வாழ்க்கை சுவையானது.

வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதைக் கசப்பாக்கி விடாதீர்கள். பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும் பிறரை மதியுங்கள். மதிப்புக் கிடைக்கும் அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல இரட்டை வழிப் பாதைகள் அன்பில் வணிகத்திற்கு இடமில்லை வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.

அதிசய காந்த கண்ணாடி

இன்றைக்கு பலரும் கம்ப்யுட்டர் செல்போன் முன் அதிகநேரம் செலவிடுகிறார்கள் இதன் விளைவாக காணும் பலவகையான காட்சிகள் மனக்கண்ணில் பதிந்து உறக்கமின்மை பார்வைக்குறைவு ஆண்மைக்குறைவு வீண்குழப்பம் ஆகியவை ஏற்ப்படுகிறது . இதனால் மனக்கவலை உண்டாவதோடு பலவகையான சிக்கல்கலை வாழ்வில் ஏற்படுத்திக்கொள்கிறார்கள் . இவர்களுக்கு இந்த காந்த கண்ணாடி பெரிதும் உதவிசெய்கிறது .வீணான காட்சிகளை மனக்கண்ணில் இருந்து அகற்றி மனதை ஒருநிலைபடுத்துகிறது . நல்ல உறக்கத்தையும் கொடுக்கிறது . கண்பார்வை மற்றும் முன்றாவது கண்ணாண ஞான பார்வை பயிற்ச்சி செய்பவர்களும்…

இரும்புக் குதிரைகள்

ஸ்காட்லாந்தில் இருக்கும் இரும்பு குதிரை சிலைகள், ‘கெல்பீஸ் எனப் பெயரிடப்பட்டிருக்கும் 30 மீட்டர் உயர சிற்பத்தை, ஆண்டி ஸ்காட் என்ற சிற்பி உருவாக்கினார். போர்த் நதியை ஒட்டிய பூங்காவில் இவை அமைந்துள்ளன ஸ்காட்லாந்தின் நீர்வழித் தடங்களில் குதிரைகளின் பங்களிப்பை நினைவுபடுத்தவே இந்த சிலைகள்.

காந்தளூர் சாலை போர் 4

இதுதான் ராஜராஜன் உடனடி படையெடுப்புக்கான காரணமாக சொல்லப்படுகிறது. ராஜராஜனுக்கும் பாஸ்கரரவிவர்மாவுக்கும் இடையிலான இப்போர் கடற்போராக இருந்தது எனவும் சொல்லப்படுகிறது. திருவனத்நபுரம் கடற்கரைக்கு அருகில் நடந்த இப்போரில் ராஜராஜன் சாலைகலை மறுத்தருளிய கோவி ராஜராஜகேசரி என்ற கல்வெட்டு ஆதாரத்தின்படி கலம் அறுத்து என்பதை கப்பல்களை வீழ்த்தி என அறிந்துகொள்ளலாம் இப்போரில் ராஜராஜன் மாபெரும் வெற்றிபெற்றார் காந்தளூர் சாலை போர் குறித்தான விவாதங்கள் இனறுவரை நடந்து கொண்டுதான் இருக்கிறது காந்தளூர் சாலை என்பது ஒரு கடற்கரை நகரம் என்றும், இப்போர்…

காந்தளூர் சாலை போர் 3

அனால் தன் சகோதரனான ஆதித்த கரிகாலனின் கொலையில் பின்னணியில் இருந்து செயல்பட்டது காந்தளூர் சாலையில் பயிற்சி பெற்ற வீரர்கள் தான் என்பதால் அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த போர் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒரு வரலாற்று கூற்று உண்டு. முதலில் ராஜராஜன் சேர நாட்டிற்கு தன் தூதுவரை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். ஆனால் அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட சோழ நாட்டு தூதுவரை சேர மன்னன் முதலாம் பாஸ்கர ரவிவர்மா சிறைபிடித்தனர்.

காந்தளூர் சாலை போர் 2

அந்த காலகட்டத்தில் இது போன்ற போர் பயிற்சிக்கூடங்கள் அண்டை நாடுகள் எங்கும் செயல்படவில்லை. தன் அண்டை நாட்டில் ஒரு போர் பயிற்சிக்கூடம் செயல்படுவது சோழ நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்று கருதியதால் ராஜராஜன் இப்போரை மேற்கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது.

காந்தளூர் சாலை போர் 1

சுந்தரசோழன் ஆட்சிக்காலத்தில்தான் சோழ படையானது.  ராஷ்டிரகூடர்களுடன் போரிட்டுத் தொண்டை மண்டலத்தை மீட்டது. ஆனால் அதற்கிடையில் இளவரசனாக முடிசூட்டப்பட்ட அவருடைய மகன் ஆதித்த கரிகாலன் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டார், சேர, பாண்டிய ஈழ நாட்டுக் கூட்டணியும் காந்தளூர் சாலையில் போர்ப் பயிற்சியும் இந்தக் கொலைக்கான பின்னணி என சொல்லப்படுகிறது.

நவீன மனிதர்கள் தோற்றம் 4

 பல ஆயிரம் ஆண்டுகளாக இப்படி வாழும்போது இயல்பாகவே உடல் தோற்றம், நிறம் போன்றவை சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு மாறிவிடுகின்றன, இதை பரிணாமவியல் கொள்கையில் ஒரு பகுதியாக டார்வின் விளக்கு இருக்கிறார் தற்கால மனித இனம் ஆப்பிரிக்காவில் இருந்து 65,000 ஆண்டுகளுக்குமுன் இந்தியா வடக்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளுக்குப் பரவியது. அந்த காலத்தில் இருந்த நிலப் பாலங்கள் வழியாக வெவ்வேறு கண்டங்களுக்கு அவர்கள் நடந்தே சென்றடைந்தார்கள். இந்த பரவல் மத்திய தரைக்கடல் நாடுகள் வழியாகவே நடைபெற்றிருக்க வேண்டும்.…

நவீன மனிதர்கள் தோற்றம் 3

மரபணு ஆதாரங்களும் ஆப்பிரிக்காவே மனித குலத்தின் தாய்மடி என்பதை உறுதிப்படுத்துகின்றன. அப்படியானால் இன்றைக்கு உலகில் வாழும் மனிதர்களிடையே இத்தனை நிறங்கள், தோற்ற வேறுபாடுகள், உயர வேறுபாடுகள் எப்படி வந்தன? எனக் கேட்கலாம், ஒரு குழு தன் தாய்நிலத்தில் இருந்து இடம் பெயர்ந்து வேறொரு நிலப்பகுதியில் குடியேறிய பிறகு, புதிய நிலத்தில் நிலவும் கால நிலை, தட்பவெப்பநிலை, புவியியல் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப தகவமைத்து வாழ தொடங்குகிறது.

நவீன மனிதர்கள் தோற்றம் 2

ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்கில் உள்ளது, போட்ஸ்வானா, இந்த நாட்டின் வடபகுதி, இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏரியாக இருந்து, இன்றைக்கு பாலைவனமாக மாறிவிட்ட மக்கடிக்கடி-ஒகவாங்கோ என்ற பகுதிதான் நவீன மனிதர்களின் தாய்மடி, கோய்சான் பழங்குடிகளிடம் நடத்தப்பட்ட மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ ஆய்வுவுகள் மூலம் இது தெரியவந்துள்ளது. இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவம் ஒன்று எத்தியோப்பியாவின் ஒமோ கிபிஷ் என்ற இடத்தில்  கிடைத்துள்ளது.   இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது குரங்கிலிருந்து மனித இனம் தோன்றவில்லை, வாலில்லா குரங்குகளுக்கும்,…

நவீன மனிதர்கள் தோற்றம் 1

நவீன மனிதர்கள் தோன்றிய இடம் எது’ என்பது குறித்த ஆராய்ச்சிகள் நீண்ட காலமாக தொடர்ந்து வருகின்றன. ஆப்பிரிக்காவில்தான் அது நிகழ்ந்தது என்றாலும் குறிப்பாக எந்த நிலப்பகுதியில் மனிதர்கள் தோன்றினார்கள் என்பதை நமது அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சுந்தர யோக சிகிச்சை முறை 112

பேதி வகை – வேறு சிகிச்சையே இல்லாவிட்டால், பெருங்குடலைப் பலி கொடுக்கலாம். அவ்வளவு மோசமில்லாத கேசுக‍ளுக்கு வழியாயில்லை நேர்வாளம் இருக்கும் வரை என்ன சார் பயம்?”  எனக்கொக்கரிக்கலாம்.  மலக்கழிவுடன் பிராணனும் கழியக்கூடும்! நம்மையெல்லாம் நம்பித்தானே “ ப்ரூட் சால்ட்” உண்டாக்குகிறான்”!.  நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா சார்?” என்று உள்ளம் உருகட்டும் “ என்ன சார் ! விளக் கெண்ணை சாப்பிட்டால் குளுமை, சுகம் என்கிறார்களே?” என்றும் வினவலாம். ஆனால் நேர் வாளத்திற்கும், சால்ட்டுக்கும் விளக்கெண்ணெய்க்கும் அடிமையாவதற்காக இயற்கை…

சினிமாவில்

சினிமாவில் குளோசப், லாங்ஷாட், ஃபேட் இன் ஃபேட் அவுட், கிராஸ்கட் போன்ற பல தொழில் நட்பங்களை அறிமுகம் செய்தவர் கிரிஃபித் என்ற அமெரிக்கர், இப்புதுமைகள் தோன்றி 100 வருடங்கள் ஆகின்றன

தமிழகத்தை தாக்கிய பெரும் பஞ்சம் 4

வறுமையில் வாடிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் தென் ஆப்பிரிக்கா, பிஜித்தீவுகள், இலங்கை போன்ற நாடுகளுக்கு பிழைக்க சென்றனர். இடையில் தரகர்கள் ஆசைகாட்டி அங்கு சென்றால் சீக்கிரமாகவே பணக்காரர்கள் ஆகலாம் என்றனர் மக்களும் ஏமாந்தனர் அங்கு தினக்கூலியாக ரப்பர், காபி இலைகளைப் பறித்து வேலை செய்து வந்தனர் மிகவும் மோசமாகவே அவர்கள் நடத்தப்பட்டனர். அதன் பின் தமிழகம் இந்த மாதிரி ஒரு பஞ்சத்தை பார்த்ததில்லை.

தமிழகத்தை தாக்கிய பெரும் பஞ்சம் 3

அரசாங்கம், வசதியுள்ளவர்கள் மக்களுக்கு உணவு, உடை _கொடுத்து உதவினார்கள். வட ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை பகுதிகளில் கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டன. பஞ்ச நிவாரண பணிகளில் ஒன்றாக ‘ பக்கிங்காம்’ கால்வாயின் ஒரு பகுதி வெட்டப்பட்டது.

