சுக்கிரன் 8

சுக்கிரன் 7ல் உள்ள ஜாதகருக்கு மனைவிக்கும் அப்பாற்பட்டு வேற்றுமாதர் தொடர்பு ஏற்படும். சுக்கிரனும், சந்திரனும் ஜாதகப்பொருத்தத்தைப் பார்க்கும்போது இரு ஜாதகங்களிலும் சஷ்டாஷ்டகமாக இருக்கக்கூடாது. சுக்கிரனுக்கு 10ல் சனி இருப்பின் திருட்டு சுகம் அனுபவிக்கும் இயல்பு உண்டு.

சுக்கிரன் 7

சுக்கிரன் களத்திரகாரகன், சனி,செவ்வாய், ராகு இவர்களுடன் சம்பந்தப்பட்டு 7ம் வீட்டோன் 5ல் இருந்தால் காதல் திருமணம் அமையும். சுக்கிரனது பலவீனமும், 7ம் வீட்டோனின் பலவீனமும் கொண்ட ஜாதகர், தன் மனைவியின் செயலால்தான் சம்பாதித்ததை எல்லாம் இழக்க நேரிடும். சுக்கிரனுடன் தொடர்பு கொண்ட சனி வலுத்திருந்தால் சனிதசையில் மாபெரும் செல்வமும், சுபிட்சமும் தொழில் மேன்மையும் ஏற்படும்.

சுக்கிரன் 6

சுக்ரன் பலமுடன் இருந்தால் லட்சுமீ பூஜை மூலமாக ஞானவொளி பிறக்கும். சுக்கிரன் லக்னத்தில் தனித்து நின்றால் இருதாரயோகம் ஏற்படலாம். சுக்கிரன் 10ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின், கலைத்துறையில், நாடகம், போன்றவற்றில் ஏற்பட வைப்பர்.

சப்த முனீஸ்வரர் 5

நாதமுனி : தேவகணங்களையும், பூதகணங்களையும் காத்து ரக்ஷிக்கும் தெய்வம் நாதமுனி. சப்தமுனிகளில் இன்று நமது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், சிவமுனியும், மஹாமுனியும் பலபெயர்களில் எல்லை காவல் தெய்வங்களாகவும் ஊர் தெய்வங்களாகவும் வழிபாடு செய்யப்படுகின்றன

சப்த முனீஸ்வரர் 4

தருமமுனி : தருமச் செயல்களை காத்து,தீய செயல்களை அழித்து காக்கும் தெய்வம் தருமமுனி. ஜடாமுனி : வனங்களை காப்பவர்,ருத்ராட்ச மாலைகள் அணிந்து இருப்பவர். நூல்கள் ஓலைச்சுவடிகளை படைத்து காக்கும் தெய்வம் ஜடாமுனி.  

சப்த முனீஸ்வரர் 3

வாழமுனி : வனங்களில் வசிக்கும் காபாலிகள் இனத்தவர் போற்றி வணங்கும் தெய்வமான வாழமுனி. தவமுனி : தேவர்கள்,ரிஷிகள்,யாத்திரீகர்கள் இவர்களின் வழியில் வரும் தீமைகள் விலக்கி காக்கும் தெய்வமாக தவமுனி.

சப்த முனீஸ்வரர் 2

மஹாமுனி : அளவில்லாத தெய்வ சக்தியையுடையதால் தீயவைகளை அழித்து காக்கும் மஹாசக்தியாக, தொழில் வளம் பெருக்கும் சக்தியாக மஹாமுனி விளங்குகிறார்.வியாபாரம், வாழ்வில் உள்ள தடைகளை விலக்கி, நம்பிக்கையோடு வேண்டுபவர்க்கு வேண்டுதலை நிறைவேற்றி தரும் மஹாமுனி ஆவார்.

சப்த முனீஸ்வரர்: 1

சிவமுனி : உலகம் காக்கும் பொருட்டு ,உலகில் நீதி வளம்,மழை,தொழில் செழிக்க, தீயசக்திகளை அழிக்க வீரபத்திரரின் அவதாரமாக சிவபெருமான் தன்னில் இருந்து சப்த முனிகளை தோற்றுவித்து அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி கட்டளை அருளி, உலக மக்களை காக்க படைத்தார். இவர்களில், சிவமுனி : சிவபெருமானின் முகத்தில் இருந்து தோன்றியதால் சிவாம்சம் பொருந்திய தெய்வமாக சிவமுனி .இவர் அபய மூர்த்தியாக வேண்டுதலை நிறைவேற்றி தருகிறார்.

