மனிதன் இன்றைய கால கட்டத்தில் 19

அந்த குழந்தையிடம் தயை, இரக்கம், பாசம், நேசம் போன்றவை இருக்குமா?  இவையெல்லாம் அன்பின் ஆணி வேர்கள் அல்லவா இப்போதைய சமுதாய ஆட்சியாளர்கள் இதை விரும்புவது இல்லை முன்னதை மட்டுமே விரும்புவதால் சமுதாயம் எப்போதும் மாறப்போவதில்லை.   

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 18

மூன்று வயது வரை அன்பாய் வளர்த்துவிட்டு அவர்களை தூக்கி யாருக்கோ உழைக்க தேவையான கருவியாக மாற்றும் பணியாளர்களிடம்(அதாவது பள்ளி கூடங்களில் ) தூக்கி போட்டு விடுகிறீர்கள் இதைத்தான் நீங்கள் அன்பு என்கிறீர்கள். வேகமும், போட்டியும் இருந்தால் அங்கு வெறுப்பும் விரோதமும், வன்முறையும் இருக்கும். இவையெல்லாம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்குமா? இந்த சூழலில் பயிற்றுவிக்கப் பட்டு, வளர்ந்த குழந்தை அன்போடு இருக்குமா?

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 17

உயர்திரு. J.K. அன்பைப் பற்றி பேசும் போது இப்படி ஒரு வினாவை நம் முன் வைக்கிறார்.  அதாவது நீங்கள் உங்கள் பிள்ளைகளின் மீது அன்பு செலுத்தினால் செலுத்தியிருந்தால் அவர்களை போருக்கு அனுப்புவீர்களா இது மட்டுமல்ல அவர் கேட்பது தொழில் நுட்பத்தை மட்டும் கற்றுக்கொண்டு பொருளாதாரத்திற்காக ஒரு பணியில் அமரவும் ஒரு சில பரிட்சைகளில் தேறவும் மாத்திரம் கற்பித்து விட்டு இந்த அருமையான வாழ்க்கையின் மீதி பகுதிகளை கவனிக்காமல் விட்டு விடும் கல்வியை அவர்களுக்கு தருவீர்களா?

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 16

அது உங்களுக்கு தரும் இன்பத்தினால் அதனுடன் தோழமை உணர்வு ஏற்படுகின்றது அந்த தோழமை உணர்வில் சிறிது மாற்றம் ஏற்படும் போது கூட உங்களால் தாங்க முடிவதில்லை உடனே அந்த இடத்தில் கோபம், வெறுப்பு வன்மம், பொறாமை போன்றவை வந்து விடுகிறது. அப்போது நாம் நினைத்துக் கொள்ளவேண்டியது ஒன்றே ஒன்றுதான் அது. அன்பிற்கு இத்தனை முகங்களா என்றுதான்.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 15

அன்பு செலுத்துவது என்றால் என்னவென்று நாம் அறிந்துள்ளோமா நமது அகாரதியின் படி அன்பு செலுத்துதல் என்பது அன்பாயிருத்தல் என்பது இன்பம், விருப்பு, அக்கறை இதன் கலவையையே அன்பு என்று புரிந்து கொண்டிருக்கிறோம்.   உண்மைநிலை என்வென்றால் ஒவ்வொருவரும் தன்னுள் பிளவு பட்ட தனிமையில் இருப்பதால், தனிமை தரும் வலியில், வேதனையில், துக்கத்தில், துயரத்தில், இருந்து தப்பிக்க நாம் ஒன்றை சார்ந்து நிற்கின்றோம். அப்படி சார்ந்து நிற்கும் போது அது தனி‍மையை விரட்டி விடுகிறது அதனால் நீங்கள் இன்பம் காணுகிறீர்கள்.

