சுந்தர யோக சிகிச்சை முறை 47
உழைப்புடன் மட்டும் நிறுத்தவில்லை எப்படி சுகஜீவிதம் உடையவன், உழைப்பு இல்லாமல் வாழுகிறனோ அதற்கு நேரிடையாகப் பாட்டாளிக்கு சக்திக்கு மீறி தொழில் காரணத்தைக் குறித்து, உழைப்பு தினம் ஏற்படுகிறது. இந்த உழைப்பைத் தாங்க, உழைப்பால் ஏற்படும் உடல் சதை சக்திக்கழிவை மறுபடி நிரப்ப, போதுமான உணவுக்கு வசதி இல்லாமல் போய்விடுகிறது உழைக்கப்பட்ட உடல், உணவையும் ஓய்வையும் கேட்கின்றது. இவைகளைப் பெறமுடியாமல் பாட்டாளியிடம் வறுமை ஒரு முக்கியத் தடையாக நிற்கின்றது.