இதை புரிந்ஞசுக்க முடியுமா

இதை புரிந்ஞசுக்க முடியுமா – முடியுதா? மனிதர்களை அதிகம் நேசிக்க கூடாது.  உறவாகட்டும், நட்பாகட்டும் அதிகமான நேசிப்பு பிரச்சனையை தருது. பிரச்சனையில்லாம இருக்கனும்னா ஒரு எல்லையை வகுத்துக்கறது நல்லது. அது கணவன், மனைவி, காதலன், காதலி, அண்ணன், தம்பி, இன்னும் இப்படி எத்தனையோ எங்க பிரச்சனை வருதுன்னு பார்த்தா நேசிகப்படுகிறவர்களின் தனிமை கெடுது அதாவது ( INDUJUVALITY) கெடுது அதானல மனசோட மூலையில் சின்னதா வர்ர எதிர்ப்பு காலப்போக்குல வன்மமாகி,பெரிய மன உளைச்சல தந்துறுது இன்னொரு விஷயம்…

வாழ்க்கையின் ஓட்டமே

வாழ்க்கையின் ஓட்டமே அடுத்தவர்களின் அபிப்பராயத்தில் தானே முக்கால் பாகம் ஓடுது. இப்படி இருக்கும் போது அவரவர் வாழ்க்கை என்பது எது, ஏது அடுத்தவர்களின் அபிப்பராயத்தை ஒதுக்க முடியுமா? முடியாது என்றால் அவரவர் வாழ்க்கையை அடையாளம் காணுவது எப்படி? அடுத்தவர் நம்மை அடையாளம் கண்டு கொண்ட பின்தான் நாம் நம்மை அடையாளம் காணவேண்டுமா? அப்படி அடையாளம் கண்டாலும் மாறுதல் ஏதாவது இருக்குமா? அப்படி மாறுதல் இருந்தாலும் அதை வெளிப்படையாய் சொல்ல முடியுமா? சொல்லித்தான் ஆகவேண்டுமா புரியவில்லை காரணம் புரிந்து…

மனதை கொண்டு தேடும் முறை

ஆதிசேஷன் என்று சொல்கின்ற பொழுது அது ஒரு மிகப் பெரிய பாம்பு . அது ஆயிரம் தலைகளை உள்ளதாக இருக்கிறது, அது பாற்கடலில் மிதந்த வண்ணம் தன் உடலை நாராயணனின் படுக்கையாகவும் தன் தலையைக் குவித்து அவருக்கு குடையாக வைத்துள்ளது என்றால் அது ஸ்தூல அறிவுக்கு ஒவ்வாத விஷயம் ஆனால் சூக்‌ஷும நிலையில் வேறு பொருள் தெரியவரும் ஆயிரம் ஆசைகளை அடங்கிய நிலையில் தன்னிடம் அவற்றை பணிந்து, தலை குனிய வைத்து, அந்த ஆசைகள் எழ முடியாத…

ஒவ்வொரு நாளும் காலம்

ஒவ்வொரு நாளும் காலம் நம் உடம்பை தின்று கொண்டிருப்பது மனிதர்களுக்கு தெரிவதே இல்லை காலன் மனிதனின் காலுக்கு அடியிலோ, முதுகுக்கு பின்னோ இருப்பதை அவன் அறிவதில்லை. மாயை மறைக்கிறது என்ற நினைத்துக் கொள்ளலாமா? அல்லது வேறு என்ன நினைப்பது? எப்படி நினைப்பது?

வெற்றியாளர்கள்

திறமையற்றவர் என்று யாரும் இல்லை தனக்கு எதில் திறமை என்று அறியாதவர்கள் வேண்டுமானால் இருக்கலாம் அவர்களே உலகத்தோரின் கண்முன் தோல்வியாளர்களாக தென்படுகின்றனர். அவரவர்களுக்கு எதில் திறமை என்று அறிந்தவர்கள் அதை சரியான சந்தர்பத்தில் மிக சரியாக பயன்படுத்தி வெற்றியாளர்களாக உலகோர் முன் காட்சி அளிக்கின்றனர்.

லோகாதாய வாழ்க்கையினால்

உலகாதாய இலக்குகளை அடைய அதை பற்றிய வெளி உலக அறிவை பெற வேண்டிய அவசியம் உள்ளது. நாம் நம் வாழ்வை அதனோடு மட்டுமே என்று இருக்கும் போது அதிலிருந்து நமக்கு கிடைக்கும் லோகாதாய பயனால் நம்முள் அகங்காரம் வளர்கிறது. அது நாம் பிறறை மதிக்க வேண்டும் மூத்தோர்களை குடும்பத்தில் உள்ள பெரியவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையே இல்லாமல் செய்துவிடுகிறது அது மட்டுமல்லாமல் சுய நலமும் எவேராடும் ஒட்டாத பண்பும் எதையும், எவரையும் மிக அலட்சியபடுத்தும் தன்மையும்…

நமது கலாச்சாரம் 3

நமது பெண்கள் மேலை நாட்டு பெண்கள் போல இருக்க வேண்டும் என்று நினைத்தால் (அதாவது உடை, ஒழுக்கம், வேலை, அறிவு) நாம் நமது கலாச்சாரத்தை இழந்துவிடுவோம் இது ஏனோ நமக்கு புரியவில்லை காரணம் நமது பெண்கள் தங்களின் தூய தவ வாழ்வை இழக்க நேரிடும் அதனாலேயே அந்த மேலை நாட்டு பழக்க வழக்கங்கள் வேண்டாம் என்று நமது சாஸ்திரங்கள் வலியுறுத்துகிறது.

நமது கலாச்சாரம் 2

ஏதாவது காரணம் சொல்லி நம் பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் வாழ்க்கை முறைகளையும் மாற்றிக்கொண்டே இருந்தால் இழப்பு நமக்கும் நமது அடுத்த தலைமுறையினர்க்கும் அடுத்தது மிக முக்கியமாக நமது கலாச்சாரத்திற்கும் தான்.

நமது கலாச்சாரம் 1

இந்திய நாட்டின் மிக பெரிய சொத்து எது என்று கேட்டால் அதனுடைய கலாச்சாரம் தான். கலாச்சாரம் என்று நாம் எதை குறிப்பிட்டு சொல்லுவது உண்மையில் நம்முடைய கலாச்சாரம் என்பது நம்முடைய வாழ்க்கை முறைதான் நம் வாழ்க்கை முறையில் உள்ள உணவு பழக்க வழக்கங்கள் ஆகட்டும், உடையாகட்டும், பேச்சு அதாவது மொழி, கலை, தினசரி நாம் மேற்கொள்ளும் பணிகள் நமது நம்பிக்கைகள் இது அனைத்தும் சேர்ந்தது தான் நமது கலாசாரம்,

வெற்றி

ஒரு வெற்றி என்பது பலரின் தோல்வி என்ற நிலையில் இருந்து மாற்றி அந்த வெற்றியை பிறருக்கும் அல்லது பிறரும் மகிழத்தக்கதாக அமைத்துக் கொள்வது என்பது ஒரு கலை தான் வளரும் போதே தன்னோடு உள்ளவர்களையும் வளர்க்க நினைப்பவர்களுக்கே அந்த கலை கை கூடுகிறது. தேனீயின் உழைப்பிற்கு நாம் மிகவும் முக்கியத்துவம் தருகிறோம் காரணம் அது மற்றவர்களுக்காக உழைப்பதால் தான்.

உழைப்பின் உன்னதம்

ஆசைப்படாமல் உழைக்க மனம் வராது ஆர்வம் இல்லாமல் செயலில் வெற்றி கிடைக்காது உலகில் மிக, மிக உன்னதமான உழைப்பே அதன் ஆற்றலே மனிதனை இப்போது உள்ள நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

உழைப்பினால்

உழைப்பினால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ளத்தில் நிறைவும் உண்டாகும் எவ்வளவு அற்ப பொருளிலும் ஏதோ ஒரு மனிதனின் உழைப்பு இருக்கும் அந்த உழைப்பை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் ஒரு விதத்தில் பார்த்தால் உழைப்பு என்பதே எல்லா பொருட்களுக்கும் மதிப்பாகவும் விலையாகவும் இருக்கிறது.

நேர கெடு

ஒவ்வொரு வேலைக்கும் ஒரு நேரக்கெடு அமைத்துக் கொள்வது மிக நல்ல பழக்கம் ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்யும் போது நம் மனதுக்கு உண்டாகும் ஆனந்தமே தனிதான் எந்த வேலையை செய்வதற்கு முன்னும் அதைப்பற்றி தீர்மானிக்க வேண்டியது முக்கியம் அப்படி தீர்மானிக்கப் பட்ட நேரத்திற்குள் வேலையை முடித்தும் பழக வேண்டும். ஏனென்றால் கடமைகளை தள்ளிப் போடுவதால் ஏற்படும் தாமதங்கள் பல அபாயகரமான முடிவுகளை கொண்டிருக்கும் வாய்ப்புகளை உருவாக்கி. விடும்

பெரிய சாதனை 5

இது போல தான் பணம், பதவி, பட்டம், பெருமை, என்ற ஆப்பிள்களில் நமது கவனம் சிதறுவதால் பரமாத்மாவை அடைய வேண்டும் என்ற இலக்கையே மறந்து பிறவிகளில் தோற்று பிறவி சுழலில் சிக்கிக் கொள்கிறோம். மன சஞ்சலம் எப்போதும் தோல்வியை கொடுக்கும் மிக முக்கியமாக ஆன்மீகத்தில் .

பெரிய சாதனை 4

இளவரசன் ஓடிகொண்டே வைரத்தால் ஆன ஆப்பிளை உருட்டி விட வீராங்கனையின் கவனம் முழுவதும் அதில் பதிந்ததால் வேகம் குறைந்தது ஒட்டத்தின் இலக்கையே மறந்துவிட்டாள் தோல்வியை தழுவினாள்

பெரிய சாதனை 3

அப்போது இளவரசன் முத்துக்களால் ஆன ஆப்பிள் ஒன்றை உருட்டிவிட்டு ஓடினான் அதை பார்த்ததும் வீராங்கனையின் ஓட்டம் குறைந்தது அதை எடுத்துக்கொள்ள அவளின் வேகம் குறைந்தது

பெரிய சாதனை 2

ஒட்டபந்தயத்தில் சிறந்து விளங்கிய பெண்ணுக்கும் ஒரு இளவரசனுக்கும் போட்டி நடந்தது. அதில் வீராங்கனை இளவரசனை முந்தி ஓடும் போது இளவரசன் தங்கத்தால் ஆன ஆப்பிளை தரையில் வீசினான் அதை பார்த்ததும் அதை எடுத்துக்கொள்ள அவளின் வேகம் குறைந்தது பின் அதை எடுத்து வேகமாக ஓடினாள்

பெரிய சாதனை 1

ஒவ்வொருவரும் அவரவர்களுடைய தொழிலிடம் அல்லது குருவிடம், அல்லது கடவுளிடம் எந்த சஞ்சலமும் இல்லாமல் மனதை ஈடுபடுத்தினால் அது பெரிய சாதனைதான் மனிதனின் வெற்றிக்கு மிக தடையாய் இருப்பது சஞ்சலம் கொண்ட மனமே.

மரண பயம்.

உலக மோகங்களின் மீதான நம்முடைய பற்றும், மற்றும் நமது இச்சைகளும் எந்த அளவு அதிகமாக உள்ளதோ அந்த அளவுக்கு அதிகமாக மரணபயமும் இருக்கும் பற்றுகளும், இச்சைகளும் குறைவாக இருக்க அல்லது குறைக்க உண்டான வழியை கண்டு பிடித்து அதன் வழியே நாம் பயணித்தால் மரண பயத்தின் அளவை குறைக்கலாம் முயன்றால் இல்லாமல் கூட செய்துவிடலாம். பயத்தினால் மாறி எதுவும் நடந்துவிட போவது இல்லை வாழ்வு எப்படி யதார்த்த உண்மையோ அது போலவே மரணமும் யதார்த்த உண்மை இந்து…

ஆன்மீகத்தில் எத்தனை வகை. 2

உண்மையில் ஆன்மீகத்தின் முகவரியை சிந்தித்து பார்த்தால் கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை என்ற கதைதான். அது, இது, எது, அப்படி, இப்படி எப்படி, ஏன், எதற்கு, என்பது போல் இன்னும்  உள்ள பல ஊசலாட்டங்கள் தான் ஆன்மீகத்தின் முகவரிகள்.

