பிரம்மச்சர்யம் என்றால்

பிரம்மச்சர்யம் என்றால் அது ஒரு மன நிலை, உடல் மட்டும் ஒரு பெண்ணை தீண்டாமல் இருந்துவிட்டால் மட்டும் பிரம்மச்சர்யம்ஆகாது , மனம் ஒத்துழைக்க வேண்டும், மனம் ஒத்துழைக்க சூழ்நிலையும் சந்தர்ப்பமும் சரியாய் அமைய வேண்டும், அப்படி இல்லாவிட்டால் சந்தர்ப்ப சூழ்நிலையால் மனம் சலனப்படும், மனம் சலனப்பட்டால் உறக்கம் போகும், உறக்கம் இல்லாத போது உடல் உபாதை உண்டாகும், உடல் உபாதை பிரம்மச்சரியத்தை முறிக்கும். இது மாலையிட்டு விரதம் இருக்கம் ஐயப்ப பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. இல்லறத்தான்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 20

மன ஒருமைப் பாட்டுடன் இரண்டு நிமிட நேரம் கடவுளைப் பிரார்த்திப்பதும், தியானிப்பதும், அதில்லாமல் பல மணி நேரம் அவற்றைச் செய்வதைக் காட்டிலும் சிறந்தது. எல்லோருமே கடமை என்று கருதுவதால் ஏதாவது ஒருவகைப் பயிற்சியை மேற்கொள்ளுகின்றனர். ஆனால் எத்தனை பேர் ஆண்டவனை நாடுகின்றனர்? கடமையைச் செய்யத்தான் வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அது மனத்தை நன்னிலையில் வைக்கிறது. ஆனால் ஜபம் செய்தல் தியானித்தல், பிரார்தனை செய்தல், ஆகியவை மிக அவசியம். இவைகளைக் காலையிலும் மாலையிலுமாவது கைக்கொள்ளவேண்டும். அச் சாதனம் படகிற்குள்ள…

குய்யபாத ஆசனம் ( கருவாய் )

குய்யபாத ஆசனம் இரண்டு பாதங்களையும் ஒன்றோடொன்று சேர்த்து, இரண்டு குதிகால்களும் ஆசன வயிற்படும்படி பொருத்தி வைத்துக் கொண்டு இரண்டு கணுக்கால்களையும் பிடித்துக் கொண்டு மூச்சை வெளியில் விட்டுக் கொண்டே குனிந்து இரண்டு கால் பெருவிரல்களும் நெற்றியில் படும்படி செய்து, பின் மூச்சை உள்ளுக்கிழுத்துக் கொண்டே நிமிரவும் இம்மாதிரி 3 முதல் 5 முறை செய்ய வேண்டும். குறிப்பு — கர்ப்பத்தடைக்குச் சிறந்த ஆசனம். பெண்கள்விடாமல் காலை, மாலை, மூன்று மாதங்கள் செய்து வந்தால் நிச்சயமாய் கர்ப்பமுண்டாகாது.