தன்னை பற்றி யோசிக்க

வார்த்தைகளுக்கு குதிக்காமல் என்ன சொல்கிறார்கள் என்று சொன்னவரின் கோபத்தை எடுத்துப் போட்டுவிட்டு செய்தியை மட்டும் எடுத்துக் கொள்ளும் நிதானம் கைகூடும் போது, ஒருவர் தன்னை பற்றி கூர்மையாய் யோசிப்பதற்க்கு, நிறைய வழிகள் இருக்கின்றன. தலைமுறை, தலைமுறையாய் கூர்மையாய் யோசிக்க சொல்லி கொடுக்கப்பட்ட விஷயங்கள் நாகரீகம் என்ற பெயரில் மறைந்து ஒழிந்து விட்டது. அதனால் தொலைநோக்கு பார்வை என்பதே இல்லாமல் போய்விட்டது தனக்கு பின் வரும் சந்ததியினரை பற்றிய நினைவே இல்லாமல் போய்விட்டது என்ன செய்வது வளர்ச்சி,நாகரீகம் என்ற…

நாலு பேர்

நாலுபேர் பேசுகிறார்கள், நாலு பேர் பார்க்கிறார்கள் என்று நினத்தே நாம் நம்மை பல இடங்களில் இழக்கிறோம். ஆயுளில் முக்கால் வாசி காலம் இப்படியே போய்விட்டால் தனக்கென வாழும் காலம் எப்போது எந்த அளவு

அன்பு-அதிகாரம்

அன்பு பழக நேரமாகும். அதிகாரம் நொடியில் பிரயோகம் செய்யப்படும். பேசி புரிந்து கொள்வது போல் சுகம் எதுவுமில்லை. என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தலைவிட ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று உடனே பார்த்துவிடுவது நல்லது.

தண்டித்தலில் அடி நோக்கம்

தண்டித்தலில் அடி நோக்கம் சொல்லி தருதல். தண்டிப்பது கூட கூடலை போல ஒரு சுவையான விஷயம். ஆனால் அதை கற்க வேண்டும் கூடலையே நாம் கற்றதில்லை பின் எப்படி இதை கற்பது எல்லாம் தெரிந்த மனோபாவத்தில் நாம் இருக்கும் போது கூடலையோ, தண்டித்தலையோ கற்பது எங்கனம்

எப்போதும் மனிதனாய் வாழ

உனக்காக வாழ்கிறேன் என்று உன்னை நேசிப்பவர் சொல்லியிருக்கலாம்..!!! ஆனால்..!!! உன்னால் தான் வாழ்கிறேன் என்று  யாரோ ஒருவர் சொல்லியிருக்கலாம்  அப்போது நீ மனிதனாக வாழ்ந்திருக்கிறாய்  என்று அர்த்தம்……!  நேசிப்பவர் சொன்னது ஆசையினால் அல்லது தேவையினால் சொல்லியிருக்கலாம் ஆனால் உன்னால் தான் வாழ்கிறேன் என்று சொல்பவர் எதை வைத்து சொல்லியிருப்பார் என்று உனக்கு தெரிந்தது என்றால் நீ எப்போதும் மனிதனாய் வாழ உள்ள சூத்திரம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம் அதை பிடித்துக்கொள் விட்டுவிடாதே  

ஒரு எடக்கு மடக்கு கதை 2

அவள் விடுவாளா! மறுநாள், எக்ஸ்ட்ராவாக ஒரு சின்ன எவர் சில்வர் தூக்கில் எண்ணெய் ஊற்றித் தந்தாள். ”வாக்கிங் போகும்போது துப்பும்படி ஆயிட்டா, இதை வாயில் ஊத்திக்குங்க” என்றாள். தினமும் அவர் இப்படி எவர்சில்வர் தூக்கோடு நடந்து போவதை, அடுத்த தெருவில் உள்ள ஒரு பெண்மணி கவனித்துவிட்டு, ”தினமும் எண்ணெய் கொண்டு போறீங்களே, கோயிலுக்கா?” என்று கேட்டாள். அவளிடம், தான் எண்ணெயை வாயில் ஊற்றிக் கொப்பளிப்பதை யெல்லாம் விளக்க விரும்பாமல், ‘ஆமாம்’ என்று தலையாட்டி வைத்தார் நம்மாள். மறுநாள்……

