சுந்தர யோக சிகிச்சை முறை 141

இது விஷயமாய் கார்டிடம் கம்ப்ளெயிண்ட் செய்ய, அப்பாவி மூன்றாவது வகுப்புப் பிரயாணிக்குத் தைரியமிராது. பிராது கொடுத்தவுடன் பிரியமாய் உதவி கிடைப்பதுமில்லை. இயற்கை தர்மங்களைத் தழுவ உன்னத வழிகளைத் திட்டமிட்டு நிற்பதே நாகரிகம் தற்கால உடையிலும், நடையிலும், உண்பதிலும், வீண் கர்வத்திலும் நல்ல நகாரீகத்தைக் காணமுடியாது.

சுந்தர யோக சிகிச்சை முறை 140

தற்கால நகரங்களில் பொதுமக்கள் செளகரியங்கள் சரியாகக் கிடையா. ஜெர்மனி, ஹாலந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் சிறு செலவுக்குப் பெருத்த மலநீர்போக்கு செளகரியங்களை அதிகாரிகள் அமைத்துள்ளார்களாம் பிரயாணம் செய்யும் பெழுது புகை வண்டியில் பேருக்குத்தான் கக்கூஸ் இருக்கிறது. இது சுத்தமாயுமில்லை தண்ணீர் வசதியும் கிடையாது. குழாய் இருக்கும், பம்பிருக்கும், ஆனால் தண்ணீர் மட்டுமிராது.

சுந்தர யோக சிகிச்சை முறை 139

வயது வந்த வாழ்க்கையில் புகுந்தவுடன் நேர்மை வந்து விடுகிறதா? டாக்டருக்கு, ‘ விசிட்டுகளும், பேஷண்டுகளும் “ காத்திருக்கும். வக்கீல் கட்சிக்காரன் மணிபர்சையோ நீதிபதியின் முகத்தையோ தாரணையில் நிறுத்தி நிற்பார். வியாபாரிக்கு மூச்சுவிட ஓய்வு ஏது? காலை எட்டு மணிக்கப் பெட்டியடி சென்றால், இரவு எட்டு வரையிலும் மடித்த காலை நீட்ட  நேரமிராதே! இயற்கை ஒன்று அமைக்க, நாமொன்றாக அதை மாற்றி விடுகிறோம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 138

தற்கால வாழ்க்கையில் உண்டாகும் தீங்கை நன்கு ஆராய்ந்து தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். மலத்தை அடக்குவது பால்யப் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. பள்ளியில் சேர்ந்தால் ஆசிரியரின் டம்ப கர்வம் கொட்டமடிக்கும். அவர் என்ன செய்து விடுவாரோ என்ற பயம் பையனுக்கு வைத்தாலும் பரவாயில்லை! தன்னுடைய அமிர்த மொழிகள் தடைபெற்ற கோபத்தில் பிரம்பால் “ நொக்கி “ விட்டால் என்ன செய்வது? அக்காலத்தில் எது ஜெயிக்குமோ? மலமோ பயமோ!

பதட்டமின்றி மகிழ்ச்சியாக வாழும் வழி முறைகள் 5

நிறைய வேலைகள் இருக்கும் போது ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள். வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். *வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் *நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும்* என்பதை மனதில் கொள்ளுங்கள். மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் !* அடுத்தவர்களைக் ~*காயப் படுத்தாமல்*~ வாழப் பழகுங்கள். இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே* மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்.

பதட்டமின்றி மகிழ்ச்சியாக வாழும் வழி முறைகள் 4

தினமும் *உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள்* எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் ~*பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட. பிறருக்காக எதையேனும   செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள். என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து *பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள் உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும்.  உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை

பதட்டமின்றி மகிழ்ச்சியாக வாழும் வழி முறைகள் 3

செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது’*~ என்று சொல்லப்பழகுங்கள்  எளிமையாக வாழுங்கள்  உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம் !* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். *தடையற்ற தூக்கத்துக்கு* அது உதவும்  ஆழமாக , நிதானமாக  மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்  குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் *நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

பதட்டமின்றி மகிழ்ச்சியாக வாழும் வழி முறைகள் 2

 சற்று *முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள்*.  பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள். சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இப்படி பயணப்படலாம் என்பது போன்றவை.  தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, *சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்*. சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள்.*~ ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.

