எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம்

எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள். எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ, அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.

அந்தணர்கள் மனிதனை பற்றி

அந்தணர்கள் மனிதனை பற்றியும் நிறைய யோசித்து வைத்தார்கள் மனிதனின் போருக்கு காரணம் மண், பெண். அந்தணர்களுக்கு மண் முக்கியமேயில்லை.  என் நாடு, என் தேசம் என்ற எண்ணத்தில் அந்தணன் சிக்குவதே இல்லை. கட்டின துணியும் ஒலை சுவடிகளும், சமஸ்கிருதமுமே சொத்து. இரந்துண்பதே வாழ்க்கை, எதிர்ப்பு காட்டாததே நியதி முடிந்தால் நீதி சொல்வது இல்லையேல் மவுனமாக இருப்பது.

எல்லாவற்றையும் விட உயிர் வாழ்தல் முக்கியம்

இது கலிகாலம் காசுக்கு ஆசைப்படும் பிராமணனும் மோட்சத்திற்க்கு ஆசைபடுகின்ற தாசியும் நிறைந்த கலிகாலம். அந்தணர்கள் துறவிகள் அல்லர் அவர்கள் அறிவு சார்ந்தவர்கள் அறிவுக்கும், அமைதிக்கும், அன்புக்கும் கர்வம் உண்டு. அந்தணர்கள் கர்வம் வினோதமானது அது முழக்கமிடாது திட்டமிடும் ஆரவாரிக்காது முறுவலிடும்.  வெற்றியை கண்சிமிட்டி தந்திரமாய் அனுபவிக்கும். எல்லாவற்றையும் விட உயிர் வாழ்தல் முக்கியம் அதுதான் வாழ்க்கையின் அடிப்படை உயிர் வாழ்தலுக்கு ஆரோக்கியம் முக்கியம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

உணர்வு உனக்குள் நீ

உணர்வு உனக்குள் நீ உன்னை காண்பிப்பது,  அறிவு உன்னை நீ பிறருக்கு காண்பிப்பது. பூமி பிரபஞ்சத்தின் ஆளுகைக்கு உட்பட்டது. அதனால் பூமியில் நடைபெறும் அத்தனை விஷயங்களும் பிரபஞ்சத்தின் கொடையே பூமியில் உள்ள உயிரினங்களும் பிரபஞ்சத்தின் கொடையை கொண்டே செயல்புரிகின்றன.  

சுக்கிரன் 12

சுக்கிரன் மீனத்தில் இருக்கப் பிறந்தவர்கள் புத்திசாலியாக இருப்பர். உயர்ந்த தன்மைகள் குடிகொண்டிருக்கும், உயர்ஸ்தானம் வகிப்பார்கள்.  சுக்கிரன் தனுசில் இருக்கப் பிறந்தவர்கள் நல்லொழுக்கம் இருக்கும் உயர்ந்த பதவிக்கு வருவார்கள், எல்லோராலும் விரும்பப்படுவார்கள் சமூகத்தில் மதிப்பு ஏற்படும். சுக்கிரன் 9,7,5 ஆகிய இடங்களில் ஒன்றில் இருந்தால் பயணம் செய்வதில் ஆர்வம் மிக்கவராக இருப்பர்.

சுக்கிரன் 11

சுக்கிரனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் பெண்ணுக்கு பழிவாங்கும் உணர்ச்சி இருக்கும். இன்பங்களை அனுபவிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பாள். சுக்கிரன் விருச்சிகத்தில் இருக்கப்பிறந்தவர்கள், கோபம் உள்ளவர்களாகவும் இருப்பர், ஒழுக்கக் குறைபாடு இருக்கம், மறைமுக உறுப்புகளில் உபத்திரம் இருக்கும் துடுக்காகப் பேசுவார்கள்.  மனிதாபிமானம் குறைந்தவர்களாக இருப்பார்கள். சுக்கிரன் ரிஷபத்தில் இருக்கப் பிறந்தவர்கள் புத்திசாலியாக இருப்பர் பல செல்வம், கல்வியறிவு கூடும்.  புகழ் உண்டாகும், மற்றையோரு உதவுவர்.

சுக்கிரன் 10

சுக்கிரன் மேஷத்தில் இருக்கப் பிறந்தவர்கள், வழக்கு வியாஜ்ஜியங்களில் ஈடுபடுவார்கள்.   காம இச்சை அதிகமிருக்கும், பேச்சில் வன்மையிருக்கும். சுக்கிரன் நின்ற ராசிக்கு அடுத்த ராசியில் தனியே சந்திரன் நின்றால் திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்படும். சுக்கிரன், செவ்வாயும், ராகுவும் ஒரே ராசியில் நின்றிடில் இன்னொருவரின் வாழ்க்கைத் துணையுடன் உறவு ஏற்படும்.

சுக்கிரன் 9

சுக்கிரனும், செவ்வாயும் 7ல் இருந்தால் அந்த ஜாதகர் விதவை பெண்ணை விவாகம் செய்வர். சுக்கிரன் 12ல் இருந்தால் பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்படும். கலைத்திறனும் உண்டாகும்.  ஆனால், தொழில் தடையைச் சந்திக்கநேரும். சுக்கிரன் 4ல் இருந்தால் ஜாதகர் மற்றையோரைவிட அந்தஸ்திலும், தாய் மீது பாசம் அதிகரித்தும், அறிவில் உயர்ந்தவராய் விளங்குவர்.

