சுந்தர யோக சிகிச்சை முறை 7

பொய்யான இன்பத்தை வழக்கமாக கொண்டிருந்தால் நோய்தான் வரும். இன்பம் வராது. சுகம் சாக, அதில் பிணி பிறக்கின்றது. சுகம் மறைய நோய் வளர்ந்து, அதிகமாகிறது, ஆயுளும் குறைகின்றது எவ்வாறு? உண்ணும் கணச் சுகத்தை எம்முறையில் அனுபவிக்கிறோம்? வயிறு நிறைய சாப்பிடுவதால், அளவுக்கதிமாக சாப்பிடுவதால் பலமிழந்து நூறு வயது இருக்க வேண்டிய இரைப்பை கெட்டு, சில வருஷங்களில் உயிரற்ற தோல்பை போல் மாறுகிறது. இயற்கை விரோதமான மிளகாய், காபி, கள், உயிரற்ற தீட்டிய கஞ்சி வடித்த உணவுகளை நிரப்புவதால்…

ஒரு எடக்கு மடக்கு கதை 1

நமக்குத் தெரிஞ்ச ஒரு ஆசாமி, சரியான எடக்குமடக்குப் பேர் வழி. நாலு தெரு தள்ளி, ஒரு பூங்கா; அங்கேதான் நம்ம எடக்குமடக்கு தினமும் வாக்கிங் போவது வழக்கம். பூங்காவுக்கு அருகிலேயே, சிவ ஆலயம் ஒன்று பாழடைந்து கிடந்தது. விளக்கு ஏற்றக்கூட யாரும் வருவதில்லை. கோவில் குருக்கள் ஒருத்தர், தினமும் கொஞ்சம் நேரம் கோயிலைத் திறந்து வைப்பார். எடக்குமடக்கின் மனைவி, ”பூங்காவைச் சுத்தும்போது, அப்படியே அந்தக் கோயிலையும்தான் ரெண்டு சுத்து சுத்திட்டு வாங்களேன்” என்பாள். உடனே எடக்கு மடக்கு,…

இரு வேறு பார்வைகள்*

வீட்டிலே காபி கொடுத்தாள்  மனைவி.  உள்ளே ஓர் எறும்பு கிடந்தது. அதைக் கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்துவிட்டான். விளைவு? சண்டை. சந்தோசமான வீடு மூன்று நாள் துக்க வீடாக மாறிவிட்டது. இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது. அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான். அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான். “உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான். உன் காபிக்காக உயிரையே கொடுத்து…