இயல்பு என்பது

இயல்பு என்பது எப்போதும் எந்த சூழ்நிலையிலும் எதற்கு வேண்டியும் மாறாது எப்போதும் மாறாதது எதுவோ அதுவே இயல்பு.  விதிகள் மாறிக்கொண்டே இருக்கும் ஆட்களுக்கு தகுந்தபடி அதிகாரத்திற்கு தகுந்தபடி, காரியங்களுக்கு தகுந்தபடி, காலங்களுக்கு தகுந்தபடி மாறிக்கொண்டே இருப்பது தான் விதி. இயல்பு மாறாது, விதி மாறும்.

எரிந்து மறைதலும்,

எரிந்து மறைதலும், ஒளிர்ந்து அடங்கலுமே வாழ்வு.  இருளை விலக்கத்தான் முடியும் அழிக்க முடியாது இது ஒளி கொண்டு நாம் அறிந்து கொள்ளும் உண்மை, மரணமும் அப்படிதான் விலக்கவோ, மறுக்கவோ முடியாது.

பெண் மனதை

பெண் மனதை ஆண் கணிக்க முடியாதா நிச்சயம் முடியாது உண்மையை சொன்னால் ஆண்களுக்கு அதில் அக்கறையோ, கவனமோ இல்லை நதியின் ஆழத்தை படகு அறியாது நீரின் போக்கில் செல்வதே அதற்கு சுலபம் அதன் பயனும் அதுதான். பெண் மிக புத்திசாலி எப்போதும் அவள் ஆண்களிடம் சிக்குவதே இல்லை சிக்கியது போலிருப்பாள் அதுதான் அவளுக்கு வசதியும் கூட.

அற்பம் என

அற்பம் என எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த பிரபஞ்சத்தின் பார்வையில் புல்லும் வைரமும் ஒன்றுதான். இரண்டுக்கும் ஒரே மூலக்கூறு கார்பன் தான். இந்த பஞ்சபூதங்கள் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை. இந்த பஞ்சபூதங்கள் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை. இதை புரிந்துகொண்டால்  நாம் பக்குவப்பட்டு விடலாம் பக்குவப்பட்டுவிட்டால் துன்பம் நம்மை அணுகுவதில் இருந்து தப்பிவிடலாம்  

எல்லா கேள்விகளுக்கும்

எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் தேவையில்லை எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் தேவையில்லை எல்லா விமர்சனங்களுக்கும் வியாக்கியானம் தேவையில்லை அவற்றை விளக்க முயற்சிக்கையில் நாம் தர்க்கவாதியென முத்திரை குத்தப்படுவோம் பதில் கூறுகையில் நாம் எதையும் ஏற்றுக்கொள்ளாதவராகி விடுவோம் நாம் கேட்கும் கேள்விகளுக்கும் நம்மை பிறர் கேட்கும் கேள்விகளுக்கும் என்றும் வித்தியாசம் உண்டு ! வினா என்றுமே ஒன்று   விடை என்றுமே வேறு   கேட்பவரை பொறுத்து அது தன்னை உருமாற்றிக்கொள்ளும் ! சொல்லியும் விளக்கியும் அறிந்து கொள்ளமுடியாத நிறைய உணர்வுகள்…

இயற்கைதானே

காலம் எப்போதும்சொல்லிக்கொண்டிருக்கும் பாடங்களில் ஒன்று வலிமையைவிட நுட்பமே பலமும் பயனும் நிறைந்தது என்பது. ஒன்றை நீங்கள் அறிய நினைக்கும் போது உங்களின் அறியாமையை அடுத்தவர்கள் அறிந்த கொள்வது இயற்கைதானே.