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம் 3

செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவர்களின் தொடர்பை பெற்றிருக்கும் இந்த விருச்சிக லக்கினக்காரகர்கள் தீய செயலுக்கு உட்படுவதும், சூதாட்டம், மது, மங்கை போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பலருக்கு அனேக மனைவிகள் உண்டாவதும் உண்டு. இத்தகைய அமைப்பு பெற்றவர்களில் சிலர், ‘கொலை பாதகம் ‘ ராகு, கேதுவுடன், புதன் சேர்க்கை பெற்றிருக்கும் அமைப்புக்கொண்ட விருச்சிக லக்கினக்காரகர்கள் நல்ல நிலைமையில் இருப்பதையும் காண்கிறோம். குரு, புதன், சேர்க்கை புத்திர நாசத்தையும் குடும்பம் பாதிப்படைதலும் மூடத்…

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம் 2

இந்த விருச்சிக லக்கினத்தாருக்கு சனி அதிக பாதிப்பைத் தருவதில்லை. இந்த சனியோடு புதன், குரு சேர்க்கை பெறின், ஏதோ ஒரு வகையில் திறமை பெற்றவராகவும், தரித்திரமில்லா வாழ்க்கை வாழ்பவராகவும், வாக்கு மேன்மை தெய்வ பலம் ஆகியவை சிறந்து விளங்கும் படி இருப்பதையும் நடைமுறையில் காணலாம். விருச்சிக லக்கினத்திற்கு 2, 5க்குரிய குரு எங்கு இருப்பினும் நன்மைகள் தராமல் இருக்கமாட்டார். இவரோடு சம்பந்தப்பட்ட சூரியன், சந்திரன் ஆகிய இருவரும் ஆதிபத்திய காரகப்படி, நல்ல யோகத்தை தர காரணமாகிறார்கள். நடைமுறையில்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 12

பிறவிக் கடலாகிய இதை எப்படி நான் கடப்பேன்? எனக்குச் செல்லும் வழி எது? நான் கைக்கொள்ள வேண்டிய உபாயம் எத்தகையதாகும்? இதை ஒரு சிறிதும் நான் அறிய மாட்டேன். பிரபுவே கருணையால் காத்தருளும். பிறவித் துன்பத்தை ஒழிக்கும் வழியில் என்னைக்கூட்டி வைத்தருளும். இவ்வாறு பேசுபவனும் தம்மைச் சரணடைந்தவனும் காட்டுத்தீ போன்ற பிறவித் துன்பத்தால் பொசுக்கப்பட்டவனுமாகிய அவனைக் கருணாரஸத்தின் கசிவுடன் கூடிய பார்வையால் உற்று நோக்கி விரைவில் பயமின்மையை அளிக்கிறார் மஹாத்மாவாகிய குரு. பாதுகாப்பை விரும்புபவனும் மோக்ஷத்தில் நாட்டமுள்ளவனும்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 25

தூய்மையான மனமுடைய ஒருவன் இறைவன் நாமத்தை ஜபிக்கும்போது, அந்நாமம் அவனுள்ளிருந்து தானகவே குமிழியிட்டுக் கிளம்புவதை அவன் உணர்கிறான். நாமத்தை ஒத அவன் பாடுபட வேண்டும். ஒவ்வொருவரும் சோம்பேறித்தனத்தை விடுத்து, குறிப்பிட்ட காலத்தில் ஜபமும், தியானமும் செய்யப்பழகுதல் வேண்டும். மனமே எல்லாம். ” இது சுத்தமானது, இது அசுத்தமானது ” என்பதை மனத்தினாலேயே ஒருவன் உணர்கிறான். பிறரிடத்துக் குற்றம் காணும் ஒருவன், முதன் முதல் தன் மனத்தையே மாசுபடுத்திக் கொள்பவன் ஆகிறான்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 7

