சுந்தர யோக சிகிச்சை முறை 139
வயது வந்த வாழ்க்கையில் புகுந்தவுடன் நேர்மை வந்து விடுகிறதா? டாக்டருக்கு, ‘ விசிட்டுகளும், பேஷண்டுகளும் “ காத்திருக்கும். வக்கீல் கட்சிக்காரன் மணிபர்சையோ நீதிபதியின் முகத்தையோ தாரணையில் நிறுத்தி நிற்பார். வியாபாரிக்கு மூச்சுவிட ஓய்வு ஏது? காலை எட்டு மணிக்கப் பெட்டியடி சென்றால், இரவு எட்டு வரையிலும் மடித்த காலை நீட்ட நேரமிராதே! இயற்கை ஒன்று அமைக்க, நாமொன்றாக அதை மாற்றி விடுகிறோம்.