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 17

7 – க்குரியவர் சாரம் பெற்று 8 – க்குரியவருடன் சேர்க்கை பெற்று 12 – இல் அமர்ந்தால், மனைவிக்கு நிரந்தர நோய்த்தொல்லை பீடிக்கும். இல்லறம் சோபிக்காது. மன அமைதி கெடும். சரிவர தூக்கம்வராது. 6 – இல் கேது 8 – க்குரியவர் சாரம் பெற்று, சாரநாதன் கேதுவுக்கு லாபம் பெற்று, கேதுவுக்கு நான்கு கேந்திரங்கலும் கிரகங்கள் நிற்கில், கேது தசாகாலம் மிகுந்த நல்ல பலனைக் கொடுக்கும். தொழில் பலம் ஏற்படும். 6 – க்குரியவர்…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 16

6 – இல் 8 – க்கரியவர் 3 – இல் கேது சாரம் பெற்று 9 – க்குரியவரால் பார்க்கப்பட்டால் நல்ல யோகம். இவர் தசையில் யோகம் தரும். இந்துடன் லக்கினாதிபதி லக்கினத்திற்கோ, சந்திரனுக்கு 11 – இல் இருப்பது மிக விசேஷம். சுக்கிரன் ( அ ) சனி இருவரில் ஒருவர் 6, 8, 12 – க்கு அதிபதியாகி 6, 8, 12 – ல் பரிவர்த்தனை பெற்றால், பெரும் ராஜயோகம் தரும்.…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 15

2 – ல் ராகு, சனி, சந்திரன், சுக்கிரம் சேர்க்கை ஈனஸ்திரீகளால் கடன் ஏற்படும். 9 – இல் ராகு, 6 – க்குரியவர் சேர்க்கை பெற்று இருப்பின் விபசாரிகளால் கடன் ஏற்படும். 3 – க்குரியவர் நீச்சம் பெற்று, சனியால் பார்க்கப்பட்டு, 6 – க்குரியவர், 3 – க்குரியவர் சாரம் பெற்று, 8 – க்குரியவரால் பார்க்கப்பட்டால் 6 – க்குரியவர் திசையில் வாத ரோகத்தால் பீடிக்கப்பட்டு பல வருடம் கழித்து ரோகம் நிவர்த்தியாகும்.

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 14

2 – இல் பாவர், 10 – இல் பாவர் சுபர் சம்பாதிக்கும் பணத்தில் 25 சதவீதம் வீட்டிற்கு வரும். மீதி எல்லாம் கடன் விழுங்கும். 11, 12 – க்குடையவர் சேர்க்கை 12 – இல் ராகுவுடன் சம்பந்தப்பட்டால் விபசாரிகளால் கடன் ஏற்படும். 5, 9 – இல் குரு இருப்பின் சாப்பட்டு வகை, விருந்தினர் உபசாரம் சுப செலவுகளால் கடன் ஏற்படும். யாத்திரை வகை, புத்திர புத்திர வகை குடும்பச் செலவு இவைகளால் கடன்…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 13

புதன், சனி சேர்க்கை, வாத ரோகத்தால் தொல்லை தரும். எங்கு இருப்பினும் இந்நோய் வர வாய்ப்பு உண்டு. 4, 5, 8,12 – ல் சுபர் சம்பந்தம் பெற்றால் இவர்கள் தசாபுத்தியில் கடன் தீரும். 2, 10, 11 – இல் பாவர் இருந்து பாவர் பார்த்தால், இவர்கள் தசாபுத்தி அந்திரங்களில் கடன் தொல்லை பொறுக்க முடியாது.

