யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம்
உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் சிரசாசனத்தில் சிவன் காட்சி தரும் அதிசய திருக்கோவில் ஆந்திர மாநிலம் பீமாவரம் அருகில் உள்ள யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம் ஆகும்.
உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் சிரசாசனத்தில் சிவன் காட்சி தரும் அதிசய திருக்கோவில் ஆந்திர மாநிலம் பீமாவரம் அருகில் உள்ள யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம் ஆகும்.
புதுக்கோட்டை, அறந்தாங்கியிலிருந்து, 5 கி.மீ தூரத்திலுள்ளது எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில். இது 2000 ஆண்டுகள் பழமையானது. இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி.
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள திருவிற்குடி மயானேஸ்வரர் ஆலயத்தில் சக்கரம் ஏந்திய சிவபெருமானை தரிசிக்கலாம். இத்தலம் சிவபெருமானின் எட்டு வீரச்செயல்கள் நிகழ்த்தப்பட்ட, அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகும்.
பாய் விரித்து படுத்தவனோ வாய்திறந்து தூங்குகிறான். பஞ்சணையில் படுத்தவன் நெஞ்சில் ஏனோ அமைதியில்லை என்ன காரணமாய் இருக்கும் இப்படி பஞ்சனையில் படுக்க எத்தனைபேரை வஞ்சித்தானோ, ஏமாற்றினானோ அந்த நினைவுகளே அவனை நிம்மதியற்றவனாக ஆக்கியிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. அது மட்டுமல்ல பஞ்சணையை யாராவது பிடுங்கி கொண்டால் என்ன செய்வது என்ற எண்ணமும் காரணமாய் இருக்கலாம் இந்த இடத்தில் அரசு அதிகாரம் பதவி போன்றவையும் பஞ்சணைகளே. எப்போதுமே தவறுகளை உணர்ந்து கொள்வது மட்டுமே தவறுகளுக்கு பிராயசித்தம் ஆகாது. தண்டைனை கூட…
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது ஆயிரமாயிரம் சூழ்ச்சிகள், குழிபறிப்புகள், துரோகங்கள் போன்ற எல்லாவற்றையும் சமாளித்துதான் ஆட்சி செய்ய வேண்டியிருக்கிறது. அந்த கால மன்னராட்சி முதல் இந்த கால மந்திரிகள் ஆட்சி வரை இந்த நியதி மாறவேயில்லை அதிலும் அதிகாரம் கைபற்ற இத்தனை செய்யவேண்டியிருக்கிறது என்றால் கிடைத்த அதிகாரத்தை தக்க வைக்க இதை போல் பல மடங்கு செய்ய வேண்டியிருக்கிறது. அதிகார போதையில் மிதக்க ஆசைப்படுபவன் எல்லோரையும் ஏமாற்றவே நினைக்கிறான். அதில் கடவுளும் அடக்கம் ஏமாற்றியதற்கு கடவுளிடம் மன்னிப்பு…
ஒரு விதத்தில் பார்த்தால் மனிதனால் எதையும் முழுமையாய் அனுபவிக்க முடிவதில்லை எதையும் முழுமையாய் அனுபவிக்கும் வித்தை ஏனோ மனிதனுக்கு கைவர பெறவில்லை. அது மண் ஆகட்டும், பெண் ஆகட்டும், பொன் ஆகட்டும் எதையும் முழுமையாய் அனுபவிக்காததால் அவனுக்கு எதுவும் முழுமையாய் தெரிவது இல்லை அதனாலேயே ஜனன மரணங்களைப் பற்றிய புதிர் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நாம் பிறவற்றை பற்றி அறியாமல் இருப்பது ஒன்றும் மிகப் பெரிய தவறோ, இழிவோ அல்ல ஆனால் தன்னை தான் அறியாமல் இருப்பத…
