இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 11

இரத்தத்தில் சூடு இருந்தால் நம்மால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்போம். இரத்தத்தில் உள்ள சூடுதான் ஒருத்தருடைய சுறுசுறுப்புக்கு ஆதாரம். சிலர் கூறுவார்கள் நீ சின்ன பையன், இள இரத்தம். இரத்தம் சூடாக இருக்கிறது. அதனால் தான் நீ வேகமாக இருக்கிறாய். அமைதியாக இரு என்று கூறுவார்கள். நமக்கு 80 வயது 100 வயது ஆனாலும் இரத்தத்தை சூடாக வைத்திருப்பது எப்படி என்ற இரகசிய வித்தை தெரிந்திருந்தால் 100 வயதிலும் நாம் குழந்தையைப் போல சுறுசுறுப்பாக…

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 10

நாம் உடலில் எந்த அசைவும் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் உடல் முழுவதும் கொப்பளங்களும் புண்களும் வரும். உடலில் அசைவுகள் இருக்க வேண்டும் நாம் உழைக்க வேண்டும். உழைப்பு என்ற இயக்கம் இரத்தத்திற்கு உஷ்ணத்தைக் கொடுக்கிறது. நாம் குழந்தையாக இருக்கும் போது ஏன் ஒரு இடத்தில் அமராமல் துரு துரு’ வென ஏதாவதுஒரு வேலையை செய்து கொண்டேயிருக்கிறோம்.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 9

நெருப்பு [உழைப்பு] இரத்தத்திற்கு சூடு தேவைப்படுகிறது. இரத்தம் சூடாக இருந்தால் தான் வீரியம். நாம் கை, கால் அசைப்பதன் மூலமாக உடலில் உள்ள தசைகளுக்கும் எலும்புகளுக்கும் அசைவுகள் என்ற உடல் உழைப்பைக் கொடுப்பது மூலமாக அது இயக்க சக்தியாக மாறி வெப்பசக்தியாக மாறி இரத்தத்தில் கலக்கிறது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 8

அதே போல் ஆகாய சக்தி என்ற காலியிடம் இரத்தத்தில் இருக்கிறது. இது குறையும் பொழுது நமக்கு தூக்கம் வரும். தூங்கினால் இது அதிகரிக்கும். அதிகரித்தால் நமக்கு சக்தி கிடைக்கும். எனவே தூக்கமும் ஒரு மருந்து. தூங்காமல் உலகத்தில் யாரும் உயிரோடு இருக்க முடியாது. எனவே தூக்கத்தின் மூலமாகஇரத்தத்திற்கு ஆகாய சக்தி என்கிற சக்தி கிடைக்கிறது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 7

.4. ஆகாயம் [தூக்கம்] நான்கு நாள் தூங்காமல் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியுமா? எனவே தூக்கமும் ஒரு மருந்து. தூக்கத்தின் மூலமாக ஆகாய சக்தி எனப்படும் காலியிடம் இரத்தத்தில் கலக்கிறது. உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களிலும் காலி இடம் இருக்கும். இரும்பில் கூட காலியிடம் இருக்கும். ஆனால் அது கண்ணுக்குத் தெரியாது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 6

நீர் நாம் குடிக்கும் நீரில் உள்ள சத்துப் பொருள்கள் சிறுநீரகம் பிரித்து இரத்தத்தில் கலக்கிறது. இவை நீர் சம்பந்தப்பட்ட பொருள்கள் என்று பெயர். எனவே குடிக்கும் தண்ணீரின் மூலமாக இரத்தத்தில் நீர் சம்பந்தப்பட்ட பொருள்கள் கலக்கின்றன. தண்ணீர் குடிக்காமல் நாம் உயிர் வாழ முடியுமா எனவே தண்ணீரும் மருந்துதான் அதைப் பற்றியும் யோசிக்க வேண்டும்

சுந்தர யோக சிகிச்சை முறை 137

எவ்விதத் தொந்தரவும் அற்றவை இவ்விலங்குகள். இதைக் காட்டிலும் கிராமங்களிலும், சுதந்திரமாய் வாழும் நகர, நாகரீகமற்ற மக்களும் தடைகளின்றி இந்த இயற்கைக் கடனை முடிக்கிறார்கள். இவர்கள் டாக்டர்களுக்கும் பேடண்ட் மருந்துகளுக்கும் கப்பம் கட்டுவதில்லை.

சுந்தர யோக சிகிச்சை முறை 136

காட்டில் வசிக்கும் மிருகங்களின் இயற்கை வாழ்க்கை மிகவும் உன்னத மாயிருக்கின்றது. மல உணர்ச்சி ஏற்பட்டதும் அதைக் கழித்து விடுகின்றன. பஜாரில் கக்கூஸ் இல்லையென்று அடக்க வேண்டுமா? ஆபீஸ் உத்தியோகத்தில் அவகாசமில்லையென்று புறக்கணிக்க வேண்டுமா? அல்லது சினிமாப் படம் தவறிவிடுமோ என்ற தயக்கமா?