தமிழகத்தை தாக்கிய பெரும் பஞ்சம் 2

இந்த தண்டனையைப் பற்றி விசாரிக்க 1854ல் சித்திரவதை விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.  அதனுடைய விவாதத்தால் அரசாங்கம் தண்டனையை கொடுக்கக்கூடாது என்று அறிவித்தது 1876 – 78 – ம் ஆண்டுகளில் தமிழகத்தில் மாபெரும் பஞ்சம் ஏற்பட்டது. இந்த பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் இறந்தார்கள்.  வட ஆற்காட்டில் உயிர் சேதம் அதிகம் ஏற்பட்டது. உணவு கிடைக்காமல் காட்டுக் கீரைகளை வேகவைத்து சாப்பிட்டார்கள்.

தமிழகத்தை தாக்கிய பெரும் பஞ்சம் 1

தமிழகத்திற்கு கொடுமையான காலம் என்று ஒன்றிருந்தது. அது வரியும் பஞ்சமும் ஒன்று சேர்ந்து மக்களை வாட்டிய காலம். அப்போதெல்லாம் வரி வசூல் செய்ய அதிகாரிகள் இருந்தனர் அவர்கள் வீடுகளுக்கு சென்று வரி கேட்டால் கொடுக்காதவர்களுக்கு அவர்களே தண்டனையும் தரக்கூடிய அதிகாரத்தையும் கொடுத்துள்ளனர் தண்டனைக்குள்ளானவர்கள் அதிகம்பேர். அந்த தண்டனையின் பெயர் ‘ அண்ணாந்தாள்’. அப்படியென்றால் வரி கட்டாதவர்களை கைகளையும், கால்களையும் பின்னால் சேர்த்து கட்டி கொளுத்தும் வெயிலில் நிறுத்தி விட்டு, சவுக்கால் அடியும் தருவார்கள்.  இது பற்றி அரசாங்கத்துக்கு…

மகிழ்ச்சியும் ஆரோக்கியமும்

நாம் இளமையாய் இருக்கும் போது பணமிருக்காது. சரி கொஞ்சம் பணத்தை சேர்த்துட்டு ஜாலியா இருக்கலாங்கறதுக்குள்ள இளமை போயிடுது.  சரி மத்திய வயசுலயாவது தாராளமா செலவு செஞ்சு மகிழ்ச்சியா இருக்கலாம்னு நினைச்சா அப்ப நேரம் இருக்காது முக்கியமான விஷயம் நேரம் பணம் எல்லாம் இருக்கறப்போ மனசு இருக்காது.   ஒரு வேளை மனசு வெச்சாலும் உடம்பு ஒத்துழைக்காது, இந்த அனுபவம் நிறைய பேருக்கு இருக்கும் அப்படீன்னு நான் நினைக்கிறேன். எதையோ நெனைச்சு எதை, எதையோ துரத்திட்டு எப்பவுமே ஒடறதே…

செம்மொழிக்கான பதினோரு தகுதிகள்

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்.. 1.தொன்மை 2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 3.பொதுமைப் பண்புகள்  4.நடுவுநிலைமை 5.தாய்மைத் தன்மை 6.கலை பண்பாட்டுத் தன்மை   7.தனித்து இயங்கும் தன்மை 8.இலக்கிய இலக்கண வளம் 9.கலை இலக்கியத் தன்மை 10.உயர் சிந்தனை 11.மொழிக் கோட்பாடு இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி தமிழ்..!

சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்களில்

சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்களில், புதன் கோள்தான் சூரியனை மிக வேகமாகச் சுற்றி வருகிறது விநாடிக்கு 48 கி.மீ.,வேகத்தில் 88 நாட்களில் சூரியனை ஒரு சுற்று சுற்றிவிடுகிறது.  சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள அளவில் சிறிய கோளும் புதன் தான்..

நில நடுக்கத்தை கண்டறிய

நில நடுக்கத்தை கண்டறிய சீனர்கள் கி . பி . 132 – ஆம் ஆண்டிலேயே ஒரு கருவியை வடிவமைத்து விட்டனர்.  ரிக்டர்வடிவமைத்த அளவுகோல் நிலைநடுக்கத்தின் வீரியத்தை மட்டுமேகூறும்..

சாப்பிடும் பொழுது

சாப்பிடும் பொழுது நாம் காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிடவேண்டும்.  சாப்பிடும் பொழுது காலை தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஒட்டம் வயற்றுப் பகுதிகக்ச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.  எனவே ஜீரணம் தாமதமாகிறது.  காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால், சாப்பிட, சாப்பிட சாப்பாடு ஜீரணமாகிவிடும்.  ஏனென்றால் கீழே ரத்தம் ஒட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.  எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி…

ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த

ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்கு பேச்சு என்றாலே சிறிதும் பிடிக்காது.  ஒரு சமயம் ஒரு விருந்தில் கலந்து கொண்டார்கள்.  அவ்விருந்தில் அநேக நிபுணர்களும் கலந்து கொண்டார்கள்.  விருந்துக்குத் தலைமை வகித்தவர், வில்பர் ரைட்டை அழைத்து பேசும்படி கேட்டார்.  வில்பர் எழுந்து திக்கிய குரலில் ” இதில் எதோ தவற நேர்ந்து இருக்கிறது. பேசுகிறவன் நான் அல்ல, என் சகோதரன் ஆர்வில்தான் பேசுவான் ” என்றார்.  உடனே ஆர்வில் எழுந்து நின்று ” பேச்சை வில்பர் பேசி…

உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை

உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை ரஷியாவின் ” கார்காவ் “ சிறையாகும்.  இங்கு கைதிகளை ஆடு, மாடுகளைப் போல் அடைத்து வைத்திருக்கிறார்கள்.  மொத்தம் 40 ஆயிரம் கைதி – களுக்கு, மேல் உள்ளனர்.  மிகச் சிறிய சிறை ‘ சார்க் ‘ தீவில் உள்ளது.  இங்கு ஒரு வரை மட்டுமே அடைக்க இயலும்..

அற்புதமாக சிரிக்க கூடியவர்கள்

உலகிலேயே மிக அற்புதமாக சிரிக்க கூடியவர்கள்  ஃபிஜி தீவில் வசிப்பவர்கள்தானாம், டாக்டர் மாக்ஸ் லூசர் எழுதியிருக்கிறார்.  அவர்களின் சிரிப்பு மெதுவாக தொடங்கி முகம் முழுவதும் மலர்ந்து அடுத்தவர் அதை உணர்ந்து கொள்ளும் வரை நீடித்து அடுத்தவர் அதை உணர்ந்தவுடன் எரியும் தீப சுடர் போல் மெதுவாக கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போகுமாம் சரி சிரிப்பைப்பற்றி தெரிந்து கொண்டாயிற்று நாமும் இனி இப்படி சிரிக்க முயற்சி செய்து வெற்றி பெறுவோம்.  

மதத்தை எவ்வாறு கற்றுக் கொள்வது ?

நான் மதப்பற்று உள்ளவனாக இருக்க விரும்பினேன். இந்துத் தத்துவங்களை எல்லாம்அனுபவித்து அறிந்துகொள்ள விரும்பினேன். ஆனால் அவ்விதம் அவற்றைஎன்னால் அனுபவித்து அடைய முடியாமற் போய்விட்டது. ஆதலால், நான் எதையுமே நம்புவது கிடையாது என்று சொல்லுகிற பல மனிதர்களை நீ இந்த உலகிலே பார்க்கலாம். படித்தவர்களில் கூட இப்படிப்பட்டவர்கள் இருப்பதை நீ காணலாம் என்வாழ்நாள் முழுவதும் மதப்பற்று உள்ளவனாக இருப்பதற்கு முயற்சி செய்தேன்.ஆனால் அதிலே ஒன்றுமில்லை. என்று மக்களில் பலர் உன்னிடம் சொல்வார்கள்.ஆனால்; அதே சமயத்தில் நீ இந்த நிகழ்ச்சியையும்…

ஆழ்மனம் வரை அச்சம்

ஏதாவது ஒரு சூழ்நிலையின் காரணமாக ஆழ்மனம் வரை அச்சம் ஊடுருயிருந்தது என்றால் அப்படி ஊடுருவியிருந்த மக்கள் எதையும் எவரையும் நம்ப மாட்டார்கள்.

இயற்கை தனது இருப்பை காட்ட

பஞ்ச காலத்தில் அதாவது இயற்கை தனது இருப்பை காட்ட நினைத்து மழை பெய்து கெடுத்தோ, அல்லாது பெய்யாமல் கெடுத்தோ உணவுக்கு மனிதன் தவிக்கின்ற நிலையில் பூமியின் அடியில் இருக்கும் கிழங்குகள் மனிதனை கைவிடுவதில்லை மலைகளில் இயற்கையோடும், இயல்போடும் வாழும் மக்களுக்கு இது நன்கு தெரியும். சித்திரவள்ளி கிழங்கு, காட்டு வள்ளிகிழங்கு, நூரை, சவலன், நெருடுவன் தீச்சி, நாச்சி, சம்பை, நூழி இவை ஏழும் பூமியின் ‍வெவ்வேறு ஆழத்தில் விளைந்து இருக்கும் மண் அறிந்த மனிதன் இதை பஞ்ச…

சந்தோஷம் என்பது 33

அமைதி எனும் நிலையை அடைய மனிதன் தனக்கு தானே சுய பரிசோதனை செய்தால் மட்டுமே முடியும் என்ற தீர்வு வந்த பின் அந்த சுய பரிசோதனையை எங்கிருந்து, எப்படி, எதைக் கொண்டு ஆரம்பிப்பது. சுய பரிசோதனை என்றால் உள்ளதை உள்ளபடி அறிதல் அதன் பின் அதை ஏற்றுக் கொள்ளல் பின் அதை அதை முழுமையாய் கைக்கொள்ளல்.

ஒவ்வொரு கெட்ட குணங்களும்

ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும் பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும் கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும் துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும் பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும் எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும் அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும். ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள். பசிக்கும் போது உணவருந்துங்கள்.

நமக்குத்தான்

சிலவற்றை கண்டும் காணாமல் நடக்கப்பழகிக் கொண்டாலே போதும்.. மனதுக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கும்! நமக்குத்தான் எல்லாம் தெரியும், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள், நமக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுவர்களே மற்றவர்கள்தான்..

தானம் 16 வகைப்படும்-

1. அன்னம்,    2. பூமி,      3. கன்னிகை,     4. பசு,     5. காளை        6.பொன்        7. வெற்றி,     8. ஆடை,    9. படுக்கை,      10. வாகனம்,     11. தீபம்,       12. எள்,      13. தானியம்,     14. வீடு,     15. வித்தை,    16. அபயம்   …

வெற்றி எட்டு வகைப்படும்.

1. எதிரிகளின் அதாவது பகைவர்களின் பொருளை கவர்தல். 2. பகைவர் தன்னிடம் இருந்து அபகரித்ததை மீட்டெடுத்தல். 3. பகைவர் மேல் போர் தொடுத்தல். 4. போருக்கு வரும் பகைவரை எதிர்கொண்டு தாக்குதல். 5. தன் குடிகளையும் உடைமைகளையும் காத்தல். 6. பகைவரின் உடைமைகளை, குடிகளை தனதாக்கி கொள்ளல். 7. போருக்கு திட்டமிடுல். 8. போரிடுதல் என்பவையே. இவை அனைத்தும் அரசர்களுக்கு உண்டான நியதிகள் இது ஒவ்வொன்றிக்கும், பூக்களும், மாலைகளும் உண்டு அவை முறையே வெட்சி, கரந்தை, வஞ்சி,…

நண்பர்கள் எத்தனை வகை?