ஆன்மீகத்தில் எத்தனை வகை. 1

தனி ஒருவருக்கு உணவில்லையென்றல் ஜகத்தினை அழிப்பது பாரதியின் ஆன்மீகம், அடங்கமறு, அத்துமீறு புரட்சி செய் இது ஒரு கூட்டாரின் ஆன்மீகம், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்பது ஏசு பிரான் ஆன்மீகம் ஏழைகள் சிரிப்பினில் இறைவனை காண்பது பகுத்தறிவாளர்கள் ஆன்மீகம். எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டோம் நீங்கள் உங்கள் குலதெய்வத்தை கும்பிட்டு கொள்ளுங்கள் என்பது மருத்துவர்கள் ஆன்மீகம் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது கண்ணனின் ஆன்மீகம்.

விமர்சனம் செய்யுங்கள்

விமர்சனம் செய்யுங்கள் அதே நேரம் வாழ்த்தவும் செய்யுங்கள் கேள்விகள் கேளுங்கள் அதே நேரம் பதில்களை நம்புங்கள் சொன்ன பதில்களை கண்காணியுங்கள் அப்போது பதில்கள் பயனுக்கு வரவில்லையென்றால் கண்டியுங்கங்ள கண்டனம் செய்யுங்கள் புகார்களை சொல்லுங்கள் அதே நேரம் புன்னகை செய்யுங்கள் புதியதை முயலுங்கள் அதே நேரம் தெரிந்ததை செய்து கொண்டே இருங்கள் முன்னேறி செல்லும் போது எதிர்படுவோரிடம் எல்லாம் நட்பு பாராட்டுங்கள் ஒரு வேளை சறுக்கி விழ நேர்ந்தால் கீழிருந்து தாங்கி பிடிப்பார்கள். தவறு செய்த ஒருவருக்கு நம்…

பெற்றோர்களின் விருப்பமே 2       

 குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், எவர்களுடன் பழகுகிறார்கள் என்பது போன்ற விஷயங்களில் கண்டிப்பும், கண்காணிப்பும் இல்லாது போவது தவறுகளை கண்டிக்காமல் பாசம் மட்டும் மிகைந்து நிற்கும் பெற்றோர்கள் ஒரு நாள் கவலையும், கண்ணீரும் விட்டே தீர வேண்டும்.   அடங்கி இருப்பது அடிமை தனம் அல்ல என்பதை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கண்டிப்புடனும், உறுதியுடனும் சொல்லி கொடுத்துவிட வேண்டும்.   ஒரு தவறு செய்த பிறகு அதை திருத்தாதவன் இன்னுமொரு தவறு செய்தவனாகிறான் இது தொடர்ந்தால் வாழ்க்கையே தவறாகி விடுகிறது.

பெற்றோர்களின் விருப்பமே 1

பெற்றோரின் விருப்பமே நமது வாழ்க்கை என்பதை பிள்ளைகள் உணர வேண்டும் அப்படி உணர்ந்த பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் பாக்கியவான்கள். இன்றைய பெற்றோர்கள், பிள்ளைகள் உறவு ஏனோ தடம் மாறியே இருக்கிறது இது ஏன் காரணம் எதுவாக இருக்கும் என்ற சிந்தித்தால் தகவல் தொழில் நுட்பவளர்ச்சி அடுத்தது பொறுப்பை சொல்லி கொடுக்காமல், பிள்ளைகள் கஷ்டப்படகூடாது என்று நினைத்து வளர்க்கும் பெற்றோர்கள் இதில் பெற்றோர்கள் ஏமாறும் இடமும், பெற்றோரை குழந்தைகள் ஏமாற்றும் களமாகவும், தளமாகவும் இது அமைந்து விடுகிறது.

உரையாடலில் ஒரு பகுதி 64

 இன்றைய நிலை உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும் நொடி பொழுதில் தொடர்பு கெள்ள சாதனங்கள் வந்து விட்டது.   ஆனாலும் சமுதாயத்தில் அன்பு குறைந்த கொண்டே போகிறது. அன்புடன் பழகுபவர்களக்கு அந்நியர்கள் யாருமில்லை எல்லாவற்றையும் வெறுப்பதற்குப் பதிலாக எல்லாவற்றையும் நேசித்துப் பாருங்கள் புது உலகம் தெரியும்

உரையாடலில் ஒரு பகுதி 63

எல்லாவற்றையும் வெறுப்பதற்கு பதிலாக, அன்பையும், அரவணைப்பையும் அறியாததால் சமுதாயத்தில் வன்முறையாளர்கள் பெருகிவிட்டனர்.   இன்றைய காலகட்டத்தில் அன்பின் எல்லை சுருங்கி போனதால் உலகில் _கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற வன்முறைகளின் எல்லை பரந்து விரிந்து போய் கொண்டிருக்கிறது.   முன்பெல்லாம் கடிதம் எழுதப்படும் அது வந்து சேர நாட்களாகும் அந்த கடிதத்தை கண்டு ஆனந்த கண்ணீர் விடுவோம் அப்படி இருந்த காலத்தில் அன்பு பலமாய் இருந்தது

உரையாடலில் ஒரு பகுதி 62

சூன்யமான இந்த விண்வெளியில் இத்தனை நட்சத்திரங்கள் எப்படி தோன்றியது இந்த கேள்விக்கு விஞ்ஞானிகளில் பலவித கருத்துகளை சொன்னாலும் எதுவும் திருப்திகரமாய் இல்லை இயற்கையை சோதிப்பதில் மனிதன் இன்னும் வெற்றி அடையவில்லை காரணம் இயற்கையின் முன் மனிதன் அணுவிலும் அணு அதனால் யானையை கண்ட குருடர்கள் தங்களுக்கு தோன்றியதை சொல்லியது போல் விஞ்ஞானிகள் இயற்கையைப் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் நாம் பார்க்கும்  சூரியன் 1 ஆனால் அண்டவெளியில் இது போல் எத்தனையோ சூரியர்கள் நிலைமை இப்படி இருக்க…

உரையாடலில் ஒரு பகுதி 61

அன்றைய மனிதர்கள் அப்படியில்லையென்றே தோன்றுகிறது.  ஒரு 75 வருடங்களுக்கு  முன்  இருந்த இந்தியர்களின் மனோபாவம் இப்போது உள்ள இந்தியர்களுக்கு இருக்கிறதா நெஞ்சை தொட்டு சொல்லுவதாய் இருந்தால் இல்லையென்ற பதில் தான் வரும் ஏன்? எதனால் நாம் அதை இழந்தோம், இழந்ததும், இழந்து கொண்டிருப்பதும், நமது சுயத்தை என்று நமக்கு ஏன் தெரியவில்லை. அமெரிக்காவைப் பார், ரஷ்யாவை பார் அதை பார் இதை பார் இன்னும் என்னென்னமோ பார் என்று சொல்லி எல்லாவற்றையும் பார்த்து நாம் நம்மை தொலைத்துவிட்டோமே.…

உரையாடலில் ஒரு பகுதி 60

உறவுகளில் ஆகட்டும், நட்பில் ஆகட்டும் நீண்ட நாட்களுக்கு பின் சேர்ந்து சில நாட்கள் ஒன்றாய் கழித்து விடைபெறும் போது   என்ன சாப்பிட்டோம் எங்கு சுற்றினோம் என்பது அல்ல முக்கியம். மனம் விட்டு எத்தனை பேசினோம் என்பது தான் முக்கியம்  

உரையாடலில் ஒரு பகுதி 59

உதட்டில் புன் சிரிப்பை தவழவிட்டு கொண்டுள்ளோரது துவேஷத்தில் வெந்து விகாரத்தோடு நசிந்து வரும் பந்தங்கள் இந்த உலகில் எத்தனை யாருக்கு தெரியும்? தெரியாவிட்டாலும் இருப்பது என்னவோ நிஜம் தான்.

உரையாடலில் ஒரு பகுதி 58

ஒரு மனிதனின் வாழ்க்கை அவனுக்கு மட்டுமே சொந்தமானது அதை யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற சுதந்திரம் வேண்டும்.  சில உண்மைகளை எத்தனை தாமதமாக அறிந்து கொள்கிறோமோ அத்தனைக்கு அத்தனை நல்லது, அதுவும் மற்றவரிடம் இருந்து அறிந்து கொள்வதை விட சம்மந்தபட்டவர்களிடம் இருந்து அறிந்து கொள்வது ரொம்பவும் நல்லது.

உரையாடலில் ஒரு பகுதி 57

உடலில் ஈடற்ற இன்பத்தை உருவாக்க விரல்கள் மட்டுமே போதுமானவை விரல் தான் உடலின் கண்களை திறக்க வல்லது.  பாலாடையின் மீது ஊர்ந்து போகும் சிற்றெறும்பின் கால் தடம் போலத்தான் விரல்கள் ஏற்படுத்தும் வடுக்களும், வடுக்கள் பதிந்த பள்ளத்தின் வழியே தான் நினைவின் ஊற்று கசிந்து கொண்டே இருக்கும் கண்ணுக்கு தெரியாமல் நினைவில் படறும் அந்த நறுமணத்திற்க்கு ஈடு சொல்ல உலகில் எந்த நறுமண பொருளையும் மனிதன் கண்டறியவில்லை.

உரையாடலில் ஒரு பகுதி 56

இயற்கையின் வெவ்வேறு ஆற்றலை உணவாக சமைக்க தெரிந்தது தான் மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு. மண்ணும், மண்ணில் இருக்கும் தாதுக்களும் உடலினை என்னென்ன செய்யும் என்பதை அறிந்தாலே உணவு பழக்க வழக்கம் சரியாகிவிடும்.

உரையாடலில் ஒரு பகுதி 55

அறிவாலும், குணத்தாலும் எடுக்க வேண்டிய முடிவை விதிகளாலும், கட்டளைகளாலும் எடுக்க முடியாது மனிதன் எடுக்க வேண்டிய முடிவை சட்டத்தின் கையில் ஒப்படைப்பது அறிவீனம். கட்டளைகளால் கட்டியெழுப்பபடுவது தான் அரசாட்சி அதன் உறுப்புகள் அனைத்தும் உத்தரவுகளால் மட்டுமே இயங்க வேண்டும் முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதினாலேயே, எல்லோருக்குமான சிறந்த முடிவு கிடைக்கிறது .எல்லோர் கையிலும் அதிகாரம் இருந்தால் எல்லாம் அழியும்.

உரையாடலில் ஒரு பகுதி 54

மனித அனுமானங்களுக்கு அப்பால் காலம் இயங்கி கொண்டே தான் இருக்கிறது. அதை எதிர்பாராத கணத்தில் சந்திக்கும் போது மனிதன் பொறி கலங்கி போய்விடுகிறான். வேறு வழி, கதை சொல்லும் போது பெருகக் கூடியது, நினைக்கும் போது திரளக்கூடியது, மறக்க எண்ணும் போது நம்மை கண்டு சிரிக்கக்கூடியது வடிவமற்ற ஒன்றின் அதீத ஆற்றலை கதைகளிடம் தான் மனிதன் உணர்கிறான்.

உரையாடலில் ஒரு பகுதி 53 

பேசாமல் இருந்து விட்டால் மறந்து அழிந்து போவது மொழி மட்டுமல்ல உறவுகளும் தான்.  உபயோகப்படுத்தாத எதுவும் நாளடைவில் தளர்ந்து இல்லாது போய்விடும் இயற்கையின் நியதி அப்படி தான் இருக்கிறது அதனால் எல்லாவற்றையும் சரியான அளவில் உபயோகிப்போம்.  

உரையாடலில் ஒரு பகுதி 52

பல நேரம் மனம் எதை மறக்க நினைக்கிறதோ அதையே அதிகம் நினைக்க வைக்கிறது. இதில் அன்பு கொண்டதோ அல்லது கோபம் கொண்டதோ, ஏமாற்றியதோ அல்லது ஏமாந்ததோ, இரக்கம் கொண்டதோ அல்லது கடுமையாய் இருந்ததோ, இணைந்து  இருந்ததோ அல்லது விலகிப் போனதோ, நம்பி இருந்ததோ அல்லது நம்பாமல் கெட்டதோ இப்படி பலதையும் மனம் மறக்க நினைக்கிறது.  ஆனால் பல சூழ்நிலைகளில் விதி அதிகம் நினைக்க வைக்கிறது.  என்ன கொடுமையடா சாமி.