ஆசை, பகை

ஆசை, பகை இரண்டும் காட்டினில் விளையும் நெருப்பைப் போல பரவிக்கொண்டே ஆற்றலை பெருக்கிக்கொண்டே இருக்கும் முடிவு என்னவென்று பார்த்தால் அவை அழித்துக்கொண்டே இருக்கும் இங்கு வரும் வினா எல்லாவிதத்திலும் அழித்தல் தவறா என்பதுதான் அதற்கு பதில் அழித்து பழகியது ஒரு காலகட்டத்தில் எல்லாவற்றையும் அழிக்கும் எனென்னறால் அழிக்க வேண்டியது எதை என்பதை பற்றி சிந்திக்கும் அறிவு போய்விடும் அங்கு அகங்காரமும், ஆணவமும் குடிகொள்ளும் பிறகென்ன எல்லாம் அழியும். ஒரு விதத்தில் பார்த்தால் பகை வளர்க்காத அரசும் பலம்…

இயற்கையை அழிப்பவரை

இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்.  இதைத்தான் முன்னோர்கள் சொன்னார்கள் மன்னன் அன்று கொல்லுவான், தெய்வம் நின்று கொல்லும் என்று. எட்டுவழி சாலையோ , 2000, 3000 அடி ஆழத்தில் உள்ள எண்ணை வளங்களோ எவையாயினும் இதுவே விதி. விதை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை இடம் தராது. அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் பூமியில் நிலைத்து  வாழ முடியாது.  காரணம் இயற்கை அது தனக்கு எதிரானதாக கருதிக்கொள்கிறது.

அரசில் இருப்பவர்கள்

அரசில் இருப்பவர்கள் எதை செய்தாலும் அது அவர்களின் சொந்த நலனுக்காக தான் இருக்கும், மனிதருக்கும், இயற்கைக்கும் எதிரானதாகத்தான் இருக்கும் அன்றைய அரசர்கள் முதற்கொண்டு இன்றைய அரசாங்கம் வரை அப்படிதான் நடந்த கொள்கிறது.

நாளை என்பதே

நாளை என்பதே நமக்கு உறுதியில்லை நாளும் நமக்கு அது புரிவதில்லை நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் தான் நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வ லித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ….

ரோம மகரிஷி ஜீவசமாதி அருள்மிகு மயிலாண்டவர் திருக்கோவில்.

திருஒற்றியூரில் உள்ள எல்லை அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. முதலில் அங்கே  சென்று, அந்த தெருவிலே சுமார் 50 மீட்டர் தொலைவு சென்றால் அங்கே,பல கடை மற்றும் வீடுகளுக்கு இடையில் ஒரு கோவிலுக்கான வாயில் இருக்கும். அங்கே வழிகாட்டி பலகையும் இருக்கும். அதனுள்ளே  2 அல்லது 3 வீடுகள் தாண்டி சென்றால், ரோம மகரிஷி ஜீவசமாதி இருக்கும்.

குழந்தை வடிவில் நந்தி

சிவன் கோவில்களில் இறைவனின் சன்னதிக்கு எதிராக நந்தியம் பெருமான் வாகனமாக வீற்றிருப்பார். அனைத்து சிவாலயங்களிலும் இது போன்ற அமைப்பில் தான் நந்தியை தரிசனம் செய்ய முடியும். ஆனால் திருச்சியில் உள்ள உண்ணக்கொண்டான் மலைமீது உள்ள உஜ்ஜீவநாதர் கோவிலில் குழந்தை வடிவத்தில் நந்தியம் பெருமானை தரிசனம் செய்யலாம். இந்த ஆலயத்தில் ஆதிபராசக்தியே ஜோஷ்டாதேவியாக அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த அம்பிகையின் கையில் நந்திகேஸ்வரர், குழந்தை வடிவத்தில் வீற்றிருக்கிறார்.  

