கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 12

 3, 12 – க்குடையவர்கள் கூடி திரிகோணம் பெற்று 2 – க்குரியவர், புதனுக்கு கேந்திரம் பெற்றால், புலமை தன்மை, பல நூல்களை எழுதும் ஆற்றல், கதை, கவிதை, கட்டுரை, காவியங்களில் சிறப்பு, கணிதம், ஜோதிடத்தில் வல்லவன்.  லக்கினாதிபதி கேந்திரம் அடைய அக் கேந்திராதிபதி திரிகோணமடைய, சந்திரன் ஆட்சி பெற, 12 – க்குரியவர் சந்திரன், குருவிற்கு கேந்திரத்தில் நிற்க, 5 – க்குரியோர் கேந்திரம் பெற வேத ஆகமம், வாகடவித்தை,கணிதம்,ஜோதிடம்,சித்தாந்தம் போன்றவைகளை கற்று சிறப்புடன் வாழ்வான்.…

கூர்மாசனம்

படத்திலுள்ளபடி குய்யபாத ஆசன நிலையிலுள்ளபடியே இரண்டு கைகளை மட்டும் சிரசிற்குமேல் கும்பிடுவது போல அமைத்து மூச்சை உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல் சாதாரணமாக இழுத்தும் விட்டும் ஒரு நிமிடம் முதல் 3 நிமிடம் வரை அப்படியே இருத்தல் வேண்டும் இம்மாதிரி 3 முதல் 5 முறை வரை செய்யவேண்டும். குறிப்பு – கூர்மம், ஆமை, தன் ஐந்து உறுப்புக்களையும் ( தலை, நான்கு கால் ) தன் விருப்பப்படி வெளியில் நீட்டவும், அடக்கவும் செய்யும். அதுபோல இந்த ஆசனத்தைச் செய்பவர்களும்…

பிராமண பாவ ராசிகள் கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

கடகம், விருச்சிகம், மீனம் :- இது பிராமண பாவ ராசிகள் இதில் ஒன்றில் பிறப்பு லக்னம் அமைந்து சந்திரனும் லக்னாதிபதியும் மேற்படி ராசிகள் ஒன்றின் இருப்பில் சரியான பிடிவாத குணம் உள்ளவர்கள். அடிக்கடி பொறுமையை இழப்பவர்கள் அறம், பொருள், இன்பத்தில் பற்று கொண்டவர்கள். தெய்வீக ஆன்மீக வழியில் அதிக நாட்டம் கொண்டவர்கள். தான் நினைத்ததை சாதிக்கும் தன்மையுடையவர்கள், தன் விருப்பதிற்கு மாறாக நடப்பவர்களை தூக்கி எறியும் சுபாவம் உள்ளவர்கள். தலைவணங்காதவர்கள், நல்லவர்கள், கெட்டவர்களிடம் சமமாக பழகுபவர்கள். ஜாதி,…

பின் பற்ற வேண்டிய விஷயங்கள்

பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.

சக்தி மயமான ஆற்றல்

அகிலமெங்கும் பரந்து விரிந்திருக்கும் சக்தி மயமான ஆற்றலும் திறனும் மனிதனுள் அடக்கம். பரவிவிரிந்திருக்கும் அந்தப் பூரணத்தின் சர்வ சக்தி வடிவே மனிதன். தன்னுள் அடங்கி ஒடுங்கியிருக்கும் பிரம்மாண்டமான சக்தியை வெளிக்கொணர்ந்து விரிக்கும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு. இந்த அறிவின் வினையே கடவுள் என்று மனிதன் அறிந்து விட்டால், தன்னிலிருந்து பேராற்றலை அவன் வெளிப்படுத்தமுடியும்.