உரையாடலில் ஒரு பகுதி 51

ஒரு மனிதனை மதிப்பீடு செய்ய முடியாது.  அப்படியே மதிப்பீடு செய்ய முனைந்தாலும் அந்த மனிதனின் ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு சூழ்நிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உரையாடலில் ஒரு பகுதி 50

அந்த அமைதியில் மனிதன் பழகிவிட்டான் என்றால் நிம்மதி அவனுக்கு என்றும் நிரந்தரம் இல்லாவிட்டால்  எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி என்பது சாஸ்வதம். ( என்று தேடி அலைவது ) எத்தனை பேர்களால் நான் நானாக எனக்குள் எனக்காக தன் பொருட்டு தானே அமைதியாய் இருக்கும் நிலையை அடைய முடிந்திருக்கிறது. அப்படி எந்த இரைச்சலும் இல்லாமல் _வேறு வெளி எந்த இரைச்சலும் கேட்காமல் ஆடாமல், அசையாமல், ஆனந்தத்தை அமைதியாய் பருகிக் கொண்டிருக்கும் நிலை எத்தனை பேருக்கு வாய்க்கிறது. எத்தனை…

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம்  10

எண்ணத்தை வலிமைப்படுத்துவது தான் ஆழ்மனதை வசியப்படுத்த ஒரேவழி. ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து அதை அனுதினமும் நினைத்து அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம், எண்ணத்தை சீர் செய்து ஆழ்மன சக்தியை உணர்ந்து, ஏற்றமுடன் வாழ்வோம்.

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 9

நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் காரணம் நம் ஆழ்மனம் நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம் ஆழ்மனம் நாம் விரும்பியதை அடைய ஒரே வழி நம் எண்ணங்களை சீர் செய்வது தான் அந்த எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பது தான் ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது நல்லது எது….??? கெட்டது எது…??? என்று பிரித்துப் பார்க்கத் தெரியாது

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 8

ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது…??? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது…??? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது….??? இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்ல முடியும் நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 7

“உருவமே இல்லாத ஆழ்மனம் தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது அடையாளம் காண முடியாத ஆழ்மனம் தான் நம்மை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய முடியாத ஆழ் மனம் தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது .”இது வரை நாம் வாழ்ந்த நாட்களுக்கும்,இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும், இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காதிருந் தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 6

இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது இருக்க நினைப்பவர்களுக்கு வசிக்க இடம் கொடுக்கிறது. இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை மனித மனம்தான் அறிவு மனம், ஆழ்மனம் என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 5

நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும். பல கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் பிரபஞ்சம் எனப்படுகிறது

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 4

நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது இதை உணர முடிவதில்லை ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும் ஏனெனில் இதுவும் உண்மை.” சூரியன் தன் ஈர்ப்புச்சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது…??? சூரியனுக்கு அச்சக்தி கொடுத்தது பிரபஞ்சம்தான் நம் அனைவருக்கும் சக்தியை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர்களில்லை,

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 3

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும் சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத் தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத்தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது ஆனால்“பூமி சுற்றுவதை உணர முடிவதில்லை நம்பித்தான் ஆக வேண்டும், ஏனெனில் அது உண்மை,  

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 2

நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்த பின் நாம் செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம் தான் மாற்றம் அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும் நம் அன்றாட செயல்களிலிருந்தும் ஆரம்பமாக வேண்டும் மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை மாறாத, மாற விரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம்1

பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும் ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கிறது நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நாம் வசிக்கப் பிறந்தோமா ??? அல்லது வாழப்பிறந்தோமா. ??? என்று

உரையாடலில் ஒரு பகுதி 49

இது புரிய அடிபட வேண்டும் அப்போது தான் தெளிவு எது என்று மனம் தேடும் அப்படி தேடும் போதுதான் செய்ததெல்லாம் எத்தனை சிறுபிள்ளைதனமானது என்று தெரிய வரும் அப்போது வரும் தெளிவில் தோன்றும் வாழ்வை அனுபவிக்க ரசிக்க ஆசை மிக பெரிய முட்டுகட்டையென்று அப்போது உண்டாகும் ஞானமே அமைதி  

உரையாடலில் ஒரு பகுதி 48

மனிதனின் நிம்மதி தொலைவதற்க்குண்டான காரணம் எது என்று யோசித்தால் வரும் பதில் இப்படி தான் இருக்குமென்று தோன்றுகிறது. ஆசை, அதற்கான முயற்சி, முயற்சியால் பரபரப்பு, வேகம் உடனே வேண்டும் என்கின்ற எண்ணம், அதனால் பயம், பயத்தினால் நாலு பேர் துணை, துணை செய்தவர்க்கு உதவி, உதவி செய்வதற்க்கு விளம்பரம் இப்படி ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து செல்லும்போது நமக்கு மிஞ்சுவது நிம்மதி இழந்த நிலை

உரையாடலில் ஒரு பகுதி 47

 நாம் மறந்துவிட்ட காரணத்தால், ஒரு விஷயம் நடைபெறும் விதம் என்பது, நினைப்பது – மனம், செய்வது – உடல் எப்படி இது என்று நினைப்பது  அறிவு – புத்தி. எவர் நினைக்கிறார், எவர் செய்கிறார் இது தான் மிக பெரிய கேள்வி இதற்கு உண்டான பதில்களே வேதம், உபநிதஷம், பல்வேறு மதங்களின் கருத்துகள் இந்த கேள்விக்கு எத்தனை பேர்களால் எத்தனை காலங்களாய் எத்தனை பதில்கள் ஆச்சரியமும் அதிசயமான விஷயம் இது தான்.

உரையாடலில் ஒரு பகுதி 46

இப்படி மனதை புரிந்து கொண்டால் மனதை பழக்க, இயக்க, சுலபமாக இருக்கும் மனதை தன் இஷ்டப்படி இயக்கும் பயிற்சி பெற்றவர்கள் தங்களின் வாழ்நாளை நிம்மதியுடன் திருப்தியுடன் கடத்தி விடுவர். மனதை பண்படுத்தி, அதனை பயன்படுத்தி நித்திய ஆனந்ததிற்க்கு செல்லும் வழியை உபதேசிப்பதே நம் தேசத்தின் வேதா உபநிஷத்துகள் பண்பட்ட மனம் சரியான பயன்பாட்டிற்க்கு வரும் போது இறைவனை அடைய முடியும் என அறியும் அறிவுக்கான கல்வியே நமது நாட்டின் கல்வி அந்த கல்வி மறைந்து இருக்கிறது.

உரையாடலில் ஒரு பகுதி 45

மனிதனின் அடிப்படை குண விஷேசத்தை இப்படி பாகுபடுத்தலாம் அதாவது, ஆசை, பாசம், பற்று, அழுகை, சிரிப்பு, கோபம் எல்லாம் உண்டாவது மனதினாலேயே இதற்க்கு அடிப்படை காரணம் விருப்பு, வெறுப்பு என்ற இரண்டு விஷயங்கள் இதற்க்கு அடிப்படையான காரணம், உயிர் வாழ வேண்டும் எனும் ஆசை நான் என்ற நினைவு இது எல்லாவற்றிக்கும் அடிப்படை மூல காரணம் மாயை எனும் அறியாமை.

உரையாடலில் ஒரு பகுதி 44

செயல்களால்,சிந்தனைகளால், மனம் இருப்பதை அறிய முடியும் ஆனால் அதற்க்கு ஆதார மூலமான ஆன்மாவை அறிய முடியாது. மனம் இறந்த நிலையே ஆன்மா பிரகாசிக்கும் இடம்.  நாம் உயிருடன் இருப்பதை அறிய உணர முடியும். ஆனால், உயிரை அறிய உணர  முடியாது. இது போல் தான் மேல் சொன்னது.

உரையாடலில் ஒரு பகுதி 43

மரணத்திற்க்கு பிறகும் உண்டாகும் நித்திய ஆனந்தமே நம் முன்னோர்களின் ஆய்வாக இருந்தது.  மேனாட்டு கல்வி முறை – வாழ்க்கை முறை நமது தேச மக்களின் இயற்கையான  கல்வி முறைக்கும், வாழ்க்கை முறைக்கும் நேர் விரோதமானது.  சாதாரண மக்களால் நன்கு தேர்ச்சியடைய முடியவில்லை இயற்க்கையான கல்வி முறையும் கிடைக்கவில்லை விஞ்ஞானத்தை விரும்பினர், வேதாந்தத்தை விட்டனர். விஞ்ஞானம் இவர்களின் விருப்ப பொருள் ஆனது. வேதாந்தமோ இவர்களின் ‍உதாசீனத்தால் தூசி படிந்து மறைய தொடங்கியது. இதனால் இரண்டிலும் நிறைவு இல்லாத நிலை…

உரையாடலில் ஒரு பகுதி 42

நம் முன்னோர்கள் விஞ்ஞானத்தின் முற்றிய வளர்ச்சியை முழுமையாய் அறிந்திருந்தனர்.  அதனாலேயே அதை மறைத்தும் மறந்தும் விட்டனர் காரணம் அவற்றால் ஆக்க பூர்வமானதைவிட அழிவு பூர்வமானதே அதிகம், அடுத்தது குறுகிய கால தேவைக்கு மட்டுமே பயன்படும்.  அதனால், ஏற்படும் தீய விளைவுகளோ, வெகு காலத்திற்க்கு சமுதாயத்திலேயே படிந்து நிற்க்கும்.

உரையாடலில் ஒரு பகுதி 41

கணிதம், வான ஆராய்ச்சி , கலைகள், தொழில்களில் நம் முன்னோர்கள் ஆக்க பூர்வமான அறிவோடு அளவோடு இருந்தனர். யாருக்கு எது தேவையோ அது அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இப்போது எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலை அதனாலேயே தீமையும் அழிவும் பெருகி விட்டது. அஸ்திர சஸ்திரங்களில் நம் முன்னோர்கள் வெகு அறிவுடனும், திறமையுடனுமே இருந்தார்கள் ஆனால் அதை பொது மக்களின் கைகளுக்கு கிடைக்குமாறு செய்யவில்லை, இப்போது எது வேண்டுமானாலும் பொது மக்கள் கைக்கு மிக விரைவில் வந்து விடுவதால்…

உரையாடலில் ஒரு பகுதி 40

சின்ன, சின்ன விஷயங்களுக்கு மிக பெரிய விலையாகிய தன்னை இழந்தது தான் விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பதை மனிதன் அறியவில்லை.  அதில், கிடைக்கும் சுகமும், மகிழ்ச்சியும் தற்காலிகமானது என்பதை மனிதன் அறியவில்லை. மன வலிமை பெற்ற மனிதனுக்கு விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஓர் அளவு போதும் தற்போதய மனிதன் மன வலிமை அடைய உள்ள பயிற்ச்சிகளை மறந்து விட்டான் அதனால் அவன் எப்போதும் சந்தேகம், கவலை, துக்கம் போன்றவற்றின் பிடியில் சிக்கி வாழ்க்கையை அனர்த்தமாக்கி விட்டான். ஆயுத கண்டுபிடிப்புகளே இதற்க்கு…

உரையாடலில் ஒரு பகுதி 39

 நமது முன்னோர்கள் ஆராய்ச்சி பொருளாய் எடுத்தது பிரபஞ்ச இருப்பை, இயல்பை அதனுடன் தொடர்புடைய இயற்கையை இப்படி அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டதால் நாம் பேசும் விஞ்ஞானம் போன்றவற்றை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.  நம் முன்னோர்கள் ஆன்ம விஞ்ஞானத்தை முதன்மை படுத்தியதால் மற்ற விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.  ஒரு விதத்தில் பார்த்தால் நிரந்தரமற்ற வாழ்க்கையை பெரிதாய் எண்ணி வேண்டாத வினைகளை வளர்த்துக்கொள்ள அஞ்சினார்கள் தற்போதய விஞ்ஞான வளர்ச்சி ஆக்கத்தை விட அழிவில் அல்லவா வளர்ந்து நிற்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளால்…

உரையாடலில் ஒரு பகுதி 38

பஞ்ச பூதங்களால் ஆன மனிதனுக்கு அந்த பூதத்தினுடைய தன்மையே மனிதன் திறமாகிறது.  மனிதனின் திறமையாகிறது. பூமி — இது போல உறுதி உடையதாக மனமும் உடலும் வேண்டும். நீர் — இது போல நினைவுகள் நம்மை இழுத்து செல்கின்றது.  ஈரம்  என்ற அன்பு, கருணை, தியாகம் கொண்டுள்ளது. நெருப்பு –  கோபம், தூய்மை கொண்டுள்ளது. வாயு –  போல கண்ணுக்கு தெரியாத கற்பனைகளில் சிறகடித்து பறக்கின்றது, மன காயங்களுக்கு மருந்திட்டு ஆற்றுகின்றது. ஆகாயம் –  போல பரந்து…

உரையாடலில் ஒரு பகுதி 37

பிராணணின் செயல்பாட்டால் உடலில் நோய் ஏற்படவும் நோய் குணப்படுத்தவும் முடியும் அது போல மன வலிமையையும் மன தளர்ச்சியையும் அடைய முடியும். பிராணணின் செயல்பாடு சரியாக இல்லையென்றால் உடல் நோய்வாய்படுகிறது.   உடல் நோய்வாய்பட்டால் மனம் தளர்ந்து சோர்ந்துவிடுகிறது. மனம் சோர்ந்து விட்டால் புத்தி தெளிவாய் இருப்பதில்லை, தெளிவில்லாத புத்தியின் செயல்கள் நம் வாழ்க்கைக்கு பெரும் கேடு விளைவிக்கின்றது.