செவ்வாய் 3

செவ்வாய் துலாத்தில் இருக்கப்பிறந்தவர்கள் லாகிரிவஸ்த்துக்களில் நாட்டம் செலுத்துவர். செவ்வாய் மீனத்தில் உள்ளவர்கள் நல்லபதவி வகிப்பார்கள், வெளிநாட்டு வாஸம் கூடும். செவ்வாய் கடகத்தில் உள்ளவர்கள் கடல் கடந்து செல்வர், சொந்த வீடு இராது. செவ்வாய் 2, 4, 7, 8, 12 இந்த பாவங்களில் இருந்தால் களத்ர தோஷம் ஏற்படும்.

செவ்வாய் 2

செவ்வாய், சூரியன் 7,8 ல் சேர்ந்திருந்தால் இளம் வயதிலேயே அந்த பெண் விதவையாகிவிடுவாள். செவ்வாயுடன், சூரியன் சங்கமித்தால் உடன் பிறப்பிற்கு தீங்கிழைப்பார். செவ்வாய் சிம்மத்தில் இருக்கப் பிறந்தவர்களுக்கு உடல் உறுதி தைரியம் இருக்கும்.

செவ்வாய் 1

ஆட்சி மன்றத்தில் உள்ள அமைச்சர்களைப் போன்றவர்களே ஜாதகத்தில்உள்ள கிரகங்கள். செவ்வாய் லக்கினத்தில் நின்றிடில் கோபகுணம், விரோதம் கொண்ட இதயத்தினராய் இருப்பர். செவ்வாய் ஆண்கிரகம், சகோதர காரகன், உத்தியோக காரகன், பூமி காரகன், கர்மக்காரகன், மூளைக்காரகன் ஆகிறார். செவ்வாய்க்கு மேஷம், விருச்சிகம் ஆட்சிவீடுகள், மேஷம் மூலத்திரிகோண வீடு, மகரத்தில் உச்சம், கடகத்தில் நீச்ச வீடாகும் கொண்டுள்ளார். செவ்வாய் மகரத்தில் இருக்க பிறந்த ஜாதகர்களுக்கு புத்திர பாக்கியம் செல்வம், அரசு அந்தஸ்து ஏற்படும்.  வெற்றி, புகழ் ஏற்படும்.

சந்திரன்20

சந்திரனுக்கு 8லும், லக்னத்திற்கு 8லும் 3 கிரகங்கள் இருந்து அவை பாப கிரகங்களாக இருப்பின் குழந்தைக்கு ஆயுள் குறைவு. சந்திரன், சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை எந்த லக்னமானாலும் முறைகேடான வாழ்க்கை தருகிறது.  சிற்றின்ப பிரியராக செய்கிறது.  முரணான திருமண வாழ்க்கை ஏற்படுத்துகிறது.

உன்னை அழித்துக் கொண்டாவது பிறருக்கு நன்மை செய்

மற்றவர்களுடைய நன்மைக்காக என்னுடைய இந்த வாழ்க்கை அழிந்து போகிற அந்த நாளும் வருமா ? இந்த உலகம் வெறும் குழந்தை விளையாட்டு அல்ல. மற்றவர்களின் நன்மைக்காகத் தங்களுடைய இதயத்தில் இரத்தத்தைச் சிந்தி, பாதைஅமைப்பவர்கள் தாம் பெரியோர்கள் ஆவார்கள். ஒருவர் தமது உடலைத் தந்து பாலம்ஒன்றை அமைக்கிறார். அந்தப் பாலத்தின் உதவியால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த ஆற்றைக் கடந்து விடுகிறார்கள். இப்படி நீண்ட நெடுங்காலமாக நடந்துகொண்டு வந்திருக்கிறது. இந்த முறை அப்படியே இருக்கட்டும். அப்படியே என்றைக்கும் இருக்கட்டும்.