நாடிகளின் ரூப நிறங்கள் ….. காந்தாரி என்கிற நாடி மயிலின் கண்டத்தது வன்னமுடியதாய் இடகலை நாடிக்கு பின்புறத்தில் சேர்ந்து சவ்வியபாதம் முதல் நேத்திர அந்தம் வரையிலும் வியாபித்து இருக்கின்றது. ஹஸ்தி ஜிம்மை என்னும் நாடி கருத்த அல்லி புஷ்பத்தின் நிறத்தை ஒத்து இடைகலையின் முன்புறத்தில் வியாபித்து சம்மியபாகத்தில் சிரம் முதல் பாதாங்குண்டம் வரையிலும் வியாபித்திருக்கும். பூஷா என்கிற நாடி கருத்த மேகநிறத்தை அடைந்து பிங்கலை என்கிற நாடிக்கு மேல்பாகத்தில் இருந்து வலது பக்கத்தின் பாத அங்குலம் முதல்…

பிரபஞ்ச சக்திகள் 2

பிரபஞ்ச சக்தியானது உடலில் கரு உற்பத்திக்கு முக்கிய காரணமாகிறது.சுக்கிலமும் சுரோணிதமும் இணையும்போது, காற்று நீர், நெருப்பு, மூன்றும் சேர்ந்து மண் உரு கொண்டு உடலாய் மாறி உயிர் சேர்ந்து வாதம், பித்தம், கபம் என நிலைப்படுகின்றது. இவ்வாறு பஞ்ச பூதங்களுள் அமைந்துள்ள உடலானது உலகில் உள்ள தாதுப்பொருட்கள், தாவரப் பொருட்கள், அனைத்தும் சங்கமமாகின்றது. மனித உடல் ஐம்பெரும் பூதங்கள் அடங்கிய சிறிய பிரபஞ்சம் என்றே சித்தர்கள் கூறுகின்றனர்.மேலும் மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் பிரபஞ்சத்தில் உள்ள…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 24

மனம் ஒவ்வொன்றும் மனத்தைப் பொறுத்தே உள்ளது. மனத்தூய்மையின்றி, ஒரு காரியத்தையும் சாதிக்க இயலாது. முக்தியை நாடுவோனுக்குக் குரு, இறைவன், பக்தர்கள் ஆகியோரது அருள் கிட்டியிருந்தாலும், தனது மனத்தின் அருளைப் பெறாது போய் விடின் அவன் துன்பத்துக்காளாவான். இறைநெறி நிற்பவனின் மனம் அவனுக்கே அருள் புரிவதாக இருக்க வேண்டும். கடவுளை ஒருவன் தரிசிப்பதால் வேறென்ன அடைகிறான்? அவனுக்கென இரு கொம்புகள் முளைக்கின்றனவா? அல்ல, அவன் மனம் பரிசுத்தமடைகிறது. மனம் பரிசுத்தமடைவதால் அவனுக்கு மெய்யறிவும், ஞானவிழிப்பும் ஏற்படுகின்றன. பரிசுத்தமான மனமுடைய…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் – 4

தேஹ வியாபக நாடிகள் ….. மூலாதாரத்தில் ஆசிரயித்து தலைமுதல் பாதம் வரையிலும் வியாபித்து இருக்கும் எழுநூறு நாடிகளால் மனித தேகமானது மிருதங்கத்தை சருமத்தின் வாறினால் கட்டப்பட்டிருப்பது போல் கட்டப்பட்டு இருக்கிறது. முக்கிய நாடிகள் ….. மேல் கூறிய எழுநூறு நாடிகளில் இடகலை, பிங்கலை, சுழிமுனை, சரஸ்வதி, வாருணி, பூஷா, ஹஸ்திஜிம்ஹ, யசஸ்வினி, விஸ்வோதரி, குஹ¨ சங்சினி, பயிஸ்வினீ, அலம்புசா, காந்தாரி என்னும் பதிநாலு நாடிகள் முக்கியமானவை, இவைகள் பிராணவாஹினிகளாய் ஜீவகோசத்தில் வியாபித்து இருக்கின்றதுகள். இந்த பதிநாலுநாடிகளில் பத்து…

