ருத்ர முத்திரை :

கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிப் பகுதிகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும். நடு விரலும் சுண்டு விரலும் நேராக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் செய்யலாம். பலன்கள் : 1.ரத்த ஓட்டம் சீராகும் 2.தூய சிந்தனைகள் ஏற்படும் 3.கண் குறைபாடுகள் நீங்கும் 4.சுவாசம் சீராகும் 5.இரத்த அடைப்பு நீங்கும் 6.மண்ணீரல், கல்லீரல் உறுப்புகள் வலுப்பெறும் 7.உயிர் ஆற்றல் அதிகரிக்கும் 8.தலைவலி தலைசுற்றல் நீங்கும் 9.ஜீரணசக்தி அதிகரிக்கும். இம்முத்திரையை…

முகுள முத்திரை:-

நான்கு விரல்களையும் கட்டைவிரலோடு இணைத்து குவித்து வைக்க வேண்டும். இதுவே முகுள முத்திரையாகும். பலன்கள்:- மனம் சம்மந்தமான நோய்கள் குணமாகும். உடல் சோம்பலைப் போக்கி உடல் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நோய் பாதிக்கப்பட்ட இடத்தில் அல்லது வலியுள்ள இடத்தில் இம்முத்திரையை வைத்து கண்களை மூடி பாதிக்கப்பட்ட இடத்தையே சிந்திக்க வேண்டும். மூச்சு ஒரே சீராக இருக்க வேண்டும். பத்து நிமிடம் முதல் 40 நிமிடம் வரை செய்யலாம். ஒரே நாளில் பலமுறை செய்யலாம். வலது கையில் மட்டுமே…

லிங்க முத்திரை:-

இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். பலன்கள் : 1.உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். 2.கபத்தை அகற்றும். 3.ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். 4.வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும். 5.நுரையீரலை வலுப்படுத்தும் 6.காய்ச்சல் குணமாகும் 7.உடல் புத்துணர்ச்சி அடையும் 8.உடல் எடையைக் குறைக்கும். 9.உடலில் உள்ள கொலுப்பை கரைக்கும். 10.ஒவ்வாமை நீங்கும். 11.கோபம், கவலை, பொறாமமை போன்ற தீய எண்ணங்களைப் போக்கி மனதை சாந்தப்படுத்தும்.…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 18

11 – க்குரியவர் 3 – இல் 4 – க்குரியவருடன் சேர்க்கை சனி பார்வை, 2 – இல் செவ்வாய் இருப்பின் 1 ஆண், பெண் இரண்டு உடன் பிறப்புக்கள் உண்டு. 3 – க்குரியவர், 8 – இல், 3 – ஆம் இடத்தை குரு பார்த்தால் 3 – ஆண் உடன் பிறப்பு உண்டு. 3, 11 . க்குரியவர், பரிவர்த்தனை பெற்று 3 – க்குரியவர் கேந்திரம் பெற்று லக்கினாதிபதியை குரு…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 17

3 – இல் 7, 9 – க்குடையவர்கள் கூடி நிற்க, குரு பார்க்க, அழகிய ஸ்திரீகளிடம் சுகபோகங்களை சதா அனுபவிப்பார். 3 – க்குரியவர், 7, 8 – இல் இருப்பின் அரசாங்கத்தில் தொல்லை, பால்ய வயதில் திருட்டுத்தனம், காமப்பிரியர். 3 – க்குரியவர், 11 – ல் செவ்வாயுடன் சேர்க்கை, 2 – ஆண், 2 – பெண் உடன்பிறப்பு உண்டு. 3 – க்குரியவர், 8 – ல் செவ்வாய் உச்சம் 6…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 16

சுக்கிரனும், 2, 3 – க்குடையவர் மூவரும் திரிகோணமடைய குரு பார்க்க, பல ஸ்திரீகளிடம் சுகத்தை அடைந்து கொள்வார். 3, 4 – க்குடையவர்கள், புதன் கூடி கேந்திரமடைய, அதில் ஒருவர் நீச்சம் பெற, துஷ்ட குலத்தவர்களையும், அடிமையுரச் செய்யும் சுந்தர வார்த்தைகளுடைய குணமுடையவர். 3 – க்குடையவர், 7 – ல் நிற்க, குரு பார்க்க 7 – க்குடையவர் லக்கினத்தில் இருந்து, புதன், சுக்கிரன் சேர, வயதான காலத்திலும் உத்தம ஸ்திரீ போகமுடையவர்.

