மூதுரை

 அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 18

பிராணாவை உடலைமைப்புகளே, தமக்குத் தாமே சரி செய்து கொண்டு வாழ்க்கையை நடத்துவதற்கு அவசியமாக என்ன வேண்டும்? உணவு, ஒழுக்கம், உழைப்பு இம்மூன்றும் இயற்கைக்கு இணங்கி ஏற்பட்டு நடந்தால், பிராணா சமாதானத்தில் நின்று சரிசெய்யப்பட்டு, பிணி தடுக்கப்படுகின்றது. நோய் வந்தபின் சிகிச்சையைத் தேடுவதைக் காட்டிலும், தேடியும் சிகிச்சை கிட்டாமல், இறப்பதைக் காட்டிலும், நோய் வராமல் தடுத்துக் கொள்ளுதலே மேலானது. பகுத்தறிவு கொண்ட மனிதனுக்கு ஏற்றதானது, சுலபமானது, சுகத்தைப்பற்றிச் சுகிக்தது வாழ இயல்பானது.

சுந்தர யோக சிகிச்சை முறை 15

எக்கருவி எப்பாகம், உடலின் எத்தொழில் கெட்டிருக்கிறதென்று ஆராய்ச்சியாலறிவதே, வைத்தியத்தின் முதல் முக்கிய தொழில், இதை அறிந்து பிற்பாடு சிகிச்சை ஆரம்பிக்கப்படுகிறது. வைத்தியம் மேல் நாட்டு முறையிலும் எவ்வளவோ வளர்ச்சி பெற்றிருந்தும், எவ்வளவோ ஆராய்ச்சி முறைகள், ஆராய்ச்சிக் கருவிகள் ஏற்பட்டும், நோயின் காரணத்தை கண்டுபிடித்தல், இன்னும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது. நோய்களின் உற்பத்தி ஆராய்ச்சி வலுக்க, வலுக்க சீர் கெட்ட இயற்கை விரோத நாகரிக வாழ்க்கையால், காரணம் கண்டுபிடிக்க முடியாத நூதன பிணிகள், ராக்ஷசத் தன்மையுடன் வளர்ந்து கொண்டே…

இலட்சியப்பூர்த்தி அடைய

பகவான் பாபா சொல்கிறார் ” எப்போது நீ அதிக அன்பு செலுத்த ஆரம்பித்து விட்டாயோ, அதிக பேச்சைக் குறைத்துக்கொண்டாயோ, அதிக சேவையில் மனம் ஈடுபட்டதோ அப்போது உனக்கு த்யானம் நன்றாக வந்து விட்டது என்று பொருள் கொள்” அன்பு உயர பண்பு உயரும். பண்பு உயர ஒழுக்கம் உயரும் ஒழுக்கம் உயர,தியானம் வளரும் தியானம் வளர ஒளி மிளிரும், ஒளி மிளிர வாழ்வு ஓங்கும் . அன்பு ஓங்க. சாதனை ஓங்கும் சாதனை ஓங்க இலட்சியப்பூர்த்தி………………

சுந்தர யோக சிகிச்சை முறை 8

சுகம் நமது பிறப்புரிமை  இதை வெளியார் யாரும், ஈசன் கூட, நம்மிடமிருந்து தடுக்க முடியாது இதுதான் உண்மை சுகத்தை நம்மிடமிருந்து அகற்றிக் கொள்ளுதல், பிறப்புரிமையை இழத்தல் நாமே இதுவும் உண்மைதான் நாம் தானே இயற்கைக்கு விரோதமாக, ஒழுக்கம், அடக்கம், மிதம், காலம் முறையின்றி உண்டு  ஜீவிதத்தில், உடற் பகுதியான, ஆரோக்கிய வாழ்வால் உண்டாகும். மனத்தன்மையான  இச்சுகத்தை, அகற்றிக்கொண்டது,  நாம் தானே!  இந்த நிலைக்கு பொறுப்பு நாம் தானே வேறு யாரும் இல்லையே