பதட்டமின்றி மகிழ்ச்சியாக வாழும் வழி முறைகள்.! 1

காலையில் *சூரிய உதயத்திற்கு முன்* எழுந்துவிடுங்கள்! ஒரு காகிதத்தில் அன்றைய தினம் *செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம்* என்பதையும் குறித்து வையுங்கள். காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். *ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது* காத்திருத்தலை சுகமாக்கும் ! முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் ~*கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.*~

உலக பூமி நாள் 3

குறைந்த தூரம் செல்ல, மோட்டார் வாகன பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். சைக்கிள் செலவை இல்லாமல் செய்வதுடன் உடல் நலத்துக்கும் மிக நல்லது.  உங்கள் சர்க்கரை,கொழுப்பை குறைக்கும். மாசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.  சூரிய ஆற்றலை அதிகம் பயன்படுத்தலாம். பெரிய தொழிற்சசாலைகள் தேவையான மின் சக்தியை சூரிய ஆற்றல், காற்றாலைகள் மூலம் பெற வேண்டும். பாடப்புத்தகங்களில் சுற்றுச்சூழல் தொடர்பான பாடங்களை சேர்த்து வருங்கால மக்களாவது  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளச் செய்யலாம். நாம் வாழும் பூமி, தாய்,…

உலக பூமி நாள் 2

அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஆர்வலர் “கைலார்ட் நெல்சன்‘ என்பவரின் தீவிர முயற்சியால், 1970ல் இத்தினம் தொடங்கப்பட்டது.  தற்போது இந்த “எர்த் டே நெட்வொர்க்‘ அமைப்பில் 175க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. உலகை காக்க நம்மால் செய்ய முடிந்ததை நாம் செய்யலாம். ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மரம் வளர்க்க வேண்டும். அனைத்து வகை குப்பைகளையும் குறைக்க வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மறுசுழற்சி பொருட்களை பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தை சேமிக்க வேண்டும். சி.எப்.எல்., பல்பை பயன்படுத்த வேண்டும். பாலிதீன்,மக்கா…

உலக பூமி நாள் ” 1

நாம் அதிகப்பட்சமாக 100 ஆண்டுகள் வாழும்  பூமிப்பந்தை அப்படியே விட்டுச்செல்லுகிறோமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவரவர்களால் முடித்த அளவு நாசப்படுத்தியே வருகிறோம். இயற்கைவளம்–கனிம வளம் மிக்க பூமியை காடுகளை அழித்து நகரங்களை உருவாக்கி வாழ்கிறோம். சக வாழ்விகளான விலங்குகள்–பறவைகளை வாழ வழியில்லாமல் செய்கிறோம். பருவநிலை மாற்றத்தால் பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பூகம்பம், சுனாமி,வெள்ளம், வறட்சி, பனிப்பாறை உருகுதல் போன்றவை அடிக்கடி நிகழ்கின்றன. இந்த இயற்கை சுழற்சியில், பூமி அவ்வப்போது, நினைவுப்படுத்துவது போல இயற்கை…

சமத்துவ சிந்தனை 5

வெள்ளையாய்யும் – நீர்ம நிலையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் பாலும், கள்ளும் ஒன்று என்று சொல்லுவது அறிவுடைமை ஆகுமா? அப்படி இரண்டையும் ஒன்றாய் பாவித்தால் பலன் ஒன்றாய் வருமா? இப்படி எல்லாம் யோசிக்கும் போது சமத்துவம் என்பது இயற்கைக்கு மாறுதலான விஷயம். அதனால், நெடு நாட்கள் அந்த தத்துவம் நிலைபெறாது என்ற முடிவுக்கு தான் வர வேண்டியயிருக்கிறது.

சமத்துவ சிந்தனை 4

கிரககிக்கும் ஆற்றல் செயல்படுத்தும் திறமை போன்றவற்றில் பல்வேறு வித்தியாசங்களை சமமாய் பாவிப்பது எப்படி சரியாய் வரும். சமத்துவத்தை சமநிலையை எல்லா துறைகளிலும் ஏற்படுத்துவது சரியா? அப்படி செய்தால் எதிர் கால வளர்ச்சி என்பது சரியாய் வருமா? தனிப்பட்ட மனிதனின் ஆற்றல் மனிதருக்கு மனிதர் வேறுபடுவதை கண்கூடாய் நாம் காணும் போது எப்படி சமன் செய்ய முடியும்.

சமத்துவ சிந்தனை 3

நாம் சிந்திக்க வேண்டியது இயற்கையின் இயல்பை அதாவது மனிதனின் இயல்பை. மனிதனின் பிறப்பில் ஒவ்வொருவரும் உடலால், அறிவால், மனதால் பல்வேறு வித்தியாசங்களுடனேயே பிறக்கிறான். வளருவதும் ஒருவரை போலில்லாமலேயே வளருகிறான்.