நல்லொழுக்கம் தருவதே உயர்ந்த கல்வி

எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மன வலிமையை வளர்க்கச்செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுய வலிமையைக்கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை. மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மசரியமும்,வாழ்க்கையின் அடிப்படை இலட்சியங்களாக நமக்குத் தேவைப்படுகின்றன. எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம்சொல்கிறது. இந்த அறிவுஒரு சிறுவனிடம் கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்துஎழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும்.

தாழ்ந்தவர்களுக்குக் கல்வி அளிப்பது சிறந்த நன்மை

தாழ்ந்த நிலையிலுள்ள நம்முடைய மக்களுக்குக் கல்வியைத் தந்து, இழந்துவிட்டதங்களின் உயர்ந்த நிலையை அவர்கள் வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும். இதுதான் நாம் இப்போது செய்ய வேண்டிய ஒரே சேவையாகும் உயர்ந்த கருத்துக்களை இவர்களுக்குக் கொடுங்கள். இந்த ஒரே ஒரு உதவிதான்அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பிறகு அதன் விளைவாக மற்ற நன்மைகள் எல்லாம் வந்து சேரும்.  இரசாயனப் பொருள்களை ஒன்று சேர்த்து வைப்பதுதான் நமதுகடமை. பின்புஅவை இயற்கையின் விதியையொட்டித் தாமாகவே படிகங்களாக மாறிவிடும். இப்போது மலை முகமதுவிடம் செல்லா விட்டால்…

சுந்தர யோக சிகிச்சை முறை 80

நாடி சுத்தி பத்மாசனத்தில் செய்யவும், மேற்கூறப்பட்ட  காலம் ஆசனங்களுக்கிடையே ஓய்வையும் உள்ளடக்கியது.  இந்த ஆசனங்கள் சரீர உழைப்பு, சிரமம் உண்டாக்காத தன்மை கொண்டதாதலால் பழகியவர், ஆசனங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஓய்வின்றியே செய்து கொள்ளலாம்.  ஆசனத்தில் நிற்பதே இவர்களுக்கு ஒரு ஓய்வு.

சுந்தர யோக சிகிச்சை முறை 79

அரை மணி நேர சிக்கனத் திட்டம். தனுராசனம்  3 நிமிடம்  பஸ்சிமோத்தானாசனம் 3 நிமிடம்  ஹலாசனம்  3 நிமிடம் சர்வாங்காசனம் 7 நிமிடம் மத்ச்யாசனம்  1 நிமிடம்  சிரசாசனம்  7 நிமிடம் சவாசனம் 3 நிமிடம்  உட்டியாணா  2 நிமிடம் நெளலி   2 நிமிடம் நாடி சுத்தி 5 நிமிடம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 78

1.மயூராசனம்,     2. சலபாசனம்,  3.யோகமுத்ரா,    4.புஜங்காசனம், 6. வாம, தக்ஷிண நெளலி,   7.  நெளலிக்ரியா 8.பாதஹஸ்தாசனம், 9. திரிகோணாசனம்,  10.  சித்தாசனம்.  காலம் அதிகமிருந்தால் மேற்கூறிய பத்து ஆசனங்களைக் கலக்கப் பிடித்தமில்லாவிட்டால், 1,2,3, 6, 7 மட்டும் சேர்த்து மிகுதியான காலத்தை சர்வாங்காசனம், கும்பகப் பிராணயாமங்களுக்கு, அதே வரிசைக் கிரமத்தில் சேர்க்கவும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 78

நாடி சுத்தி, பிராணயாமம் பத்மாசனத்தில் இருந்தபடியே செய்யப் பழகலாம். இந்தக் காலக் குறிப்புகள், ஆசனங்களிடையே ஏற்பட வேண்டிய ஓய்வையும் உள்ளடக்கியுள்ளது.  இந்தத் திட்டமும், கீழ்காணும் மற்ற இரண்டு திட்டங்களும், ஆரம்ப சாதகர்களுக்கல்ல, ஆசனம் நன்றாகப் பழகிய பின் ஏற்பட்டவையாகும் ஒரு மணிக்கு மேல் காலமிருந்தால் ஆனந்தரகஸ்யத்திலுள்ள  மற்ற ஆசனங்களுக்கு உபயோகிக்கவும்.  மேல் விதித்துள்ள ஆசனங்களில் நிற்கும் காலத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம்.  சேர்க்க வேண்டிய மற்ற ஆசனங்களில்.  கீழ்க்கண்ட வரிசை முக்கியமெனக் கருதவும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 77

