கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 9

4, 9 – க்குடையவர்கள் 11 – ல் நிற்க, 11 – க்குடையவர், 3 – ல் நிற்க, சந்திரன் செவ்வாய்க்கு கேந்திரம் அடைய, 7 – க்குடையவர் பார்க்க, பேதமில்லாத துணைவர் உண்டு. சந்திரனுக்கும், லக்கினத்திற்கும், 3 – க்குடையவர்கள் கூடி திரிகோணமடைய குரு பார்க்க, செவ்வாய் திரிகோணமடைய புண்ணிய சகோதரர்கள் உண்டு. 3 – ல் புதன் நிற்க, 12 – ல் சனி நிற்க, 5 – ல் சூரியன் நிற்க,…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 8

7, 4 – க்குரியவர்கள் கூடி 3 – ல் நிற்க, 3 – க்குடையவர் கேந்திரமடைய குரு 5 – ல் நிற்க, சுகமாகிய நிலைத்த சகோதரம் உண்டு. செவ்வாய்க்கு 3 – க்குடையவர் உச்சமடைந்து, அவ்வுச்ச ராசியாதிபதி திரிகோணமடைய 3 – ல் குரு நிற்க, சுபர் பார்க்க செல்வந்தரான துணைவர்கள் உண்டு.  3 – க்குடையவர் திரிகோணமடைய, செவ்வாய், குரு கூடி திரிகோணமடைய சகோதரர்கள் நிலைப்பார்கள்.

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 7

 3 – இல் பாவர் இருக்க பாவர் பார்க்க, பிறந்த ஜாதகங்கள் எவ்வகையினாலும் தன் காரியத்தை சாதித்துக் கொள்ளுவான். பிறரின் பொருளை அபகரிப்பான். தவறான காரியங்களில் ஈடுபடுவான். தாய்க்கும், தந்தைக்கும் ஆபத்துக்களைத் தருபவன்.  3 – க்குரியவர், 9 – க்குரியவருடன் சேர்ந்து பாவரால் பார்க்கப்பட்டு இருந்தால், தாய், தந்தையை துன்புறுத்துவான். உடன் பிறப்புக்களுக்கு ஆகாதவன். காம இச்சையை எப்படியாவது தீர்த்துக் கொள்ள ஆசைப்படுவான். 3 – க்குரியவர், 8 – க்குரியவர், 7 – க்குரியவர்…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 6

3 – க்குரியவர் ராகு சாரம் பெற்று 8, 12 – லிருந்து 8 – க்குரியவருடன் சேர்ந்திருந்தால் மேற்படி கிரக தசாபுத்தி காலங்களில் உடன் பிறப்பு பிரிவினை, குடும்பம் பிரிந்து வாழுதல் குடும்பத்தில் தற்கொலை நிகழ்ச்சிகள் நடக்கும்.  3 – இல் 7 – க்குரியவர், 3 – க்குரியவர் 12 – லிருந்து, 10 – க்குரியவர் சாரம் பெற்று இருந்தாலும், அக் கிரக சாரத்தை பெற்று கிரகத்தால் பார்க்கப்பட்டாலும், இளம் வயதிலேயே பெண்…

சந்திரன் 2

சந்திரன் 6, 8, 12ல் நின்று மூன்று கிரகங்கள் நீசமடைந்து இருப்பின் மதி பேதம் ஏற்பட்டு வாழ ஏதுவுண்டு. சந்திரனுடன் குரு நின்று இருப்பின் 70 வயது வரை வாழ்வர். சந்திரனுடன், சூரியன் நின்றிடில் பெற்ற அன்னையே சந்தேகப்படுவர். சந்திரன் அல்லது சனி பெண் ராசிகளில் நிற்க.  ஆண் ராசிகளில் சூரியன் நின்றால் அலித்தன்மையுண்டு. சந்திரனுக்கு 1,4,7,10ல் குரு இருக்கம்போது கஜகேசரியோகத்தைத் தருகிறது.

