விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 41

நமது மதத்தைத் தவிர மற்ற பெரிய மதங்கள் அனைத்தும் இத்தகைய வரலாற்று மனிதர்கள் மீதே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது மதம் தத்துவங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. வேதங்களை உருவாக்கியதாக எந்த ஆணோ பெண்ணோ உரிமைபாராட்ட முடியாது. அவை என்றும் அழியாத உண்மைகளின் திரண்ட வடிவமாகும் ரிஷிகள் அவற்றைக் கண்டுபிடித்தார்கள். வேதங்களில் அந்த ரிஷிகளின் பெயர்கள் வெறும் பெயர்கள் மட்டுமே இங்குமங்குமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் யார், என்ன செய்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. பலருடைய தந்தையின் பெயர் இல்லை ;…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 40

விசித்திரம் என்னவென்றால் அத்தகைய மதங்களாகிய கட்டிடம் அவர்களது வாழ்க்கையின் வரலாற்று ஆதாரம் என்ற அஸ்திவாரத்தின் மீதுதான் முற்றிலும் கட்டப்பட்டுள்ளது அந்த வரலாற்று ஆதாரத்தில் மட்டும் ஓர் அடி விழுமானால், பாறை போன்ற அஸ்திவாரம் என்று பெருமைப்பட்டுப் கொள்கிறார்களே அது மட்டும் அசைக்கப்படுமானால், தூளாக்கப்படுமானால் முழுக்கட்டிடமுமே நொறுங்கிக் சுக்கல் சுக்கலாகி விடும். அவை மீண்டும் பழைய பெருமையைப் பெறுவதே இல்லை. இன்று அப்படித்தான் நடைபெறுகிறது. அத்தகைய மதங்களைத் தோற்றுவித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றில் பாதி நிச்சயமான உண்மை என்று நம்பப்படவில்லை…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 39

நமது மதத்தைத் தவிர, ஏறக்குறைய உலகின் மற்ற பெரிய மதங்கள் எல்லாமே அதைத் தோற்றுவித்த ஒருவர் அல்லது பலரது வாழ்க்கையோடு இணைக்கப்பட்டடுள்ளன. அந்த மதங்களின் கொள்கைகளும் போதனைகளும் கோட்டுபாடுகளும் அற நெறிகளும் அவைகளைத் தோற்றுவித்தவர்களின் வாழ்க்கையைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. அவர்களின் வாழ்க்கையே அந்த மதங்களின் ஆதாரமாகவும் அதிகாரமாகவும் ஆற்றலாகவும் உள்ளது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 38

ஒவ்வொரு மதத்திலும் உள்ள எத்தனை எத்தனையோ விந்தையான கருத்துக்களைக் கேட்பது எனக்குப் பழக்கமாகிவிட்டது. சிறிதுகாலத்திற்கு முன்பு கூட, கிறிஸ்தவ மதம் மட்டுமே உலகம்தழுவிய மதம் என்று என் சிறந்த நண்பரான டாக்டர் பரோஸ் உரிமை பாராட்டியதை நீங்கள் கேட்டிருக்கலாம் இந்த விஷயத்தைப்பற்றிச் சிறிது சிந்திக்க விரும்புகிறேன். வேதாந்தம் மட்டுமே உலகம் தழுவிய மதமாக முடியும்; வேறெந்த மதமும் அத்தகைய ஒன்றாக இருக்க முடியாது என்றே நான் கருதுகிறேன் அதற்கான காரணங்களை இப்போது கூறுகிறேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 37

அவர்களது மதமான கிறிஸ்தவம் பல விஷயங்களில் நல்லதாகவும் பெருமை மிக்கதாகவும் இருந்தாலும் அதனை அவர்கள் முழுமையாக உணரவில்லை; உணர்ந்தபோதோ அது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை எனவே மேலை நாட்டின் அறிவுஜீவிகள், நம் பழைய தத்துவங்களில், அதிலும் குறிப்பாக வேதாந்தத்தில், தாங்கள் தேடிக் கொண்டிருக்கின்ற புதிய சிந்தனைத் துடிப்பையும் தங்கள் பசிக்கும் தாகத்திற்கும் ஏற்ற ஆன்மீக உணவையும் நீரையும் காண்கிறார்கள். இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 36

படைகளோ அரசாங்கமோ சட்டக்கொடூரங்களோ எவ்வளவு தான் இருந்தாலும் ஓர்இனத்தின் நிலையை மாற்ற முடியாது. ஆன்மீகப் பண்பாடும் நீதிநெறிப் பண்பாடும் மட்டுமே மனித இனத்தின் தவறான போக்குகளை மாற்றி, அதை நல்ல வழியில் திருப்ப முடியும் எனவே மேலைநாட்டினர் ஏதாவது புதிய சிந்தனைகளையும் புதிய தத்துவங்களையும் பெறுவதற்காக ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 36

ஆனால் அங்குள்ள மகத்தான சிந்தனையாளர்களிடம் வேறு சிந்தனைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மனித வாழ்வில் எவ்வளவு தான் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் தீமைகளைத் தீர்க்க முடியாது என்பதை அவர்கள் கண்டு விட்டார்கள். அக வாழ்வில் ஓர் உறுதியான மாற்றம் மட்டுமே வாழ்க்கையின் தீமைகளை நீக்கும்.

 விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 35

அங்குள்ள பலரும், ஏன், பண்பட்டு உள்ளோரும் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் இந்தப் போட்டி, போராட்டம், வாணிப நாகரீகத்தின் காட்டு மிராண்டித்தனம் இவைகளால் ஏற்கனவே களைத்துப் போய்விட்டார்கள் மேலான ஒன்றை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதே வேளையில் ஐரோப்பாவின் தீமைகளுக்கெல்லாம் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களே ஒரே தீர்வுஎன்றும் சிலர் இன்னும் அங்கே பிடிவாதமாக நம்பிக் கொண்டுதான் இருக்கின்றனர்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 34

மனித வாழ்க்கையில், ஏன் நாடுகளின் வரலாற்றில் கூட ஒரு வகையான களைப்பு, வேதனை தரத்தக்க வகையில் அதிகமாக நிலவுகின்ற சில நேரங்கள் உண்டு அத்தகையதோர் அலை இப்போது மேலைநாடுகளில் மோதுவது போல் தோன்றுகிறது. அங்கும் மகத்தான சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள் இப்படிப் பணம் பதவி என்று அவற்றின் பின்னால் ஓடுவது வெறுமையிலும் வெறுமை என்று அவர்களும் கண்டுபிடித்து விட்டார்கள்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 33

யார் போகத்தின் பின்னாலும் ஆடம்பரத்தின் பின்னாலும் ஓடுகிறார்களோ அவர்களின் வாழ்க்கை எவ்வளவு பரப்பரப்பாக அந்ந நேரத்தில் காணப்பட்டாலும் அவர்கள் அழிந்தே தீர வேண்டும், மாய்ந்தேயாக வேண்டும் என்பதுதான்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 32

இந்தப் போராட்டமும் இந்த வேறுபாடும் பல நூற்றாண்டுகள் தொடரவே செய்யும். ஆனால் வரலாற்றில் ஏதாவது உண்மையாகி இருக்குமானால், ஆருடங்கள் எப்போதாவது உண்மையாகி இருக்கிறதென்றால், அது யார் குறைவான பொருட்களைக் கொண்டு வாழக் கற்றுக் கொள்கிறார்களோ கட்டுப்பாட்டுடன் வாழ்கிறார்களோ அவர்களே முடிவில் வெல்கிறார்கள்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 31

மிகப் பழங்காலத்திலிருந்தே நாம் உலகத்திற்க்குச் சவால் விட்டுக்கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஒரு மனிதன் எவ்வளவு அதிகமாக வைத்துக்கொள்ள முடியும் என்ற பிரச்சனையைத் தீர்க்க மேலை நாட்டினர் முயன்று கொண்டிருக்கிறார்கள். இங்கோ ஒரு மனிதன் எவ்வளவு குறைவான உடைமைகளைக் கொண்டு வாழ முடியும் என்ற கேள்விக்கு விடைகாண முயன்று கொண்டிருக்கிறோம்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 30

இனி, நமது ஆற்றல்கள் எல்லாம் செலவழிந்து விட்டன என்பதோ, நம் நாடு படிப்படியாக அழிந்து வருகிறது என்பதோ சிறிதும் உண்மை அல்ல நம்மிடம் போதுமான வலிமை இருக்கிறது. தேவை ஏற்படும் போது சரியான நேரத்தில் அது வெள்ளமெனப் பொங்கியெழுந்து உலகை நிரப்பவே செய்கிறது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 29

 வாழ்வதற்கான மிகப் பெரும் தகுதியாக உடல் வலிமையையே கருதுகிறார்கள். அது உண்மையென்றால் பிற நாடுகளை ஆக்கிரமித்ததான பழைய நாடுகளுள் ஒன்றாவது இன்றும் பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும், ஒருபோதும் எந்த இனத்தையோ நாட்டையோ வெல்லாத பலவீனமான இந்துக்கள் அழிந்திருக்க வேண்டுமே ! ஆனால் நாம் முப்பதுகோடி பேர் இன்னும் வலிமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் (ஒரு முறை இளம் ஆங்கிலப் பெண்ணொருத்தி, இந்துக்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் ஓர் இனத்தைக்கூட வெற்றி கொள்ளவில்லையே! என்று என்னைக் கேட்டாள்.)

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 28

வினோதமானதோர் உண்மையைப் பாருங்கள். ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ நாடுகள் உலக மேடைக்கு வந்து, ஒரு சில கணங்கள் தங்கள் பாத்திரங்களை ஆரவாரமாக நடித்துவிட்டு, காலப் பெருங் கடலில் நீர்க்குமிழி போல், ஏறக்குறைய எந்த அடையாளத்தையும் நிறுத்தாமல் அழிந்து போய்விட்டன, இங்கு நாமோ நிரந்தரமானது போன்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் மிகப் பெரும் தகுதி பெற்றதே வாழும் என்பதைப் பற்றிய புதிய பல கொள்கைகளையெல்லாம் அவர்கள் பெரிதாகப் பேசுகிறார்கள் ;

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 27

குழந்தைகளே, நீங்கள் புலன்களின் அடிமைகள். புலன்களுக்கு வரையறை இருக்கிறது, புலன்களில் அழிவு மட்டுமே உள்ளது. இரண்டொரு நாட்களே நிலைக்கின்ற இந்த ஆடம்பர வாழ்க்கை இறுதியில் அழிவைத்தான் கொண்டு வரும் இவை அனைத்தையும் விட்டுவிடுங்கள். புலன்களிடமும் உலகத்திடமும் கொண்டுள்ள பற்றை விடுங்கள்; அது தான் மதத்தின் வழியாக அல்ல துறவின் மூலமே லட்சியத்தை அடைய முடியும். அதனால் நம்முடையது மட்டுமே உண்மையான மதம்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 26 

நமது மதம் தான் உண்மையான மதம். ஏனெனில் எல்லாவற்றையும் விட மேலாக, அது துறவைப் போதிக்கிறது. காலங்காலமாகப் பெற்ற ஞானத்தோடு எழுந்து நின்று, இந்துக்களாகிய நம்மோடு ஒப்பிட்டால், நமது முன்னோர்களால் இங்கே இதே இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட பழுத்த பண்பட்ட ஞானத்தை உடையவர்களான நம்மோடு ஒப்பிட்டால், நேற்றுதான் பிறந்தவர்களாகத் தோன்றும் நாடுகளுக்குத் தெளிவான சொற்களில் அது கூறுகிறது;

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 25

நமது மதம்தான் உண்மையான மதம். ஏனெனில் கடவுள் ஒருவரே உண்மையானவர் இந்த உலகம் பொய்யானது, கணம் தோன்றி மறைவது, உங்கள் காசு பணமெல்லாம் தூசியைத் தவிர வேறல்ல, உங்கள் அதிகார மெல்லாம் வரம்பிற்கு உட்பட்டது, வாழ்க்கையே பல நேரங்களில் தீமையாகத்தான் இருக்கிறது என்று அது கூறுகிறது. எனவேதான் நமது மதம் உண்மையானது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 24

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! நமது மகத்தான லட்சியம் அதுவல்ல என்று நமது மதம்தான் கூறுகிறது. சில அடிகளுக்குள் அடங்கிவிடுகின்ற பூமியாகிய இந்தக் கோளம் ; நமது மதத்தின் காட்சியைக் கட்டுப்படுத்தவில்லை. நமது மதத்தின் லட்சியம் இவைகளுக்கு அப்பால், இன்னும் அப்பால் உள்ளது; புலன்களுக்கு அப்பால், இடத்திற்க்கு அப்பால், காலத்திற்கு அப்பால் இன்னும் அப்பால், ஆன்மாவின் கடல்போல் பரந்து விரிந்த மகிமையில் இந்த உலகம் சூன்யமாகி, பிரபஞ்சமே ஒரு துளிபோலாகின்றன அந்த இடமே நமது லட்சியம்.  

 விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 23

நமது மதம் இவ்வுலக வாழ்க்கைக்கு எதையும் செய்யவில்லை, என்ற அவர்களுடைய இந்த வாதத்தைவைத்துக் கொண்டே நாம் நமது மதத்தின் சிறப்பை உறுதி செய்யலாம் என்பதை அவர்கள் உணரவில்லை. நமது மதம் மட்டுமே உண்மையான மதம். ஏனெனில் மூன்று நாட்களே நிலைப்பதும் புலன்களால் உணரப்படுவதுமான இந்தச் சின்னஞ்சிறு உலகை வாழ்வின் அனைத்துமாகக் கொள்ளக் கூடாது,

 விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 22

நம்மை மற்ற நாடுகளைக் கொள்ளை அடிப்பவர்களாக ஆக்கவில்லை, பலசாலிகளைப் பலவீனமானவர்கள் மீது நின்றுகொண்டு அவர்களின் உயிர்ச் சக்தியை உறிஞ்சி தங்களை வளமாக்கிக் கொள்ளச் சொல்லவில்லை என்பதுதான். நிச்சயமாக நமது மதம் இதைச் சொல்லவில்லை. தன் காலடியில் உலகையே நடுங்கச் செய்கின்ற படைகளை அனுப்பி , மற்ற இனங்களைச் சூறையாடி நாசப்படுத்த அதனால் முடியாது. எனவே அவர்கள், இந்த மதத்தில் என்ன இருக்கிறது, வாய்க்குத் தீனியும் உடலுக்குப் பலமும் அளிக்காத ஒரு மதத்தில் என்னதான் இருக்க முடியும் என்று…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 21

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் அரசியல், அதாவது சமுதாய முன்னேற்றம், அதாவது இந்த உலகம் தான் மேலை நாட்டினரின் லட்சியம். கடவுள், மதம் என்பதெல்லாம் அந்த லட்சியத்தை அடைவதற்காக உதவுபவை, அவ்வளவுதான். அவர்களே இன்னும் கற்க வேண்டியுள்ளது, இதில் நம்மை விடத் தெரிந்தவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள். கடந்த நூறு இருநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்திய மதத்திற்கு எதிராக அவர்கள் கூறிவருவதெல்லாம் என்ன தெரியுமா ? நமது மதம் இவ்வுலக வாழ்க்கைக்கு ஆவன செய்யவில்லை, அது நமக்கு காசு…

 விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 20

பிற நாடுகளைப் பொறுத்தவரை, வாழ்க்கையின் எத்தனையோ தேவைகளுள் மதமும் ஒன்று. நான் அடிக் கடிப் பயன்படுத்தும் ஓர் உவமையைக் கூறுகிறேன்; சீமாட்டியின் வரவேற்பறையில் பல்வேறு பொருட்கள் இருக்கும், ஐப்பானிய ஜாடி ஒன்றையும் வைப்பது இந்நாளில் ஒரு நாகரீகம் ஆயிற்றே! அதை அவள் வாங்கியே தீர வேண்டும், அது இல்லாமல் வரவேற்பறை நன்றாக இருக்குமா என்ன! அதைப்போல், அன்பர்களே, பிற நாட்டினருக்கு வாழ்க்கையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன; அதனை முழுமையாக்க மதம் என்பதும் கொஞ்சம் தேவையாக இருக்கிறது. அதற்காக…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 19

அத்தகைய மதத்தை, எதிர்விளைவாக அதே அளவு சக்தியை எழுப்பாமல், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கின்ற அந்தப் பேராறு தனக்கென்று உண்டாக்கிக் கொண்ட கால்வாயை நிரப்பாமல், உங்களால் விட்டுவிட முடியுமா ? கங்கை மீண்டும் பனி மலைகளுக்குள் திரும்பிச் சென்று புதிய பாதையில் பாய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அது கூட ஒருவேளை முடிகின்ற காரியமாக இருக்கலாம். ஆனால் தன் தனிப் பண்பான மத வாழ்க்கையை தவிர  ஏதாவது ஒன்றைத் தன் பாதையாக ஏற்றுக் கொள்வது இந்தியாவால் முடியாத…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 18

வளர்ந்துவிட்ட பெரிய மரத்தை ஓர் இடத்திலிருந்து பிடுங்கி மற்றோர் இடத்தில் நட்டு, உடனடியாக அது அங்கே வேர் பிடித்து வளரும்படிச் செய்ய உங்களால் முடியாது. நல்லதற்கோ கெட்டதற்கோ ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் மத லட்சியம் நிறைந்து பரவிக் கொண்டிருக்கிறது நல்லதற்கோ கெட்டதற்கோ இந்தியச் சூழ்நிலை மத லட்சியங்களால் நிரப்பப்பட்டு எத்தனையோ நூற்றாண்டுகளாக ஒளிவீசி வருகிறது நல்லதற்கோ கெட்டதற்கோ நாம் இந்த மத லட்சியங்களுக்கு நடுவிலே பிறந்து வளர்க்கப்பட்டு இருக்கிறோம் அவை நம் ரத்தத்தோடு கலந்து, ரத்தக்குழாயில் ஓடுகின்ற…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 17

நல்லதற்கோ கெட்டதற்கோ, நமது ஆதார சக்தி முழுவதும் மதத்தில் தான் ஒருமுனைப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு. இதை நீங்கள் மாற்ற முடியாது. அதை அழித்துவிட்டு அதற்குப் பதிலாக வேறு ஒன்றை வைக்க உங்களால் முடியாது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 16

எனவே தாங்கள் விரும்புவதை அறிந்து கொள்வதில் இவர்களும் பிற நாட்டினரைப் போல் ஆர்வம் நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். மதம் ஒன்றுதான் இந்தியர்கள் முழு நாட்டம் கொள்ளக் கூடிய ஒன்றாகும். ஓர் இனத்தின் ஆதார சக்தி முழுவதும் மத லட்சியத்தில் இருப்பது நல்லதா அல்லது அரசியல் கொள்கைகளில் இருப்பது நல்லதா என்பது பற்றி இப்போது நான் பேசவில்லை .

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 15

ஐரோப்பாவின் பரபரப்பான அரசியல் மாற்றங்களையும் ஐரோப்பிய சமுதாயத்தில் நடைபெறும் எழுச்சிகளைப் பற்றியும் நம் குடியானவர்களைக் கேளுங்கள். அவர்களுக்கு அவை எதுவும் தெரியாது. தெரிந்து கொள்வதில் அவர்களுக்கு ஆர்வம் கிடையாது. ஆனால் இந்தியாவிலிருந்து பல வழிகளிலும் பிரிக்கப்பட்ட, இந்திய வாழ்க்கை முறைகளிலிருந்து துண்டிக்கப்பட்ட இலங்கை விவசாயி இலங்கை வயல்களில் உழைக்கின்ற அவர்கள்கூட, அமெரிக்காவில் ஒரு சர்வசமயப் பேரவை நடைபெற்றதையும் அதற்கு இந்திய சன்னியாசி ஒருவர் சென்றதையும் அங்கு அவர் ஏதோ சிறு வெற்றி பெற்றதையும் தெரிந்து வைத்திருக்கிறான்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 14

சாதாரண இந்தியர்கள் பல விஷயங்களை அறியாதவர்களாகவும் புதிய செய்திகளை அறிவதில் ஆர்வம் இல்லாதவர்களாகவும் இருப்பதைக்கண்டு ஒரு காலத்தில் நான் வெறுப்படைந்தது உண்டு. இப்போது அவர்களின் போக்கிற்கான காரணம் எனக்குப் புரிந்துவிட்டது அவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ, அதைப் பற்றிய செய்திகளை அறிவதில் , என் பயணத்தில் நான் கண்ட மற்ற நாட்டு மக்களைவிட அவர்கள் பேரார்வம் காட்டுகிறார்கள்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 13

சென்னை மக்கள் எனக்கு அமெரிக்காவில் அனுப்பிய அன்பான பாராட்டுரைக்கு நான் அனுப்பிய பதில் உங்களுள் பலரது நினைவில் இருக்கும். நம் நாட்டின் ஒரு குடியானவன், மேலை நாட்டிலுள்ள சீமான் ஒரு வனைவிடப் பல வழிகளில் சிறந்த மத அறிவு பெற்றவனாக உள்ளான் என்று அதில் நான் குறிப்பிட்டிருந்தேன் . எனது அந்தச் சொற்கள் சந்தேகத்திற்கு இடமின்றிச் சரியாக இருப்பதை இன்று நான் காண்கிறேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 12

நான் கீழை மற்றும் மேலை நாடுகளில் பல்வேறு இன மக்களிடையே பயணம் செய்து, இந்த உலகத்தைக் கொஞ்சம் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு மகத்தான லட்சியம் இருப்பதை நான் கண்டேன். அதுவே அந்த இனத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. சில நாடுகளில் இந்த தேசியப் பின்னணி அரசியலாக இருக்கிறது , சில நாடுகளில் சமுதாய கலாச்சாரமாக உள்ளது, மற்றும் சில நாடுகளில் அறிவுக் கலாச்சாரமாக உள்ளது. ஆனால் நமது தாய்நாட்டின் அடிப்படையாக வும் முதுகொலும்பாகவும் அதன் தேசியவாழ்க்கை முழுவதும்…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 11

கும்பகோணம் சொற்பொழிவு! 3 பிப்ரவரி 1897 அன்று சுவாமிஜி கும்பகோணத்திற்கு வருகைபுரிந்து மூன்று நாட்கள் தங்கினார். அங்கு இந்து மாணவர்கள் அளித்த வரவேற்புரைக்குப் பதிலளித்து சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு. வேதாந்தப் பணி: மிகக் குறைந்த அளவே செய்யப்படுகின்ற மதப்பணி கூட மிகப் பெரிய விளைவைத் தருகிறது – கீதை கூறுகின்ற இந்த உண்மைக்கு விளக்கம் வேண்டுமானால் எனது எளிய வாழ்க்கையைப் பார்த்தால் போதும். அதன் நிரூபணத்தை நான் ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் கண்டு வருகிறேன். எனது…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 10

நண்பர்களே! உங்கள் உற்சாகம் கண்டு மகிழ்கிறேன். மிகவும் மகிழ்ச்சி. எனக்கு உங்கள் மீது வருத்தம் என்று எண்ணி விடாதீர்கள். மாறாக , உங்கள் ஆர்வம் எனக்கு எல்லையற்ற திருப்பதியையே அளிக்கிறது. அளவு கடந்த உற்சாகமே நமக்குத் தேவை.ஆனால் இது நிலையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். தீ அணையாமல் இருக்கட்டும். இந்தியாவில் நாம் மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு உங்கள் உதவி தேவை. இத்தகைய உற்சாகம் வேண்டும். இனியும் இந்தச் சொற்பொழிவைத் தொடர…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 9

துறவு இல்லாவிட்டால் மதம் ஏது ? ஆனால் ஐரோப்பிய நாடுகளோ பிரச்சினைக்கு மறுபக்கத் தீர்வை எடுத்துள்ளன நல்ல வழியோ, தீய வழியோ ஒருவன் எவ்வளவு அதிகம் பொருள் சேர்க்கலாம், எவ்வளவு அதிகமாக அதிகாரம் இருக்க வேண்டும் போட்டி -இதுவே ஐரோப்பியச் சட்டம் ஆனால் நமதுதாகும், போட்டியின் ஆற்றல்களைத் தடுப்பதாகும், அதன் கொடுமைகளைக் குறைப்பதாகும், புதிரான இந்த வாழ்க்கைப் பாதையில் மனிதனின் பயணத்தை மென்மையாக்குவதாகும்

 விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 8

நமது தீர்வு துறவு, விட்டுவிடுதல், அச்சமின்மை, அன்பு. இவையே வாழத் தக்கவை. புலனின்பங்களை விடுவது ஒரு நாட்டை வாழச் செய்யும். இதற்கு வரலாறே சான்று ஏறக்குறைய ஒவ்வொரு நூற்றாண்டிலும் காளான்கள் போல் எத்தனையோ நாடுகள் தோன்றிமறைகின்றன. சூன்யத்திலிருந்து அவை எழுகின்றன ஏதோ சில காலம் ஆர்ப்பரிக்கின்றன, பின்னர் மறைந்தும் விடுகின்றன. ஆனால் நமது மாபெரும் நாடோ இதுவரை எந்த நாட்டிற்கும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டிராத அளவிற்கு பெரும் சோதனைகள், ஆபத்துக்கள் சூழ்நிலை மாற்றங்கள் என்று எத்தனையோ துரதிர்ஷ்டங்களைத்…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 7

பிரச்சினை இதுதான் -யார் வாழ வேண்டும்? ஒரு நாட்டை வாழவைப்பதும் பிற நாடுகளை அழிய வைப்பதும் எது? வாழ்க்கைப் போரில் வெற்றி பெற வேண்டுவது எது அன்பா, பகையா? போகமா, துறவா ? ஜடமா உணர்வா? வரலாறு காணாத அந்தக் காலத்தில் நமது முன்னோர்கள் என்ன எண்ணினார்களோ அவ்வாறே நாமும் சிந்திக்கிறோம். எந்தப் பரம்பரையும் தலைநீட்ட முடியாத அந்தத் தொலைநாளில், மேன்மை மிக்கவர்களாகிய நமது முன்னோர்கள் இந்தப் பிரச்சினையில் தங்கள் பக்கத்தை எடுத்துக்கொண்டு, உலகிற்கு சவால் விட்டுள்ளனர்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 6

அப்படியானால் மக்கள் எதுவும் தெரியாதவர்களா, இல்லை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாதவர்களா? இரண்டும் இல்லை. அவர்களின் பண்புடன் எது ஒத்துப் போகுமோ, எது அவர்களின் வாழ்க்கைத் தேவைகளுள் ஒன்றாக இருக்குமோ அதைப்பற்றி அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். அரசியலும் பிறவும் வாழ்க்கைத் தேவைகளாக இந்தியாவில் ஒரு போதும் இருந்ததில்லை. இந்திய வாழ்க்கை வாழ்ந்ததும் வளம் பெற்றதும் மதம், ஆன்மீகம் என்ற அடிப்படைமீது மட்டுமே; இனியும் அவ்வாறே அது வாழும், வளம் பெறும் உலக நாடுகளின் முன் இரண்டு பிராச்சினைகள்…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 5

.ஐரோப்பாவில் நடை பெறுகின்ற அரசியல் கிளர்ச்சிகள் பற்றியோ மாற்றங்கள் பற்றியோ அல்லது, மந்திரிசபைகளின் வீழ்ச்சி பற்றியோ அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை ; சோஷலிசம் , அனார்க்கிசம் என்பவைப்பற்றியோ ஐரோப்பாவின் பிற அரசியல் மாற்றங்கள் பற்றியோ அவர்களுள் ஒருவர்கூட கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் சர்வசமயப் பேரவைக்கு இந்திய சன்னியாசி ஒருவர் அனுப்பப்பட்டது பற்றியும் அவர் அங்கு ஏதோ ஒரு வகையில் வெற்றி பெற்றார் என்பது பற்றியும் இலங்கையில் உள்ள ஆண், பெண், சிறுவர் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தது

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 4

இங்கே இந்தியாவிலோ நாட்டின் இதயமே மதத்தால்தான் உருவாகியுள்ளது. இதுவே முதுகெலும்பு,இதுவே அடிப்படை, இந்த அஸ்திவாரத்தின் மீதுதான் நமது தேசிய வாழ்வாகிய கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. அரசியல், அதிகாரம், ஏன், அறிவுகூட இரண்டாம் பட்சமே ; மதம் ஒன்றே முக்கியமானதாக இங்குக் கருதப்படுகிறது. நமது நாட்டுப் பாமர மக்கள் எதுவும் தெரியாதவர்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் ஒருமுறையல்ல, நூறுமுறை கேட்டிருக்கிறேன். அது உண்மைதான். கொழும்புவில் வந்து இறங்கியது முதல் அதையே நான் காண்கிறேன்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 3

பிற நாடுகளில் மதம் என்பது வாழ்க்கையின் எத்தனையோ அம்சங்களுள் ஒன்று; உண்மையைச் சொல்வதானால், அது மிகச் சாதாரண அம்சமே. எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் தேசியக் கொள்கையின் ஒரு பகுதியே மதம். ஆங்கில சர்ச், ஆளும் வர்க்கத்தினரின் உடைமை. எனவே மக்கள் தாங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் தங்களுடைய சர்ச் என்று கருதி அதை ஆதரிக்கிறார்கள். கனவான்களும் சீமாட்டிகளும் சர்சைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர். பெரிய மனிதத்தனத்திற்கு அது அடையாளம். இவ்வாறுதான் இதர நாடுகளிலும் அரசியல், அறிவுத் தேடல்கள்,…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 2

கொழும்பிலிருந்து சென்னைவரை என்னிடம் மக்கள் காட்டி வருகின்ற அற்புதமான கனிவும், ஊக்கமும் உற்சாகமும் உறுதியும் நிறைந்த வரவேற்பும். எனது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் கடந்ததாக உள்ளது. இந்தியா முழுவதும் இப்படி இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. இது எனக்கு மகிழ்ச்சியையே தருகிறது. ஏனெனில் இது, கடந்த நாட்களில் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்ததை மெய்ப்பிப்பதாகவே உள்ளது- ஒவ்வொரு நாட்டிற்கும், அதற்கே உரிய பாதை ஒன்று உண்டு; அது போலவே ஒவ்வொரு நாட்டிற்கும் உயிர்நாடியான லட்சியமும் ஒன்று உள்ளது; இந்திய…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 1

சென்னையில் சுவாமிஜி முக்கியமான ஏழு சொற்பொழிவுகள் நிகழ்தினார். 7 பிப்ரவரி 1897 அன்று 1.வரவேற்புக்கு பதிலுரை; நாம் விக்டோரியா ஹாலில் அளிக்கப்பட்ட வரவேற்புரைக்குப் பதிலளித்து சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு. ஒன்று நினைக்கிறோம். தெய்வம் மற்றொன்று நினைக்கிறது. இந்த வரவேற்பும் சொற்பொழிவும் ஆங்கில முறையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடவுளோ அதனை வேறு வகையில் நடத்தத் திருவுள்ளம் கொண்டுள்ளார்- சிதறிக் கிடக்கின்ற இந்த மக்கள் கூட்டத்தில் இதோ இந்த ரததிலிருந்து கீதை பாணியில் பேசுகிறேன். இப்படிதான் நடந்திருக்க…

எனது போர் முறை 26

இங்கு வறுமை வாழ்க்கையின் ஒரு பெரிய சாபமாக இருக்கிறது, அங்கே ஆடம்பரக் களைப்பு அந்த இனத்தின் சாபமாக உள்ளது. இங்கே மனிதர்கள் தற்கொலையை நாடுகிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு உண்ண எதுவும்இல்லை. அங்கே உணவு குவிந்து கிடப்பதால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தீமை எல்லா இடத்திலும் இருக்கிறது. அது தீராத வாத நோய் போன்றது. அங்கிருந்து துரத்துங்கள், வேறு எங்காவது போகும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் என்று ஒவ்வோரிடமாகத் துரத்தலாம், அவ்வளவுதான் .ஆனால் குழந்தைகளே, தீமையை ஒழிப்பதுதான் உண்மையான வழி

எனது போர் முறை 26

இங்கு வறுமை வாழ்க்கையின் ஒரு பெரிய சாபமாக இருக்கிறது, அங்கே ஆடம்பரக் களைப்பு அந்த இனத்தின் சாபமாக உள்ளது. இங்கே மனிதர்கள் தற்கொலையை நாடுகிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு உண்ண எதுவும்இல்லை. அங்கே உணவு குவிந்து கிடப்பதால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தீமை எல்லா இடத்திலும் இருக்கிறது. அது தீராத வாத நோய் போன்றது. அங்கிருந்து துரத்துங்கள், வேறு எங்காவது போகும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் என்று ஒவ்வோரிடமாகத் துரத்தலாம், அவ்வளவுதான். ஆனால் குழந்தைகளே, தீமையை ஒழிப்பதுதான் உண்மையான வழி

எனது போர் முறை 25

தேசிய வாழ்க்கைக்குத் தேவையான உணவைக் கொடுங்கள், ஆனால் வளர்ச்சி அதைப் பொறுத்தது. அது வளர்வதற்கு யாரும் கட்டளையிட முடியாது, நம் சமூகத்தில் தீமைகள் அதிகமாக உள்ளன, ஆனால் அதுபோல் மற்ற ஒவ்வொரு சமூகத்திலும் தீங்குகள் இருக்கவே செய்கின்றன. இங்கு பூமி, சிலவேளைகளில் விதவைகளின் கண்ணீரால் நனைகிறது என்றால் அங்கே மேலை நாட்டின் காற்று திருமணமாகாத பெண்களின் ஏக்கப் பெருமூச்சால் நிறைந்துள்ளது.

எனது போர் முறை 24

அற்புதமான இந்தக் தேசிய எந்திரம் காலங்காலமாக வேலை செய்து கொண்டிருக்கிறது. தேசிய வாழ்க்கை என்னும் இந்த ஆச்சரியமான ஆறு நம் முன் ஓடிக் கொண்டிருக்கிறது. இது நல்லதா, எந்த வழியாக இது செல்லும் என்பது யாருக்குத் தெரியும்? அதைச் சொல்லும் தைரியம்தான் யாருக்கு இருக்கிறது? ஆயிரக்கணக்கான சூழ்நிலைகள் அதைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு தனிப்பட்ட சில உணர்வுகளைக் கொடுத்து, அதைச் சிலகாலத்தில் நிதானமாகவும் மற்ற காலங்களில் வேகமாகவும் ஓடச்செய்கின்றன. அதன் இயக்கத்தைப்பற்றிக் கட்டளையிட யாருக்குத் தைரியம் உள்ளது?…

எனது போர் முறை 23

அந்தச் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான வழியில் தான் இருவரும் வேறுபடுகிறோம். அவர்களுடையது அழிவுப்பாதை; என்னுடையது ஆக்கப் பாதை. நான் மறுமலர்ச்சியை நம்பவில்லை, வளர்ச்சியையே நம்புகிறேன். என்னைக் கடவுள்நிலையில் வைத்துக்கொண்டு, இந்த வழியில் தான் நீங்கள் போக வேண்டும், இந்த வழியில் போகக் கூடாது என்று சமுதாயத்திற்குக் கட்டளையிட நான் துணிய மாட்டேன். ராமர் பாலம் கட்டும்போது, தன் பங்காக ஏதோ கொஞ்சம் மணலைப் போட்ட அந்தச் சிறிய அணிலைப்போல் இருக்கவே நான் விரும்புகிறேன். அதுதான் என் நிலை.

எனது போர் முறை 22

நான் அவர்களுக்கு முதலில் சொல்வது இதுதான் எனக்கென்று ஒரு சுயேச்சை உள்ளது, எனக்கென்று சிறிது அனுபவமும் இருக்கிறது, உலகிற்குத் தர என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது, அதை அச்சமின்றியும் எதிர்காலத்தைப்பற்றிக் கவலைப் படாமலும் நான் கொடுக்கவே செய்வேன். அவர்களை விடப் பெரிய சீர்திருத்தவாதி நான் என்பதையும் இந்தச் சீர்திருத்தவாதிகளுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர்கள் விரும்புவது அங்கொன்றும் இங்கொன்றுமான சீர்திருத்தத்தை; நானோ அடிமுதல் முடிவரையிலான மொத்தச் சீர்த்திருத்தத்தை விரும்புகிறேன்.

எனது போர் முறை 21

இந்த சொசைட்டிகளுள் சில, தங்களோடு சேர்ந்து கொள்ளுமாறு என்னைப் பயமுறுத்துகிறார்களோ என்று தோன்றுகிறது. இது ஒரு விபரீத முயற்சி. பதினான்கு வருடங்கள் பட்டினியை நேருக்கு நேராகச் சந்தித்த ஒருவனை, அடுத்த வேளைக்கான உணவும் படுக்க இடமும் எங்கே கிடைக்கும் என்று தெரியாத ஒருவனை அவ்வளவு சுலபமாகப் பயமுறுத்திவிட முடியாது. பூஜ்யத்திற்குக் கீழே முப்பது டிகிரி என்று வெப்பமானி காட்டுகின்ற பிரதேசத்தில், ஏறக்குறைய உடைகளே இல்லாமலும், அடுத்தவேளை உணவு எங்கிருந்து வரும் என்று தெரியாமலும் வாழத் துணிந்த ஒருவனை…

எனது போர் முறை 20

இப்போது சென்னையிலுள்ள சீர்திருத்தச் சங்கங்களுக்கு வருகிறேன். அவர்கள் என்னிடம் கனிவு காட்டினார்கள், அன்போடும் பேசினார்கள். தங்களுக்கும் வங்காள சீர்திருத்தவாதிகளுக்கும் வேறுபாடு உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினார்கள். நானும் மனமுவந்து அதனை ஏற்றுக் கொள்கிறேன். சென்னை மிக அழகிய நிலையில் உள்ளது என்று நான் அடிக்கடிச் சொல்வது உங்களுள் பலருக்கு நினைவிருக்கும் ஒன்றைச் செய்வது உடனே அதற்கு எதிராக இன்னொன்றைச் செய்வது- வங்கச் சீர்திருத்தவாதிகளின் இந்த விளையாட்டை சென்னை இன்னும் பின்பற்றவில்லை. இங்கு எல்லாவற்றிலும் நிதானமான அதேவேளையில் உறுதியான…

எனது போர் முறை  19

எல்லோருக்கும் சேவகனாக இருப்பதன் மூலம் தான் ஓர் இந்து தன்னை உயர்த்திக்கொள்ள வழிதேடுகிறான். பாமரர்களைக் கைதூக்கிவிட இப்படித்தான் இந்துக்கள் முயற்சிக்க வேண்டுமே தவிர, எந்த வெளி நாட்டுச் செல்வாக்கையும் எதிர்பார்த்து அல்ல, மேலை நாகரீகத்தின் விளைவைப் பாருங்கள். இருபது ஆண்டுகள் அதன் ஆதிக்கத்தில் வாழ்ந்ததால் தன் சொந்த நண்பனையே அன்னிய நாட்டில் பட்டினிபோட விரும்பிய அந்த மனிதரின் நினைவுதான் எனக்கு வருகிறது. அவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? நண்பன் பிரபலமாகி விட்டான், தான் பணம் சம்பாதிப்பதற்குக்…

எனது போர் முறை 18

ஒரு பிராமண சன்னியாசி தன் வீட்டிற்க்கு வந்து வீட்டைச் சுத்தம் செய்வதை அவன் எப்படி அனுமதிப்பான் ? எனவே இந்த மனிதர் நள்ளிரவில் விழித்தெழுந்து, யாருமறியாமல் அவனது வீட்டிற்குள் நுழைந்து கழிவறைகளைச் சுத்தம் செய்து, தம் நீண்ட தலைமுடியால் அந்த இடத்தைத் துடைக்கவும் செய்வார். எல்லோருக்கும் சேவகனாகத் தம்மை ஆக்கிக்கொள்வதற்காகப் பல நாட்கள் இவ்வாறு செய்தார். அவரது திருப்பாதங்களை என் தலைமீது தாங்கிக் கொண்டிருக்கிறேன். அவரே என் தலைவர், அவரது வாழ்க்கையைப் பின்பற்றவே நான் முயல்வேன்.

எனது போர் முறை 17

சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே இதையெல்லாம் சொன்னேன். ஆனால் அவர்கள் என்னைச் சூத்திரன் என்று அழைப்பதால் நான் எந்த வகையிலும் வேதனைப்படவில்லை. எனது முன்னோர்கள் ஏழைகளுக்கு இழைத்த கொடுமைகளுக்கு இது ஒரு சிறிய பிராயச்சித்தமாகவே இருக்கும். நான் தாழ்ந்த குலத்தினனாக இருந்தால் மகிழ்ச்சியே அடைவேன். ஏனென்றால் பிராமணர்களுக்கெல்லாம் பிராமணராக இருந்து கொண்டு ஒரு தாழ்ந்த குலத்தினனின் வீட்டைச் சுத்தம் செய்ய விரும்பிய ஒருவரது சீடன் நான். அவன் இதை அனுமதிக்க மாட்டான்;

எனது போர் முறை 16

எனது ஜாதி ஒதுக்கப்படுமானால் இன்றைய இந்திய நாகரீகத்தில் என்ன மிஞ்சும்? வங்காளத்தை எடுத்துக்கொள்ளுங்கள்; இந்தியாவின் மகத்தான தத்துவ அறிஞர், மகத்தான கவிஞர், மகத்தான வரலாற்று அறிஞர், மகத்தான தொல் பொருள் ஆய்வாளர், மகத்தான சமய போதகர் என்று ஒவ்வொருவரும் என் ஜாதியைச் சேர்ந்தவர்களே. இக்கால விஞ்ஞானிகளுள் மகத்தான விஞ்ஞானி ஒருவரை இந்தியாவிற்கு அளித்துள்ளதும் என் ரத்தமே. உண்மையைத் திரித்துக் கூறுகின்ற இவர்கள் நம் வரலாற்றைப் பற்றிச் சிறிதாவது அறிந்திருக்க வேண்டும் ; பிரசமணர் க்ஷத்திரியர், வைசியர் ஆகிய…

எனது போர் முறை 15

இன்னும் ஒரு வார்த்தை , சமுகச் சீர்த்திருத்தவாதிகளின் பத்திரிகை ஒன்றில் ,என்னைச் சூத்திரன் என்று எழுதி, சன்னியாசி ஆவதற்கு எனக்கு என்ன உரிமையிருக்கிறது என்று சவால் விடப்பட்டிருந்ததை நான் படித்தேன். அதற்கு என் பதில் ; ஒவ்வொரு பிராமணனும் ,யமாய தர்மராஜாய சித்ரகுப்தாய வை நம என்று ஓதிக்கொண்டு யாருடைய திருவடிகளில் மலர்களை அர்ப்பிக்கிறானோ, தூய க்ஷத்திரியர்கள் யாருடைய வழியில் தோன்றியவர்களோ, அவரது பரம்பரையில் தோன்றியவன் நான் . நீங்கள் உங்கள் புராணங்களையும் சாஸ்திரங்களையும் நம்புபவர்களானால் ,…

எனது போர் முறை 14

அவர் இந்தியாவிலுள்ள சீர்திருத்தக் கட்சி ஒன்றின் தலைவர் ஏசு இந்தியாவிற்கு வந்திருக்கிறார் என்று அவர் ஒவ்வொரு நாளும் முழங்குகிறார். ஏசு இந்தியாவிற்கு வரும் வழி இதுதானா? இதுதான் இந்தியாவைச் சீர்திருத்துகின்ற வழியா? இளமைப் பருவத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும். என் சிறந்த நண்பர்களுள் ஒருவராக இருந்தவர். அன்னிய நாட்டில் நெடுநாட்களாக நம் நாட்டினர் யாரையும் காணாமலிருந்து அவரைக் கண்டபோது மிகவும் மகிழ்ந்தேன். ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த பரிசு இது. என்னை என்று சர்வசமயப் பேரவை ஆரவாரம்…

எனது போர் முறை 13

அங்கே என்னை எதிர்ப்பவர்களான கிறிஸ்தவப் பாதிரிகளுடன் வேறு சேர்ந்து கொண்டனர். எனக்கு எதிராக இந்தப் பாதிரிகளின் கற்பனையில் தோன்றாத ஒரு பொய்கூடக் கிடையாது. நண்பர்களோ பணமோ யாரும் இல்லாத ஒருவனாக ஓர் அன்னிய நாட்டில் நான் உள்ளேன். என் நடத்தையைப்பற்றிக் கேவலமாக நகரம் தோறும் பரப்பினார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் என்னைத் துரத்தியடிக்க முயன்றார்கள், எனக்கு நண்பர்களான ஒவ்வொருவரையும் பகைவனாக்க முயன்றார்கள். என்னைப் பட்டினிபோட்டுச் சாகடிக்க முயன்றார்கள், இதில் என் சொந்த நாட்டினர் ஒருவரும் எனக்கு எதிராக செயல்பட்டார்…

எனது போர் முறை 12

நான் பேசுவதைக் கேட்டால் அவர்களுக்கு இந்த சொசைட்டியிடம் நம்பிக்கை போய்விடும் என்ற பயம் தான் காரணம், குறிப்பிட்ட சிலர் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய அவர்களின் நியதிகளும் அதையே கூறுகின்றன அங்கு சேர்பவர்கள் குதுமி மற்றும் மொரியாவிடமிருந்தும், அவர்களின் பிரதிநிதிகளான திரு. ஜட்ஜ் மற்றும் திருமதி. அன்னிபெசன்டின் மூலமே உபதேசங்களைக் கேட்க வேண்டும் . இந்த சொசைட்டியில் சேர்வது என்பது ஒருவர் தன் சுதந்திரத்தையே அடகு வைப்பதாகும். இப்படிப்பட்ட ஒருகாரியத்தை நிச்சயமாக என்னால் செய்ய முடியாது. அப்படிச் செய்கின்ற…

எனது போர் முறை 11

இதையெல்லாம் இப்போது சொல்லியிருக்க மாட்டேன். நம் நாட்டு மக்கள் விரும்பியதால் கூற வேண்டியதாயிற்று . கடந்த மூன்று ஆண்டுகளாக இதைப்பற்றி நான் வாயைத் திறந்ததே இல்லை. மௌனமே என் குறிக்கோளாக இருந்தது. ஆனால் இன்று வெளியே வந்துவிட்டது. விஷயம் அத்துடன் முடியவில்லை. தியாசபிக் சொசைட்டியினர் சிலரை நான் சர்வசமயப் பேரவையில் பார்த்தேன், அவர்களோடு பேசவும் கலந்து பழகவும் விரும்பினேன். அப்போது அவர்கள் முகத்தில் தோன்றிய வெறுப்பு இன்னும் என் நினைவில் இருக்கிறது, தேவர்கள் கூடும் இடத்தில் இந்தப்…

எனது போர் முறை 10

சர்வசமயப் பேரவை கூடுவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே நான் அமெரிக்கா சென்றுவிட்டேன். பணம் மிகக் குறைவாகத்தான் என்னிடம் இருந்தது, அதுவும் விரைவில் செலவாகிவிட்டது. குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது, என்னிடமோ வெயில் காலத்திற்குரிய மெல்லிய ஆடைகளே இருந்தன. உறையச் செய்கின்ற அந்தக் குளிரில் என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. தெருக்களில் பிச்சையெடுத்தாலோ சிறையில்தான் இடம் கிடைக்கும். சில டாலர்களைத் தவிர எல்லாம் கரைந்துவிட்டன. சென்னை நண்பர்களுக்குத் தந்தி கொடுத்தேன். என் நிலை தியாசபிக் சொசைட்டியினருக்குத் தெரியவந்தது. அவர்களுள் ஒருவர்…

எனது போர் முறை 9

சென்னை நண்பர்கள் சிலரின் உதவியால் நான் அமெரிக்கா சென்றது உங்களுக்குத் தெரியும். அவர்களுள் பெரும்பாலோர் இங்கே உள்ளார்கள். நான் மிகுந்த நன்றிக் கடன்பட்டிருக்கும் நீதிபதி திரு. சுப்பிரமணிய ஐயர் மட்டும் இல்லை. ஒரு மேதையின் உள்ளுணர்வு பெற்றவர் அவர், எனது மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவர், ஓர் உண்மை நண்பர், இந்தியாவின் உண்மையான ஒரு குடிமகன்.

எனது போர் முறை 8

வசதியற்ற,யாருக்கும் தெரியாத, நண்பர்களோ அறிமுகமோ இல்லாத ஒரு சன்னியாசியாக, கடல் கடந்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்றேன். அங்கே சென்று தியாசபிக் சொசைட்டியின் தலைவரைச் சந்தித்தேன். அவர் ஓர் அமெரிக்கர், இந்தியாவை நேசிப்பவர். ஒரு வேளை அவர் அங்குள்ள யாருக்காவது ஓர் அறிமுகக் கடிதம் தருவார் என எண்ணினேன். அவரோ என்னிடம், நீங்கள் எங்கள் சொசைட்டியில் சேர்வீர்களா? என்று கேட்டார். முடியாது, எப்படி முடியும்? உங்கள் கொள்கைகளுள் பெரும்பாலானவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை என்றேன் நான் இதைக்…

எனது போர் முறை 7

இந்துக்கள் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்ய முயன்றால், இந்தக் கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு வந்த துன்பம் என்ன? இந்துக்கள் தங்களையே சீர்திருத்திக் கொள்வதில் முனைந்து ஈடுபட்டால் பிரம்ம சமாஜத் தினருக்கும் மற்ற சீர்திருத்த அமைப்புகளுக்கும் நேர்ந்த தொல்லைதான் என்ன? அவர்கள் ஏன் எதிராக நிற்க வேண்டும்? அவர்கள் ஏன் இந்த இயக்கங்களின் மிகப் பெரிய பகைவர்களாக வேண்டும்? நான் கேட்கிறேன், ஏன்? ஏன் என்றோ, எப்படியென்றோ கேட்கப்படக் கூடாத அளவிற்கு அவர்களது வெறுப்பும் பொறாமையும் கடுமையாக இருப்பதாக எனக்குத்…

எனது போர் முறை 6

தாராளமயமான சிந்தனைகள், மாறுபட்ட கருத்துக்களிடமும் பெருந்தன்மை என்றெல்லாம் பெரிய பேச்சுக்களைக் கேட்கிறோம். மிக நல்லது. நிஜ வாழ்க்கையிலோ, இந்தக் தாராளம், பெருந்தன்மை எல்லாம் ஒருவன் சொல்வதை அப்படியே நம்பும் வரைதான். சிறிது மாறுபட்டால் போதும் பெருந்தன்மை பறந்துவிடும் அன்பு மறைந்துவிடும். இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கென்று சுயநலப் பாதைகளும் உள்ளன. அவர்களின் பாதையில் ஏதாவது தடை குறுக்கிட்டால் போதும், அவர்களின் இதயங்கள் எரியும், வெறுப்பு கொப்புளித்து வெளிப்படும், என்ன செய்வது என்றே அவர்களுக்குத் தெரியாது.

எனது போர் முறை 5

ஆனால் அது ஒரு விஷயம், அந்த சொசைட்டியில் சேர்வது என்பது மற்றொரு விஷயம். மதிப்பும் மரியாதையும் அன்பும் கொள்வது ஒரு விஷயம்; ஒருவர் எதைச் சொன்னாலும் அதனை அலசி ஆராயாமல் பகுத்தறியாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது மற்றொரு விஷயம். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் நான் சாதித்த ஏதோ அந்தச் சிறிய வெற்றிக்கு தியாசபிக் சொசைட்டியினர் எனக்கு உதவியதாக இங்கெல்லாம் பேசப்படுகிறது. அந்த ஒவ்வொரு சொல்லும் தவறு ஒவ்வொரு சொல்லும் பொய், என்பதை வெளிப்படையாக உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும்.

எனது போர் முறை 4

முதன்முதலில் தியாசஃபிகல் சொசைட்டியைப் பற்றி நான் சில வார்த்தைகள் சொல்ல வேண்டும் . அவர்கள் நம் நாட்டிற்கு நல்லது செய்திருக்கிறார்கள் என்பதை நான் எடுத்துச் சொல்லவேண்டியதில்லை. அதற்காக ஒவ்வோர் இந்துவும் அவர்களுக்கு, அதிலும் குறிப்பாக அன்னிபெசன்ட் அம்மையாருக்கு நன்றியுடையவனே. அவரைப்பற்றி எனக்கு அதிகமாக எதுவும் தெரியாது. ஆனால் நான் அறிந்ததிலிருந்தே அவர் நமது தாய்நாட்டிடம் உண்மையான அனுதாபம் உள்ளவர், நம் நாட்டை உயர்த்துவதற்காகத் தமது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்து வருபவர் என்பதை என்னுள் ஆழமாக உணர்ந்து…

எனது போர் முறை 3

ஓரளவுக்குத் தவறான அபிப்பிராயமும் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவிவருகிறது. அன்னிய நாட்டில் இருந்தவரை ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அமைதி காத்தேன் . ஆனால் இப்போது, என் தாய்நாட்டு மண்ணின்மீது நின்று கொண்டு சில விளக்கங்களைக் கூற விரும்புகிறேன் இதன் விளைவு என்ன என்பதைப்பற்றி நான் கவலைபடவில்லை. அந்தச் சொற்கள் உங்களிடம் எத்தகைய உணர்ச்சியை எழுப்பும் என்பதையும் நான் பொருட்படுத்தவில்லை; அது எனக்கு ஒரு பிரமாதமான விஷயமல்ல ; ஏனெனில் நான் ஒரு துறவி. ஒரு தடியோடும் கமண்டலத்தோடும்…

எனது போர் முறை 2

என்னிடமுள்ள எல்லா குறைபாடுகளுடன் , என்னிடம் சிறிது தைரியம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்தியாவிலிருந்து மேலை நாட்டிற்குத் தருவதற்கான செய்தி ஒன்று என்னிடம் இருந்தது. தைரியமாக அதை அமெரிக்கர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் அளித்தேன். இன்றைய தலைப்பை எடுத்துக் கொள்ளுமுன் சில வார்த்தைகளைத் தைரியமாக உங்களிடம் கூற விரும்புகிறேன். என்னை நிலைகுலையச் செய்யவும், என் வளர்ச்சியைத் தடுக்கவும், முடியுமானால் என்னையே நசுக்கி எறிந்துவிடவும் சில சூழ்நிலைகள் என்னைச் சுற்றி உருவாகியது உண்டு. அத்தகைய முயற்சிகள் எப்போதும் தோல்வி அடைவதைப்போல் இவையும்…

எனது போர் முறை 1

9 பிப்ரவரி 1897 அன்று மாலை விக்டோரியா ஹாலில் சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு. கூட்ட மிகுதியால் அன்று நம்மால் சொற்பொழிவைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. எனவே சென்னை மக்கள் எனக்கு அளித்த அன்புமயமான வரவேற்புக்கு இப்போது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வரவேற்புரையில் அழகிய சொற்கள் பல கூறப்பட்டன. மனம்திறந்து பாராட்டப்பட்ட அந்தக் கனிவான சொற்களுக்குத் தகுதியானவனாக என்னை ஆக்குமாறு எம்பெருமானைப் பிரார்த்திப்பதையும், நமது மதத்திற்காகவும் நமது தாய்நாட்டின் சேவைக்காகவும் என் வாழ்நாள் முழுவதம் பாடுபடுவதையும் தவிர…

மதத்தை எவ்வாறு கற்றுக் கொள்வது ?

நான் மதப்பற்று உள்ளவனாக இருக்க விரும்பினேன். இந்துத் தத்துவங்களை எல்லாம்அனுபவித்து அறிந்துகொள்ள விரும்பினேன். ஆனால் அவ்விதம் அவற்றைஎன்னால் அனுபவித்து அடைய முடியாமற் போய்விட்டது. ஆதலால், நான் எதையுமே நம்புவது கிடையாது என்று சொல்லுகிற பல மனிதர்களை நீ இந்த உலகிலே பார்க்கலாம். படித்தவர்களில் கூட இப்படிப்பட்டவர்கள் இருப்பதை நீ காணலாம் என்வாழ்நாள் முழுவதும் மதப்பற்று உள்ளவனாக இருப்பதற்கு முயற்சி செய்தேன்.ஆனால் அதிலே ஒன்றுமில்லை. என்று மக்களில் பலர் உன்னிடம் சொல்வார்கள்.ஆனால்; அதே சமயத்தில் நீ இந்த நிகழ்ச்சியையும்…

உன்னை அழித்துக் கொண்டாவது பிறருக்கு நன்மை செய்

மற்றவர்களுடைய நன்மைக்காக என்னுடைய இந்த வாழ்க்கை அழிந்து போகிற அந்த நாளும் வருமா ? இந்த உலகம் வெறும் குழந்தை விளையாட்டு அல்ல. மற்றவர்களின் நன்மைக்காகத் தங்களுடைய இதயத்தில் இரத்தத்தைச் சிந்தி, பாதைஅமைப்பவர்கள் தாம் பெரியோர்கள் ஆவார்கள். ஒருவர் தமது உடலைத் தந்து பாலம்ஒன்றை அமைக்கிறார். அந்தப் பாலத்தின் உதவியால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த ஆற்றைக் கடந்து விடுகிறார்கள். இப்படி நீண்ட நெடுங்காலமாக நடந்துகொண்டு வந்திருக்கிறது. இந்த முறை அப்படியே இருக்கட்டும். அப்படியே என்றைக்கும் இருக்கட்டும்.

நீ கடவுளாகவே ஆக ஒரு வழி

பெரியவர்கள் பெருந் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும்நன்மைகளை மனித குலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை நீ உலக வரலாறு முழுவதிலும் காணலாம். உனது சொந்த முக்திக்காக எல்லாவற்றையும் நீ துறந்துவிட விரும்பினால். அது அவ்வளவு ஒன்றும் பாராட்டுவதற்கு உரியதில்லை. உலகத்தின் நன்மைக்காக உன் முக்தியையும் நீ தியாகம் செய்துவிட விரும்புகிறாயா ? அப்படி நீ செய்தால் கடவுளாகவே  ஆகிவிடுவாய். இதைச் சற்றுச் சிந்தித்துப் பார்.

விக்கிரகத்தில் மட்டுமே கடவுள் இல்லை

தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் சிவபெருமானை காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். சிவபெருமானை விக்கிரத்தில் மட்டும் காண்பவனுடைய வழிபாடு ஆரம்பநிலையில்தான் இருக்கிறது.

அஞ்சாமல் முன்னேறுக

மோகமாகிய முதலையின் வாயில், மக்கள்எப்படிப் பரிதாபமாகச் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள் அந்தோ  இதயத்தைப் பிளக்கக் கூடியஅவர்களின் சோகக் குரலை கேளுங்கள். முன்னேறிச் செல்லுங்கள்*கட்டுண்டுகிடக்கும் மக்களைப் பந்த பாசங்களிலிருந்து விடுவிப்பதற்காகவும், எளியவர்களின் துன்பச் சுமையைக் குறைப்பதற்காகவும், அறியாமையில் மூழ்கியிருக்கும் இருண்டகிணறுகள் போன்ற உள்ளங்களை ஒளி பெறச் செய்வதற்காகவும், ஏ வீரர்களே முன்னேறிச் செல்லுங்கள் அஞ்சாதே  அஞ்சாதே * என்று வேதாந்த முரசு முழங்கிக்கொண்டிருப்பதைக் கேளுங்கள்.

சக்தியை சிதற விடாதே

தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் நமது சக்தியைச்சிதறவிடாமல். அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கபூ ர்வமான பணிகளில் நாம் ஈடுபடுவோமாக. யார் ஒருவர் எதைப் பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ. அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப்பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் முடியாது. இந்தக் கருத்தை நான் மனப்பூர்வமாகநம்புகிறேன் கடந்த காலம் மிகவும் பெருமைக்கு உரியதாக இருந்ததில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆதனால் எதிர்காலம் சிறப்பாக அமையப் போகிறது என்பதைநான் முழு மனதுடன் நம்புகிறேன்.

ஒவ்வோர் உயிரும் கடவுளே

கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடி கொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறுஒரு கடவுள் இல்லை.  இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான்புரிந்து கொண்டிருக்கிறேன். மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில்கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்

நீ யார் என்பது முக்கியமல்ல

நீ யார் என்பது முக்கியமல்ல, நீ என்ன செய்கிறாய் என்பதே முக்கியம். நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி, அல்லது நாத்திகனாகஇருந்தாலும் சரி, ஆன்மீக வாதியாக இருந்தாலும் சரி, அல்லது வேதாந்தியாகஇருந்தாலும் சரி, கிறிஸ்தவனாக இருந்தாலும் சரி, அல்லது இஸ்லாமியாக இருந்தாலும்சரி, உன்னுடைய சுக துக்கங்களை மறந்து நீ வேலை செய். இதுதான் நீ இப்போது கற்றுக்கொள்ள வேண்டிய முதற்பாடமாகும்.

நன்மையே செய், நன்மை தானாக வந்தடையும்

தீமையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்துகொள்கிறோம். கர்மயோகத்தின் விதியின்படி, ஒருவன் செய்த ஒரு கர்மத்தை, அது தனக்கு உரியபலனை விளைவித்து முடிக்கும் வரையிலும் அழிக்க முடியாது. கருமம் தனக்கு உரியபலனை விளைவிப்பதை இயற்கையிலுள்ள எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தமுடியாது. நான் ஒரு தீய செயலைச் செய்தால், அதற்கு உரிய துன்பத்தை நான்அனுபவித்தே ஆகவேண்டும். இந்த பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் இதைத்தடுக்கவும் முடியாது, நிறுத்தி வைக்கவும்…

பிச்சையல்ல.. .. அது ஓர் உதவி

உயர்ந்த பீடத்தில் நின்று உனது கையில் ஐந்து காசுகளை எடுத்துக் கொண்டு, ஏபிச்சைக்காரா  இதை வாங்கிக் கொள் என்று நீ சொல்லாதே, மாறாக அவனுக்குகொடுப்பதனால் உனக்கு நீயே உதவி புரிந்துகொள்ள முடிந்ததை நினைத்து, அந்தஏழை இருந்ததற்காக அவனிடம் நீ நன்றியுள்ளவனாக இரு. கொடுப்பவன்தான்பாக்கியசாலியே தவிர, பெறுபவன் அல்ல. இந்த உலகில் உன்னுடைய தர்மசிந்தனையையும், இரக்க மனப்பான்மையையும் பயன்படுத்த வாய்ப்புக்கிடைத்திருப்பதற்காக நீ நன்றியுள்ளவனாக இரு. இதன் மூலம் தூய்மையும் பரிபூரணத்தன்மையும் உன்னை வந்தடையும்.

உலகுக்கு செய்யும் நன்மை நமக்கே நன்மையாக முடியும்

 நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவி புரிவதும், உலகிற்கு நன்மை செய்வதும்தான். நாம் ஏன் உலகிற்கு நன்மை செய்ய வேண்டும் ? மேலோட்டமாக பார்த்தால் உலகிற்குநன்மை செய்வதனால், உண்மையில் நமக்கு நாமேதான் உதவி செய்து கொள்கிறேhம்.

கருத்து மட்டுமல்ல, , காரியமாற்றவும் வேண்டும்

ஒரு காரியத்தின் பயனில் கருத்தைச் செலுத்துமளவிற்கு அந்தக் காரியத்தையும் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்த வேண்டும். இது என்னுடைய வாழ்கையில் நான் கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடங்களுள் ஒன்றாகும் இந்த ஒருபாடத்திலிருந்து பல பெரிய பாடங்களை நான் எப்போதும் கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். குறிக்கோளுக்குச் செலுத்தும் கவனத்தை, அதை அடையமேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்த வேண்டும் என்பதில் வெற்றிக்கு உரிய எல்லா இரகசியமும் அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

மறைந்திருக்கும் அழுகையும் சிரிப்பும்

மேலை நாடுகளிலுள்ள சமுதாய வாழ்க்கை முறை கணீரென்று சிரிப்பதைப் போன்றதாகும். ஆனால் அதன் அடியில் அழுகையும், புலம்பலும் மறைந்திருக்கின்றன. அதன் முடிவும் தேம்பியழுவதாகவே அமையப் போகிறது. மேற்புறத்தில் மட்டுமேவேடிக்கையும், விளையாட்டும் அங்கு காணப்படுகின்றன. ஆனால் உண்மையில்அளவில்லாத துயரமே அதில் நிறைந்திருக்கிறது. இந்த நாட்டிலோ வெளிப்படையாக இருளும் , துயரும் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் அடியில் கவலையின்மையும், மகிழ்ச்சியும் மறைந்திருக்கின்றன.

நமக்குத் தேவை அன்பும் பொறுமையும்

அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத்தேவையில்லை. அன்புதான் வாழ்க்கையாகும். எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான். இந்த உண்மை இம்மை மறுமையாகியஇரண்டு உலகங்களுக்கும் பொருந்தும். நன்மை செய்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமலிருப்பதுதான் மரணம். இப்போது நாம் பார்க்கிற மக்களில் தொண்ணுறு சதவீதம் இறந்து போனவர்கள். அவர்கள் பிசாசுகள்தாம். எனது அருமைக் குழந்தைகளே, அன்பு செலுத்துபவர்களைத் தவிர வேறு யாரையும் வாழ்வதாகக் கருத முடியாது.

நல்லொழுக்கம் தருவதே உயர்ந்த கல்வி

எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மன வலிமையை வளர்க்கச்செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுய வலிமையைக்கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை. மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மசரியமும்,வாழ்க்கையின் அடிப்படை இலட்சியங்களாக நமக்குத் தேவைப்படுகின்றன. எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம்சொல்கிறது. இந்த அறிவுஒரு சிறுவனிடம் கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்துஎழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும்.

தாழ்ந்தவர்களுக்குக் கல்வி அளிப்பது சிறந்த நன்மை

தாழ்ந்த நிலையிலுள்ள நம்முடைய மக்களுக்குக் கல்வியைத் தந்து, இழந்துவிட்டதங்களின் உயர்ந்த நிலையை அவர்கள் வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும். இதுதான் நாம் இப்போது செய்ய வேண்டிய ஒரே சேவையாகும் உயர்ந்த கருத்துக்களை இவர்களுக்குக் கொடுங்கள். இந்த ஒரே ஒரு உதவிதான்அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பிறகு அதன் விளைவாக மற்ற நன்மைகள் எல்லாம் வந்து சேரும்.  இரசாயனப் பொருள்களை ஒன்று சேர்த்து வைப்பதுதான் நமதுகடமை. பின்புஅவை இயற்கையின் விதியையொட்டித் தாமாகவே படிகங்களாக மாறிவிடும். இப்போது மலை முகமதுவிடம் செல்லா விட்டால்…

பிறரை எள்ளி நகையாடுவது ஒரு நோய்

நமது தேசீய இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோய் ஊர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது எதை எடுத்தாலும் எள்ளி நகையாடுவது, சிரத்தை இல்லாமல் இருப்பது. இந்த நோயை ஒழித்துக் கட்டுங்கள். வலிமையுடன் சிரத்தையைப் பெற்றவர்களாக இருங்கள். மற்றவை அனைத்தும் தாமாக நிச்சயம் வந்து சேரும்.  

கட்டளையிட விரும்பாதே கீழ்ப்படிந்து நட

ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகிறார்கள் கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராகஇல்லை. பண்டைக் காலத்தில் நிலவி வந்த வியப்பிற்குரிய பிரம்மசரிய முறை இந்தநாளில் மறைந்து போனதுதான் இதற்கு காரணம். முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள். பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாகவந்து சேரும். எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். அதன்பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும்

சொந்தக் காலில் நிற்க உதவுவதே உண்மைக் கல்வி

பாமரர்களாகிய பொதுமக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாகஇருக்க உதவி செய்யாத கல்வி, உறுதியான நல்ல ஒழுக்கத்தையும், பிறருக்குஉதவிபுரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி, அதைக் கல்வி என்று சொல்வது பொருந்துமா ? எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனை தனது சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்கிறதோ, அதுதான் உண்மையான கல்வியாகும்.

அடக்குமுறையும் எதிர்ப்பும் வரவேற்கத் தக்கவையே

ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். ஏளனம், எதிர்ப்பு பிறகு ஏற்றுக் கொள்ளப்படுதல். தனது காலத்தைவிட முற்போக்காகச் சிந்திக்கும்ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்துகொள்ளப்படுவான். எனவேஎதிர்ப்பும், அடக்குமுறையும் வரவேற்கத் தக்கவையே. ஆனால் நாம் மட்டும்உறுதியாகவும், துாய்மையாகவும், கடவுளிடம் அளவுகடந்த நம்பிக்கைஉடையவனாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்த இடைஞ்சல்கள்எல்லாம் மறைந்து போய்விடும்.  

கரடு முரடான பாதை

இந்தப் பிரபஞ்சத்திலேயே நன்மைக்கு அழைத்துச் செல்லும் பாதைதான் மிகவும் கரடுமுரடாகவும், செங்குத்தானதாகவும் இருக்கிறது. அந்தப் பாதையில் எத்தனை பேர்வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது தான் வியப்புக்கு உரிய விஷயம். பல பேர்தோல்வி அடைந்து போனதில் ஆச்சரியமே இல்லை. ஆயிரம் முறை இடறிவிழுந்தவன் மூலம் தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும்.

உன் வினை உன்னைச் சுடும்

பகை, பொறாமை ஆகியவற்றை  நீ  வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். வேறு எந்தச் சக்தியாலும்அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது ஒருமுறை நீ அவற்றை இயங்கச்செய்துவிட்டால் அதனால் வரும் விளைவையும் நீ ஏற்றே ஆகவேண்டும். இதை நீ நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், தீய செயல்களைச் செய்வதிலிருந்து  எப்போதும் விலகியிரு.

சண்டையிடுவதிலும், குறை சொல்வதும் வீண்

சண்டையிடுவதிலும், குறைசொல்லிக் கொண்டிருப்திலும் என்ன பயன் இருக்கிறது ? நிலைமையைச் சீர்படுத்திக் அமைக்க அவை நமக்கு உதவப் போவதில்லை. தான் செய்ய வேண்டிய கடமையாக அமையும் சிறிய வேலைகளுக்கு முணுமுணுப்பவன் எல்லாவற்றுக்கும் முணுமுணுக்கவே செய்வான். எப்போதும்முணுமுணுத்தபடியே அவன் துன்பம் பொருந்திய வாழ்க்கை வாழ்வான். அவன்தொடுவது எல்லாமே தோல்வியில் முடியும். ஆனால் தன் கடமைகளைத் தவறாமல்ஒழுங்காகச் செய்து கொண்டு, தன்னால் ஆனவரை வாழ்க்கையில் முயன்றுகொண்டிருப்பவன் கட்டாயம் ஒளியைக் காண்பான். மேலும் மேலும் உயர்ந்தகடமைகள் அவனது பங்காக அவனைத் தேடித்…

துாய்மைபபடுத்திக் கொள்

நமது வாழ்க்கை சிறந்ததாகவும், துாய்மையுடைவதாகவும் இருந்தால் மட்டும்தான். உலகமும் சிறப்பும், துாய்மையும் பெற்றதாக இருக்க முடியும். அது காரியம்,… நாம்அதை விளைவிக்கும் காரணம். எனவே நம்மை நாம் பரிபூரணர்களாக்கிக்கொள்வோமாக.

உயர்ந்த லட்சியத்தை மேற்கொள்

துரதிர்ஷ்டவசமாக இந்த வாழ்க்கையில் மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் எந்தவிதமான ஓர் உயர்ந்த இலட்சியமும் இல்லாமல். இருளடைந்த இந்த வாழ்க்கையில் தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டிருக்கிறhர்கள். உயர்ந்த இலட்சியம்கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், இலட்சியம் ஒன்றும்இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான் என்று நான்உறுதியாகச் சொல்வேன். எனவே உயர்ந்த ஓர் இலட்சியத்தைக் கொண்டிருப்பதுமேலானது

நடந்து முடிந்ததைப் பற்றி வருந்தாதே

உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்துவருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது. உன்னுடைய ஒவ்வொரு சொல்லும், சிந்தனையும், செயலும், அதற்கு ஏற்ற பலனைத்தரும் வகையில் உன் மனதில் இடம் பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில்வைக்க வேண்டும். உனது தீய எண்ணங்களும், செயல்களும் புலிகளைப் போல் உன்மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதைப் போலவே உனது நல்லஎண்ணங்களும், செயல்களும், ஒரு நுாறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னைஎப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக…

நமது விதியை நாமே நிர்ணயிக்கிறாம்

மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளை எல்லாம்; தங்களுடன்வாழ்பவர்கள் மீதோ, அல்லது தெய்வத்தின் மீதோ சுமத்துகிறhர்கள். அல்லது புதிதாகஅவர்கள் ஏதோ பேய், பிசாசு என்று கற்பித்துக் கொண்டு, அதைத் தலைவிதி என்றுசொல்கிறார்கள். விதி என்றால் என்ன ? அது எங்கே இருக்கிறது ? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக் கொள்கிறோம். எனவே, அதன் பொருட்டு துாற்றுவதற்கும் ஒன்றுமில்லை, பாராட்டுவதற்கும் ஒன்றுமில்லை

நமது நிலைக்கு நாமே காரணம்

நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி எல்லாம்இருக்க வேண்டும் என்று விரும்புகிறேhமோ, அப்படி நம்மை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடையமுன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நாம் நம்முடைய தற்போதைய செயல்களால்உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை. ஏனவே எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆற்றலை வீணாக்காதே

சிந்தனையின் தொண்ணுாறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால்வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துகொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோஒரு போதும் தவறு செய்வதில்லை. நல்ல எண்ணங்களை கருவிகளாகக் கைக்கொள் * நல்ல எண்ணங்கள், தீய எண்ணங்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் தனித்தனியே வலிமைமிக்க ஆற்றலைப் பெற்றிருக்கிறது. இந்த பிரபஞ்சம் முழுவதிலும் அவை நிறைந்திருக்கின்றன. அவற்றின் அதிர்வுகள் தொடர்ந்து இருந்து வருவதானால், அந்தஎண்ணங்கள், செயலுக்கு வரும் வரையில் அவை கருத்து வடிவில் இருக்கின்றன. உதாரணமாக,…

மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலை வளர் 

ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால், இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன், மனதை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால், மேலும் சிறப்பாகச் செருப்புகளுக்கு மெருகு பூசுவான். மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒருவேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும்…

உன் கனவை நிறைவேற்று 

ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவுகாண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள்,நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்து விடு. வெற்றிக்கு இதுதான் வழி. நாம் உண்மையிலேயே பாக்கியவான்களாக விரும்பினால் மற்றவர்களையும் பாக்கியவான்களாக்க விரும்பினால் நம்முள் நாம் மேலும் ஆழ்ந்துசென்றாக வேண்டும்

எல்லா ஆற்றல்களுக்கும் நீயே சொந்தக்காரன்

மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே. நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும். இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று  மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை அதுதான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க…

விடாமுயற்சியே வெற்றி தரும்

வெற்றி பெறுவதற்கு நிறைந்த  விடாமுயற்சியையும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவான், எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாக வேண்டும் என்று  சொல்கிறான். அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழை. உனது குறிக்கோளை நீ அடைவாய்.

பசு மனிதனாகி விடாது

போராட்டங்களையும், தவறுகளையும் பொருட்படுத்தாதே பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒருபோதும் மனிதனாகி விடாது. எனவே இந்தத் தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒருபோதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒருமுறை கைக்கொள்ள முயற்சி செய்.

இல்லை என்று சொல்லாதே

இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே. என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும் போது காலமும் இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. எதையும், எல்லாவற்றையும் சாதிக்கக் கூடிய சர்வ வல்லமை படைத்தவன் நீ

உங்களை நீங்களே நம்புங்கள் 

நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை – இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் (தேவ தேவியர்களிடத்தும்) மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து, ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்கு கதிமோட்சமில்லை. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை…

கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் 3

கடவுளைக் காண வாக்குவாதம் உதவுமா ? ஆன்மீக அனுபவம் ஒன்றுதான் நமக்கு ஞானமாக அல்லது உண்மை மதமாக இருக்கிறது. ஆன்மாவைப் பற்றி காலங் காலமாகப் பேசிக் கொண்டிருப்பதால் அதை நாம் அறிய முடியாது. வெறும் கொள்கைகளைப் பேசுவதற்கும்  நாத்திகத்துக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை. வெளிச்சத்தில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் எப்போதும் எனக்குச் சொந்தமாகிறது. ஓரு நாட்டைச் சென்று பார்த்தால் பிறகு அது உன்னுடையதாகிவிடுகிறது. நாம் ஒவ்வொருவரும் சுய அனுபவத்தைப் பெறவேண்டும். ஆசிரியர் உனக்கு…

கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார்  2

அறிவு வேறு  உணர்வு வேறு உணர்வு என்பது ஒரு தளை. உருவத்துக்கு முந்தியது அறிவு என்னும் ஒரு விவாதம் இருக்கிறது. ஆனால் அறிவு தான் எதற்கும் காரியமாகிறது எனில் முறைப்படி அதுவே காரணமாகவும் ஆதல் வேண்டும். இதுதான் மாயை, கடவுள் நம்மைப் படைக்கிறார். நாம் கடவுளைப் படைக்கிறோம். இதுதான் மாயை. காரண காரியமாகிய வட்டத்திற்கு முடிவு இல்லை மனம் உடலைப் படைக்கிறது. மனத்தை உடல் படைக்கிறது. முட்டையிலிருந்து குஞ்சு வெளிப்படுகிறது, குஞ்சிலிருந்து முட்டை வெளிப்படுகிறது. மரத்திலிருந்து விதை…

கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் 1

நீ  நான் என்றும் வேற்றுமை உணர்வு எனக்கு இருக்கும் வரை கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் என்று பேசியே ஆகவேண்டும். அதன் விளைவுகளுக்கு நான்உட்பட்டுத்தான் ஆகவேண்டும். நம் இருவருக்கும் இடையில் இலட்சியமாக விளங்கும் மூன்றாவது ஒன்று இருப்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த முக்கோணத்தின் சிகரமாகத் திகழ்வது இந்த மூன்றாவது சக்தி. நீராவி பனியாகி பின்னர் நீராகிறது. அந்த நீர் பிறகு கங்கையாகிறது. ஆயினும் நீராவி நிலையில் இருக்கும் போது அங்கு நீர்  இல்லை. படைப்பு அல்லது மாற்றம்…

கடவுளுக்கு உருவம் தேவையில்லை 

ஞானம் பலம் கிரியையே ( அறிவு ஆற்றல் செயல் ) கடவுள். கடவுளுக்கு உருவம் தேவை இல்லை. ஏனென்றால் எல்லையற்ற அறிவை ஏந்தி வைத்திருக்க  ஒரு தகுந்த உருவம் தேவை. உண்மையில் கடவுளுக்கு இத்தகைய உதவி தேவைப்படுவதில்லை. இயங்கும் ஆன்மா என்பது ஒன்றில்லை. ஒரே ஆன்மாதான் உள்ளது. ஐந்து உயிர்த் தத்துவங்கள் சேர்ந்துள்ள இந்த உடலை ஜீவாத்மா அடக்கி ஆள்கிறது. இருப்பினும் ஜீவாத்மா என்பது பரமாத்மாவே. ஏனெனில் பரமாத்மாவே அனைத்தும். ஜீவாத்மாவான நீ உன்னிடம் இல்லாத ஒன்றை…

உண்மையான அறிவும் – மெய்யான அறிவும்

ஒரு பொருளுடன் சேர்த்துப் பார்க்காமல் தனித்தனியே பார்க்கும் போது அதை அதனுடைய குணம் என்கிறோம். வேறுபாடு இன்னது என்பதை நம்மால் நிச்சயமாகக் கூற இயலாது. பொருள்களைப் பற்றி நாம் காண்பது உணர்வதெல்லாம் கலப்பற்ற தனியான இருப்பு என்பதே. மற்றவை அனைத்தும் நம்முள்ளே இருக்கிறது. நம்மிடமிருக்கும் எதற்கும் அது இருப்பது ஒன்றே நிச்சயமான சான்றாகும். ஒன்றைப் பலவாகப் பார்ப்பது இரண்டாம் நிலையிலுள்ள ஒர் உண்மையே. பாம்பு என்பது இருப்பது தன்னளவில் உண்மை. ஆயினும் கயிற்றைப் பாம்பாக நினைப்பது தவறு.…

உன்னை விட உயர்ந்தவர் இல்லை        

ஒரு கணமாவது உன்னால் சும்மா இருக்க முடியுமா? முடியும் என்று யோகிகள் அனைவரும் கூறுகின்றனர். பாவங்களிலேயே மிகப் பெரிய பாவம் உன்னை  நீயே பலவீனர்  என்று  நினைப்பதே. உன்னை விட உயர்ந்தவர் யாரும் இல்லை. பிரம்மமே நீ என்பதை அனுபவ மூலம் தெரிந்துகொள். நீ கொடுக்கும் சக்தியைத் தவிர வேறு எங்கும் எந்த சக்தியும் இல்லை. நாம் சூரியனையும், நட்சத்திரங்களையும், பிரபஞ்சத்தையும் கடந்தவர்கள். மனிதனிடம் இருக்கும் தெய்வீக தன்மையை அவனுக்கு கற்பி, தீமையை ஒத்துக் கொள்ளாதே. எதையும்…

எல்லாம் தெரிந்துவிட்டதாக எண்ணாதே

ஏதாவது ஒரு மதத்தில் நீ கட்டுண்டு இருக்கும் வரை கடவுளை நீ காண முடியாது. எல்லாம் தனக்கு தெரிந்துவிட்டதாக நினைப்பவன் எதையும் அறியமாட்டான். அறிபவனை  யார்தான் அறிய முடியும்? நிலையான  தத்துவங்கள் இரண்டு உள்ளன. ஒன்று இறைவன், மற்றது பிரபஞ்சம். இறைவன் மாற்றமில்லாதவர். பிரபஞ்சம் மாறிக்கொண்டே இருப்பது. பிரபஞ்சம் எப்போதும் உள்ளது. மாற்றத்தின் அளவை உன் மனம் அறிய இயலாதபோது அதை நிலையானது என்று நீ நினைத்துக் கொள்கிறாய். கல் அல்லது கல்லில் செதுக்கப்பட்ட வடிவம் இவற்றுள்…

உலகம் ஒரு பயிற்சிக் கூடம்

எதிர் செயல் இன்றியே செயல் நடக்கட்டும். செயல் புரிவது இனியது. எதிர்ச் செயல் சகல  துயரத்தையும் தருவது. குழந்தை கைவிரலை தீ எரியும் விளக்கில் வைக்கிறது. அதில் இன்பம் இருக்கிறது. ஆனால் அதன் உடலில் எதிர்ச் செயல் நிகழும்போது அது துன்பம் தருகிறது. எதிர்ச் செயலை நம்மால் நிறுத்த முடியுமானால் பயப்படவேண்டியதில்லை. மூளையைக் கட்டுப்படுத்து. பதிந்ததை அது அறியும்படி விடாதே. சாட்சியாக இரு. எதிர்ச்செயல் புரியாதே. இவ்வாறு இருப்பது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். நம்மை மறந்த நிலையில்…

ஏட்டுக் கல்வியால் குழப்பமே மிஞ்சும் 

நாம் அறிபவை அனைத்தும் கூட்டுப் பொருளே. பகுத்துப் பார்ப்பதன் மூலம் புலனறிவை நாம் அடைகிறோம். மனம் எளிமையானது, தனிமையானது, சுதந்திரமுள்ளது எனக் கருகிறது துவைத மதம். தத்துவஞானம் என்பது ஏட்டுக் கல்வி மூலம் கிட்டுவதல்ல. அதிக நுால்களைப் படிப்பதன் மூலம் மனக் குழப்பம்தான் அதிகமாகிறது. ஆழ்ந்த ஆராய்ச்சி இல்லாத தத்துவஞானிகள் மனத்தைத் தனிப்பொருள் என்கின்றனர். அதன் விளைவாக, மனிதன் எண்ணச் சுதந்திரத்துடன் வாழலாம் என்று அவர்கள் முடிவு கட்டினர். மன நுாலோ  மனத்தை ஒரு கூட்டுப் பொருளாகக்…

எண்ணம் என்பது சொல்லின் ஆற்றல்

பிரபஞ்சம் என்பது எண்ணம். அந்த எண்ணத்தை வேதங்கள் வார்த்தைகளால் வெளியிடுகின்றன. இந்தப் பிரபஞ்சத்தை நம்மால் ஆக்கவும் அழிக்கவும் முடியும். மந்திரங்களை  உச்சரிக்குந்தோறும் காட்சிக்கு எட்டாதிருந்த எண்ணம் உருப்பெற்று புறப்பொருளாகத் தோற்றம் அளிக்கிறது. இப்படி கர்ம காண்டத்தில் இருப்பதாக ஒருசாரார் கூறுகின்றனர். நம்மில் ஒவ்வொருவருக்கும் படைக்கும் ஆற்றல் உண்டு என்று அவர்கள் கருதுகின்றனர். மந்திரங்களை உச்சரிப்பதால் அவற்றுக்குத் தொடர்புள்ள எண்ணம் உருவாகிறது. விளைவையும் கண்கூடாகக் காணலாம். எண்ணம் என்பதுசெயலின் ஆற்றல். எண்ணத்தின் வெளிப்பாடே சொல் என்று மீமாம்சகர்கள் கூறுகின்றனர்.…

உங்கள் தவறுகளே காரணம் 4

நாம் செய்த பாவத்திலிருந்து விடுபடுவோம் கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழும்பட்டும். மீனவர்கள், சக்கிலியர்கள், தோட்டிகள் ஆகியவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழுட்டும். பலசரக்குக் கடைகள்,  பலகாரக்கடைகளிலிருந்து புதிய இந்தியா தோன்றட்டும். தொழிற்சாலைகள், கடைவீதிகள், சந்தை ஆகியவற்றிலிருந்தெல்லாம் புதிய இந்தியா எழுந்து வெளிவரட்டும். பாமர மக்களைப் புறக்கணித்து ஒதுக்கியது தான் நமது நாடு செய்த பெரும் பாவம் என்று நான் கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் பாமர மக்களுக்குக்…

உங்கள் தவறுகளே காரணம் 3

நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு அஞ்ச வேண்டாம் ஒரு நல்ல இலட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்கு. நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்கு உன் பின்னால் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல் எனது அருமைக் குழந்தைகளே * முன்னேறிச் செல்லுங்கள். பரந்த இந்த உலகம் ஒளியை வேண்டுகிறது. அதை எதிர்பார்க்கிறது.. இந்தியா மட்டும் அத்தகைய ஒளியை பெற்றுருக்கிறது. ஜால வித்தையிலே இந்தியா விளக்கை பெற்றிருக்கவில்லை. போலித்தன்மையினாலும் அந்த விளக்கைப் பெற்றிருக்கவில்லை.…

உங்கள் தவறுகளே காரணம் 2

செம்மறி ஆடுகளாக வாழ்வதா * ஒவ்வொரு நாட்டிலும் மேற்கொள்ளப்படும் வழி முறைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. வலிமை படைத்த ஒரு சிலர் கட்டளை இடுகிறார்கள். அவற்றை எல்லாம் எஞ்சியுள்ள மக்கள் அனைவரும் செம்மறி ஆடுகளைப் போல முடிந்த முடிவுகளாக ஏற்றுப் பின்பற்றி நடப்பார்கள். அவ்வளவுதான் விஷயம். உங்களுடைய பாராளுமன்றம், சட்டசபை வாக்களிப்பு முறை உங்கள் பெரும்பான்மை மக்களுடைய இரகசிய வாக்களிப்பு முறை – ஆகிய இவை அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். எனது நன்பரே இவை எல்லாம் எல்லா…

உங்கள் தவறுகளே காரணம் 1

அமரத்துவம் வாய்ந்த எனது அருமைக் குழந்தைகளே* நமது நாடு என்னும் இந்தக் கப்பல் நீண்ட நெடுங்காலமாகத் தனது நாகரீகத்தைக் ஏற்றி கொண்டு வந்திருக்கிறது. தனது எண்ணற்ற அரும் பெரும் செல்வங்களால் இந்த உலகம் முழுவதையும் மேலும்மேலும் வளமாக்கிக் கொண்டிருக்கிறது . பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது இந்தக் கப்பல் வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க நமக்கு உதவி புரிந்து வந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்களை வாழ்க்கைக் கடலின் துன்பமற்ற மறுகரைக்கு அழைத்துச் சென்றபடியே இருக்கிறது. ஆனால் இன்று அந்தக்…

உறக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும்

மற்ற நாடுகளின் முன்னேற்றத்தின் முன்பு இந்தியாவின் முன்னேற்றம் ஒளி மங்கிக்காணப்படுவதற்கான காரணத்தை நீ சொல்ல முடியுமா ? இந்தியஅன்னை அறிவாற்றலில் குறைந்தவளா ? அல்லது திறமையில் தான் குறைந்தவளா ? அவளுடைய கலை, கணித அறிவு, தத்துவங்கள் ஆகிய இவற்றை பார். பிறகு அறிவாற்றலில் இந்தியஅன்னை குறைந்தவள் என்று நீ சொல்ல முடியுமா ? அவள் தன்னுடைய மயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனது நீண்ட நெடுங்கால உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும். இந்த ஒன்றுதான் உலக நாடுகளின்…

இந்தியா அழிந்து விடுமா ?

இந்தியா அழிந்து விடுமா? அது அப்படி அழிந்து விடுமானால் உலகிலிருந்து எல்லா ஞானமும் அழிந்து போய்விடும். நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும். சமயத்தின் மீது நமக்குள்ள இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் எல்லாம் அழிந்து போய்விடும். எல்லா உயர்ந்த இலட்சியங்களும் மறைந்து போய்விடும். எல்லா உயர்ந்த இலட்சியங்களும் இருந்த இடத்திலே காமமும், ஆடம்பரமும், ஆண் தெய்வமாகவும், பெண் தெய்வமாகவும் குடிகொண்டு ஆட்சி செய்யும். பணமே அங்கு பூசாரியாக உட்கார்ந்து கொள்ளும். வஞ்சகம், பலாத்காரம், போட்டி ஆகியவற்றை…