மதுரை மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு – தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

அதிசய முருகர்

தர்மபுரி மல்லிகார்ஜூனேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமான் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். பொதுவாக முருகப் பெருமான் மயிலில் அமர்ந்தபடியோ, அல்லது மயிலின் அருகில் நின்றபடியோ தான் ஆலயங்களில் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் திருவுருவம், ஐயப்பன் போல் குந்தளமிட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இவர் அருகில் இருக்கும் மயிலின் அலகில் பாம்பு ஒன்று காணப்படுகிறது. மற்றொரு பாம்பு படமெடுத்த நிலையில் முருகனுக்கு ஆதார பீடமாக உள்ளது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம்  4

சூரியனையும், சந்திரனையும் போன்றே ஒளி மண்டலங்கள் எதனுடைய ஒளியால் பிரகாசிக்கின்றனவோ, ஆனால் எது அவற்றின் ஒளியால் பிரகாசிக்கப்படமாட்டாதோ, மேலும் அனைத்துமே எதனால் பிரகாசிக்கின்றதோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக. தீயானது ஒரு இரும்பு குண்டை உள்ளும், புறமும் வியாபித்து எப்படித் தனது சக்தியால் பிரகாசிக்குமோ அப்படியே பரப்பிரம்மம் உலகனைத்தையும் உள்ளும் புறமும் வியாபித்து தனது சக்தியால் பிரகாசிக்கிறது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம்  3

எல்லாப் பொருள்களும் அதில் பிணைக்கப்பட்டுள்ளன. எல்லாச் செயல்களும் அந்த அறிவுடன் தொடர்புள்ளன, பாலில் எங்கும் நெய் வியாபித்திருப்பது போல் பிரம்மம் உலகில் எங்கும் வியாபித்திருக்கிறது. ஸ்தூலமாயில்லாமலும் ஸூக்ஷ்மமாயில்லாமலும், நீளமாயில்லாமலும், குட்டையாயில்லாமலும், பிறப்பில்லாமலும், தேய்வில்லாமலும், வடிவும் குணமும் வண்ணமும் இல்லாமலும் எது உளதோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக.

இல்லை என்று சொல்லாதே

இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே. என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும் போது காலமும் இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. எதையும், எல்லாவற்றையும் சாதிக்கக் கூடிய சர்வ வல்லமை படைத்தவன் நீ

உங்களை நீங்களே நம்புங்கள் 

நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை – இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் (தேவ தேவியர்களிடத்தும்) மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து, ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்கு கதிமோட்சமில்லை. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  61

கால பிரசம்ஸை …..  காலமானது  சகல பூதங்களை உண்டாக்கவும், காப்பற்றவும், அழிக்கவும் செய்கின்றது.  தூக்கம் ஜாகரணை இவைகளை செய்கிறது. மிகவும் பராக்கிரமம் உள்ளது. கால பிராப்தமானதால் தேவர், சித்தர், சாத்தியர், உரகர் முதலிய தேவர்களையும் பிடித்து ஆட்டுவிக்கின்றது. சகலமும் காலத்திற்கு அடங்கியிருக்கின்றது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  60

கால ஞானம்              இந்த கால ஞானத்தை முதலில் சதாசிவரானவர் தனது பிராண நாயகியாகிய உமா தேவியாருக்கும் உபதேசிக்கும் போது அந்த தேவியார் காலவசத்தினால் தூங்கிவிட்டாள். அப்போது ஒரு கிளியும், மீனும் கேட்டுக் கொண்டு அம்மையாருக்கு பதிலாக கிளியானது குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.  சிவனார் கால ஞானத்தை முழுதும் உபதேசித்து பார்வதியை நோக்கினார், பார்வதி தேவியார் தூங்குவதை தெரிந்து எழுப்பி ஓ பிராண நாயகீ நீ தூங்கிக் கொண்டிருந்தாயே எனக்கு குரல் கொடுத்துக் கொண்டிருந்தது யாரென்று கேட்டார்…

சுந்தர யோக சிகிச்சை முறை 60

கடமை இயற்றவோ, ஸ்மரண, மனன நிதித்யாசனத்திற்கோ   நன்மை தரும் செயலாற்றலுக்கோ ஏற்படவேண்டும் .  இத்தகைய விழித்தலே மிதம் – யுக்தம். மேத்யம் — சோம்பல் கலவாத, சுறுசுறுப்பான விழிப்பைக் குறிக்கிறது. அசுத்தத்திற்குச் செலவழிக்கப்படாத, சுத்தம், அறிவு மிகுதி யாகும், செயலுக்காக விழிப்பது, இத்தகை விழிப்பே மேத்யம் – யுக்தம்.                       