சுந்தர யோக சிகிச்சை முறை 135

காட்டு மிருகங்களிடத்திலும், நாட்டு இனத்தினரிடத்திலும் இது தென்படுவதில்லை அனால் வெகு தாராளமாய் நாகரீக சமூகத்தில் நின்று வருகிறது. பெரு நகரங்களில் அடிக்கடி உண்டாகும் சீர்கேடே இது. அசையா மேஜையடி வாழ்க்கையும், தற்கால உணவு பழக்கங்களுமே, அதிகரித்து நிற்கும் மலச்சிக்கலுக்கு பெருத்த காரணங்கள், பெருங்குடலை அதிகமாய் உபயோகப்படுத்தாதற்கு அனுபவிக்கும் தண்டனைகளில் இது ஒன்று “.

சுந்தர யோக சிகிச்சை முறை 135

லக்ஹார்ட்மம்மரி ( LOCKHART MUMMERY ) என்ற நிபுணர் பெருவாரியாய் முறையிடுகிறார். “ CHRONIC CONSTIPATION, LIKE MANY OTHER COMPLAINTS OF THE PRESENT DAY, IS IN MOST CASES A RESULT OF MODERN CIVILISED LIFE – AMONG NATIVE RACES AND WILD ANIMALS, IT IS PRACTICALLY UNKNOWN, BUT IS ALL TOO COMMON IN CIVILISED COMMUNITIES, AND INDEED FORMS ONE OF THE…

சுந்தர யோக சிகிச்சை முறை 134

நாக்குத் தூண்ட ஆசை கெடுக்க, அவசியம். ஆரோக்கியம் என்ற யோசனையின்றி வயிற்றில் கொட்டினால் இவை வெளிச் செல்ல வேண்டுமே! மலமாகமாறி, தேங்கி, விஷம் கக்கிய பிறகு “ ஐயோ! இது அல்வாவாக அல்லவா” வாயில் நுழைந்தது! என்று முறையிட்டால், நோயும், சாவும் விலகி விடுமா? இம்மாதிரி இரைப்பைக்கு கொடுமை செய்வது மட்டுமல்ல, நாகரீக வாழ்க்கையில் மலத்தூண்டுதலைப் புறக்கணித்து, பெருங்குடலையும் கெடுக்கிறோம் என்ன விபரீதம்!

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 18

6 – க்குரியவர் 11 -இல் லக்கினாதிபதியுடன் சம்பந்தப்பட்டு அல்லது பார்வை பெற்று அல்லது சாரம் பெற்று இருப்பின்  எதிரி அதிகம் உண்டு. சத்துரு தனம் கிடைக்கும். நோய் இன்றி வாழ்ந்தாலும், மேற்படி தசாபுத்தி காலங்களில் ஆளை புடம்போட்டு, பல வித கெட்ட பெயர்கள் வாங்கித் தர வாய்ப்பு உண்டு. 10, 6, 12, 2 – இல் சூரியன், செவ்வாய், சனி, ராகு சேர்க்கை பார்வை இருப்பின் ஏவல், பில்லி சூன்யத்தால் பயம் ஏற்படும். 6,…

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 8

மருந்துகளால் ஏற்படும் புல்லரிப்பு… பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த புல்லரிப்பு தற்காலிகமானதாக இருக்கும். அவை சில விநாடிகளில் போய் விடும். அப்படி இல்லையென்றால் நீங்கள் எடுத்துக் கொள்ளும் கடுமையான மருந்துகளின் விளைவாகக் கூட இது ஏற்படலாம்.

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 7

ஆழ்ந்த உணர்ச்சிகள் நாம் சோகம், பயம், மகிழ்ச்சி அல்லது பாலியல் ஆசை போன்ற தீவிரமான உணர்ச்சிகளை அனுபவிக்கும் போது, உடல் இரண்டு வெவ்வேறு வழிகளில் அதை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, தோலின் கீழ் உள்ள தசைகளில் மின் செயல்பாடுகளில் அதிகரிப்பு ஏற்படும். இரண்டாவதாக, உங்கள் சுவாசம் கனமாகும். இந்த இரண்டு நிகழ்வுமே நமது தோலில் புல்லரிப்புகளை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் உணர்ச்சிப்பூர்வமான ஒரு படத்தைப் பார்க்கும் போதோ அல்லது உணர்ச்சிப்பூர்வமான சமூக தூண்டுதல்களைப் பார்ப்பது அல்லது உணர்ச்சிபூர்வமான ஒன்றைக்…

