சந்திரன் 9

சந்திரனுக்கு 5க்குடையவன் கன்னியில் சுக்கிரனுடன் இணைந்து பாவிகள் சம்பந்தம் பெற்றாலும் குழந்தையோகம் ஏற்படும். சந்திரன் 6ல் (ஸ்திரி சூதகத்தில்) வியாதியால் பீடிக்கப்படுவாள்., மரியாதை, பணிவு இராது, பகைவர்கள் அதிகம் இருப்பார்கள் அற்பமானப் பணமே சேரும். சந்திர பலம், ஜன்ம ராசியில் இருந்து, சந்திரன் உலவுகிற 2,5,9 ஆம் ராசியானால் மத்திமம் 4,8,12ஆம் ராசியானால் அசுபம், 1,3,6,7,10, 11 ராசிகளில் இருந்தால் சுபம்.

சந்திரன் 8

சந்திரன் விருச்சிக ராசியில் இருக்கப்பெற்றால் மனிதாபிமானம் குறைந்திருக்கும், உறவினரை விட்டுப் பிரிந்திருப்பார்.  பொருளாதார நெருக்கடி இருக்கும். சந்திரன் கன்னியில் இருப்பாரானால் கல்வித்திறன் கூடும் இனிமையாக பேசுவர்.  சத்தியத்தை காப்பர், பெண்குழந்தை பாக்கியம் ஏற்படும். சந்திரன் கடகத்தில் இருக்கப் பெற்றவர்களுக்கு நல்ல வீடு அமையும். ஜோதிட புலமை ஏற்படும்.  கடல் கடந்த பயணங்களும், வெளிநாட்டு தொடர்பு உண்டாகும்.  ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்யும் வாய்ப்பையும் பெற்றிருப்பார்கள். சந்திரன் பெண் ஜாதகத்தில் 6 அல்லது 8லோ  இருக்கக்கூடாது.

சந்திரன் 7

சந்திரன் பலமுள்ள ஆண்களுக்கு இவரது தசையில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். சந்திரன் 10ம் வீட்டோடு தொடர்பு இருந்தால் அரசு அந்தஸ்து உண்டு. சந்திரன் விரையத்தில் இருந்தால் மனநிலை பாதிக்கப்படும். சந்திரனிலிருந்து 6,7,8ஆம் வீடுகளில் கேது, சனி, செவ்வாய் வீற்றிருந்தால் பாபாதியோகம் ஏற்படும். சந்திரன், ராகு இருவரும் ஒன்று கூடி 8ல் இருந்தால் மனஅமைதி குறையும்.

சந்திரன் 6

சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது.  பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.  இச்சுழற்சியில் பூமியைச் சுற்றுகிற சந்திரன், சூரிய பாதையில் குறிக்கிடும்.  இடம் வடபாகத்தில் அமைவது ராகு, தென்பாகத்தில் அமைவது கேது என அழைக்கபபடுகிறது. சந்திரனுக்கு 12ல் சனி இருந்தால் தமது வாழ்க்கைத் துணையினை பிரிந்து வாழ்வர். சந்திரன் பலமுடன் இருந்தால் சிவ வழிபாட்டின் மூலம் ஞானஒளி பெறுவர். சந்திரன் சிம்மத்தில் நின்று குரு பார்வை பெற்றால் அரசியலில் முன்னோடியாக திகழ்வார். சந்திரனும், சுக்கிரனும் பலம் பெற்றால் மக்கள்…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 15

2, 3 – க்குரியவர்கள் திரிகோணமடைய 8 – க்குடையவர் 3 – ல் இருந்து பார்க்க, அன்னியருடைய மனைவியை மனம் நோகாது புணரும் லீலா விநோதன். சந்திரனுக்கு 3 – இல் 7 – க்குடையவர்கள் நிற்க, 3 – க்குடையவர் பார்க்க, பல ஸ்திரீகளிடம் சுகத்தை அடைந்து கொள்வார்.

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 14

 சுக்கிரனும், 2, 3 – குடையவர்களும், மூவரும் திரிகோணமடைய 5 – க்குரியவர் பார்க்க சாஸ்திரங்களில் வல்லவராயிருந்தும் நரி ஊளையிட்டால் பயப்படுவார்.  3, 5, 6 – க்குடையவர்கள் பலமடைந்து 12 – ல் நிற்க, ராஜசபையிலும் பந்துக்கள் சபையிலும், பயமும், வெட்கமும் உடையவர். 7 – ல் ராகு நிற்க, 7 – க்குடையவர் கேந்திரமடைய தன் மனைவியோடு மதன நூல் விதிப்படி லீலைகள் செய்து வாழ்வார்.

