சுந்தர யோக சிகிச்சை முறை 99
விந்து நோய்கள் ஆண்மை அழியும், இதற்கும் பரிகாரம் விளம்பரத்தில் மட்டும் தானுண்டு மருந்துகளெல்லாம் ஏமாற்றமே மிகக் கெடாதவர், இயற்கை தர்மத்தால் ஒரு வேளை முன்னேறலாம். வெளிப்படையாக அறிய முடியாத கொடிய தன்மை கொண்டவை இவை. மலட்டுத் தனம் பெண் மலட்டுக்கு மருந்து ஏது? பெண்மலடு நீங்க ரண சிகிச்சை செய்து புண்ணாக்குகிறார்கள். குறை நீங்கியவர் இல்லை. ஆயுர் வேத முறையில் மிகச் சிலருக்குப் பலன் கிடைத்ததாகச் சொல்லுகிறார்கள். மூலம் இதை அறுத்துத் தள்ளுகிறார்கள். இராவணன் தலை போல்…