சுந்தர யோக சிகிச்சை முறை 73

உடலை வனப்புறச் செய்கிறது. ஊளைச்சதை பற்றாது தடுக்கிறது. ஆயுளை அதிகரிக்கின்றது. புலன்களை சுத்தம் செய்கிறது. மூளையை அபிவிருத்தி செய்கிறது. நரம்புகளை, நரம்பு வலைகள், நரம்பு சக்கரங்களை விழிப்பித்து, வீரியப் படுத்தி நன்கு வேலை செய்யத்தூண்டுகிறது. காமக்ரோத, லோப, மோக, மத மத்சரங்களை விலக்கி பரிசுத்தம் செய்து ஆட்சி புரிகிறது.

சுந்தர யோக சிகிச்சை முறை 72

உயிர்கருவிகளான இருதயம், சுவாசப்பைகளை நேராகத் தாக்கி வீர்ய நிலையில் வைக்கிறது. ரத்தவோட்டத்தை சுறுசுறுப்பாக்கி, அசுத்தத்தை எளிதாக முற்றிலும் போக்குகிறது. ரசங்களை ஒழுங்கான முறையில் கக்கச் செய்து, ரத்தத்தில் கலக்கச் செய்கிறது. நோய் கிருமிகளைக்கொன்று, உயிர்ப்பிக்கும் சக்தியை எண்ணற்ற மடங்கு அதிகரிக்கிறது. வளர்ச்சி, ஆண்மை, பெண்மை, உன்னதம் பெற உதவுகிறது.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 4

 பகவான் வியாஸர் தமது குமாரருக்கு நீண்ட ஆலோசனையின் பயனாய்ப் பின்வருமாறு உபதேசித்தார், வேதத்தில்  இருவேறு மார்க்கங்கள் கூறப்பட்டுள்ளன ஒன்று பிரவிருத்தி ( கர்மமார்க்கம் ), மற்றொன்று நிவிருத்தி ( ஞானஸந்நியாஸமார்க்கம் ). அத்விதீய பிராம்மீஸ்திதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் தேவர்களும், அசுரர்களுக்கொப்பானவர்களே, அவர்களுடைய உலகங்களும் அசுரத்தன்மையுடையனவே.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 3

நாம் நாள்தோறும் கண்டனுபவிக்கும் உலகம் வியவகாரத்தில் உண்மையாகத் தோன்றினாலும் அடுத்த நொடியில் பொய்த்துப் போவதால் அது இருப்பில்லாத கனவுலகம் போன்றதேயாகின்றது. ஞானத்திற்கும் கருமத்திற்குமிடையே உள்ள வேற்றுமை மலை போன்று அசைக்க முடியாதது.

சந்தோஷம் என்பது  24

ஒரு சிறு குழந்தையை போல உடைகள் ஏதுமின்றி ,பொய் முகங்கள் ஏதுமின்றி அதாவது (பொய் முகங்கள் என்பது அறிவாளி, முட்டாள்,பணக்காரன், ஏழை, பண்டிதன், பாமரன், வேதாந்தி, அஞ்ஞானி, ஞானி, அப்பா, மகன், சகோதரன், கணவன், மனைவி, இது போல இன்னும் எத்தனையோ இருக்கின்ற அதிகார சின்னங்களும், உறவு சின்னங்கள் இன்றி.) அப்பட்டமாக நிர்வாணமாகி உண்மையில் நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே கடவுள் உன்னை பார்க்கும்படி நீ செய்தால் சந்தோஷம்  சாத்தியமே  எப்போதும் சந்தோஷமே இது சாத்தியமா?

சந்தோஷம் என்பது  23

இங்கு எல்லாவற்றையும் என்று நான் சொல்லுவது உன்னுடைய வாழ்க்கையை அதன் அழகை அதன் உன்னதத்தை சூரிய உதயம், அஸ்தமனம், நட்சத்திரங்கள் நிறைந்த இரவு வானம், தாமரையின் அழகு ரோஜாவின் வாசனை, வளர்ந்து தேயும் நிலவு, ஆர்பரித்து ஓடும் ஆறு ஓ என்று ஒசையுடன் விழும் அருவி உயர்ந்த சிகரங்களை கொண்ட மலை அதில் படர்ந்திருக்கும் பனி  இவைகளை ரசிக்க தெரிந்தால் உன் மனம் லேசாகிவிடும்.  பூரணம் அதில் நிரம்பி வழியும் அப்போது நீ உண்மையிலேயே, தாயை, தந்தையை,…