சந்திரன் 1

                     கோள் செய்வதை நல்லவரும் செய்யார் சந்திரன் ஆட்சி உச்சமேறிய ஜாதகர்கள் குடும்ப க்ஷேமத்துடன் நல்வாழ்வு வாழ்வர். சந்திரன் லக்னத்தில் அமைந்தவர்கள் சிந்தனையாளர்கள், ஆய்வுசெய்து முடிவெடுப்பார். சந்திரனும், சூரியனும் சேர்ந்தால் அமாவாசை யோகத்தைத் தருகிறது. சந்திரன் என்பவர் மனதிற்கு அதிபதி, தாயாரை குறிப்பிடுவது சந்திரன் நல்ல மனநிலை அடைய சந்திரன் கெடாமல் இருக்க வேண்டும். சந்திரன் குருவும் சேர்ந்தால் குரு சந்திர யோகத்தை தருகிறது.

சந்தோஷம் என்பது  21

அப்படி தியானத்தை பழகி கொண்டால் பணம், அதிகாரம் பிறருடன் ஒப்பிடுதல் போன்றவை உன்னிடம் தோன்றாது.  அப்போது நீ சுதந்திரமானவனாய், இன்பத்தில் மூழ்கியவனாக இருப்பாய் பணத்தை கொண்டு கட்டில் மெத்தை வாங்கலாம் நிம்மதியாக நிர்சிந்தையற்ற தூக்கத்தை வாங்கமுடியாது. பணத்தை கொண்டு அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது ஆனால் சிற்றின்பத்தை விலை கொடுத்து வாங்கலாம்.

சந்தோஷம் என்பது 20

நிகழ்காலத்தில் வாழும் மனிதனுக்கு இன்னும் சொல்லப் போனால் உள்ளதை உள்ளபடி ஏற்று அந்தந்த கணங்களில் அப்படி அப்படியே வாழ்பவன் தனக்குள் உள்ள வெற்றிடத்தை அன்பு, சந்தோஷம் போன்றவற்றால் நிரப்பி கொள்கிறான். அது அவனிடம் முன்னமேயே உள்ளது அதை அவன் கண்டுகொள்கிறான், அதனால் அவனுக்கு மீண்டும் வெற்றிடம் உருவாதில்லை அவனள் இருக்கும் சந்தோஷம் இன்பம் போன்றவை வெளியில் இருந்த வந்தவையல்ல அவனுள்ளேயே எப்போதும் இருப்பவை அவன் அதை உருவாக்கவில்லை இருப்பதை உணரமட்டுமே செய்தான் இதற்கு தியானம் ஓர் அளவு…

சந்தோஷம் என்பது 19

பணம் இருந்தால் வீடு வாங்கலாம் பயணிக்க கார் வாங்கலாம் சமூகத்தில் அந்தஸ்தை அடையலாம்.  விமானத்தில் பறக்கலாம் உயர்தர உணவகங்களில் உணவு அருந்தலாம். இவை எல்லாம் உனக்கு என்ன விதமான மாற்றங்களை தரும் நீ இன்பமாயும், சந்தோஷமாயும் இருப்பதாய் தோன்றும்   ஆனால் அது எல்லாம் எத்தனை நேரம் எத்தனை நாள் அதன் பிறகு உனக்குள்  நீ ஒரு வெறுமையை உணருகிறாய் இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதும் வெறுமையை உணருகிறாயே   ஏன் அப்படி உணருகிறாய் காரணம்…

சுந்தர யோக சிகிச்சை முறை 68

பசிக்கும் பொழுது உண்ணவேண்டும்.  நாகரீக வாழ்க்கையில் எம்மட்டும் இத்திட்டங்கள் நிறைவேறுகின்றன?  நித்திரை, உழைப்பு, இவைகளெல்லாம் எண்ணற்ற சமயங்களில் தாறுமாறாக நடக்கின்றன.  தொத்து நோயிடங்களில் புகுதல், ஒட்டு நோயுள்ளவர்களுடன் அறிந்தும், அறியாமலும் பழகுதல், இவைகளுக்கெல்லாம் பாதுகாப்பு வேண்டும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 67