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 13

சுக்கிரன் 12 – இல் நிற்க, 12 – க்குடையவர் 3 – ல் நிற்க, 12 – க்குடையவர் உச்சமடைய, வீரர்கள், யுத்தங்களை, சாகஸங்களை துரும்பாக மதிப்பார். 3 – க்குடையவர் பாவியுடன் கூடி 12 – ல் நிற்க, 12 – க்குடையவர் உச்சமடைய, வீரர்கள் யுத்தங்களை, சாகஸங்களை துரும்பாக மதிப்பார். செவ்வாயோடு சந்திரனுடன் கூடி 12 – ல் நிற்க, 3 – க்குடையவர் பார்க்க ராஜாங்கம் சென்று, வீரிய விஜயம் பெறுவார்.

சங்கு முத்திரை:-

முதலில் இடது கட்டை விரலை வலது உள்ளங்கையில் வைத்து கட்டை விரலை தவிர மற்ற வலது கை விரல்களால் இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். வலது பெருவிரல் இடது கையின் மற்ற நான்கு விரல்களைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இப்போது சங்கு போன்ற அமைப்பு கைகளில் உருவாகி இருக்கும். வலது கையின் பெரு விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே சங்கின் வாய் போன்ற ஒரு அமைப்பு உருவாகி இருக்கும். பலன்கள்:- தொண்டை சம்மந்தமான நோய்கள் குணமாகும். ஜீரணசக்தி அதிகரிக்கும்.…

மகாதேவர் ஆலயம்

கோட்டயம் மற்றும் திருவனந்தபுரத்துக்கு இடையே கோட்டயத்தில் இருந்து சுமார் நாற்பது கிலோ தொலைவில் உள்ளதே மகாதேவர் ஆலயம். அது சிவபெருமானின் ஆலயம். கொச்சினில் இருந்து சுமார் முப்பது கிலோ தொலைவில் இருக்கும். ஆலயத்தில் நான்கு பிராகாரங்கள். அனைத்தும் கறுப்புக் கல்லில் கட்டப்பட்டு உள்ளன. ஆலயத்தில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் ஐந்து அடி. பரசுராமர் அமைத்த ஆலயம்

வெள்ளெருக்கு விநாயகர் கோவில்

சென்னைக்கு அருகில் உள்ள ஒரகடம் எனும் ஊரில் வெள்ளெருக்கு விநாயகர் கோவில் உள்ளது. கோவில் நிலத்தில் வெள்ளெருக்கஞ் செடிகள் வளர்க்கப்படுகின்றன.    

குலசை முத்தாரம்மன்

ஆலயத்தின் சிறப்புகள் சிவபெருமானுடன் சேர்ந்து அமர்ந்த கோலத்தில் அம்மன் இருக்கும் அரிய காட்சியை இந்த ஆலயத்தில் தரிசிக்க முடியும். இறைவன்- ஞானமூர்த்தீஸ்வரர். அம்பாள்- முத்தாரம்மன். சிவன் கோவில்களில் நந்தி இருக்கும். ஆனால் குலசையில் அம்மனுக்கு எதிரே சிம்மம் உள்ளது இங்குள்ள முத்தாரம்மன் சிலை, கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் உள்ள சிற்பியின் கனவில், அம்பாளே சென்று செய்யச் சொன்னதாக தல வரலாறு சொல்கிறது. அம்மை நோயை தீர்க்கும் ஆற்றல் கொண்ட தெய்வம் என்பதால், இந்த அன்னைக்கு ‘முத்தாரம்மன்’ என்ற…

சுவாமிமலை

தமிழ் வருடங்கள் அறுபதையும் படிகளாகக் கொண்ட படைவீடு சுவாமிமலை தந்தை – மகன் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தரிசிக்க வேண்டிய ஆலயம் இதுவாகும்.  

திருத்தணி

சூரபத்மனை வென்ற பிறகு, முருகப்பெருமான் சினம் தணிந்து அமர்ந்த இடம்  திருத்தணி சினம்கொண்டவர்கள் குணம் மாறவும், சிநேகம் கொள்ளவும், செல்ல வேண்டிய இடம் திருத்தணியாகும்.  