எல்லாவற்றையும் காலம் நினைவில் கொண்டுள்ளது. காலம் வெற்றியடைந்தவன், தோல்வி பெற்றவன், பணம் படைத்தவன், பணம் இல்லாதவன் பண்டிதன், பாமரன், ஞானி, அஞ்ஞானி என்ற பேதத்தை கைகொள்வதில்லை அதனுடைய நினைவில் எல்லோருக்கும் இடம் உண்டு, அதனால் காலத்தை வென்றவன் காலத்தை வெல்லாதவன் என்ற பாகுபாடுகளை நாம் பெரிதாய் எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை. காலத்தில் கடந்த ,நிகழ், எதிர் காலங்கள் என்ற பிரிவுகள் கிடையாது அது காலமாக மட்டுமே இருக்கிறது. நாம் தான் காலத்தை மூன்று கூறாக்கி வைத்திருக்கிறோம் எதையும்…
3 – க்குரியவர் பலமடைந்து, ராசி அம்சத்தில் பெண் ராசியில் இருப்பின் பின் சகோதரரும் 1 உண்டு. 5, 6 – க்குரியவர் 3 – ல் சுயசாரம் பெற்று சுபர் பார்த்து இருந்து, இவர் திசாபுத்தி நடந்தால், நல்ல யோகத்தைத் தரும். தன சேர்க்கை ஏற்படும். 3 – க்குரியவர் கேந்திரம் பெற்று, செவ்வாய் சேர்க்கை சுபர் பார்த்தால் 6 உடன் பிறப்பு உண்டு. 3 – க்குரியவர் உச்சம் பெற்று 3 – இல்…
1 – க்குரியவர், 3 – ஆமிடத்தை பார்த்து 3 – க்குரியவர் யோகாதிபதி சாரம் பெற்று செவ்வாய் சேர்க்கை பெற்றால் 10 உடன் பிறப்பு ஏற்பட்டு 8 பேர் தங்குவார்கள். இதில் ஆண் 5, பெண் 3, ஆனால் ஆண் உடன் பிறப்பால் நன்மை இல்லை பெண் உடன்பிறப்பால் நன்மை ஒரளவு உண்டு. 4 – க்குரியவர் 3 – இல், 6 – க்கு உரியவரிடம் சேர்க்கை பெற்று இருப்பின் பின் ஆண் சகோதரம்…
3 – இல் ராகு இருந்து, சனி பார்வை பெற்று 3 – க்குரியவர் கேந்திரம் பெற்று லக்கினாதிபதியை குரு பார்த்தால் 10 உடன்பிறப்பு , 7 ஆண், 2 பெண், இதில் முதல் தாய்க்கு ஒரு ஆண். 3 – க்குரியவர் உச்சம் பெற்று, லக்கினாதிபதி பார்த்து 3 – ஆமிடத்தில் பாபர் இருந்தால், பல மாதர்களுடன் இன்பமாக காலத்தை கழிப்பான். இளம் வயது பெண்களின் தொடர்பு கிடைத்துக் கொண்டே இருக்கும். 3 – க்குரியவர்,…
இதை தான் பெரியவர்கள் எதை, எதை எங்கெங்கு எப்படி வைக்க வேண்டுமோ அப்படி வைக்கவேண்டும் என்றார்கள் அவர்கள் சொன்னது புற பொருள்களை அல்ல நம்மிடம் கருவியாய் உள்ள மனதையே சொன்னார்கள் அது மட்டுமல்ல பெரியோர்கள் சொன்னது மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்றார்கள் இதில் உள்ள அர்த்தம் மனமது நமக்கு ஏவளாளியாய் அடிமையாய் இருந்தால் மந்திரம் ஜெபித்து நாம் பெற வேண்டியது எதுவும் இல்லை நமக்கு வேண்டியது எல்லாம் இயல்பாகவே கிடைக்கும் என்பது தான். இதை…
நன்றாக கவனம் வைத்துக் கொள்ளுங்கள் கை, கால்களை போலவே மனமும் ஒரு கருவியே நம்முடைய கை, கால்கள் நாம் சொல்லுவதற்கு அல்லது நினைப்பதற்கு முன்னால் அவை அசைந்தால் நமக்கு எத்தனை அசெளகரியமும், குழப்பமும் உண்டாகுமோ அதை விட பல கோடி மடங்கு அசெளகரியமும் குழப்பமும் நாம் கட்டளை இடும் முன் மனம் அசைந்தால் உண்டாகும்.
