கிரகங்களின் எதிரிடை பலன் அறியும் விதி சுக்கிரன்

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் எந்த நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளதோ அந்த நட்சத்திரத்தில் இருந்து எண்ணிப் பார்க்கும்போது எதிரிடையான நட்சத்திரங்கள் ஏதாவது ஒன்றில் ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் அமையுமானால் ஜாதகருக்கு சுக்கிரனால் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காது. சுக்கிரனின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்னம் அமைவது அந்த ஜாதகரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்காது. சுக்கிரன் அவரவர் ஜாதகத்தில் எந்த பாவத்திற்க்கு அதிபதியாக நிற்கின்றாரோ அந்த பாவாதிபதி சுக்கிரனின் எதிரிடையான நட்சத்திரத்தில் இருந்தால் அப்பாவத்திற்கு சுக்கிரன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காது.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் ரிஷபம் :-

ரிஷபம் :- “ரிடபத்தானோடு தோரேல் ” என்ற பழமொழிக்கு உட்பட்டது இந்த ராசி. காளை மாட்டின் உருவத்தை ஒத்த இந்த ராசியான மண்டலத்தில் 30 டிகிரி பாகை முதல் 60 பாகை வரை வியாபித்து இரண்டாவதாக அமைந்திருக்கும் ராசியாகும். இதன் அதிபதி சுக்கிரன். இது பெண் தன்மையுள்ளது. சாத்திய ராசி, சமராசி ஸ்திர ராசியும் கூட எனவே இது அமைதியானது. ஆர்பாட்டம் செய்ய ஆசைப்பட்டாலும், செய்ய துணிவில்லாதது அதிக சுய இரக்கமும் சுய பச்சாதாபமும் மிக்கது வட…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.2 – ஜோதிட கலை பற்றி சில விஷயங்கள் சுக்கிரன் :- சனி :-

சுக்கிரன் :- கோள்கள் எல்லாவற்றிலும் ஒளி மிகுந்தது சுக்கிரன் தான். சூரியன் மறைந்ததும் மேற்கு வானில் தோன்றும். அல்லது சூரிய உதயத்திலும் முன் கிழக்கு அடிவானில் தோன்றும். இது பூமியுடன் சேர்ந்த இரட்டை பிறவி என்றே சொல்லலாம். சூரியனிலிருந்து 10.7 கோடி கிலோமீட்டர் சூரியனை ஒரு முறை சுற்றிவர 225 நாள் தன்னைத்தானே 30 நாளில் சுற்றுகிறது. சனி :- நம் முன்னோர்களுக்கு கடைசியாகத் தெரிந்த கோள்தான் சனி – சூரியனுக்கு 141.8 கோடி கிலோ மீட்டர்…