 மனிதன் இன்றைய கால கட்டத்தில் 14

நம் கடவுளிடம் அன்பு செலுத்தும் போதே பிறர் கடவுளை வெறுப்போம் நம் நாட்டிடம் அன்பு செலுத்தும் போதே பிறர் நாட்டை வெறுப்போம் அது மட்டுமல்ல உச்சபட்ச அன்பின் வெளிப்பாடே காமத்தின் தலைவாசல் சரி இது இதோடு நிற்கட்டும்.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 13

இந்த அன்பு என்பது மிகவும் வினோதமானது, விசித்திரமானது உண்மையில் அன்பில் வினோதமும், விசித்திரமும் ஏதும் இல்லை. நாம் அன்பை புரிந்து கொண்டதில் தான் இத்தனை வினோதங்களும் விசித்திரங்களும் உள்ளது.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 12

உண்மையில் அன்பு என்றால் என்ன கடவுள் மீது அன்பு, பெற்றோர் மீது அன்பு, உறவினர், நண்பர்கள் மீது அன்பு, கணவன், மனைவி, காதலன், காதலி , நாடு, தேசம் இவற்றின் மீதெல்லாம் அன்பு என்று பேசுவோம். பேசிக்கொண்டிருப்போம் ஆனால் துர் அதிர்ஷ்டவசமாக அந்த அன்போடு கூட வெறுப்பும் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்களா அப்படி கண்டுபிடித்திருந்தீர்களானால் நீங்கள் உங்களை அறிய, உணர தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 11

எப்போதாவது இதை உணர்ந்திருக்கிறீர்களா கொஞ்சம் உங்களை உற்றுப் பார்த்திருந்தீர்கள் என்றால் நீங்கள் அதை உணர்ந்திருப்பீர்கள்.  நாம் நிறைய அன்பைப் பற்றி பேசுகிறோம். போதிக்கிறோம் அது நல்லது என்றும் இறைவனுக்கு பிடித்தது என்றெல்லாம் நாம் போசுகிறோம்.

 மனிதன் இன்றைய கால கட்டத்தில் 10

நிலை இப்படி இருக்க சமுதாய மாறுதல், சமுதாய புரட்சி வேண்டும் என்று கேட்பதிலோ, கூக்குரல் இடுவதிலோ என்ன பயன் விளையகூடும் அதனால் தனிமனித மாறுதல் நிலையே சமுதாய மாறுதல் ஆகும். உறவை உறவாக புரிந்து கொண்டால் மட்டுமே சாத்தியம் மற்ற எந்த வழியும் இல்லை.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 9

சில பல தேவைகள் ஆசைகளுக்காக உறவு என்ற ஒன்றை பயன்படுத்திக் கொண்டிருப்பது நமக்கு புரியும்.  எந்தவித உறவும் இல்லாமல் உறவோடு இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பது தான் மனித குலத்தின் அறியாமை அல்லது மனித குலத்தின் சாபம் எதார்த்தமான அன்பும் இய்லபான நேசமும் இல்லாத நிலைகளில் உறவுகளை ஒவ்வொருவரும் கையாண்டு கொண்டிருக்கிறோம் இது தனிமனிதனில் தொடங்கி சமுதாயம் வரை பரவிவிட்டது

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 8

எப்படியென்றால் அவரவர்களுக்கு உண்டான குறிக்கோள்கள் பயங்கள், ஆசைகள் என்று தனிமைப்பட்டே வாழ்கின்றனர். அந்த தனிமையே ஒவ்வொருவருக்கும் பயத்தையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தந்து கொண்டிருக்கிறது.  ஒரே வீட்டில் 10 பேர்  உறவின் அடிப்படையில் இணைந்து இருந்தாலும் ஒவ்வொருவரும் தனி தனியே தான் வாழ்கின்றனர்.  இதில் உள்ள அர்த்தம் புரியும் போது நமக்கே நம் மேல் வெறுப்பு வரும்

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 7

நாம் இங்கு முக்கியமாய் கவனித்து அறிந்து கொள்ளவேண்டியது. ஒவ்வொருவரும் குடும்பங்களாக அதாவது தாய், தந்தை, குழந்தைகள் அண்ணன், தம்பி, கணவன், மனைவி, காதலன், காதலி என்று சார்ந்து இருந்து நாங்கள் ஒன்று என்று சொல்லிக்கொண்டாலும், ஒவ்வொருவரும் தனிமைப்பட்டே வாழ்கின்றனர்

