அன்பை கணிக்க முடியாது

அன்பு வெளிப்படும் விதம் ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள். அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்… தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் இரண்டாவது ஆப்பிளையும் கடித்தாள் தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்… உடனே அந்த சிறுமி, தாயிடம்…

பத்மாசனம்.

                                                           பத்மாசனம். பத்மாசனம் செய்யும் முறை — முதலில் காற்றோட்டமான நல்ல ஒரு இடத்தைத் தேர்ந்தெடுங்கள். தூய ஒரு வெண்ணிற ஆடையை விரியுங்கள், உடலுக்கு இறுக்கமில்லாத ஆடையை அணியுங்கள், அப்படி அணியக்கூடிய ஆடை பருத்தி ஆடையாக இருப்பது…

ஜோதிடம் பார்க்கும்முறை

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்கின்ற விதி ஜோதிடத்திற்கு 90 சதவிகிதம் ஒத்துவராது. ஏனென்றால் இதிலுள்ள விஷயங்கள் அனைத்தும் முக்காலங்களையும் அறிந்தவர்களால் அறிவிக்கப்பட்டது. அதனால் நாம் அதிக அளவு பிரயாசைப் பட தேவையில்லை. தெய்வீக கலையான இந்த சோதிட கலையை ஒருவர் அறிந்து கொள்ளவோ அல்லது அதை தொழிலாக கொண்டு செயல்படவோ வேண்டுமானால் கண்டிப்பாக அந்த நபருக்கு தெய்வ பலம் தேவை. தெய்வபலம் உள்ளவர்களுக்கு மட்டுமே இக்கலை வசப்படும். நவக்கிரகங்கள் தன் செயல்களையும் இயக்கங்களையும் உணர்த்துவார்கள். அப்படி…

தியானம்

தியானம் ஆதிகாலம் தொட்டே இந்தியாவில் மனித வாழ்க்கையின் ஒரு அங்கமாக தியானம் இருந்து வந்திருக்கிறது. உடலுக்கு செய்கின்ற பயிற்சி உடலை உறுதியாக்குவது போல் மனதுக்கு செய்யும் பயிற்சி மனதை உறுதியாக்கும் தியானம் என்பது மனதிற்கு செய்யும் பயிற்சியே ஆகும். மனம் ஈடுபடாத செயல் உயிர் இல்லாத உடலை போன்றது. மனம் ஈடுபட்டு செய்யக்கூடிய எல்லா செயல்களுமே தியானம்தான் கோவிலுக்குச் சென்று கண்களை மூடி வேண்டிய தேவைகள் பூர்த்தியாக வேண்டுதல் தியானம் அல்ல,அது பிரார்த்தனை. பிரார்த்தனை வேறு தியானம்…

பாவ புண்ணியம்

குருவருளும் திருவருளும் துணை நிற்க பாவ புண்ணியம் அன்பு சார்ந்த இணைய தள வாசகர்களுக்கு வணக்கம் மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும், நன்மைக்கும், தீமைக்கும் இடையில் தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. தேவைகளின் விகிதாசாரமும், ஆசைகளின் விகிதாசாரமுமே நன்மை, தீமைகளை உண்டாக்குகிறது. தேவையென்பது முக்கியமாக உடல் சம்பந்தப்பட்டது. அதாவது பசி, தூக்கம் போன்றவை நாம் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் உடலுக்கு சக்தி தேவைப்படும் போது உடல் தனது தேவையை தெரியப்படுத்துகிறது. அந்த தேவையை பூர்த்தி செய்யும் இடத்தில் ஆசை நுழையும் போது…

நட்சத்திர சார சூட்சமம்

ஆனை முகனையும் ஈசனையும் தாய் பராபரையையும் பிரார்த்தித்து அனுபவத்தின் வாயிலாக சார கதிப்படி கிரகங்கள் நடத்தும் லீலா வினோதங்களை உங்களுக்கு அளிக்கிறேன். ஜோதிட கலையில் லக்னம் என்னும் உயிர் ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடல் ஸ்தானமாக கருதப்படும் சந்திரன் நின்ற வீட்டிற்கு இரண்டாவது பட்சமாக முக்கியத்துவம் கொடுக்கபட்டு அவர் அவர்கள் பலாபலன்கள் பார்க்கப்பட்டும் சொல்லப்பட்டும் வருகிறது. இது இப்படி இருக்க சத்தியரிஷி, அத்திரி, சட்டமுனிவர் போன்றோர் கருத்துப்படி நட்சத்திர சாரகதிப்படி பலன்களை காணும் போது அப்பலன்கள் நடைமுறைக்கு…

