சுந்தர யோக சிகிச்சை முறை 131

போக்கு உணர்ச்சி மலம் வெளித் தள்ளப்படத் தயாராகி கடைசி இடத்திற்கு வந்தவுடன் மலப்போக்கு உணர்ச்சி உண்டாகிறது.   மலம் அங்குள்ள நரம்பு முனைகளைத் தூண்டி உணர்ச்சி தருகிறது. பல காரணங்களால் இதை அலட்சியம் செய்கிறோம். பல தடைவைகள் தந்தியடித்து பதில் வராமலிருக்கவே நரம்புகள் வேலை நிறுத்தம் செய்கின்றன. மறுபடியும் உணர்ச்சி வருவதில்லை, மலமும் வெளிப்போவதில்லை. சிக்கல், நிலை உண்டாகிறது.