நீ கடவுளாகவே ஆக ஒரு வழி

பெரியவர்கள் பெருந் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும்நன்மைகளை மனித குலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை நீ உலக வரலாறு முழுவதிலும் காணலாம். உனது சொந்த முக்திக்காக எல்லாவற்றையும் நீ துறந்துவிட விரும்பினால். அது அவ்வளவு ஒன்றும் பாராட்டுவதற்கு உரியதில்லை. உலகத்தின் நன்மைக்காக உன் முக்தியையும் நீ தியாகம் செய்துவிட விரும்புகிறாயா ? அப்படி நீ செய்தால் கடவுளாகவே  ஆகிவிடுவாய். இதைச் சற்றுச் சிந்தித்துப் பார்.

விக்கிரகத்தில் மட்டுமே கடவுள் இல்லை

தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் சிவபெருமானை காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். சிவபெருமானை விக்கிரத்தில் மட்டும் காண்பவனுடைய வழிபாடு ஆரம்பநிலையில்தான் இருக்கிறது.

அஞ்சாமல் முன்னேறுக

மோகமாகிய முதலையின் வாயில், மக்கள்எப்படிப் பரிதாபமாகச் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள் அந்தோ  இதயத்தைப் பிளக்கக் கூடியஅவர்களின் சோகக் குரலை கேளுங்கள். முன்னேறிச் செல்லுங்கள்*கட்டுண்டுகிடக்கும் மக்களைப் பந்த பாசங்களிலிருந்து விடுவிப்பதற்காகவும், எளியவர்களின் துன்பச் சுமையைக் குறைப்பதற்காகவும், அறியாமையில் மூழ்கியிருக்கும் இருண்டகிணறுகள் போன்ற உள்ளங்களை ஒளி பெறச் செய்வதற்காகவும், ஏ வீரர்களே முன்னேறிச் செல்லுங்கள் அஞ்சாதே  அஞ்சாதே * என்று வேதாந்த முரசு முழங்கிக்கொண்டிருப்பதைக் கேளுங்கள்.

மனித உடலைப்பற்றி அறிவோம் 4

16: கைகளில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6 17: மனித கையில் உள்ள தசைகளின் எண்ணிக்கை: 72 18: இதயத்தில் உள்ள பம்புகளின் எண்ணிக்கை: 2 19: மிகப்பெரிய உறுப்பு: தோல் 20: மிகப்பெரிய சுரப்பி: கல்லீரல்

மனித உடலைப்பற்றி அறிவோம் 3

11: கழுத்தில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 7 12: நடுத்தர காதில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6 13: முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 14 14: மண்டையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 22 15: மார்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 25

மனித உடலைப்பற்றி அறிவோம் 2

6: இதய அறை எண்: 4 7: மிகப்பெரிய தமனி: பெருநாடி 8: சாதாரண இரத்த அழுத்தம்: 120/80 Mmhg 9: இரத்தம் Ph: 7.4 10: முதுகெலும்பில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 33

மனித உடலைப்பற்றி அறிவோம் 1

1: எலும்புகளின் எண்ணிக்கை: 206 2: தசைகளின் எண்ணிக்கை: 639 3: சிறுநீரகங்களின் எண்ணிக்கை: 2 4: பால் பற்களின் எண்ணிக்கை: 20 5: விலா எலும்புகளின் எண்ணிக்கை: 24 (12 ஜோடி)

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்.25

3–,8இல் புதன் இருந்து அது உபய ராசியாகி அந்த ராசி நாதன் உபய ராசியிலிருந்தால் தன் தாயின் வளர்ப்பு கிட்டாது. அன்னியத்தாய் இவளை வளர்ப்பாள். இவன் வாழ்க்கை உயர்வாகத்தான் இருக்கும். பாசமும், நேசமும் நிறைந்தவன், பிறக்கும்போது தாய்ப்பாலை அருந்த முடியாதவன். 2–4 – க்குரியவர், 6 – க்குரியவர் சேர்ந்து 4 – க்கு 12 – இல், இருந்து 4 – க்கு, 7, 8 – க்குரியவர் சேர்ந்து 4 – க்கு 9…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 24