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 4

5 – ஆம் பாவாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையானநட்சத்திரத்தில் 9 – ஆம் பாவாதிபதி நின்றால் தந்தையால் குழந்தைகளுக்கு எதிரிடையான செயல்கள் இதேபோல் பலன்கள் மாறி மாறி செயல்படும் என்பதை ஜோதிட கலைஞர்கள் வாசகநேயர்கள் யுக்தியோடு தெரிந்து செயல்படுவது நல்லது. இதன் மூலம் மிக நுட்பமான சூட்சுமமான பலன்களை எளிதில் அறியலாம்.. எந்த ஒரு கிரகம் நின்ற நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரத்தில் சந்திரன் அல்லது லக்கினம் அல்லது லக்கினாதிபதி நின்றால் அந்த கிரகத்தின் காரகத்திற்கு எதிர்ப்பாக ஜாதக…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு – 9

வானத்தில் நீல நிறமும், கானலில் நீரும், கட்டையில் ஒரு புருஷனும் தோன்றுவது போல் ஆத்மாவில் உலகம் தோன்றுகிறது. வானத்தில் மேகங்கள் நகர்ந்து செல்லும் பொழுது சந்திரன் நகர்வதாய் பிரமை உண்டாகிறது, அவ்வாறே அஞ்ஞானத்தால் ஒருவனுக்கு ஆத்மா உடல் என்ற பிரமை உண்டாகிறது. இங்ஙனம் அஞ்ஞானத்தால் ஆத்மாவிடம் உடலெனும் பிரமை தோன்றுகிறது. ஆத்மானுபவத்தால் அது மீண்டும் பரமாத்மாவிடம் மறைந்து போகிறது. மதிமயக்கத்தால் ஒருவன் பழுதையைக் காணாமல் பாம்பைக் காணுவது போல் அஞ்ஞானியானவன் உண்மையைக் காணாமல் வியவஹார உலகைக் காண்கிறான்.…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 23

ஆத்மிகக் காட்சி நிறைவுறும் போது, ஒருவன் தன் இதயத்தில் குடிகொண்டுள்ள ஆண்டவனே அமுக்கப்பட்டவர், துன்புறுத்தப்பட்டவர், தீண்டாதோர், சண்டாளர் ஆகிய மற்றெல்லாரிடத்தும் இருப்பதை உணர்வான்,  இவ்வுணர்வு உண்மையான பணிவுடைமையைத் தரும். ஆண்டவன் எல்லோருக்கும் உரியவன் தீவிரமாகச் சாதனை செய்தால் சீக்கிரமாக அவனை அடையலாம். ஆண்டவனது நாமத்தை விரல்களைக்கொண்டு ஜபித்து அதன் மூலம் அவை புனிதம் அடைதற்காகவே அவன் நமக்கு விரல்களை அளித்துள்ளான். மேகத்தைக் காற்று கலைப்பதைப் போல ஆண்டவன் நாமம் உலகப்பற்றாகிய மேகத்தைக் கலைத்துவிடும்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 22

வானத்து நிலா மேகத்தால் மூடப்பட்டிருக்கிறது. காற்று கொஞ்சங் கொஞ்சமாக அம்மேகத்தை விலக்க வேண்டியதாகிறது, அப்போதுதான் நிலவைக் காணமுடியும். அது திடீரெனப் போய் விடுகிறதா? ஆத்மிகப் பூரணத்துவமும் அது போலத்தான். பழைய செயல்களின் பலன் கொஞ்சங் கொஞ்சமாகவே தீரும். ஆண்டவனை உணர்ந்தால் அவ்வாறு உணர்ந்தோர்க்கு ஆண்டவன் ஞானத்தையும் உள்ளொளியையும் அளிப்பான், அதனை அவரே உணர்வர்.