உரையாடலில் ஒரு பகுதி 36

இப்படிப்பட்ட மனதை சரியான படி உபயோகித்தால் மனிதன் மாமனிதன் ஆகலாம் இதிலிருந்து நமக்கு ஒன்று தெரியும் மனிதன் வேறு மனம் வேறு என்பது தான் மனிதன் இல்லாவிட்டால் மனம் இல்லை, மனமே சரியில்லையென்றால் அவன் மனிதனே இல்லை மனதின் செயல்பாட்டால் உடலை கட்டுப்படுத்த முடியும் உடலின் செயல்பாட்டால் மனதை கட்டுபடுத்துவது என்பது முழுமையாக முடியாது ஆனால் பிராணணின் செயல்பாட்டால் உடல், மனம் இரண்டையும் கட்டுப்படுத்தவும், செயல்படுத்தவும் முடியும்,

உரையாடலில் ஒரு பகுதி 35

மனிதன் தான் அறிந்தவற்றை அனுபவித்து சிரிப்பதோ, அழுவதோ, சுகப்படுவதோ, துக்கப்படுவதோ ஆசை, கோபம், சந்தேகம் குழப்பம் போன்றவற்றை மனிதன் அனுபவிப்பது மனதின் மூலமே அன்பு, பாசம், பரிவு, நட்பு, தியாகம் பெருமை பொறுமை போன்றவற்றின் நிலைகளமும் இந்த மனமே.

உரையாடலில் ஒரு பகுதி 34

மனம் என்ற ஒன்றை கொண்டதாலேயே  அவன் மனிதன் என்ற பெயர் பெற்றான் மனம், அறிவு ஆகும், மனம் புத்தியாகும் எது எல்லாம் எப்படியெல்லாம் ஆனாலும் அதனடியில் மனம் இருக்கும், அதற்க்கும் அடியில் பிராணன் இருக்கும் இதை புரிந்து கொண்டால் நமக்கு கொஞ்சம் வசதியாய் இருக்கும் நம் செயல்கள் சிந்தனைகளை அறிய  –

உரையாடலில் ஒரு பகுதி 33

ஐம் பூதமென்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். ஐம் பொறிகள் என்பது கண், காது, மூக்க, நாக்கு, மனம். ஐம் புலன்கள் என்பது பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், சிந்தித்தல் மேலே சொல்லிய விஷயங்களில் மனிதன் ஈடுபட ஆதாரமாய் இருப்பது பிராணன், இந்த பிராணன் இல்லையேல் அவன் சவமாகி விடுவான்.  சவமானவனிடம் ஆனந்தத்தை அனுபவிக்கும் ஆற்றல் இல்லை எத்தனை பொறிகள் – புலன்கள் இருந்தாலும் அனுபவிக்க பிராணன் மட்டுமே முக்கியம் அதுவே ஜீவ சக்தி, அதுவே…

உரையாடலில் ஒரு பகுதி 32

மனிதனிடம் இருக்கும் கருவிகளில் மனம் எனும் கருவியே மிக பலமானதும் எல்லாவற்றிற்க்கும் ஆதாரமாயும் உள்ளது. ஆனால் இந்த மனம் எனும் கருவி இயங்க பிராணன் எனும் சக்தியே அடிப்படையானது. அதாவது, இப்படி வைத்துக் கொள்ளலாம் மனிதன் என்பவன் உடல், மனம், பிராணன் என்ற முக்கிய மூன்று விஷயத்தால் ஆனவன் என்று நாம் புரிந்து கொள்ளலாம். இதில், உடல் – 5புலன்கள், 5 பொறிகள், 72 ஆயிரம் நாடி நரம்புகள் என்று அமைந்தாலும் இவைகள் ஐம் பூதத்தின் அடிப்படையிலேயே…

உரையாடலில் ஒரு பகுதி 31 மனிதனின் தேடல்கள்

நித்திய ஆனந்தத்திற்கான வழி முறைகளையும், சூத்திரங்களையும் கொண்டவையே வேதோ உபநிஷத்துகள் அதில் மனிதனைப் பற்றி அறிய அவன் யார் என்ற அறிய ஆசை கொண்டு கேள்வி எழுப்பி விடை தேட தொடங்கினார்கள் உண்மையில் மனிதன் என்பவன் யார் அவனிடம் என்ன உள்ளது அவனிடம் உள்ளதால் அவனுக்கும் இயற்கைக்கும் என்ன நன்மை, அல்லது தீமை என்று தேடி, தேடி முடிவில் கண்டு கொண்டார்கள் அது பற்றி கொஞ்சம் விரிவாகவும், விளக்கமாகவும் அறிய நாம் ஆசைப்பட்டு முயற்சிப்போம்.

உரையாடலில் ஒரு பகுதி 30 மனிதனின் தேடல்கள்

வாழ்வை பற்றி நம் முன்னோர்களின் பார்வை மனிதன் அவன் இருப்பில் செய்யப்படும் செயல்கள் வாழ்க்கை என பெயர் பெறுகிறது. வாழ்க்கையில் மனிதனின் பங்கை அதாவது எப்படி வாழ்ந்தால் ஆனந்தமாக இருக்கலாம் அல்லது ஆனந்தத்தை அடையலாம் என்பதே முன்னோர்களின் தேடல்கள் ஆக இருந்தது.  அந்த தேடுதலின் விளைவாக உண்டான விஷயங்களை உள்ளடக்கியதே நமது வேதம், உபநிஷத புராண – இதிகாசங்கள் போன்றவை,

எந்த ஒருவரையும் 2

பாராட்டுக்கும், விமர்சனத்திற்கும்  நிலையான மதிப்பு என்று எதுவும் இல்லை.  இது புரிந்து கொண்டாலே கடவுளைப் பற்றியும், மதங்களை பற்றியும் இன்னும் இது போல் உள்ள எத்தனையோ விமர்சனங்கள் பாராட்டுதல்கள் பற்றியும் நாம் காதிலும், மனதிலும் இடாமல் சகஜமாய் நம் வாழ்க்கையை நாம் சந்தோஷத்தோடு வாழ்ந்து விடலாம்.  ஆனால் இது நிச்சயமாய் தெரிய வேண்டும். (முக்கியமாக அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கு, அதனை சார்ந்து இருக்கும் , மக்களுக்கு)

எந்த ஒருவரையும் 1

எந்த ஒருவரையும் அல்லது எந்த ஒரு விஷயத்தையும் பாராட்டுவது, விமர்சிப்பது என்பது அவரவரின் மனநிலை பொறுத்த விஷயம்.  காரணம் பாராட்டபடும் நபரே சில பல நேரங்களில் பாராட்டுக்கு தகுதியில்லாதவர் ஆகிறார். அதனாலேயே நாம் பாராட்டுக்கோ விமர்சனத்திற்கோ, அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.  

உள்ளே ஒன்று வைத்து

உள்ளே ஒன்று வைத்து புழுங்கி வெளியே வேறு முகம் காட்டுகிறவர்களுக்கு, ஒரு நாள் தன் உண்மை முகம் தனக்கே தெரியாமல் போகலாம் தெரிய ஆசை வந்து தேடுகையில் உண்மை முகம் உள்ளே இருந்து தெரியாது அழிந்து போயிருக்கலாம் பொய் முகம் அணிந்து, அணிந்து பொய்யே உண்மையாகவும் காட்சி தரலாம்.

 தனிப்பட்ட கொள்கைகள்

எவனொருவனுக்கு தீவிரமான தனிப்பட்ட கொள்கைகள் உள்ளதோ அவன் எப்போதும் யாருக்காவது எதிரியாகவே இருப்பான். உண்மையில் தீவிரமான கொள்கைகள் அது எந்த கொள்கைகளாக இருந்தாலும் சரி மனிதனை பிரித்து கூறு போட்டுவிடுகின்றன. கூடி இருக்கவும் கூட்டத்தை பிரிக்கவும் பிடிவாதமான சில கொள்கைகளே காரணமாய் இருக்கின்றன.  எல்லோராலும் வான் பிறையின் வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு தாழ்ந்தென்ன என்ற பட்டினத்தாரின் மன நிலையில் இருக்க முடிவதில்லை. இலக்கில்லாத கொள்கையில்லாத பயணம் சுகம் ஆனால் அது எவருக்கும் எப்போதும் வாய்ப்பது இல்லை. அதனால்…

விளையாட்டு என்றால் என்ன 3

செயலுக்கு பலன் என்பதை மனதில் ஊன்றி நிலைக்க விட்ட பின் பலனை எதிர்பாராமல் செயலை செய் எனும் வாக்கியத்தை உணருவது எங்ஙனம் அதோடு அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் என்ற வாக்கியத்தின் பொருளை உணர்வது எப்படி செயலில் இருக்கும் கவனம் பலனில் சென்று விட செயலின் முழுமையை எப்படி அனுபவிப்பது? எப்படி ஆனந்திப்பது?

விளையாட்டு என்றால் என்ன 2

எப்போது விளையாட்டில் இலக்கு தீர்மானிக்கப்பட்டதோ அப்போது அந்த விளையாட்டு சுமையாகிவிடும் அதாவது விளையாட்டு வினையாகும் இடம் அது நம்மில் எத்தனை பேர் விளையாட்டை விளையாட்டாய் பார்க்கும் பக்குவம் பெற்றுள்ளோம்.  பிறந்து மூன்று, நான்கு  வயதிற்குள்ளேயே இலக்கு நோக்கம் என்று எல்லா செயல்களையும் வடிவமைத்து நம் இயல்பை தொலைத்துவிட்டோமே

விளையாட்டு என்றால் என்ன 1

எந்த நோக்கமும் இல்லாமல் எந்த பயனையும் எதிர்பாராமல் உடலை வருத்திக் கொள்வது அப்படி வருத்தி கொள்வதின் மூலம் மகிழ்ச்சியில் திளைப்பது இலக்கில்லாமல் ஓடி, ஓடி மூச்சு இளைக்க, இளைக்க நிற்கும் போது உண்டாகும் சுகம், சந்தோஷம் நமது சிறு பிராயத்திலேயே முடிந்து விடுகிறது.  மூச்சு இளைக்கிறதே என்று விளையாடமல் இருக்க முடியுமா? எந்த குழந்தைகள் தான் அப்படி இருக்கிறது விளையாடி, விளையாடி இளைக்கிற மூச்சு ஆரோக்கியத்தின் அஸ்திவாரம் விளையாடாமலே சும்மா இருக்கும் போது இளைத்தால் அது வியாதி.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 19

அந்த குழந்தையிடம் தயை, இரக்கம், பாசம், நேசம் போன்றவை இருக்குமா?  இவையெல்லாம் அன்பின் ஆணி வேர்கள் அல்லவா இப்போதைய சமுதாய ஆட்சியாளர்கள் இதை விரும்புவது இல்லை முன்னதை மட்டுமே விரும்புவதால் சமுதாயம் எப்போதும் மாறப்போவதில்லை.   

