரு, மனப்பூர்வமாக குருதேவரைத் தஞ்சம் அடை, சூழ்நிலையிலுள்ள பொருள்களை உன் மனம் எவ்வாறு கருதுகிறது என்பது பற்றிய கவலை வேண்டாம். ஆத்ம வழியில் முன்னேறியுள்ளோமா இல்லையா என்று கணக்கிட்டுப் பார்த்துக் கவலைப்படுவதில் உன் காலத்தை வீணாக்காதே, நாம் முன்னேறியுள்ளோமா என்று ஆராய்தலே அகங்காரமாகும். உன் குருவினிடத்தும் இஷ்ட தேவதையிடத்தும் நம்பிக்கை வை.

கோவிட் 19 நகைசுவை

நல்லவேளை ஆண்டவன் மனுஷனுக்கு எதுக்கு ரெண்டு காது ஒத்த காது போதும்னு நினைக்கல அப்படி நினைச்சுருந்தார்னா இப்ப நாம எல்லோரும் மாஸ்க் மாட்டுறதுக்கு ரொம்ப சிரமப்பட்டுருப்போம்.

கோள்களின் கோலாட்டம் -1.3 நட்சத்திர குணங்கள்

அசுவனி, ரோகிணி, புனர்பூசம், மகம், அஸ்தம், விசாகம், மூலம், திருவோணம், பூரட்டாதி சத்துவ குணம், இதில் எந்த கிரகம் இருந்தாலும் நன்மை தரும் நிலையாகும். பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுசம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி ரஜோகுணம். இதில் எந்த கிரகம் இருந்தாலும் மத்திம பலன் தரும் நிலையாகும். கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், உத்திரம், சுவாதி, கேட்டை, உத்திராடம், சதயம், ரேவதி  தாம்ஸகுணம். இதில் எந்த கிரகம் இருந்தாலும் தீமையான பலனைத் தரும் நிலையாகும்.

கோள்களின் கோலாட்டம் -1.3 நட்சத்திரங்களும் அதன் அதிபதியும் ராசியும் அதன் அதிபதிகளும் தனுசு முதல் மீனம் வரை

நட்சத்திரம் மூலம் 4 பாதம் நட்.அதிபதி கேது ராசி தனுசு ராசி அதிபதி  குரு நட்சத்திரம் பூராடம் 4 பாதம் நட்.அதிபதி சுக்கிரன் ராசி தனுசு ராசிஅதிபதி குரு நட்சத்திரம் உத்திராடம் 1 பாதம் நட்.அதிபதி சூரியன் ராசி தனுசு ராசி அதிபதி  குரு நட்சத்திரம் உத்திராடம் 3 பாதம் நட்.அதிபதி சூரியன் ராசி மகரம் ராசி அதிபதி  சனி நட்சத்திரம் திருவோணம் 4 பாதம் நட்.அதிபதி சந்திரன் ராசி மகரம் ராசிஅதிபதி சனி நட்சத்திரம் அவிட்டம்…

முந்திரி (Anacardium occidentals)

முந்திரி முந்திரியின் கனி பொய்க்கனி (pseudo -fruit)வகையச் சேர்ந்தது. இது,முதிர்ந்த நிலையில் இனிப்புச் சத்து கொண்டது. மேலும்,இதில்’அஸ்கார்பிக் அமிலமும் நிறைந்துள்ளது. பழம் அல்லது பழச்சாறாகச் செய்து இதனை சாப்பிடலாம். முந்திரிப் பருப்பு அதிகமான சத்துக்கள் நிரம்பியது. இதனை உலர்த்தியோ,அல்லது,நெய் சேர்ந்து வறுத்தோ சாப்பிடலாம் ஜாம்,பலவகையான பானங்கள்,இனிப்புப் பொருட்கள் மற்றும் போதை நீர்மங்கள் தயார் செய்வதற்காகப் பல நாடுகளிலும் முந்திரி பயன்படுத்தப்படுகிறது.