சமத்துவ சிந்தனை 2

சமத்துவ தத்துவத்தை சிந்தித்தால் சரி என்று தான் தோன்றுகிறது. ஆனால் சரியாய் இருக்குமா என்ற சந்தேகமும் வருகிறது. கொஞ்சம் ஆழமாய் சிந்தித்தால் மண்ணில் அனைவரும் ஒன்று, எல்லோரும் சமம் எனும் நிலை கொண்ட  தத்துவம் தானே சமத்துவம் என்பது  ரொம்ப சரியான தத்துவம் தானே என்று தோன்றினாலும் நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும்.

சமத்துவ சிந்தனை 1

சமத்துவம் மக்களிடையே இருக்க வேண்டும். அதுதான் சிறந்தது.  அதிலும் முக்கியமாக அரசு, மடங்கள், கல்வி, நிலையங்கள், தொழிற்ச்சாலைகள் முதலியவற்றில் சமத்துவம் எனும் முறை அனுஷ்டிக்கப்பட வேண்டும். அதுவே மனித குலத்தை உயர்வுக்கு கொண்டு செல்லும். அதனால் சமுத்துவத்தை எவ்வாறேனும் ஸ்தாபிக்க முயலவேண்டும்.

தற்போதய சமுதாய சூழ்நிலையில்

தற்போதய சமுதாய சூழ்நிலையில் அடுத்தவர்களை ஏமாற்றுவது கூட அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கையின் நியதியாய் மாறிவிட்டது காரணம் என்று தேடினால் நீதி போதனைகள் இல்லாமல் போய்விட்டது நீதி போதனைகள் மதிப்பிழந்த காரணத்தால் காணாமல் போய்விட்டது. விளைவு சரி  தவறு, பாவம், புண்ணியம் போன்றவற்றை பற்றிய அறிவு இல்லாமல் போய்விட்டது அதனால் ஏமாற்றுதல் என்பது வாழ்க்கையின் நியதியாக வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கால கட்டத்தில்

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கால கட்டத்தில் ஏதோ ஒரு சூழ்நிலையில் திருப்தி இன்மை என்ற நிலை ஏற்படும் அது எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்.   பணம், பதவி, பொன், பெண், குடும்பம், நட்பு, உறவு, ‍தொழில் என்று எதில் வேண்டுமானாலும் உண்டாகலாம். இதில் குடும்பத்தில் முக்கியமாய் கணவன், மனைவிக்குள் திருப்தியின்மை ஏற்பட்டால் அதை உடனே கண்டறிந்து சரி செய்துவிட வேண்டும். எந்த விஷயத்தில் எந்த சூழ்நிலையில் திருப்தியின்மை ஏற்படுகிறது என்பதை கண்டுணர்ந்து சரி செய்து விட்டால் குடும்பம்…

கணவன், மனைவிக்கிடையே

கணவன், மனைவிக்கிடையே எப்போதும் கல்யாணம் ஆகாத காதலர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு இருக்க வேண்டும். மனம், அதன் நினைவுகளில் சஞ்சரிக்கும் போது அதற்கு சமுதாய கோட்பாடுகள் நியாய அநியாய வேறுபாடுகள் எதையும் கண்டு கொள்வதில்லை. தன் இஷ்டத்திற்க்கு அது பயணத்தை தொடரும். அந்த பயணத்தில் எண்ணங்கள் பூவாய் மலரலாம். வேதனைகள் முள்ளாய் குத்தலாம் எதையுமே மனம் பொருட்படுத்தாது. அது தான் மனம் அதனால் தான் அது மனம் மனதை கட்டுபடுத்த எந்த உபகரணமும் சமுதாயத்தில் கண்டு பிடிக்கவில்லை.

எல்லோருக்குமே கொஞ்சம் கவனித்திருந்தால்

எல்லோருக்குமே கொஞ்சம் கவனித்திருந்தால் புரிந்திருக்கும் எந்த வேலையாக இருந்தாலும் வெளி நபர்கள் பாராட்டும் போது நாம் அடையும் மகிழ்ச்சியை விட நம்மை சார்ந்தவர்கள், நாம் விரும்புபவர்கள் பாராட்டும் போது நாம் அடையும் மகிழ்ச்சி மிக அதிகமாக இருக்கும் நம்மை அறியாமலேயே நாம் பெருமித உணர்வில் மிதப்போம்.

