ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 21

நான் தேவதைகளை வணங்கவில்லை.  நான் தேவதைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் அதனால் அவன் எந்த  தேவதையையும் வணங்கமாட்டான்.  அந்த நிலையில் அவனுக்குக் கடமைகளும் இல்லை.  எல்லாச் செயல்களுக்கும் மூலமாயிருக்கும் எனது ஆத்மாவையே நான் மேன்மேலும் வணங்குகிறேன்.

இரண்டாம் பாவம்

இரண்டாம் பாவம் தனம், குடும்பம், நேத்திரம், கல்வி, வாக்கு, பேசும் திறன், கலைகளை கற்கும் ஆர்வம் (சாஸ்திரம்), மனம், நடை, நவரத்தினங்கள், நிலையான கொள்கை, உணவு, முகம், நாக்கு இவைகளை குறிக்கும். உண்மையே பேசுதல், பொய்யும் சொல்லுதல், முன்கோபம், கண்களில் வலது கண், வஞ்சக நெஞ்சமா, பெருந்தகையாளரா என்பதை தெரிவிக்கும் பாவம். சுவை அறிந்து உண்பதையும் குறிக்கும். முக்கியமாக தனஸ்தானம் எனப்படும்.

லக்கின பாவம்

லக்கின பாவம் உடல்வாகு, நிறம், கவர்ந்திடும் அழகு, செல்வம், உடலில் உள்ள இரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்களும் தலைப்பகுதியும், புகழ், வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும், சுப நிகழ்ச்சிகளையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாகும். அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டிடமும் உறுதியாக ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்திருக்க இயலும். அதே போன்று லக்னமும் பலமாக அமைந்தால்தான் அனைத்தும் அனுபவிக்கும் யோகத்தை நீண்ட ஆயுளைத் தரும். வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால்…

இலை எல்லாம் வெட்டி விட்டு

இருக்கும் இலை எல்லாம் வெட்டி விட்டு, இப்போது வேறு வழியில்லாமல் மின்விசிறி என்னும் இரும்பு இலையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறோம். 

வாழ்க்கை  ஒரு பயணம்..

வாழ்க்கை  ஒரு பயணம்.. நல்லதோ  கெட்டதோ நகர்ந்து கொண்டே இருங்கள்! இன்பம் வந்தால் ரசித்துக்கொண்டே செல்லுங்கள்.. துன்பம் வந்தால் சகித்துக்கொண்டே  செல்லுங்கள்.. தேங்கி விடாதீர்கள்! உழைத்து ஓய்ந்தாலும் பலருக்கும் வாழ்வில் விடியல் ஏற்படுவதில்லை.. கனவுச் சுமைகளின் பாரம் குறைவதும் இல்லை..!

கால பைரவர் வழிபாடு

கால பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை  உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப் பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. அபிஷேகப் பிரியரான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

சொர்ண ஆகர்ஷண பைரவர்

சுவர்ண கால பைரவர், செல்வத்திற்கு அதிபதியான பைரவரை சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றழைக்கின்றார்கள். இந்த திருக்கோலத்தில் இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.

கால பைரவர்

காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால் தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது விதியாகும்.

ஆதி.2

தத்துவங்களில் சில உபநிடதம், லோகாதாய தத்துவம், சமண தத்துவம், பெளத்த தத்துவம், சாங்கிய தத்துவம், யோக தத்துவம், நியாய தத்துவம், வைசேஷிக தத்துவம், மீமாம்ச தத்துவம், அத்வைதம், விஷிஷ்டாவைதம், துவைதம் இன்னும் இப்படி பல உண்டு.  இதில் நாம் செய்ய போவது, தத்துவங்களை ஒரளவாவது தெரிந்து கொண்டு நம் வாழ்கைக்கு தற்போதய சூழ்நிலையில் அது தேவையா? தேவையென்றால் எந்த அளவு என்பதை நமக்குள் நாம் சிந்திக்கவே இந்த முயற்சி பிரபஞ்சத்தில் அடங்கியுள்ள கோடானு கோடி விண்மீன்களும், கிரகங்களும்…