வித்தியாசமான கணக்குகள் 3 பெருக்கல்:

பெருக்கல்: மனிதன் × தன்னம்பிக்கை = சாதனை மனிதன் × கவலை = தற்கொலை மனிதன் × ஆனந்தம் = ஆயுள் விருத்தி மனிதன் × இயலாமை = அவதி மனிதன் × அன்பு = மனிதாபிமானம் மனிதன் × ஆசை = வக்கிரம்

வித்தியாசமான கணக்குகள் 2 கழித்தல்:

மனிதன் – தன்னம்பிக்கை= தோல்வி மனிதன் – கவலை = உற்சாகம் மனிதன் – ஆனந்தம் = சோம்பல் மனிதன் – இயலாமை = முயற்சி மனிதன் – அன்பு = குரோதம் மனிதன் – ஆசை = அமைதி

வித்தியாசமான கணக்குகள் 1 கூட்டல்:

கூட்டல்: மனிதன்+தன்னம்பிக்கை = வெற்றி மனிதன்+கவலை = கண்ணீர் மனிதன்+ஆனந்தம் = புன்னகை மனிதன்+இயலாமை = கோபம் மனிதன்+அன்பு = காதல் மனிதன்+ஆசை=காமம்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 49

தற்கால விஞ்ஞானத்தின் முடிவுகள் வேதாந்திகள் அல்லது இந்துக்களின் மதத்தோடுதான் இயைபாகப் பொருந்துவதாகத் தோன்றுகிறது. இன்றைய விஞ்ஞானம் தன் முடிவுகளை வைத்துக்கொண்டு, அதே நேரத்தில் வேதாந்தத்தின் முடிவுகளின் வாயிலாக ஆன்மீகத்தையும் நாடலாம் என்றே தோன்றுகிறது. இன்றைய விஞ்ஞானத்தின் முடிவுகள் நெடுங்காலத்திற்க்கு முன் வேதாந்தம் கண்ட முடிவே என்றுதான், நமக்கு மட்டுமல்லாமல் ஆராய்ச்சியில் விருப்பம் உள்ள அனைவருக்கும் தோன்றுகிறது. ஒரு வித்தியாசம் என்னவென்றால், இன்றைய விஞ்ஞானம் தூல மொழியில் எழுதப்பட்டுள்ளது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 48

இந்துக்கள் அகவுலகத்தை ஆராய்வதன் மூலம் பயணத்தை தொடங்கினார், கிரேக்கர்கள் புறவுலகத்தை ஆராய்வதன் மூலம், அப்பாலுள்ள அந்த லட்சியத்தை நோக்கித் தங்கள் பயணத்தைக் தொடங்கினர். மனங்களின் பயண வரலாறுகள் எவ்வளவோ வேறுபாடுகளை உடையதாக இருந்தாலும், அந்த இரண்டு வகையான சிந்தனை அலைகளும் அப்பாலுள்ள அந்த இரண்டு வகையான சிந்தனை அலைகளும் அப்பாலுள்ள அந்த லட்சியத்தின் ஒரே மாதிரியான எதிரொலிகளையே எழுப்புகின்றன; இதனை நாம் எளிதாக அறிய முடிகிறது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 47

உலகத்தின் கவனத்திற்கு வேதாந்தம் விடுக்கின்ற இரண்டாவது கருத்து; உலக சாஸ்திரங்கள் அனைத்திலும் வேதாந்த போதனைகள் மட்டுமே, இக்கால விஞ்ஞானத்தின் புறவுலக ஆராய்ச்சி முடிவுகளோடு முழுக்கமுழுக்க இயைபு உடையதாக உள்ளது. அடிப்படை, பரஸ்பரத் தொடர்பு, மற்றும் உறவு இவற்றைப் பொறுத்தவரை ஒரே மூலத்தைக் கொண்டு இரண்டு மனங்கள் வரலாற்றின் மங்கலான கடந்தகாலத்தில் வெவ்வேறு பாதைகளில் புறப்பட்டன. ஒன்று புராதனமான இந்து மனம், மற்றொன்று புராதனமான கிரேக்க மனம்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 46

ஓர் ஆச்சரியகரமான உண்மை என்னவென்றால் நமது அவதார புருஷர்களின் மதிப்பெல்லாம் அவர்களின் வாழ்க்கை வேத உண்மைகளுக்கு விளக்கமாக அமையும் போது மட்டுமே. ஸ்ரீகிருஷ்ணரின் பெருமை யெல்லாம், அவர் நமது சனாதன தர்மத்தின் கொள்கைகளை மிகச் சிறப்பாகப் போதித்தவர் என்பதிலும், இந்தியாவில் இதுவரை வாழ்ந்த வேதாந்த ஆச்சாரியர்களுள் மிகச் சிறந்தவர் என்பதிலும் தான் இருக்கிறது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 45