உங்கள் உணர்வுக்கு வேலை கொடுங்கள்

உங்கள் உணர்வுக்கு வேலை கொடுங்கள் அது உங்களை உண்மையை நோக்கி அழைத்துச் செல்லும். நீங்கள் உங்கள் அறிவுக்கு வேலை கொடுங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்கள் இனத்தின் அழிவுக்கே இட்டுச் செல்லும்.

தன்னை  பற்றி தான் சிந்திக்க ஒரு சோதனை 4

எல்லோரையும் மதியுங்கள், மதிப்பைக் கொடுக்கக் கொடுக்கதான் அது திரும்ப கிடைக்கும். நான் தராதரம் புரிந்துதான் சிலரை மதித்து வந்தேன் ! நீங்கள் யாரைவிடவும் மேலானவர் இல்லை. அதேபோல் கீழானவரும் இல்லை என்ற கருத்தியில் உறுதி காட்டுங்கள். உறுதி காட்டியதில்லை. அவரவர்க்கென தனிப்பட்ட விருப்பங்களும், தேர்வுகளும் இருக்கும். அதில் தலையிடாதீர்கள். நான் தலையிட்டுள்ளேன் !! உங்கள் பேச்சை எல்லா நேரங்களிலும், எல்லோரும் கேட்டு நடக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்திருக்கிறேன் !! மேற்சொன்ன  கருத்துக்கள் மனிதர்களுடன் நல்லுறவில் இருக்க…

தன்னை  பற்றி தான் சிந்திக்க ஒரு சோதனை 3

நீங்களாகப் போய், எல்லா கொக்கிகளிலும் சிக்க வேண்டாம். எல்லாமே உங்கள் பிரச்சனைகள் அல்ல. எல்லாப் பிரச்சனைகளிலும் எனக்கும் பங்குள்ளதே என்று கையாண்டுள்ளேன் !! உங்களுடைய அன்பு, எவர் உரிமையையும் பறிக்க வேண்டாம். பலபேரின் உரிமையை என் உண்மையான அன்பால், பலபேரிடமிருந்து மறைமுகமாக பறிக்கப்பட்டுள்ளதை உணர்ந்திருக்கிறேன் !! உங்களுடைய வாழ்க்கையை, நீங்கள் அனுபவியுங்கள். அதுபோல மற்றவர்களையும் வாழவிடுங்கள். நான் என் வாழ்க்கையை சமீபகாலத்தில்தான் வாழவே ஆரம்பித்து இருக்கிறேன் !!

தன்னை  பற்றி தான் சிந்திக்க ஒரு சோதனை 2

பிறரது பொறுப்புகள் குறித்து, சதா பேசிக் கொண்டிருக்காதீர்கள். அதை மட்டும் தான் செய்துள்ளேன் !! கேட்டால் மட்டும் உதவுங்கள். உணர்ந்து உதவினேன் !! மற்றவர்களின் நடத்தைகளில் கவனம் செலுத்தாதீர்கள். மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறேன் !! எந்த ஆபத்தும் வளர்ந்து, உங்கள் கழுத்தை நெரிக்கும் அளவிற்கு விடாதீர்கள். பல ஆபத்துக்களில் என் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது !!

தன்னை  பற்றி தான் சிந்திக்க ஒரு சோதனை 1

மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதை யோசிப்பதை நிறுத்திவிட்டு, உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.   மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதை யோசித்து ஆலோசனைகள் சொல்லிகொண்டே  இருப்பேன் கோபம் வந்தால், அவ்விடத்தை விட்டு வெளியேறுங்கள். பொதுவாக எனக்கு கோபம் உடனே வந்ததில்லை, வந்தால் ருத்ரதாண்டவம் தான் ! யாராவது நல்லவிஷயம் செய்தால், அவரை பாராட்டுங்கள். நான் பலபேர் மத்தியில் பாராட்டியுள்ளேன்

உரையாடலில்l ஒரு பகுதி 68

எப்போதுமே ஆசை வேகம் கொடுக்கும் நிறைவேறாத ஆசை ஏக்கம் வளர்க்கும், ஏக்கம் சோர்வு தரும் சோர்வு ஆசைக்கு எதிர்மறையான விஷயம் அப்படியிருக்கும் நாம் ஆசையினால் ஏக்கப்படாமல் தேடுவதே ஏக்கத்தை தொலைக்கும் விஷயம் இது தெரிந்து விட்டது என்றால் எதிர்பாராமல் ஆசை கைகூடாவிட்டாலும் நம்மை ஏக்கமும் சோர்வும் ஆட்கொள்ளாது காரணம் ஆசையை அடைய நாம் எடுத்த முயற்ச்சிகள் நமக்கு அனுபவமாயிருக்கும்.