ஆதி.1

 மனிதனின் தேடல்கள் பலவற்றில் நான் யார் என்ற தேடலும் அடக்கம் அந்த தேடலின் விளைவாக தோன்றிய கருத்துக்களே தத்துவங்கள் எனப்படுகின்றன.  உலகின் எல்லா பாகங்களிலும் உள்ள மனிதர்களின் தேடு பொருளாகவே இந்த நான் யார் என்பது இருந்திருக்கிறது.  இந்தியாவில் இப்படி தேடியவர்களை மகரிஷிகள், யோகிகள், சித்தர்கள் என்று சொல்லுவார்கள் இவர்கள் நான் யார் என்பதுடன் இந்த உலகம், அதன் இயக்கம் இதையும் தாண்டி இந்த பிரபஞ்சம் அதன் செயல்பாடுகள் அந்த செயல்பாட்டிற்க்குண்டான சக்தி எது, எப்படி, அது…

உபநிஷதம்

மனிதன் மூன்று பகுதிகளால் ஆனவன். 1. உடல், 2. மனம், 3. ஆன்மா இது உபநிஷதங்களின் அடிப்படை கருத்து – உபநிஷதங்கள் – மனித வாழ்வை ஆராய்கின்றன.  இதில் நான் யார், எனது மூலம் எது? எனது முடிவு எது?  இது போன்ற நிலையில் ஆராய்ச்சி தொடருகிறது.  அடுத்து, உலகம் – இதன் தோற்றம், மனிதனுக்கும், உலகத்திற்க்கும் உள்ள உறவு போன்ற நிலையில் ஆராய்கிறது. அடுத்து, இது இரண்டுக்கும் மூலமாயும், ஆதாரமாயும் உள்ள சக்தியை அதாவது இறைவனை,…

கடவுளுக்கு உருவம் தேவையில்லை 

ஞானம் பலம் கிரியையே ( அறிவு ஆற்றல் செயல் ) கடவுள். கடவுளுக்கு உருவம் தேவை இல்லை. ஏனென்றால் எல்லையற்ற அறிவை ஏந்தி வைத்திருக்க  ஒரு தகுந்த உருவம் தேவை. உண்மையில் கடவுளுக்கு இத்தகைய உதவி தேவைப்படுவதில்லை. இயங்கும் ஆன்மா என்பது ஒன்றில்லை. ஒரே ஆன்மாதான் உள்ளது. ஐந்து உயிர்த் தத்துவங்கள் சேர்ந்துள்ள இந்த உடலை ஜீவாத்மா அடக்கி ஆள்கிறது. இருப்பினும் ஜீவாத்மா என்பது பரமாத்மாவே. ஏனெனில் பரமாத்மாவே அனைத்தும். ஜீவாத்மாவான நீ உன்னிடம் இல்லாத ஒன்றை…

உண்மையான அறிவும் – மெய்யான அறிவும்

ஒரு பொருளுடன் சேர்த்துப் பார்க்காமல் தனித்தனியே பார்க்கும் போது அதை அதனுடைய குணம் என்கிறோம். வேறுபாடு இன்னது என்பதை நம்மால் நிச்சயமாகக் கூற இயலாது. பொருள்களைப் பற்றி நாம் காண்பது உணர்வதெல்லாம் கலப்பற்ற தனியான இருப்பு என்பதே. மற்றவை அனைத்தும் நம்முள்ளே இருக்கிறது. நம்மிடமிருக்கும் எதற்கும் அது இருப்பது ஒன்றே நிச்சயமான சான்றாகும். ஒன்றைப் பலவாகப் பார்ப்பது இரண்டாம் நிலையிலுள்ள ஒர் உண்மையே. பாம்பு என்பது இருப்பது தன்னளவில் உண்மை. ஆயினும் கயிற்றைப் பாம்பாக நினைப்பது தவறு.…

சுந்தர யோக சிகிச்சை முறை 56

எது நன்மை? என்று ஆராய வேண்டும்.  இந்த ஆராய்ச்சி மேற்கூறப்பட்ட ஐந்து திட்டங்களையும் பற்ற வேண்டும். எது நன்மை என்றால், எது மிதம், ஹிதம், மேத்யமோ, அது தான் நன்மை, மிதமாக மட்டும் இருந்தால் போதாது என்பதால் தான் இம்மூன்றையும் உள்ளடக்கிய ‘ யுக்தம் ‘ என்ற பதத்தை பகவான் வீசுகிறார்.  மிதமான நன்மையைத் தரக்கூடிய சுத்தமான அல்லது உன்னதமானதே உசிதமானதே தகுதியானது.  சிலர் ” மேத்யம் ” என்ற பதம் உணவுக்குத்தான் உபயோகமாகும்.  மற்ற நான்கு…

