கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 18

 3 – க்குடையவர், லக்கினாதிபதி மாறி நிற்க, புதன் பார்க்க வீர, தீரம் உடையவர்.  4, 2 – க்குடையவர்கள் கூடி லக்கினத்தில நிற்க, புதன் பார்க்க வீர தீரம் உடையவர்  2, 3, 11 – க்குடையவர்கள் மூலவரும் கூடி 9 – ல் நிற்க, அவர்களை 5 – க்குடையவர் பார்க்க, சுகம், தனம், வாகன யோகம் உடையவர். 7, 2 – க்குடையவர் கூடி 4 – ல் நிற்க, 4 –…

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 7

மதிகெட்டவனே! பொருள் சேர்ப்பதில் ஆசையை விட்டொழி, வீணாண ஆசைகளினின்று விலகிய நல்ல எண்ணங்களை மனதில் சிந்தனை செய். உன்னுடைய நிலைக்கேற்ற கருமங்க‍ளைச் செய்வதால் கிடைக்கக்கூடிய பொருளைக் கொண்டு மனதைச் சந்தோஷப்படுத்திக்கொள். பொருள் எப்பொழுதுமே துன்பம் விளைவிப்பதென்பதை மனதில் வைத்துக்கொள். அதனால் சிறிதளவு சுகம் கூட இல்லை என்பது உண்மை. பெற்ற பிள்ளையிடமிருந்துங்கூட, பொருள் படைத்தவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. இப்படித்தான் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.

சுந்தர யோக சிகிச்சை முறை 3

இயற்கைக்கு விரோதமான செயலால் உண்டாகாததோர் தன்மை. இத்தகைய சுகம், இயற்கை ஆரோக்கியமான தூண்டுதலால் தோன்றி இயற்கை ஆரோக்கியத்தை நிலை நிறுத்தி, மனிதனை பகுத்தறிவு மனிதனாக வாழச் செய்து தன் அடிப்படையான தெய்வீகத் தன்மையை விளக்கி, அத் தெய்வீகமாக நின்று பரவி ஒளிறச் செய்வதேயாகும். இந்த சுகம், உடல் நலன், இயற்கை ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்டது. இதை மீறியதாக ஆகாது. மீறியதால் ஏற்படுதலாகாது

சுந்தர யோக சிகிச்சை முறை 1

பிணியும், பிணி தடுத்தலும் சுகத்திற்கே, வாழ்வு பிணிக்கல்ல! ஈசன் சுகத்திற்கெனறீன்றனே வாழ்வு பிறவி, சுகத்தைப் பற்றி சுகித்து வாழ! பிணியால் வாடி வதையுறுவதற்கல்ல! சுகம் நமது பிறப்புரிமை! சுகம் பெறவே எல்லாம் படைக்கப்பட்டிருக்கின்றன! நம்மிடமிருந்து நம் இன்பத்தை தடுக்க எவராலும் முடியாது. இறைவனாலும் முடியாது. இறைவன் நாம் இன்பமாக வாழவே நம்மை படைத்திருக்கிறான். இறைவனா தடுப்பான்? நம்மிடமிருந்து நம் இன்பத்தை, தடுப்பவன் நாமேதான் அல்லாமல் இறைவன் அல்ல, பிறரும் அல்ல. இந்த மாதிரி செயலுக்கு நமது அறியாமையும்,…

அன்பு-அதிகாரம்

அன்பு பழக நேரமாகும். அதிகாரம் நொடியில் பிரயோகம் செய்யப்படும். பேசி புரிந்து கொள்வது போல் சுகம் எதுவுமில்லை. என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தலைவிட ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று உடனே பார்த்துவிடுவது நல்லது.

கர்மா செயல்படும் விதம் 2

ஒரு செயல் செய்யப்படும் போது அந்த செயலைப்பற்றிய நினைவு வருவது முதல்படி. பின் அதை செயலாக்கத்திற்க்கு கொண்டு வருவது இரண்டாம் படி. ‍அந்த செயலினால் உண்டாகும் விளைவு என்பது மூன்றாம் படி. நினைவு வரும் இடம் மனம் அதை செயலாக்கத்துக்கு கொண்டு வரும் போது அதனுடன் உடல் இணைகிறது. அதன் விளைவுகள் எனும் போது சில சமயங்களில் மனம் மட்டும் அனுபவிக்கிறது பலசமயங்களில் உடலும் மனமும் அனுபவிக்கிறது. இதை நாம் கர்மா என்கிறோம். இதை பெரியவர்கள் மனஸா…

சந்தோஷம் பெற

மனிதன் தனக்கு எது தேவை என்றும், எது தேவையில்லை என்றும் தெரிந்து கொள்ள வேண்டும் நாம் சுகமாக இருக்கவேண்டும்  நம்முடைய சுகம் யாருக்குமே இந்த உலகத்தில் துக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. நம்முடைய தற்போதைய சுகம் நமக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தக்கூடாது. இந்த மூன்று கொள்கைகள் கொண்ட மனிதனுக்கு வாழ்க்கை முழுவதும் சந்தோஷம் தான்.

வாழறது சுகம்

நல்லா யோசிச்சு பாரு உன்னைவிட உன்மேல் அக்கறை இருக்கிறவங்க வேற யார். உன்னை விட உன்னைப்பத்தி நல்லா தெரிஞ்சவங்க யார் இதுக்கு சரியான பதில் உனக்கு உனக்குள்ளயிருந்த கிடைச்சுதுன்னா வாழ்க்கை, அதாவது வாழறது சுகம், சுலபம்.

எல்லாம் ஒன்றுதானா

எல்லாம் ஒன்று தான், ஆனால் எதுவும் ஒன்றல்ல. இதை புரிந்துகொள்ள வாழ்வது சுலபமாகும் வாழ்க்கையும் சுகமாகும் இதை எப்படி புரிந்து கொள்வது பலரின் வாழ்க்கையை பார்த்து அனுபவப்பட்டவர்களின் எழுத்துக்களை படித்து, சிந்தித்து நமக்குள்ளும் நம்மை சார்ந்தவர்களிடமும் பேசி என்ற படிகளின் மூலமே புரிந்து கொள்ள முடியும் இதை தவிர வேறு வழி இருப்பதாய் எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும் கேட்டுக்கொள்கிறேன்