சுந்தர யோக சிகிச்சை முறை 59

ஹிதம் — நித்திரை செய்யும் விதம் ஆரோக்கியத்தையும் உடல் மனத்திற்கு நன்மை விளைவிக்க வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று மணி நேரம் பின்பும், சூர்யோதயத்திற்கு இரண்டு மூன்று மணிக்கு முன்பும் ஏற்படும் ஹிதம் – யுக்தம். மேத்யம் — சுத்தமான உறக்கம், கனவு, சினிமாப் படக்காட்சி போல் இல்லாமல் உண்மையான கேவலம், சுத்த சுழுத்தி ஏற்படவேண்டும்.  சுத்தமான படுக்கையில் தூய எண்ணங்களை மனத்தில் நினைத்து உறங்க வேண்டும். இத்தகைய நித்திரையே மேத்யம் – யுக்தம். விழிப்பு– மிதம்…

சுந்தர யோக சிகிச்சை முறை 58

உழைப்பு — மிதம் –உடல் சக்தி ஏற்கும்.  வாழ்வுக்கு அவசியமான  உழைப்பே மிதம்.  உடல் தாங்காத அதிக உழைப்பு யுக்தமாகாது. ஹிதம் — பயன் தரக்கூடிய கெடுதலை விளைவிக்காத, ஆரோக்கியத்திற்கு ஏற்றதான உழைப்பே ஹிதம். மேத்யம் — உழைப்பு அல்லது செயல், எவ்விதத்திலும் சுத்தம் கொண்டதாக இருக்க வேண்டும். அசுத்தச் செயல் துக்கத்தை விளைவிக்கும்.  சுத்தமே, மங்களமே யதார்த்தைத்க் கொடுப்பதே மேத்யம் – யுக்தம். தூக்கம்–மிதம்–தூங்குவது அவசியம்.  ஆனால் அளவில்லாது உறங்கிக் கம்பளிக்கடியில் பாதி வாழ்வைக் கழிப்பது…

சந்தோஷம் என்பது 12

 தாழ்வு மனப்பான்மைக்கு முதல் அறிகுறி தேவையில்லாததிற்க்கு கூட அனுசரித்து போதல் இரண்டாவது அறிகுறி நம்மை நாமே வெறுப்பது  நம்மைப்பற்றி நாம் கவனிப்தைப் போல் மற்றவர்கள் ஆராய மாட்டார்கள் மற்றவர்களுக்கு இதை தவிர எத்தனையோ முக்கியமான அவசரமான வேலைகள் இருக்கிறது.  நாம் செய்வது நமக்கு  தெளிவாக தெரிந்தால் போதும் அதில் நமக்கும், பிறருக்கும் தீங்கு நிச்சயமாய் இல்லை எனற நம்பிக்கை நமக்கு இருந்தால் போதும்.

சந்தோஷம் என்பது 11

உண்மையில் உறவு சிக்கல் என்பது நமக்கும் பிறருக்கும் உண்டான உறவு சிக்கல் அல்ல நமக்கும் – நமக்கும் உண்டான உறவு சிக்கலை இங்கு குறிப்பிடுகிறேன். நாமே நமக்குள் எத்தனை விஷயங்களில் முரண்பட்டு இருக்கிறோம் என்பதை தெரிந்தால் மட்டுமே அதை சீர் செய்ய முடியும் செய்ய கூடாத விஷயத்தை  செய்ய நமக்குள் வரும் ஆர்வத்தைத்தான் நாமே நமக்குள்  முரண்படுதல் என்கிறேன்.