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு  7

பாம்பு என்ற மதிமயக்கம் பழுதை என்ற அறிவால் எங்ஙனம் நீங்குமோ அவ்வாறு பரிசுத்தமான இரண்டற்ற பிரம்ம ஞானத்தால் மாயையானது அழிவுறும். பிரசித்தமான தத்தம் செயல்களால் ரஜஸ், தமஸ், ஸத்துவம் என்று நன்குணரப்பட்ட குணங்கள் அந்த மாயையைச் சார்ந்தவை. அவித்தை என்பது மனதிற்குப் புறம்பானதன்று. பிறவித் தளைக்கும் பிறவிச் சுழலுக்கும் காரணமான அவித்தை மனதேயாகும். அது (மனது) அழிந்தால் அவித்தை அனைத்தும் அழியும். ஆத்மா உடலை ஆள்வதாய் அதனுள் உறைவது, உடல் ஆளப்படுவதாய் வெளியே இருப்பது, அப்படியிருந்தும் மனிதர்கள்…

பத்மாசனம் — PADMASANAM

விரிப்பின் மேல் அமர்ந்து இருகால்களையும் நேராக நீட்டி சுவாசத்தை வெளிவிட்டு வலது முழங்காலை மடித்து மடிக்கப்பட்ட வலது காலின் குதிக்கால் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைக்கவும். பின்னர் இடதுகாலை மடக்கி மடித்து வலது காலின் தொடையின் அருகில் அடிவயிற்றை தொட்டுக் கொண்டிருக்கும் படி வைக்கவும். இவ்வாறு மாற்றி வைக்கப்பட்ட இரண்டு குதிகால்களும் மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதவாது, மார்பு, முகம் ஆகியவற்றை நேராக நிமிர்த்தி முதுகை வளைக்காமல் சுவாசத்தை வெளியிட்டுக் கொண்டு நிமிர்ந்து இருந்து இரண்டு கைகளையும்…

தாவரங்களின் உணர்வுகள்.

தாவரங்கள் பேசுவதை மனிதர்களால் கேட்க முடியுமா? ஆமாம் அது சாத்தியம்தான். சொற்களை பயன்படுத்தி பேசுவது என்ற மனித வழக்கத்தின்படி, அவை பேசுவதில்லை. தாவரங்களால் கட்டமைக்கப்பட்ட சுற்றுச் சூழலுக்கு இயற்கையிலேயே ஒத்திசைவு கொண்ட உயிரினங்கள் நாம். எனவே, ஏதாவது ஒரு வழியில் அவற்றுடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் எப்படி ஒருவரோடு மற்றொருவர் இணைந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியும். இன்றைய சூழ்நிலையில் சீர்கேடுகளுக்கு முக்கிய காரணம், அவற்றுடன் கொண்டிருந்த உறவை நாம் மறுத்து…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்தமுரசு.6

மாயை என்பது அவ்யக்தம் எனப்பெயருடையது. அது ஆதியற்றது, அஞ்ஞான வடிவானது. முக்குணமயமானது, பரமேசவரனுடைய உன்னத சக்தியாயிருப்பது. சிறந்த புத்திமானால்தான் அதனுடைய செயல்களினின்று அது ஊகித்தறியப்படும். அந்த மாயையால் இந்த உலகம் முழுவதும் பிறப்பிக்கப்படுகிறது. மாயை இருப்புடையதன்று, இருப்பில்லாதது மன்று, இரு வகைப் பட்டதுமன்று, பகுக்கப்பட்டதாகவோ, பகுக்கப்படாததாகவோ இருவகைப்பட்டதாகவோ அது இல்லை, அங்கங்களை உடையதாகவோ, அங்கங்களில்லாததாகவோ, இருவகைப்பட்டதாகவோ அது இல்லை, அது மிகவும் ஆச்சரியமானது. இப்படிப்பட்டதென்று கூற முடியாத ரூபமுடையது.

