பாவம் போக்க

நம் முகத்தை முழுமையாக புருவ மையத்தில் கொண்டு வந்து, ஓடும் கலை வழியாக_காற்றை இழுத்து 3 மாத்திரை நிறுத்தி அடைத்த பாகம் வழியாக நிதானமாக விடவும். பின்பு மறுபடியும் புருவமையத்தில் நம் முகத்தைக் கொண்டு வந்து கண்களை திறக்கவும். _ பலன் — கண், காது , வாய், மூக்கால் செய்த பாவம் போகும். _

கீழாநெல்லிவேர்

கீழாநெல்லிவேர், திங்கட்கிழமை, சந்திரகலையில் வீட்டில் வைத்து இஷ்டதெய்வ படம் முன் வாசிசெய்ய காற்றுபேசும். தெய்வம் வீட்டில் நடமாடும்

ஆகாய முத்திரை:-

பெருவிரல் நுனியும் நடுவிரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும் மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- 1.ஆன்மீக ஆற்றல் அதிகரிக்கும். 1.எலும்புகள் மற்றும் பற்க்கள் வலுவடையும்; 3.இதய நோய்கள் இரத்த அழுத்தம் குணமடையும். 4.உடல் கழிவுகள் வெளியேறும். 5.ஒற்றைத் தலைவலி குணமாகும். 6.காது சம்மந்தமான நேய்கள் குணமாகும். 7.காதடைப்பு நீங்கும் கேட்கும் திறன் அதிகரிக்கும். 8.மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். 9.எழும்பு தேய்மானம், மூட்டுவலி, கால்சியம் குறைபாடு நீங்கும். 10.உடலில் ஜீவகாந்த ஆற்றல்…

சின் முத்திரை அல்லது ஞான முத்திரை:

  கட்டை விரல் நுனியும் ஆள்காட்டி விரல் நுனியும் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- 1.மனதை ஒருநிலைப்படுத்தும். 2.மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். 3.ஞாபக சக்தி அதிகாரிக்கும். 4.மனநோய், மனக்குழப்பம் தீரும். 5.குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தும். 6.தலைவலி நீங்கும். 7.தூக்கமின்மை குணமாகும். 8.கவலை, கோபம் ஆகியவை விலகும். 9.தன்னம்பிக்கை அதிகரிக்கும். 10.மன அமைதி உண்டாகும். 11.பிட்யூட்டரி சுரப்பி நன்றாக செயல்படும். 12 இது மாணவர்களுக்கு முக்கியமான முத்திரை.  இம்முத்திரையை 20…

அஞ்சலி முத்திரை:-

நாம் இரு கைகளையும் கூப்பி இறைவனை அல்லது பெரியவர்களை வணங்குகிறோம் அல்லது வணக்கம் சொல்கின்றோமே அதுதான் அஞ்சலி முத்திரை எனப்படும். இரு கரங்களையும் ஒன்றோடொன்று வைத்து விரல்களுக்கு நடுவே இடைவெளி இன்றி ஒட்டியிருக்க வேண்டும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். கைகளை மார்புப் பகுதியில் இருக்கும்படி வைத்திருக்க வேண்டும்.  பலன்கள் :- அலைபாய்கின்ற மனதை ஒருமுகப்படுத்தும். உடலில் உள்ள அனைத்து சக்தியோட்ட பாதைகளையும் சமநிலைப் படுத்தும். உடல் முழுவதும் பிராண சக்தி…

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருங்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள், ஒரு புத்தகத்தைப் படிக்கவும் அல்லது புதிய நபர்களைச் சந்திக்கவும் அல்லது வேறு ஏதாவது செய்யவும்.  ஏனென்றால் வெற்றி என்பது உங்களின் அறிவை பொருத்தே அமையும், “அறிவே ஆற்றல்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒற்றுமை