சுந்தர யோக சிகிச்சை முறை 55

யுக்தம் என்ற பதத்தை பரமாத்மா ஒப்பற்ற அர்த்த புஷ்டியுடன் உபயோகித்திருக்கிறார். யுக்தம் என்ற பதத்தை உசிதமானது என்று மொழி பெயர்த்தால்தான், இதில் யுக்தம் அடங்கிய பல கருத்துக்களையும் வெளிப்படுத்தலாம். யுக்தம் என்ற பதத்திற்கு ‘மிதம்’ (MODERATE) என்று மட்டும் பொருள் கூறுவது.  சுலோகத்தின் ஆழ்ந்த விசாலமான கருத்துக்களைக் குறுக்குவதேயாகும். உசிதம் என்ற பதத்தை தகுதியான என்ற தமிழ் வார்த்தை விளக்கும். பரமாத்மா, யுக்தம் என்ற பதத்தை உணவு, ஓய்வு, உழைப்பு, தூக்கம், விழிப்பு என்ற ஐந்து திட்டங்களுடன்…

சுந்தர யோக சிகிச்சை முறை 54

 யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு  யுக்தஸ்வப்னாவபோதஸ்ய யோகோ பவதி து- கஹா!!  உசீதமான உணவையும் ஓய்வையும் உடையவனுக்கு, கர்மங்களில்  உசிதமான உழைப்பை உடையவனுக்கு, உசிதமான தூக்கமும்,  விழிப்பும் உடையவனுக்கு, துக்கத்தைப் போக்கும் யோகம் கிட்டுகிறது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 57

நேத்திர பரீக்ஷ திரிதோஷ  நேத்திரம் …..  திரிதோஷத்தில் மூன்று  தோஷ  குறிகள் ஒன்றாயும் மேகவர்ணமாயும் புகனநேத்திரமாயும் இருக்கும். திரிதின மரண நேத்திர  லக்ஷணம் …..  சந்நிபாத லக்ஷணங்களுடன் எந்த ரோகயின் ஒர நேத்திரமானது பயங்கர   ரூபத்துடன்  கலந்து  இருக்கிறதோ அந்த மனுஷன் மூன்று நாளையில் மரணமடைவான். மரண நேத்திரக் குறி …..  கண்கள் கறுப்பு  நிறமாயும் சோதி ஹீனமாயும்  கண் உள்ளாகியும் மந்த திருஷ்டியாயும் எவனுக்கு  இருக்குமோ அவனும்  எமனை தரிசனம் பண்ணுவான். ஏக தின…

அனுபவ வைத்திய தேவரகசியம் இரண்டாவது காண்டம் 56

நேத்திர  பரீக்ஷ வாதாதிக்க நேத்திரம் …..  வாததிக்கத்தில் நேத்திரங்கள் சலத்துடன் கூடி கண்ணீர் வடிந்துக் கொண்டு புகை  நிறமாயும், மஞ்சள்  நிறமாயும் இருக்கிறது. பித்தாதிக்க நேத்திரம் …..  பித்தாதிக்கத்தில் நீலநிறம் அல்லது கறுப்பு, சிகப்பு கலந்த  நிறம், தீபதுவேஷியாயும், வெப்பமாயும் இருக்கும். கபாதிக்க நேத்திரம் …..  கபாதிக்கத்தில் மந்தமந்த பார்வை, வெண்மை நிறம், ஜலத்துடன் கலந்து பார்வை ஹீனமாயும் இருக்கும். துவந்த தோஷ நேத்திரம் …..  துவந்தத்தில் இரண்டு தோஷ லக்ஷணம் ஒன்றாயிருக்கும்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  55 