மலப்போக்கு உணர்ச்சியை எடுத்துக் கொள்வோம்.  விலங்குகளுக்கு இது ஏற்பட்டவுடன் மலத்தைக் கழித்துவிடுகின்றன.  வைத்தியரும், வைத்தியசாலைகளும் இன்றி, மனிதனைக் காட்டிலும் ஆரோக்கியமாக வாழ்கின்றன.  இதிலும் மனிதனின் போக்கு தொத்துவியாதி, அசுத்த ஆபாசங்களுக்கு இடம் தரும்.  சுய இச்சையாய் காட்டில் திரியும் விலங்குகள், இன்றும் ஆரோக்கியமாக அமோகமாகப் பெருகி வாழ்கின்றன.  விலங்கின் சுதந்திரம் மனிதனுக்கில்லை.  வசதி இருந்தாலும், வம்பு பொழுதுபோக்கு, நாகரீகத் திட்டங்களை உத்தேசித்து இயற்கையின் மிக முக்கியமான இந்த உணர்ச்சியை ஒதுக்கி வைக்கிறார்கள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 66

நிர்வாண ஊரில் கோவணாண்டி, பைத்தியக்காரன், துணி கட்டிக் கொள்ள இஷ்டப்பட்டாலும், நிர்வாண ஊரில், துணி கிடைத்தால் தானே!  கைக்குத்தல் அரிசி, தீட்டாத அரிசியை இயற்கைக்குகந்தபடி உபயோகிக்க சிலர் விரும்பலாம்.  மந்திரியிலிருந்து மடப்பள்ளிக்காரன் வரையிலும் தீட்டிய அரிசியைத் தின்று சில கேடுகளை சம்பாதித்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.    

துாய்மைபபடுத்திக் கொள்

நமது வாழ்க்கை சிறந்ததாகவும், துாய்மையுடைவதாகவும் இருந்தால் மட்டும்தான். உலகமும் சிறப்பும், துாய்மையும் பெற்றதாக இருக்க முடியும். அது காரியம்,… நாம்அதை விளைவிக்கும் காரணம். எனவே நம்மை நாம் பரிபூரணர்களாக்கிக்கொள்வோமாக.

உயர்ந்த லட்சியத்தை மேற்கொள்

துரதிர்ஷ்டவசமாக இந்த வாழ்க்கையில் மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் எந்தவிதமான ஓர் உயர்ந்த இலட்சியமும் இல்லாமல். இருளடைந்த இந்த வாழ்க்கையில் தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டிருக்கிறhர்கள். உயர்ந்த இலட்சியம்கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், இலட்சியம் ஒன்றும்இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான் என்று நான்உறுதியாகச் சொல்வேன். எனவே உயர்ந்த ஓர் இலட்சியத்தைக் கொண்டிருப்பதுமேலானது

நடந்து முடிந்ததைப் பற்றி வருந்தாதே

உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்துவருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது. உன்னுடைய ஒவ்வொரு சொல்லும், சிந்தனையும், செயலும், அதற்கு ஏற்ற பலனைத்தரும் வகையில் உன் மனதில் இடம் பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில்வைக்க வேண்டும். உனது தீய எண்ணங்களும், செயல்களும் புலிகளைப் போல் உன்மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதைப் போலவே உனது நல்லஎண்ணங்களும், செயல்களும், ஒரு நுாறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னைஎப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  65

காலத்தினால் தான் அன்னபானாதிகள் முதலிய கருமங்கள் ஆகிறது விபரீதத்தினால் ஒரு காலமும் ஆகிறதில்லை.  அகாலத்தினால் பிராணிகளுக்கு மரணம் முதலியவைகள்  சம்பவிக்காது. அகாலத்தில் ஒருவனை நூறு பாணத்தினால் அடித்தாலும் அவனுக்கு சம்பவிக்கிறதில்லை, கால சம்பிராப்தியாகில் ஒரு துரும்பே வஜ்ராயுதம் போல் அவனைக் கொல்லும். அகாலத்தில் வருஷாதிகளால் பல புஷ்பங்கள் உண்டாகிறது போல் சலம், அக்கினி, விஷம், அஸ்திரம், ஸ்திரி, ராஜன் குலம் இவைகளால் மனிதர்களுக்கு அகாலமிருத்யு சம்பவிக்கிறதென்று பண்டிதர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது.  

