நான் அந்த சகோதரனைப் போல்

ஒருவரின் விலை உயர்ந்த காரை ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார். உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது, என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர். அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல்…

உலகில் குறைகள் இருப்பதால்தான் 2

உலகில் குறைகள் இருப்பதால்தான் 2  ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று “ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். பெரியவர் புன்னகைத்துக் கொண்டே “உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார். அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில்…

உலகில் குறைகள் இருப்பதால்தான் 1 

 ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.  குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் “எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?” என்று கேட்டான்.  குயவன் “அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை… நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு  கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது.…

இவன பழக்குறதுக்குள்ளே நான் பட்ட பாடு இருக்கே 

சயின்டிஸ்ட் ஒருத்தர் கூண்டில் எலி வளர்த்தார். எலிக்கு பசி எடுத்தால் கூண்டுக்குள் உள்ள மணியை அழுத்தக் கற்றுக் கொடுத்திருந்தார். பசியெடுத்தால் எலி மணியை அடிக்கும். சயின்டிஸ்ட் உணவு கொண்டு வந்து தருவார். ‘ஒரு எலியை இந்த அளவுக்குப் பழக்கி விட்டோமே’ என்று அவருக்கு தலைகால் புரியாத பெருமை. இந்த நிலையில், சயின்டிஸ்ட் புதிதாக ஒரு எலியைப் பிடித்து வந்து கூண்டில் விட்டார். இரண்டு எலிகளும் பேசிக்கொண்டன. புதிய எலி கேட்டது, ‘‘இந்த ஆள் எப்படி?’’ அதற்கு பழைய…

எனக்கு சுமை குறையப்போகிறதா?

 ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான். பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்” என்றான். கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது. ஏன்  எனக் கேட்டான் எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறதா?” என்றது.  நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே

ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் ?

 ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஓர் இளைஞர் நண்பர்களிடம் கேட்டார். சிலர் சினிமாவுக்குப் போகச் சொன்னார்கள். சிலர் நண்பர்களுடன் செலவிடச் சொன்னார்கள். ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு யோசனை வந்தது. பிறகு, நேர நிர்வாகவியல் நிபுணரை அழைத்து ஆலோசனை கேட்டார் இளைஞர். புத்தகம் படி, நல்ல காரியங்கள் செய் என்றெல்லாம்தான் சொல்லப்போகிறார் என்பது இளைஞரின் எதிர்பார்ப்பு.  நேர நிர்வாகவியல் நிபுணர் மிக நிதானமாகச் சொன்னார். “உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள். அதுவே பயனுள்ள…

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே!

மத்தியான வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான் கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான். என நினைத்துக் கொண்டே சென்றான். அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான், “இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் “என நினைத்துக்கொண்டே சென்றான். மூன்றாவதாக குடிகாரன் ஒருவன்…

.. தன்  வேலையை  தான் செய்யணும் 2

முதலில் சொன்ன கதை வேறு ஒரு கோணத்தில் கழுதை கத்தியதும் எழுந்த சலவைத் தொழிலாளி, கழுதை சும்மாகத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும் என்று எழுந்து பார்த்து திருடன் வீட்டுக்கு வந்ததால் தான் கழுதை கத்தியது எனப் புரிந்துக்கொண்டான். அடுத்த நாள் கழுதைக்கு வகைவகையான சாப்பாடு போட்டான். நாயைக்கண்டுகொள்ளவே இல்லை. கழுதையோட ஆர்வக்கோளாறும், விசுவாசமும் முதலாளிக்கு பிடித்துவிட இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலை கொடுத்தாலும் செய்யிறான்னு முதலாளியின் எல்லா வேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான். நாய் செய்துக்கொண்டிருந்த வேலையும்…

தன்  வேலையை  தான் செய்யணும்1  

ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு. ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும் போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான். சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப் பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு இருந்துச்சு. சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு நாய் குரைக்கவில்லை.      அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான், குரைச்சு முதலாளியை எழுப்புவான்னு பார்த்தா சும்மா…

உனக்கு வேற வேலையே இல்லையா?

 ஒரு பாதையோரம் இருந்த குளத்துக்கு பக்கத்துல ஒருத்தன் சின்ன சின்ன கற்களை அடுக்கி வைத்து ஒவ்வொரு கல்லா எடுத்து குளத்துல போட்டு கொண்டு இருந்தான். அந்த பாதையில போன எல்லாருக்கும் என்னடா இவன் இப்படி கல்லை ஒவ்வொன்ன போடுறானேன்னு சந்தேகம் “ஏம்பா தம்பி உனக்கு வேற வேலை வெட்டி இல்லையா இப்படி கல்லை குளத்துல போடறியே? ” அப்படின்னு கேள்வி கேட்டு பார்த்தாங்க. அவன் அவர்கள் இப்படி கேட்பதை கண்டுக்காம ஒன்னு ரெண்டு அப்படின்னு எண்ணிக்கிட்டே மீண்டும்…

சிலவேளை முட்டாளாக

மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது. மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.  (1) மதத்தலைவர்.     (2) வழக்கறிஞர்.  (3) இயற்பியலாளர்.  முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. “கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?” என வினவப்பட்டது.  ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான் என்றார்.மேடை இழுக்கப்பட்டது, மதத்தலைவரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! ஆண்டவன் அவரை காப்பாற்றிவிட்டான். என்றனர் மதத்தலைவர் தப்பிவிட்டார்.  அடுத்ததாக வழக்கறிஞர் அழைத்துவரப்பட்டார்.…

நாம் தான் நிர்மாணிக்கிறோம்  

ஒரு வயதான மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்க வேண்டும் என்பது அவர் திட்டம்! முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு வேசான வருத்தம்! சில விநாடிகள் யோசித்தவர். “எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும்கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?” என்று பணிவோடு கேட்டார். மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழு…

கறுப்பு கலர் 

 ஒரு பள்ளிக்கூட வாசலில் பலூன்காரர் ஒருவர் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார். அவை மேலே பறக்கும் பலூன்கள். அவர் பலூன்களில் காற்றடைத்து விற்பதை ஒரு சிறுமி கவனித்துக் கொண்டிருந்தான். மெல்ல பலூன்காரரிடம் வந்தான். “இந்த பலூன்கள் என் லாமே மேலே பறக்குமா?” என்று கேட்டாள். “ஒரு பறக்குமே. என்ன விஷயம்?”  பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா?” என்று மீண்டும் கேட்டாள் அந்தச் சிறுமி,  சிறுமி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு புரியவில்லை. “ஏம்மா கேக்குற?   இல்ல,…

 ஒரு மாபெரும் கூட்டம் இரண்டு பேச்சாளர்களிடையே போட்டி, யாருடைய பேச்சு அதிக கைதட்டல் பெறும் என்று. கூட்டம் துவங்குவதற்கு முன் இருவரும் ஒரு அறையில் அமர்ந்து அன்றைய கூட்டத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.  அப்போது ஒரு பேச்சாளருக்கு தொலைபேசி அழைப்பு வர, அவர் எழுந்து போனார். அவரது பேச்சுக் குறிப்புகளை அவசரத்தில் மேஜையிலேயே வைத்துவிட்டுச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் போட்டி பேச்சாளர் அந்தக் குறிப்புகளைப் படித்து விட்டார். அந்தக் குறிப்புகள் அவர் தயாரித்திருந்ததைவிட நன்றாக இருந்தது. …

போர்க்கள யானை

பேரரசன் ஒருவனிடம், வலிமை மிக்க யானை ஒன்று இருந்தது. போர்க்களம் செல்லும் போதெல்லாம் அதன் உடல் முழுவதும், வாட்கள் நிறைந்த கவசங்களால் மூடப்பட்டிருக்கும். அதன் வாலிலும் இரும்புக் குண்டு ஒன்று இணைக்கப் பட்டிருக்கும். போர் சமயங்களில், அந்த யானையின் துதிக்கையி ல் அம்பு படாமல் இருக்க, துதிக்கையை நன்றாகச் சுற்றி வைத்துக் கொள்வதற்குப் பழக்கி இருந்தான் பாகன்.  ஒரு நாள் போர்க்களத்தில் அரச யானை புகுந்து எதிரிப் படைக்குப் பேரழிவைத் தந்தது. அதன் அங்கங்களில் பொருத்தப்பட்டு இருந்த…

செயலின் நோக்கம்

 ஒரு வீட்டுக்குப் பிச்சைக்காரன் ஒருவன் வந்தான். அந்த வீட்டுக்காரி உள்ளேயிருந்து அவனுக்கு அரிசியைக் கொண்டு வந்தாள். அதைத் தன் குழந்தையிடம் கொடுத்து பிச்சை இடச் செய்தாள். அடுத்த வீட்டுக்காரியும் அவள் செய்ததைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பிச்சைக்காரன் தன் வீட்டு வாயிலுக்கு வந்ததும் அவளும் பக்கத்து வீட்டுக்காரி செய்ததுபோல் தன் குழந்தையின் கைகளில் அரிசியைக் கொடுத்துப் பிச்சையிட்டாள். சில ஆண்டுகள் கழித்து இருவரும் இறந்தனர். மேல் உலகத்தில் தீர்ப்பு, முந்தைய வீட்டுக்காரி சொர்க்கத்துக்கும், அவளைப் பார்த்துப் பிச்சையிட்ட…

ஜூடோ  பயிற்சி

 சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார்.   தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான்.  ஒரு நாள் சிறுவன் குருவைக் கேட்டே விட்டான். “இந்த ஒரு…

இணைக்கும் செயல் 

 தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார். அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். பின்னர் கத்திரிக்கோலைக் கால் அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்கலானார். துணியை தைத்து முடிந்ததும் சிறிய ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம், “அப்பா! கத்திரிகோல் விலை உயர்ந்தது, அழகானது.…

எடை அளவு

ஒருமுறை, ஒரு விவசாயி ஒரு பேக்கருக்கு வெண்ணெய் விற்றுக்கொண்டிருந்தார். ஒரு நாள், ரொட்டி செய்பவர் தான் கேட்ட அளவு சரியாக கிடைக்கிறதா என்று பார்க்க வெண்ணெயை எடைபோட முடிவு செய்தார். அவர் அளவு சரியாக இல்லை என்று கண்டுபிடித்தார் எனவே அவர் விவசாயியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்.  வெண்ணெயை எடைபோட ஏதாவது அளவைப் பயன்படுத்துகிறீர்களா என்று விவசாயியிடம் நீதிபதி கேட்டார். அதற்கு விவசாயி, “யுவர் ஹானர், நான் பழமையானவன். என்னிடம் சரியான அளவு இல்லை, ஆனால் என்னிடம்…

நஞ்சு

அந்த பெண்ணுக்குத் திருமணமாகி, தன் கணவன் வீட்டிற்குச் சென்று வாழத் துவங்குகிறாள். அங்கு புது மணப்பெண்ணுக்கும் அவள் மாமியாருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை. எதற்கெடுத்தாலும் வாக்குவாதம், சண்டை, சச்சரவு. நாள்தோறும் இருவர்க்கிடையே வேற்றுமை வளர்ந்து கொண்டே இருந்தது.  கணவனோ இருதலைக் கொள்ளி எறும்பு போல திண்டாடினான்.  ஒரு நாள் புது மருமகள் அவள் தகப்பனாரின் நண்பரைப் பார்க்கச் சென்றாள். அவர் பச்சிலை, மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர். அவரிடம் மருமகள், தனக்கும் தன் மாமியாருக்கும் உள்ள…