ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 23

ஆத்மிகக் காட்சி நிறைவுறும் போது, ஒருவன் தன் இதயத்தில் குடிகொண்டுள்ள ஆண்டவனே அமுக்கப்பட்டவர், துன்புறுத்தப்பட்டவர், தீண்டாதோர், சண்டாளர் ஆகிய மற்றெல்லாரிடத்தும் இருப்பதை உணர்வான்,  இவ்வுணர்வு உண்மையான பணிவுடைமையைத் தரும். ஆண்டவன் எல்லோருக்கும் உரியவன் தீவிரமாகச் சாதனை செய்தால் சீக்கிரமாக அவனை அடையலாம். ஆண்டவனது நாமத்தை விரல்களைக்கொண்டு ஜபித்து அதன் மூலம் அவை புனிதம் அடைதற்காகவே அவன் நமக்கு விரல்களை அளித்துள்ளான். மேகத்தைக் காற்று கலைப்பதைப் போல ஆண்டவன் நாமம் உலகப்பற்றாகிய மேகத்தைக் கலைத்துவிடும்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 19

குழந்தாய், தவமோ, பூஜையோ இப்போது முதலே தொடங்கு, பின்னால் இவைகளைப் பற்றல் முடியுமா? எதை அடைய வேண்டுமோ அதனை இப்போதே அடை, இதுவே சரியான சமயம். கடவுளின் காட்சி பெறவில்லை என்பதால் சாதனையைத் தளர்த்தி விடாதே. தூண்டில் போடுபவன் தூண்டிலோடு வந்து அமர்ந்த ஒவ்வொரு நாளும் பெரிய மீனையா பிடித்துவிடுகிறான்? அவன் காத்துக் காத்து உட்கார்ந்திருக்க வேண்டும். பலமுறை அவன் ஏமாற்றமும் அடைகிறான்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 18

ஜபம் செய்யுங்காலத்தில் ஆண்டவனின் நாமத்தை உன்னால் இயன்ற அளவு மிக்க அன்போடும், நேர்மையோடும், ஆத்ம சமர்ப்பணத்தோடும் ஜெபித்து வா. நாள்தோறும் தியானம் செய்வதற்கு, முன் இவ்வுலகில் உனது திக்கற்ற நிலை‍யை எண்ணிப் பார், இதன் பின் உன் குருநாதர் கூறிய முறையில் சாதனை செய்யச் தொடங்கு. ஞானப் பயிற்சி முறைகளால் பூர்வ கர்மத் தளைகள் அறுக்கப்படுகின்றன. ஆனால் பிரேமபக்தியின்றிக் கடவுள் தரிசனம் பெறுதல் என்பது முடியாத காரியம். ஜபம் ஞான சாதனை இவற்றின் உண்மை நோக்கம் என்னவென்று…

சிந்தனை சாதனை

சாதாரண எண்ணத்தைக் கொண்டு சாதனை அடைந்தவர்கள் உண்டா? முயற்சியின்றி தேர்ச்சிப் பெற்றவர்கள் உண்டா? தியகமின்றி தங்கம் வென்றவர்கள் உண்டா? கவலைகள்,  கனவுகள், இல்லாத கலைஞர்கள் உண்டா? அனைவருக்கும் எளிதில் கிடைக்க சாதனை என்ன சாதாரண விஷயமா?                                                   சித்தேஷ்