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  64

மேலும் காலமானது  வருடங்களாகவும், அயனங்களாகவும், ருதுக்களாகவும், மாதங்களாகவும், பக்ஷங்களாகவும், வாரங்களாகவும், நாட்களாகவும், காலை, மத்தியானம், சாயங்காலம், இரவு, ஜாமம், நாழிகளாகவும் பரிணமித்து இருக்கின்றது. மேலும் லோபாதி குணங்கள் மனிதர்களுக்கு உண்டாக்கி  பிராணிகளின் வாழ் நாட்களை காலமானது  நாசஞ் செய்துக்கொண்டிருக்கின்றது.  இந்த காலத்திற்கு எதிர்மாறு ஞான யோகாப்பியாசம் தவிர  வேறு கிடையாது.  ஆகையால் கால சக்கிரத்தை மீள இஷ்டப்படுகின்றவன் ஞான யோகாபியாசஞ் செய்ய வேண்டியது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 12

ஒப்புயர்வற்ற ஆனந்தத்தின் உறைவிடமாகிய பிரம்மத்தைப் பரத்துவமென உணர்ந்து உண்மையைக் கண்டு கொண்டவர்கள் அதில் சரண் புகுகின்றனர். நீரில் கரைந்து போன உப்புக் கட்டியைக் கண்ணால் காண முடியாது, நாவினால் ருசித்தறியலாம். அவ்வாறே உள்ளத்தின் ஆழத்திலூடுருவியிருக்கும் பிரம்மத்தை வெளி இந்திரயங்களால் அறிய முடியாது. தீர்க்கதரிசியாகிற குருவின் கருணை நிறைந்த உபதேசத்தால் ஏற்படும் ஞானம் கண்விழிப்பால்தான் அறிய முடியும். அவ்வுபதேசமாவது, உன்னைச் சுற்றிக் காணப்படும் உலகம் நீயன்று, நீ பிரம்மமே.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 11

எவர்கள் ஒப்புயர்வற்றதும் பரிசுத்தமானதுமான பிரம்மபாவத்தை நாடவில்லையோ அவர்கள் பிறவியில் மனிதர்களாயினும் வாழ்க்கையில் மிருகங்களுக்கு ஒப்பாவர். அவர்கள் வாழ்க்கை வீண். காணும் உலகைக் காணதது போல் கருதி ஒருவன் அனைத்தையும் பிரம்மம் என்று உணரவேண்டும். புத்திமானாகிய அவன் தன் மனதைச் சிதானந்த ரஸத்தால் நிரப்பி அந்த எல்லையிலா ஆனந்தத்தில் எப்பொழுதும் நிலைபெற வேண்டும்.

ஆதி. 9 லோகாயதம் —  சார்வாகர்கள் —  நாத்திகம்

உண்மையில் அப்படி யாரும் இல்லை.   அதனதனின் குண இயல்புக்கு ஏற்ப இணைந்து விலகுகின்றன  அத்தனை தான் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் மூன்று விதமான வர்ணத்தில் இருந்தாலும் ஒன்று இணையும் போது அதற்கு சம்பந்தமே இல்லாத நிறம் வருகிறது அல்லவா இதற்கு காரணம் கடவுள் என்று கூறுவது அறிவுடைமை  ஆகுமா இது போலவே பூதங்களின் இணைவும், விலகுதலுமே இந்த பிரபஞ்ச உற்பத்திற்கு கடவுள் தேவையில்லை காரணம் கடவுள் இல்லை பூதங்களின் கலப்பே பிரபஞ்சம் அப்படிப்பட்ட கலப்பை  நம்…

ஆ தி. 8 லோகாயதம் —  சார்வாகர்கள் —  நாத்திகம் 2

இந்த உலகை பிரத்யட்சமாக காணுவதை கொண்டு கிடைக்கும் அனுபவங்களே நிஜம். பிரத்யட்சமாக காணமுடியாத, அறிய முடியாத அனுபவத்தை ஒத்துக் கொள்ளாத தத்துவமே சார்வாக மதம் எனும் லோகாயதம். உலகை, பிரபஞ்சத்தை, உன்னை, என்னை, கடவுள் படைக்கவில்லை காரணம் கடவுளை காணமுடியாது. நம் புலன்களால் அறியமுடியாத வஸ்து இல்லை என்றே அர்த்தம் பொருள்களுக்கு மூலமான பஞ்ச பூதங்களின் சேர்க்கையுமே பிரிவுமே இந்த உலகம் இதை சேர்க்க, பிரிக்க என்று யாரும் தேவையில்லை

