அனுபவ மொழிகள்

நம் நாட்டை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம். தலைக்கும், இதயத்துக்கும் கொடுக்கும் பயிற்சியே கல்வி. கல்வி இல்லாச் செல்வமும், கற்பில்லா அழகும் கடுகளவேணும் பிரகாசிக்காது. கடவுள் தூய கரங்களையே பார்க்கிறார். நிறைந்த கரங்களையல்ல நண்பர்களுக்கெல்லாம் நல்ல நண்பன் ஒரு நல்ல புத்தகம். கண்ணுள்ளவன் விழுவதை விட குருடர் குறைவாகவே விழுகிறார். கற்றுக்கொள்வது ஒரு கசப்பான வேர், ஆனால், அது இனிய கனிகளைச் சுமந்துள்ளது

பிரமாணம் அப்படீன்னா என்ன 2

தம்பி இப்ப நாம இருக்குற இந்த ரூமுக்குள்ள ஒரு பயித்தியகாரன் வந்து இந்த ரூம் பூரா தேவதைக இருக்காங்க அதுலயும் உண்ண பாத்து கடவுள்ன்னு சொன்னா அது பிரமாணமாகாது. நான் சொல்லறது  கரெக்ட்டா  கரெக்ட் ஏன், அவன் புத்திசரியில்லாதவன், அப்ப சரி, பிரமாணம் அப்படின்னு சொல்லறவங்க அறிவோட ,புத்தியும் இருக்கிறவங்களா இருக்கனும். சரி தானே சரி தான் இப்ப அடுத்தது கடந்த கால அறிவுக்கு முரண்படாம இருக்கனும் இதுல என்ன முரண்பாடு இருக்கு என்னை கடவுள்னா அப்ப…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 18

ஜபம் செய்யுங்காலத்தில் ஆண்டவனின் நாமத்தை உன்னால் இயன்ற அளவு மிக்க அன்போடும், நேர்மையோடும், ஆத்ம சமர்ப்பணத்தோடும் ஜெபித்து வா. நாள்தோறும் தியானம் செய்வதற்கு, முன் இவ்வுலகில் உனது திக்கற்ற நிலை‍யை எண்ணிப் பார், இதன் பின் உன் குருநாதர் கூறிய முறையில் சாதனை செய்யச் தொடங்கு. ஞானப் பயிற்சி முறைகளால் பூர்வ கர்மத் தளைகள் அறுக்கப்படுகின்றன. ஆனால் பிரேமபக்தியின்றிக் கடவுள் தரிசனம் பெறுதல் என்பது முடியாத காரியம். ஜபம் ஞான சாதனை இவற்றின் உண்மை நோக்கம் என்னவென்று…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 6

கேள்வி – நீங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரைத் தந்தை எனக் கருத முடியுமா? பதில் – ஆம், அவர் என் தந்தையாரும், தாயாரும், உடன் பிறந்தாரும், நண்பருமாவார். எனக்கு எல்லாம் அவரே, நீ அவர் உருவப் படத்தின் முன்னின்று பிரார்த்தனை செய்தால் அப்படித்தின் மூலம் உனக்குக காட்சி தருவார். அந்தப் படம் வைக்கப் பட்டிருக்கும் இடம் கோயிலாக ஆகிவிடும். வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கச் சுலபமானதும் மேலானதுமான மார்க்கம் ஆண்டவனின் நாமத்தை, ஸ்ரீராமகிருஷ் ண‍ரின் பெயரை, மோனமாக ஜபிப்பது. ஸ்ரீராமகிருஷ்ணரிடம் நம்பிக்கை…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 3

உலகத்தில் துன்பம் நிறைந்திருக்கிறது. நாங்கள் ஆண்டவனை வணங்கினோம். ஆயினும் துன்பத்திற்கு முடிவுமில்லை, என்று வருந்திப் பலர் கூறுகின்றனர். ஆனால் துன்பமும் கடவுள் தந்த பரிசே. அத்துன்பம் கடவுட் கருணையின் சின்னமாகும். ஒருவருக்கு வேண்டுவதெல்லாம் இறைவனது அருளே. ஒருவர் அதற்காகவே பிரார்த்தனை செய்யவேண்டும். மனிதப் பிறவியிலே எவ்வித மகிழ்ச்சியும் இல்லை, உலகமே துன்பத்தில் மூழ்யிருக்கிறது. மகிழ்ச்சி என்பது பெயரளவில் தான் உள்ளது. குருதேவரின் அருள் பெற்றவனே, அவர் ஆண்டவன் வடிவம் என உணர்வான். அதுதான் ஆனந்தம் என்பது நினைவிருக்கட்டும்.

இந்து மதத்தில் ஏன் இத்தனை கடவுள்.

சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள். விஷ்ணு புராணம் படித்தால் விஷ்ணுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம். முதலில் ஹிந்துக் கடவுள்களை விமர்சிக்க தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர். சிவா என்றால் புனிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்ணு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன். இராமன் என்றால் ஒளி மிக்கவன்,…

சக்தி மயமான ஆற்றல்

அகிலமெங்கும் பரந்து விரிந்திருக்கும் சக்தி மயமான ஆற்றலும் திறனும் மனிதனுள் அடக்கம். பரவிவிரிந்திருக்கும் அந்தப் பூரணத்தின் சர்வ சக்தி வடிவே மனிதன். தன்னுள் அடங்கி ஒடுங்கியிருக்கும் பிரம்மாண்டமான சக்தியை வெளிக்கொணர்ந்து விரிக்கும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு. இந்த அறிவின் வினையே கடவுள் என்று மனிதன் அறிந்து விட்டால், தன்னிலிருந்து பேராற்றலை அவன் வெளிப்படுத்தமுடியும்.

கடவுள்

காந்த ஊசி எப்பொழுதும் வடக்கு திசையையே காட்டுவதால், கப்பல்கள் கடலில் திசை தப்பிப் போவதில்லை. அதுபோலவே மனிதனுடைய மனம் இறைவனையே நாடியிருக்கும்வரை, அவன் வாழ்க்கை கடலில் திசை தப்பிப் போவதில்லை.  — இராமகிருஷ்ண பரமஹம்சர் “ ” மலர்களிலே மணம் இருப்பதுபோலவே ஆண்டவனும் உன்னிடமே இருக்கிறான். இதை அறியாமல், தன்னிடம் இருக்கும் கஸ்தூரியை உணராத மான், புல்லில் தேடுவது போல் நீ ஏன் வெளியில் தேடுகிறாய்?”   — கபீர்தாஸ் . “கடவுளை வணங்குதல் என்றால் என்ன?…