சுந்தர யோக சிகிச்சை முறை 27

அரிசி,கோதுமை,ராகி தானியங்கள் — சுமார் 10 அவுன்ஸ் வேறு தானியங்கள் — சுமார் 5 அவுன்ஸ் பால் — சுமார் 8 அவுன்ஸ் பருப்புகள் — சுமார் 3 அவுன்ஸ் காய்கள் — சுமார் 6 அவுன்ஸ் கீரைகள் — சுமார் 4 அவுன்ஸ் எண்ணெய்கள் — சுமார் 2 அவுன்ஸ் பழங்கள் — சுமார் 2 அவுன்ஸ் இந்த உணவுச் சேர்மானம் சுமார் 2600 உஷ்ணப் பிரமாணம் கொடுக்கும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 26

சர்க்கரை சத்து — அரிசி, கோதுமை தானியங்களில் தேவைக்கு மீறி இருக்கின்றது. கொழுப்பு — எள்ளு கடலை, தேங்காய், எண்ணெய்கள், வெண்ணெய், நெய், பால். விட்டமின் வகையாறா — தானியங்கள், இதன் தவிடுகள், சிறிதளவாய் பருப்புகளில் காய், கீரைகள், பால், முளை கொண்ட கடலைகள். அயம், கால்சியம், உலோகம் — கீரைகள், ரசமுள்ள பழங்கள், பால், சில பருப்புகள், தினம், நாம் தானியங்கள், பருப்புகள், எண்ணெய், நெய், பால், காய் கீரைகள், பழங்கள் சேர்ப்பதால் மேற்கூறிய சத்துக்கள்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 26,

இறைச்சி, பால், மதுபாண்டங்கள் தின்பவனது நாடி லக்ஷணம் ….. இறைச்சிகளை அருந்தினவனது நாடி ஸ்திரமாயும், பாலைகுடித்தவனது நாடி மிகவும் சீதளமாயும், மதுரியமான பண்டங்கள் புசித்தவனது நாடி ஸ்திரமாயும், மந்தமந்தமாயும் நடக்கும். மதுர பதார்த்ததங்கள், உஷ்ண பதார்த்ததங்கள், உலர்ந்த பதார்த்தங்கள் தின்பவனது நாடி லக்ஷணம் ——- வெல்லம், வாழப்பழம், மாமிசம், உஷ்ணபதார்த்தங்கள், உலர்ந்த பதார்த்ததங்கள், முதலியவைகளை புசித்தவனுடைய நாடி வாத பித்த ரோகநாடி கதியைப் போல் நடக்கும்.

எலுமிச்சை புல்(Cymbopogon citratus)

எலுமிச்சை புல் எலுமிச்சைப் புல்லைக் கொண்டு தேனீர் தயார் செய்யலாம். ஒரு டம்ளர் தயாரிக்க இரண்டு இலைகள் போதுமானது. இலைகளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து வடிநீர் தயார் செய்துக் கொள்ள வேண்டும். இந்த வடிநீர் உடன் தேவையான அளவு பால்,சர்க்கரை அல்லது வெல்லம் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து சுவையான தேனீர் தயார் செய்து பருகலாம். எளிதாக வளரும் தன்மை கொண்ட இந்த புல்லை அனைவருக்கும் வீடுகளில் வளர்த்து பயன் பெற வேண்டும். எலுமிச்சை…