நோய் தடுத்து ஆயுள் ஆரோக்கியத்தைப் பெருக்கும் இந்த கவசத்தை காலையில் மேற்கொள்ளுதல் நலம். இரவில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தூங்கி எழுந்து பின்பும் அல்லது வேலை முடித்து வந்த உடனேயும், பிரயாணத் தொழிலில்லாத மறுநாள் ஓய்வு காலத்திலும் இத்திட்டத்தை நிறைவேற்றலாம்.
கால் மணி நேர அவசரத் திட்டம், சர்வாங்காசனம் 5 நிமிடம், மத்ச்யாசனம் அரை நிமிடம், சிரசாசனம் 5 நிமிடம், சவாசனம் 1 அரை நிமிடம், நாடி சுத்தி 3 நிமிடம். ஒரு மணி நேரக் காலத்திட்டம், தினசரி பயிலுவதற்கும், அரை மணி நேர சிக்கனத் திட்டம் தேவையானால், சில சமயங்களுக்கும், கால் மணி நேர அவசரத் திட்டம் வெகு அபூர்வமாகவும் கையாள வேண்டும்.
தீமையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்துகொள்கிறோம். கர்மயோகத்தின் விதியின்படி, ஒருவன் செய்த ஒரு கர்மத்தை, அது தனக்கு உரியபலனை விளைவித்து முடிக்கும் வரையிலும் அழிக்க முடியாது. கருமம் தனக்கு உரியபலனை விளைவிப்பதை இயற்கையிலுள்ள எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தமுடியாது. நான் ஒரு தீய செயலைச் செய்தால், அதற்கு உரிய துன்பத்தை நான்அனுபவித்தே ஆகவேண்டும். இந்த பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் இதைத்தடுக்கவும் முடியாது, நிறுத்தி வைக்கவும்…
உயர்ந்த பீடத்தில் நின்று உனது கையில் ஐந்து காசுகளை எடுத்துக் கொண்டு, ஏபிச்சைக்காரா இதை வாங்கிக் கொள் என்று நீ சொல்லாதே, மாறாக அவனுக்குகொடுப்பதனால் உனக்கு நீயே உதவி புரிந்துகொள்ள முடிந்ததை நினைத்து, அந்தஏழை இருந்ததற்காக அவனிடம் நீ நன்றியுள்ளவனாக இரு. கொடுப்பவன்தான்பாக்கியசாலியே தவிர, பெறுபவன் அல்ல. இந்த உலகில் உன்னுடைய தர்மசிந்தனையையும், இரக்க மனப்பான்மையையும் பயன்படுத்த வாய்ப்புக்கிடைத்திருப்பதற்காக நீ நன்றியுள்ளவனாக இரு. இதன் மூலம் தூய்மையும் பரிபூரணத்தன்மையும் உன்னை வந்தடையும்.
நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவி புரிவதும், உலகிற்கு நன்மை செய்வதும்தான். நாம் ஏன் உலகிற்கு நன்மை செய்ய வேண்டும் ? மேலோட்டமாக பார்த்தால் உலகிற்குநன்மை செய்வதனால், உண்மையில் நமக்கு நாமேதான் உதவி செய்து கொள்கிறேhம்.
சந்திரன், சுக்ரன் சேர்ந்து எந்த பாவத்தில் இருந்தாலும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ 30 வயதுக்கு மேல்தான் திருமணம் நடைபெறும். சந்திரன், சுக்கிரன் சேர்ந்து இருந்தால் புடவை, அழகு பொருட்கள், வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பர். சந்திரன், ரிஷப ராசியில் இருந்து, குருவின் பார்வைபெறீன் பேரும் புகழும் கல்வி, கேள்விகளில் சிறந்தும் பலபேர் மெச்சும் வண்ணம் புகழ் பெற்று வாழ்வர்.