3 – ல் பாவர் பலம் பெற்று 3 – க்குரியவர் பாதகாதிபதி சேர்க்கை பெற்று 3 – மிடத்தை பார்த்தால் உடன்பிறப்பு, பிறந்து இறக்கும், 1 ஆண் சகோதரம் தங்கும். 3 – க்குரியவர் ராகு சாரம் பெற்று மறைந்து 3 – க்கு, 6 – க்குரியவருடன் சேர்க்கை பெற்று, செவ்வாய்க்கு 12 – க்குரிய சாரம் பெற்று பலம்இழந்து பாவரால் பார்க்கப்பட்டால், 3 – க்குரியவர் திசையில் அல்லது அவர் பெற்ற சாரநாதன்…

சுந்தர யோக சிகிச்சை முறை 89 

பிணிகளும், சிகிச்சையும். சிகிச்சையின் பிரிவுகள். யோக முறைகளால், பிணியைப் போக்கும் வழிக்கு யோக சிகிச்சை  என்று பெயர் பலரும் இதைக்கையாளலாம் இவர்கள் உபயோகிப்பது பெரும்பாலும் யோகாசனம் ஒன்றே.  பிராணயாமத்தையும் இன்னும் சிலர் சேர்த்துக் கொள்கிறார்கள். உணவையும், ஒழுக்கத்தையும் அநேகமாய் மறந்து விடுகின்றனர்.  யோகப் பயிற்சிக்கு அடுத்தபடியாய் சிகிச்சையின் முக்கிய அம்சமாக உணவு ஒழுக்கத்தையும் பிணைத்து அளிப்பதில்லை.  பின் விளக்கப்படும் மற்ற தொகுதிகளை அறவே மறுக்கின்றனர்.

சுந்தர யோக சிகிச்சை முறை 88

தொழிலாளர்கள், ரயில் உத்தியோகஸ்தர், தபாலாபீஸ், தந்தி ஆபீஸ் காரியஸ்தர்கள், இயந்திர சாலை வேலையாட்கள், மேற்கூறிய கருத்துக்களைக் கொண்டு, நோய் தடுத்து ஆரோக்கியமாய் இருக்க திட்டம் அமைத்து வாழலாம்

சுந்தர யோக சிகிச்சை முறை 87

மாணவர்களுக்கு, மேல் படிப்பாளர்களுக்கு எழுதல் 4 மணி அதிகாலை நித்தியக்கடன் 4.30 மணி வரை படித்தல் 6 மணி வரை ஆசனப் பிராணயாமம்   7 மணி வரை ஸ்னானம் துதிக்குப் பின் பால் 7.30 மணிக்குபடித்தல், உணவு காலம் வரை பகல் 9 லிருந்து 10 மணிக்குள் போஜனம் சத்துள்ள சிற்றுண்டி 2 லிருந்து 3 மணிக்குள் ஆட்டம், பொழுது போக்கு 5 லிருந்து அல்லது 6 லிருந்து 6.30 வரை படித்தல், இரவு உணவு இரவில்…

சுந்தர யோக சிகிச்சை முறை 86

கடவுளே இல்லை என்போருக்கும் ஒரு வழி சொல்லுகிறேன். துதிக்கு ஒதுக்கப்பட்ட காலத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி இருதய ஸ்தானத்தில் நிறுத்தி தானே சத்திய, நித்திய ஆனந்தம் என்று எண்ணி லயிக்கட்டும். நோய் தடுத்து ஆரோக்கிய சுகத்தில் வாழ ஒரு உதாரண திட்டம் கொடுக்கிறேன். காலை எழுதல் 4 அல்லது 4-30 மணி மலஜலப் போக்கு, நித்தியக் கடன்  அரை மணி நேரம். ஆசனம், பிராணயாமம் 5லிருந்து 6 மணி வரை ஸ்னானம், துதி 6.30லிருந்து 7.00…