பர்வதாசனம் — PARVATHASANAM (பருமன் அல்லது ஊளைச்சதையினைக் குறைத்தல் )
பெண்கள் மெல்லிய உடலமைப்பும் கட்டான உறுப்புகளும் பெற்றிருந்ததால் அழகாகவும் கவர்ச்சியாகவும் காணப்படுகிறார்கள். கவனமின்மையின் காரணமாக பெண்கள் தங்கள் உடலை தடிக்கச் செய்து பார்க்க அசிங்கமாக இருக்கிறார்கள். செய்முறை – பர்வதாசனத்தில் அமர்ந்து இரு கைகளையும் தலைக்கு மேலாக நன்றாக வளைவு இல்லாமல் நீட்டி இரு கைகளின் விரல்களையும் பின்னிக்கொண்டோ அல்லது ஒன்றின் மீது மற்றொன்று இறுக்கமாகச் சேர்ந்து இருக்கும்படியோ வைக்கவும். விரல்களை மடக்காமல் நீட்டிவிடவும். இரண்டு தோள்களையும் காதுகளுக்கு மிக அருகில் இருக்கும்படி செய்து தலையை நேராக…