அர்த்தசர்வாங்க ஆசனம்

அர்த்தசர்வாங்க ஆசனம் செய்முறை: விரிப்பின் மேல் தரையில் படுத்து நேராக கால்களைச் சேர்த்து தொடைகள் நெருங்கியிருக்குபடி வைத்துக் கொண்டு முழங்கால்களை மடக்கி நிறுத்தவும். அச்சமயம் இரு கைகளையும் இரு புறமும் இடுப்புக்கு கீழ் விலாபுறத்தில் பிடித்து சுவாசத்தை வெளிவிடாது உடல் பளுவை தூக்கி புறங்கைகள், கழுத்து, பிடரி ஆகியவற்றின் மீது சுமத்த வேண்டும். இந்நிலையில் சுவாசம் மெதுவாக நடைபெற வேண்டும். 10 முதல் 25 விநாடிகள் செய்துவிட்டு இயல்பு நிலைக்கு வரவும். இரண்டு முறை செய்வது நலம்.…

எதனைக் கொண்டு இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளது?

நாலில் ஒருத்தரும் இல்லாவிட்டால் அவன் பிறந்த வீட்டிற்கு சமீபத்தில் பாழாயிருக்கும .நாலாமிடத்திற்கு முன்னே பாபரிருந்தால் பிறந்த வீட்டிற்கு மேற்கே பாழாயிருக்கும்பாழாயிருக்கும். இலக்கினத்திற்கு 2, 4, 10, 12 இந்த இராசிகளில் எத்தனை கிரகங்களிருந்தனவோ அத்தனை பேர்கள் அவன் பிறந்த வீட்டிலிருந்தபேர்கள் என்று அறியவும். அதில் சனியிருந்தால் அன்னிய ஸ்திரீ ஒருத்தியென்று சொல்லவும். சுக்கிரன் சந்திரனிருந்தால் சுமங்கலியென்றும், செவ்வாய், புதன் இருந்தால் அமங்கலியென்றும் சொல்லவும். மேஷம், ரிஷபம், சிம்மத்தில் சூரியன், நிற்க, மற்ற கோள்கள் உபயராசியில் பலமாய் நிற்க,…

ஒட்டாத கற்பனை

இன்று விளையும் உணர்ச்சி கொந்தளிப்பால் பொருளாதார சிக்கலால் மரபு  மீறமுடியாத பேடித்தனத்தால் விளையக்கூடிய நெருக்கடிகளை எதார்த்தமுறையில் ஆராயவேண்டிய அவசரம் அவசியம் நமக்கு இருக்கிறது. உணர்ச்சி வேகத்தில் இயங்கும் ஜீவனுக்கு லட்சியத்தின் தேவை வெளிப்படை எனினும் வெறும் லட்சிய கண்ணோட்டம் மட்டும் பலன் தராது . வாழ்க்கைக்கு ஒட்டாத கற்பனை மேலோட்டமான மகிழ்ச்சியைத் தந்து மறைந்துவிடும்.

உறவு

உறவு என்பது சடங்கால் வருவது அல்ல. அது ஒரு உணர்வு. உணர்வு வரவேண்டும் என்பதற்கான கருவிதான் சடங்கு. கருவியே உணர்வாகாது மனிதரை தெரிந்து சடங்குகளை உதற தெரிந்தவர்கள் வெகு சிலரே.