சந்தோஷம் என்பது  22

அன்பை அறிந்து கொண்டு அதில் திளைப்பவனுக்கு பணத்தின் அருமை, பெருமை, அதிகாரத்தின் ஆற்றல் போன்றவை ஏனோ தெரிவதில்லை.  மக்கள் ( உலகோர் ) பார்வையில் கையாலாகதவனாக எதிர்கால சிந்தனையற்றவனாக பிழைக்கத் தெரியாத அறிவிலியாகவே தென்படுவான். உன்னை சுற்றி இருக்கின்ற நடக்கின்ற விஷயங்களை ரசித்து பழகினால் ரசிப்பது எப்படி என்ற வித்தையை அதன் சூட்சுமத்தை அறிந்து கொண்டால் நீ பணத்தின் மீது உன்னுடைய எல்லாவற்றையும் இழக்கும் அளவுக்கு மோகம் கொள்ளமாட்டாய்

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 12

3 – ல் சுக்கிரன் நிற்க, 3 – க்குடையவர் சுக்கிரன் வீட்டில் நிற்க, முத்து, ரத்தினம், மாலையணியும் பொன் போன்ற தேகம் உடையவர். குரு 3 – இல் நிற்க, புதனுடன் 3 – க்குடையவர் கூடி பகை பெற்று செவ்வாய் பார்க்க ரத்தினமாலை அணிவார். லக்கினாதிபதியுடன் 2 – க்குடையவர் கூடி கேந்திரமடைய புதன் பார்க்க அழகான உடல், ரத்தினமாலை அணிவான். சந்திரன் நின்ற ராசிக்கு 2 – க்குடையவர் 12 – ல்…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 11

சனி, சூரியன் சேர்க்கையை 3 – க்குடையவர் பார்க்க 12 – க்குடையவர் சேர பல சகோதரர்கள் இருந்தும் ஒற்றுமை குறையும். மனபேதங்கள் காணும். உயிர் சேதங்கள் ஏற்படும். 3 – க்குடையவரும், சனியும், கூடி 12 – ல் நிற்க, 8 – க்குடையவர் 3 – ல் நிற்க, சகோதரர்களைப் பெற்ற தாய்க்கு வீண் வேதனையும் பாவமும் தரும் சகோதரர்களாக வருவார்கள்.  3, 10 – க்குடையவர்கள்ள கூடி 8 – ல் நிற்க,…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 10

 3 – க்குடையவரும், செவ்வாயும், சனி, மூவரும் சேர்ந்து 7 – இல் நிற்க ஒரு சகோதரர் இருந்தும் பயன் இல்லை. செவ்வாய், 3 – க்குடையவருடன் கூடி 4 – ல் நிற்க, லக்கினாதிபதி நீச்சமடைய, 3 – ஆமிடம் சூன்யமாக இருக்க, சொப்பனத்திலும் சகோதரர் இல்லை.  3 – இல் ராகு நிற்க, 5 – ஆம் இடம் சூனியமாக செவ்வாய் 3 – க்குடையவருடன் கூடி நிற்க, முன்னும், பின்னும் சகோதரம் இல்லை.…

சந்திரன் 5

சந்திரன் புதனுடன் சேரும்போது மனநிலை பாதிப்பு, சித்த பிரமை ஏற்படுத்துகிறது. சந்திரன், செவ்வாயுடன் சேரும்போது ரத்த அழுத்த நோயை தருகிறது.  சந்திரன் சுக்கிரனுடன் சேரும்போது உணர்ச்சிவேகம் செய்து மனநிலை பாதிப்பை தருகிறது. சந்திரன் ராகு, கேது கிரகங்களுடன் சேரும்போது கிரஹணதோஷம் ஏற்படுகிறது. சந்திரன் ஒரு தினக்கோளாகும், சந்திரனது நக்ஷத்திரம் ரோஹிணி, அஸ்தம், திருவோணம்.

சந்திரன் 4

சந்திரனுக்கு 1, 4, 7, 10ல் செவ்வாய் இருக்கும் போது சந்திர மங்கள யோகம். சந்திரனுக்கு 1,4,7,10ல் சுக்கிரன் இருக்கும்போது மாளவ யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 1,4,7,10ல் புதன் இருக்கும்போது பத்திர யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 6,7,8 சுபகிரகம் இருக்கும்போது அதியோகத்தை தருகிறது.  சந்திரன் சனியுடன் சேரும்போதும், பார்க்கும்போதும் நரம்புதளர்ச்சி, வாத நோயை தருகிறது.