இரு அரசர்களுக்கிடையில் எப்போதும் சண்டை வந்து கொண்டேயிருந்தது.   சாது ஒருவர் இவர்களின் ஒற்றுமைக்காக பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டார் இதைப் பார்த்த அவர்கள் அவரைத் திட்டினார்கள்.  இவர்கள் திட்டுவதைப் பார்த்த சாது மௌனமாக சிரித்துக்கொண்டார்.  நாங்கள்  உங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறோம்.  நீங்கள் சிரிக்கிறீர்கள் என்றார்.  அதற்கு அந்த சாது என்னைத் திட்டுவதிலேயாவது உங்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதல்லவா அது போதும் என்றார்..

உண்மைய ஒத்துக்கறியா?”

 “நீ அந்த வீட்டுல 2 லட்ச ரூபாயும், 50 பவுன் நகையும் திருடுனது உறுதியாயிருச்சு… நீ உண்மைய ஒத்துக்கறியா?” “ஐயா ஒத்துக்கறேன்யா!” “அப்போ உனக்கான தண்டனைய அறிவிச்சுடலாமா?” “ஐயா, அதுக்கு முன்னால நம்ம மத்திய அரசாங்கத்துக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடுங்கய்யா!” “உனக்கு தண்டனை கொடுக்க மத்திய அரசுக்கிட்ட நான் ஏன் கேக்கணும்?” “ஐயா, கிரிப்டோகரன்ஸிய மோசடின்னு சொல்லிட்டு இருந்தவங்க இப்போ அந்த வருமானத்துக்கு 30% ஜி.எஸ்.டி. கட்டுனா போதும்னு சொல்லிட்டாங்க… ஆன்லைன் ரம்மி, ட்ரீம் 11 மாதிரி…

தலையில் சக்கரம் உள்ள நந்தியம்பெருமான்

வேந்தன்பட்டி கிராமத்தில் (புதுக்கோட்டை) உரையும் நெய் நந்தீஸ்வரர் கோவிலில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், இந்த கோவிலில் உள்ள நந்திக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும், ஒரு எறும்போ, ஈயோ வந்து மொய்த்து அந்த நெய்யை தீண்டுவதில்லை. நந்தியம்பெருமான் தலையில் ஒரு சக்கரம் உள்ளது, அதுவே இதற்கு காரணம் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிற நெய்யானது, கோவிலுக்குள் இருக்கும் கிணற்றில் சேகரிக்கப்படுகிறது. அங்கும் ஒரு பூச்சியும் மொய்ப்பதில்லை.

தெய்வம் ஒன்று.. வடிவம் மூன்று

கேரளா மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சிவபெருமான் ஒவ்வொரு வேளையிலும் ஒவ்வொரு வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அதிகாலை தொடங்கி காலை 8 மணி வரை தட்சிணாமூர்த்தியாகவும், உச்சிப் பொழுதில் வேடுவ வடிவிலும், மாலையில் பார்வதி, விநாயகர், முருகப்பெருமான் ஆகியோருடன் குடும்ப சகிதமாகவும் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.

விடாமுயற்சியே வெற்றி தரும்

வெற்றி பெறுவதற்கு நிறைந்த  விடாமுயற்சியையும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவான், எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாக வேண்டும் என்று  சொல்கிறான். அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழை. உனது குறிக்கோளை நீ அடைவாய்.

பசு மனிதனாகி விடாது

போராட்டங்களையும், தவறுகளையும் பொருட்படுத்தாதே பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒருபோதும் மனிதனாகி விடாது. எனவே இந்தத் தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒருபோதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒருமுறை கைக்கொள்ள முயற்சி செய்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  63

