சுந்தர யோக சிகிச்சை முறை 15

எக்கருவி எப்பாகம், உடலின் எத்தொழில் கெட்டிருக்கிறதென்று ஆராய்ச்சியாலறிவதே, வைத்தியத்தின் முதல் முக்கிய தொழில், இதை அறிந்து பிற்பாடு சிகிச்சை ஆரம்பிக்கப்படுகிறது. வைத்தியம் மேல் நாட்டு முறையிலும் எவ்வளவோ வளர்ச்சி பெற்றிருந்தும், எவ்வளவோ ஆராய்ச்சி முறைகள், ஆராய்ச்சிக் கருவிகள் ஏற்பட்டும், நோயின் காரணத்தை கண்டுபிடித்தல், இன்னும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது. நோய்களின் உற்பத்தி ஆராய்ச்சி வலுக்க, வலுக்க சீர் கெட்ட இயற்கை விரோத நாகரிக வாழ்க்கையால், காரணம் கண்டுபிடிக்க முடியாத நூதன பிணிகள், ராக்ஷசத் தன்மையுடன் வளர்ந்து கொண்டே…

நட்சத்திர எதிரிடை 5

லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் அதன் திரிகோண நட்சத்திரத்தில் 8 – ஆம் பாவாதிபதி இருந்தால் செயற்கைமரணம். நீர், நெருப்பு கயிறால் பயம், நம்பிக்கை, மோசம்,  கெட்ட பெயர் எடுத்தல், எதிரிகளால் பயம், கடத்தப்படுதல், பலாத்காரம்,அறுவை சிகிச்சை, தொத்து நோயால் தொல்லை, கற்பழிப்பு, ஜெயில் தண்டனை, கீழே விழுதல், கீர்த்தி பங்கம் முதலியவை உண்டாகும்.. லக்னாதிபதி எதிரிடை நட்சத்திரத்தின்  திரிகோண நட்சத்திரங்களில் 9 – ஆம் பாவாதிபதி இருந்தால் பாக்கியம் இழப்பு, பதவி பறிபோதல், அவமானம்…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 10 கோள்களின் கோலாட்டத்தின் படி

‘‘அரிது அரிது மானிட பிறவி கிடைத்தல் ’’ என்ற பெரும் பேற்றை பெற்ற இம் மனித பிறவியை நவக்கிரகங்களின் கதிர்வீச்சு காற்றில் கலந்துசுவாசத்தின் மூலம் மனித தேகத்திற்குள் சென்று தோற்றுவிக்கும் விசித்திரங்கள் தான் எத்தனை எத்தனை… பராசக்தியின் படைப்பில் எவ்வளவோ மாற்றங்கள், விசித்திரங்கள், வினோதங்கள் இவையெல்லாம் எப்படி எவ்விதத்தில் நிகழ்கின்றன என்பதை சிந்தித்துப்பார்த்தால் சிந்தனை தான் சிறகடித்து பறக்குமே ஒழிய நிலையான முடிவிற்கும் இடத்திற்கும் வரமுடிவதில்லை. இதேபோல் அத்தெய்வத்தால் சிருஷ்டிக்கப்பட்ட நவநாயகர்கள் நடத்தம் வினோத விசித்திரங்களை காணும்போது…

ஒரு சிறந்த மருத்துவனின் லட்க்ஷணம்

சிறந்த மருத்துவர் நோயாளியின் உடலின் தன்மைகளை சரியாக அறிந்து தான் கற்ற மருந்துகளையும், ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த மருந்துகளையும் தந்து அது தவிர, தவறான மருந்துகளின் குறிப்புகளையும் தருபவரே சிறந்த மருத்துவர்

இயற்கை அமைத்த ஸ்ரீ சக்கரம்

அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்கில் உள்ள இடம்தான் மிக்கி பேசின். சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம். ‘பில் மில்லர்’ என்கிற ராணுவ அதிகாரி இந்த இடத்தை குட்டி விமானம் மூலம் கடந்து செல்கையில், 13.3 மைல் சதுர அளவுக்கு வரி வரியாக வரைபடம் போன்ற ஒன்றை கண்டார். ஏதோ நாட்டின் வரை படம் என்று நினைத்து அதைப் பற்றி ஆராய்ந்தவருக்கு   அது நம் இந்து மதத்தில் காலம் காலமாக வழிபடும்…