சந்திரன் 3

சந்திரனுக்கு 6,8,12ல் குரு இருக்கும்போது சகட யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 12ல் கிரகம் இருக்கும்போது சுனபா யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2ல் கிரகம் இருக்கும்போது அனபா யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இருந்தால் மகாசக்தி யோகம் ஏற்படுகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இல்லாமல் இருக்கம்போது கேமத்துரும யோகம் தருகிறது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  68

இதுவுமது …..  சமமான ஆகாரம், மித சஞ்சாரம் ஆக இவ்விரண்டையும் சதா அனுஷ்டிக்கிறவர்கள் அகந்துக காலத்தை மிரட்டி காலபிராப்தி அளவு ஜீவித்திருக்கிறார்கள்.  அவர்களது சீவனம் அமிருத துல்யமென்று சொல்லப்படுகின்றது. சிரஞ்சீவியாய் இருக்க விதம் …..  மரணம் இல்லாமல் சிரஞ்சீவியாய் இருக்க இஷ்டப்படுகிற பண்டிதர்கள் ( கால பிராப்தி ) என்கிற சத்துருவை விஜயம் செய்து ஸ்திரமாயிருக்கிறார்கள்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  67

சரீர ரக்ஷண உபதேசம் முதலில் மனிதன் சகல கருமங்களைவிட்டு சரீரத்தை பரிபாலிக்க வேண்டியது.  அவசியமாக இருக்கிறது சரீரமில்லாது சுபம், அசுபம், இல்லாமை இவைகள் எப்படி வாய்க்கும். சரீரத்தை பாதுகாக்க வேண்டிய முறை பட்டணத்தை படைத்தவன் பட்டணத்தை எவ்விதம் பரிபாலிக்கிறானோ அவ்விதம் மேதாவி ஆனவன் சரீரத்தை பாதுகாக்கவேண்டியது.  சரீரத்தை பாதுகாப்பவனது அகாலம் அகன்று காலமென்கிற பராக்கிற உச்சாஹம் இந்திரிய ஆயுர்பலம் முதலியவைகள் உண்டாகின்றது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  66

அகலில் சம்பூரணமாய் எண்ணெயிருந்து எரிந்துக்கொண்டிருந்த வத்தியானது கையால் எப்படி அணைந்து போகிறதோ அவ்வண்ணம் சகலத்திற்கும் ஆதாரமாகிய வாயு ஆதாரமற்றதாகிறதினால் பிராணிகளுக்கு மரணம் சம்பவிக்கின்றது. இதற்கு ஆகந்துக மிருத்யு என்றுப்பேர்.  இது வைத்தியனுடைய மந்திர, தந்திர மங்களாசரணத்தினால் சாந்தியாகின்றது. மரணகாலம் சம்பவிக்கும்போது எந்த விதமான மருந்தும் பிரயோஜனப்படாது.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 2

விழிப்பு நிலையில் கனவு பொய்யாகிறது, கனவு நிலையில் விழிப்புலகம் இல்லை, ஆழ்ந்த உறக்கத்தில் இரண்டும் இல்லை.  உறக்கமும் மற்ற இரண்டு நிலைகளில் இல்லை.  ஆகையால் முக்குணங்களால் சிருஷ்டிக்கப்பட்ட மூன்று நிலைகளும் பொய்யோகின்றன.  எனினும் அவற்றிற்குப்பின் உள்ள ஸாக்ஷியோ குணங்களைக் கடந்து நித்தியமாய் ஏகமாய் அறிவு வடிவான மெய்ப்பொருளாய் விளங்குகிறது.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 1

எப்படியோ மனிதப்பிறவியை, அதிலும் புருஷ சரீரத்தை, அடைந்து வேதத்தையும் கற்றுணர்ந்து அதன் பின்னும், ஒருவன் மூடனாய் முக்திக்கு முயலாவிட்டால், இவன் தற்கொலை செய்து கொண்டவனுக் கொப்பாகிறான். ஏனெனில் பொய்யான பொருள்களைப் பற்றிக் கொண்டு அவன் தன்னை மாய்த்துக் கொள்ளுகிறான். முக்திக்குதவும் சாதனங்களுள் பக்திதான் தலைசிறந்தது.  தன்னுடைய உண்மை நிலையில் நாட்டமே பக்தியெனப்படும்