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள் 5

உலகத்தை யாரால் வெல்ல முடியும் ? சத்தியமும், பொறுமையும் உள்ளவரால். யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ? எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை. செவிடன் யார் ? நல்லதைக் கேட்காதவன். ஊமை யார் ? சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான சொற்களைச் சொல்லத் தெரியாதவன். நண்பன் யார் ? பாவ வழியில் போகாமல் தடுப்பவன். யாரை விபத்துகள் அணுகாது ? மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள் 4

எது மரணத்துக்கு இணையானது ? அசட்டுத்தனம். விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ? காலமறிந்து செய்யும் உதவி. இறக்கும் வரை உறுத்துவது எது ? ரகசியமாகச் செய்த பாவம். எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ? துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்… ஆகியோர் ! சாது என்பவர் யார் ? ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள் 3

உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ? குற்றங்கள் புரியாமல் வாழ்வதை. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ? இளமை, செல்வம், ஆயுள்…. ஆகியவை. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ? நல்லவர்கள். எது சுகமானது ? அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது. எது இன்பம் தரும் ? நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள் 2

எல்லோரும் பயப்படுவது எதற்கு ? இறப்புக்கு. குருடனை விட குருடன் யார் ? ஆசைகள் அதிகம் உள்ளவன். சூரன் யார் ? கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன். 9.மதிப்புக்கு மூலம் எது ? எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது. எது துக்கம் ? மன நிறைவு இல்லாமல் இருப்பது.

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா நல்ல வாழ்க்கையின் சூட்சுமங்கள்  1

எது இதமானது ? தர்மம். நஞ்சு எது ? பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ? பற்றுதல். கள்வர்கள் யார் ? புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள். எதிரி யார் ? சோம்பல்.

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலின் கருவறை சிறப்பு  4

அடியார்கள் வணங்கும் சிவலிங்கம், கங்காளர், கங்காதரர், மகிஷாசுரமர்தனி, ராசிச் சக்கரம் போன்ற பலப்பல புராண வரலாறுகளும் சிவ வடிவங்களும் தெய்வங்களும் தேவர்களும் வண்ணச் சித்திரங்களாகச் சுவர்கள், கூரைகள் முழுவதும் காணப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும். ஆகையால் திருவாரூர் தலத்துக்கு செல்லும்போது நின்று, நிதானமாக இந்த வண்ண சித்திரங்களை பார்த்து ரசித்து வாருங்கள்.  

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலின் கருவறை சிறப்பு  3

சட்டைநாதர், பிட்சாடணர், திரிசங்கு ரட்சக மூர்த்தி, ஆயதோத்தார மூர்த்தி, நீலகண்டர், அகோர வீரபத்திரர், மான் மழு தாங்கி கைகூப்பி நின்ற நிலையில் உள்ள நந்தி தேவர், அமர்ந்த நிலையில் உள்ள அதிகார நந்தி, கால பைரவர், தண்டாயுதபாணி, நிருதி, யமன், வருணன், இந்திரன், அக்கினி, முதலிய எண் திசை பாலர்கள், வண்ண சித்திரங்களாக உள்ளனர்

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலின் கருவறை சிறப்பு  2

 லிங்கோற்பவரின் இருபுறமும் அன்னமூர்த்தியான பிரம்மனும் வராகமூர்த்தியான விஷ்ணுவும் நின்றுள்ளனர். இது மட்டுமின்றி கருவறை சுவர்களும் கூரைகளும் முழுவதும் ஊசிமுனை இடைவெளியின்றி வண்ண வண்ண ஓவியங்களால் நிரம்பியுள்ளன. திரிபுரதகனம், காம தகனம், காலசம்காரம், கஜசம்காரம், ஜலந்தர வதம், தட்சயாக நாசம், அந்தகாசுரவதம், பிரம்ம சிரச்சேதம் ஆகிய அஷ்ட வீரட்ட வரலாறுகளும் நடராஜப் பெருமானின் ஆனந்தக் கூத்து தரிசனமும் மற்றும் புஜங்க லலித மூர்த்தி, ஜதியோ நந்தமூர்த்தி, ஊர்த்துவத்தாண்டவர் போன்ற பல்வேறு வகையான நடனமூர்த்திகளும் வண்ண சித்திரங்களாக உள்ளன.

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலின் கருவறை சிறப்பு  1

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலில் கருவறைச் சுவற்றில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன் ஆகிய உருவங்கள் கல்திருமேனிகளாக உள்ளன. இக்கருவறைச் சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளன. புற்றிடங் கொண்ட பரம்பொருள் கருவறைச் சுவர்கள் தூண்களால் சூழப்பட்டு அத்தூண்களுக்கு இடையே தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர் ஆகிய உருவங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன.

ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள் 6

முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார். தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார். மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான். ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். அக்கிரமம் செய்பவன் இப்போது தான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான். விரைவில் தனிமைச் சிறையில்…

ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்  5

மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான். அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான். “இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள். அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்து விடுங்கள். சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும். அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம். அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.” மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி…

ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள் 4

இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார். சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார். மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை. பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற நினைப்பில்…

ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்  3

மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது. மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு. மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள் அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது. முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார். நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற…

ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்  2

இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள். மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்குக் களப்பயிற்சி தரப் போகிறேன். உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும். அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும். நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம். அதை…

ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்  1

அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான். மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன். “ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள். செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது…

ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?

ஒரு நாள் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார். “ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?” “வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்” என்றான் ஒரு மாணவன்.  “ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்” என்றான் இன்னொரு மாணவன்.  “பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்”  “”தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்”  “”பஞ்சாமிர்தத்தோடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்”.  பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள். இறுதியாக ஒரு மாணவன் எழுந்து, “”ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டால்தான் மிகவும்…