ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 9
சிராத்தத்தில் ( பிதிர்கட்கு ) அளிக்கப்படும் உணவை உண்ணக் கூடாது என்று பக்தர்களுக்குக் குருதேவர் சொல்வதுண்டு, ஏனெனில் அவ்வித உணவு பக்திக்கு ஊறு செய்யும். அது தவிர கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட எவ்வித உணவையும் ஒருவர் உண்ணலாம் . குருதேவர் உன்னைக் காப்பவராக இருப்பார். நீ அவரை நம்பி வாழ வேண்டும். அவர் விரும்பினால் உனக்கு நன்மை செய்யட்டும், இல்லையேல், உன்னை மூழ்கச் செய்யினும் செய்யட்டும். ஆனால் நீ எப்போதும் உன் சக்திக்குட்பட்டு, எப்போதும் நேர்மையானதையே செய்தல்…