வீட்டில் உங்கள் மனைவியும் வெளிநாட்டில் உங்கள் அறிவும் (புத்தி) நோயாளிக்கு மருந்தும் இறந்துபோனவனுக்கு தர்மமுமே நண்பர்கள் ஔரச – ஒரே தாய் தந்தையருக்குப் பிறந்தவர்கள் க்ருத சம்பந்த — திருமணத்தால் உண்டான உறவு வம்ச- ஒரே பரம்பரையில் தோன்றியவர்கள் ரக்ஷக – கஷ்ட காலத்தில் காப்பாற்றியவர்கள் ஔரசம் க்ருதசம்பந்தம் ததா வம்சக்ரமாகதம் ரக்ஷகம் வ்யசனேப்யஸ்ச மித்ரம் ஞேயம் சதுர்விதம் –காமாந்தகீய நீதிசாரஹ

அர்த்தம்!

நம்முடைய ஒவ்வொரு குற்றத்திற்கும் அவ்வப்போதே தண்டனை கிடைக்கவில்லை என்றால்.. நாம் அதிபுத்திசாலி என்று அர்த்தமில்லை.. நமக்கான தண்டனை கடுமையாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்!

நன்றி சொல்ல வேண்டிய தருணங்கள்

உங்களை சிரிக்க வைத்தவர்களுக்கு அழ வைத்தவர்களுக்கு உங்களோடு  தொடரப் போகிறவர்களுக்கு உங்களை விட்டு விலகிப் போனவர்களுக்கு … பாராட்டியவர்களுக்கு பாடம் கற்பித்தவர்களுக்கு . அன்பு செய்தவர்களுக்கு வெறுத்தவர்களுக்கு தட்டிக் கொடுத்தவர்களுக்கு இவர்கள் எல்லோரும் உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை உங்களுக்கே உணர்த்தியவர்கள் அதனால் நன்றி சொல்லுங்கள் எப்போதும் சந்தோஷமாய் இருப்பீர்கள்

எந்த ஒரு உறவும்

எந்த ஒரு உறவும் இருவருக்கு இடையில் மூன்றாம் நபர்கள் நுழையாத வரை.. லட்சியங்கள் மாறாதவரை பணம் ஒரு பொருட்டாக இல்லாதவரை எந்த ஒரு உறவும் உடைதல் என்பது.. அவ்வளவு எளிதில் நடப்பதில்லை!

வாழ்க்கையில் எதுவும் நடக்கும்

வாழும்போது வணங்கிக் கொண்டே இருந்தான் வெட்டியான். இறந்து போன பின் படுத்துக் கிடந்தார், ஜமீன்தார், நிமிர்ந்து நின்றான் வெட்டியான். இது தான் வாழ்க்கை..

சூரியன் எழுவதற்க்கு

சூரியன் எழுவதற்க்கு முன் நீ எழுந்தால்.. அது உன் வாழ்க்கை! அலாரம் அடித்த பின்னும் நீ எழவில்லை என்றால்.. வாழ்க்கையின் போக்கில் தான் நீ

நீதி மொழிகள்

மனிதன் நிர்ணயிக்கிறான், கடவுள் நிராகரிக்கிறார். கண்களால் கற்றுக் கொள்வதைவிட காதுகளால் கற்பதே அதிகம். யாராலும் செய்ய முடியாததை நல்லதோ கெட்டதோ ஒரு பெண் செய்வாள். கண்ணாடிதான் என் சிறந்த நண்பன். ஏனென்றால் நான் அழும் போது அது ஒரு போதும் சிரித்ததில்லை. பூவாக இருந்தாலும் அதில் வாசனை இருந்தால் தான் அழகு. நட்பாக இருந்தாலும் அதில் நம்பிக்கை இருந்தால் தான் அழகு.

அழகும் அறிவும்

அழகும் அறிவும் ஒன்றாய் இருந்து ஒன்றாய் அன்பாய் குடித்தனம் நடத்தும் இடம் சொர்க்கம். அங்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். கெட்டதும் நல்லதாய் மாறும் இரசவாதம் போல்.

அகத்தியர் லோப முத்திரை 4

இதில் முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் ஆணின் திறமை தான் ஆணிற்க்கு அழகு இங்கு திறமை என்றால் என்னவென்ற வினா வரும் அதற்க்கு பதில், உழைப்பு, கெட்டி காரதனம், வரும் முன் காக்கும் குணம் எதிலும் தெளிவு. எத்தனை தடை சோதனை வந்தாலும் துணையாய் வந்த மனைவியை இழிவு படுத்தாத குணம் கம்பீரமான மனத்தின்மை இவையே ஆணின் திறமை . இதை வளர்த்துக்கொள்ள ஆண் விரும்பி முயலவேண்டும். அப்போது மனைவி கணவனை உள்ளங்கயில் வைத்து தாங்குவாள் அவளின்…

அகத்தியர் லோப முத்திரை 3

அவர்கள் மிகுந்த காதலோடு நெல்முனையலவும் பிரிவும் குறைவும் இல்லாமல் குடித்தனம் செய்தார்கள் அவர்களின் இனிய இல்லறத்தாலும் தபோ பலத்தாலும் உலகை உய்வித்தார்கள். இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் இரு எதிர் துருவாங்களாக உள்ள ஆண், பெண் எனும் பிரகிருதி வஸ்துகள் ஒன்றை ஒன்று மதித்து கெளரவித்து அன்பு கொண்டு இருத்தலே இனிய இல்லறம் அமைய வழியாகும்.

அகத்தியர் லோப முத்திரை 2

அகத்தியரோ உருவம் குட்டை ( குள்ளம் ) மனைவியின் அழகிற்க்கு முன் அகத்தியர் சாதாரணம், அவளுடைய ஆடை, அணிகலன்களின் விருப்பம் தனக்கு இடைஞ்சல் என்று அகத்தியர் நினைக்கவேயில்லை அவர் தனது மனைவியை இளவரசியாகவே வாழ வைத்தார். இதிலிருந்து நாம் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டியது அவரவர் குணங்களை அவரவர்கள் பரஸ்பரம் மதித்தார்கள். அவரவர் விருப்பங்களை பரஸ்பரம் கெளரவித்தார்கள்.

குடும்ப வாழ்க்கைக்கு அகத்தியர் லோப முத்திரை. 1

லோபா முத்திரை அழகி, இளவரசி ஆபரணங்களின் மேல் அதிகபிரியமுள்ளவள் அகத்தியர் துறவி, ஞானி காட்டில், பர்ணசாலை ஆனால் இவர்கள் இருவரும் ஆண், பெண் குடும்பம் எப்படி நடத்த வேண்டும் என்பதற்க்கு மிக சிறந்த உதாரணம். எப்படி இளவரசியும் ஆபரணங்களில் அதிக ஆசை உடையவளும் பேரழகியாக இருந்த லோப முத்திரை கணவனின் மேல் தீராத மாறாத காதல் கொண்டு காட்டிற்க்கு வந்து பர்ணசாலையில் வசிக்கும் தன் கணவனுக்கு சற்றும் அலுப்பில்லாமல் பிரியம் குறையாமல் குடித்தனம் செய்தாள்.

கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்கும் விதம்.

இதில் வரும் கருத்துக்கள் மத்திய அரசின் சார்பில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை, புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் சீரம், வெரோ செல்களை தயாரிப்பதற்கும், வளர்ப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வளர்ந்த வெரோ செல்கள் தண்ணீரிலும், ரசாயண திரவங்களிலும் கழுவப்படுகிறது. அதனால், கன்றுக் குட்டியின் சீரம் முழுவதும் போய்விடுகிறது. அதன்பின் வைரஸ் வளர்ச்சிக்காக வெரோ செல்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறது. வைரஸ் வளர்ந்தபின் வெரோ செல்கள் முழுமையாக அழிக்கப்படுகிறது. அதன்பின் வைரசும் அழிக்கப்படுகிறது. (செயலிலக்கம் செய்யப்படுகிறது )…

யாருக்கு விருப்பம் ?11

அப்படி அறியும் போது ஏற்படும் மவுனமே அறிவு, அந்த அறிவே தெளிவு, குரு, இறைவன், மற்றபடி அலைவதல்ல அறிவு. ஆர்ப்பரிப்பது அல்ல அறிவு, அடங்குதலே அறிவு. அமைதியே அறிவு இந்த பாடம் புரிந்ததென்றால் இறப்பை பற்றி அறிய உள்ள பால பாடத்தில் சேர்ந்ததாக நாம் நினைத்துக்கொள்ளலாம்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 14

கடவுள் அவனவனுக்கே உரிய பொருள். அத்தொடர்பே நிலையானது. இறைவனிடத்து அவனவன் கொள்ளும் அன்பின் முதிர்ச்சிக்கு ஏற்றவாறு, ஒருவன் அவனை உணர்கிறான். அஞ்சற்க யாரோ ஒருவன் உன்னைப் பாதுகாத்துக் கொண்டேயிருப்பதாக எப்பொழுதும் எண்ணிக்கொண்டிரு.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 8

யாவருடைய பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேனோ அவர்கள் பந்த மற்றவராகும் வரை, எனது இப்பூதவுடல் அழிந்த பிறகும் எனக்கு முக்தியுண்டு என்று நினைக்கிறீர்களா? நான் சதா அவர்களுடனேயே வாழவேண்டும். நன்மையோ, தீமையோ அவர்களைப் பற்றிய முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடையவர் என்று நான் வரித்தவர்களை நான் சர்வசாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது.

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 12

முக்தியை விரும்பி ஒருவன் கங்காஸாகரத்திற்கு யாத்திரை செல்லலாம் விரதமிருக்கலாம், ஏழைகளுக்கு தானம் செய்யலாம், ஆனால் ஞானமின்றி இவை முக்கியளிக்க மாட்டா. ஆத்மஞானம் இங்கேயே இப்பொழுதே முக்தியளிக்கிறது. ஞானத்திலிருந்துதான் முக்தி என்பது உபநிஷதங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மை. ஞானத்தால் இங்கேயே, இப்பொழுதே, உடனே பயன்கிட்டுவதால், ஞானத்தால் என்ன பயன் என்ற அச்சத்திற்கு இடமே இல்லை.

ஸ்ரீசங்கரரின் ஞானம். 6

அந்தக்கரணம் உள்ளவரை வெளி விஷயங்கள் புலனாகின்றன. அந்தக்கரணமில்லையேல் வெளி விஷயங்கள் இல்லை. அறிபவன் அறிபவனாக எப்பொழுதும் ( விஷயங்கள் இல்லாத பொழுதும் ) இருக்கவே இருக்கிறான். துவைதத்திற்கு இருப்பில்லை. நான் பரிசுத்தமான ஆத்மா என்று ஒருவன் உணரும் பொழுது தான் உடல் என்ற நினைவு அழிந்து போகிறது. ஒருவன் விரும்பாவிடினும் அந்த ஞானம் அவன் மனிதன் என்ற எண்ணத்திலிருந்து அவனை விடுவித்து விடுகிறது.