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 18

மூன்று வயது வரை அன்பாய் வளர்த்துவிட்டு அவர்களை தூக்கி யாருக்கோ உழைக்க தேவையான கருவியாக மாற்றும் பணியாளர்களிடம்(அதாவது பள்ளி கூடங்களில் ) தூக்கி போட்டு விடுகிறீர்கள் இதைத்தான் நீங்கள் அன்பு என்கிறீர்கள். வேகமும், போட்டியும் இருந்தால் அங்கு வெறுப்பும் விரோதமும், வன்முறையும் இருக்கும். இவையெல்லாம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்குமா? இந்த சூழலில் பயிற்றுவிக்கப் பட்டு, வளர்ந்த குழந்தை அன்போடு இருக்குமா?

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 17

உயர்திரு. J.K. அன்பைப் பற்றி பேசும் போது இப்படி ஒரு வினாவை நம் முன் வைக்கிறார்.  அதாவது நீங்கள் உங்கள் பிள்ளைகளின் மீது அன்பு செலுத்தினால் செலுத்தியிருந்தால் அவர்களை போருக்கு அனுப்புவீர்களா இது மட்டுமல்ல அவர் கேட்பது தொழில் நுட்பத்தை மட்டும் கற்றுக்கொண்டு பொருளாதாரத்திற்காக ஒரு பணியில் அமரவும் ஒரு சில பரிட்சைகளில் தேறவும் மாத்திரம் கற்பித்து விட்டு இந்த அருமையான வாழ்க்கையின் மீதி பகுதிகளை கவனிக்காமல் விட்டு விடும் கல்வியை அவர்களுக்கு தருவீர்களா?

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 16

அது உங்களுக்கு தரும் இன்பத்தினால் அதனுடன் தோழமை உணர்வு ஏற்படுகின்றது அந்த தோழமை உணர்வில் சிறிது மாற்றம் ஏற்படும் போது கூட உங்களால் தாங்க முடிவதில்லை உடனே அந்த இடத்தில் கோபம், வெறுப்பு வன்மம், பொறாமை போன்றவை வந்து விடுகிறது. அப்போது நாம் நினைத்துக் கொள்ளவேண்டியது ஒன்றே ஒன்றுதான் அது. அன்பிற்கு இத்தனை முகங்களா என்றுதான்.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 15

அன்பு செலுத்துவது என்றால் என்னவென்று நாம் அறிந்துள்ளோமா நமது அகாரதியின் படி அன்பு செலுத்துதல் என்பது அன்பாயிருத்தல் என்பது இன்பம், விருப்பு, அக்கறை இதன் கலவையையே அன்பு என்று புரிந்து கொண்டிருக்கிறோம்.   உண்மைநிலை என்வென்றால் ஒவ்வொருவரும் தன்னுள் பிளவு பட்ட தனிமையில் இருப்பதால், தனிமை தரும் வலியில், வேதனையில், துக்கத்தில், துயரத்தில், இருந்து தப்பிக்க நாம் ஒன்றை சார்ந்து நிற்கின்றோம். அப்படி சார்ந்து நிற்கும் போது அது தனி‍மையை விரட்டி விடுகிறது அதனால் நீங்கள் இன்பம் காணுகிறீர்கள்.

 மனிதன் இன்றைய கால கட்டத்தில் 14

நம் கடவுளிடம் அன்பு செலுத்தும் போதே பிறர் கடவுளை வெறுப்போம் நம் நாட்டிடம் அன்பு செலுத்தும் போதே பிறர் நாட்டை வெறுப்போம் அது மட்டுமல்ல உச்சபட்ச அன்பின் வெளிப்பாடே காமத்தின் தலைவாசல் சரி இது இதோடு நிற்கட்டும்.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 13

இந்த அன்பு என்பது மிகவும் வினோதமானது, விசித்திரமானது உண்மையில் அன்பில் வினோதமும், விசித்திரமும் ஏதும் இல்லை. நாம் அன்பை புரிந்து கொண்டதில் தான் இத்தனை வினோதங்களும் விசித்திரங்களும் உள்ளது.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 12

உண்மையில் அன்பு என்றால் என்ன கடவுள் மீது அன்பு, பெற்றோர் மீது அன்பு, உறவினர், நண்பர்கள் மீது அன்பு, கணவன், மனைவி, காதலன், காதலி , நாடு, தேசம் இவற்றின் மீதெல்லாம் அன்பு என்று பேசுவோம். பேசிக்கொண்டிருப்போம் ஆனால் துர் அதிர்ஷ்டவசமாக அந்த அன்போடு கூட வெறுப்பும் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்களா அப்படி கண்டுபிடித்திருந்தீர்களானால் நீங்கள் உங்களை அறிய, உணர தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 11

எப்போதாவது இதை உணர்ந்திருக்கிறீர்களா கொஞ்சம் உங்களை உற்றுப் பார்த்திருந்தீர்கள் என்றால் நீங்கள் அதை உணர்ந்திருப்பீர்கள்.  நாம் நிறைய அன்பைப் பற்றி பேசுகிறோம். போதிக்கிறோம் அது நல்லது என்றும் இறைவனுக்கு பிடித்தது என்றெல்லாம் நாம் போசுகிறோம்.

 மனிதன் இன்றைய கால கட்டத்தில் 10

நிலை இப்படி இருக்க சமுதாய மாறுதல், சமுதாய புரட்சி வேண்டும் என்று கேட்பதிலோ, கூக்குரல் இடுவதிலோ என்ன பயன் விளையகூடும் அதனால் தனிமனித மாறுதல் நிலையே சமுதாய மாறுதல் ஆகும். உறவை உறவாக புரிந்து கொண்டால் மட்டுமே சாத்தியம் மற்ற எந்த வழியும் இல்லை.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 9

சில பல தேவைகள் ஆசைகளுக்காக உறவு என்ற ஒன்றை பயன்படுத்திக் கொண்டிருப்பது நமக்கு புரியும்.  எந்தவித உறவும் இல்லாமல் உறவோடு இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பது தான் மனித குலத்தின் அறியாமை அல்லது மனித குலத்தின் சாபம் எதார்த்தமான அன்பும் இய்லபான நேசமும் இல்லாத நிலைகளில் உறவுகளை ஒவ்வொருவரும் கையாண்டு கொண்டிருக்கிறோம் இது தனிமனிதனில் தொடங்கி சமுதாயம் வரை பரவிவிட்டது

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 8

எப்படியென்றால் அவரவர்களுக்கு உண்டான குறிக்கோள்கள் பயங்கள், ஆசைகள் என்று தனிமைப்பட்டே வாழ்கின்றனர். அந்த தனிமையே ஒவ்வொருவருக்கும் பயத்தையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தந்து கொண்டிருக்கிறது.  ஒரே வீட்டில் 10 பேர்  உறவின் அடிப்படையில் இணைந்து இருந்தாலும் ஒவ்வொருவரும் தனி தனியே தான் வாழ்கின்றனர்.  இதில் உள்ள அர்த்தம் புரியும் போது நமக்கே நம் மேல் வெறுப்பு வரும்

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 7

நாம் இங்கு முக்கியமாய் கவனித்து அறிந்து கொள்ளவேண்டியது. ஒவ்வொருவரும் குடும்பங்களாக அதாவது தாய், தந்தை, குழந்தைகள் அண்ணன், தம்பி, கணவன், மனைவி, காதலன், காதலி என்று சார்ந்து இருந்து நாங்கள் ஒன்று என்று சொல்லிக்கொண்டாலும், ஒவ்வொருவரும் தனிமைப்பட்டே வாழ்கின்றனர்

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 6

 சார்ந்திருத்தலால் எதைப்பற்றியும் சுயமாக பார்க்கும் தன்மையிழந்து விடுகிறது. அதன் மூலம் ஒரு சார்பாகவே சிந்திக்க தோன்றுகிறது அதனால் உண்மைநிலையை உணர முடிவதில்லை. இதுவே வாழ்வின் எல்லா சோகங்களுக்கும், திருப்தியின்மைக்கும், அஸ்திவாரம் ஆகிவிடுகிறது.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 5

ஒருவரை சார்ந்திருக்கும் போது அது உறவுகளால் பலப்படுத்தப்படுகிறது.  அங்கு உண்மையில் நிகழ்வது என்ன என்று கவனித்தால் தெரியும் விஷயம் இதுதான் அதாவது சார்ந்திருத்தல் பாதுகாப்பு உணர்வை தருவது போல் தோன்றினாலும் அதன் அடியில் பயமே உள்ளது பயம் எப்போதும் நன்மையை செய்யாது.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 4

 தலையீடு அல்லது பங்களிப்பு என்பது உறவுகளினால் உண்டாகும், கோபம், வெறுப்பு, பயம், ஆசை, வேதனை, வருத்தம் போன்றவைகளே நாம் எப்போதும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கின்றோம். தனியே நம்மால் இருக்க முடியாது. அதனால் நம்மை பொறுத்தவரை உறவு என்பது இன்றியமையாதது. ஆனால் அது ஒரு விதத்தில் அர்த்தமில்லாதது.  காரணம் நம் மனம் துவள்வதும், கலங்குவதும், உறவுகளினாலேயே அதனாலேயே நம்முடைய வாழ்நாளில் சோகமான பகுதி என்பது அதிக அளவு ஆக்கிரமித்து கொண்டுள்ளது.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 3

இந்த சோகங்களில் இருந்து விடுபட மனிதர்கள் ஒவ்வொரு வரும் தனது வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பார்க்க வேண்டும் அப்படி பார்க்கும் போது வாழ்க்கை என்றால் என்ன என்ற வினாவையும் அதனுடன் நாம் வாழும் தினசரி வாழ்க்கை, பயம், கோபம், இன்பம், இரக்கம், அன்பு மகிழ்ச்சி போன்ற விஷயங்களையும் கவனித்து சிந்திக்க வேண்டும். நாம் சற்று கவனித்தோமானால் நம்முடைய  தினசரி வாழ்க்கையில் உறவுகளின் பங்களிப்பு, அல்லது தலையீடு அதிகமாய் இருப்பதை காணலாம்.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 2

இதனுடைய அடி வேரை கண்டு தெளிய வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்கு ஏனோ தோன்றுவது இல்லை எல்லாவற்றிலும் வளர்ச்சி அடைந்து விட்டோம் என்ற நினைவில், நிலையில், மனிதன் ஏனோ தன் வாழ்க்கையை வாழும் நியதியை அறிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை எத்தனையோ வெற்றிகளை, வளர்ச்சிகளை உருவாக்கி கொண்டோம் என்ற ஆணவத்தின் பிடியில் சிக்கியுள்ள மனித குலம், பயம், ஆசை, இன்பம் போன்ற நிலைகளை புரிந்து கொள்ளாமல் அதனுடனேயே தன்னுடைய வாழ்நாட்களை கழிப்பது சோகத்திலும் சோகம்.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 1

மனிதன் இன்றைய கால கட்டத்தில் அவனுடைய வாழ்வில் எத்தனையோ விதமான, விநோதமான கஷ்டங்கள், போராட்டங்கள், சோகங்கள், குழப்பங்கள், இன்பங்கள், வெற்றிகள், தீர்வுகள், நியதிகள் என்ற பல பொறிகளில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பதை நாம் பார்க்கின்றோம் இது ஏன்? எதனால்? இப்படி என்று சிந்தித்து ஆராய மனமில்லா மனநிலையில் வாழ்ந்து பழகிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்

ஜெயகாந்தன் பார்வையில் கல்வி,2

பாரதியின் வாக்கான, பள்ளிதலமனதைத்தும் கோயில் செய்வோம் என்பதன் பொருளே இதுதான், கல்வி அறிவின் வாயிலாக ஞானத்தை அடைய வேண்டும் என்பதே நியாயம் என்பது முத்திரை இடப்பட்ட ஒரே மாதிரியான அளவு கோலல்ல. அது மனிதருக்கு மனிதர் காலத்திற்கு காலம் விஷயங்களுக்கு விஷயம் மாறுபடுகிறது.  இதை புரியாமல் ஒரே முத்திரை கொண்ட அளவு கோலை கொண்டு அளக்கும் போது நியாயமே சில சமயங்களில் அநியாயமாகிவிடுகிறது. அப்போது ஊன்றி கவனித்தால், அநியாயம், நியாயமாக உலா வருவதை காணலாம்.