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு 5

காலையில் தோன்றி மாலையில் அழியும் அநித்தியப் பொருள்களைப் போல் அஞ்ஞானத்தால் தோன்றும் பயன் அனைத்தும் அழிவுடையது.‍ அஞ்ஞானனியானவன் பயனில் ஆசை வைத்து கர்த்ருத்வ போக்த்ருத்வ புத்தியுடன் கருமம் செய்கிறான். அவன் மதிமயங்கியவன். ‘ நான் செய்கிறேன் ‘ ‘ நான் அனுபவிக்கிறேன் ‘ என்றெல்லாம் எண்ணுகிறான். அஞ்ஞானிகள் தத்தம் முன்வினைக்குத் தக்கபடி உலக விஷயமாகிற கடையைப் பரப்பி வைத்துக் கொண்டும், தங்கள் விதியை நொந்து கொண்டும் வாழ்க்கையில் ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.

குதபாத ஆசனம்

.குதபாத ஆசனம் ( குருவாய் ) படத்திலுள்ளபடி இரண்டு பாதங்களையும் ஒன்றோடொன்று சேர்த்து ஆசனவாயின் பக்கத்தில் சேர்த்து இரண்டு கைகளையும் இடுப்புக்கு நேராகக் கீழே ஊன்றிச் சைக்கிள் சீட்டின் மேல் அமருவதுபோல் இரண்டு பாதங்கள் மேல் உட்கார வேண்டும். பிருஷ்ட பாகம் பூமியில் படக்கூடாது. இரு கைகளையும் இரண்டு முழங்காலின் மேல் சின் முத்திரையுடன் வைத்து 3 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை செய்ய வேண்டும். சாதாரணமாக மூச்சை இழுத்துவிட வேண்டும். குறிப்பு — புத்திர…

அமெரிக்க டாலரை பற்றி சில வரிகள்

1929 – ம் ஆண்டு முதல் 1933 வரையில் நீடித்த உலகப் பொருளாதார வீழ்ச்சி, உலகப் பொருளாதாரத்தின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 30 சதவீதம் அளவுக்குச் சரிவு ஏற்பட்டது. சுமார் 1 கோடியே 30 லட்சம் பேர் வேலையிழந்தனர். 1929 – ல் வீழ்ச்சியின் தொடக்கத்தில் 3 சதவீதம் ஆக இருந்த வேலையில்லா திண்டாட்டடம் 1933 – ல் 25 சதவீதம் ஆக உயர்ந்து விட்டது. 85, 000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. லட்சக் கணக்கானோர்…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்தமுர சு. 4

இடைவிடாத தியானத்தால் ‘ நான் பிரம்மம் ‘ எனும் உண்மை மனதில் பதியும் போது அது அஞ்ஞானத்தையும் அதன் திரிசல்களையும் ஒரு ரஸாயனம் ( மருந்து ) நோயைப் போக்குவது போல் போக்கிவிடுகிறது. ஒருவன் படகில் செல்லும் போது கரையிலுள்ள மரங்கள் படகு செல்லும் திக்கிற்கு எதிராக நகர்வது போல் அவனுக்கு பிரமை ஏற்படுகிறது. பிறவிச் சுழலில் ஆத்மா உழல்வதாய்த் தோன்றுவதும் அப்படிப்பட்ட பிரமையே. ஆத்மாவினிடம் அனாத்மக் கற்பனையே அஞ்ஞானம் எனப்படுவது. அஞ்ஞானத்தின் ஒழிவே மோக்ஷம். இருள்,…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 21

உன் வேலைகளைச் செய்வதோடு தியானமும் பழகாதிருப்பின், செய்வது விரும்பத் தக்கதா, தகாததா என்பதைப் பிரித்தறிவது எப்படி? காலை, மாலைச் சந்தியா காலமே கடவுள் வணக்கத்திற்கு ஏற்றது. அப்போது மனம் தூய்மையாக இருக்கும். எவ்வளவோ தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டிருப்பினும் கடவுளை நினைத்து வணங்கவாவது வேண்டும். கொஞ்சங், கொஞ்சமாகத் தியானமும் பிரார்த்தனையும் செய்யும் நேரத்தை அதிமாக்க வேண்டும். மந்திரம் உடலைச் சுத்தமாக்குகின்றது. கடவுள் நாமத்தை உச்சரிப்பதால் மனிதன் பரிசுத்தனாகிறான். ஆகையால் அவன் நாமத்தை எப்பொழுதும் ஜபித்துக் கொண்டிரு. நீ செய்யும்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 19