ஆதி.7  லோகாயதம் —  சார்வாகர்கள் —  நாத்திகம் 1

கடவுள் உண்டு என்று நினைத்து சொன்ன காலத்திலிருந்தே கடவுள் இல்லை எனும் சிந்தனையும் அதன் செயல்பாடுகளும் இருந்திருக்கிறது.  எல்லாவற்றிக்கும் இரண்டு பக்கம் உண்டு என்ற விதிக்கு கடவுளும் தப்பவில்லை.   பிரதட்ஷணமான – தர்க ரீதியாய் கடவுளை நிருபிக்க முடியாமல் இருப்பதால் சார்வாகர்கள் எனும் மதமே தோன்றியது என்று கூட சொல்லலாம்.   சார்வார்களின் காலம் வேதகாலமே ஆகும்.  சார்வாகர்களின் ஆரம்ப கர்த்தா பிரகஸ்பதி என அறிகிறோம்.  லோகாயதவாதிகளின் தத்துவம் புலன்களை கொண்டு அறியும் அறிவும் அனுபவமுமே…

சக்கரத்தாழ்வார்

சக்கரத்தாழ்வார்  மதுரை மாவட்டத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருமோகூர் திருத்தலம். தனி சன்னிதியில் 16 கரங்களுடன் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வார் திருக்கோலம், பார்ப்பவர் நெஞ்சை கொள்ளை கொள்ளும் திவ்விய தரிசன காட்சியாகும். இவரது 16 கரங்களிலும் பல்வேறு ஆயுதங்கள் உள்ளன. இவரது பின்புறம் நரசிம்மர் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். இந்த சக்கரத்தில் உள்ள 6 வட்டங்களில் 154 எழுத்துக்களும், 48 இறைவன் திருவுருவங்களும் அமைந்துள்ளன. இவரை தரிசனம் செய்வதால் பில்லி, சூனியம், ஏவல், கொடும்…

108 திவ்யதேசங்களில்

108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை

சோட்டானிக்கரை பகவதி அம்மன்

சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

சூன்ய முத்திரை

நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள் :- இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். காதுகளின் கேட்கும் திறன் அதிகரிக்கும். பஞ்சபூத சக்திகள் சமநிலை அடையும். காது சம்மந்தமான குரைபாடு உடையவர்கள் 40 நிமிடம் வரை செய்யலாம் மற்றவர்கள்…

வாயு முத்திரை:-

ஆள்காட்டி விரலை மடக்கி பெருவிரலுக்கு அடியில் வைத்து லேசான அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.  பலன்கள்: வாயு தொந்தரவினால் ஏற்படும் வயிற்றுவலி நெஞ்செரிச்சல் ஆகியவற்றைப் போக்கும். இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரித்து உடலுக்கு ஆற்றலை அதிகரிக்கும். பக்க வாதம் முகவாதம் ஆகியவற்றை கட்டுப் படுத்தும்.    தசைப்பிடிப்பு, சுளுக்கு ஏற்ப்படாமல் பாதுகாக்கும். மூட்டுவலி குணமாகும்.    குதியங்கால்வலி பித்த வெடிப்பு குணமாகும். இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.…

பிராண முத்திரை:

மோதிர விரல், சுண்டு விரல் நுனிகள் இரண்டும், கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும்.    நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  புற்று நோய்க் கட்டிகள் நீ்ர்க்கட்டிகளின் தீவிரத்தைக் குறைக்கும்.   நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்  கண் சம்மந்தமான நோய்கள் குணமாகும் களைப்பு நீங்கும்     நரம்புத் தளர்ச்சி நீங்கும்    பக்கவாதம் குணமாகும்   நினைவாற்றல் அதிகரிக்கும் ஆஸ்துமா,…

தனஞ்சேருவது

ஒன்பதாமிடத்தோன் திசையில், பத்தாமிடத்தோன் புத்தியில் அப்போது நடக்கும் கோட்சாரத்தில் நாலாமிடத்தோன் பத்தாமிடத்திலிருக்க, பத்தாமிடத்தோனுக்கு நாலாமிடத்திலும் அல்லது அங்காரனுடைய கேந்திரத்திலேனும் சேர்ந்து நிற்க, பிறந்தோனுக்கு புராதனமான பூமி மனை இவைகளில் பத்தாமிடத்ததிபன் நிற்கும் திசையில் தனம் பொருள்  இவைகள் கிடைக்கும்.