ஜெயகாந்தன் பார்வையில் கல்வி, 1

கல்வியின் இலட்சியம், ஞானம் ஆகும் அதற்கு அறிவு உபகரணமாகும் நமது கல்வி கூடங்கள் வெறும் அறிவு அபிவிருத்திக் கூடங்கள் ஆகிவிட்டன ஞானத்திற்கும், அவற்றிக்கும் சம்பந்தம் இல்லாமல் போய்விட்டது.  இவற்றிற்கு காரணம் நாம் கொண்டுள்ள அந்நிய மோகம் அதனால் நிகழ்ந்த பயன் கல்வி கூடங்கள் மனிதர்களை உருவாக்காமல் எழுத்தறிவு பெற்ற மந்தைகளை உருவாக்குகின்றன.

ஒரு முக்கியமான விஷயத்தை 11

 எவனொருவன் எப்போதும் எல்லா விஷயங்களிலும் தனக்குள்ளாகவே எதிரும், புதிருமாக நின்று விவாதித்து பழகியிருக்கின்றானோ அவன் எந்த நியாயமான கருத்துக்கும், நியாயமான உணர்வுக்கும் எதைப்பற்றியும் சிந்திக்காமல் தோள் கொடுப்பான் அந்த உரம் அவனுக்கு அவனுள் நடக்கும் விவாதமே தருகிறது. அது விவேகமாக அவனில் வெளிப்படும்.  இதை கல்வி தராது தர்மத்திலும், சத்தியத்திலும் உள்ள தீவிர நம்பிக்கையே தரும்.

ஒரு முக்கியமான விஷயத்தை 10

நடைமுறை வாழ்க்கையில் இருந்து ஒருவனை விலக்கி ஒரு மனிதனை மயங்க செய்து அவனுக்கும் அவனை சார்ந்தவர்களுக்கும் தீமை தருவதே போதை அது கடவுள் பக்தியானாலும் சரி, கள்ளின் போதையானாலும் சரி இரண்டும் தவறே. கடவுள் பக்தியையும் கள்ளையும் ஒப்பிடலாமோ என்ற வினா வரலாம் அதற்கு பதில் போதை எது தந்தாலும் தவறுதான் என்பதே பதில்.

ஒரு முக்கியமான விஷயத்தை 9

இறைவனின் திருவிளையாடல்களை என்னவென்று சொல்லுவது அதை சாதாரண மதிகொண்டு அறிய முடியுமா இல்லை அளக்கத்தான் முடியுமா?  கடவுள் மனிதனாக அவதாரமாகலாம் என்றால் மனிதன் கடவுளாக முடியாதா என்ன? சரியாக அல்லது ஒரு மாதிரி சிந்தித்து பார்த்தால் அந்த காலத்தில் அரசர்கள் தெய்வத்திற்கு சமம், அரசன் தெய்வமே எனும் கொள்கை இருந்தது இப்போது அதிபர்கள், முதல் பிரதம மந்திரிகள், ஜனாதிபதிகள் வரை உலகில் உள்ள மனிதன் கடவுளாய் ஆனவன் தான் என்றே தோன்றுகிறது.

ஒரு முக்கியமான விஷயத்தை 8

நம்முடைய மக்களிடம் உள்ள ஒரு விஷயம் அதாவது ஆஸ்திகர்களிடம் அதிகமாய் உள்ளது என்னவென்றால் தனக்கு இருக்கும் இறை நம்பிக்கையை  அலங்கார, ஆடம்பரத்தோடு காட்டி பகிரங்கப்படுத்திக் கொள்ளும் பக்த சிகாமணிகளுக்கு அடி பணிந்து, அடிபணிந்து அடிமையாய் இருக்க எத்தனை மக்கள் நினைத்தாலே வியப்பாயும், ஆச்சர்யமாயும் இருக்கிறது.  பக்தி இவர்களுக்கு தெளிவை தருவதற்கு பதில் மயக்கத்தை அல்லவா தந்திருக்கிறது. அதனால் தானே இறைவனை அறிய முடியாத அடைய முடியாத நிலை ஏற்பட்டது.

ஒரு முக்கியமான விஷயத்தை 7

 இந்த மனம் தான் உள்ளதை உள்ளபடி எற்றுக் கொள்ளும் பக்குவத்தை நமக்குத் தரும் அந்த பக்குவ நிலையே ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டிய சொத்து.  அந்த சொத்தை அடையவே அவனுடைய கல்வி அவனுக்கு பயன்பட வேண்டும். அந்த பக்குவத்தை தர முடியாத கல்வியினால் பயன் இல்லை.

ஒரு முக்கியமான விஷயத்தை 6

அமைதி அடைந்த மனம் கோபம் கொள்ளாது கோபமில்லாத மனம், சாந்தமாய் இருக்கும் சாந்தம் கொண்ட மனம் திருப்தி உடையதாய் இருக்கும் எதிலும் திருப்தி அடைந்த மனம் தான் புரிந்து கொண்டதை பிறர் புரிந்து கொள்ளாவில்லையென்றாலும் கோபப்படாது.

ஒரு முக்கியமான விஷயத்தை 5

ஆதிக்கத்திற்கு காரணம் உரிமை அந்த உரிமைக்கு காரணம் நம்முடையது என்ற ஆழமான எண்ணத்தினால் உண்டானது.  நம்முடையது அல்ல எதுவும் இந்த உலகில் என்கிற எண்ணம் வந்துவிட்டாலே மனம் அமைதி அடைந்து விடும்

ஒரு முக்கியமான விஷயத்தை 4

புரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல் என்பது பொருள்களைப் பற்றிய விஷயங்கள் மட்டுமல்ல அதையும் தாண்டி உள்ள மனித மனதின் தன்மைகளை, எண்ணங்களை புரிந்து கொள்ளுதலே உண்மையில் புரிந்து கொள்ளுதல் ஆகும் அது சாத்தியப்பட்டுவிட்டால் நாம் பிறரிடம் செலுத்தும் ஆதிக்கம் அற்று போய்விடும்

ஒரு முக்கியமான விஷயத்தை 3

கோபம் நிறைந்த இடம் ஒரு காலத்தில் வன்முறையாய் ஏதாவது ஷணத்தில் மாறும் அது மனிதனின் சுகத்தை, அமைதியை, சந்தோஷத்தை, திருப்தியை அழித்து விடும் அப்படியான பின்னால் மனித குலத்திற்க்கு என்ன பெருமை கிட்டிவிட போகிறது மனித குலம் வளர்ந்து இருக்கிறது என்று சொல்வதில் என்ன உண்மை இருக்க போகிறது.

ஒரு முக்கியமான விஷயத்தை 2

 இப்படி விஷயத்தை புரிந்து கொள்ளாவிட்டால் என்ன ஆகும்.  முதலில், புரிந்து கொண்டவனுக்கு புரிந்து கொள்ளாதவன் மீது கோபம் வரும்.  இது தந்தை, மகன், கணவன், மனைவி முதல் பணி செய்யும் இடங்கள், கல்வி சாலைகள், அரசியல் போன்ற எல்லாவற்றிலும் இது நுழையும்

ஒரு முக்கியமான விஷயத்தை 1

மனிதர்களாகிய நாம் ஒரு முக்கியமான விஷயத்தை ஆணித்தரமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும்.  அது என்னவென்றால், நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொண்டதற்க்கு எவ்வளவு நியாயம் இருக்கிறதோ அவ்வளவு நியாயம் அந்த விஷயத்தை புரிந்து கொள்ளாதவனுக்கும் உண்டு என்பதைத் தான் நாம் மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டியது.

காதல் என்பது

பல சமயங்களில் காதல் என்பது தண்ணீர் இல்லாத குளத்தில் குளித்து வருபவருக்கு தலை துவட்ட துண்டு கொடுக்க காதலனிடம் சொல்லும் இதை புரிந்து கொள்ள நிச்சயம் காதலித்திருக்க வேண்டும்.

இயல்பு என்பது

இயல்பு என்பது எப்போதும் எந்த சூழ்நிலையிலும் எதற்கு வேண்டியும் மாறாது எப்போதும் மாறாதது எதுவோ அதுவே இயல்பு.  விதிகள் மாறிக்கொண்டே இருக்கும் ஆட்களுக்கு தகுந்தபடி அதிகாரத்திற்கு தகுந்தபடி, காரியங்களுக்கு தகுந்தபடி, காலங்களுக்கு தகுந்தபடி மாறிக்கொண்டே இருப்பது தான் விதி. இயல்பு மாறாது, விதி மாறும்.

எரிந்து மறைதலும்,

எரிந்து மறைதலும், ஒளிர்ந்து அடங்கலுமே வாழ்வு.  இருளை விலக்கத்தான் முடியும் அழிக்க முடியாது இது ஒளி கொண்டு நாம் அறிந்து கொள்ளும் உண்மை, மரணமும் அப்படிதான் விலக்கவோ, மறுக்கவோ முடியாது.

பெண் மனதை

பெண் மனதை ஆண் கணிக்க முடியாதா நிச்சயம் முடியாது உண்மையை சொன்னால் ஆண்களுக்கு அதில் அக்கறையோ, கவனமோ இல்லை நதியின் ஆழத்தை படகு அறியாது நீரின் போக்கில் செல்வதே அதற்கு சுலபம் அதன் பயனும் அதுதான். பெண் மிக புத்திசாலி எப்போதும் அவள் ஆண்களிடம் சிக்குவதே இல்லை சிக்கியது போலிருப்பாள் அதுதான் அவளுக்கு வசதியும் கூட.

அற்பம் என

அற்பம் என எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த பிரபஞ்சத்தின் பார்வையில் புல்லும் வைரமும் ஒன்றுதான். இரண்டுக்கும் ஒரே மூலக்கூறு கார்பன் தான். இந்த பஞ்சபூதங்கள் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை. இந்த பஞ்சபூதங்கள் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை. இதை புரிந்துகொண்டால்  நாம் பக்குவப்பட்டு விடலாம் பக்குவப்பட்டுவிட்டால் துன்பம் நம்மை அணுகுவதில் இருந்து தப்பிவிடலாம்  

எல்லா கேள்விகளுக்கும்

எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் தேவையில்லை எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் தேவையில்லை எல்லா விமர்சனங்களுக்கும் வியாக்கியானம் தேவையில்லை அவற்றை விளக்க முயற்சிக்கையில் நாம் தர்க்கவாதியென முத்திரை குத்தப்படுவோம் பதில் கூறுகையில் நாம் எதையும் ஏற்றுக்கொள்ளாதவராகி விடுவோம் நாம் கேட்கும் கேள்விகளுக்கும் நம்மை பிறர் கேட்கும் கேள்விகளுக்கும் என்றும் வித்தியாசம் உண்டு ! வினா என்றுமே ஒன்று   விடை என்றுமே வேறு   கேட்பவரை பொறுத்து அது தன்னை உருமாற்றிக்கொள்ளும் ! சொல்லியும் விளக்கியும் அறிந்து கொள்ளமுடியாத நிறைய உணர்வுகள்…

இயற்கைதானே

காலம் எப்போதும்சொல்லிக்கொண்டிருக்கும் பாடங்களில் ஒன்று வலிமையைவிட நுட்பமே பலமும் பயனும் நிறைந்தது என்பது. ஒன்றை நீங்கள் அறிய நினைக்கும் போது உங்களின் அறியாமையை அடுத்தவர்கள் அறிந்த கொள்வது இயற்கைதானே.

ஆசை, பகை

ஆசை, பகை இரண்டும் காட்டினில் விளையும் நெருப்பைப் போல பரவிக்கொண்டே ஆற்றலை பெருக்கிக்கொண்டே இருக்கும் முடிவு என்னவென்று பார்த்தால் அவை அழித்துக்கொண்டே இருக்கும் இங்கு வரும் வினா எல்லாவிதத்திலும் அழித்தல் தவறா என்பதுதான் அதற்கு பதில் அழித்து பழகியது ஒரு காலகட்டத்தில் எல்லாவற்றையும் அழிக்கும் எனென்னறால் அழிக்க வேண்டியது எதை என்பதை பற்றி சிந்திக்கும் அறிவு போய்விடும் அங்கு அகங்காரமும், ஆணவமும் குடிகொள்ளும் பிறகென்ன எல்லாம் அழியும். ஒரு விதத்தில் பார்த்தால் பகை வளர்க்காத அரசும் பலம்…

இயற்கையை அழிப்பவரை

இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்.  இதைத்தான் முன்னோர்கள் சொன்னார்கள் மன்னன் அன்று கொல்லுவான், தெய்வம் நின்று கொல்லும் என்று. எட்டுவழி சாலையோ , 2000, 3000 அடி ஆழத்தில் உள்ள எண்ணை வளங்களோ எவையாயினும் இதுவே விதி. விதை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை இடம் தராது. அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் பூமியில் நிலைத்து  வாழ முடியாது.  காரணம் இயற்கை அது தனக்கு எதிரானதாக கருதிக்கொள்கிறது.