சீத்தா (Annona squamosa)

சீத்தா ஆங்கிலத்தில் சர்க்கரை ஆப்பிள் ( sugar apple) எனப்படுகிறது. அனைத்து மக்களுக்கும் இதன் சதைப்பகுதி விருப்ப உணவாகக் கொள்ளப்படுகிறது. பழத்தில் 1.6% புரதம், கொழும்பு 0.4% , நார்ச்சத்து 3.1%, மாவுச்சத்து 23.5% மற்றும் ,தாது உப்புக்கள் (100 கிராமுக்கு 0.9 கிராம் அளவில்) காணப்படுகின்றன. அதோடு , பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, தையமின், ரைபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி சத்துக்களும் நிறைந்துள்ளன . பழச்சாற்றில் 20% அளவிற்கு சர்க்கரைச் சத்து நிரம்பியுள்ளது குறிப்பிட்டத்தக்கது .…

இப்படியும் கொஞ்சம் யோசியுங்க

ஓர் ஊரில் ஏழை ஒருத்தன் இருந்தான். ஒருநாள், பிள்ளையார் சந்நிதிக்கு வந்த அவன் , ”கணேசா! இது உனக்கே நல்லாருக்கா? நான் நாள் தவறாம வந்து, உன்னை கும்பிட்டுட்டுப் போறேன். என்ன பிரயோசனம்? உன்னை எட்டிக்கூடப் பார்க்கிறதில்லை, என் பக்கத்து வீட்டுக்காரன். ஆனா பாரு, நேத்து அவனுக்கு லாட்டரிச் சீட்டுல ஐம்பதாயிரம் ரூபா பரிசு விழுந்திருக்கு!” என்று புலம்பிவிட்டுப் போனான். ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்த அவன், ”பிள்ளையாரப்பா! நீ பண்றது ரொம்ப அநியாயம்! ஆடிக்கொரு…

௮ரைகீரை (AMARANTHUS TRICOLOR)

௮ரைகீரை தளிர் மற்றும் முதிர்ந்த இலைகளை கீரையாகக் கடைந்தோ ௮ல்லது சாம்பார் செய்தோ சாப்பிடலாம். அதோடு இதன் தண்டுகளைக் கடைந்தோ, கூட்டு ௮ல்லது சாம்பாரில் இட்டு வேகவைத்து சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். இலைகளில் புரதச் சத்து 5.2%, கொழுப்பு 0.3%, நார்ச்சத்து 6.1%, மாவுச்சத்து 3.8% மற்றும் தாது ௨ப்புகள் 2.8% ௮ளவிற்கு நிறைந்துள்ளது. அதோடு ,கால்சியம், பாஸ்பரஸ் ,இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்-சி அகியவையும் அடங்கியுள்ளன.

இரு வேறு பார்வைகள்*

வீட்டிலே காபி கொடுத்தாள்  மனைவி.  உள்ளே ஓர் எறும்பு கிடந்தது. அதைக் கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்துவிட்டான். விளைவு? சண்டை. சந்தோசமான வீடு மூன்று நாள் துக்க வீடாக மாறிவிட்டது. இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது. அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான். அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான். “உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான். உன் காபிக்காக உயிரையே கொடுத்து…

பிரப்பன் கிழங்கு (Calamus rotang):

பிரப்பன் கிழங்கு பிரப்பன் பழத்தைப் பசுமையாக அல்லது ஊறுகாய் செய்தோ சாப்பிடலாம், பலவிதமான நுண் சத்துக்கள் நிறைந்தது. மேலும் இதனால் மிகுதாகம் மற்றும் நாவறட்சியும் கட்டுப்படும். இளம் தண்டுப் பகுதியை பசுமையாகவோ, சமையல் செய்தோ சாப்பிட உடலுக்கு நற்பயன் விளையும்.

சிந்தித்து பார்த்தால்

வேலைக்கு போய் திரும்பி வந்த தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள் .. நம்ம வீட்டு பீரோ சாவியை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? அதைப் போய் ஆயாகிட்ட கொடுப்பாங்களா..? நம்ம வீட்டு பீரோல இருக்குற நகை, பணம் எல்லாம் ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? ஷ்ஷு…. அதெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது… உங்க ATM கார்டை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? என்ன கேள்வி இது..? நீ சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருள். அதையெல்லாம்…

கோள்களின் கோலாட்டம் -1.3 நட்சத்திரங்களும் அதன் அதிபதிகளும்ராசியும் அதன் அதிபதிகளும் சிம்மம் முதல் விருச்சிகம்,வரை