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 6

 சார்ந்திருத்தலால் எதைப்பற்றியும் சுயமாக பார்க்கும் தன்மையிழந்து விடுகிறது. அதன் மூலம் ஒரு சார்பாகவே சிந்திக்க தோன்றுகிறது அதனால் உண்மைநிலையை உணர முடிவதில்லை. இதுவே வாழ்வின் எல்லா சோகங்களுக்கும், திருப்தியின்மைக்கும், அஸ்திவாரம் ஆகிவிடுகிறது.

மனிதன் இன்றைய கால கட்டத்தில் 5

ஒருவரை சார்ந்திருக்கும் போது அது உறவுகளால் பலப்படுத்தப்படுகிறது.  அங்கு உண்மையில் நிகழ்வது என்ன என்று கவனித்தால் தெரியும் விஷயம் இதுதான் அதாவது சார்ந்திருத்தல் பாதுகாப்பு உணர்வை தருவது போல் தோன்றினாலும் அதன் அடியில் பயமே உள்ளது பயம் எப்போதும் நன்மையை செய்யாது.

எதிர்பாராத சந்தோஷம்

எதிர்பாராத சந்தோஷம் கிடைக்கும்போது நாம் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம்! இதுபோலவே எதிர்பாராத சந்தோஷத்தை நாம் யாருக்காவது உருவாக்கி தருகிறோமா

எது பலம்

ஒருநாள் சாவியைப்பார்த்து, சுத்தியல் கேட்டது. உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே அதெப்படி?” அதற்கு சாவி சொன்னது. “நீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்” என்றதாம்.

நாம் சாப்பிடும் போது

நாம் சாப்பிடும் போது தலைக்குனிந்து சாப்பிடுகிறோம்.. காரணம் : இந்த உணவைத் தந்த பூமிக்கு நன்றி தெரிவிக்க. தண்ணீர் குடிக்கும் போது மேல் நோக்கி தண்ணீர் குடிக்கின்றோம்.. காரணம் : தண்ணீரை தந்த ஆகாயத்திற்க்கு நன்றி தெரிவிக்க. ஆனால் சரக்குஅடிக்கும் போது மட்டும் கண்களை மூடிக்கொள்கிறோமே ஏன்??? காரணம் : ஒருநாள் அதனால்தான் கண்கள் இரண்டும் மூட போகின்றது என்பதை தெரிவிக்க

காலாங்கி நாதரின் ஜீவ சமாதி

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன்புறம் தீர்த்தக்குளம் அருகே கொண்டுள்ளார் இடபேஸ்வரர் . இதுதான் காலாங்கி நாதர் ஒளி ஐக்கியம் பொருந்திய இடமாகும் .. எதிரே கரூரார் சித்தரின் படம் மாட்டப் பட்டுள்ளது காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அன்னதானம் வழங்கும் இடத்தின் அருகே காலாங்கி நாதர் சமாதி பீடம் உள்ளது

மனித முக விநாயகர்:

திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் அருகே  உள்ளது முக்தீஸ்வரர் ஆலயம். இந்த கோயிலில் அருள்பாலிக்கும் விநாயக பெருமான் மனித முகத்துடன் ஆதி விநாயகர் என்ற பெயரில் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார்.

எனது போர் முறை 9

சென்னை நண்பர்கள் சிலரின் உதவியால் நான் அமெரிக்கா சென்றது உங்களுக்குத் தெரியும். அவர்களுள் பெரும்பாலோர் இங்கே உள்ளார்கள். நான் மிகுந்த நன்றிக் கடன்பட்டிருக்கும் நீதிபதி திரு. சுப்பிரமணிய ஐயர் மட்டும் இல்லை. ஒரு மேதையின் உள்ளுணர்வு பெற்றவர் அவர், எனது மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவர், ஓர் உண்மை நண்பர், இந்தியாவின் உண்மையான ஒரு குடிமகன்.

