கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 9

41) லக்கின கேந்திரத்தில் சனி, குரு, கேது தொடர்பு ஏற்பட்டாலும் லக்கினத்தைப் பார்த்தாலும், ஞானநிலை கிட்டும். 42) லக்கினத்திற்கு 3 – க்குரியவனும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும் சேர்ந்து, ராகு, கேதுவின் தொடர்பை பெற்று இரட்டை ராசியிலிருந்தால் இரட்டைக் குழந்தை பிறக்கும். 43) 1 – க்குரியவர், 1, 4, 7, 10 – லிருந்து, 5 – க்குரியவர் தொடர்பை பெற்றால் கீர்த்தி, செல்வாக்கு, பலரால் பாரட்டப்படுவது, அரசியலில் முன்னேற்றம், உயர்பதவி பெற வாய்ப்பு…

நபும்ஸக நிலை அறிய விதிகள் 2

புதன், சனி 7 ல் நிற்க காம இச்சை குறையும், சனி 8லிருப்பினும் காமம் குறைவே.  குரு, சுக்ரன், சனி, சுக்ரன் சேர்க்கை மந்தமான காமத்தைத் தரும்.  இவற்றை சுக்கிரன், 8 மிடம் ( SEX ORGANS ) சயன ஸ்தானம் இவற்றையும், புத்ரபாவத்தையும் கவனித்து அறிதல் நலம். மிருகசீரிஷம், மூலம், சதயம் இவை நபும்சக நட்சத்திரங்களாகும். ஏழாம் பாவம் இவற்றில் அமைவது கவனிக்கத்தக்கது. சனி, தனுசு, அல்லது ரிஷபத்தில் இருக்க அதுவே லக்னமாக அலித்தன்மை இருக்கும்.…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் தனுசு:-

தனுசு:- “வில்லானை சொல்லால் வளை” என்ற இந்த ராசி, அம்பு எய்யும் அமைப்பை போல் வான மண்டலத்தில் தோன்றும். இந்த ராசி காலபுருஷனின் ஒன்பதாவது ராசி ஆகும்.   இது  240 பாகை முதல் 270 பாகை வரை வியாபித்துள்ளது.   இதன் அதிபதி குருவாகும்.   உபய ராசியாகிய இது ஒற்றை ராசி எனப்படும்.  ஆண் ராசி ஆகும், நெருப்பு தன்மையுள்ள இந்த ராசி வேகத்தையும், விபரீதத்தையும் உடையது.  தென் முக ராசிகளில் மூன்றாவதாக வருவது,…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 1.2 ராசிகளின் அமைப்பு :- துலாம் முதல் மீனம் வரை

இராசி துலாம் 180 பாகைமுதல் 210பாகை வரை சரராசி தன்மைகள் காமம் – வெகுளி – மயக்கம் இரவில் பலம் இராசி விருச்சிகம் 210 பாகைமுதல் 240பாகை வரை ஸ்திர ராசி தன்மைகள் அறம் – பொருள் – இன்பம் இரவில் பலம் இராசி தனுசு 240 பாகைமுதல் 270 பாகைவரை உபயராசி தன்மைகள் நியாயம் – தர்மம் – புண்ணியம் இரவில் பலம் இராசி மகரம் 270 பாகைமுதல் 300பாகை வரை சரராசி தன்மைகள் ஆணவம்…

கோள்களின் கோலாட்டம் -1.14 தனுசு  திரேக்காணத்தின் பலன்கள்.

தனுசு 1 முதல் 10 பாகைக்குள் — நரநாற்கால் ஆயுததிரேக்காணம்– மனிதனின் முகம் உள்ளது, குதிரைக்கொப்பான சரீரம் ஆஸ்ரமம்  வேள்வியில் பங்கு பெறும்அமைப்பும்  உண்டு. புதன் நாயகன் ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்– மனதைக் கவரக் கூடிய அமைப்பு, செண்பக புஷ்பம், தங்கம் இவற்றிற்கொப்பான நிறமுள்ளவளும், கடலில் விளையும் பொருள்களை தரித்தவளும், பத்மாசனத்தில் அமர்ந்து இருப்பவளும் ஆவாள். செவ்வாய் நாயகன். ஆண் கிரகம் பலம் – தொப்புள்…