ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 5

உன் உள்ளத்தை விண்மீனைப் போல் தூயதாக ஆக்க வேண்டுமென இறைவனை வேண்டு. காலமுறை தப்பாமல், முழுமனத்துடன் செய்யப்படும் ஜபத்தின் பலனாக, இறைவன் உன்னுடன் பேசுவதை நீ உணர்வாய். உன்னுடைய விருப்பங்களெல்லாம் பூர்த்தியடையும், களங்கமிலாப் பேரின்பத்தை நீ காண்பாய்.

அழகு.

ஓடிக்கொண்டே இருப்பதுதான் நதியின் அழகு. பாடிக்கொண்டே இருப்பதுதான் குயிலுக்கு அழகு சீறிக்கொண்டே இருப்பதுதான் பாம்பிற்கு அழகு. தேடிக்கொண்டே இருப்பதுதான் மனிதனுக்கு அழகு நாடிக்கொண்டே இருப்பதுதான் மனதுக்கு அழகு பேசிக்கொண்டே இருப்பதுதான் கிளிகளுக்கு அழகு நகர்ந்துகொண்டே இருப்பதுதான் மேகங்களுக்கு அழகு. மின்னிக்கொண்டே இருப்பதுதான் விண்மீன்களுக்கு அழகு. ஒளிவீசிக் கொண்டே இருப்பதுதான் வைரங்களுக்கு அழகு.