சுந்தர யோக சிகிச்சை முறை 147
“ஒரு பெண்ணுக்கு ஆபரேஷன் செய்தேன். பெருங்குடலையும் முழுமையாக எடுத்துவிட்டேன். சுமார் மூன்று அடி நீளமும், நான்கு அல்லது ஐந்து அங்குல குறுக்கு அளத்தையுமிருந்தது. இதன் வெவ்வேறு பாகங்களிலிருந்து சிறுதுண்டுகளை வெட்டி எடுத்ததில், அவைகளில் சதைப் பற்றே ( MUSCULAR TISSUE ) இல்லை இதிலிருந்து இந்தக் குடலின் சதைச்சுவர்கள் முற்றிலும் செத்துவிட்டன என்பது விளங்கியது.