அரசில் இருப்பவர்கள்

அரசில் இருப்பவர்கள் எதை செய்தாலும் அது அவர்களின் சொந்த நலனுக்காக தான் இருக்கும், மனிதருக்கும், இயற்கைக்கும் எதிரானதாகத்தான் இருக்கும் அன்றைய அரசர்கள் முதற்கொண்டு இன்றைய அரசாங்கம் வரை அப்படிதான் நடந்த கொள்கிறது.

உரையாடலின் ஒரு பகுதி 29

ஆற்றலை அறிவதும் அறிந்த ஆற்றலை பயன்படுத்தி வெல்லுதற்க்கு முடியாதவனாக மாறுவதும் மனிதனின் ஆசை.  உண்மையில் இயற்கை எப்போதும் மனிதனுக்கு அதை அளிப்பதில்லை. மனிதன் வெல்லுவதற்க்கு முடியாதவனாக மாறுவதற்க்கு இயற்கை அனுமதிப்பது இல்லை. அணு சக்தியை அறிந்து அணுகுண்டுகள்  மூலம் பிற நாடுகளுக்கு தான் வெல்லமுடியாதவன் எனும் அறிவிப்பை செய்பவனின் வாழ்வும், நீர் மேல் குமிழி இக்காயம் அது நில்லாது போய்விடும் நீயறிமாயம். என்பதுதான்

மனிதனின் குணம்

மனிதனின் குணம் எப்போதுமே இப்படிதான் இருக்கும் அதாவது அழிவுகளின் நியாயத்தை சிந்தித்துக்கொண்டு அழித்தலின் அவசியத்தை கற்பிப்பான். பயனளிக்கும் இடத்தை நோக்கி பாய்ந்து செல்லுதலே வாழ்தலின் வளர்ச்சி நியதி விதி  எல்லாம்.

உரையாடலின் ஒரு பகுதி 28

ஒரு பொருளினால் நமக்கு ஏற்படும் பயன் அந்த பொருளுக்கு இல்லை என்பதை எந்த மனிதன் அறிகிறானோ அல்லது அந்த வித கல்வியை கற்கிறானோ அவன் அறத்தின் வழியாக இயல்பாகவே இயங்குவான் அதைத்தான் பட்டினத்தார் இப்படி சொல்கிறார் போலும், பொன்னால் பயன் நமக்கு அநேகமுண்டு,  நம்மாள் பயன் பொன்னுக்கு ஏது உண்டு என்று

உரையாடலின் ஒரு பகுதி 27

ஓசைகளில் எத்தனையோ வகைகள் உண்டு.  அவற்றில் வெளிப்புறம் பெருக்கெடுக்கும் ஓசை உள்ளே சுழன்று தன் நிலையையே மறக்க வைக்கும் ஓசை உள்ளே நுழைந்து அடி ஆழம் வரை சென்று ஆழ் மனதில் இருக்கின்ற அச்ச உணர்வை பெருக்க செய்யும் ஓசை என பல வகைகள் உண்டு.

உரையாடலின் ஒரு பகுதி 26

மனித குலத்தின் முதல் முயற்சி இயற்கையின் நுட்பத்தை அறிய பயிரிடுதலின் நுட்பம் தான் அது தலைமுறை, தலைமுறையாகத் தங்களை ஒடுக்கிக்கொண்டு மண்ணுக்கும், விண்ணுக்கும் தாவரத்திற்க்கும், பயிர்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை கண்டறிவதே ஆகும் அது தலைமுறை, தலைமுறையாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது அது மனிதன் வரை வந்துவிட்டது. தற்போதய சூழ்நிலையில் மனிதனும் பயிரிட முடிகிற ஒரு பொருள் எனும் அளவிற்க்கு அவன் வந்திருக்கிறான். இதனால் அவன் இயற்கையை மறுக்கிறான் அது மட்டுமல்லாது இயற்கையை வெற்றி கொண்டதாகவும்…

உரையாடலின் ஒரு பகுதி 25

பொறுப்பு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. கடமை என்பது அறிவு சம்பந்தப்பட்டது. இயற்கையின் உள் நரம்புகள் மனிதனின் கைகளுக்கு மிக அரிதாகவே புலப்படும்.

உரையாடலின் ஒரு பகுதி 24

தியானத்தில் ஏதோ ஒரு வினாடியில் உங்களை காணும் நீங்கள் அதிர்ச்சி மேலோங்கி மூர்ச்சை அடைகிறீர்கள் அதன் பின் இரண்டு விஷயங்கள் மட்டுமே நடக்கும். 1. தியானத்தை விட்டு வெகு தொலைவு சென்றுவிடுவீர்கள் அல்லது உங்களை சுற்றியுள்ளவற்றிடம் இருந்து வெகு தொலைவு சென்றுவிடுவீர்கள் இதில் எது நடக்கிறது என்பதை நீங்கள், நீங்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் உங்களை நீங்கள் காணும் அந்த வினாடி எத்தனை முகமூடிகளை அணிந்திருக்கிறீர்கள் என்பது தெரியும் போது ஒரு சிலர் அதிர்ச்சியும், ஒரு…

உரையாடலின் ஒரு பகுதி 23

உங்களையே நீங்கள் அறிய முற்படும் போது முதலில் குழப்பமும் அதை தொடர்ந்து பயமும் தான் ஏற்படும்.    உங்களை நீங்கள் என்னவாக நினைத்துக் கொண்டிருந்தீர்களோ அது இல்லாததைக் கண்டு கலவரப்படுவீர்கள். நீங்கள் பெருமையாயும், உன்னதமாயும் சத்தியம் என்று ஊருக்கு, உறவுக்கு, நட்புக்கு சொல்லியதெல்லாம் உங்களிடம் சில சந்தர்ப்பங்களில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைவீர்கள் சில நபர்கள் தியானத்தில் மூர்ச்சையடைவது இதனால்தான். 

உரையாடலின் ஒரு பகுதி 22

இயற்கையை அதன் இயல்பை எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் வெல்ல முடியாது. மனிதனால், மனிதன் வெற்றியடைந்ததாக சிலசமயங்கள் நினைத்து சந்தோஷப்படலாம், கர்வப்படலாம் ஆனால் மனிதன் வரையறைக்குட் பட்ட சக்தி கொண்டவன் இயற்கையோ வரம்பில்லாத சக்தி கொண்டது சின்ன உதாரணம் மனிதனுக்கு உண்டாகும் இறப்பு.

கடவுளை அறிய அல்லது அடைய  11

பாய் விரித்து படுத்தவனோ வாய்திறந்து தூங்குகிறான். பஞ்சணையில் படுத்தவன் நெஞ்சில் ஏனோ அமைதியில்லை என்ன காரணமாய் இருக்கும் இப்படி பஞ்சனையில் படுக்க எத்தனைபேரை வஞ்சித்தானோ, ஏமாற்றினானோ அந்த நினைவுகளே அவனை நிம்மதியற்றவனாக ஆக்கியிருக்கும் என்றுதான் தோன்றுகிறது.  அது மட்டுமல்ல பஞ்சணையை யாராவது பிடுங்கி கொண்டால் என்ன செய்வது என்ற எண்ணமும் காரணமாய் இருக்கலாம் இந்த இடத்தில் அரசு அதிகாரம் பதவி போன்றவையும் பஞ்சணைகளே. எப்போதுமே தவறுகளை உணர்ந்து கொள்வது மட்டுமே தவறுகளுக்கு பிராயசித்தம் ஆகாது. தண்டைனை கூட…

கடவுளை அறிய அல்லது அடைய  10

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது ஆயிரமாயிரம் சூழ்ச்சிகள், குழிபறிப்புகள், துரோகங்கள் போன்ற எல்லாவற்றையும் சமாளித்துதான் ஆட்சி செய்ய வேண்டியிருக்கிறது. அந்த கால மன்னராட்சி முதல் இந்த கால மந்திரிகள் ஆட்சி வரை இந்த நியதி மாறவேயில்லை அதிலும் அதிகாரம் கைபற்ற இத்தனை செய்யவேண்டியிருக்கிறது என்றால் கிடைத்த அதிகாரத்தை தக்க வைக்க இதை போல் பல மடங்கு செய்ய வேண்டியிருக்கிறது. அதிகார போதையில் மிதக்க ஆசைப்படுபவன் எல்லோரையும் ஏமாற்றவே நினைக்கிறான். அதில் கடவுளும் அடக்கம் ஏமாற்றியதற்கு கடவுளிடம் மன்னிப்பு…

கடவுளை அறிய அல்லது அடைய 9

ஒரு விதத்தில் பார்த்தால் மனிதனால் எதையும் முழுமையாய் அனுபவிக்க முடிவதில்லை எதையும் முழுமையாய் அனுபவிக்கும் வித்தை ஏனோ மனிதனுக்கு கைவர பெறவில்லை.  அது மண் ஆகட்டும், பெண் ஆகட்டும், பொன் ஆகட்டும் எதையும் முழுமையாய் அனுபவிக்காததால் அவனுக்கு எதுவும் முழுமையாய் தெரிவது இல்லை அதனாலேயே ஜனன மரணங்களைப் பற்றிய புதிர் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நாம் பிறவற்றை பற்றி அறியாமல் இருப்பது ஒன்றும் மிகப் பெரிய தவறோ, இழிவோ அல்ல ஆனால் தன்னை தான் அறியாமல் இருப்பத…

கடவுளை அறிய அல்லது அடைய 8

எல்லாவற்றையும் காலம் நினைவில் கொண்டுள்ளது.  காலம் வெற்றியடைந்தவன், தோல்வி பெற்றவன், பணம் படைத்தவன், பணம் இல்லாதவன் பண்டிதன், பாமரன், ஞானி, அஞ்ஞானி என்ற பேதத்தை கைகொள்வதில்லை அதனுடைய நினைவில் எல்லோருக்கும் இடம் உண்டு, அதனால் காலத்தை வென்றவன் காலத்தை வெல்லாதவன் என்ற பாகுபாடுகளை நாம் பெரிதாய் எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை.  காலத்தில் கடந்த ,நிகழ், எதிர் காலங்கள் என்ற பிரிவுகள் கிடையாது அது காலமாக மட்டுமே இருக்கிறது.  நாம் தான் காலத்தை மூன்று கூறாக்கி வைத்திருக்கிறோம் எதையும்…

கடவுளை அறிய அல்லது அடைய 7

 இதை தான் பெரியவர்கள் எதை, எதை எங்கெங்கு எப்படி வைக்க வேண்டுமோ அப்படி வைக்கவேண்டும் என்றார்கள் அவர்கள் சொன்னது புற பொருள்களை அல்ல நம்மிடம் கருவியாய் உள்ள மனதையே சொன்னார்கள் அது மட்டுமல்ல பெரியோர்கள் சொன்னது மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்றார்கள் இதில் உள்ள அர்த்தம் மனமது நமக்கு ஏவளாளியாய் அடிமையாய் இருந்தால் மந்திரம் ஜெபித்து நாம் பெற வேண்டியது எதுவும் இல்லை நமக்கு வேண்டியது எல்லாம் இயல்பாகவே கிடைக்கும் என்பது தான். இதை…

கடவுளை அறிய அல்லது அடைய 6

நன்றாக கவனம் வைத்துக் கொள்ளுங்கள் கை, கால்களை போலவே மனமும் ஒரு கருவியே நம்முடைய கை, கால்கள் நாம் சொல்லுவதற்கு அல்லது நினைப்பதற்கு முன்னால் அவை அசைந்தால் நமக்கு எத்தனை அசெளகரியமும், குழப்பமும் உண்டாகுமோ அதை விட பல கோடி மடங்கு அசெளகரியமும் குழப்பமும் நாம் கட்டளை இடும் முன் மனம் அசைந்தால் உண்டாகும்.

