சுந்தர யோக சிகிச்சை முறை 84
துதி நோய் தடுக்கும் திட்டத்தில் துதியும் கலந்துள்ளது. துதி என்பதானது, மனிதன் தன் சக்தியை கணக்கற்ற அளவுக்கு, அதிகரித்துக் கொள்ளும் மார்க்கமாகும். மனத்திற்குச் சாந்தியும், நரம்புகளுக்கு வீர்யமும், அமைதியும் எண்ணற்ற எதிர்பாராத அபாயங்களிலிருந்து விடுதலை அடையும் வழியும். ஊழ்வினையால் ஏற்படும் கெடுதலையும் அணு அளவுக்குக் குறைத்துக் கொள்ளும் சூழ்ச்சியும் கொண்டதே துதி. இதன் விதிகளை, சாந்தி யோகம், சந்தியா காயத்ரி ஜபயோகம் என்ற நூல்களில் காணலாம்.