மனிதனின் லட்சியம்

மனம் எனும் ரகசியம். மனிதனின் லட்சியத்தை ஒரு சில வார்த்தைகாளகக் கூறிவிட முடியும். அது என்னவென்றால் மனித இனத்திற்கு அவர்களின் தெய்வீகத்தன்மையைப் போதிப்பதும், வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிலும் அந்தத் தெய்வீகத் தன்மை வெளிப்படுமாறு செய்வது எப்படி என்பதை போதிப்பது ஆகும்  எல்லா ஆற்றல்களும் உங்களுக்குள் இருக்கிறது. நம்மால் எதையும் செய்ய முடியும் என்பதை நம்புங்கள் நாம் பலவீனமானவர்கள், நம் மனம் பலவீனமானது என்று தயவு செய்து கருத்தில் கொள்ளாதீர்கள்.  ஒவ்வொர் ஆன்மாவும் உள்ளடங்கிய தெய்வீகம் நிறைந்தது. புற…

ஜோதிட சாஸ்திரத்தின் முக்கிய விதிகள்.

ஜோதிட சாஸ்திரத்தின் முக்கிய விதிகள். 1. ஜென்ம லக்கின ஸ்புடத்தை 5 ஆல் பெருக்கி வரும் தொகையுடன் ஜெனன காலத்தில் மாந்தியின் ஸ்புடத்தை கூட்ட வருகிற மொத்த ஸ்புடம் ஜீவன் அல்லது பிராணன் என்றும் 2. ஜெனன காலத்தில் சந்திரனுடைய ஸ்புடத்தை 8 ஆல் பெருக்கி வரும் தொகையுடன் ஜெனன காலத்தில் மாந்தியின் ஸ்புடத்தை கூட்டி வருகின்ற மொத்த ஸ்புடம் தேகம் என்றம் 3. ஜெனன காலத்தில் மாந்தியினுடைய ஸ்புடத்தை 7 ஆல் பெருக்கி வரும் தொகையுடன்…

ஆயுள்சம்பந்தமான விஷயங்கள்

 ஜாதக பராசர ஹோரை முதல் பாகத்தில் இருந்து, எட்டாம் பாவாதி பாபருடன் கூடி அதனுடன் லக்னாதி இணைந்து எங்கிருந்தாலும் அற்ப ஆயுள். லக்னாதி பாபருடன் கூடி எட்டாம் பாவத்தில் இருந்தாலும் அல்லது எங்கிருந்தாலும் அற்ப ஆயுள். ஆயுளை பற்றி சிந்திக்கும் போது சனி பத்தாமாதி, பாதக ஸ்தான அதிபர்கள் மாரக ஸ்தான அதிபர்கள் இவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். சந்திரன் இருந்த ஜென்ம ராசி ஜாதகத்தில் சூரியன், நாலில் ( 4 ) சந்திரன், 8 –…

யோகா.

மனித வாழ்க்கையில் யோகா மனிதனுடைய வாழ்க்கையில் ஆரோக்கியம்  மிக முக்கியம். ஆரோக்கியமாக வாழ யோகா மனிதனுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம் ஆகும். உடலின் உள்உறுப்புகளுக்கு உண்டான பலத்தை தருவதில் யோகாவிற்கு நிகர் யோகா மட்டுமே. உள் உறுப்புகளின் ஆற்றல்கள் குறையாமல் இருக்கவும், அதனுடைய ஆற்றல்கள் மேம்படவும், யோகா மூலம் செய்ய முடியும். வரும் முன் காத்தல், என்னும் சொல்லுக்கிணங்க யோகாவை சரியான முறையில் முறையாக, ஆசானிடம் பயிற்சி பெற்றால் நம் உடலுக்கு உண்டாகும் கேடுகளை வரும்…

ஜோதிடரும் ஜோதிடமும்

ஜோதிடம் மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் அடுத்த வினாடி முதல் அடுத்த ஜென்மம் வரை என்ன நடக்கும் எப்படி எப்படி நடக்கும், எப்போது நடக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் இருப்பது இயற்கையே.இந்த ஆவலை பூர்த்தி செய்ய உள்ள கலை ஜோதிடக் கலை மாத்திரமே. வேறு கலைகள் மூலம் இருக்கும் இருப்பில் சந்தோஷப்படலாம் அல்லது சங்கடங்களை தற்காலிகமாய் குறைத்துக் கொள்ளலாம், உதாரணமாக சோகமாக இருக்கும் போது ஆடல், பாடல் மூலம் சோகத்தை குறைத்துக் கொள்வது போல்.ஆனால் ஜோதிடத்தின் மூலம்…