காயப்படுத்தாமல்

வாழ்க்கை எப்படி வேண்டுமெனாலும் மாறட்டும். எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும். அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும். ஆனால் எதுவும் மறந்து போகாது…

சுந்தர யோக சிகிச்சை முறை 71

உணவு, ஒழுக்கம், உழைப்பு இயற்கை முறையில் அமைத்துக் கொள்வதுடன், நோயைத் தடுத்து, சுகமாக நீடூழி காலம் வாழ, யோகாசனப் பிராணாயாமம் எவ்வாறு நிறைவேற்றுகின்றது?  இதற்கு சக்தியுண்டு என்று அறிய விஞ்ஞானம் என்ன? இந்த கேள்விகளுக்கு விபரமாக யாவரையும் நம்பச் செய்யும் ஆனந்த ரகஸ்யம் என்னும் நூலில் காணவும். இந்தக்கவசத்தின் சக்தியையும், இது வேலை செய்யும் முறைகளையும் கீழ்க்கண்ட குறிப்புகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 70

ஆரோக்கிய வாழ்க்கைக்கும் இயற்கை வாழ்க்கைக்கும் புலனடக்கத் திற்கும், மனச்சாந்திக்கும், விரோதமாகவே அமைந்திருக்கின்றது.  இயந்திர யுக – நாகரிக – அவசர, வாழ்க்கை, உணவு, ஒழுக்கம், உழைப்பு மட்டும் நன்முறையாக இருந்தால் போதாது.  இதனால் மட்டும் நோய்களைத் தடுத்து நிறுத்த இயலாது.  வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வாலும் சிதைக்கப்படாத‍, நோய், தடுக்கும்.  சீர்திருத்தம், அமோக  சக்தி வாய்ந்த, ஒரு கவசம் வேண்டும்.  அந்த கவசம்தான் யோகாசனப் பிராணயாமம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 69

 ஹோட்டல்கள் கணக்கின்றி ஊரெல்லாம் பரவிவிட்டன.  இவைகள் பணம் திரட்ட நடத்தப்படுகின்றன.  ஜனங்களுக்குச் சேவை செய்ய அல்ல.  லாபமும், சேவையும் கலந்து நடத்தப்படுவதில்லை. இதில் உணவு தயாரிக்கும் முறைகள்  சேர்க்கப்படும் பொருள்கள், நோய் பரவக் காரணமாகின்றன.  பட்டினங்கள் பெருக இயந்திர யுகம் பரவ, வீட்டிலுண்பது குறைய, ஹோட்டல்கள் எங்கு பார்த்தாலும், கிளம்ப,காரணமாகிவிட்டது இவைகளில் உண்ண வேண்டிய அவசியம் அடிக்கடி ஏற்பட நோயிலிருந்து ஒருவன் தன்னை தடுத்துக் கொள்வது சிரமமோங்கிய, நுட்பமான செயலாகிவிட்டது.

அபான வாயு முத்திரை

ஆள்காட்டி விரலை மடித்து உள்ளங்கையில் வைக்க வேண்டும். பின்பு நடுவிரல் நுனியும் மோதிரவிரல் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். சுண்டுவிரல் நீண்டிருக்க வேண்டும். பலன்கள்:- 1.நரம்பு சம்மந்தமான நோய்கள் குணமாகும். 2.மன அழுத்தம் மன இருக்கம் போன்ற பிரச்சனைகள் தீரும். 3.மலச்சிக்கல் தீரும், சிறுநீர்ப் பிரச்சனை தீரும். 4.தலைவலி மற்றும் கழுத்துவலி குணமாகும். 5.இதயம் சம்மந்தமான நோய்களை குணமாக்கும் இதயத் துடிப்பை சீராக்கும். 6.இரத்தஅழுத்தத்தைக் குறைக்கும். 7.லோ பிரசர் (குறை இரத்த அழுத்தம்) இருப்பவர்கள்…

நாஷக் முத்திரை

சுண்டுவிரலை மடக்கி பெருவிரலுக்கு அடியில் வைத்து லேசான அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- 1.சளி, இரும்பல், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல் ஆகியவற்றைப் போக்கும். 2.சிறுநீர் சம்மந்தமான நோய்கள் குணமாகும். 3.உடலில் நீரின் அளவை சமன்படுத்தும். 4.உள்ளங்கை, உள்ளங்காலில் ஏற்படும் அதிக வியர்வையைப் போக்கும். 5.மாதவிடாய்ப் பிரச்சனைகள் தீரும். இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது சிறப்பு.  வயதானவர்கள், ஆசனநிலையில் அமர…