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 6

குளிரால் ஏற்படும் புல்லரிப்பு… நமது உடல் குளிர்ச்சியாக இருக்கும் போது அல்லது நாம் குளிரால் நடுங்கும் போது, மயிர்க்கால்களின் முடிவில் அமைந்துள்ள சிறிய தசைகள் சுருங்கி, முடி எழுந்து நிற்கும். புல்லரிப்பு ஏற்படும். இது ஏன் ஏற்படுகிறது என்றால் நமது மூளை உடலை சூடாக்குவதற்கு எதாவது செய்யுங்கள் என்று எச்சரிக்கிறது. உங்கள் உடம்பை சூடேற்றியதும் இந்த புல்லரிப்புகள் போய் விடும்.

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 5

நமது உடலில் உள்ள ஒவ்வொரு முடியின் வேரிலும் அரெக்டர் பில்லி என்று அழைக்கப்படும் ஒரு சிறிய தசை சூழ்ந்துள்ளது. இந்த சிறிய தசை இறுகும்போது, தோலில் சிறிய புடைப்புகள் தோன்றும். இந்த இறுக்கம் நாம் அதிக உணர்ச்சி வசப்படும் போது ஏற்படுகிறது. பிறகு உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக தளரும் போது புடைப்புகள் மறைந்து விடுகின்றன.

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 4

இந்த புல்லரிப்புக்கும் நம் உணர்ச்சிக்கும் இடையே ஏகப்பட்ட சம்பந்தங்கள் உள்ளன. ஆழ்ந்த உணர்ச்சி அனுபவங்களை அனுபவிக்கும் போது இந்த மாதிரி ஏற்படுகிறது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்த புல்லரிப்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் ஏற்படுகின்றன. குறிப்பாக நாய்கள், குரங்குகள் மற்றும் முள்ளம் பன்றிகள் இந்த தோல் புல்லரிப்பை பெறுகின்றன. சரி  இது எப்படி ஏற்படுகிறது, நம் உடல் இதற்கு எப்படி மாற்றம் அடைகிறது என்பதை பார்ப்போம்.

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 3

பைலோரெக்ஷன், க்யூட்டிஸ் அன்செரினா மற்றும் ஹார்பிபிலேஷன் என்றும் மருத்துவ ரீதியாக இதற்கு பெயரிடுகின்றனர். பயம், மகிழ்ச்சி, குளிர், சோகம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு ஆகியவற்றின் தீவிர உணர்வை நீங்கள் அனுபவிக்கும் போது இந்த மாதிரியான புல்லரிப்பு புடைப்புகளை பெறுவோம். சில நேரங்களில் இது எந்த காரணமும் இல்லாமல் கூட நிகழலாம்.

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா 2

நீங்கள் குளிர்ச்சியாக உணரும்போது, நீங்கள் பயப்படும் போது அல்லது நீங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கும் போது இந்த மாதிரியான புல்லரிப்பை பெறுவீர்கள். அப்படியே தோல் சிலிர்த்துக் கொண்டு சிறிய சிறிய புடைப்புகள் தோன்றும். பார்ப்பதற்கு இறகுகள் நீக்கிய கோழியின் தோல் போன்று இருக்கும். இதை கூஸ்பம்ப்ஸ் என்று அழைக்கின்றனர். இந்த புல்லரிப்பு பொதுவாக கைகளின் கீழ்ப்பகுதியில் ஏற்படக் கூடும்.

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா1 .

நம் உடலே ஒரு அதிசயம் என்று சொல்லலாம். ஆமாங்க தினம் தினம் நம் உடலில் ஏகப்பட்ட மாற்றங்களும் ஆச்சர்யங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கோடிக்கணக்கான பழைய செல்கள் அழிகின்றன, புதுப்பிக்கப்படுகின்றன, மில்லியன் கணக்கான நரம்புகள் வேலைகள் செய்கின்றன இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி ஆச்சர்யமான ஒரு விஷயம் தான் நமக்கு புல்லரிப்பது.

காத்திருக்கப் பழகு 6

எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே. உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா……??? நீ இதற்கெல்லாம் காத்திருந்தால் உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும். காத்திருக்கப் பழகினால்…….. வாழப் பழகுவாய். இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்ப  காத்திருப்பதை உணர்வாய் எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை உணர்வாய் … !!!