பிறரை எள்ளி நகையாடுவது ஒரு நோய்

நமது தேசீய இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோய் ஊர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது எதை எடுத்தாலும் எள்ளி நகையாடுவது, சிரத்தை இல்லாமல் இருப்பது. இந்த நோயை ஒழித்துக் கட்டுங்கள். வலிமையுடன் சிரத்தையைப் பெற்றவர்களாக இருங்கள். மற்றவை அனைத்தும் தாமாக நிச்சயம் வந்து சேரும்.  

கட்டளையிட விரும்பாதே கீழ்ப்படிந்து நட

ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகிறார்கள் கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராகஇல்லை. பண்டைக் காலத்தில் நிலவி வந்த வியப்பிற்குரிய பிரம்மசரிய முறை இந்தநாளில் மறைந்து போனதுதான் இதற்கு காரணம். முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள். பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாகவந்து சேரும். எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். அதன்பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும்

சொந்தக் காலில் நிற்க உதவுவதே உண்மைக் கல்வி

பாமரர்களாகிய பொதுமக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாகஇருக்க உதவி செய்யாத கல்வி, உறுதியான நல்ல ஒழுக்கத்தையும், பிறருக்குஉதவிபுரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி, அதைக் கல்வி என்று சொல்வது பொருந்துமா ? எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனை தனது சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்கிறதோ, அதுதான் உண்மையான கல்வியாகும்.

ஆதி. 11     சமணம்

இனி, சமணத்தைப் பற்றி பார்ப்போம்.  சமண மதத்தின் தத்துவங்களை உருவாக்கியவர் மகாவீரர் ஞானம் அடையும் முன் இவர் பெயர் வர்த்தமானர் எல்லாவற்றையும் துறந்துவிட வேண்டும் என்பதே சமண தத்துவத்தின் கருப்பொருள்  தத்துவங்களின் பயணம் உண்மையை தேடி அதாவது அறுதியான, இறுதியான உண்மையை தேடி இதில் அந்த உண்மையை சமண தத்துவம் எல்லாவற்றையும் விட்டு விடுதல் என்ற அடிப்படையில் உண்மையை நாடி பயணிக்கிறது. அதன், பார்வையில் கண்ணுக்கு, புலனுக்கு தெரியும் உலகமும் உண்டு.  கண்ணுக்கும், புலனுக்கும் தெரியாத சூட்சமமான…

ஆதி. 10 லோகாயதம் — சார்வாகர்கள் — நாத்திகம் 4

லோகாயதம் — சார்வாகர்கள் — நாத்திகம் 4  நம் புலன்கள் அறியாத காரணத்தால் தீர்மானமாக நாம் நம்பலாம் கடவுள் என்று ஒன்று இல்லையென்று.  கடவுள் இல்லையென்று ஆகிவிட்டதால் கர்மவினையும் இல்லை என்பதே இவர்கள் தத்துவம் சுருக்கமாக சொன்னால் பூதங்களின் இயல்பான குணவிசேஷத்தால் உள்ள கலப்புகளே பொருள்கள் அந்த பொருள்களை காண முடியும் உணர முடியும் சில கால கட்டத்தில் இணைந்த பூதங்கள் பிரிந்து வேறாக மாறுகின்றன இதில் மனிதனும் அடக்கம் அதனால் மனிதன் அனுபவிக்க பிறந்துள்ளான், அனுபவிக்கிறான்,…

சுந்தர யோக சிகிச்சை முறை 76

எவ்வளவு காலம் இதற்குச் செலவழிக்க வேண்டும்?  ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது இதில் ஈடுபடுதல் அவசியமாகும்.  எதிர்பாராத சம்பவங்கள் குறுக்கிட்டால் அரை மணி நேரமாவது பயிலலாம்.  எதற்குமே ஓய்வில்லாவிட்டால் கால்மணி நேரம் ஓய்வற்ற நாளிலும் இதற்குச் செலவிடலாம்.  தினம் தனுராசனம், பஸ்சிமோத்தானாசனம், ஹலாசனம், சர்வாங்காசனம், மத்ச்யாசனம், சிரசாசனம், அர்த்த மத்ச்யேந்த்ராசனம், பத்மாசனம், உட்டியாணா, நெளலி, சவாசனம், நாடி சுத்தி செய்ய வேண்டியது, மற்றவைகளை ஓய்வுக்குகந்தவாறு இவைகளுள் கலந்து கொள்ளலாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 75