மூதுரை

 அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.

கோள்களின் கோலாட்டம் 2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 11 

 2 – க்குரியவர் கேந்திரம் பெற்று, 4, 5 – க்குரியவர் பலம் பெற்று இவர்களை சுபர் பார்த்தால், கல்வியில் நல்ல தேர்ச்சி உண்டு. மனோ திடம் மிக்கவன். தெய்வீக ஞானம் பெற்றவன். ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவான். இவருக்கு பிறக்கும் குழந்தைகளும் கல்வி அறிவு மிக்கவரே.  2 – ல், 7, 8 – க்குரியவர் இருந்து, 3, 11 – க்குடையவரின் தொடர்பு பெற்று, மேற்படி கிரக தசாபுத்திகள் நடக்கும்போது மிகவும் கஷ்டத்தை தரும். தனசேதம்,…

கொஞ்சம் சிரிக்க

ஆசிரியர்:   உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம்! அம்மா:   அவனுக்கு “பொய் ” சொல்லவே தெரியாது சார்.  தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை. மகன்: நீங்க தானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க. எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க? என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார் இந்நேரம் விழுந்திருக்குமே சார்? இன்னும் விழுந்திருக்காது, சார் அது அஞ்சு நிமிஷம்…

நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது

கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

கோள்களின் கோலாட்டம் -2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6

 சிம்மத்தில் சூரியன் இருந்து, அல்லது சூரியனோடு சுக்கிரன் செவ்வாய், சனி தொடர்பு பெற்றால் வலது கண் பழுதடையும், சிம்மத்தில் சந்திரன் இருந்து அல்லது சூரியன், சுக்கிரன், செவ்வாய், சனி தொடர்பு பெற்றால், இடது கண் பழுதடையும். கண் ஆபரேசன் செய்ய, புதன், வியாழன், வெள்ளிக்கிழமை நலம். இக்கிழமை காலங்களில் நேத்திரம், ஜீவன் இருக்க வேண்டும். 2 – க்குரியவர்க்கு, குருவிற்கு, 3,10, 11 – ல் சூரியன் ஆட்சி, உச்சம் பெற்றால், தனத்திற்குப் பஞ்சமே ஏற்படாது. அதிர்ஷ்ட…

அணு ஆயுதங்கள் 2

இந்த இடத்தில் வளர்ச்சி என்பது எதை அடிப்படையாய் கொண்டிருக்கிறது என்று சிந்தித்தால் வரும் பதில் அழிவு என்பதை தவிர வேறு என்ன பதில் வர முடியும். இப்போது, சிந்தித்து பார்த்தால் தோன்றுவது அணுவை பிளந்தது சாதனையா இல்லை, வேதனையா அவர் அவர் மனசாட்சிபடி முடிவு செய்து கொள்ளுங்கள். திருப்தியான நிலையை விட்டு வெற்றியை நோக்கி நகர்ந்த மனிதன் தனக்குத்தானே மிக பெரிய, ஈடு செய்ய முடியாத தோல்வியில் அல்லவா தடம் பதித்து விட்டான். இந்த இடத்தில் மூட…

அணு ஆயுதங்கள் 1

ஸ்வீடன் நாட்டின் ஆராய்ச்சி நிறுவனம் S.I.PRT – அதன் ஆண்டு புத்தகத்தில் 2021 எனும் தலைப்பில் உலகில் அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகளை பட்டியல் இட்டுள்ளது இந்த புத்தகத்தின் படி 9 நாடுகள் மட்டுமே உலகில் அணு ஆயுதங்களை வைத்துள்ளது. அந்த நாடுகள் அமெரிக்கா – 5,800, ரஷ்யா – 6375, பிரான்ஸ் – 290, இங்கிலாந்து 225, இஸ்ரேல் – 90 வட கொரியா 40 லிருந்து 50. இந்த புத்தக ஆய்வின் படி உலகெங்கும்…

கற்றுக்கொள்.

கிடைத்ததை அனுபவிக்க கற்றுக்கொள்.. கிடைக்காததை ரசிக்க கற்றுக்கொள்.. வாழ்க்கை துன்பம் இல்லாமல் நகரும்!!  அதாவது எட்டாத பழத்துக்கு கொட்டாவி விட்டு ஏங்காதே அப்படின்னு அர்த்தம் 

எதிர்பார்ப்புகள்

எதிர்பார்ப்புகள் எப்போதும் நம்மை ஏமாற்றாது.. நாம் எவரிடம் எதிர்பார்க்க வேண்டும் என்பதில் தான் ஏமாந்து விடுகிறோம்! தாய் தந்தையிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பதும் குழந்தைகளிடம் பெற்றோர் எதிர்பார்ப்பதும் கணவன் மனைவியிடம் எதிர்பார்ப்பதும் மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பதும் மக்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பதும் பக்தன் கடவுளிடம் எதிர்பார்ப்பதும் கூட பல சமயங்களில் ஏமாற்றத்தை தந்துவிடுகிறதே இப்படி இருக்கும் போது யாரிடம் தான் எதிர்பார்ப்பது

பெண்களுக்கு

பெண்களுக்கு இயற்கை அளிக்கும் பாதுகாப்புகளில், அச்சமும் ஒன்று. இந்த இயற்கை தந்த பாதுகாப்பை செயற்கை தனமான நாகரிகத்தை முன்னிட்டு பெண்கள் உடைத்துக்கொண்டால் எத்தனை,எத்தனையோ விபரீதங்கள் ஏற்படும்.

இக்கட்டான நி‍லையை சமாளிக்க

அபாயத்தால் மனிதன் மனம் துணிவு பெற வேண்டும். துணிவினால் தான் இக்கட்டான நி‍லையை சமாளிக்கமுடியும். அழையா வீட்டில் நுழைவதுதான் நட்பின் உயர்ந்த லட்சணம்

காத்திருந்தால்

புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது மீனிற்க்கு மனிதன் ஆசைப்பட்டான். மீனிற்க்கு சிக்கியது புழு. மனிதனிற்கு சிக்கியது மீன். புழுவிற்க்கு ……….? ஆனாலும், காத்திருந்தது புழு. மனிதன் மண்ணிற்க்குள் வரும் வரை,

அனுபவ மொழிகள் 2

கண் எங்கு பார்க்குதோ இதயம் அங்கு உள்ளது. கடனில்லாத ஏழ்மை உண்மையான செல்வம். வலுவான காரணங்கள் வலுவான செயல்களை உருவாக்குகின்றன. நம்முடன் இருப்பவர்களை நாம் கவனித்துக் கொண்டோமானால், இறைவன் நம்மை பார்த்துக்கொள்வான். கண்களால் கற்றுக் கொள்வதைவிட காதுகளால் கற்பதே அதிகம்.

அனுபவ மொழிகள்

நம் நாட்டை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம். தலைக்கும், இதயத்துக்கும் கொடுக்கும் பயிற்சியே கல்வி. கல்வி இல்லாச் செல்வமும், கற்பில்லா அழகும் கடுகளவேணும் பிரகாசிக்காது. கடவுள் தூய கரங்களையே பார்க்கிறார். நிறைந்த கரங்களையல்ல நண்பர்களுக்கெல்லாம் நல்ல நண்பன் ஒரு நல்ல புத்தகம். கண்ணுள்ளவன் விழுவதை விட குருடர் குறைவாகவே விழுகிறார். கற்றுக்கொள்வது ஒரு கசப்பான வேர், ஆனால், அது இனிய கனிகளைச் சுமந்துள்ளது

ஆரோக்கிய வாழ்க்கை

ஆரோக்கிய வாழ்க்கை என்பது நோயற்ற நிலையில் உடல் இருப்பது மட்டும்அல்ல, நன்கு உழைக்க வேண்டும். எந்த வேலை செய்தாலும் மன மகிழ்ச்சியோடும், உணர்வோடும் செய்தாலே உடல் ஆரோக்கியத்திற்கு இருப்பதற்கு அடையாளம் நல்ல உடற்கட்டு உள்ளவர்கள் கூட வேலை செய்ய மனமில்லாதவர்களாயும், சுறுசுறுப்பு இல்லாமலும் திரிவதை காண்கிறோம் அவர்கள் உடல் ஆரோக்கியமானது அல்ல. உழைப்பிலே ஊக்கம் உடையவராய் இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அறிகுறி, அதுதான் ஆரோக்கிய வாழ்வின் அறிகுறி. நோய் என்பது காலங்கடந்து நடைபெறும் வெளிதள்ளும் இயக்கமே ஆகும். பசி…

மாடுகளின் இனப்பெருக்கத்தில் சிக்கல்

திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், கள ஆய்வு மேற்கொண்டனர். நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆனந்தராஜா கூறியதாவது கறவை மாடு வளர்ப்போர், “சூப்பர் நேப்பியர்” எனப்படும், வெளிநாட்டு தீவனப் பயிர்களை, கறவை மாடுகளுக்கு வழங்குகின்றனர். தீவனப் பயிரில், ஆக்ஸாலிக் அமிலத்தின் அளவு 2.8 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் சூப்பர் நேப்பியர் தீவனப் பயிரில் அதன் அளவு அதிகம். இதை தொடர்ந்து உண்பதால் கறவை மாடுகளின் சாணம் மற்றும் சீறுநீரகம்…

ஒரு எடக்கு மடக்கு கதை 2

அவள் விடுவாளா! மறுநாள், எக்ஸ்ட்ராவாக ஒரு சின்ன எவர் சில்வர் தூக்கில் எண்ணெய் ஊற்றித் தந்தாள். ”வாக்கிங் போகும்போது துப்பும்படி ஆயிட்டா, இதை வாயில் ஊத்திக்குங்க” என்றாள். தினமும் அவர் இப்படி எவர்சில்வர் தூக்கோடு நடந்து போவதை, அடுத்த தெருவில் உள்ள ஒரு பெண்மணி கவனித்துவிட்டு, ”தினமும் எண்ணெய் கொண்டு போறீங்களே, கோயிலுக்கா?” என்று கேட்டாள். அவளிடம், தான் எண்ணெயை வாயில் ஊற்றிக் கொப்பளிப்பதை யெல்லாம் விளக்க விரும்பாமல், ‘ஆமாம்’ என்று தலையாட்டி வைத்தார் நம்மாள். மறுநாள்……

ஒரு எடக்கு மடக்கு கதை 1

நமக்குத் தெரிஞ்ச ஒரு ஆசாமி, சரியான எடக்குமடக்குப் பேர் வழி. நாலு தெரு தள்ளி, ஒரு பூங்கா; அங்கேதான் நம்ம எடக்குமடக்கு தினமும் வாக்கிங் போவது வழக்கம். பூங்காவுக்கு அருகிலேயே, சிவ ஆலயம் ஒன்று பாழடைந்து கிடந்தது. விளக்கு ஏற்றக்கூட யாரும் வருவதில்லை. கோவில் குருக்கள் ஒருத்தர், தினமும் கொஞ்சம் நேரம் கோயிலைத் திறந்து வைப்பார். எடக்குமடக்கின் மனைவி, ”பூங்காவைச் சுத்தும்போது, அப்படியே அந்தக் கோயிலையும்தான் ரெண்டு சுத்து சுத்திட்டு வாங்களேன்” என்பாள். உடனே எடக்கு மடக்கு,…

இயற்கை அமைத்த ஸ்ரீ சக்கரம்

அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்கில் உள்ள இடம்தான் மிக்கி பேசின். சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம். ‘பில் மில்லர்’ என்கிற ராணுவ அதிகாரி இந்த இடத்தை குட்டி விமானம் மூலம் கடந்து செல்கையில், 13.3 மைல் சதுர அளவுக்கு வரி வரியாக வரைபடம் போன்ற ஒன்றை கண்டார். ஏதோ நாட்டின் வரை படம் என்று நினைத்து அதைப் பற்றி ஆராய்ந்தவருக்கு   அது நம் இந்து மதத்தில் காலம் காலமாக வழிபடும்…

தெய்வ வழிபாடு என்பது யாது?