குழந்தாய், தவமோ, பூஜையோ இப்போது முதலே தொடங்கு, பின்னால் இவைகளைப் பற்றல் முடியுமா? எதை அடைய வேண்டுமோ அதனை இப்போதே அடை, இதுவே சரியான சமயம். கடவுளின் காட்சி பெறவில்லை என்பதால் சாதனையைத் தளர்த்தி விடாதே. தூண்டில் போடுபவன் தூண்டிலோடு வந்து அமர்ந்த ஒவ்வொரு நாளும் பெரிய மீனையா பிடித்துவிடுகிறான்? அவன் காத்துக் காத்து உட்கார்ந்திருக்க வேண்டும். பலமுறை அவன் ஏமாற்றமும் அடைகிறான்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 18

ஜபம் செய்யுங்காலத்தில் ஆண்டவனின் நாமத்தை உன்னால் இயன்ற அளவு மிக்க அன்போடும், நேர்மையோடும், ஆத்ம சமர்ப்பணத்தோடும் ஜெபித்து வா. நாள்தோறும் தியானம் செய்வதற்கு, முன் இவ்வுலகில் உனது திக்கற்ற நிலை‍யை எண்ணிப் பார், இதன் பின் உன் குருநாதர் கூறிய முறையில் சாதனை செய்யச் தொடங்கு. ஞானப் பயிற்சி முறைகளால் பூர்வ கர்மத் தளைகள் அறுக்கப்படுகின்றன. ஆனால் பிரேமபக்தியின்றிக் கடவுள் தரிசனம் பெறுதல் என்பது முடியாத காரியம். ஜபம் ஞான சாதனை இவற்றின் உண்மை நோக்கம் என்னவென்று…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 17

எப்போதும் ஆண்டவனுக்குரிய பணிகளையே செய்யவும். அதே சமயம் ஜபமும் தியானமும் செய்யவும் முயல்க. அவ்வாறு செய்தால் உன் மனம் தீய நினைவுகளால் பாதிக்கப்படாது. செயல் புரியாது தனியே அமர்ந்திருந்தால் எல்லா வகையான எண்ணங்களும் தோன்றி மன அமைதியைக் கெடுத்துவிடும். இந்த மனிதப்பிறவி பெற்றதால் நீ பாக்கியவான். உன்னால் முடியுமளவுக்கு ஆண்டவனைத் துதி செய். நீ கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். உழைக்காமல் எதையும் அடைவது முடியாது. உலகச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் தினந்தோறும் பிரார்த்தனைக்கும் ஞான சாதனை கட்கும் ஒரு…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 16

எதனையேனும் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எழுமேயானால், தனியான இடத்தில் தங்கிக் கண்ணீர் மல்க ஆண்டவனையே வேண்டுக. அவன் உன் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான். பின்பு உனக்கு எல்லா வற்றையும், விளங்கும்படி செய்வான். நித்திய அநித்தியப் பொருள்களைப் பற்றி எப்போதும் விசாரணை செய். உன் மனதைக் கவருகின்ற புறப்பொருள்கள் எல்லாம் அழியும் தன்மையுடையன என்பதை அறிய முயல்க, உன் கவனத்தை ஆண்டவனிடம் திருப்புக.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 15