நேத்திர  பரீக்ஷ வாத தோஷ நேத்திரம் …..  வாயு தோஷத்தில் கண்களானது  சிகப்பு  நிறமாயும், புகை நிறமாயும், ரவுத்திர  நிறமாயும், கண்களில்  நீர் வடிதலுமாயும் இருக்கும். பித்த தோஷக் கண் ……  பித்த தோஷத்தில் மஞ்சள்  நிறம், சிகப்பு வர்ணம், நீலவர்ணம் மிசிரமாயும் (சார்ந்து) தீபத்தை பார்க்க முடியாமை என்னும் குணங்களுடையது. கபதோஷக் கண் ….. கபதோஷத்தில் கண்களானது  நீர் கோர்த்துக் கொண்டு பார்வையானது, சபலமாயும், வெண்மை நிறமாயும் பார்வை  மட்டாயும் இருக்கும்.

சந்திரன் 3

சந்திரனுக்கு 6,8,12ல் குரு இருக்கும்போது சகல யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 12ல் கிரகம் இருக்கும்போது தனபா யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2ல் கிரகம் இருக்கும்போது அனபாயோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இருந்தால் மகாசக்தி யோகம் ஏற்படுகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இல்லாமல் இருக்கம்போது கேமத்துரும யோகம் தருகிறது.

முன்பின் அறியாத

முன்பின் அறியாத இருவருக்குள்ளே மத்தியஸ்தம் செய்தால் ஒரு நண்பனை பெறுவோம். இரண்டு நண்பர்களுக்குள் மத்தியஸ்தம் செய்தால் ஒரு நண்பனை இழப்போம்..  

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் ஆத்மா  20

 பரமாத்மா பரமானந்த ஸ்வரூபமுடையதாகையால் அதில் அறிபவன், அறிவு அறியப்படுவது என்ற வேற்றுமைக்கு இடமில்லை, அது ஒன்றாகவே பிரகாசிக்கிறது

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் ஆத்மா  19

 எப்படி ஒரு கயிறு அதை உள்ளபடி அறிந்தவனுக்கும், அறியாதவனுக்கும் இரண்டு வகையாகக் காட்சியளிக்கிறதோ அப்படியே ஆத்மா எப்பொழுதும் ( ஞானிக்குப் ) பரிசுத்தமாயிருப்பினும் அஞ்ஞானிக்கு அழுக்கடைந்தது போல் தோன்றுகிறது.

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் ஆத்மா  18

 விழிப்பிலும், கனவிலும் எப்படியோ அப்படியே ஆழ்ந்த உறக்கத்திலும் சக்தி மங்காததாலும் மாறுபடாததாலும் ஆத்மா அறிவுடன் கூடியே இருக்கிறது.  எங்கு துவைதம் உண்டோ என்று சுருதி கூறுகிறபடி அறியும் பொருள்களில்தான் வேறுபாடு.

சந்தோஷம் என்பது 8

அடுத்ததாக இப்படியும் சிந்திக்க வேண்டும் அடித்தால் மார்க் வருமா, வராது, வந்தாலும் வரலாம் இப்படி இரண்டு விடைகள் வரும் காரணம் அடிக்கு பயந்து தனக்குள் இறுகி  எதையும் புரிந்து கொள்ளும் நிலை இழந்து விட்டால் வராது என்பதே விடை அடுத்ததாக அடிவாங்க கூடாது எப்படியாவது முயற்சி எடுத்து ஊக்கமாய் செயலாற்றும் தன்மைக்கு நகர்ந்தால், வந்தாலும் வரலாம் எனும் விடை வரும்

சந்தோஷம் என்பது 7

எதையும் தர்கரீதியாய் சிந்தித்து பழகுங்கள் எப்படி தர்கரீதியாய் சிந்திப்பது என்று கேட்டால் கீழே உள்ள உதாரணம் அதை விளக்கும். தந்தை மகனை அடிக்கிறார் பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்ற காரணத்தால் இங்கு தந்தை மகனை அடித்ததில்‍ வெளிப்படையாய் தெரியும் விஷயம் மகன் மதிப்பெண் குறைவாக பெற்றது காரணம் என்று. ஆனால், அது மட்டுமல்ல, காரணம் மகனின் எதிர்காலம் பாழாகி விடுமோ என்ற அச்சம் தான் அப்படி கோபமாக வந்திருக்கிறது.