ஒவ்வொருவரும் தாம் வழிபடுவதற்கு என ஒரு தெய்வ வடிவத்தை மேற்கொள்ள வேண்டும். அத்தகு தெய்வ வடிவம், மகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்தனுள் ஒன்றாகவோ, சதாசிவ வடிவமாகிய சிவலிங்க வடிவாகவோ இருக்க வேண்டும். அந்த வடிவத்தையே மனத்தினால் எப்போதும் நினைக்க வேண்டும். அந்த தெய்வத்தைக் குறித்த பாடல்களை வாயினால் ஓத வேண்டும். அத்தெய்வத்திற்குரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு வழிபட்டு வருவோமானால், சிவபெருமான் அத்தெய்வவடிவில் நின்று, நமக்கு வேண்டுவன யாவற்றையும் செய்தருள்வான். இவ்வுண்மையைச் சிவஞானசித்தியார், ‘‘மனமது நினைய வாக்கு வழுத்த…

பகவத்கீதை தத்துவம் 2

ஐயோ ! விதி வசத்தால் சூதாட ஒப்புக் கொண்டேனே ! ஆனால், இந்த விஷயம் கண்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே ! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு அவனே என்னை வேண்டுதலால் கட்டிப் போட்டு விட்டான். நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனதுபிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு வெகு நேரமாக காத்து நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும்,…

மனித பிறவியின் பணி

சிவஞானசித்தியாரில், “மானுடப்பிறவி தானும் வகுத்தது மனம் வாக்குக் காயம் ஆன இடத்து ஐந்து ஆகும் அரன்பணிக்காக அன்றோ” (182) என்று அருணந்திசிவம் அருளிச்செய்துள்ளார். மனம், வாக்கு, காயம்,( உடல்) இம் மூன்றைக்கொண்டும் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதற்காகவே இந்த மனிதப் பிறவி நமக்கு வழங்கப்பட்டது.   இதுவே  மனித பிறவியின் பணி  

ஷோடச உபசாரங்கள் என்பவை யாவை?

ஷோடச உபசாரங்கள்  என்பது  ஆவாஹனம், ஆஸனம், பாத்யம், அர்க்யம், ஆசமனம், ஸ்னானம், வஸ்த்ரம், யஞ்யோபவீதம், ஆபரணம், கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம், ப்ரதக்ஷிண நமஸ்காரம் இவைகள் அனைத்தும் சேர்ந்ததே ஷோடச உபசாரங்கள் எனப்படும் 

பகவத்கீதை தத்துவம் 1

“உத்தவர் கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி பாடம் புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன்செல்வத்தை இழந்தான், நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான்.சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள்நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.’திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். குல தேவதை…

வாழ்க்கை வாழ்வதற்கே,

அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள். இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு, ஆனால்..நிலைமையை அறிந்து அளவோடு கொடு எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின் கை ஏந்தாதே, குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டியதை உடனே கொடுத்து விடு, குழந்தைகளுக்கு தரவேண்டியதை பிறகு கொடு. மாற்ற முடியாததை மாற்ற முனையாதே, அமைதியாக மகிழ்ச்சியோடு இரு. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.. நண்பர்களிடம் அளவளாவு. நல்ல உணவு உண்டு.. நடை பயிற்சி செய்து..நல்ல புத்தகங்கள் படித்து  உடல் நலம், மன நலம்,பேணி..இறை பக்தி கொண்டு..…

வாழ்வென்பது

வாழ்வென்பது உயிர் உள்ளவரை.. தேவைக்கு செலவிடு. அனுபவிக்க தகுந்தன அனுபவி.. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்   இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.. போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை.. அதிகமான சிக்கனம் அவசியமில்லை. . மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே… உயிர் பிரிய தான் வாழ்வு.. ஒரு நாள் பிரியும்.. சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும். உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.. உன் குழந்தைகளை…

ஒரு சின்ன கதை பகுதி 2

ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது. ‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும், ’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’ என்கிறது முயல். காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரித்தது. உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால் என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு,…

ஒரு சின்ன கதை பகுதி 1

ஒரு கிராமம்.சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது. ’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்.…

கொஞ்சம் சிரிக்க

மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க? டாக்டர் தான் தலை வலிச்சா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார். என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்க முடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்” “யோவ் பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே?” நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!” “என்னங்க இது கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க” “நான் தான் அப்பவே சொன்னேனே பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!”

தேனில் இப்படியா?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன். நோய் எதிர்ப்பு சக்தியை, அதிகரிப்பதற்காக குழந்தைகளுக்கு தேன் காலம் காலமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. இன்றளவும் தேனை உற்பத்தி செய்து, நமக்குத் தருபவை தேனீக்களே. அதிகப்படியான தேன் தேவைக்கு பெட்டிகளில் தேனீக்களை வளர்த்து, தேனைச் சேகரிப்பதும் நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கிறது. காலம் காலமாக மக்களின் நம்பிக்கையை பெற்ற தேனுக்கான…

பிரபஞ்ச சக்திகள் 2

பிரபஞ்ச சக்தியானது உடலில் கரு உற்பத்திக்கு முக்கிய காரணமாகிறது.சுக்கிலமும் சுரோணிதமும் இணையும்போது, காற்று நீர், நெருப்பு, மூன்றும் சேர்ந்து மண் உரு கொண்டு உடலாய் மாறி உயிர் சேர்ந்து வாதம், பித்தம், கபம் என நிலைப்படுகின்றது. இவ்வாறு பஞ்ச பூதங்களுள் அமைந்துள்ள உடலானது உலகில் உள்ள தாதுப்பொருட்கள், தாவரப் பொருட்கள், அனைத்தும் சங்கமமாகின்றது. மனித உடல் ஐம்பெரும் பூதங்கள் அடங்கிய சிறிய பிரபஞ்சம் என்றே சித்தர்கள் கூறுகின்றனர்.மேலும் மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் பிரபஞ்சத்தில் உள்ள…

பிரபஞ்ச சக்திகள் 1

பிரபஞ்ச சக்திகள் அனைத்தும் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளிலும் நிறைந்துள்ளது. இதனால்தான் திருமூலர் ஊண் உடம்பே ஆலயம் என்றார். இந்த வாத பித்த கபம் எவ்வாறு மனித உடலில் உள்ளது என்பதையும் வாத பித்த கப நிலைப்பாட்டின் தன்மையை இந்த பிரபஞ்சத்தில் ஐம்பூதங்களான மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் இவற்றின் பிரதிபலிப்புகள்  ஒவ்வொரு உயிரிலும் நிறைந்துள்ளது. அண்டத்திலுள்ளதே பிண்டம்     பிண்டத்திலுள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமுமொன்றே   அறிந்து தான் பார்க்கும் போதே என்று சித்தர் பாடுகிறார்.…

யதார்த்தம்

நீங்கள் மிக நெருங்கியவராக நினைப்பவரும் உங்களை போலவே பிறிதொருவரை மிகநெருங்கியவராக நினைத்துக்கொண்டிருப்பார் இது தெரியும் போது நம்மால் ஜீரணிக்கமுடியுமா ஜீரணிக்க முடிந்தால் பாக்கியசாலிகள் இல்லாவிட்டால் வன்மம் வளரும் நமது வாழ்க்கை சீர்கெடும் ஏமாந்தால் நம்மை சுற்றியுள்ளவர்களும் பாதிப்பு அடைவார்கள் அதனால் அது அப்படிதான் என்று எடுத்துக்கொண்டு போய்விடுதல் நல்லது யாருக்கும் தொல்லை இல்லை முக்கியமாய் நமக்கு தொல்லை இல்லை அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள் அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து…

நிலத்தின் உயிர் எது? 2

ஆட்டுப்புழுக்கை, மாட்டு சாணிய மண்ணில் போடுகிறோமே, அதுவும் மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகள்தான். இன்றைக்கு, அதனை பாக்கெட்டுகளில் எல்லாம் போட்டு விவசாயிகளுக்கு கொடுக்கிறோம். அசோஸ்பைரில்லம், ரைசோபியோம், பாஸ்போ பாக்டீரியம், சூடோமோனாஸ் எல்லாம் கண்ணுக்கு தெரியாத உயிரிகள். கண்ணுக்கு தெரியாத இந்த உயிரிகள் காற்றில் இருக்கும் நைட்ரஜனை எடுத்து செடிக்கு வினியோகம் செய்கிறது. பூமியில் உறைஞ்சு கிடைக்கிற பாஸ்பரசை இளக்கி வினியோகம் செய்கிறது. பூமியில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் பொட்டாசியமாக மாற்றி வினியோகம் செய்கிறது. நீங்கள் எதை, எதையெல்லாம் கடையில்…

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சியே அனைத்திற்கும் தீர்வு என்று சிலர் பேசுகிறார்கள் இது உண்மையா என்று ஆழமாக சிந்தித்தோம் என்றால் நிச்சயம் இல்லை என்பதே விடையாக இருக்கும் ஒரு தேசம் என்னதான் பொருளாதாரத்தில் வளர்ந்தாலும் அதன் மக்களிடையே சகிப்பு தன்மையும் பரஸ்பர அன்பும் தேச பற்றும் இல்லாது போனால் அந்த பொருளாதார பலம் அழிவுக்கே வழி வகுக்கும் மேலும் இந்த பொருளாதார வளர்ச்சியே சாத்தியம் இல்லைதான் (பொருளாதார வளர்ச்சி சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட…

நிலத்தின் உயிர் எது? 1

இயற்கையில் சில விதிகள் உண்டு. வயலுக்கு என்ன போட வேண்டும் என்று கேட்டால் 40 விழுக்காடு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போட வேண்டும் என்று சொல்கின்றனர். அந்த ரசாயனத்தை போடப்போட பூமியில் இருக்கும் உயிரெல்லாம் இறக்கின்றன. இந்த மண்ணில் இருக்கும் உயிர்களுக்கு எல்லாம் ரசாயனத்தை போடக்கூடாது. விஷத்தை போடக்கூடாது. போட்டால் அது செத்துப்போய்விடும். அதுக்கும் பதிலா அது கேட்டபது, கழிவுகளைத்தான். ஆட்டு புழுக்கையை போடும் போதும், மாட்டு சாணத்தை போடும்போதும், கோழிக் கழிவை போடும் போதும், இலை…

சிரிக்க

முல்லா தனது மனைவியிடம் சொன்னார். நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பித்திருக்கிறேன். மூலதனம் மட்டும் ஒரு கோடி ரூபாய்  என்று  மனைவி கேட்டார். அப்படி ஆனால் நீங்கள் பாதிப் பணம் போட வேண்டியிருக்குமே, அவ்வளவு பணத்திற்கு எங்கே போவீர்கள். அதற்கு முல்லாசொன்னார்.. நண்பன் மூலதனம் முழுவதையும் போடுவான். என் அனுபவம் தொழில் நடத்த உதவும். என் அனுபவம் தான் என் பங்கு மூலதனம், முல்லாவின் மனைவிக்கு மிகவும் சந்தோஷம். . லாபத்தில் இருவருக்கும் சம பங்கா?…

ஒற்றுமை பற்றி சாதுவின் கண்ணோட்டம்

இரு அரசர்களுக்கிடையில் எப்போதும் சண்டை வந்து கொண்டேயிருந்தது. சாது ஒருவர் இவர்களின் ஒற்றுமைக்காக  பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டார் இதைப் பார்த்த அவர்கள  அவரைத் திட்டினார்கள். இவர்கள் திட்டுவதைப் பார்த்த சாது மௌனமாக சிரித்துக்கொண்டார். நாங்கள்  உங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் சிரிக்கிறீர்கள் என்றார்கள். அதற்கு அந்த சாது என்னைத் திட்டுவதிலேயாவது உங்களுக்கு ஒற்றுமை இருக்கிறதல்லவா அது போதும் என்றார்..