ஆசனங்கள் செய்ய வேண்டிய நிமிடம்   செய்யவேண்டிய தடவை       தனுராசனம்                                        2                                  3                பஸ்சிமோத்தானாசனம்                  2                               …

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 7

புத்திமான் எல்லாக் காலத்திலும் கவனத்துடன் தனது ஆத்மாவை தியானிக்க வேண்டும்.  காணப்படாவிடடாலும் அது ஒன்றே உண்மை, வெளியுலகாய் அது விளங்கும் பொழுதும் ஸாக்ஷிமாத்திரமாகவே உளது. ஆகையால் அடையப்படுவது துக்கத்திற்குக் காரணம், அடைந்த மறுகணத்தில் அது ருசியற்றதாகிறது, அறிவிலிகளே அதை நாடுவர்.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 6

மதிமயக்கம் நீங்கியவன் ஒன்றேயாகிய ஆத்ம ஞானத்தை வேறு ஞானத்துடனோ கருமத்துடனோ பிணைக்க விரும்புவதில்லை. ஆதிகாரணம் அஸத் எனக் கூறுபவன் மலடி மகனுடன் வியாபாரம் செய்பவன், கானல் நீரால் தாகத்தைத் தீர்த்துக் கொள்பவன்.   

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 5

காமத்திற்கும் கர்மத்திற்கும் காரணத்தை அறியாதவனுக்கே சோகமும், மோகமும் ஆகயத்தைப்போல் பரிசுத்தமான ஆத்மாவைக் காண்பவனுக்கில்லை. 

மனிதர்கள் தோன்றிய காலம் முதல்

ஒரு விஷயம். மனிதர்கள் தோன்றிய காலம் முதல் இருக்கும் ஒன்று; மனிதர்கள் இன்னும் எத்தனை காலம் பூமியில் இருப்பார்களோ அதுவரை இருக்கும் ஒன்றுதான் காதல். இத்தனை ஆண்டுக்கால அனுபவம் இருந்தாலும் ஏனோ நாம் காதல் பண்ணும் விஷயத்தில் சொதப்பிக் கொண்டுதான் இருக்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இந்த மனிதர்களால் காதல் என்பதை மட்டும் கண்டறிய முடியவில்லை  எந்தளவுக்கு அது உடல் சார்ந்தது… எந்தளவுக்கு அது அறிவு சார்ந்தது? தெரியாது. இது விபத்தா,  தெரியாது. விதியா?  தெரியாது

 மாற்றத்திற்கான மூலம்

 மாற்றத்திற்கான மூலம் எண்ணங்களே… எண்ணங்கள் மாற செயல்கள் மாறும்… செயல்கள் மாற விளைவுகள் மாறும்…. விளைவுகள் மாற  வாழ்க்கையே மாறிவிடும். வளமான எண்ணங்களே வளமான வாழ்க்கைக்கு அடிப்படை

எண்ணங்களை

எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால்  அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.*

பயம் 8

எண்ணம் கடந்த காலத்தை பற்றி இருந்து நிகழ் கால நம்முடைய ஒவ்வொரு செயல்களிலும் அது நுழைந்து நமக்கு பயம், பொறாமை, இன்பம், வருத்தம் போன்றவற்றை தந்து கொண்டேயிருக்கிறது. அதனால், நாம் நம் நிலையை அறிந்து கொள்ள முடிவதில்லை. இதிலிருந்து விடுபட என்ன வழி, ஒரே வழி எதை நாம் அனுபவிக்கின்றோமோ அதை அப்போதே மறந்து விடுவது இது கடினமாக தோன்றும் விஷயம் ஆனால் நம்மை நாம் கவனிப்பதன் மூலம் மிக எளிதாக கைவரக்கூடிய விஷயம் இதை முயன்று…