நட்சத்திரம் மகம் 4 பாதம் நட்.அதிபதி கேது ராசி சிம்மம் ராசிஅதிபதி சூரியன் நட்சத்திரம் பூரம் 4 பாதம் நட்.அதிபதி சுக்கிரன் ராசி சிம்மம் ராசி அதிபதி  சூரியன் நட்சத்திரம் உத்திரம் 1 பாதம் நட்.அதிபதி சூரியன் ராசி சிம்மம் ராசி அதிபதி சூரியன் நட்சத்திரம் உத்திரம் 3 பாதம் நட்.அதிபதி சூரியன் ராசி கன்னி ராசி அதிபதி புதன் நட்சத்திரம் அஸ்தம் 4 பாதம் நட்.அதிபதி சந்திரன் ராசி கன்னி ராசிஅதிபதி புதன் நட்சத்திரம் சித்திரை…

பின் பற்ற வேண்டிய விஷயங்கள்

பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.

செம்பிரண்டை(Cissus repens)

செம்பிரண்டை பாரம்பரிய பழங்குடி மக்கள் இதன் பழங்களை விரும்பி உண்கிறார்கள். இலைகளை சூப் செய்தும் சாப்பிடலாம். இதன் அடி வேர்களை சிறு துட்டுகளாக்கி,அரைத்து இஞ்சிக் குழம்பு வைப்பது போல காரக் குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர வாயுப்பிடிப்பு அகலும், தொடை வலியும் குணமாகும்.

காட்டுச் சேனை (amorphophallus sylvaticus)

காட்டுச் சேனை அடிகிழங்குளை சிறு துண்டுகளாக்கி, புளியன் இலை சேர்த்து வேகவைத்து அதிலுள்ள அரிப்புத் தன்மையான(நமநமக்கும்) காரப்பண்பினை நீக்கி விடலாம். பின்னர்,இதனை,பொரியல்,காரக்குழம்பு அல்லது ஊறுகாயாகச் செய்து சாப்பிடலாம். பாரம்பரிய மக்களிடம் இந்தப் பழக்கம் இன்றும் உள்ளது.

சிரசாசனம் — SIRASASANAM

சிரசாசனம்   15 நாட்கள் அர்த்த சிரசாசனம் செய்த பின்புதான் சிரசானம் தொடங்க வேண்டும். அர்த்த சிரசாசன நிலையில் சுவர் ஒரமாகவோ, மூலையிலோ இருந்து கொண்டு இலேசாக மூச்சுசப் பிடித்து கால்கள் இரண்டையும் உயரே மெதுவாகத் தூக்க வேண்டும். கால்களை விறைப்பாக இல்லாமல் சாதாரண நிலையில் வைக்க வேண்டும். சாதாரண மூச்சு. கண் மூடி இருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் பிறர் உதவியுடன் செய்யலாம். நன்றாக பேலன்ஸ் கிடைத்தபின் தனியாக நிற்கலாம். ஆரம்பத்தில் 3 நிமிடம் முதல் 5…

அர்த்த சிரசாசனம் — ARDHA SIRASASANAM

அர்த்த சிரசாசனம் கெட்டியான விரிப்பில மண்டியிட்டு உட்காரவும். விரல்களைச் சேர்த்து முக்கோணம் போல் விரிப்பின் மேல் அமர்த்தவும். உச்சந்தலையைத் தரையில்அமர்ததி, பிடரியில் விரல்கள் ஒட்டியவாறு குனிந்து அமரவும். பிருஷ்டபாகத்தைத் தூக்கி கால்களை அருகே இழுத்து முக்கோண வடிவமாக நிற்கவும். சாதாரண மூச்சு. கண் மூடியிருக்க வேண்டும். உடல் கனம் யாவும் கையால் தாங்கும்படியாக இருக்கவேண்டும். ஒருமுறைக்கு 1 முதல் 2 நிமிடம் வரை இருக்கலாம். பின் மெதுவாக ஆசனத்தைக் கலைக்க வேண்டும். 2 முதல் 5 முறை…

சிந்தனை சாதனை

சாதாரண எண்ணத்தைக் கொண்டு சாதனை அடைந்தவர்கள் உண்டா? முயற்சியின்றி தேர்ச்சிப் பெற்றவர்கள் உண்டா? தியகமின்றி தங்கம் வென்றவர்கள் உண்டா? கவலைகள்,  கனவுகள், இல்லாத கலைஞர்கள் உண்டா? அனைவருக்கும் எளிதில் கிடைக்க சாதனை என்ன சாதாரண விஷயமா?                                                   சித்தேஷ்