சந்திரனுக்கு 10ம் வீட்டில் சுக்கிரன், சனி, சேர்க்கை, மருத்துவ தொழில் செய்வர், சூரியன் அல்லது செவ்வாய், ராகு சேர்க்கை டாக்டராக வாய்ப்பு உண்டு, லக்னத்திற்கு 10ல் சந்திரன், சுக்கிரன் இருந்து சுபகிரஹபார்வை ஏற்படின் டாக்டராக இருப்பர். சந்திரன் கேந்திரத்தில் இருந்து பாபகிரகங்களின் பார்வையோ சேர்க்கையோ இருப்பின் பாலாரிஷ்டம் ஏற்படும். சந்திர மங்களயோகம், மனைவி வந்தபின் அதிர்ஷ்டசாலியோகம் பூமி, புகழ், வாகனம் போன்ற செல்வத்தை அடைவர்.
சந்திரா லக்னத்தின் அதிபதி உச்சமுற்றிருந்தாலோ, அல்லது நீச்சமுற்ற கிரகங்களின் இல்லத்தில் இருந்தாலும் ஜாதகர் செல்வம், செல்வாக்குடையவராக இருப்பர். சந்திரன், சூரியன் சேர்ந்து 9,5 லக்ன வீட்டில் இருந்தால் பிற்காலத்தில் கண் பார்வை இழப்பர். சந்திரன், சூரியன், சனி 12, 2, 8ல் முறையே இருப்பின் கண்பார்வை அற்றவராக இருப்பர். சந்திரன், சுக்கிரன் 6,8,12ல் இருப்பின் கண் பார்வை இரவு நேரத்தில் தெரியாது. சந்திரன் 7ம் வீடாக சிம்மராசியில் அமர்ந்து அதை செவ்வாய் பார்வை செய்யின் அந்த ஜாதகருக்கு…
தன்னுடைய சிருஷ்டியில் இறைவன் ஒரு பொழுதும் இரக்கமற்றவனாகவும், நீதிவழுவியவனாகவும் இருப்பதில்லை. ஒருவன் உடலைப்பற்றிய கவலை நீங்காமல் ஆத்மாவை அறிந்தனுபவிக்க ஆசைப்பட்டால் அவன் ஒரு முதலையைத் தெப்பம் என்று நம்பி அதன் மேலேறி ஓர் ஆற்றைக் கடப்பதற்காசைப்படுவைனைப் போலாவன்.
நல்லதும் பொல்லாததும், உயர்ந்ததும், தாழ்ந்ததும், விரும்பத்தக்கதும், வெறுக்கத்தக்கதுமான காட்சிகளை ஒருவன் கனவில் காணும் பொழுது அவையெல்லாம் உள்ளபடி உண்மை என்றே நினைக்கிறான். கனவு நிலையில் அவை பொய்யென்ற எண்ணம் சிறிதுகூட இல்லை. அவ்வாறே தான் ஞானோதயம் ஏற்படும் வரை இவ்வுலகும்.
முக்தியாவது நான் என்னுடையது என்ற எண்ணங்களை அறவேயொழித்து ஆத்மானுபவத்தில் நிலை பெறுதலாம். கனவு மனதின் கற்பனை. கண்ட மறுகணத்தில் அது காணப்படாமல் போவதால் அது பொய்.
அந்தராத்மாவாய் விளங்கும் பிரம்மத்தையறிவதால், பிறவிச் சுழலுக்கும் காமத்திற்கும் கருமத்திற்கும் மூலகாரணமான அவித்தை மிச்சமில்லாமலே அழிந்து போகின்றது.