சூரிய முத்திரை:

மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- 1.வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். 2.உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும். 3.தொப்பை குறையும்.       4.கொழுப்பை குறைக்கும் 5.உடல் பருமன் குறையும்      6.தைராய்டு சுரப்பி ஆற்றல் அதிகரிக்கும் 7.ரத்தக் குழாய்களில் அடைப்பு நீங்கும்   8.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 9.பார்வைத் திறன் அதிகரிக்கும்     10.களைப்பைப் போக்கும். 11.ஆஸ்துமா,பீனிசம்…

அடக்குமுறையும் எதிர்ப்பும் வரவேற்கத் தக்கவையே

ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். ஏளனம், எதிர்ப்பு பிறகு ஏற்றுக் கொள்ளப்படுதல். தனது காலத்தைவிட முற்போக்காகச் சிந்திக்கும்ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்துகொள்ளப்படுவான். எனவேஎதிர்ப்பும், அடக்குமுறையும் வரவேற்கத் தக்கவையே. ஆனால் நாம் மட்டும்உறுதியாகவும், துாய்மையாகவும், கடவுளிடம் அளவுகடந்த நம்பிக்கைஉடையவனாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்த இடைஞ்சல்கள்எல்லாம் மறைந்து போய்விடும்.  

கரடு முரடான பாதை

இந்தப் பிரபஞ்சத்திலேயே நன்மைக்கு அழைத்துச் செல்லும் பாதைதான் மிகவும் கரடுமுரடாகவும், செங்குத்தானதாகவும் இருக்கிறது. அந்தப் பாதையில் எத்தனை பேர்வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது தான் வியப்புக்கு உரிய விஷயம். பல பேர்தோல்வி அடைந்து போனதில் ஆச்சரியமே இல்லை. ஆயிரம் முறை இடறிவிழுந்தவன் மூலம் தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும்.

சந்தோஷம் என்பது 33

அமைதி எனும் நிலையை அடைய மனிதன் தனக்கு தானே சுய பரிசோதனை செய்தால் மட்டுமே முடியும் என்ற தீர்வு வந்த பின் அந்த சுய பரிசோதனையை எங்கிருந்து, எப்படி, எதைக் கொண்டு ஆரம்பிப்பது. சுய பரிசோதனை என்றால் உள்ளதை உள்ளபடி அறிதல் அதன் பின் அதை ஏற்றுக் கொள்ளல் பின் அதை அதை முழுமையாய் கைக்கொள்ளல்.

உன் வினை உன்னைச் சுடும்

பகை, பொறாமை ஆகியவற்றை  நீ  வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். வேறு எந்தச் சக்தியாலும்அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது ஒருமுறை நீ அவற்றை இயங்கச்செய்துவிட்டால் அதனால் வரும் விளைவையும் நீ ஏற்றே ஆகவேண்டும். இதை நீ நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், தீய செயல்களைச் செய்வதிலிருந்து  எப்போதும் விலகியிரு.

சண்டையிடுவதிலும், குறை சொல்வதும் வீண்

சண்டையிடுவதிலும், குறைசொல்லிக் கொண்டிருப்திலும் என்ன பயன் இருக்கிறது ? நிலைமையைச் சீர்படுத்திக் அமைக்க அவை நமக்கு உதவப் போவதில்லை. தான் செய்ய வேண்டிய கடமையாக அமையும் சிறிய வேலைகளுக்கு முணுமுணுப்பவன் எல்லாவற்றுக்கும் முணுமுணுக்கவே செய்வான். எப்போதும்முணுமுணுத்தபடியே அவன் துன்பம் பொருந்திய வாழ்க்கை வாழ்வான். அவன்தொடுவது எல்லாமே தோல்வியில் முடியும். ஆனால் தன் கடமைகளைத் தவறாமல்ஒழுங்காகச் செய்து கொண்டு, தன்னால் ஆனவரை வாழ்க்கையில் முயன்றுகொண்டிருப்பவன் கட்டாயம் ஒளியைக் காண்பான். மேலும் மேலும் உயர்ந்தகடமைகள் அவனது பங்காக அவனைத் தேடித்…