காத்திருக்கப் பழகு 5

உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால், உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது. உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது

காத்திருக்கப் பழகு !4

உணவு தயாராகும் வரை காத்திரு போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு பிறர் கோபம் தணியும் வரை காத்திரு

காத்திருக்கப் பழகு 3

செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு

காத்திருக்கப் பழகு  2

உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு பயிர் விளையும் வரை காத்திரு உலையில் அரிசி வேகும் வரை காத்திரு காய் கனியும் வரை காத்திரு எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு. செடி மரமாகும் வரை காத்திரு

காத்திருக்கப் பழகு 1

சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில் தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்: தியானம் செய்… !!! நான் அழைக்கும் வரை காத்திரு’. நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும். பசிக்கும் வரை காத்திரு உடல் நீர் கேட்கும் வரை காத்திரு காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு சளி வெளியேறும் வரை காத்திரு

உரையாடலில்l ஒரு பகுதி 67

எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ள நிதானம் வேண்டும். ஆற்றல் வேண்டும் அவகாசம் வேண்டும். இதனுடன் செயல்படும் போது அனுபவம் வரும் அந்த அனுபவமும் வேண்டும். இது எல்லாவற்றையும் விட புரிந்து கொள்ள வேண்டும் என்கிற தீராத ஆசை வேண்டும். இதெல்லாம் இருந்தால் மட்டுமே பெண்ணை புரிந்து கொள்ள முடியும் அப்பவும் முழுமையாய் அல்ல எனக்கென்னவோ தோன்றுகிறது இங்கு உள்ள ஜீவ ராசிகளை முழுவதுமாய் தெரிந்து கொள்ள முடியாது என்று.

உரையாடலில்l ஒரு பகுதி 66

 பெண்ணின் மனதில் இடம் பிடிப்பது என்பது மிக பெரிய விஷயம். அத்தனை சுலபத்தில் கைகூடாது அதனால் தான் தகுதியுள்ளவனுக்கே திருமணம் என்று இருந்தது தகுதியை நிரூபிப்பது இப்போது திருமணத்தில் மட்டுமல்ல எந்த துறையிலுமே இல்லையென்பது தான் தற்கால நிதர்சனம். ஒரு விதத்தில் யோசித்தால் பெண் மலிவாகிவிட்டாளோ என்ற தோன்றுகிறது.

உரையாடலில்l ஒரு பகுதி 65

ஒரு காலத்தில் அவதாரங்களுக்கு கூட பெண்ணிடம் தன்னை நிரூபிக்க தன் தகுதியை, தன் திறமையை வெளிகாட்ட வேண்டியிருந்தது வேறு ஒன்றுமில்லை ராமனைத் தான் சொல்கிறேன். சீதையை மணமுடிக்க வில் ஒடித்து தன்னை நிரூபிக்க வேண்டி வந்தது. காலங்கள் செல்ல, செல்ல கல் தூக்குவது, காளையை அடக்குவது என்று வந்தது. மாயாஜால கதைகளில் ஏழுமலை, ஏழு கடல் தாண்ட வேண்டியிருந்தது. இப்படி எல்லாம் தன்னை நிரூபித்தாலே திருமணம் காரணம் வேறு ஒன்றுமில்லை. 

மனிதர்களுடைய ஒட்டம்

மனிதர்களுடைய ஒட்டம் எதை நோக்கி ஒரே வார்த்தையில் சொல்வதனால் இறப்பை நோக்கி நிலை இப்படி இருக்க பெருமை பேச பெருமைபட என்ன இருக்கிறது. என்ன செய்தாலும் முடிவு மரணம் என்பதை தெரிந்து, புரிந்து கொண்டவனுக்கு வியாதிகளும், முதுமையும் மனிதனை வேட்டையாடுவதை புரிந்து கொள்ள முடியும். அப்படி புரிந்து கொண்டவன் வெற்றி எனும் போதைக்கு அடிமையாகாமல் திருப்தி எனும் வஸ்துக்குள் நுழைய ஆயத்தமாகிறான் அதாவது எதனோடும் ஒட்டாது ஆனால் ஒட்டி என்ற நிலையை நோக்கி நகர்ந்து விடுகிறான்.

மது அருந்த

மது அருந்த கற்றுக்கொள் மது இறைவன் தந்த வரம் புரியாமல் இருக்காதே மதுவுக்கு மரியாதை கொடு அதை ஒரு பிரசாதம் போல் நிதானமாய் அனுபவித்து சாப்பிடு, உடம்பு பளப்பளப்பாகும்.  மனசு வீரியம் கொள்ளும்.  உன்னுடன் நீ பேசுவதும் உனக்கு புலப்படும். நீ அதை குடித்தால் தவறல்ல, அது உன்னை குடித்தால் அதைவிட பெரிய தவறு வேறு இல்லை. ஒரு வேளை கண்ணதாசன் இப்படித்தான் மது அருந்தி வரம் பெற்று இருப்பாரோ!