கோள்களின் கோலாட்டம் -1-1.3 நட்சத்திரங்களும் அதன் அதிபதிகளும் ராசியும் அதன் அதிபதிகளும் மேஷம் முதல் கடகம் வரை

நட்சத்திரம் அஸ்வினி பாதம் 4 நட்.அதிபதி  கேது ராசி  மேஷம் ராசி அதிபதி செவ்வாய் நட்சத்திரம்  பரணி 4 பாதம் நட்.அதிபதி சுக்கிரன் ராசி மேஷம் ராசி அதிபதி  செவ்வாய் நட்சத்திரம் கார்த்திகை 1 பாதம் நட்.அதிபதி சூரியன் ராசி மேஷம் ராசி அதிபதி  செவ்வாய் நட்சத்திரம் கார்த்திகை 3 பாதம் நட்.அதிபதி சூரியன் ராசி ரிஷபம் ராசி அதிபதி  சுக்கிரன்  நட்சத்திரம் ரோகிணி 4 பாதம் நட்.அதிபதி சந்திரன் ராசி ரிஷபம் ராசி அதிபதி  சுக்கிரன்…

குரு

வேண்டும் பேறு குருவைக் கண்டிட! வேண்டும் ஜென்மங்கள் குருவருள் பருகிட வேண்டும் காலம் குருவை அறிந்திட வேண்டும் ஞானம் குருவைப் புரிந்திட வேண்டும் புண்ணியம் குருவை வேண்டிட வேண்டும் அறிவு குருவழி நடந்திட

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 1.2 ராசிகளின் அமைப்பு :- துலாம் முதல் மீனம் வரை

இராசி துலாம் 180 பாகைமுதல் 210பாகை வரை சரராசி தன்மைகள் காமம் – வெகுளி – மயக்கம் இரவில் பலம் இராசி விருச்சிகம் 210 பாகைமுதல் 240பாகை வரை ஸ்திர ராசி தன்மைகள் அறம் – பொருள் – இன்பம் இரவில் பலம் இராசி தனுசு 240 பாகைமுதல் 270 பாகைவரை உபயராசி தன்மைகள் நியாயம் – தர்மம் – புண்ணியம் இரவில் பலம் இராசி மகரம் 270 பாகைமுதல் 300பாகை வரை சரராசி தன்மைகள் ஆணவம்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.2 ராசிகளின் அமைப்பு :-

ராசிகளின் அமைப்பு :- வானத்தில் பூமியானது சூரியனை சுற்றி வரும் பாதை ” எக்லிப்டிக்” எனப்படும். இதற்கு இருபுறமும் 5 பாகை சுற்று வளைய பட்டைப்பகுதி இராசி சக்கரம் எனப்படும். இந்த சுற்று வளைய பகுதிக்குத்தான் கோள்களும் சந்திரனும் சுற்றி வருகின்றன. இது 12 பாகமாக பிரிக்கப்பட்டு 12 ராசியாக கொண்டு உள்ளது. இராசி  மேசம் சரராசி 0 பாகை முதல் 30 பாகை வரை தன்மைகள் நியாயம் தர்மம் – புண்ணியம்  இரவில் பலம் இராசி…

இறைவனும் ஒரு பொறியாளன் தான்

மனித மூளையில் சேமிப்புத் திறன் 256 GB பில்லியன். ஹார்ட் டிஸ்க் ( சராசரி 250 GB ) எண்ணிக்கைப் படி பார்த்தால் சுமார் 1.2 பில்லியன் ஹார்ட் டிஸ்க்குகளுக்கு இணையானது மனித மூளை. இந்த சேமிப்புத் திறன் அளவிற்கு குருந்தகடுகளை ( சி.டி ) அடுக்கினால் அது நிலவைத் தாண்டி செல்லும். இத்தனையும், வெறும் 1,400 கிராமில் அடங்கியது என்ன விந்தை!!