 நோய் தடுக்க மேல் கூறப்பட்ட பலன்களைப் பெற்று வாழ யோகாசனப் பிராணயாமத்தை எவ்வாறு உபயோகிக்க வேண்டும்?   இதற்கு தினசரித் திட்டம் என்ன?  எல்லோரும் எல்லாவற்றையும் செய்வது அவசியமா?  ஆனந்தரகஸ்ய நூலில் கூறிய ஆசனங்களில் எவற்றைத் தினம் அவசியம் செய்ய வேண்டும்?  எவைகளை இஷ்டம், காலம் , செளகரியத்திற்கொப்ப சேர்த்துக்கொள்ளலாம். ஒருவன் ஒரு வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது செய்யவேண்டும்.  ஒரு நாள் விடுமுறை எடுத்து வாரத்தில் ஆறு நாட்கள் செய்தல் அதிகப்பலனைக் கொடுக்கும். நித்தியக் கடனாக…

சுந்தர யோக சிகிச்சை முறை 74

மனதிற்குச் சாந்தி அளிக்கிறது. பிராண உடலில் சமாதானமாக இயற்கைக்குகந்தவாறு பரவி, நிலைத்து வேலை செய்யத் தூண்டுகிறது. சளைக்காது அதிக வேலை, அதிகப்படிப்பு, அதிகச் சிந்தனை செய்ய உதவுகிறது. ஒவ்வொருவரையும் அவரவர் தொழிலில், வாழ்வில் சக்தி பெற புத்தி, சாமார்த்தியத்தை அளிக்கிறது. இக்கவசத்தின் எண்ணற்ற பலன்களை எடுத்துரைக்க இயலாது.

பயம்.

பயம் இது எல்லோரிடமும் உள்ளது.  அனால் அது எற்படுவதற்குரிய சூழ்நிலைகளும் , பொருள்களும் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. மற்றபடி பயம் என்பது பயம்தான். நீரை கண்டு பயப்படாதவன்  நெருப்பைக் கண்டு பயப்படலாம்.  பாம்பைக்கண்டு பயப்படாதவன் புலியைக் கண்டு பயப்படலாம். இதில் நாம் சற்று சிந்தித்துப்பார்த்தால் பயம் என்பது அதாவது பயம் எனும் உணர்வு தனியே நிற்பதில்லை.  அதாவது பயத்தால் தனியாக செயல்படமுடியாது. அதற்கு ஏதாவது ஒரு பிடிமானம் வேண்டும் அந்த பிடிமானம் என்பது இருட்டாய் இருக்கலாம்.  கொடிய…

சந்தோஷம் என்பது 33

அமைதி எனும் நிலையை அடைய மனிதன் தனக்கு தானே சுய பரிசோதனை செய்தால் மட்டுமே முடியும் என்ற தீர்வு வந்த பின் அந்த சுய பரிசோதனையை எங்கிருந்து, எப்படி, எதைக் கொண்டு ஆரம்பிப்பது. சுய பரிசோதனை என்றால் உள்ளதை உள்ளபடி அறிதல் அதன் பின் அதை ஏற்றுக் கொள்ளல் பின் அதை அதை முழுமையாய் கைக்கொள்ளல்

சந்தோஷம் என்பது 32

ஒரு விதத்தில் பார்த்தால் கல்வி நிறுவனங்களும், முறைபடுத்தப்பட்ட மதங்களும், பிரச்சாரங்களும், அரசியல் அமைப்புகளும் எல்லாம் தோல்வியை தழுவிவிட்டது என்பதற்க்கு உதாரணம் இப்போதைய மக்கள் நிலையே போதுமானது.  அதனால், மனிதனுக்கு தற்போது அவனை காப்பாற்ற எதுவுமில்லை என்பதே தெளிவாக இருக்கிறது. அவனை காப்பாற்ற அவனால் மட்டுமே முடியும் என்பதே தீர்வாக தெரிகிறது. 

சந்தோஷம் என்பது 31 

மனிதன் தன் இயல்பை, சுதந்திரத்தை, சுகத்தை, மறந்து அல்லது தொலைத்து ஆண்டுகள் பலவாகிவிட்டது.  தனக்குள் இருக்கும் பல உணர்வு நிலைகளில் அவன் பல்வேறு துண்டுகளாக சிதறிபோய்விட்டான் இந்த துண்டுகள் இணைந்து மனிதன் முழுமையடைய வேண்டுமென்றால் எதனால் முடியும், எப்படி முடியும் .

