சுந்தர யோக சிகிச்சை முறை 138
தற்கால வாழ்க்கையில் உண்டாகும் தீங்கை நன்கு ஆராய்ந்து தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். மலத்தை அடக்குவது பால்யப் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. பள்ளியில் சேர்ந்தால் ஆசிரியரின் டம்ப கர்வம் கொட்டமடிக்கும். அவர் என்ன செய்து விடுவாரோ என்ற பயம் பையனுக்கு வைத்தாலும் பரவாயில்லை! தன்னுடைய அமிர்த மொழிகள் தடைபெற்ற கோபத்தில் பிரம்பால் “ நொக்கி “ விட்டால் என்ன செய்வது? அக்காலத்தில் எது ஜெயிக்குமோ? மலமோ பயமோ!