இஷ்ட தெய்வக் கொள்கை இருக்கிறதே, அது அற்புதமானது. உங்களுக்கு உகந்த மகான்களை நீங்கள் தேர்ந்துதெடுத்துக் கொள்வதற்க்கு முழுமையான சுதந்திரத்தைக் இது அளிக்கிறது. இவர்களுள் எந்த மகானையோ ஆச்சாரியரையோ உங்கள் வழிக்காட்டியாக, வழிபாட்டிற்கு உரியவராக நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம், அது மட்டுமல்ல, நீங்கள் தேர்ந்தெடுப்பவரே மகான்களுள் மிக மேலானவர், அவதாரபுருஷர்கள் மிக உயர்ந்தவர் என்று நினைக்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதில் தவறில்லை. ஆனால் அதற்குப் பின்னணியாக உறுதியான, நிரந்தரமான தத்துவ உண்மைகள் இருக்க வேண்டும்.

நாகரீக வாழ்க்கையின் கேடு

மலச்சிக்கல் வருவானேன்? உண்பது எளிதாயிருப்பது போல் மலக்கழிவும் சாதாரணமாய் ஏன் நடக்கக்கூடாது? சுலபமாய் இஷ்டம் போல் வாயில் பொருள்களைக் கொட்டிவிடுகிறோம். இவ்வளவு சுலபமாக மலத்தையும் கழிக்கச் சக்தியில்லையா?

சுந்தர யோக சிகிச்சை முறை 132

இப்பெருங்குடலை இரண்டு, மூன்று, நான்காவது சேக்ரல் நரம்புகள் ( SECRAL NERVES ) ஆளுகின்றன இடுப்புக்கிரந்திகள் வழியாக “ ஸிம்ப தெடிக் “ கும் (SYMPATHETIC SYSTEM ) வேலை செய்கின்றது. இந்நரம்புகள் எல்லாம் மிகப் பொடி நரம்புகளாக மலப்போக்குக் குழாய்  மேல் முடிகின்றன. இவைகளில் தான் முக்கிய செயல் சக்தியுண்டு.

சுந்தர யோக சிகிச்சை முறை 131

போக்கு உணர்ச்சி மலம் வெளித் தள்ளப்படத் தயாராகி கடைசி இடத்திற்கு வந்தவுடன் மலப்போக்கு உணர்ச்சி உண்டாகிறது.   மலம் அங்குள்ள நரம்பு முனைகளைத் தூண்டி உணர்ச்சி தருகிறது. பல காரணங்களால் இதை அலட்சியம் செய்கிறோம். பல தடைவைகள் தந்தியடித்து பதில் வராமலிருக்கவே நரம்புகள் வேலை நிறுத்தம் செய்கின்றன. மறுபடியும் உணர்ச்சி வருவதில்லை, மலமும் வெளிப்போவதில்லை. சிக்கல், நிலை உண்டாகிறது.

சுந்தர யோக சிகிச்சை முறை 130

ஆரோக்கிய காலங்களில் இச்சலனங்கள் நடக்கின்றன. நோயில் இவைகள் தடைபெறவே உள்ளிருக்கும் சாமான்கள் அழுகி, விஷங்களைக் கக்கி, அபாயத்திற்கிடமாகின்றன.  சிறுகுடல் சீகம் மூடி( LLEO CAECAL VALVE ) யிலிருந்து ரெக்டத்திற்குவர சுமார் ஆறு மணி நேரம் பிடிக்கும். இங்கு வந்த பிறகு, சில மணி நேரம் தங்கியே ரெக்டத்திற்குள் செல்லுகின்றது. இங்கு அதிகச் சரக்கு சேரவே, இங்குள்ள  காலன் ம‍டிப்பு உயர்ந்து ரெக்டத்திற்குள் தள்ளி, மலத்தை வெளியேற்றுகிறது இந்த வேலைக்கு டயாப்ரமும் வயிற்றுச் சதைகளும் தேவையான இறுக்கத்தால்…

சுந்தர யோக சிகிச்சை முறை 129

ஆறில் ஒரு பங்கு ஜீரணத்தை உள்ளிழுக்கும் வேலை சீகத்திலும் “ ஏறு காலனி “ லும், நடக்க வேண்டும்.  அதற்காகவே இப்பாகங்களுக்கு மட்டும் இவ்வளவு சலனங்களுமுண்டு.   இக் “ காலனில் “ இதர பாகங்களுக்குத் தள்ளும் ( PERISTALSIS ) சக்தி மட்டும் தான் உண்டு.