இறைவனை வழிபடுவதற்கான வழிமுறைகள் யாவை?

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்குமே இறைவனை வழிபடுவதற்கான நெறிகள் ஆகும். இவற்றுள் சரியை என்பது, உடலால் வழிபடுவது. அதாவது திருக்கோயிலை வலம் வருவது, திருக்கோயிலுக்குப் பூ மாலைகொடுப்பது, திருக்கோயிலில் துப்புரவுப் பணி செய்வது முதலியன உடலால் வழிபடுவது ஆகும். கிரியை என்பது வாயினால் வழிபடுவது. அதாவது  மந்திரங்களை ஓதுவது, திருமுறைகளை நாள்தவறாமல் பாராயணம் செய்வது, சாத்திர தோத்திரக் கருத்துக்களைப் பிறர்க்கு எடுத்துரைப்பது முதலியன வாயினால் செய்யும் வழிபாடு ஆகும். யோகம் என்பது மனத்தினால் வழிபடுவது.…

தாவரங்களின் உணர்வுகள்.

தாவரங்கள் பேசுவதை மனிதர்களால் கேட்க முடியுமா? ஆமாம் அது சாத்தியம்தான். சொற்களை பயன்படுத்தி பேசுவது என்ற மனித வழக்கத்தின்படி, அவை பேசுவதில்லை. தாவரங்களால் கட்டமைக்கப்பட்ட சுற்றுச் சூழலுக்கு இயற்கையிலேயே ஒத்திசைவு கொண்ட உயிரினங்கள் நாம். எனவே, ஏதாவது ஒரு வழியில் அவற்றுடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் எப்படி ஒருவரோடு மற்றொருவர் இணைந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியும். இன்றைய சூழ்நிலையில் சீர்கேடுகளுக்கு முக்கிய காரணம், அவற்றுடன் கொண்டிருந்த உறவை நாம் மறுத்து…

வீட்டுக்கடனும் வரிச்சலுகையும்.

வீட்டுக்கடன் வாங்கும் போது வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் பெரும்பாலானவர்கள் வீட்டுக்கடன்தான் வாங்குகிறார்கள். ஆனாலும், அந்த கடன் வாங்குவதற்கு நம்மிடம் ஒரு அடிப்படைத் தொகை இருக்க வேண்டும். உதாரணத்துக்கு வீட்டின் மதிப்பில் சுமார் 20 சதவீத தொகை நம்மிடம் இருக்க வேண்டும். இதை ‘ டவுன் பேமென்ட் ‘ என்ற சொல்லுவார்கள். உதாரணத்துக்கு ரூ.50 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்குகிறீர்கள் என்றால், சுமார் 10 லட்ச ரூபாயாவது நீங்கள் செலுத்தும் முன்பணமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வங்கிகள்…

சிவராத்திரியின் பலன்கள்

சிவபெருமானை வழிபடும் முக்கியமான வழிபாடுகளில் ஒன்று சிவராத்திரி ஆகும்.  மாதம் தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை  சதுர்த்தசியில்  சிவராத்திரி வரும். மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் வரும் சிவராத்திரியே  மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. ‘நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ஷ சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி’ என சிவராத்திரி ஐந்து வகையாக வருகின்றன. நித்ய சிவராத்திரி — ஒரு வருடத்தில் தேய்பிறை சதுர்த்தசியில் 12,  மற்றும் வளர்பிறை சதுர்த்தசியில் 12 என 24 சிவராத்திரிகள் தான்…

புறாக்களின் வகைகள்

அரசர் காலத்தில் புறாக்கள் தூது போயின. எனவே காலம் காலமாக மனிதனோடு புறாக்கள் பின்னிப்பிணைந்து இருக்கின்றன. புறாக்களில் மிகவும் விலை உயர்ந்தது பந்தயப் புறாதான். இதனை ஐதாராபாதில் கொண்டு போய் விட்டாலும் சரி, காஷ்மீரை தாண்டி விட்டாலும் சரி, ஒரு சின்ன ரவுண்டு அடித்துவிட்டு புறப்பட்ட இடத்திற்கு வந்துவிடும். இந்த வகைதான் பந்தய புறாக்கள் என்கிறார்கள். இவை பெல்ஜியம், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை. நீண்ட தூரம் பறக்க கூடிய அந்த நாட்டு புறாக்களின்…

அமெரிக்க டாலரை பற்றி சில வரிகள்

1929 – ம் ஆண்டு முதல் 1933 வரையில் நீடித்த உலகப் பொருளாதார வீழ்ச்சி, உலகப் பொருளாதாரத்தின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 30 சதவீதம் அளவுக்குச் சரிவு ஏற்பட்டது. சுமார் 1 கோடியே 30 லட்சம் பேர் வேலையிழந்தனர். 1929 – ல் வீழ்ச்சியின் தொடக்கத்தில் 3 சதவீதம் ஆக இருந்த வேலையில்லா திண்டாட்டடம் 1933 – ல் 25 சதவீதம் ஆக உயர்ந்து விட்டது. 85, 000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. லட்சக் கணக்கானோர்…

நாட்டின் வளர்ச்சிதான் தான் நோக்கம் என்றால்

ஒருவரின் மாத சம்பளம் 10,000 ரூபாயை.. அவர் பணமாக செலவழிச்சா, 10,000 ரூபாயும் செலவு செய்யலாம். ஆனால்!!! அதையே அவர் வங்கி மூலமா DIGITAL money யா செலவழிச்சா, சேவை கட்டணம் 15% – 1,500 ரூபாய் போக, அவரால் 8,500 ரூபாய் மட்டுமே செலவழிக்க முடியும்.  யோசிங்க  இதோ 130 கோடி பேருக்கு 1500 × 130கோடி = 1,95,000,கோடி ரூபாய் சேவைக் கட்டணமாக மாதம், மாதம் வங்கிகளுக்கோ அல்லது கும்பானிகளுக்கோ போய் சேரும். ஒரு…

பொன் மொழிகள்

சொர்க்கமும், நரகமும் உன்னுடைய இதயத்தில் இருக்கிறது. எழுதப் படிக்கத் தெரிந்தவனுக்கு நான்கு கண்கள். நனையச் செய்த கடவுளே காய வைக்கவும் செய்வார். கெட்ட பெயரெடுத்த ஒரு மனிதன் ஏற்கனவே பாதித் தூக்கிலிடுகிறான். கடவுளை நெருங்கிச் செல்வதற்கு மலையேற வேண்டிய தேவையில்லை. வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கடமை இல்லாதவன் ஏழைகளிலும் ஏழை. உன் பெயர் தான் வியாபார அடையாளம், அதை உன் உயிர் போல் காப்பாற்று. நமது அறியாமையை மேலும், மேலும் அறிந்து கொள்வதே கல்வி ஆகும். கடன்…

யோசிக்க வேண்டிய விஷயங்கள்

வெட்டாதீர்கள் – மழை தருவேன் என்கிறது மரம் வெட்டுங்கள் – மழை நீரை சேமிப்பேன் என்கிறது குளம் ஆன்லைனில் கிடைக்கும் அன்பும் ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை. தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறது. கல்வி கற்க புத்தகங்களை விட நோட்டுக்களேஅதிகம் தேவைப்படுகின்றன நம்மை நிராகரிக்கப்படும் இடத்தில். நம் கோபத்தை காட்டுவதை விட சிரித்த முகத்தை காட்டுவதே மிகச்சிறந்த பதிலடி.. பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இல்லை காரணமே இல்லாமல்…

தவறு

தவறு செய்ய யாரும் பயப்படுவதில்லை.. செய்த தவறு  வெளியே தெரியக்கூடாது என்றே பயப்படுகிறார்கள்.. சில தவறுகள் நாம் யார் என்பதை சொல்லிவிடும்.. சில தவறுகள் நாம் யாராக இருக்கவேண்டும் என்பதை சொல்லி தரும்.

மதிக்க வேண்டிய உறவு

உங்கள் அன்பு யாருக்கு பலமோ… உங்கள் வார்த்தை யாருக்கு மகிழ்ச்சியோ… உங்கள் புன்னகை யாருக்கு தேவையோ… உங்கள் மௌனம் யாருக்கு கண்ணீரை வர வைக்குமோ… உங்கள் பிரிவு யாருக்கு துன்பத்தை தருமோ… உங்கள் நினைவு யாருக்கு பொக்கிஷமோ… அவரே   உண்மையில் நீங்கள் மதிக்க வேண்டிய உறவு

நாடிகள்

மனித உடலிலுள்ள இடகலை, பிங்கலை என்ற உஷ்ண, குளிர் நாடிகள் சுஷிமுனா என்ற சூக்கும நாடியை, மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரம் ஆகிய ஏழு இடங்களில் சந்திக்கின்றன.

ஞானசொரூபன்.

மண்ணினால் நாசிக்கு விகாரமாகிய நாற்றம் ஏற்படுகிறது. இந்த பூத விகாரத்தினால், முழுமை வெளிப்பட்டு , உலகம் இயங்கி, தன் வழியே ஒடுங்கி, இறுதியில் மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினியில் சென்று அடங்குகின்றன. இவைகளில் நிறைந்து மனிதரின் உள்ளத்து உணர்வு வடிவமாக விளங்குவதுதான் புருஷத்துவம். உறங்கிக் கிடக்கும் இந்த குண்டலினி சக்தியைச் சீற வைத்து இயக்குபவன்தான் சர்வ சக்தி வடிவான ஞானசொரூபன்.

