எல்லாம் தெரிந்துவிட்டதாக எண்ணாதே
ஏதாவது ஒரு மதத்தில் நீ கட்டுண்டு இருக்கும் வரை கடவுளை நீ காண முடியாது. எல்லாம் தனக்கு தெரிந்துவிட்டதாக நினைப்பவன் எதையும் அறியமாட்டான். அறிபவனை யார்தான் அறிய முடியும்? நிலையான தத்துவங்கள் இரண்டு உள்ளன. ஒன்று இறைவன், மற்றது பிரபஞ்சம். இறைவன் மாற்றமில்லாதவர். பிரபஞ்சம் மாறிக்கொண்டே இருப்பது. பிரபஞ்சம் எப்போதும் உள்ளது. மாற்றத்தின் அளவை உன் மனம் அறிய இயலாதபோது அதை நிலையானது என்று நீ நினைத்துக் கொள்கிறாய். கல் அல்லது கல்லில் செதுக்கப்பட்ட வடிவம் இவற்றுள்…