ஞான சாதனை ஞான சாதனை என்பது ஆண்டவனுடைய தாமரைப் பாதங்களில் மனத்தை நிறுத்தி அவன் நினைவிலேயே மூழ்கிக் கிடப்பதாகும். ஞான சாதனைகளைத் தனிமையான இடத்தில் பழகுவது மிக அவசியமாகும். செடி சிறியதாக இருக்கும்போது வேலி மிக அவசியம். அது பெரியதாகிவிட்டால் கால் நடைகள் அதற்கு எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது. அது போல் சில காலம் தியானத்தில் ஆழ்ந்த மனம் நிலைத்த பிறகு நீ எங்கு வேண்டுமானாலும் தங்கி யாருடன் வேண்டுமானலும் பழகலாம். உன்மனம் அதனால் பாதிக்கப்படாது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 8

கேள்வி — நீங்கள் நைவேத்தியம் செய்யும் உணவை உண்மையில் குருதேவர் உண்கிறாரா? பதில் – ஆம், அவர் உண்கிறார். அவர் கண்ணிலிருந்து ஓர் ஒளி எழுந்து உணவுப் பதார்த்ததங்கள் அனைத்தையும் தடவுகிறது. பக்தர்களின் திருப்திக்காகவே அவர் நைவேத்திய உணவை உண்கிறார். அந்தப் புனிதப் பிரசாதம் மனத்தைப் பரிசுத்தமாக்கும். ஆண்டவனுக்கு நைவேத்தியம் பண்ணாத உணவை உண்பதால் மனம் அசுத்தமடைந்துவிடும். குருதேவருக்கு நைவேத்தியம் பண்ண எவ்விதமான சடங்குகளும் தேவையில்லை. குருமுகமாகப் பெற்ற மந்திரமே போதுமானது.

எங்கும் அப்பாவிகளே பலியாகின்றனர்.

காட்டில் பயங்கரமான நோய் பரவியது நிறைய விலங்குகள் இறந்தன. பல சாகும் தருவாயில் இருந்தன. விலங்குகளின் அரசனான சிங்கம் எல்லா விலங்குகளையும் அழைத்தது. “காட்டில் பாவம் அதிகரித்து விட்டது. இந்தக் காட்டில் யார் அதிகப் பாவம் செய்தார்களோ, அவரைக் கண்டுபிடித்துப் பலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்று சொன்னது சிங்கம். ஒருவரும் பேசவில்லை. சிங்கம், தான் நிறைய ஆடுகளைக் கொன்று பாவம் செய்ததாகவும், தான் பலியாவதற்குத் தயார் என்றும் சொன்னது. உடனே நரி, “மாண்பு மிகு அரசே,…

19 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். பிடிவாத குணம் உடையவர்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்பது சிறிதளவுகூட இவர்களிடத்தில் இருக்காது. எனவே, இக்குணங்களை விட்டுவிட்டால்இவர்கள் வாழ்க்கையில் சிறப்பான நல்ல முன்னேற்றத்தை முழுமையாகப் பெற்றிடலாம்  என்பது சிறந்த வழியாகும். எனவே அனுசரித்துப் போகும் குணம் அவசியம் தேவையாகும்.

17 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

சனியின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் பணம் சம்பாதிப்பதுதான் இவர்களது லட்சியம். எனவே எந்த வழியாக இருந்தாலும் பரவாயில்லை என்ற குறிக்கோள் கொண்டவர்கள். செல்வச் செழிப்புடன் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். என எப்படியாவது செல்வ வளத்தைத் தேடி அடைந்திடுவார்கள்.

அத்தி (Ficus racemosa)

அத்தி  அத்தி காய்களை பொரியல், மசியல் அல்லது கூட்டு செய்து வாரம் ஒரு முறை சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும். அத்திப்பழங்கள் உண்ணத் தகுந்தவை மிகுந்த சத்துக்கள் கொண்டதான இந்தப் பழங்களை காலை உணவாக பெரிதும் விரும்பப்படுகின்றன. பலவிதமான கலாச்சார உணவுகளில் அத்திப்பழம் சேர்கிறது. அத்திப்பழங்களை குறுக்குவாட்டில் அரிந்து துண்டுகளாக்கி, தேனில் இட்டு ஊறவைத்து தயாரிக்கப்படும் அத்தி தேனூறல் சிறந்த ஊட்டச்சத்து தருவதாகும்.