உங்கள் தவறுகளே காரணம் 4
நாம் செய்த பாவத்திலிருந்து விடுபடுவோம் கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழும்பட்டும். மீனவர்கள், சக்கிலியர்கள், தோட்டிகள் ஆகியவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழுட்டும். பலசரக்குக் கடைகள், பலகாரக்கடைகளிலிருந்து புதிய இந்தியா தோன்றட்டும். தொழிற்சாலைகள், கடைவீதிகள், சந்தை ஆகியவற்றிலிருந்தெல்லாம் புதிய இந்தியா எழுந்து வெளிவரட்டும். பாமர மக்களைப் புறக்கணித்து ஒதுக்கியது தான் நமது நாடு செய்த பெரும் பாவம் என்று நான் கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் பாமர மக்களுக்குக்…