பிர்மாவுக்கு கல்பகாலம் பிராப்தமாகிற்து.  காலத்தை தவிர வேறுவித தெய்வங்கள் கிடையாது. அயன் மால் ருத்திரன் என்கிற மூன்று உருவமே காலத்தின் உண்டாக்கல், ரக்ஷித்தல், சம்மரித்தல் என்ற தொழில்களுக்கு நாமங்களாம் (பெயர்கள்). (சத மாயுர்பவ) நூறு வருடங்கள் மனிதர்களின் ஆயுட் நாட்களென்று வேதங்கள் முறையிடுகின்றது. வேதவாக்கியத்தின் பிரகாரம் சீவிக்காமல் சுவல்பகாலத்தில் அதாவது இளந்தை பருவத்தில் கௌமார பருவத்தில் யவ்வன பருவத்தில் வார்த்தீக திசையில் அல்லது பிரக்கச்சே தானே மரணம் அடைவதற்கு காரணம் அவர்கள் செய்யும் பாவகர்மங்களேயாம்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  62 

காலமானது வருங்காலம், நிகழ்காலம், சென்ற காலம் என மூன்று விதமாக உழலுகின்றது. இந்த காலத்தை தான் பிரம்மா என்றும், சிவன் என்றும், விஷ்ணு என்றும் சொல்லுகிறார்கள். பிபீலிகாதி பிரம்மபரியந்தம் காலசக்கிரத்தில் சிக்கிக்கொண்டு பஞ்சருத்தியங்களுக்கு அடங்கி இருக்கின்றன. ஆகையால் தான் திரிமூர்த்திகள் காலரூபிகள் எனப்படுகிறார்கள். காலத்தினால் விருக்ஷங்கள் பலபிராப்தி உண்டாகின்றது.  தானியங்கள் பலிக்கின்றது. ஸ்திரீகளும் ருதுமதி ஆகிறார்கள், காலத்தினால் தான் சகலவித நிறங்களும் மாறுகின்றது. குணசுபாவங்களும் மாறுகின்றது. ஜனனமரணாதிகளும் உண்டாகின்றது. அயனுக்கு ஒருநாள் ஆகும்போது பதினாறும் தேவேந்திரர்கள் பிறந்து…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  2

 3 – க்குரியவர் பரிவர்த்தனை பெற்று, செவ்வாய் பலம் பெற்று சுபரால் பார்க்கப்பட்டால், 6, 7 உடன் பிறப்புக்கள் உண்டு. உடன் பிறப்புக்கள் ஒருவருக்கொருவர் முன்னேறுவர். ஒற்றுமையில் குறைவு இருக்காது. சொத்துக்கள் சேரும். இவர்களுக்கு வரும் மனைவிமார்களால் குடும்பம் பிளவுபடும்.  3 – ஆம் பாவாதிபதி எத்தனை அம்சம் கடந்து உள்ளாரோ, அத்தனை உடன்  பிறப்புக்கள் உண்டு. 3 – ஆம் பாவாதிபதி வர்க்கோத்தம், உச்சம் பெற்றிருந்தால், எத்தனை அம்சம் கடந்துள்ளாரோ அதற்கு இரு மடங்கு சகோதர,…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்

3 – க்குரியவர், 7, 8 – லிருந்து, 6 – க்குடையவர் தொடர்பு பெற்றால் அரசாங்க தொல்லைகளால் அவதி, பண விரயம், அரசாங்கத்துக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடுதல், காம இச்சையின் விளைவால் பல துர்க்காரியங்களை செய்தல், பல பெண்களின் தொடர்பு ஏற்படும். 3 – க்குடையவர், 11 – ல் செவ்வாயின் தொடர்பை பெற்றால் ஆண், பெண் உடன் பிறப்புகள் உண்டு. இளைய சகோதரர்களால் லாபம், சுகம் அனுபவிப்போன். அன்னியவர்களின் சகாயம் கிடைக்கும். 3 –…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  40

சனி 4 – ல் நிற்க, லக்கினாதிபதி நீச்சமடைய சந்திரனுக்கு 10 – ல் 8 – க்குடையவர் நிற்க, ஊமை 5 – ல் குரு நிற்க, 11 – ல் சந்திரன் நிற்க காவியங்கள் செய்வார். 2 – க்குடையவரும், சுக்கிரனும், புதனும் கூடி 6, 8, 12 – ல் நிற்க, ஊமை. 6 – க்குடையவர், சுக்கிரன், புதனும் கூடி 6, 8, – ல் நிற்க 8, 2 –…

