சுந்தர யோக சிகிச்சை முறை 8
சுகம் நமது பிறப்புரிமை இதை வெளியார் யாரும், ஈசன் கூட, நம்மிடமிருந்து தடுக்க முடியாது இதுதான் உண்மை சுகத்தை நம்மிடமிருந்து அகற்றிக் கொள்ளுதல், பிறப்புரிமையை இழத்தல் நாமே இதுவும் உண்மைதான் நாம் தானே இயற்கைக்கு விரோதமாக, ஒழுக்கம், அடக்கம், மிதம், காலம் முறையின்றி உண்டு ஜீவிதத்தில், உடற் பகுதியான, ஆரோக்கிய வாழ்வால் உண்டாகும். மனத்தன்மையான இச்சுகத்தை, அகற்றிக்கொண்டது, நாம் தானே! இந்த நிலைக்கு பொறுப்பு நாம் தானே வேறு யாரும் இல்லையே