சந்தோஷம் என்பது 10

 இப்படி விஷயத்தை சிந்திக்கும்  போது அடித்தல் என்கிற விஷயமே வரவில்லை அதனால் நாம் புரிந்து கொள்ளலாம் அடித்தால் குழந்தை அதிக மதிப்பெண் பெறமுடியாது என்று இப்படி தர்க்க ரீதியாய் சிந்திக்கும் போது அடித்தல் எனும் செயல் நடைபெறாது அதற்கு மூலமாய் இருக்கிற கோபம் செயலற்றதாகிவிடும்.  கோபம் செயலற்றுவிட்டாலே அதிக பட்ச உறவு சிக்கல்களில் இருந்து விடுபட்டு விடுவோம்

சந்தோஷம் என்பது 9

உண்மையில் மார்க் வாங்குவது என்பது எது, எது சம்பந்தப்பட்ட விஷயம் என்று யோசித்தால் அதிக மார்க் வாங்க அதிகம் படிக்க வேண்டும், அதிகம் படித்ததை நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் வேண்டும் நினைவில் வைத்ததை சரியாக நேரத்திற்கு நினைவுக்கு கொண்டு வரும் ஆற்றலும் வேண்டும் அது மட்டுமல்ல புரிந்துகொள்ளும் பக்குவமும் வேண்டும் எதையும் புரிந்து கொள்ளும் போது சுலபமாகிவிடும். அப்படி சுலபமானால் பரிட்சை சுலபமாகும் அதில் மார்க்கும் அதிகம் வரும்.

J கிருஷ்ணமூர்த்தி

வானொலி, தொலைகாட்சி, செய்தி தாள்கள், திரைப்படங்கள், மதங்கள், மற்றும் அதன் தலைவர்கள் அரசியல் அமைப்புகள் அனைத்தும் உங்கள் சிந்தனையையும் உணர்வையும் வடிவமைக்கின்றன நீங்களும் இணங்க விரும்புவதால் அவர்களின் வேலை எளிதாகிவிடுகிறது   J கிருஷ்ணமூர்த்தி   இது நிஜமா என்று அறியவேண்டுமானால் நாம் நம்மை சோதித்து பார்த்தால் தான் தெரியும் அப்படி சோதிக்கும் போது நடு நிலையில் இருந்து சோதிக்க வேண்டும் அப்படி எல்லோராலும் முடியுமா முடிந்தால் J. கிருஷ்ணமூர்த்தி சொன்னது சரியா தவறா என்பது தெரியவரும்

கல்யாண சுப்ரமணியர்

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்துக்கு அருகில் உள்ளது பச்சைமலை முருகன் கோயில். பழநி முருகனைப் போலவே மேற்கு நோக்கி தங்க பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், இங்குள்ள கல்யாண சுப்ரமணியர். இவருக்கு தாராபிஷேகம் செய்வது விசேஷம்  108 லிட்டர் பால் கொண்டு அபிஷேகித்து, 11 முறை ருத்ரம் ஓதி வழிபடுவதால் நீண்ட ஆயுள், குழந்தை பாக்கியம் ஆகிய வரங்கள் கிடைக்கும் 

அதிசய கருடன்

நாச்சியார் கோயிலில் கல் கருடன் சன்னிதி உள்ளது. ஒன்பது நாகங்கள் அவர் உடலில் இருப்பதால், நவக்ரஹ தோஷம் நிவர்த்தி ஆகும். கல் கருடனே உத்ஸவத்தில் வலம் வருவார். அதன் எடையை ஆரம்பத்தில் 8,16,32,64 பேர்கள் வரை சுமப்பதும், திரும்ப கோயிலில் நுழைந்து கர்ப்பக்கிருஹம் செல்லும்பொழுது 64, 32, 16, 8 பேராகப் படிப்படியாகக் குறைந்து கடைசியாக நான்கு பட்டர்கள் மட்டும் சுமப்பதும் ஒரு அதிசயம் என்றால், கருடன் உத்ஸவத்தில் வீதிஉலா வரும் பொழுது கருடனுக்கு வியர்ப்பதும், பட்டர்கள்…

வல்லக்கோட்டை முருகன் கோவில்

செல்வ வளம் தரும் வல்லக்கோட்டை முருகன் கோவில் காஞ்சிபுரத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கிழக்கு தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், ஒரகடம் வழியாக 28 கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் வல்லக்கோட்டை திருத்தலம் உள்ளது.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  39

சூரியனும், சந்திரனும் கூடி நட்பு உச்சமடைய 2 – ல் 4, 10 – க்குடையவர்கள் நிற்க விநோத வித்தையில் கீர்த்தியுள்ளவர். லக்கினாதிபதியும், 4 – க்குடையவரும் கூடி 9 – ல் நிற்க, ராகு கூடி நிற்க, புதன் 6 – ல் நிற்க, குரு லக்கினத்திலிருந்து பார்க்க விநோத வித்தையில் கீர்த்தியுள்ளவர். 3 – ல் 3, 4, 6, 8 – க்குடையவர்கள் நிற்க, 9 – லிருந்து செவ்வாய் பார்க்க விநோத…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 38