சந்தோஷம் என்பது 15

மனிதர்கள்  சிந்தனையில் அதிக அளவு ஆக்கிரமித்துள்ள விஷயம் எது என்று சிந்தித்தோமானால் பணம் என்பது தான் விடையாக வரும் அதுவும் பணம், நிறைய, நிறைய பணம் என்று சிந்திக்காதவர்களின் எண்ணிக்கை மிக குறைவே என்று உறுதியாக சொல்ல முடியும் இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தால் மனிதன் நிகழ்காலத்தில் வாழுவதில்லை.

சந்தோஷம் என்பது 14

ஆனால் வாழ்க்கையின் ஒட்டத்தில் ஒரு கட்டத்தில் நின்று திரும்பி பார்க்கும் போது அதாவது இந்த சூழ்நிலை சாதாரண மனிதரில் இருந்து மிக உயர்ந்த வெற்றி பெற்ற மனிதர் வரை அனைவருக்கும் ஒரு கணமாவது தோன்றியிருக்கும் என்னென்ன இழந்துவிட்டோம் என்றும் எதற்கு வேண்டி இத்தனை ஓட்டம் என்றும். இதை பட்டியல் இட வேண்டியது உங்கள் வேலை ஏனென்றால்  எதை, எதை இழந்தீர்கள்  எதை, எதை இழந்ததாக நினைக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தானே தெரியும்.

சந்தோஷம் என்பது 13

நம்முடைய தவறால் நாம் நமக்கு வேண்டியவரை விட்டு வெகுதூரம் நகர்ந்து விட்டால்  எப்பாடுபட்டாவது அந்த தவறை சரி செய்து நமக்கு வேண்டியவரின் அன்பை, நட்பை இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மனிதர்கள் அதிகமாக உழைப்பது, ஒரு இலட்சியத்தை நோக்கி பயணிப்பது, வெற்றிக்கு வேண்டி ஊண், உறக்கமின்றி செயல்படுவது, பணம் சம்பாதிப்பது , பதவியை அடைய முயற்சிப்பது  இது எல்லாம் எதற்கு என்று சிந்தித்தால் ஒரே ஒரு பதில்தான் சந்தோஷம், இன்பம் பெறுவதற்கு தான் வேறு எதுவாக இருக்க முடியும்.

ஓட்டமட காளியம்மன்

ராமநாதபுரத்திலிருந்து சத்திரக்குடி செல்லும் சாலையில் தீயனூர் கிராமத் தில் கம்பீரமாக காட்சி தந்து அருள்பாலிக்கிறாள் ‘ஓட்டமட காளியம்மன்’. பக்தியோடு பக்தர்கள் சமர்ப்பிக்கும் கல்லையும் காணிக்கையாக ஏற்று அருள்புரியும் கருணை நாயகி இவள். ஒவ்வொரு முறையும், இப்பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலை வழியாக பாலங்கள், வீடுகள் கட்ட ஜல்லி மற்றும் செங்கற்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களின் ஓட்டுநர்கள், அவற்றிலிருந்து சிறுபகுதியை காணிக்கையாக அம்மனிடம் வைத்து வழிபாடு செய்துவிட்டுச் செல்வார்கள். இதனால் அவர்களின் பயணமும், கட்டுமானத் தொழிலும் விபத்துகளோ, தடைகளோ எதுவும்…