எனது போர் முறை 8

வசதியற்ற,யாருக்கும் தெரியாத, நண்பர்களோ அறிமுகமோ இல்லாத ஒரு சன்னியாசியாக, கடல் கடந்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்றேன். அங்கே சென்று தியாசபிக் சொசைட்டியின் தலைவரைச் சந்தித்தேன். அவர் ஓர் அமெரிக்கர், இந்தியாவை நேசிப்பவர். ஒரு வேளை அவர் அங்குள்ள யாருக்காவது ஓர் அறிமுகக் கடிதம் தருவார் என எண்ணினேன். அவரோ என்னிடம், நீங்கள் எங்கள் சொசைட்டியில் சேர்வீர்களா? என்று கேட்டார். முடியாது, எப்படி முடியும்? உங்கள் கொள்கைகளுள் பெரும்பாலானவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை என்றேன் நான் இதைக்…

எனது போர் முறை 7

இந்துக்கள் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்ய முயன்றால், இந்தக் கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு வந்த துன்பம் என்ன? இந்துக்கள் தங்களையே சீர்திருத்திக் கொள்வதில் முனைந்து ஈடுபட்டால் பிரம்ம சமாஜத் தினருக்கும் மற்ற சீர்திருத்த அமைப்புகளுக்கும் நேர்ந்த தொல்லைதான் என்ன? அவர்கள் ஏன் எதிராக நிற்க வேண்டும்? அவர்கள் ஏன் இந்த இயக்கங்களின் மிகப் பெரிய பகைவர்களாக வேண்டும்? நான் கேட்கிறேன், ஏன்? ஏன் என்றோ, எப்படியென்றோ கேட்கப்படக் கூடாத அளவிற்கு அவர்களது வெறுப்பும் பொறாமையும் கடுமையாக இருப்பதாக எனக்குத்…

எனது போர் முறை 6

தாராளமயமான சிந்தனைகள், மாறுபட்ட கருத்துக்களிடமும் பெருந்தன்மை என்றெல்லாம் பெரிய பேச்சுக்களைக் கேட்கிறோம். மிக நல்லது. நிஜ வாழ்க்கையிலோ, இந்தக் தாராளம், பெருந்தன்மை எல்லாம் ஒருவன் சொல்வதை அப்படியே நம்பும் வரைதான். சிறிது மாறுபட்டால் போதும் பெருந்தன்மை பறந்துவிடும் அன்பு மறைந்துவிடும். இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கென்று சுயநலப் பாதைகளும் உள்ளன. அவர்களின் பாதையில் ஏதாவது தடை குறுக்கிட்டால் போதும், அவர்களின் இதயங்கள் எரியும், வெறுப்பு கொப்புளித்து வெளிப்படும், என்ன செய்வது என்றே அவர்களுக்குத் தெரியாது.

எனது போர் முறை 5

ஆனால் அது ஒரு விஷயம், அந்த சொசைட்டியில் சேர்வது என்பது மற்றொரு விஷயம். மதிப்பும் மரியாதையும் அன்பும் கொள்வது ஒரு விஷயம்; ஒருவர் எதைச் சொன்னாலும் அதனை அலசி ஆராயாமல் பகுத்தறியாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது மற்றொரு விஷயம். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் நான் சாதித்த ஏதோ அந்தச் சிறிய வெற்றிக்கு தியாசபிக் சொசைட்டியினர் எனக்கு உதவியதாக இங்கெல்லாம் பேசப்படுகிறது. அந்த ஒவ்வொரு சொல்லும் தவறு ஒவ்வொரு சொல்லும் பொய், என்பதை வெளிப்படையாக உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 20

தன் நம்பிக்கை என்பது தனது திறமைகளை பற்றி அதீதமான தவறான மதிப்பீடு செய்வதல்ல அல்லது போலியான தற்பெருமையோடு அலைவதல்ல, அவரவரின் உள்ளார்ந்த ஆற்றலின் மீது உள்ள மன திடம் தன்நம்பிக்கை ஆகும். இன்னுமொரு விஷயம் அவரவரின் திறமையில் கிடைக்கும் பயன் கூட தன் நம்பிக்கையை வளர்க்கும் அனால் அது நீண்ட காலம் அல்லது எல்லா சூழ்நிலைகளிலும் கைகொடுக்கும் என்று சொல்ல முடியாது ஏமாந்தால் இது தற்பெருமை உள்ளவராகவும், ஆணவகாரராகவும் மாற்றிவிட வாய்ப்பு உண்டு ஆனால் உள்ளார்ந்த ஆற்றலின்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 19

ஒரு விதத்தில் பார்த்தால் மனிதன் மிக பலவீன மனம் படைத்தவனாகவே இருக்கிறான்.  காரணம் ஆழமாக சிந்தித்து அதன் மூலம் பணி செய்து கிடைக்கும் பயன்களை அவன் விரும்புவதில்லை எதையும் சுலபாக அடைய வேண்டும் என்பதே அவனது ஆசையாய் இருக்கிறது. உழைக்காமலும் உயர்ந்த சிந்தனை இல்லாமலும் மன உறுதியும், வைராக்கியத் தோடும் கூடிய காரியங்கள் இல்லாமலும் எப்படி நினைத்ததை அடைய முடியும்.  மனிதன் பொருளாதாரத்தில் லாபம் தரக்கூடிய, புலன்களால் அனுபவிக்க கூடிய விஷயங்களை மட்டுமே நம்புகிறான்.   அதனாலேயே…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 18

இந்த பூ உலகில் எந்த விஷயமானாலும் சரி எந்த செயலானாலும் சரி காரணம், காரியம், விளைவு இதனோடுதான் முழு சம்பந்தம் கொண்டுள்ளது.  விளைவு நம் விருப்ப படி அமைய வேண்டுமானால் காரியம் அந்த விளைவுக்கு தகுந்தாற்போல் இருக்க வேண்டும் அது மட்டுமல்ல காரியமும் அந்த காரணத்திற்கு தகுந்தாற் போல் இருக்க வேண்டும் இது மிக, மிக கடினமான நெடுங் கணக்கு இதை புரிந்து அறிந்து கொள்ளவே மனித இனம் தோன்றியதில் இருந்து இன்று வரை போராடுகிறது ஆனால்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 17

மறுபடியும், மறுபடியும் சொல்வது மனிதனுக்கு தன்னைப் பற்றிய அக்கறை, தெளிவு கண்டிப்பாய் வேண்டும் என்பது தான் எனக்கு எது சிறந்தது எனக்கு நான் எப்படிப்பட்டவனாக இருக்க விரும்புகிறேன் என்பது தான் இது தெரிந்து விட்டது என்றாலே நாம் செய்ய வேண்டிய பயண இலக்கு தெரிந்து விடும் இலக்கு தெரிந்த பின் பயணப்படுதல் சுலபமாகிவிடும் இலக்கில் தெளிவு இல்லாத போது துன்பத்தையும், சோகத்தையும் தவிற நாம் வேறு  எதையும் அடைய முடியாது.

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.16

இங்கு யாரும் புத்தனோ, யேசுவோ இல்லை நாம் இருக்கும் சூழ்நிலைக்கு நம் அறிவுக்கு நம் புரிதல் இல்லாததிற்க்கு நாம் கண்டிப்பாக தவறு செய்வோம் நாம் தவறு செய்யும் போது நமக்கு அது தவறாக தெரிவதில்லை செய்து முடித்தபின் நாம் தவறு செய்துவிட்டோமே என்ற எண்ணம் நம்மை அழுத்துவதை காணமுடியும். அந்த நிலையில் நீங்கள் உங்களுக்குள் சபதமெடுங்கள், உங்களுக்குள் வைராக்கியம் கொள்ளுங்கள் மீண்டும் அந்த செயலை செய்வதில்லையென்ற அந்த நிலையை நீங்கள் கடைபிடிக்கும் போது உங்களுக்குள் ஒரு திருப்தியும்…