லக்கினாதிபதி சூரியனுடன் கூடி 5 – ல் நிற்க, லக்கினத்தை குரு பார்க்க கணிதத்தில் வல்லவர். சுக்கிரனும், குருவும் ஒருவரை ஒருவர் பார்க்க மேற்படி பலன்.  4 – ல் குரு நின்று சனியைப் பார்க்க, புதன் லக்கினத்தில் நிற்க, 2 – ல் சூரியன், சுக்கிரன் கூட வாகடநூல் பண்டிதர் லக்கினத்திற்கு 4 – லிலும், சுக்கிரனுக்கு திரிகோணத்திலும் சனி நிற்க மேற்படி பலன். 7, 6 – க்குடையவர்கள் கூடி 4 – ல்…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  37

11 – ல் ,குரு இருந்து சுக்கிரன், புதன், சந்திரன், செவ்வாய், கேது, லக்கினாதிபதி பார்க்க  ஞானநூல் ஆசிரியர். 11 – ல் குரு இருந்து, சூரியன், பூர்ண சந்திரன், புதன்  கல்வியில் தேர்ச்சி உள்ளவர். 11 – ல் குரு இருந்து சூரியன், பூர்ண சந்திரன் புதன் நால்வரையும் பார்க்க வீரத்தன்மை உடையவர்.  4 – க்குடையவரும் லக்கினாதிபதியும் கூடி திரிகோணமடைய குரு பார்க்க, கணிதத்தில் வல்லவர்.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 36

லக்கினத்தில் குரு இருந்து, புதன், சந்திரன், சுக்கிரனைப் பார்க்க ஸ்திர லக்கினத்தில் ஜெனனமானவர் தனம். கல்வியில் சிறப்புடன் இருப்பார். லக்கினத்தில் குரு இருந்து கேது – சந்திரன் – செவ்வாய் – புதன் நால்வரையும் பார்க்க மேற்படி பலன்.  11 – ல்  சந்திரன், இருந்து சுக்கிரன், சூரியன், சனி, ராகு ஐவரையும் பார்கக கல்வி அறிவு உடையவர்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  59

சப்த  பரீக்ஷ வாத தோஷ குறி …..  வாதத்தில் சமானமான வார்த்தைகள் உண்டாகும். பித்த தோஷ குறி ……  பித்த தோஷத்தில் சிரிப்பும் பிதற்றலுமான வார்த்தைகளுமாக இருக்கும். கப தோஷ குறி …..  கபதோஷத்தில் ஹீனசுரமான வார்த்தைகளுமாயிருக்கும். துவந்த தோஷ குறி …..  துவந்ததத்தில் (சார்ந்து ) மிசிரமமான வார்த்தைகள் உண்டாகும்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  58          

ரூப பரீக்ஷ வாத ரூப பரீக்ஷ …..  வாத தோஷத்தில் தேகத்தைப்  பார்த்தால் கருநிறமாக தோணும். பித்த ரூப பரீக்ஷ …..  பித்த தோஷத்தில் தேகத்தைப் பார்த்தால் மஞ்சள்  நிறமாயும் அல்லது  சிகப்பு  நிறமாயும் தோணும். கப ரூப பரீக்ஷ …..  கபதோஷத்தில் தேகமானது வெளுத்த நிறமாய் காணப்படும். துவந்த ரூப பரீக்ஷ …..  துவந்த தோஷத்தில் தேகமானது இரண்டு தோஷ நிறம் கலந்து சார்ந்து காணும். சந்நிபாத தோஷ ரூபம் …..  சந்நிபாத தோஷத்தில் தேகமானது…

கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் 3

கடவுளைக் காண வாக்குவாதம் உதவுமா ? ஆன்மீக அனுபவம் ஒன்றுதான் நமக்கு ஞானமாக அல்லது உண்மை மதமாக இருக்கிறது. ஆன்மாவைப் பற்றி காலங் காலமாகப் பேசிக் கொண்டிருப்பதால் அதை நாம் அறிய முடியாது. வெறும் கொள்கைகளைப் பேசுவதற்கும்  நாத்திகத்துக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை. வெளிச்சத்தில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் எப்போதும் எனக்குச் சொந்தமாகிறது. ஓரு நாட்டைச் சென்று பார்த்தால் பிறகு அது உன்னுடையதாகிவிடுகிறது. நாம் ஒவ்வொருவரும் சுய அனுபவத்தைப் பெறவேண்டும். ஆசிரியர் உனக்கு…

கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார்  2

அறிவு வேறு  உணர்வு வேறு உணர்வு என்பது ஒரு தளை. உருவத்துக்கு முந்தியது அறிவு என்னும் ஒரு விவாதம் இருக்கிறது. ஆனால் அறிவு தான் எதற்கும் காரியமாகிறது எனில் முறைப்படி அதுவே காரணமாகவும் ஆதல் வேண்டும். இதுதான் மாயை, கடவுள் நம்மைப் படைக்கிறார். நாம் கடவுளைப் படைக்கிறோம். இதுதான் மாயை. காரண காரியமாகிய வட்டத்திற்கு முடிவு இல்லை மனம் உடலைப் படைக்கிறது. மனத்தை உடல் படைக்கிறது. முட்டையிலிருந்து குஞ்சு வெளிப்படுகிறது, குஞ்சிலிருந்து முட்டை வெளிப்படுகிறது. மரத்திலிருந்து விதை…

கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் 1

நீ  நான் என்றும் வேற்றுமை உணர்வு எனக்கு இருக்கும் வரை கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் என்று பேசியே ஆகவேண்டும். அதன் விளைவுகளுக்கு நான்உட்பட்டுத்தான் ஆகவேண்டும். நம் இருவருக்கும் இடையில் இலட்சியமாக விளங்கும் மூன்றாவது ஒன்று இருப்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த முக்கோணத்தின் சிகரமாகத் திகழ்வது இந்த மூன்றாவது சக்தி. நீராவி பனியாகி பின்னர் நீராகிறது. அந்த நீர் பிறகு கங்கையாகிறது. ஆயினும் நீராவி நிலையில் இருக்கும் போது அங்கு நீர்  இல்லை. படைப்பு அல்லது மாற்றம்…

சுந்தர யோக சிகிச்சை முறை 57

உணவு — மிதம்  — மிதமாக தேவைக்குகந்தவாறு உண்ண வேண்டும். ஹிதம் — உடலுக்குகந்தவாறு இருக்க வேண்டும். மேத்யம் — சுத்தமானதாக, உன்னதம் பெற்றதாக சத்துள்ளதாக இருக்கவேண்டும். ஓய்வு — மிதம் — அமிதமான ஓய்வு சோம்பலாகும். ஹிதம் –நன்மை தரக்கூடியதாக இருக்கவேண்டும்.  ஓய்வு சங்கம், இடம் தன்மை என்பவைகளால் பாதிக்கப்படும்.  சினிமா, டிராமா கொட்டகை, சூதாடும் இடம், சாக்கடை முதலிய அசுத்த நிலம், உகந்த ஆட்டம், கலை, கானம் சம்பந்தமற்றவையே ஹிதம் ஓய்வாகாது. மேத்யம் —…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம்  2

எதையடைந்த பின் வேறு அடைய வேண்டியது எதுவுமில்லையோ, எந்த ஆனந்தம் அனுபவிக்கப்பட்ட பின் அதற்கு மீறிய ஆனந்தம் வேறு ஒன்று வேண்டப்படுவதில்லையோ, எதையறிந்த பின் வேறு அறிய வேண்டியது எதுவுமில்லையோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக.  பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்கள் அவரவர் நிலைக்குத் தகுந்தபடி அந்த அளவு கடந்த பிரம்ம ஆனந்தத்தின் சில திவலைகளையே அனுபவித்து ஆனந்தமுடையவர்களாகிறார்கள்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம்  1

                                                பி ர ம் ம ம் ஸத் – சித் – ஆனந்தமாயும், இரண்டற்றதாயும், அளவு கடந்ததாயும், என்றுமுளதாயும், ஒன்றேயாயும், உள்ளதையெல்லாம் வியாபித்து நிற்பதாயும் எது உளதோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக. இரண்டற்றதாயும், பிளவுபடாததாயும், ஒன்றேயாயும் ஆனந்த வடிவாயும், காணும் பொருளெல்லாம் கனவுபோலொதுக்கப்பட்ட பின் அடிப்படையாக எஞ்சி நிற்பதென்று வேதாந்தத்தில் விளக்கப்படுவதாயும் எது உளதோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக.