உச்ச கட்ட ரகசியம்

ஒன்றை அழித்து, ஒன்றை காப்பதுதான் ஆத்மிக ரகசியம். உலக பரிபாலனத்தின் உச்ச கட்ட ரகசியமும் அதுதான். இந்த ரகசியத்தை அறிந்து செயல்படுத்துபவர்கள் தான் அரசியல் ஆட்சியாளர்கள். துரதிஷ்ட்டவசமாக மக்கள் அழிவதும், ஆட்சியாளர்கள் அவர்கள் சம்பந்தபட்டவர்களை மட்டும் காப்பதுமாக ஆட்சி பரிபாலனம் நடைபெறுகிறது.

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம் 5

சூரியன், குரு சேர்க்கை 5, 2, 6, 9, 10 ஆகிய இடங்களில் இருந்து செவ்வாயின் தொடர்பை பெற்றால், உன்னத பதவிகளை வகிக்கும் வாய்ப்பு கிட்டும். சூரியன், புதன் சேர்க்கை நல்ல பாண்டித்யமும், கல்வி அறிவும் குடும்ப சூழ்நிலையும் மனைவி வகையில் நல்ல நிலைமையும், தெய்வீக, ஆன்மீக தொடர்புகளில் பிரகாசமும், அரசியல், ராணுவம், காவல் போன்ற துறைகளில் புகழும் கிடைக்கிறது. சூரியன், சந்திரன் சேர்க்கை 5, 6, 10, 11ல் இருந்தால் மட்டுமே யோகம் தரும். குரு,…

உரையாடலின் ஒரு பகுதி 6

ஒரு சந்தேகம், விஸ்தாரமாக நாடெங்கும் பொது நன்மைக்காக விரைவில் ஒரு சீர்திருத்தத்தையோ,காரியத்தையோ, வலுவுடன் செய்ய ஏகாதிபத்திய சர்வாதிகார சக்தி வேண்டுமல்லவா சர்வாதிகார சக்தி என்பது இரண்டு புறமும் கூர்மையான கத்தி அது ஏதாவது சந்தர்ப்பத்தில் தன்னையோ, பிறரையோ காயப்படுத்திவிடும். ஏகாதிபத்திய ஆட்சியிலும் ஆட்சியை நடத்தும் சர்வாதிகாரிக்கு முன்போ பின்போ சுயநல இச்சைகள் ஏற்படும் போது மக்களின் சுதந்திரம் பறி போவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். எந்த சமயமும் கொடுங்கோண்மையாக மாறக்கூடிய சர்வாதிகார அரசியலைவிட சக்தியற்ற மந்தமான அரசியல்…

வைசிய பாவ ராசிகள் கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

ரிஷபம், கன்னி, மகரம் :- இது வைசிய பாவ ராசிகள். இதில் ஒன்றில் லக்னம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகளில் ஒன்றில் இருந்தால் பணமே குறியாய் இருப்பார்கள். உழைப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள், எத் தொழில் செய்வதற்கும் தயங்காதவர்கள். எவ்வகையிலாவது வாழ வேண்டும் என்று குறிக்கோள் உடையவர்கள். சதா ஏதாவது ஒன்றை செய்து கொண்டேயிருக்க வேண்டும் என்ற பிரியம் உடையவர்கள். மிக ஏழ்மையான நிலையிலிருந்து பல கஷ்டங்களையும் துன்பத்துயரங்களையும், அனுபவித்து வாழ்க்கையில் முன்னேறுவார்கள். தனக்கு நன்மை…

நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் 4

தேசியத்தில் பார்த்தால் மதம், அரசியல் ,அந்தஸ்து ,போன்றவற்றால் மக்கள் பிரிந்தும் தங்களை தொலைத்தும் இருக்கிறார்கள் தான் தன்னை இழந்துவிட்டோம் தன்னை தொலைத்துவிட்டோம் என்ற சிந்தனை கூட மக்களுக்கு இல்லை பாவம் என்ன செய்வது அரசியலை சார்ந்திருக்கும் அரசியல் வாதிகளாலோ மதத்தை சார்ந்திருக்கும் மதகுருமார்களாலோ வியாபாரத்தை சார்ந்திருக்கும் வியாபாரிகளாலோ தனி திறமையாளர்களாலோ மிக பெரிய ஆராய்ச்சியாளர்களாலோ இதுநாள் வரையில் மக்களுக்கு சந்தோஷமாக வாழ்வதற்குண்டான கல்வியை சுதந்திரத்தை தர முடியவில்லை இனி இவர்களை நம்பி பலனில்லை அதை நாமே தேடி…

நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் 2

நமது வாழ்க்கை கடினமாயும், குழப்பங்களும் , எதிர்மறை நிறைந்ததாயும் இருக்கிறது.  தனி மனித வாழ்க்கை மட்டுமல்லாது பொது வாழ்க்கையும் கூட அப்படி தான் இருக்கிறது எங்கு நோக்கினும் அழிவு கோட்பாடுகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றது எதற்கும் எதிலும் மதிப்போ ஆதாரமோ நம்பிக்கையோ இல்லை அது மதமாகட்டும் நிறுவனமாகட்டும் தத்துவமாகட்டும் அரசியல் ஆகட்டும் இப்படிபட்டக் குழப்பம் நிறைந்த உலகில் நாம் எப்படி வாழ்வது என்று நாம் சிந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் இத்தனைக்கும் காரணம் சரியான…

அரசியலில் அந்தஸ்து நிலைத்திருக்க வேண்டியதற்கு வேண்டியவிசேஷகுணங்கள்.

காமு -அரசியலிலே நீடிச்சு நிலைச்சு நிக்கணும் அப்படின்னா என்னென்ன குணம் இருக்கணும் கோமு- நான் சொல்லுவேன் உனக்கு புடிக்காது காமு -இல்ல சொல்லு நான் கேக்கறேன் கோமு -சரி சொல்லறேன் கேளு உறவாடி கெடுக்கும் உத்தம குணம், சுயநலம், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம், ஏளனம், பொறாமை, பேராசை இதல்லாம் சாதரண மனிதர்களுக்கும் இருக்கும், ஆனா விசேஷமாய் அரசியல் நடத்துபவர்களிடம் இருக்கும். அந்த விசேஷம், ராஜ தந்திரத்தில் குள்ளநரியாகவும், அரசியல் கட்சிகளில் அடிக்கடி கட்சிமாறும் பச்சோந்தியாகவும், மத நம்பிக்கைகளில்…