சந்தோஷம் என்பது 30

அரசியளார்கள், மதகுருமார்கள், தனிதிறமை பொருந்தியவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள் என்று இருப்பவர்களாலும் இருந்தவர்களாலும் இது நாள் வரையில் உலகில் அமைதியையோ, மகிழ்ச்சியையோ, திருப்தியையோ மனிதனின் இயல்பான சுதந்திர நிலையினையோ கொண்டு வர முடியவில்லை என்பதே உண்மை.

சந்தோஷம் என்பது 29

ஒரு விதத்தில் பார்த்தால் மனித இனம் ஒவ்வொரு விதத்தில் தேசிய, கலாசார, மத விஷயங்களில் பிளவு பட்டு இருக்கிறது.  பிளவுபட்டதை இணைந்து விடாமல் இருக்க தேசியமும், மதமும் தங்களால் முடிந்த அளவு போராடுகின்றது. இந்த குழப்பத்தை காணும் போது காணும் நபர் என்ன செய்வது, என்ன செய்வது என்று யாரை போய் கேட்பது இப்படிப்பட்ட பூனைகளுக்கு மணி கட்டுவது யார்  என்பதே வினாவாயும் தனக்குள் விவாதமாயும் இருக்கிறது.

சந்தோஷம் என்பது 28

எல்லா கோட்பாடுகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கின்றன எந்த விஷயத்திலும் எந்த தத்துவத்திற்க்கும் நீடித்த நிலையில் மதிப்போ, ஆதாரமோ, நம்பிக்கையோ இருப்பதில்லையென்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம் இது, மதமாகட்டும், தத்துவமாகட்டும், நிறுவனமாகட்டும், தனிமனித உறவுகள் ஆகட்டும் எல்லாவற்றிலும் இந்த நிலையேதான் உள்ளது.  இந்த சூழ்நிலையில் இந்த குழப்பமும் சந்தேகமும், பதற்றமும் நிறைந்த உலகில் நாம் எப்படி நம்மை தயார்படுத்திக் கொள்வது என்பதே நம் எதிரில் இருக்கும் வினா.

சந்தோஷம் என்பது 27

உலகில் அதாவது மனிதர்கள் வாழுமிடங்கள் அனைத்திலும், குழப்பம், முறைகேடு, வன்முறை, கிளர்ச்சி, கொடூரத்தன்மை, போர், போன்றவையே நிறைந்துள்ளதை காணும் போது மனிதனுக்கு ஆறறிவு உண்டா அவன் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவன் தானா?  அவன் சரி, தவறு, என்று அறியும் ஆற்றல் உடையவன் தானா எனும் ஐயப்பாடு எழுகிறது.  இதில் தனி மனித வாழ்க்கையும் கூட குழப்பமும், எதிர்மறை சிந்தனைகளும் எதிர்மறை செயல்களும், நிறைந்ததாகவே உள்ளது.

சந்தோஷம் என்பது 26

நமது வாழ்க்கை முறையில், வாழுதல் எனும் நிகழ்வில் பிரச்சனைக்குறியதாக வன்முறை உள்ளடங்கியுள்ளது.  அது ஒவ்வொரு மனிதனின் சிந்தனையிலும், செயலிலும் வெகு ஆழமாக ஊடுருவி இருக்கிறது என்பதே உண்மை அதனால் தான் தொழில் நுட்பங்களில் மனிதன் அசாதாரண பிரம்மிப்பூட்டும் வெற்றியடைந்த நிலையிலும் மனிதன் இன்னும் போர், பேராசை, பொறாமை, தாங்கற்கரிய சோகம் இவற்றால் கனமாக அழுத்தப்பட்டு இருக்கிறான்.

சந்தோஷம் என்பது  25

சிருஷ்டியின் ரகசியத்தை எதைக்கொண்டும் நிரூபிக்க முடியாது.  ஒன்று அதை எப்படியாவது கஷ்டப்பட்டு அறிந்து கொள்ளலாம் அல்லது அறியாமல் விட்டுவிடலாம் இவ்வளவுதான் முடியும் அதை, வாத, விவாதங்கள் மூலம் நிரூபிக்க முடியாது.  அப்படி நிரூபிக்க முடியாதது தான் சிருஷ்டியின் அழகு, அதிசயம் இதை தான் நம் முன்னோர்கள் இறைவன் என்றும் கடவுள் என்றும் சொன்னார்கள்.