கடவுளை அறிய அல்லது அடைய 5

உலகில் உள்ள எல்லா போராட்டங்களையும் விட மனிதனுக்கும் அவன் மனதிற்க்கும் நடக்கும் போராட்டமே மிகப்பெரிய போராட்டம். சிறிது கூட இடைவெளியில்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிற போராட்டம் இதில் மனம் ஜெயித்தால் பயித்தியகாரன் மனிதன் ஜெயித்தால் புத்தன், ஞானி. ஆ என்றால் பெரியது தலைவன் என்ற அர்த்தத்தோடு இறை என்ற அர்த்தமும் உள்ளது அதாவது நீ லயத்தில் இருந்தால் ஆ எனும் இறையை உடலில் காணலாம். இதில் முக்கியமானது லயத்தில் இருக்க வேண்டும் அதாவது உடல் லயத்தில் இருக்க…

கடவுளை அறிய அல்லது அடைய 4

மனதின் இயக்கங்களை முழுமையாக கண்டறிய மனிதனால் இன்னும் முடியவில்லை அதனால் தான் புத்தர் போன்றோர்   மனதை கடந்து சென்றுவிட்டனர் அப்படி மனதை கொண்டேமனதை கடந்து சென்றதினால் அதை பற்றி அறிய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.   மனதை நமக்கு எஜமானனாக நாம் கொண்டால் நாம் மறைந்து விடுவோம்.  மனம் மட்டுமே இருக்கும் நாம் மனதிற்கு எஜமானனாக இருந்தால் நாம் இருப்போம் மனம் மறைந்து விடும் இது புரிந்து கொள்ள கடினமாக தோன்றினாலும் மிக…

கடவுளை அறிய அல்லது அடைய 3

உடலை எவனொருவன் ஆண்டவன் உருவாக்கிய ஆபூர்வகருவியாக நினைத்து ஆச்சரியப்பட்டு பின் தன் உடல்மீது அன்பு கொள்கிறானோ எவன் தனது உடலை கடவுளை அடைய உதவும் ஏணியாக பயன்படுத்த அறிந்திருக்கிறானோ அவன் உடலில் மறைந்திருக்கும் பல ரகசியங்களை கண்டு கொள்வான் அந்த ரகசியங்கள் மூலம் இறையை உணர்வான் இதைத்தான் முன்னோர்கள் இப்படி சொன்னார்கள் ஊணுடம்பு ஆலயம் என்று.

கடவுளை அறிய அல்லது அடைய 2

உண்மையில் மனித வாழ்வில் அழிக்கப்பட வேண்டியது என்று எதுவும் இல்லை மாற்றி அமைத்து மேன்மைப்படுத்த வேண்டியவைகள் மட்டுமே உண்டு அப்படி மேன்மைப்படுத்தும் பொறுப்பும் கடமையும் அவரவரிடமே உள்ளது. கடவுளை அறிய அல்லது அடைய முக்கியமாக தேவையானது  இதயம் தலை அல்ல. அடுத்ததாக இதயம் மட்டும் பத்தாது அது அன்பால் நிறைந்திருக்க வேண்டும்.   தலையில் அறிவு மட்டுமே நிறைந்திருக்கும் அதனால் அதைக்கொண்டு இறைவனை அடைய முடியாது.

கடவுளை அறிய அல்லது அடைய 1

 ஒருவன் தன்னுடைய உடலையோ, மனதையோ வெறுப்பதினால் அவன் அடையும் பயன் ஒன்றே ஒன்று தான் கடவுள் என்பவரின் நிழலைக் கூட காண முடியாது.  ஒருவன் தன்னை வெறுப்பதினால் தன் மீது அன்பு செலுத்த இயலாதவனாகிவிடுகிறான்.  அதன் பின் அவனால் பெற்றோர், ஆசிரியர், உடன் பிறந்தோர், நண்பர்கள் போன்றவற்றில் எதிலும் அன்பு செய்ய இயலாதவனாகிவிடுகிறான்.   கடவுளை காண அன்பு மட்டுமே கருவியாக இருக்கும் போது அந்த கருவி இல்லாதவனால் கடவுளை அறியமுடியுமா?

ஆனந்தம் இல்லாதவன்

தனக்குள் ஆனந்தம் இல்லாதவன் ஆசை வயப்படுகிறான். அந்த ஆசையை நிறைவேற்றி கொள்வதன் மூலம் அவன் ஆனந்தம் அடைய முயற்சி செய்கிறான், அதில் சில ஆனந்தங்களை மிக சிறிய அளவு அடைகிறான் மனிதன் இன்னமும் புரிந்து கொள்ளாத விஷயம் என்னவென்றால் ஆனந்தம் தனக்குள் இருப்பது அது எதை சார்ந்தும் இராது. ஆனால் ஆசை என்பது எப்போதும் பிறவற்றை சார்ந்தே இருக்கும் அதனால் ஆசையினால் அடையும் ஆனந்தம் மிக, மிக சிறிதாகவே இருக்கிறது.  எப்போது மனிதன் தனக்குள் ஆனந்தத்தை அறிய…

சுகமாக வாழ சில ஆலோசனைகள். 2

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி இதனை நன்கு உணர்ந்த நோய்வாய்பட்டவர்கள் அல்லது உடல் பலவீனமுடையவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி தேவையான சிகிச்சைகளை செய்து கொண்டு உடலை ஆரோக்கிய முறையில் பேணுவார்கள் ஆனால் உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் தங்கள் உடலைப் பற்றி சிந்திக்காமல் அதற்க்கு முக்கியத்துவம் தராமல் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருப்பார்கள். அதனால் உடல் நலம் சரியில்லாமல் ஆக அவர்களே காரணம் ஆவார்கள்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள். 1

 தாழ்வு மனப்பான்மைகளில் சிக்கிக் கொள்ளாமல் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் சந்தேகங்களுக்கு ஆளாகாமல் மற்றவர்கள் மீது அவநம்பிக்கை கொள்ளாமல் எளிமையாக மகிழ்ச்சிகரமாக இயல்பாக வாழுங்கள் யாரோ சிலர் அல்லது உங்களுக்கு வேண்டியவர்கள் உங்களை ஏமாற்றியிருந்தாலும் அதனால் பாதிப்படையாமல் உங்கள் மனதை இயல்பான வாழ்க்கையில் செலுத்தி சந்தோஷமாய் வாழ்க்கையை தொடருங்கள்.  உங்களுடைய பலவீனங்கள் குறைபாடுகளை நீங்கள் உணரத் தொடங்கினால் அவற்றை ஒரு போதும் மறவாது இருந்தால் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி இதை உதாரணம் கொண்டு புரிந்து கொள்ள முயல்வோம்.

ஆதி. 12

ஜீவனில் உயிர் உண்டு அஜீவனில் உயிர் இல்லை இந்த உயிரானது ஜடபொருளுடன் இணையாத பொழுது பூரண அறிவுடன் விளங்குகிறது.  நம்முடைய பூரண அறிவுக்கு தடையாய் இருப்பவை புலன்களும், பொறிகளும் தான். அதிலிருந்து விடுதலை அடைந்து விட்டால் பூரண அறிவு சித்திக்கும் அதாவது ஞானம் உண்டாகும் லோகாதாய வாதிகள், பிரத்தியட்சத்தை மட்டுமே ஏற்கிறார்கள்.  யூகத்தை ஏற்பதில்லை சமண வாதிகள், பிரத்தியட்சம், யூகம் இரண்டையும் ஏற்கிறார்கள்.  அனுபவ வாக்கை ஏற்பதில்லை. அதனால் இவர்கள் வேதங்களை ஏற்பதில்லை.

தற்போது மத சந்தையில்

தற்போது மத சந்தையில் அழகிய புறத் தோற்றம் கொண்ட எதற்கும் பயன்படாத பொருட்கள் இப்போது துன்பத்தை கண்டு வேகமாக ஓடும் மக்களுக்கு பரிசு பொருட்களாக கொடுக்கப்பட்டு வருகிறது.

பிரார்த்தனை

பிரார்த்தனை இதயத்தால் நடைபெற வேண்டிய ஒன்று அறிவிலோ, புத்தியிலோ நடைபெற வேண்டிய செயல் அல்ல. கோயிலில் இருப்பது என்ன சிலையா? தெய்வமா கல் என்றால் பிரார்த்திக்க முடியாது. தெய்வம் என்றால் நெக்குருகி பிரார்த்திக்காமல் இருக்க முடியாது உண்மையில் பிரார்த்தனை என்பது அன்பில் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் கண்ணதாசன் சொன்னது போல, கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும் அன்பில்லாத பிரார்த்தனை உயிரற்ற உடல்,

துன்பத்தை கண்டு ஓடுபவன்

வாழ்க்கையில் துன்பத்தை கண்டு ஓடுபவன் குருட்டு நம்பிக்கைகளில் தன்னை இழக்கிறான். அந்த குருட்டு நம்பிக்கைகளில் புகலிடம் தேடுகிறான். இதை போலி மதவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். போலி மதவாதிகள் என்றால் தன்னையும் அறியாமல் தன்னை அண்டி வருபவர்களையும் தன்னை அறிய விடாமல் தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்கள்.  

மனிதர்கள் தோன்றிய காலம் முதல்

ஒரு விஷயம். மனிதர்கள் தோன்றிய காலம் முதல் இருக்கும் ஒன்று; மனிதர்கள் இன்னும் எத்தனை காலம் பூமியில் இருப்பார்களோ அதுவரை இருக்கும் ஒன்றுதான் காதல். இத்தனை ஆண்டுக்கால அனுபவம் இருந்தாலும் ஏனோ நாம் காதல் பண்ணும் விஷயத்தில் சொதப்பிக் கொண்டுதான் இருக்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இந்த மனிதர்களால் காதல் என்பதை மட்டும் கண்டறிய முடியவில்லை  எந்தளவுக்கு அது உடல் சார்ந்தது… எந்தளவுக்கு அது அறிவு சார்ந்தது? தெரியாது. இது விபத்தா,  தெரியாது. விதியா?  தெரியாது

பயம் 8

எண்ணம் கடந்த காலத்தை பற்றி இருந்து நிகழ் கால நம்முடைய ஒவ்வொரு செயல்களிலும் அது நுழைந்து நமக்கு பயம், பொறாமை, இன்பம், வருத்தம் போன்றவற்றை தந்து கொண்டேயிருக்கிறது. அதனால், நாம் நம் நிலையை அறிந்து கொள்ள முடிவதில்லை. இதிலிருந்து விடுபட என்ன வழி, ஒரே வழி எதை நாம் அனுபவிக்கின்றோமோ அதை அப்போதே மறந்து விடுவது இது கடினமாக தோன்றும் விஷயம் ஆனால் நம்மை நாம் கவனிப்பதன் மூலம் மிக எளிதாக கைவரக்கூடிய விஷயம் இதை முயன்று…

பயம் 7

எண்ணத்தின் முழு செயல்பாடும் கடந்த காலத்திலேயே வேர் பரப்பி ஊன்றி நிற்கிறது அதனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அது நம்மை ந ல்லது, கெட்டது சரி, தவறு என்று நம்மை ஏதோ ஒன்றை தேர்ந்தெடுக்க நம்மை நிர்பந்திக்கிறது அதனால் நாம் நம் இயல்பு நிலையை இழக்கிறோம்

பயம் 6

நாம் வளர்ச்சி பாதையில் செல்ல திறமையாக திட்டமிடவும், செயல்படவும் வேண்டியுள்ளது.  இதை எண்ணமற்ற நிலையில் செய்யமுடியாது.  இப்போது நாம் எந்த முடிவுக்கு வருவது என்பது குழப்பமாகத்தான் இருக்கும்.  ஆனாலும், குழப்பம் தெளியவேண்டும் அதற்கு ஒரே வழி வினாவும், விசாரித்தலும்தான்.  நம் வாழ்க்கையில் எண்ணத்தின் இடம் என்ன என்ற விசாரிக்க ஆரம்பிக்க வேண்டும் அதில் நாம் எண்ணத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்வதற்கும் எண்ணம் நமது இயல்பான வாழ்க்கையில் குறிக்கிடாமல் இருப்பதற்கும் உள்ள எல்லைக்கோடு எது என்பதை கவனமாக உற்றுப்…