ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 2

அவதார புருஷர்களும், முனிவர்களும், யோகிகளுங்கூட, துன்பம் அனுபவித்தே தீர வேண்டும். ஏனெனில், சாதாரண மனிதர்கட்கு, தகாததைச் செய்தாலும், தக்கதைச் செய்யாமையாலும் ஏற்படும் பாவங்களை அம்மகான்கள் தாங்களே ஏற்றுக்கொண்டு, உலக நன்மைக்காகத் தம்மையே பலியாக்குகின்றனர்.

எதற்குமே ஏற்ற தாழ்வு உண்டு.

வாழ்க்கையில் பணத்துக்கும் சரி, பதவிக்கும் சரி, உணர்ச்சிக்கும் சரி எதற்குமே ஏற்ற தாழ்வு உண்டு. அந்த ஏற்றதாழ்வுகளால் அடியோடு பாதிக்கப்படாதவன் யோகி ஆகிறான். அடியோடு பாதிக்கப்படுபவன் போகி ஆகிறான். அல்லது ரோகி ஆகிறான். சற்று பாதிக்கப் பட்டாலும், சமய சந்தர்ப்பங்களை உத்தேசித்து அவற்றினின்று சட்டென்று விலகிக் கொள்பவன் விவேகி ஆகிறான்.