சந்தோஷம் என்பது 6

கோபம் இதைபற்றி படிப்படியாய் சிந்திப்போம் யாரோ அறிஞன் சொன்னது கோபம் கையாலாகததனத்தின் வெளிப்பாடு என்று.  உண்மைதான் மாற்ற முடியாத சூழ்நிலையில் நாம்  நிற்கும் போது அதுவும் நாம் நம்மைவிட தாழ்ந்தவர் என நினைத்துக் கொண்டிருக்கும் நபர்களால் அந்த சூழ்நிலை உருவானது என்று நாம் நினைக்கும் போது நமக்கு வரும் உணர்வு கோபம்.  இந்த கோபம் நம்மையும் நம்மை சார்ந்தவர்களின் நிலையையும் அசிங்கப்படுத்தி அலங்ககோலப்படுத்தி விடுகிறது.  கோபம் கொண்டவனுக்கு புறக்கண்களும், அக கண்களும் தெரிவதில்லை.  இவை எல்லாம் மனிதனை…

சூரியன் 3  

சூரியனுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் தந்தையின் ஆயுளுக்கு பங்கம் ஏற்படலாம். சூரியன் புதனுடன் மேஷம் அல்லது சிம்மத்தில் இருந்தால் ஞானியாகவும், தலைவராகவும் திகழ்வார்.  நான்கு கிரகங்கள் ஒரு ராசியில் நிற்க, அதில் ஒரு கிரகம் உச்சம் அடைந்தால் சிறந்த ஞானியாக திகழ்வார். சூரியன், செவ்வாய் சேர்க்கை 10 ஆம் இடத்தில் அமையப் பெற்றால் அரசியலில் கொடிகட்டி பறப்பார். சூரியனுக்கு 10ல் செவ்வாய் இருந்தால் மதுபானம் அருந்துவதிலும், மாதர் சுகத்தில் ஆர்வம் கொள்வார்.  சூரியனுக்கு 10ல் குரு…

சூரியன் 2

 சூரியனுனும்  செவ்வாயும் கூடி எங்கிருந்தாலும் ஜாதகி இளம் விதவையாகும் அவலநிலை.  குருபார்வை ஏற்படின் இதற்கு விதிவிலக்கு உண்டாகும். சூரியனுடன் செவ்வாய் சேர்ந்து இருந்தால் பூர்வீகச்சொத்து  நிலைப்பதில்லை.   தந்தை காலத்திற்குள் பூர்வீகச் சொத்து விரையமாகிவிடும். சூரியனுன்  புதன் சேரும்போது, புதாத்தியயோகம், நிபுணத்துவயோகம் தரும்.  பட்டப்படிப்பு ஏற்படும்.  படிக்காத  மேதையாக திகழ்வார்கள். சூரியனுடன்  சனி சேர்ந்து இருந்தால் ஒருவரை ஒருவர் பார்த்தாலும் அப்பாவுக்கும், பிள்ளைக்கும் ஒற்றுமை இருக்காது கருத்து வேறுபாடு ஏற்படும். சூரியனுடன் சுக்கிரன் சேர்ந்தால் மனைவி வழியில் பிரச்சனை…

சூரியன் 1

சூரியனுக்கும், சந்திரனுக்கும் கட்டுப்பட்டுத்தான் உலகம் இயங்குகிறது.  ஜோதிட சாஸ்திரப்படி சூரியன் ஆத்மகாரகன், சந்திரன் மனோகாகரகன் தாய், தந்தையர் ஆவார். சூரியனும், சந்திரனும் 0 டிகிரியில் சேரும்போது அமாவாசை ஏற்படுகிறது. சூரியனும், சந்திரனும் 180 டிகிரியில் இருக்கும் போது பெளர்ணமி ஏற்படுகிறது.   சூரியன் 5ம் பாவத்தை அடைந்தால் சந்தானம் தங்காது.  சூரியன் ஒரு ஆண் கிரகம்.  பகலில் பிறந்த ஜாதகருக்க சூரியன் பிதுர்கிரகம் சிம்மம் ஆட்சி வீடு, மேஷம் உச்சவீடு, துலாம் நீசவீடாகும். சூரியன் & செவ்வாய்…