என் மனம் என்னுடைய பேச்சைக் கேட்பதே இல்லை

அது ஒரு புத்த மடாலயம். அந்த மடாலயத்தின் தலைமை துறவியாக இருந்தவர், மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் பலரும் துன்பங்களை கடக்கும் வழி உள்ளிட்ட பலவற்றை அறிந்துகொள்வதற்காக வருவார்கள். அன்றும் அவரைப் பார்க்க ஒரு வியாபாரி வந்திருந்தார். அவர் அந்த துறவியிடம், “சுவாமி.. என்னுடைய மனம் என்னுடைய பேச்சைக் கேட்பதே இல்லை. அதை நான் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அதற்கு பலன் கிடைப்பதில்லை” என்று கூறி அங்கலாய்த்துக் கொண்டார். அப்போது துறவியின் அருகில் அவர் வளர்த்து வந்த குரங்கு…

எங்கும் அப்பாவிகளே பலியாகின்றனர்.

காட்டில் பயங்கரமான நோய் பரவியது நிறைய விலங்குகள் இறந்தன. பல சாகும் தருவாயில் இருந்தன. விலங்குகளின் அரசனான சிங்கம் எல்லா விலங்குகளையும் அழைத்தது. “காட்டில் பாவம் அதிகரித்து விட்டது. இந்தக் காட்டில் யார் அதிகப் பாவம் செய்தார்களோ, அவரைக் கண்டுபிடித்துப் பலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்று சொன்னது சிங்கம். ஒருவரும் பேசவில்லை. சிங்கம், தான் நிறைய ஆடுகளைக் கொன்று பாவம் செய்ததாகவும், தான் பலியாவதற்குத் தயார் என்றும் சொன்னது. உடனே நரி, “மாண்பு மிகு அரசே,…

சுதந்திரம்

ஜனங்கள் சுதந்திரத்திற்கு வேண்டி போராடுவார்கள். பின் சுதந்திரம் பெறுவார்கள். அதன் பின் பெற்ற சுதந்திரத்தை வேறு ஒருவரிடம், அடகு வைத்து அடிமையாய் இருப்பார்கள். இதில் காலம் மாறுபடும் ஆட்கள் மாறுவார்கள் ஆனால் மக்களின் அடிமைத்தனம் மாறவே மாறாது மக்களின் சுதந்திர தாகம் தீரவும் தீராது என்ன செய்வது நம் மக்களுக்கு சுதந்திரம் என்பது எது என்பதே தெரியாததால் சுதந்திரம் வாங்கவும் தெரியவில்லை அப்படியே வாங்கினாலும் வாங்கிய சுதந்திரத்தை வைத்து வாழவும் தெரியவில்லை பாவம்

அறிவின் தாக்கம்

உங்களின் அத்தனை பொய்களையும் பொய் சமாதானங்களையும்.. ஏற்றுக்கொள்பவர்களை ஏமாளி என எண்ணாதீர்கள்..! அவர்கள் உங்களை இழக்க விரும்பாதவராக இருக்கலாம்..!! இதில் சொன்ன விஷயத்தை நாம் நம் அனுபவத்தில் கடந்திருப்போம் ஆனால் நினைவில் வைத்திருக்க மாட்டோம் காரணம் மறதி என்று சொல்ல முடியாது உண்மையான காரணம் மதிப்பு நாம் கொடுக்கவில்லை என்பதுதான் என்ன செய்வது நம்மை இழக்க விரும்பாதவரிடம் கூட நம்மால் உண்மையாய் இருக்க முடியாத அளவு அறிவின் தாக்கம் பெருகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டியுள்ளது

முக்கியத்துவம்

உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவதை விட…. முதலில் உன் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடு… ஏனெனில் உன் வாழ்வை தீர்மானிப்பது உறவுகளல்ல உன் உணர்வுகள் தான்….!!! இது உறவு வேண்டாம் என்ற பொருளில் சொல்லப்பட்டதல்ல உறவுகள்  உணர்வோடு இருக்க  வேண்டும் என்ற பொருளில் சொல்லபட்டது  தற்காலத்தில் உள்ள உறவுகள் பெயரில் மட்டுமே இருக்கிறது உணர்வில் இல்லை தாய், தந்தை, மகன், மகள், கணவன், மனைவி, அண்ணன், தம்பி, இந்த வார்த்தைகளின் உணர்வுகளை தற்போதைய மனித சமுதாயம் 75 சதவிகிதம் தொலைத்து…

நம்பிவிடாதீர்கள்..!

யார் எதை சொன்னாலும் நம்பிவிடாதீர்கள்..! சோதித்துப் பாருங்கள், அதை பற்றி ஆழமாக சிந்தித்து பாருங்கள்.. உங்கள் புரிதலுக்கு உட்படவில்லையெனில்.. அது எதுவும் உங்களுக்கு உதவப்போவதில்லை. எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸ்தூல பரு உடல்

ஸ்தூல உடல், சூட்சும ஆவி உடல், அதி சூட்சும அருள் உடல், காரண உடல், மகா காரண அருவசக்தி இவைகளில் அன்னமய கோசமாகிய ஸ்தூல பரு உடலைத் தவிர மற்ற நிலைகளை மூலாதாரம் எனப்பட்ட வாலறிவால்  தான் பெறமுடியும்.

வெற்றி

பல தோல்விகளைப் பார்த்தவன் ஒரு வெற்றியை கண்டதும் மெல்ல கடந்து போவான்…… பல வெற்றிகளை பார்த்தவன் ஒரு தோல்வியை கண்டதும் துவண்டு போய்விடுவான்…… அனுபவத்தில் இது உண்மையென்றேபடுகிறது அதுவும் எதிர்பாராத வெற்றிகள் வரும் போது உலகே தனக்கு கீழ் தான் என்ற எண்ணம் வந்து ஒரு தோல்வி வந்தவுடன் திசைமாறியவர்களை காணும் வாய்ப்பு கிட்டியுள்ளது

நிம்மதி

மகிழ்ச்சி வேண்டுமானால், பணம் சார்ந்ததாக இருக்கலாம்… ஆனால் நிம்மதி, என்றும் மனம் சார்ந்ததுதான்… வெளியில் தேடினால், கிடைக்கும் பொருளல்ல… மனதில் தேடினால், கிடைக்கும் உணர்வே நிம்மதி!…

தலைமை  பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள். 3

பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள். சொன்னதே சரி, செய்ததே சரி, என பிடிவாதம் பிடிக்காதீர்கள் இங்கே கேட்பது அங்கேயும், அங்கே கேட்பது இங்கேயும் சொல்லுவது விடுங்கள். மற்றவர்களுக்கு மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள் அடுத்தவர் இறங்கி வரவேண்டும், என்று காத்திராமல்,   நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவர்களின் கருத்துக்களுக்கு காது கொடுங்கள். பின்பு அதற்கு பதில் கொடுங்கள். எந்தப்பேச்சும், செயலும் யார் மனதையும் காயப் படுத்தாமல்  இருக்கட்டும். நம்மை மற்றவர்கள்…

தலைமை பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள். 2

இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள். சம்பந்தமில்லாமலும், அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசவேண்டாம். மற்றவர்களை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசி விட்டு முடிவு எடுங்கள். முக்கியமாக  நடுநிலை தவறவேண்டாம்.. அளவுக்கு அதிகமாகவும், தேவைக்கு அதிகமாகவும்  ஆசைப்படாதீர்கள். சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும்  என  உணருங்கள். தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேக பிரச்சனைக்கு காரணம் தெரியாததை பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிட்டுப் போங்கள். இப்படியெல்லாம் இருக்கமுடியாது…

தலைமை பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள். 1

மற்றவர்வகளின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள். புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள், நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். புரிந்து கொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள். மற்றவர்களை விட உங்களையே உயர்த்தி கர்வப்படாதீர்கள். கண்டிக்கக் கூடிய அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள். எந்த கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தை- யும், நேர்மையாகக் கையாளுங்கள்.…

குஞ்சிதபாதம்

சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கி திருநடனம் ஆடியதற்கு குஞ்சிதபாதம் என்று பெயர். இந்த தரிசனத்தை கண்டாலே தீராத வியாதியும் நீங்கும். பல மூலிகைகளால் செய்யப்பட்ட ஒரு பொருளை நடராஜரின் தூக்கிய திருவடியில் அணிவிக்கப்படும்போது, அந்த மூலிகை வேர்களுக்கு குஞ்சிதபாதம் என்றும் பெயர் இருக்கிறது. சிவபெருமானின் இடது பாகத்தில் சக்திதேவி இருக்கிறார். அதனால்தான் எமதர்மராஜன், மார்கண்டயனை துரத்தி பாசக்கயிற்றை வீசியபோது மார்கண்டயன், சிவலிங்கத்தை கட்டிபிடித்து கொண்டான். அப்போது எமனின் பாசகயிறு சிவலிங்கத்தின் மேல்பட்டது.…

இந்து மதத்தில் ஏன் இத்தனை கடவுள்.

சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள். விஷ்ணு புராணம் படித்தால் விஷ்ணுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம். முதலில் ஹிந்துக் கடவுள்களை விமர்சிக்க தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர். சிவா என்றால் புனிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்ணு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன். இராமன் என்றால் ஒளி மிக்கவன்,…

எதையும் மகிழ்ச்சிகரமான கணங்களாக மாற்றிக் கொள்வது

ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார்: சென்ற வருடம் எனக்கு ஒரு major surgery,,,gall bladder எடுக்க வேண்டிய சூழ்நிலை. நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது. அதே வருடம் 60 வயது ஆகிவிட்டதால் வேலையிலிருந்து retirement. அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார். அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் கொண்டு medical examination எழுத…

அக்ரா

கினி வளைகுடா பகுதியில் அமைந்துள்ள கானா நாட்டின் தலைநகர் மற்றும் (ம.தொத.,2001 மதிப்பீடு 15,51,200) 1482-ல் போர்த்துகீசியர்கள் இப்பகுதியில் முதன்முதலில் குடியேறிய போது, இந்தப் பகுதி ‘கா’ மக்களின் குடியிருப்பாக இருந்தது. 1650-80களில் பாதுகாப்பு மிக்க மூன்று வணிக மையங்கள் முறையே டேனியர்கள், டச்சுகாரர்கள் மற்றும் பிரிட்டிஷாரால் கட்டப்பட்டன. டேனியர்களும் டச்சுகாரர்களும் முறையே 1850 மற்றும் 1872ல் இப்பகுதியை விட்டு வெளியேறினர். 1877ல் அக்ரா பிரிட்டிஷ் கோல்ட் கோஸ்ட் காலனியின் தலைநகரமானது. 1957ல் கானா சுதந்திரம் அடைந்த…

S.PB. நினைவுகள்.