உலகில் உள்ள எல்லா போராட்டங்களையும் விட மனிதனுக்கும் அவன் மனதிற்க்கும் நடக்கும் போராட்டமே மிகப்பெரிய போராட்டம். சிறிது கூட இடைவெளியில்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிற போராட்டம் இதில் மனம் ஜெயித்தால் பயித்தியகாரன் மனிதன் ஜெயித்தால் புத்தன், ஞானி. ஆ என்றால் பெரியது தலைவன் என்ற அர்த்தத்தோடு இறை என்ற அர்த்தமும் உள்ளது அதாவது நீ லயத்தில் இருந்தால் ஆ எனும் இறையை உடலில் காணலாம். இதில் முக்கியமானது லயத்தில் இருக்க வேண்டும் அதாவது உடல் லயத்தில் இருக்க…
மனதின் இயக்கங்களை முழுமையாக கண்டறிய மனிதனால் இன்னும் முடியவில்லை அதனால் தான் புத்தர் போன்றோர் மனதை கடந்து சென்றுவிட்டனர் அப்படி மனதை கொண்டேமனதை கடந்து சென்றதினால் அதை பற்றி அறிய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. மனதை நமக்கு எஜமானனாக நாம் கொண்டால் நாம் மறைந்து விடுவோம். மனம் மட்டுமே இருக்கும் நாம் மனதிற்கு எஜமானனாக இருந்தால் நாம் இருப்போம் மனம் மறைந்து விடும் இது புரிந்து கொள்ள கடினமாக தோன்றினாலும் மிக…
உடலை எவனொருவன் ஆண்டவன் உருவாக்கிய ஆபூர்வகருவியாக நினைத்து ஆச்சரியப்பட்டு பின் தன் உடல்மீது அன்பு கொள்கிறானோ எவன் தனது உடலை கடவுளை அடைய உதவும் ஏணியாக பயன்படுத்த அறிந்திருக்கிறானோ அவன் உடலில் மறைந்திருக்கும் பல ரகசியங்களை கண்டு கொள்வான் அந்த ரகசியங்கள் மூலம் இறையை உணர்வான் இதைத்தான் முன்னோர்கள் இப்படி சொன்னார்கள் ஊணுடம்பு ஆலயம் என்று.
உண்மையில் மனித வாழ்வில் அழிக்கப்பட வேண்டியது என்று எதுவும் இல்லை மாற்றி அமைத்து மேன்மைப்படுத்த வேண்டியவைகள் மட்டுமே உண்டு அப்படி மேன்மைப்படுத்தும் பொறுப்பும் கடமையும் அவரவரிடமே உள்ளது. கடவுளை அறிய அல்லது அடைய முக்கியமாக தேவையானது இதயம் தலை அல்ல. அடுத்ததாக இதயம் மட்டும் பத்தாது அது அன்பால் நிறைந்திருக்க வேண்டும். தலையில் அறிவு மட்டுமே நிறைந்திருக்கும் அதனால் அதைக்கொண்டு இறைவனை அடைய முடியாது.
ஒருவன் தன்னுடைய உடலையோ, மனதையோ வெறுப்பதினால் அவன் அடையும் பயன் ஒன்றே ஒன்று தான் கடவுள் என்பவரின் நிழலைக் கூட காண முடியாது. ஒருவன் தன்னை வெறுப்பதினால் தன் மீது அன்பு செலுத்த இயலாதவனாகிவிடுகிறான். அதன் பின் அவனால் பெற்றோர், ஆசிரியர், உடன் பிறந்தோர், நண்பர்கள் போன்றவற்றில் எதிலும் அன்பு செய்ய இயலாதவனாகிவிடுகிறான். கடவுளை காண அன்பு மட்டுமே கருவியாக இருக்கும் போது அந்த கருவி இல்லாதவனால் கடவுளை அறியமுடியுமா?
தனக்குள் ஆனந்தம் இல்லாதவன் ஆசை வயப்படுகிறான். அந்த ஆசையை நிறைவேற்றி கொள்வதன் மூலம் அவன் ஆனந்தம் அடைய முயற்சி செய்கிறான், அதில் சில ஆனந்தங்களை மிக சிறிய அளவு அடைகிறான் மனிதன் இன்னமும் புரிந்து கொள்ளாத விஷயம் என்னவென்றால் ஆனந்தம் தனக்குள் இருப்பது அது எதை சார்ந்தும் இராது. ஆனால் ஆசை என்பது எப்போதும் பிறவற்றை சார்ந்தே இருக்கும் அதனால் ஆசையினால் அடையும் ஆனந்தம் மிக, மிக சிறிதாகவே இருக்கிறது. எப்போது மனிதன் தனக்குள் ஆனந்தத்தை அறிய…