பயம் 7

எண்ணத்தின் முழு செயல்பாடும் கடந்த காலத்திலேயே வேர் பரப்பி ஊன்றி நிற்கிறது அதனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அது நம்மை ந ல்லது, கெட்டது சரி, தவறு என்று நம்மை ஏதோ ஒன்றை தேர்ந்தெடுக்க நம்மை நிர்பந்திக்கிறது அதனால் நாம் நம் இயல்பு நிலையை இழக்கிறோம்

பயம் 6

நாம் வளர்ச்சி பாதையில் செல்ல திறமையாக திட்டமிடவும், செயல்படவும் வேண்டியுள்ளது.  இதை எண்ணமற்ற நிலையில் செய்யமுடியாது.  இப்போது நாம் எந்த முடிவுக்கு வருவது என்பது குழப்பமாகத்தான் இருக்கும்.  ஆனாலும், குழப்பம் தெளியவேண்டும் அதற்கு ஒரே வழி வினாவும், விசாரித்தலும்தான்.  நம் வாழ்க்கையில் எண்ணத்தின் இடம் என்ன என்ற விசாரிக்க ஆரம்பிக்க வேண்டும் அதில் நாம் எண்ணத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்வதற்கும் எண்ணம் நமது இயல்பான வாழ்க்கையில் குறிக்கிடாமல் இருப்பதற்கும் உள்ள எல்லைக்கோடு எது என்பதை கவனமாக உற்றுப்…

பயம் 5

இந்த கடந்த காலம், எதிர்காலம் என்பது எண்ணங்களால் ஆட்சி செய்யப்படுகிறது இந்த எண்ணங்களே பயத்தை நம்முள் விடாமல் அழுத்தமாக பிடித்து வைத்திருக்கிறது. இதை நாம் நன்றாக முதலில் புரிந்து கொள்வோம் அடுத்ததாக நமது வளர்ச்சிக்கும், இந்த எண்ணங்களே காரணமாயும் உதவி செய்வதாயும் இருக்கிறது. இந்த விஷயத்தை நன்கு கவனித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  நன்றாக இதை புரிந்து கொண்டபின் எண்ணங்கள் என்பது என்ன என்ற வினாவை நாம் முன் வைத்து சிந்தித்தால் வரும் பதில் எண்ணம்…

பயம் 4

மரண பயத்தை விட்டு விட்டு வேறு சில பயங்கள் எது என்று பார்த்தால் நாம் செய்த தவறுகள் வெளியே தெரிந்து விடுமோ எனும் பயம், நம்முடைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில கொண்டு எதிர் கால சிந்தனையில் ஏற்படும் பயம்.  இதில் நாம் கவனித்து பார்த்தால் பயம் என்ற விஷயம் கடந்த காலத்தையோ, அல்லது எதிர்காலத்தையோ மையமாக கொண்டுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்

பயம் 3

ஒருவாறு சிந்தித்து பார்த்தால் மனிதனுக்கு மரணமே மிக பெரிய பயமாய் இருந்திருக்கிறது இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது.  உண்மையில் சொல்லப்போனால் மரணம் வரும் வினாடி வரை நீங்கள் வாழ்க்கையில் மரணத்தின் பயத்தை ஒத்தி வைத்திருக்கிறீர்கள் அதாவது மரண பயத்திலிருந்து தப்பித்து வந்திருக்கின்றீர்கள் என்று அர்த்தம் நாம் நம்மிடம் உள்ள பல பயங்களில் இருந்து விடுபட அல்லது தற்காலிமாக வேணும் தப்பிக்க கோயில், மதம், கடவுள் போன்றவற்றின் துணையை கைக்கொண்டு வந்துள்ளோம் ஆனாலும் எத்தனையோ மதங்கள், கோயில்கள், கடவுள்கள், தத்துவங்களாலும்…

பயம் 2

இந்த பயம் பல சமயங்களில் மறைமுகமாகவும், சில சமயங்களில் மட்டுமே வெளிப்படையாகவும் உள்ளது.  பயம் ஏன் வருகிறது?  எப்படி  அந்த பயம் உருவாகிறது என்று நாம் சிந்தித்தால் மட்டுமே முழுமையாய் பயத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் அப்படி முழுமையாய் அறிந்து கொண்டபின் அந்த பயத்தை வேண்டுமானால் நாம் வைத்துக் கொள்ளலாம், வேண்டாமென்றால் அந்த பயத்தை தூக்கி போட்டு விடலாம்.