அர்த்த மத்ச்யேந்திராசனம் — ARDHA MATSYENDRASANAM

அர்த்த மத்ச்யேந்திராசனம் —  உட்கார்ந்து இடது காலை மடக்கி இடது குதியை தொடைகள் சந்திற்குக் கொண்டு வரவும். வலது முழங்காலை மடக்கி நிறுத்தி, இடது முழங்காலருகே வலது பாகத்தைக் கொண்டு வந்து தூக்கி இடது தொடையைத் தாண்டி பக்கத்தில் சித்திரத்தில் காட்டியவாறு நிறுத்தவும். உடலை வலது பக்கம் திருப்பவும். இடது கையை வலது முழங்காலுக்கு வெளியே வீசி, பின்புறமாய் முழங்காலை அமர்த்திட இடது கையால் இடது முழங்காலையும் பிடித்துக் கொள்ளவும். முதுகை வலது பக்கம் திருப்பி, வலது…

சக்தி மயமான ஆற்றல்

அகிலமெங்கும் பரந்து விரிந்திருக்கும் சக்தி மயமான ஆற்றலும் திறனும் மனிதனுள் அடக்கம். பரவிவிரிந்திருக்கும் அந்தப் பூரணத்தின் சர்வ சக்தி வடிவே மனிதன். தன்னுள் அடங்கி ஒடுங்கியிருக்கும் பிரம்மாண்டமான சக்தியை வெளிக்கொணர்ந்து விரிக்கும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு. இந்த அறிவின் வினையே கடவுள் என்று மனிதன் அறிந்து விட்டால், தன்னிலிருந்து பேராற்றலை அவன் வெளிப்படுத்தமுடியும்.

மகாமுத்ரா — MAHAMUDRA

மகாமுத்ரா — உசர்ட்டாசனத்திற்கு மாற்று ஆசனம். வஜிராசன நிலையில் கைகளை முதுகின் பின்புறம் படத்தில் காட்டியபடி கட்டிக் கொண்டு, தலையைத் தரையில் தொடும்படி முன்னால் குனியவும். உடலை 3 மடிப்புகளாக வளைப்பதால் உடல் விறைப்புத்தன்மை குறையும். சாதாரண மூச்சு. 20 எண்ணும் வரை இருந்தால் போதுமானது. 3 முறை செய்யவும் .பலன்கள் — வாத நோய்க்கு சிறந்த ஆசனம். யோக முத்ரா ஆசனத்திற்கு உள்ள பலன்கள் இதற்குக் கிடைக்கும்.

உசர்ட்டாசனம் — USSERT ASANAM

உசர்ட்டாசனம் —  உசர்ட் ஆசனம் என்றால் ஒட்டக ஆசனம் எனப்பெயர். மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு கைகளால் பின்னால் இரு கணுக்கால்களையும் பிடித்துக்கொண்டு பிருஷ்ட பாகத்தை காலில் உட்கார்ந்து இருப்பதிலிருந்து கிளப்பி தலையைப் பின்னால் படத்தில் காட்டியபடி தொங்கப் போட வேண்டும். மூச்சை முடிந்த மட்டும் 4, 5 முறை வேகமாக இழுத்து விட வேண்டும். பின் காலில் உட்கார்ந்து கைகளை எடுக்க வேண்டும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்ய வேண்டும்.…

கால அட்டவணை

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு. இதோ கால அட்ட வணை: விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும். காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது. காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும். காலை 9…

சித்த-மருத்துவத்தில் அழிஞ்சில்(alangium saliviifolium)

அழிஞ்சில் அழிஞ்சில் பழங்கள் உண்ணுவதற்கு இனிப்புச் சுவையுடன் கூடிய புளிப்புத் தன்மை கொண்டவை, மார்ப்புச் சளியைக் குறைக்கும் மற்றும் மலமிளக்கும் தன்மையானவை. குறைந்த அளவில் உண்பது கண் ஒளியைக் கூட்டுவதுடன் இரத்தப் போக்கையும் தடுக்கும்

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 1

கேள்வி – தெய்வீக அருள் எப்போது எனக்குக் கிட்டும்? பதில் – தவம் செய்வதால் மட்டும் தெய்வத்தின் அருள் கிடைத்துவிடும் என்ற நியதி இல்லை பழங்காலத்தில் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தலைகீழாகத் தொங்கியும் தீயிடை நின்றும் மகரிஷிகள் தவம் செய்தனர். அப்போதும் கூட ஒரு சிலரே கடவுளின் அருள் பெற்றனர். கேள்வி – அன்னையே எவ்வளவோ தவம் செய்தேன், எவ்வளவோ ஜபமும் செய்தேன். ஆனால் அடைந்த பலன் ஏதுமில்லையே? பதில் — விலை கொடுத்து வாங்கக் கடவுள்…