1970,80,90 -ம் காலங்களில் வாழ்ந்தவர்களின், வாலிபர்கள், பெரியவர்கள், சிறியவர்கள் வரை அனைவரையும் தன் குரலால் வசீகரித்து உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திய மாபெரும் கான கந்தவர்வன் பாடலிலேயே சிரிக்கவும், சிணுங்கவும், உள்ள கலையை முழுமையாக கைவர பெற்ற உன்னத பாடகர். ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் நிலவே வா இந்த பாடலில் விழுந்தவன் இன்னும் ஏனோ என்னால் எழ முடியவில்லை சிந்து பைரவி படத்தில் வரும் தண்ணிதொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி என்ற பாடலை நான் ஏன்  டைரக்டர்…

அ எழுத்தின் சிறப்பு

தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்து, இதுவே முதல் உயிரெழுத்தாகும், அகரம் என்று வழங்கப்படுகிறது. உயிரும், மெய்யுமாக அமைந்த எழுத்துக்களின் வரிசை நெடுங்கணக்கு எனப்படும். ஆங்கிலம் போன்ற மொழிகளில் உயிர் எழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் கலந்ததாக நெடுங்கணக்கு உள்ளது. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில், உயிரெழுத்துக்கள் முதலிலும், மெய்யெழுத்துக்கள் பின்னரும் அமைகின்றன. தமிழின் மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் அகரமே, எழுத்துக்களுக்கு முதலானது என்று குறிப்பிடுகிறது. வள்ளுவரின் திருக்குறளும் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது. குழந்தைகள் முதன் முதலில் ஒலியெழுப்பத்…

ஒரு கதை

ஒரு வியாபாரி நாய் ஒன்றை அன்புடன் வளர்த்தார். ஒரு சமயம் நாயின் உடல்நிலை சரியில்லாமல் போனது அதை சோதித்த கால்நடை மருத்துவர் அதற்கு மீன் எண்ணெய் கொடுக்கச் சொன்னார். உடனே பெரிய புட்டி நிறைய மீன் எண்ணெய் வாங்கி கொண்டுவருமாறு வேலையாட்களை பணித்தார் வியாபாரி. நாயை மடியில் வைத்து எண்ணெயை கெண்டி வழியாக ஊற்ற நினைத்தார். பலவந்தமாக எதோ செய்யப் போகிறார்கள் என்று நினைத்த நாய் திமிறிக் கொண்டு தப்பியோடியது. ஓடும் பொழுது எண்ணெய் புட்டி கீழே…

திரு அப்துல் கலாம் அவர்கள்

கலாம் வாழ்க்கையை நேசித்தவர், வாழ்ந்து காட்டியவர், மனிதனுக்கு இருக்க வேண்டிய சிறப்பான குணங்கள் அன்பு, பண்பு, பொறுமை, நிதானம், வைராக்கியம், தனக்கும் தன் நாட்டிற்கும் செய்ய வேண்டிய கடமை போன்றவை வேண்டுமென்று பெரியவர்கள் சொன்னதை செயல்வடிவத்தில் செய்து காட்டியவர். அது கலாமின் கடைசிபயணத்தில் நடந்த சம்பவத்தில் கூட நாம் காண முடியும். அந்த நேரத்திலும் அவர் ஆசானக இருந்து நமக்கு போதித்திருக்கிறார். புண்ணியம் செய்திருப்பவர்கள் அந்த போதனையை ஏற்று தன் வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள். அதனால் அவர்கள் சந்தோஷத்தையும்,…

கோவிட் 19 நகைசுவை

நல்லவேளை ஆண்டவன் மனுஷனுக்கு எதுக்கு ரெண்டு காது ஒத்த காது போதும்னு நினைக்கல அப்படி நினைச்சுருந்தார்னா இப்ப நாம எல்லோரும் மாஸ்க் மாட்டுறதுக்கு ரொம்ப சிரமப்பட்டுருப்போம்.

இப்படியும் கொஞ்சம் யோசியுங்க

ஓர் ஊரில் ஏழை ஒருத்தன் இருந்தான். ஒருநாள், பிள்ளையார் சந்நிதிக்கு வந்த அவன் , ”கணேசா! இது உனக்கே நல்லாருக்கா? நான் நாள் தவறாம வந்து, உன்னை கும்பிட்டுட்டுப் போறேன். என்ன பிரயோசனம்? உன்னை எட்டிக்கூடப் பார்க்கிறதில்லை, என் பக்கத்து வீட்டுக்காரன். ஆனா பாரு, நேத்து அவனுக்கு லாட்டரிச் சீட்டுல ஐம்பதாயிரம் ரூபா பரிசு விழுந்திருக்கு!” என்று புலம்பிவிட்டுப் போனான். ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்த அவன், ”பிள்ளையாரப்பா! நீ பண்றது ரொம்ப அநியாயம்! ஆடிக்கொரு…

இரு வேறு பார்வைகள்*

வீட்டிலே காபி கொடுத்தாள்  மனைவி.  உள்ளே ஓர் எறும்பு கிடந்தது. அதைக் கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்துவிட்டான். விளைவு? சண்டை. சந்தோசமான வீடு மூன்று நாள் துக்க வீடாக மாறிவிட்டது. இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது. அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான். அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான். “உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான். உன் காபிக்காக உயிரையே கொடுத்து…

சிந்தித்து பார்த்தால்

வேலைக்கு போய் திரும்பி வந்த தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள் .. நம்ம வீட்டு பீரோ சாவியை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? அதைப் போய் ஆயாகிட்ட கொடுப்பாங்களா..? நம்ம வீட்டு பீரோல இருக்குற நகை, பணம் எல்லாம் ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? ஷ்ஷு…. அதெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது… உங்க ATM கார்டை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..? என்ன கேள்வி இது..? நீ சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருள். அதையெல்லாம்…

பின் பற்ற வேண்டிய விஷயங்கள்

பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.

சிந்தனை சாதனை

சாதாரண எண்ணத்தைக் கொண்டு சாதனை அடைந்தவர்கள் உண்டா? முயற்சியின்றி தேர்ச்சிப் பெற்றவர்கள் உண்டா? தியகமின்றி தங்கம் வென்றவர்கள் உண்டா? கவலைகள்,  கனவுகள், இல்லாத கலைஞர்கள் உண்டா? அனைவருக்கும் எளிதில் கிடைக்க சாதனை என்ன சாதாரண விஷயமா?                                                   சித்தேஷ்

குரு

வேண்டும் பேறு குருவைக் கண்டிட! வேண்டும் ஜென்மங்கள் குருவருள் பருகிட வேண்டும் காலம் குருவை அறிந்திட வேண்டும் ஞானம் குருவைப் புரிந்திட வேண்டும் புண்ணியம் குருவை வேண்டிட வேண்டும் அறிவு குருவழி நடந்திட

இறைவனும் ஒரு பொறியாளன் தான்

மனித மூளையில் சேமிப்புத் திறன் 256 GB பில்லியன். ஹார்ட் டிஸ்க் ( சராசரி 250 GB ) எண்ணிக்கைப் படி பார்த்தால் சுமார் 1.2 பில்லியன் ஹார்ட் டிஸ்க்குகளுக்கு இணையானது மனித மூளை. இந்த சேமிப்புத் திறன் அளவிற்கு குருந்தகடுகளை ( சி.டி ) அடுக்கினால் அது நிலவைத் தாண்டி செல்லும். இத்தனையும், வெறும் 1,400 கிராமில் அடங்கியது என்ன விந்தை!!

கால அட்டவணை

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு. இதோ கால அட்ட வணை: விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும். காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது. காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும். காலை 9…

அழகு.

ஓடிக்கொண்டே இருப்பதுதான் நதியின் அழகு. பாடிக்கொண்டே இருப்பதுதான் குயிலுக்கு அழகு சீறிக்கொண்டே இருப்பதுதான் பாம்பிற்கு அழகு. தேடிக்கொண்டே இருப்பதுதான் மனிதனுக்கு அழகு நாடிக்கொண்டே இருப்பதுதான் மனதுக்கு அழகு பேசிக்கொண்டே இருப்பதுதான் கிளிகளுக்கு அழகு நகர்ந்துகொண்டே இருப்பதுதான் மேகங்களுக்கு அழகு. மின்னிக்கொண்டே இருப்பதுதான் விண்மீன்களுக்கு அழகு. ஒளிவீசிக் கொண்டே இருப்பதுதான் வைரங்களுக்கு அழகு.

மனத்தூய்மை பெற

ஒரு பெரியவர் எப்போதுபார்த்தாலும் தன்னுடைய வீட்டுவாசலில் அமர்ந்தபடி பகவத்கீதையை படித்துக் கொண்டே இருப்பார். இளைஞன் ஒருவன்பல நாட்களாக இதனை கவனித்துக்கொண்டே இருந்தான். ஒரு நாள் அவரிடம்வந்து கேட்டான் , ” தாத்தா! எப்பப்பாத்தாலும் இந்த புத்தகத்தையேபடிச்சிட்டு இருக்கீங்களே. இதை எத்தனைநாளா படிக்கிறீங்க?” என்றான். பெரியவர் சொன்னார்,” ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம்இருக்கும் “.” அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்குமனப்பாடம் ஆயிருக்குமே! அப்புறம் ஏன்இன்னும் படிக்கிறிங்க ?” என்றான். தாத்தா சிரித்தபடி கூறினார், ” எனக்கு ஒரு உதவி…

குலதெய்வம்

காஞ்சி பெரியவர் சொன்னது நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை. பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம்…

மனம் ஒரு குரங்கு

ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம். எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ”சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள். ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது” என்று…

‘ஆமைபோல் வேகம் கொள்’

நீ ஆமையைப் பற்றிக் கேட்டாயல்லவா..? ஆமை மாதிரி புத்திக்கூர்மையுள்ள, உணர் அறிவுள்ள, தேடலுள்ள உயிரினம் ஏதுமில்லை. தன் முதல் கருவுறுதல் நிகழ்ந்த பிறகு, ஆமை, தான் முட்டையிடுவதற்கான இடத்தைத் தீவிரமாகத் தேடும். பாதுகாப்பான, இடையூறு இல்லாத, தகுந்த தட்பவெப்பம் உள்ள இடத்தைத் தேர்வுசெய்ய அது நெடுந்தூரம் பயணிக்கும். ஓர் இடத்தைத் தேர்வு செய்துவிட்டால், அப்பகுதியைச் சில நாள்கள் நோட்டமிடும். ‘அதுதான் தனக்கான இடம்’ என்று தேர்வு செய்தபிறகு நிதானமாக முட்டையிடும். முதன்முறையாக எந்த இடத்தில் முட்டையிட்டதோ, அதே…

குணம் – செயல்

” ஒரு சாதுவிடம் அந்த ஊர் முக்கியஸ்தர்கள் சிலர், நாங்கள் வட இந்திய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளில் நீராடி எங்கள் பாவங்களை போக்க வேண்டி செல்ல உள்ளோம். தாங்களும் எங்களுடன் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என கூற, சாதுவோ நீங்கள் சென்று வாருங்கள் என கூறி, ஒரு பாகற்காயை அவர்களிடம் கொடுத்து நீங்கள் எந்தெந்த புண்ணிய நதிகளில் நீராடுகிறீர்களோ, அப்போது இந்த பாகற்காயையும் நனைத்து எடுத்து வாருங்கள் என்றார். வந்தவர்களுக்கோ…

எண்ணங்களின் வலிமை

ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத் தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை.ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்! அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்! அந்தக்…