சுந்தர யோக சிகிச்சை முறை 63

 சாந்தி யோகம் என்ற என்நூலைப் படித்தால், கருத்து நன்கு விளங்கும், ருத்ரம், சமகம் முதலிய வேதாந்த மந்திரங்கள், சாந்தி பஞ்சகம், அஷ்டாங்க யோகம் என்ற எல்லா மன சிகிச்சைகளும், நாம் இவைகளில் பெற்றுள்ள தேர்ச்சியையும் இவைகளின் அவசியத்தையும் புலப்படுத்துகின்றன. நம் மேதாவிகள் உடல்பிணி, மனப்பிணி என்பவைக்கு மேலாக பவப்பிணி என்பதையும் கண்டுபிடித்துவிட்டார்கள். சுகம் சாந்தியாக நிலைக்கும்.  தன்மைக்கு விரோதமான அவித்தை பிறப்பிறப்புப் பிணியைப் போக்கும் சிகிச்சையை யோகம் என்று நிரூபித்திருக்கிறார்கள். எனவே உடல் பிணி மனப்பிணி, மனப்பிணி,…

சுந்தர யோக சிகிச்சை முறை 62

 இன்னும் இரண்டு சுலோகங்கள் இந்த விசாரணையில் கலக்க வேண்டி யிருக்கிறது.  உடல்பிணி மட்டும் கவனித்தோம்.  உடல்பிணி, மனப்பிணியை உண்டாக்கும். மனப்பிணி, உடல்பிணியை உண்டாக்கும். தற்காலப் பிணி, விஞ்ஞான மேதாவிகள் மேல்நாட்டு ஆராய்ச்சி சிகரத்திலிருந்து முறையிடுகின்றனர்.  மன சிகிச்சை, அதாவது, சைகியாட்ரி (  PSYCHIATRY OR PSYCHOANALYSIS ) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.  இவர் கூற்றைக் கேட்டு, மருந்துக் கடலில் மிதக்கும் நம் மக்களுக்கு, இதைப் பற்றி ஏதோ உளறவும், விசாரிக்கவும், சிறிது ஆரம்பித்திருக்கிறார்கள்.  இந்த மன சிகிச்சை  யோகத்தின் …

சுந்தர யோக சிகிச்சை முறை 61

யோகியார்- யோகம் யாருக்குக் கிட்டுகிறது? என்ற கேள்விகளுக்குப் பரமாத்மா சொன்ன ” யுக்தம் ” பிணைந்ததான உணவு, ஓய்வு, உழைப்பு, தூக்கம், விழிப்பு என்ற ஐந்து திட்டங்களை ஆராய்ந்தோம். இங்கு நோய் தடுத்தல் என்று விசாரணை  செய்யும் பொழுது, மேல் வறிய ஆராய்ச்சிகளுக்கு இடம் ஏது என்று வினவலாம்.  பரமாத்மா துக்கத்தைப் போக்கும் யோகம் கிட்டுகிறது எனக்கூறுகிறார்.  யோகத்தால் பிணியைத் தடுத்தலே நாம் எடுத்த விஷயமாகும்.  பிணி என்பது துக்கத்தின் ஒரு தொகுதி.  பிணி வந்தபின் அதைப்போக்கும்…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 7

 பார்ப்பதெல்லாம், கேட்பதெல்லாம் பிரம்மமேயன்றி வேறல்ல.   உண்மையனுபவத்தை அடைந்தபின் ஒருவன் உலகை அத்வீதீயப் பிரம்மமாகவே காண்கிறான். ஒரு பானையை எண்ணும் பொழுது மண்ணினுடைய ஞாபகம் நமக்கு தானே எழுவது போல், வியாவரிகப் பிரபஞ்சத்தை எண்ணும்பொழுது நமக்கு பிரம்மத்தின் எண்ணம் உதிக்கிறது.

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் பிரம்மம் 6

உபாதிகளற்றதும், சாந்தமானதும், முடிவற்றதும், ஒன்றேயாவதும் இரண்டற்றதும் ( பூமா ) அளவு கடந்தது எனக் கூறப்படுவதுமான பிரம்மம் எளிதில் அறியப்படுவதன்று. உலகம் பிரம்மமே, பிரம்மத்தினின்று பிரிதாக எது ஒன்றுமில்லை. பிரம்மம் அல்லாது ஏதாவது ஒரு பொருள் தனித்திருப்பதாய்த் தோன்றினால் அது கானல் நீரைப் போல் பொய்யானது

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் பிரம்மம் 5

ஆதியந்தமற்ற பிரம்மம் அவித்தையின் நீக்கத்தாலன்றி வேறெந்த ஸாதனத்தாலும் அடையப்படமாட்டாது. எது ஆத்மாவோ அதுவே நிகரற்றதும் அளவு கடந்ததும் உண்மைப் பொருளுமான பிரம்மம் என்று அறிய வேண்டும். அது ( ப்ருஹத் ) பெரிதாயிருப்பதால் பிரம்மம் என்று கூறப்படுகிறது.

சூரியன் 6

சூரியன், புதன், குரு, செவ்வாய், சனி ஆகியோர்கள் சுப பலம் பெற்றும் ஒங்கி இருந்தால், சிறந்த வழக்கறிஞர்கள் ஆவார்கள். சூரியன் பலமுற்று நீசம் பெற்று பாபருடன் சம்பந்தப்பட்டு 12ல் இருந்தால் வலது கண் பழுதுறும். சூரியன் நீச்சமாகவோ, உச்சமாகவோ இருப்பின் மனைவிக்கு அடங்கி வாழ்வர், மனைவி வார்த்தைக்கு கட்டுபடுவார்.  மனைவியின் மனம் கோணாமல் வாழ்வர். சூரியன், சந்திரன் இருவரும் 12 அல்லது 6 வது வீட்டில் இருப்பின் அவருக்கு ஒரு கண் தான் தெரியும் அதேபோல் மனவிக்கும்…

சூரியன் 5

சூரியன் 9ம் வீட்டில் இருந்தால் பட்டப்படிப்பில் வெற்றி, வாழ்க்கை வசதிகள் ஏற்படும். சூரியன் 12ம் வீட்டில் இருந்தால் எதிலும் தடை என்று ஒன்றை ஏற்படச்செய்வார்.  வெற்றி அடையும் தருணத்தில் தோல்வி ஏற்படும். சூரியன் 9ல் இருந்தால் செல்வ சீமானாவார், உறவினர்களை வெறுப்பார்,கடவுள் பக்தி இருக்கம், பெற்றோருக்கு அதிக நலமிராது. சூரியன் நீசமாக பிறந்தவர்களுக்கு, எத்தொழில் செய்யினும், எதிர்பாராத பாதிப்புகள்,விளைவுகள், உருவாகும். சூரிய உதயத்திலிருந்து 12.30 நாழிகை முதல் 15 நாழிகை வரையிலுள்ள காலகட்டத்தை அபிஜித் முகூர்த்தம் எனப்படும்.…

சூரியன் 4

சூரியன் சிம்மத்திலிருந்து சிம்ம நவாம்சத்திலேயே இருக்கப்பெற்றால் துணிவுள்ளவராகவும், கீர்த்திமானாகவும், செல்வச்சீமானாகவும் விளங்குவார். சூரியனும், சந்திரனும் 3ல் ஒன்று கூடி இருந்தால் சகோதர, சகோதரிகளால் அனுகூலம் பெற வாய்ப்பிராது. சூரியன் மகர ராசியில் இருக்கப்பெற்றால் நிரந்தரமான தொழில் அமையாது, வாழ்க்கையில் சந்தோஷம் இராது.  மனதில் உறுதி இராது. 1ல் சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை தாரதோஷத்தை உண்டாக்கும். பெண்களால் தொல்லைகள் ஏற்படக்கூடும். சூரியன், சுக்கிரன் இணைவுள்ள ஒரு ஜாதகத்துக்கு அதேபோல் சூரியன், சுக்கிரன் இணைவுள்ள ஜாதகத்தை சேர்த்துக்…